Advertisement

அத்தியாயம்—-32

மகேஸ்வரி மலரம்மாவிடம், காலை உணவு என்ன …என்ன செய்ய வேண்டும் என்று வாய் பேச்சு வாயில் இருந்தாலும், கண் மின்தூக்கி வந்து  நிற்க்கும் இடத்திலும், படிக்கட்டிலுமே இருந்தது.

கொஞ்சம் நாளாய் மெனு கொடுப்பது மஞ்சு தான். நேரம் சென்றும் தன் மகள் வராது போகவே தான் மலரம்மாவிடம்….. “ இத எல்லாம்  சீக்கிரம் செய்ங்க மலரம்மா…எல்லோரும் இப்போ சாப்பிட வந்துடுவாங்க.” என்று சொன்னவர்.

மனது கேட்காது….. “ இன்னும் என்ன மஞ்சுவ காணும்.” மனதில்  உறுத்திக் கொண்டு இருந்த கேள்வியை மலரம்மாவிடம் கேட்டு விட்டார்.

“ வந்துடும்மா…..கல்யாணம் ஆனா புதுசுல. அப்படி இப்படி இருக்க தான் செய்யும்.” தன் மனதில் தோன்றியதை சொல்லி விட்ட மலரம்மாவின் கைய் பற்றிய மகேஸ்வரி…

“ அப்படி இருக்குமா…..?”

எப்படி…..? என்று கேட்காது…. “ கொஞ்ச நாளா ருத்ரன் தம்பி பார்வை முழுவதும் நம்ம மஞ்சும்மா மேல தான்மா…நம்ம மஞ்சும்மா கூட தம்பி  மேல பிரியமா தான் இருக்காங்க. நீங்கல பார்த்து இருப்பிங்கலே…

மஞ்சுவை  பெரியம்மா   ஒரு வார்த்த சொல்ல விடுறாங்கலா நம்ம ருத்ரன் தம்பி……?” அது உண்மை தானே…

அதுவும் இல்லாது நேற்று  ருத்ரன் பார்வை மஞ்சுவின் மீது விழுந்த விதம்  அவளும் தானே பார்த்தாள்.

மனது முழுவதும் சந்தோஷம்  ததும்பினாலும், ருத்ரன் மஞ்சுவை பார்த்தால் தான் முழு நிம்மதி என்று  அவளின் பார்வையை மாற்றாது அவர்களுக்காக காத்திருந்தார்.

அனைவரும் வந்த பின்னரே ருத்ரன் மஞ்சுவோடு  சாப்பிடும் அறைக்கு வந்தது. பார்த்ததும் மகேஸ்வரிக்கு தெரிந்து விட்டது. இதே சாதரணமாக  தாய் மகள் உறவு இருந்து இருந்தால், தன் மகளின் முகத்தை வழித்து திருஷ்ட்டி சுத்தி இருப்பாள்.

ஏற்கனவே அழகியான மஞ்சு, கணவனுடனான கூடலில் முகம் வெக்கத்தை பூசிக் கொள்ள முகச்சிவப்பில் இன்னும் ஜொலித்தாள் என்றால்….

தன்னை நேசிக்க…..தனக்கே என்று  ஒரு ஜீவன் இருக்கிறான் என்ற தைரியம் அவளின் முகத்தில் சோபை ஏத்த அழகு என்பதை விட பேரழகு என்று தான் சொல்ல வேண்டும். அப்படி மின்னினாள்  மஞ்சு.

அகிலாண்ட நாயகியே…என்ன இந்த பெண் இப்படி அழகு கூடிட்டே போகுது.  நம் பேரன் மயங்கி இருப்பதில் தவறு இல்லையோ…..?

என்ன தான் நம்ம பார்த்து பார்த்து பெண்ணை தேர்வு செய்து பேரனுக்கு கட்டி வைத்திருந்தாலும்….மஞ்சுவுடம் இருக்கும் இந்த சந்தோஷத்தை  நம்மால் கொடுத்து இருக்க முடியுமா…..? ருத்ரனின் முகத்தில் இருந்த அதிகப்படியான சந்தோஷத்தை பார்த்து எண்ணினார்.

“ பாட்டி  இடிப்பாப்பம் வைக்கட்டுமா…..?” மஞ்சுவின் கேள்வியில்  நக்கல் இருக்கா…..?அவளின் முகத்தை உற்று பார்த்த அகிலாண்ட நாயகிக்கு, அங்கு ஏதும் தவறாய் படாது போக…

“ வைய்….” என்று சொன்னதும், ஒன்றே ஒன்று வைத்து விட்டு கொஞ்சமாய் குருமாவை ஊற்றியதும்…

“ இது மட்டும்  சாப்பிடுங்க பாட்டி.” பக்கத்தில் ஓட்ஸ் கஞ்சியை வைத்து விட்டு…. “ இடியாப்பம் சாப்பிட்டதும் இதை  குடிச்சிடுங்க பாட்டிம்மா…..”

தன்னை அதிகாரம் செய்வதா….? என்ற ஆத்திரம் வரவில்லை என்றாலும். இவள் சொல்லி தான் கேட்பதா…..? என்ற ஈகோ தலை  தூக்க…ஏதோ சொல்ல வந்த பாட்டியின் பேச்சை…..

“ இன்னும் கொள்ளு பேரனோ…பேத்தியோ…  பாக்கனும். அதனால மஞ்சு சொல்றத கேளுங்க க்ராண்மா…..” ருத்ரனின் கொள்ளு பேரனோ…பேத்தியோ…..வார்த்தை  அகிலாண்ட நாயகியை ஏதோ செய்து அமைதியாக சாப்பிட வைத்தது.

தயாநிதிக்கே அதிசயமாய் போய் விட்டது. மஞ்சு பரிமாற  தன் தாய் சாப்பிடுவது. மஞ்சுவுக்கு என்ன தான் அக்கறை காட்டினாலும், குடும்பத்தின் மூத்த உறுப்பினர் விலகி இருந்தால் அப்பெண் மனது எப்படி இருக்கும்…..? நினைத்து வருந்த மட்டும் தான் அவரால் முடிந்தது. தன் தாயை அவரால் மாற்ற முடியாது என்று எண்ணி இருந்தவருக்கு தன் மருமகனின் மூலம் நிகழ்ந்த  இந்த மாற்றம் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியைய் ஏற்படுத்தியது.

எந்த வித பிரச்சனையும் இல்லாது அன்றைய உணவு முடிந்ததும் ருத்ரன் ஆபிசுக்கு கிளம்பாமல் இருப்பதை பார்த்த  தயாநிதி….

“ என்ன ருத்ரா ஆபிசுக்கு போகல. நேற்று நிறைய வேலை பென்டிங் இருக்குன்னு சொன்ன…..” நேற்று இருந்த நிலையிலா அவன் இன்று இருக்கிறான்.

நேற்று  தான் முடிக்க வேன்டிய வேலையை முடித்து விட்டால், மற்றவர்கள் செய்ய வேண்டியதை என்ன என்ன என்று  சொல்லி விட்டு குலதெய்வ பூஜை முடிந்து அப்படியே தன் செகன்ட் ஹனிமூனுக்கு, (தவறு. இது தான் அவர்களுக்கு முதலோ….)  கிளம்பி விடலாம், அங்கு தான் மஞ்சுவிடம் தன் மனதை திறக்க வேண்டும் என்று எண்ணி இருந்தான். அவனுக்கு உறுதி மஞ்சுவுக்கும் தன்னை பிடித்து இருக்கிறது என்று…

ஏதோ அவள் மனதில் இருக்கிறது. அதை போக்கினால் போதும். அது என்ன என்று கூட அவனுக்கு சின்னதாய் ஒரு சந்தேகம் இருக்க தான் செய்தது. அதனால் என்ன என்ன பேச வேண்டும் என்று அவன் மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,

பாலோடு தேன் கலந்ததோடு மட்டும் அல்லாது, அதை வாயில் ஊற்றினால்  எப்படி இருக்கும் அப்படி தான் நேற்று இரவு அவன் உணர்ந்தான்.

ஆறுதல் அதற்க்காக மட்டும் தான் மஞ்சுவை  தழுவியது. ஆனால் மஞ்சுவுக்கு அது மட்டும் போதாது போல்….தன் அணைப்பை விலக்கும் வேளயில் தன்னை விடாது அணைப்பதை தனதாக்கிக் கொண்டவளின் செயலை நம்ப முடியாது அப்படியே  இருந்தது ஒரு நொடி தான் பின் அவளின் முகத்தை தன்னை பார்க்க நிமிர்த்த…

நிமிரும் எண்ணமே இல்லாது அவன் மார்பில் இன்னும்  முகத்தை அழுத்திக் கொண்டவளின் செயலில் அவனின் உடல் முழுவதும் ஏதோ…இது வரை அனுபவத்தில்  உணர்ந்து இல்லாத, செவி மூலம் மட்டுமே கேட்டு அறிந்த சில சொல்லப்படாத விஷயங்கல் தன் உடலில் நிகழ்வதை பார்த்து அவசர அவசரமாய் தன் மனைவியை விலக்கி அவள் முகத்தை பார்த்தான்.

மஞ்சுவின் முகத்தில்  குழந்தை கையில் இருந்து மிட்டாய் பிடுங்கிய தோற்றம். அதை பார்த்து ருத்ரன் கைய் பற பறத்தாலுமே….

“பேபிம்மா…பேபிம்மா….” அவன் பேபிம்மா  இங்கு இருந்தால் தானே அவன் அழைப்புக்கு பதில் கொடுப்பதற்க்கு,

குரல் வழியாய்  மட்டுமே அவளை இந்த உலகுக்கு மீட்டெக்க முடியாது என்று  அறிந்தவனின் மனதில் மோகம் துளித்தாலும், அதை கட்டுக்குள் கொண்டு வந்தவன் அவளின் கன்னத்தை  தட்டி இவ்வுலகுக்கு மீட்டு எடுத்தவன்…

“பேபிம்மா பேசனும்.” அவன் பேசுவது என்ன மொழி என்பது போல் இருந்தது மஞ்சுவின் பார்வை…

“ எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். அது தெரியுமா…..?” ருத்ரனின் கண்ணை பார்த்த மஞ்சுவுக்கு கொஞ்சம் சொரணை வர…

“ தெரியும்…..” என்பது போல் தலையாட்டினாள்.

“ என்ன தெரியும்…..?” ( கேள்வி கேட்கும்  நேரமாடா…..)

“ உங்களுக்கு என்னை பிடிக்கும்.”

“எனக்கு மதுவையும் தான் பிடிக்கும்.” ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டே அவன் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தவள்…

ருத்ரனின் இந்த பேச்சில்…. விழி பிதிங்கி  அவனை பார்த்தவளிடம்…. “ பின்ன என்னடி நான் உன்னை பிடிக்குமுன்னு சொல்றேன். அதுக்கு தெரியுமுன்னு சொன்னா  என்ன அர்த்தம்.”

“ பிடித்தமுன்னா  ஒரே அர்த்தம் தானே…..?”

“ ம்…சுத்தம்.” தலை மேல் கைய் வைத்தவனின் கையைய் எடுத்து விட்ட மஞ்சு…

“ எங்க பாட்டி தலை மேல் கைய் வைக்க கூடாதுன்னு சொல்வாங்க.”

“ பாட்டி …தாத்தா கிட்ட வளந்ததால் தான் உனக்கு ஒரு விவரமும் தெரியல பேபிம்மா…..”  ருத்ரன் எதார்த்தமாய் தான் சொன்னான். ஆனால் அந்த வார்த்தை மஞ்சுவை பலமாக தாக்கியது.

“ நா…இஷ்ட்ட பட்டா அவங்க கிட்ட வளர்ந்தேன்.” கண்ணீல் மட்டும் இல்லாது மூக்கிலும் நீர் வழியுமோ…..?

மஞ்சு மூக்கின் மீது வழிந்த நீரை தன் கையின் கட்டை விரலின் ஓரம் கொண்டு துடைத்தவளின் கை எடுத்து விட்டு தன் கைக்குட்டை கொண்டு தானே துடைத்து விட…

“ வேண்டாம்….போங்க. நான் தூங்குறேன்.” சொல்லுக்கும் செயலுக்கும் சம்மந்தமே இல்லாது அவனை விட்டு விலகாது  இருப்பவளை தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவன்….

“ பேபிம்மா நான் வேணுமுன்னு  சொல்லலே தெரியாம வந்துடுச்சி…சாரிடா…..”

“ஆ..னா  எ..ன்ன அவங்க தெரிஞ்சி தானே அவங்க கிட்ட விட்டாங்க.”

அது யார் என்று தெரிந்த ருத்ரன் அது கேட்காது…… “ உங்க அம்மாவுக்கு உங்க அப்பா இறக்கும் போது என்ன வயசுன்னு தெரியுமா…..?”

“ காரணம் எதுன்னா இருக்கட்டும். ஒரு அம்மா குழந்தைய விடுவாங்கலா…..?” இத்தனை வருடம் மனதில் அழுத்திய கேள்வி….

மனதை தொட்ட உறவு என்று  நெருக்கமாய் யாரையும் உணர்ந்து இராத மஞ்சு…மனதுக்கு நெருக்கமான கணவனிடம்…கோபம், ஆதாங்கம், இயலாமை , அனைத்தும் சேர்த்து  கேட்க…

“ மஞ்சு அத்த உன்ன உங்க பாட்டி தாத்தா கிட்டயே வளரனுமுன்னு விடலே. இத சொன்னா நீ எப்படி எடுத்துப்பியோ……

மாமா தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க.  ஒரு வருடதுக்குள்ள நான் என் அம்மா கிட்ட சொல்லி குழந்தைய நம்ம கிட்ட கூட்டிக்கலாமுன்னு சொல்லி இருக்காரு…..”

“ ஓ சொன்னதும் சரின்னு இவங்க சொல்லிட்டாங்கலே……” அவள் சொன்ன விதம் உனக்கே இது நியாயமா படுதா….?என்பது போல் இருந்தது.

திரும்பவும் ருத்ரன் “ இத நீ எப்படி எடுத்துப்பியோ….? உங்க அப்பா இறக்கும் போது அத்தைக்கு ரொம்ப சின்ன வயசுடா….புரிஞ்சிக்கோ…..ஒன்றை பத்தி நாம் தெரியாம இருக்கும் போது ஒன்னும் இல்ல.”

“எதை பத்தி  தெரிஞ்சிக்கும் முன்…..?” கேட்டாளே ஒரு கேள்வி…. ருத்ரனுக்கோ அய்யோ என்று இருந்தது.

இருந்தும் தன் முயற்ச்சி கை விடாதவனாய்…. “ இப்போ பிறந்ததில் இருந்து  பஸ்….ட்ரையின் இதுல போய் வந்தவங்களுக்கு அதுல ட்ரவல் செய்வது அவ்வளவு கஷ்ட்டமா  இருக்காது.

கார், ப்ளைட் இந்த சுகத்த பார்த்தவனை பஸ்சுலேயோ ட்ரையினிலேயே போக சொன்னா ரொம்ப கஷ்ட்டம் மஞ்சும்மா…” இவ்வளவு சொல்லியும் புரியாத முகபாவத்தில் தான் இருந்தாள் மஞ்சு.

“ நான் வெளிப்படையாவ சொல்லிடறேன். கணவனோட வாழ்ந்து கொஞ்ச நாளில் துணைய இழக்குறது ரொம்ப கொடுமைடா…

அதுவும் உங்க அம்மாவுக்கு ரொம்ப சின்ன வயசு.  இப்பவே இவ்வளவு அழகா இருக்குறவங்க. அவங்க வயசுல எப்படி இருந்து இருப்பாங்க…..? ஒரு பழமொழி கூட இருக்கே…வேலி இல்லாத பயிருன்னு அது போல அவங்களுக்கு ரொம்ப பிரச்சனை வந்துச்சி மஞ்சும்மா….”

இது வரை ஏதோ நினைத்துக் கேட்டுக் கொண்டு இருந்தவளுக்கு இந்த செய்தி புதியது.

அவன் சொன்னதின் சாரம்சம் என்ன…..?தாம்பத்தியத்தின் சுவை தெரிந்த பின் அது கிடைக்காது போனால்….இப்படி என்ற ரீதியில் ருத்ரன் பேசிக் கொண்டு போகும் போது….ஏன் உங்க அம்மா இல்லையா…..? பேசி முடிக்கட்டும் கேட்கலாம் என்று என்னும் வேளயில்….

இது போல் யோசித்து பார்க்காது இருந்த கோணத்தை ருத்ரன் காட்ட….அன்று கொஞ்ச நேரம் யாரும் இல்லாது இரயில்  நிலையத்தில் தனியாக இருந்த போது தன் மீது படிந்த பார்வைகள் நினைவு வர ருத்ரனை யோசனையுடன் பார்த்தாள்.

“ நான் பேசும் போது என் அம்மா நீ இத நினச்சி இருக்கலாம்.” மனைவி மனம் புரிந்த கணவனாய் அவன் பேச்சு இருந்தது.

“ என் அம்மாவின் நிலை வேறு. அவங்கல  தப்பான ஒரு பார்வை பார்த்தா போது உன் அப்பா அவங்கல உண்டு இல்லேன்னு செஞ்சுடுவாரு… ஆனா அத்தை….?

அத்தைக்கே பத்தொன்பது வயசுன்னா…. அப்போ அவங்க தம்பிக்கு என்ன  வயசு இருக்கும்…..?

வயதான பெற்றோர்….வயதுக்கு ஏத்த அழகு…..கொஞ்சம் யோசிச்சி பாரு மஞ்சும்மா…..? அவங்க எடுத்த கல்யாணம் முடிவு சரி.

ஆனா அதுக்கு அடுத்து நடந்த விஷயத்துக்கு உன் அம்மா மட்டுமே  காரணம் இல்ல மஞ்சும்மா…

உன்ன குத்தின வில்ல உடைக்க நினைக்குற…ஆனா அதை ஏய்த வேடனை மன்னிச்சிட்ட இது நியாயமா….? யோசிடா….?

மனைவி யோசிக்கட்டும் என்று குளியல் அறைக்குள் நுழைந்து வரும் வரை மஞ்சு அதே இடத்தில் தான் சிலை போல் அமர்ந்து இருந்தாள்.

அவன் வந்து… “பேபிம்மா ஒரே நாள்ல யோசிச்சு முடிவு எடுக்கனுமுன்னு அவசரம் இல்ல. அவங்க பக்க நிலையில் இருந்து யோசின்னு சொல்றேன். அவ்வளவு தான்.”

“ அம்மா பாவம்லே…..அப்போ அவங்க ரொம்ப கஷ்ட்டப்பட்டாங்கலா…..?” மஞ்சுவின் குரலே சொன்னது அவள் எவ்வளவு வருந்துகிறாள் என்று…

திடிர்ரென்று….. “ உங்களுக்கு இது எப்படி தெரியும்…..?” என்று கேள்வி கேட்டவள்.

பின் அவளே…..

“ அப்பா சொன்னாங்கலா…..? அப்பா கம்பெனியில தான் அம்மா வேல பாத்தாங்கலே….? அப்போ அப்பா பரிதாபத்தில் தான் அம்மாவ கல்யாணம் செய்துக்கிட்டாங்கலா…..? நீங்களும்….?” சம்மந்தம் இல்லாது பேசியவளின் வாயை தனக்கு பிடித்தமான வகையில் மூடியவன்.

“என்ன பார்த்தா பரிதாபத்தில் கல்யாணம் செய்தவன் போலவா இருக்கு….? அதே போல மாமாவ பார்த்தா தெரியுதா….?இந்த வயசுலேயேயும் மாமா பார்வை அத்தை  மேல எப்படி விழும் விதம் பார்த்தல இன்று மதியம்.”

“ அப்போ நீங்க என்ன பாக்க  வரல. உங்க அத்தை மாமாவை பாக்க வந்திங்க…..?”

“ நான் உன் மேல பித்தா  இருக்குறது வீட்டுல இருக்க பொடிசுக்கு எல்லாம் தெரியுது. மக்கு உனக்கு தெரியலேன்னா நான் என்ன செய்யிறது…..?” அவன் பேச்சில் அவ்வளவு ஆதாங்கம்.

 

Advertisement