Advertisement

அத்தியாயம்—-31

தன் மகள் பரிமாற….தட்டை பார்த்ததை விட  அதிகம் தன் மகள் முகத்தையே காதல் பொங்க பார்த்து சாப்பிடும் மருமகன்…கடவுளே இது போதும் எனக்கு….

இது வரை துக்கத்தில் மட்டும் கண்ணில் இருந்து வழிந்த நீர்…இன்று சந்தோஷத்தில் வழிய….அதை துடைக்காது பார்த்து நின்றாள் மகேஸ்வரி.

தன் முன் தட்டு மட்டும் வைத்திருக்க அதில் ஏதும் வைக்காது இருந்ததால் ….. “ மகி ஏதாவது வைய்…..இன்னும் ஒரு மணி நேரத்தில் ……ஒட்டலில் மீட்டிங் இருக்கு.”  சொன்ன கணவனை முறைத்து பார்த்தவள்.

“ஏன் எப்போவும் பிஸ்னஸ் மீட்டிங்கிலேயே  முடிச்சிப்பிங்க….. இன்னிக்கி என்ன வீட்டுக்கு…..?” காதல் மயக்கத்தில் இருந்து அத்தையின் பேச்சால்   வெளிவந்த ருத்ரன், அவர் பேச்சில் சிரிப்பு வந்தாலும், யோசனையுடன் அவரை பார்த்தான்.

இது போல் எப்போதும் பேசாத அத்தை  ஏன் இன்று என்ன ஆனாது…..?

அத்தையின் இந்த பேச்சுக்கே அவன் தானே காரணம். சின்ன சிறுசுங்க ஏதோ பேசிட்டே சாப்பிடுவாங்கன்னு பார்த்தா…இப்போ எதுக்கு இவர் வந்தாரு…..?

அத்தை வேறு விசேஷத்துக்கு போய் இருக்காங்க….நாத்தனார்  எப்போதும் மகனின் ஆசையில் குறுக்கிட்டது இல்லை. இது போல் தனிமை இனி வாய்க்குமா….? என்ற ஆதாங்கத்தில் வார்த்தை மட்டும் அல்லாது, சாதத்தையும் அள்ளி கணவனின் தட்டில் கொட்ட…..

என்ன என்னவோ நினைத்து வந்த தயாநிதிக்கு  எப்போதும் அன்புடன் பரிமாறும் சாப்பாடும் இல்லாது போக… ருத்ரனை ஆதாங்கத்துடன் பார்த்தார்.

“என்ன அத்த உங்க கையால சாப்பிடனுமுன்னு வந்து இருப்பாரு….இது தப்பா…..?”

“ ஆமா நேத்து தான் கல்யாணம் ஆச்சி பாரு…..” முனு முனு என்று முனவினாலும் ருத்ரன் காதில் அது தெளிவாக விழுந்தது.

அத்தையின் கோபம் எதற்க்கு என்று தெரிந்துக் கொண்டவன்…. “ நான் லன்சுக்கு வருவேன்னு அவருக்கு தெரியாதே அத்த…..”

“  இன்னிக்கி நீங்க சாப்பிட வருவீங்கன்னு அப்பா தான் சொன்னாங்க அத்தான்.”  மஞ்சு விஷயத்தை போட்டு உடைத்தாள்.

அப்போது தான் கவனித்தான். இன்று உணவில்  அனைத்தும் தனக்கு பிடித்தது இருப்பதை பார்த்து….

“ நான் வருவேன்னு சொல்லவே இல்லையே….” என்று மனைவியிடம் சொல்லி கொண்டே தன் மாமனை பார்க்க.

மாமன் அப்போது ருத்ரனை தான் பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் பார்வையில்….எல்லோருக்கும் தெரியும் படியா இருந்தது என் நடவடிக்கை.

கைக் குட்டை கொண்டு தன் முகத்தை துடைத்தவனிடம்…. “ திரும்பவும் ஆபிஸ் போவது போல இருந்தா சட்டைய மாத்திக்கிட்டு போ….என்ன தான்  நீ நீவி விட்டாலும் கசங்கல் போகல…..” என்று சொல்லி கொண்டே கைய் கழுவ எழுந்து போகும் கணவனை நினைத்து தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது மகேஸ்வரிக்கு….

அதை கணவனிடம் சொல்லவும் செய்தார்…..” மருமகனிடம்  பேசும் பேச்சா…..?”

“ மருமகன் வந்தாலும் வந்தான். இந்த வீட்டில் என் மரியாதை  கெட்டுடுச்சி…..” இனி தான் இங்கு இருந்தா அவ்வளவு தான். வந்ததுக்கு….மனைவியின் புடவையில் கை துடைக்க மட்டும் தான் முடிந்தது.

அத்தை மாமா பேச்சை சிரிப்புடன் கேட்டுக் கொண்டு இருந்த கணவனின் தட்டில்  இன்னும் கொஞ்சம் சாதத்தை போட வந்தளை தடுத்தவன்…

“போதும் பேபிம்மா….இன்னும் சாப்பிட்டா தூக்கம் தான் வரும்.” என்ற கணவனின் பேச்சில்…

“ திரும்பவும் ஆபிஸ் போகனுமா…..?” ஏனோ இன்று  மனது கணவனின் அருகாமையை தேடியது.

ருத்ரன் மனைவியின் ஏக்கம் நிறைந்த குரலில் வீட்டிலேயே தங்கி விட தான் நினைத்தான். ஆனால் கைக்கெடிகாரத்தை பார்த்த வாறே….” இன்னும் அரை மணி நேரத்தில் மீட்டிங் பேபிம்மா….இது நான் மட்டும் சம்மந்தப்பட்டு இருந்தா கேன்சல் செய்து இருப்பேன்.

இந்த பிஸினஸ் நானும் மாமாவும்  சேர்ந்து செய்யிறது. அதான்…மாமா அதுக்கு தான் போய் இருக்காரு….” என்று சொன்னதும்…

“அப்போன்னா சரி தான். அப்பாவ ரொம்ப நேரம் காத்திருக்க செய்யாதிங்க…..” என்று சொன்ன மனையாளின் கன்னத்தை தட்டிய ருத்ரன்…

“உன்னையும் ரொம்ப நேரம் காத்திருக்க வைக்க மாட்டேன் பேபிம்மா….” அவன் எந்த காத்திருப்பை சொன்னான் என்று புரியாமலேயே பலமாக தலையாட்டினாள்.

அவள் அந்த தலையாட்டளை “ க்யூட்….” என்று சொல்லி அவள் தலை பிடித்து செல்லம் கொஞ்சிய பிறகே ஆபிசுக்கு சென்றான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் கணவன் மனைவிக்கு எந்த இடையூறும் இல்லாது பார்த்துக் கொண்ட மகேஸ்வரி ருத்ரன் சென்றதும் …. “மஞ்சும்மா சாப்பிடலாமா…?” என்ற அழைப்புக்கு…

“ நான் அப்புறம் சாப்பிடுறேன்….” மெல்ல முனு முனுத்த  வாறே மாடிக்கு சென்றாள்.

பேச்சு மட்டும் தான். அதுவும் கேட்டதுக்கு…. மலரம்மாவுடம் தனித்து சாப்பிடும் மஞ்சு. தாயுடன் சாப்பிட ஏனோ தயக்கம். இந்த தயக்கம் தகர்வது எப்போது….?

புதியதாக தொடங்கிய தொழில் மஞ்சு, மது, இருவரின்  பெயரில் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது. அது இருவருக்கும் தெரியாது. மஞ்சு முதலில் கொஞ்சம் வீட்டில் செட்டாகட்டும் பின் தொழில் கற்று கொடுக்க வேண்டும் என்று ருத்ரன் தன் மாமாவிடம் சொல்ல..

மஞ்சு, மது , பெயரில் புது தொழில் தொடங்கி விட்டார்.  “ ஏற்கனவே இருக்கும் தொழிலில் ஏதாவது கொடுத்து விடலாமே மாமா…..” ருத்ரன் கேட்டதுக்கு,

“ இது மொத்தம் என் உழைப்பில் வந்த பணம். என் இரு பெண்களுக்கு உண்டான தொழிலை நான்  ஏற்படுத்தி கொடுத்தால் நாளை பின்ன உன் பாட்டி என் புருஷன் சம்பாதித்து யாரு யாருக்கோ போதுன்னு ஒரு பேச்சு வராது பாரு…அது தான்.”

தயாநிதி மஞ்சுவுக்கு ஏதாவது செய்வது என்றால்,  தன் உழைப்பை கொண்டு வந்த பணத்தால் மட்டுமே செய்வது. தன் தாயின் பேச்சு தன் பெரிய மகளை தாக்க கூடாது என்பதில்  முன் எச்சரிக்கையாய் செயல்பட்டார்.

மாமனின் எண்ணம் புரிந்தவனாய்…..” மஞ்சுக்கு நான் பார்த்துக்க மாட்டேனா….?” என்ற கேள்விக்கு,

“ என் மகளுக்கு நான் செய்யிறேன்.” என்ற பேச்சில் அமைதியாகி விட்டான்.

தொழில் பேச்சு முடிய நான்கு மணி கடந்து விட்டது. அனைவரும் சென்ற பின் ருத்ரன் தன் காரியதரசியிடம்…. “ மத்ததை நீ பார்த்துக்குறியா….?” என்று கேட்டுக் கொண்டே தன் இருக்கை விட்டு எழ பார்த்தவனின் கை பிடித்து  அமர வைத்த தயாநிதி…

“ மஞ்சுவ கூட்டிட்டு எங்கேயாவது போ ருத்ரா….இங்கு இருந்தா ஏதாவது இடையூறு இருந்துட்டே இருக்கும். உன் பாட்டி ,அம்மா, அத்த, நான் ,  தொழில் , இது எதுவும் உனக்கு நியாபகத்தில் இருக்க கூடாது.

உன் எண்ணம் முழுக்க என் மகள் மட்டும் தான்  இருக்கனும்.” என்ற மாமனின் பேச்சில்….

“ உங்க மகளா….?அது யாரு….? மஞ்சு என் மனைவி இப்போ எனக்கு அது மட்டும் தான் நியாபகத்தில் இருக்கு.”

“ ம் பொழச்சிக்குவே….” என்று சொன்னவர்.

“ விளையாட்டு பேச்சு வேணாம் ருத்ரா….எங்காவது மஞ்சுவே கூட்டிட்டு போ…..”

“ நானும் அதே தான் யோசிச்சிட்டு இருக்கேன். அம்மா அடுத்த வாரம்  ஏதோ குலபூஜைன்னு சொன்னாங்க. அது முடிஞ்சு தான் ப்ளான் செய்யனும்.”

சிரித்துக்  கொண்டே…. “ இது கேட்க கூடாது. எல்லாம் சரியாயிடுச்சி தானே…..”

“ கொஞ்ச நாள்ள எல்லாம்  சரியாயிடும் மாமா….இனி மஞ்சுவ   பத்தி நீங்க கவலை பட தேவயில்ல. நான் பாத்துக்குறேன்.” என்று வாக்குறுதி கொடுத்தான்.

“ ஏதாவது சினிமாவுக்கு போகலாமா….?” மனைவி கொடுத்த காபியை பருகிய வாறு மனையிடன் ருத்ரன் கேட்க…

“ என்ன படத்துக்கு போகலாம்…..?” என்ற பேச்சில் தன் சம்மத்ததை சொன்னதும்…

சிரிப்புடன்….. “ உனக்கு எந்த ஹீரோ பிடிக்கும்…..?”

“ நான் படம் அவ்வளவா பாத்தது இல்ல…..” மஞ்சு பேச்சுக்கு…

“ நான் எள்ளலவும் பார்த்தது இல்ல…..” ருத்ரன் கைய் விரிக்க.

ம்….என்று யோசித்த மஞ்சு….. “ கதிர் விஜய் சேதுபதி படம் நல்லா இருக்குமுன்னு சொன்னார்.”

“ ம் அவனுக்கு நல்ல ரசனையா தான் இருக்கும். அதனால விஜய் சேதுபதி படத்துக்கே போகலாம்.”

கூகுலில் தேடலில் ஈடுபடும் போது….அதை கைய் பற்றிய மது….. “ கண் முன்னவே ஒரு கூகுல் நிக்கிறேன். என் கிட்ட கேக்காம…..” என்று சொன்னவள்.

“ விஜய் சேதுபதி நல்ல நடிகர் தான். அதில் சந்தேகம் இல்ல. ஆனா…புது மனைவிய கூட்டிட்டு போகுறதுக்கு விஜய் தேவர்கோண்டா  தான் பெஸ்ட் சாய்ஸ்ன்னு நான் சொல்லுவேன்.”

“ மஞ்சு இனி நாம் பேசும் போது கதவ லாக் செய்துட்டு தான் பேசனும் போல…..”

“ எதுக்கு லாக் செய்யனும். பேச தானே போறிங்க……?” தங்கையின் அதிகப்படியான பேச்சில்…

“ ஏய் என்ன பேச்சு…ரொம்ப ஓவரா போகுது. அத்தான் கிட்ட பேசுறோமுன்னு ஒரு மரியாதை இல்ல…..?”

“ பாருங்க அத்தான். நான் உங்க கிட்ட பேச கூடாதா….?”

“ பேசலாம் குட்டிம்மா தப்பு இல்ல. ஆனா இப்போ நீ சின்ன பெண் இல்லடா…..வளந்துட்ட…..அது தான் உங்க அக்கா திட்டுறா……?”

“சாரி அத்தான். சாரி அக்கா.” இது தான் மது. தான் பேசியது தவறு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடுவாள்.

“ இட்ஸ் ஓகே….” மச்சினிச்சிக்கு மன்னிப்பை வழங்கிய ருத்ரன்… “ நீயும் வர்றியா…..?”

“ எதுக்கு சிவ பூஜையில் கரடி மாதிரி…..” என்று சொன்னவள் பின் நாக்கை கடித்துக் கொண்டு காது இரண்டையும் பிடித்த வாறே….

“ சாரி அத்தான். சாரி அக்கா……”

“ இது ஒன்னும் அவ்வளவு மோசமான கிண்டல் இல்ல. அதனால் பரவாயில்ல….” இப்படி சொன்னது சாட்சாத் மஞ்சுவே தான்.அவள் பேச்சில் வாயடைத்து போன இருவரும்….

“ம் போங்க போங்க…..”  மது அவர்களை வழி அனுப்பி வைத்தாள்.

நோட்டா படத்தை பார்த்து விட்டு வீட்டுக்கு சந்த ருத்ரன் மதுவிடம்….. “ இது தான் அவரின் ரொமான்டிக்கான படமா……?”

“ அவர் நடிச்ச எல்லா படமும் ரொமான்டிக் தான். நீங்க பார்த்த நோட்டாவை  தவிர…ஆனா உங்களுக்குன்னு வாய்க்குது பாருங்க….” பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த  தன் அக்காவை சைடில் பார்த்து சொன்னவளின் பேச்சில்…

“ ஏய் என்ன திமிறா…..?”

“ என்ன மஞ்சு  சாப்பிட வரலியா…..?” தயாநிதியின் குரலிக்கு…

“ வர்றேன் பா…..” தந்தைக்கு பதில் அளித்தவள்.

“ உன்ன அப்புறம் வெச்சிக்குறேன்….” ஏதோ சொல்ல வந்த மது  பின்….சிரிப்புடன் தானும் சாப்பிட அமர்ந்தாள்.

அகிலாண்டம்…… “ அடுத்த வாரம் நம்ம குல தெய்வத்துக்கு  பொங்க வைக்கனும் அதுக்கு உண்டானத செய்…..?” தன் மருமகளுக்கு ஆர்டர் போட்டவர்.

மகனையும், பேரனையும் பார்த்து…… “ அப்போ எந்த வேலையும் இல்லாம பார்த்துக்குங்க……” எந்த நாள் என்று தெளிவாக சொன்னவர் தன் அறை நோக்கி செல்லும் முன்…..

மஞ்சுவிடம்… “ உனக்கு அன்னிக்கி வசதி படுமா….?” தன்னிடம் தான் கேட்கிறார்களா சந்தேகத்துடன் பாட்டியைய் பார்க்க….

“ உன்ன தான் அன்னிக்கி கோயிலுக்கு போகலாம் தானே…..” பெண்கள் சம்மந்தமாய் கேள்வி கேட்டவருக்கு…

“இ…ல்ல வர…லாம் பாட்டி……” வார்த்தையில் பதட்டம் இருந்தாலும் தன்னிடம் சாதரணமாக பேசியது பாட்டியா….?அதிர்ச்சி…..மகிழ்ச்சி இரண்டும் கலந்து ஒலித்தது மஞ்சுவின் குரலில்….

ருத்ரன் இந்த உரையாடலை பார்த்துக் கொண்டு மட்டும் இருந்தான். ஆனால் கண்  மட்டும் பாட்டியின் முகத்திலேயே….

அறைக்குள் நுழைந்த மஞ்சுவின் முகத்தில்  அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியைய் பார்த்து…… “ என்ன பேபி சம ஹாபி மூடில் இருக்காங்க…..? காரணம் நானா….?”

அவனிடம் பாலை கொடுத்த மஞ்சு…அதிகப்படியான சந்தோஷத்தில்   ருத்ரனை நெருங்கி அமர்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாது……அமர்ந்தவள்….

“ பாட்டி……பா…ட்டி இன்னிக்கி என் கிட்ட பேசினாங்க…..” இவ்வளவு நேரம் அடக்கிய அழுகை விம்மலாய் வெடித்தது.

மஞ்சுளாவுக்கு  பாட்டியை பிடிக்கும் என்று  ருத்ரனுக்கு தெரியும். ஆனால் ஒரு சாதரண பேச்சில் இப்படி உணர்ச்சி படும் அளவுக்கா…..?

அவன் கேட்காமலேயே….. “ எனக்கு அகில் பாட்டின்னா ரொம்ப பிடிக்கும்.” அந்த நிலையிலும் அவள் சொன்ன அகில்….தாத்தா கூட பாட்டிய இப்படி செல்ல பெயர் வைத்து கூப்பிட்டு இருப்பாரா….?நினைக்க தோன்றியது ருத்ரனுக்கு,

“ பாக்கவே என்ன கம்பீரம்லே….. “மஞ்சுவின் பேச்சில்…

“ பேபிம்மா அவங்கலால தான்…..”  ருத்ரன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்தவளாய்…

“ அவங்க மகனுக்காக பார்த்தது. அதுல தப்பு இல்லயே… என் கோபம் எல்லாம் ….” அவள் யார் என்று  சொல்லாமலேயே புரிந்துக் கொண்ட ருத்ரன்…

“ பேபி….எல்லார் நிலையிலும் இருந்து யோசிக்கிற நீ….ஏன் அத்தையின் நிலையில் இருந்து யோசிக்க மாட்டேங்குற, பாவம்டா அவங்க.

மாமா கிட்ட நல்ல மாதிரி பேசும் போது எல்லாம் உன் முகத்த அவங்க ஏக்கமா பாக்குறது உனக்கு புரியலையாடா….. வேண்டாம்டா….அவங்க கிட்ட நல்லா மாதிரி பேசு.”

“ நானும் அதுக்கு தான் முயற்ச்சி பண்றேன். ஆனா முடியல….” கை இரண்டையும் விரித்து உதட்டு பிதிக்கி அவள்  சொன்ன பாவனையில்….

“ பேபிம்மா…..” என்ற அழைப்போடு  அவளை இறுக்கி அணைத்தவன்….” எல்லாம் சரியாடும்டா….”  என்று சொல்லிக் கொண்டே அவன் இறுக்கத்தை கூட்டினான்.

 

Advertisement