Advertisement

அத்தியாயம்—-30

மலரம்மாவுக்கு ஏற்பட்ட  அதிர்ச்சி நம் அகிலாண்ட நாயகிக்கு ஏற்படவில்லை. தனக்கு ஏதோ ஆப்பு வைக்க போகிறான் என்பது போல் தான் இருந்தது அவரின் பார்வை…. ருத்ரனின் பேச்சும்,  அவர் எதிர் பார்த்த பாதையில் தான் சென்றது.

“ காசுக்கு ஆயிரம் பேர் வருவாங்க. ஆனா என் நாக்கு பக்குவத்துக்கு மலரம்மா தான். நான் எந்த நேரத்துக்கு என்ன சாப்பிடுவேன். எந்த நாட்டுக்கு போயிட்டு வந்தா என்ன என்ன உணவு கொடுக்கனும், அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.” மட்டும் என்ற வார்த்தையில் அவ்வளவு அழுத்தம் கொடுத்தான்.

அவன் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே……உஷ்ணம் அதிகம்  உள்ள நாட்டுக்கு சென்று வந்தால்…..குளுமையான உணவே அந்த வாரம் முழுவதும் இருக்கும்.

அதே போல் தான் குளுமையான நாட்டுக்கு சென்று  வந்தால்…நாட்டுக் கோழி…நண்டு என்று உடலுக்கு உஷ்ணம் ஏத்தும் உணவை சமைப்பார்.

அந்த பக்குவம்  பெற்ற தாய் சங்கரிக்கு கூட வராது…. மனைவியை காப்பாற்றும் பேச்சு என்றாலும் ருத்ரனின் பேச்சை யாராலும்  மறுக்க முடியவில்லை.

இருந்தும் தன் கெத்தை விட்டு கொடுக்காது….. “ இனி மெனு என்னை கேட்டு தான் செய்யனும்.” மலரம்மாவுக்கு உத்தரவு போட…

“ நீங்க கொடுக்கும் மெனு நீங்க சாப்பிடனும் க்ராண்மா….” பேரன் பாட்டிக்கு உத்தரவு போட்டான்.

“ ஏன் என் உடம்பு கெடவா…. ஏதோ ப்ளான்லா தான்டா இருக்க…..” பாட்டியின் பேச்சில் ருத்ரன் மட்டும் இல்லாது அங்கு இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

நம் மஞ்சுவின் உதட்டோரத்திலும் புன்னகை. ஆனால் பாட்டியின் பயத்தில் அதை அப்படியே அடக்கி விட்டாள்.

ஆனால் நம் மதுவோ….. “இது கூட நல்ல ஐடியாவே இருக்கே….”

“இருக்கும்டி இருக்கும். உனக்குன்னு பாத்து பாத்து செஞ்சா….நீ என்னையே மேல அனுப்ப பாக்குறியா….? நான் போனா உன் நில இன்னும் மோசமாகுமடி…உன் இடத்த தக்க வைக்க தான் நான் இவ்வளவு போராடறது.”

“ இங்கு என் உரிமைய யாரும் பறிக்கல பாட்டி…ஆனா மத்தவங்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைய கொடுத்து தான் ஆகனும்.”  பேத்தியின் பேச்சில் கோபம் வர…

“ வர வர இந்த  வீட்டில் என் பேச்சுக்கு மரியாதை இல்லாம  போயிடுச்சி…..”

“ உங்க பேச்ச இங்கு யாரு கேட்கல க்ராண்மா….?  சொல்லுங்க…..” நான் அவங்கல ஒரு வழி செஞ்சிடுறேன் என்ற வகையில் கேட்ட பேரனின் பேச்சில்… அவனை  முறைத்து பார்த்தவர்.

“ உன் தொழில்  பேச்ச இங்கு வெச்சிக்காத…..ஒரு வேலையாளை கூட எனக்கு வேல வாங்க உரிமை இல்ல.”

“ பாட்டி உங்கல  மெனு சொல்ல வேண்டாமுன்னு சொல்லலே….. நீங்க சொல்லும் உணவ நீங்க சாப்பிடனுமுன்னு தான் சொல்றேன்.”

“ஏன் என் பெண்ணுக்கு பிடிச்ச உணவ சொல்லுவேன். என் மகனுக்கு பிடிச்சத சொல்லுவேன். ஏன் உனக்கே எது பிடிக்குமோன்னு  நான் சொல்ல கூடாதா…..?”

“இப்போ மது சொன்னாலே அதை தான் நான் சொல்றேன். உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே தான் மத்தவங்களுக்கு இருக்கு. மத்தவங்க  என்ன சாப்பிடனுமுன்னு நீங்க தீர்மானிக்க கூடாது.

எனக்கு பிடிச்சத மஞ்சு பார்த்துப்பா….அவளுக்கு எப்போ பொறுப்பு வர்றது. மலரம்மாவே  எல்லோருக்கும் பிடிக்கும் உணவு இருப்பது போல பார்த்து தான் செய்வாங்க. தொழில் பேச்சு…..எனக்கு நல்லா தெரியும். குடும்பத்தையும், தொழிலையும் நான் குழப்பிக்க மாட்டேன்.

உங்களுக்கு ஏதாவது சாப்பிட ஆசையா இருந்தா மலரம்மா கிட்ட சொல்லுங்க கண்டிப்பா செஞ்சு கொடுப்பாங்க…. என்ன மலரம்மா க்ராண்மா கேட்டத செஞ்சி கொடுக்க மாட்டிங்க……?”

இவ்வளவு நேரம் தன்னை  உயர்த்தி பேசிய ருத்ரனின் பேச்சில் மலரம்மா தலை தன்னால் ஆடியது.

தன் பாட்டியிடம் பேச்சை  ஆராம்பித்து மலரம்மாவிடம் முடித்த ருத்ரன்…தன் மனைவியிடம்….. “ பேபிம்மா சாப்பிட்டு முடிச்சிட்டு ரூமுக்கு வா…..” சொல்லி விட்டு கைய் கழுவ எழுந்து சென்றவனை பெறுமையுடன் பார்த்தார் தயாநிதி.

வீட்டில் யாரையும் விட்டு கொடுக்காது….தன் மனைவிக்கு கொடுக்க வேண்டிய உரிமையும் விட்டு கொடுக்காது நடந்துக் கொள்ளும், தன் மருமகனின் செயலில் வெக்கித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ருத்ரனின் நடவடிக்கையை பார்த்து…நான் ஏன் என் மனைவிக்காக இது போல் பேசவில்லை….?  காலம் கடந்த சிந்தனை.

லேப்டாப்பை எடுத்துக் கொண்டு இருந்தவனின் முன் வந்து நின்ற மஞ்சு…… “ போகும் போது டாட்டா காட்டனுமா….?அதுக்கு தான் ரூமுக்கு கூப்பிட்டிங்கலா…..?”

ருத்ரன் ரூமுக்கு அழைத்ததும் மது அவளை ஒரு வழி செய்து விட்டாள். “ போக்கா போ…..” என்று அந்த கடுப்பில் துப்பட்டாவை முறுக்கிய வாறு கேட்டதும் தான்…. இதுக்கூட நல்லா இருக்கே என்ற எண்ணம் ருத்ரனுக்கு வந்தது.

தான் வந்ததும்  பாட்டிம்மா மஞ்சுவை ஏதாவது சொல்ல போகிறாரோ  என்ற எண்ணத்தில் தான் ருத்ரன் மனைவியை அழைத்தது.

மனைவி பேசும் பேச்சிலும், சொல்லும் அழகிலும், கவரப்பட்டவனாய்….. “ டாட்டாலா வெளியில் வந்து காட்டுவது பேபி….ரூமுக்குள்ள ……”அடுத்து சொல்லாது அவன் பார்வை சென்ற இடம் அவளின் உதடு….

அவனின் பார்வையில் மங்கையின் மனம் கூட மயங்கியதோ…. “நீங்க இப்படி எல்லாம் பேசுவிங்கலா…..?” திக்கி திணறி மஞ்சு பேசிய பேச்சில்… ஏன் இவ்வளவு நாள் இப்படி பேசவில்லை என்ற ஏக்கம் இருந்ததோ….?

“ இதுவே ரொம்ப லேட் பேபிம்மா…நீ என்னன்னா….?இப்படி எல்லாம் பேசுவிங்கலான்னு கேட்குற…..? பேச மட்டும் இல்ல செயலிலும் காட்டுவேன்.”

மஞ்சுவின் பார்வை வயது வித்தியாசம்,  விட்டு பிடிக்கலாம், அனைத்தும் மறக்கும் படி செய்தது.சொன்னது மட்டும் அல்லாது…

துடித்துக் கொண்டு இருந்த அவளின் உதட்டை….. தன் உதட்டால் முதலில் மென்மையாக  பதித்தவன், பின் அவளின் கழுத்தின் பின் பகுதியில் தன் ஒரு கைய் கொண்டு தன் முகத்துக்கு அருகில் கொண்டு வந்தவன், அடுத்த கையை அவளின் இடுப்பில் பதித்து மஞ்சுவின் உடல் மொத்தமும் தன் மேல் படும்மாறு செய்து மென்மையில் அராம்பித்தவன் அவன் இதழ் ஒத்தல்  வன்மையில் முடிந்தது.

மஞ்சு எந்த எதிர்ப்பும் காட்டாது  ஒத்துழைத்தாலும், சீரான மூச்சு காற்று  கிடைக்காத்தால் தன் சட்டையின் பின் பகுதியை அழுத்தத்தில் அவளின் நிலை உணர்ந்து அவளை விடுவத்தவன்….

அவள் வேகமாக மூச்சு எடுத்து விட்டதில் கொஞ்சம் சமநிலைக்கு வந்து விட்டாள் என்று தெரிந்ததும், திரும்பவும் ஒரு அழுத்த முத்தத்தை அவளின் உதட்டுக்கு பரிசளித்து விட்டு….

“ புதுசா கல்யாணம் ஆனவன் ஆபிஸ் போகும் போது தன் மனைவியை ரூமுக்கு கூப்பிட்டா இது தான் செய்வாங்க…..” என்று சொல்லிக் கொண்டே….கசங்கிய தன் சட்டையை நீவி விட்டு விட்டு…

“நைட் என்ன செய்வாங்கன்னு இன்னிக்கி ராத்திரி சொல்றேன்…..” சொன்னவனின் பேச்சில் பாதி பயமும், பாதி வெட்கமுமாய் அதே இடத்தில் நின்று  விட்டாள்.

அவளின் நிலை உணர்ந்தவனாய்…. “ நீ சொன்ன டாட்டா இன்னிக்கி வேண்டாம் பேபிம்மா…..நாளைக்கு டாட்டா காட்டு…..” என்று சொன்னதோடு திரும்பவும் அவளை இழுத்து அணைத்து விட்டு…

“பாய்….” மனைவியிடம் விடைப்பெற்றான்.

கொஞ்ச நேரத்துக்கு  மஞ்சு பந்திரித்து விட்ட கோழி போலவே சுற்றிக் கொண்டு இருந்தாள். மலரம்மா…… “ மதியம் என்ன செய்யட்டும் மஞ்சும்மா…..?” என்ற கேள்விக்கு கூட…

“ உங்களுக்கு பிடித்தமானத செய்ங்க மலரம்மா…..” என்று சொன்னதும்…

மஞ்சுவின் பேச்சிலும் முகத்தில் தெரிந்த பதட்டத்திலும்….அவளின் கழுத்து பகுதியில் கைய் வைத்து பார்த்த மலரம்மா…

“ உடம்பு சூடு கூட இல்லையே…..?”

“  உடம்புக்கு வேற  ஏதாவது பண்ணுதா மஞ்சும்மா….பெரிய அய்யா இன்னும் ஆபிஸ்  போல…சொன்னா ஹாஸ்பித்திரிக்கு கூட்டிட்டு போவாரு…..”

மலரம்மா பேச்சுக்கு மஞ்சுவிடம் பதில் இல்லை. மலரம்மா தன் கழுத்து பகுதியில் கைய் வைத்ததும், கொஞ்சம் நேரம் முன் தன் கழுத்தை தொட்ட கைய் ஸ்பரிசம்  தான் நியாபகத்துக்கு வந்தது.

“மஞ்சும்மா மஞ்சும்மா…..” மலரம்மாவின் சத்தமான அழைப்பில்…..

தன் கணவனிடம் ஹாலில்  குலதெய்வம் கோயிலில் நடக்க இருக்கும் பூஜை பற்றி பேசிக் கொண்டு இருந்த மகேஸ்வரி தயாநிதி சமையல் அறைக்கு ஓடி வர…

நம்ம மஞ்சுவோ….. “ என்ன மலரம்மா…..? “ என்று  சாதரணமாய் கேட்ட கேள்விக்கு நம் மலரம்மா தான் முழித்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

மகேஸ்வரி….. “ மலரம்மா என்ன ஆச்சி…..?” கேட்க…

தயாநிதியோ அங்கு நடப்பத்தை ஏதும் பேசாது பார்த்திருந்தார். பின் மலரம்மா தான்…..” மஞ்சும்மா ஏதோ மாதிரி நின்னுட்டு இருந்தாங்கலா……” அவர் சொல்லி முடிக்கவில்லை.

மகியின் கை மஞ்சு பக்கம் நீண்டது…அய்யோ இன்னும் ஒரு தடவையா….என்ற எண்ணத்தில் தான் மஞ்சு அவசராமாக  மகியின் கைய்படாது ஒதுங்கி நின்றது.

ஆனால் மஞ்சுவின் இந்த செய்கையில் மகி பெரிதாய் அடிவாங்கி நின்றார். கொஞ்ச நாளாய் அதிகப்படியான பேச்சு வார்த்தை இல்லை என்றாலும், கேட்டதுக்கு ஒன்று  இரண்டு பதில் கொடுத்தாளே….

அதில் நம்பிக்கை பெற்று…இன்னும் கொஞ்ச நாளில் அனைத்தும் சரியாகி விடும் என்று தானே நினைத்தேன்.

இப்போது திரும்பவும் முதலில் இருந்தா…..?மகேஸ்வரிக்கு ஆயாசமாக இருந்தது.

மனைவியின் நிலை உணர்ந்தவராய்….. “ மகி….” என்றழைத்து அமைதியாகு என்பது போல் சமிஞ்சை செய்தவர்.

மகி செய்தது போலவே….தயாநிதி கை நீட்டலுக்கும், மகிக்கு கிடைத்த அதே நிலை தான் தயாநிதிக்கும் கிடைத்த்து.

“ உடம்புக்கு எல்லாம்  ஒன்னும் இல்ல அப்பா….” இப்போது எல்லாம்  தயாநிதியை அப்பா என்ற அழைப்பு மஞ்சுவின் வாயில் இருந்து சாதரணமாய் வந்து விழுந்தது.

தன் கணவனிடமும்  மஞ்சு இப்படி நடந்துக் கொண்டதும் தான், மகிக்கு கொஞ்சம் ஆசுவாசம் கிட்டியது. தன்னை ஒதுக்க அப்படி தள்ளி நிற்கவில்லை என்று…

மகி …. “  அப்போ ஏதாது பார்த்து பயந்துட்டியா மஞ்சு…..?”

“இல்ல…”

தாயின் பேச்சுக்கு பதில்   அளித்தாலும் ஒரு மார்க்குக்கு எழுதும் விடை போல் தான் இருக்கும் மஞ்சுவின் பேச்சு…

தயாநிதி மனைவியின் தோள் பற்றியவர் மஞ்சுவிடம்…..

“மலரம்மா கிட்ட மதியத்துக்கு உண்டான மெனு சொல்லிடுமா……இன்னிக்கு ருத்ரன் சாப்பிட வருவான்.” என்று மகளிடம் சொன்னவர் மனைவியை கையோடு  ஹாலுக்கு அழைத்து வந்தார்.

“ என்னங்க….மஞ்சு கிட்ட என்ன ஏதுன்னு கேட்குறதுக்குள்ள கூட்டிட்டு வந்துட்டிங்க…..”

“ அது எல்லாம் நீ கேட்க தேவயில்ல……”

“அப்போ நீங்க கேளுங்க……”

“ ஏன்டி நானும் கேட்க முடியாதுடி…..”

“ என்ன சொல்றிங்க…..?ஒன்னும் விளங்கல……”

“ ரொம்ப நாள் ஆச்சுல….அது தான் மறந்துட்ட……”

எப்போதும் மஞ்சுவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்து பின் தான் உன்னோடான என் தாம்பத்திய உறவு என்று  சொன்னாரோ…..

அன்றிலிருந்து…..இன்று வரை வார்த்தையால் கூட மனைவியிடம் அத்து மீறவில்லை. அதுவும் மகி நாற்பது கூட கடக்காதவள். இயற்க்கையிலே அழகோடு இருப்பவள்.

கோயில் விசேஷ வீட்டுக்கு செல்லும் போது தன்னை அலங்கரித்து இருப்பவளை  பார்த்து மனது ஏங்கினாலும்….இந்த வாக்குறுதியாவது காப்பற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருந்தவருக்கு…

இன்றைய சூழல்…அனைத்தும் சரியாகிவிடும் என்ற எண்ணத்தில் மகியிடம் மனைவியின் உரிமையில் பேசினார்.

“என்னது ரொம்ப நாள் ஆச்சு…எனக்கு புரியல…நான் மஞ்சு கிட்டயே கேட்குறேன்.” திரும்பவும் சமையல் அறை பக்கம் செல்ல பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி…

“இது எல்லாம் கேட்கு கூடாதுடி….” தயாநிதி எப்போவாவது தான் மனைவியை டீ போட்டு அழைப்பார். அந்த அழைப்பில் மகி தன் கணவனை பார்க்க…

உட்கார் என்பது போல் தன் இருக்கையின் அருகில் கை காட்டி அமர வைத்தவர்…

“காலையில ருத்ரன் கசங்கிய சட்டைய நீவி விட்டுட்டே போனான்டீ…”

“ஏன் இந்த வாரம் ஐயன் பண்றவன் வரலியா….?” என்று கேட்டவள்.

பின் அவளே….. “ இல்லையே வந்தானே…..” என்று சொன்னவள்.

பின்…. “ மஞ்சு சரியா வைக்கல கசங்கியதால  ருத்ரன் ஏதாது திட்டி இருப்பானோ…..கோபம் வந்தா ருத்ரனுக்கு எல்லையே தெரியாதே…. ……” பதட்டத்தில் பேசிய மனைவியின் பேச்சை…

“கோபத்துல மட்டும் இல்ல ரொமான்சுலேயும் என் மருமகனுக்கு  எல்லை தெரியாதுடீ…..”

அப்போது தான் மகிக்கு ஏதோ  விளஞ்கியது போல் அவரை பார்க்க…… “ஐயன் பண்ண சட்டைய போட்டுட்டு மனைவிய கட்டி பிடிச்சாலும் சட்டை கசங்க தான் செய்யும். நமக்கு கல்யாணம் ஆன புதுசுல என் சட்ட இது போல் எத்தன தடவ கசங்கி இருக்கு……”

அவரின் மற்ற பேச்சை விடுத்து…..” நிஜமா தான் சொல்றிங்கலா…..?” ஆவளாய் கேட்டார்.

இத்தனை நாளில் ருத்ரன் மனைவிக்கு பார்த்து பார்த்து செய்தாலும், அவர்கள் கணவன் மனைவியா வாழவில்லையோ….. என்ற சந்தேகம்  சமீப காலமாய் மகிக்கு .

கணவனின் பேச்சில்….மகிழ்ந்து அவரை பார்க்க….. “ இன்னிக்கி மதியம் சாப்பிட   ருத்ரன் வீட்டுக்கு வந்தா…..நான் சொன்னது தான்.”

“ருத்ரன் வருவாரா……”

“அவன் வரானோ இல்லையோ நான் வர்றேன்.”

ம்….என்று முறைத்த மனைவியிடம் “ருத்ரன் வந்தானான்னு பாக்க தான்டி…..”

தயாநிதி மகேஸ்வரியின் மனது குளிர்விக்க ருத்ரன் வருவானா…..?

 

Advertisement