Advertisement

அத்தியாயம்—-3

மூன்று நாட்களுக்கு பின் அந்த வீட்டின் இளவரசிக்கு நடக்க இருக்கும் விழாவை பற்றி பேசிக் கொண்டே இரவு உணவை உட்கொள்ளும் போது  … “ மகி மதுக்கு சாப்பாடு கொடுத்துட்டியா…..?” ஏதோ நினைவில் சாப்பாட்டை அளந்துக் கொண்டு இருந்த மகேஸ்வரிக்கு மாமியாரின் பேச்சு காதில் விழாது போக.

திரும்பவும்…. “மகி மதிக்கு சாப்பாடு கொடுத்திட்டியா….?  இப்போது அகிலாண்ட நாயகியின் குரலில் அழுத்தம், கோபம் இரண்டும் சேர்ந்து ஒலித்ததால் மகேஸ்வரியின் காதில் சரியாக விழ.

“ஆ அப்பவே மலரம்மாவ கொடுக்க சொல்லிட்டேன் அத்த.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது அந்த இடத்துக்கு வந்த மலரம்மாவிடம்…

‘மதுக்கு சாப்பாடு கொடுத்துட்டியா….?” என்று மகேஸ்வரி கேட்க.

“நம்ம மஞ்சு பொண்ணுக்கு கொடுக்குறப்பவே நம்ம மது பாப்பாவுக்கும் கொடுத்துட்டேன் மா.” மலரம்மா மஞ்சுவையும், மதுவையும் இணைகூட்டி பேசியது பிடிக்காத அகிலாண்ட நாயகி….

மாகேஸ்வரியிடம்….. “மகளுக்கு வேலக்காரங்க கிட்ட தான் சாப்பாடு கொடுத்து அனுப்பிவியா….? நீ எல்லாம் அம்மான்னு சொல்லிக்காத…..”  என்று அதட்டல் போட்டதுக்கு…

ஒன்றரை வயது குழந்தைய விட்டு என் சுகம் தான் பெரியது என்று இதோ இது வரை அவளிடம் பேசாது …..இதோ காலையில் வீட்டுக்கு வந்த மகளிடம் கூட வா என்று அழைக்க முடியாது என் வாழ்வு தான் பெரியது என்று இருக்கிறேனே…..நான் எப்படி ஒரு அம்மாவாய் இருக்க முடியும். எப்போதும் போல் தன் மனதுக்குள்ளயே குமுங்கிக் கொண்ட மகேஸ்வரி…..

பாதி சாப்பாட்டில் எழுந்தவராய்…. “தோ பாக்குறேன் அத்த.” கை கழுவ எழுந்தவளை…. “சாப்பிட்டு போ மகி.” என்ற கணவனின் பேச்சில் அவரை ஒரு பார்வை பார்த்தவள், அவர் கேட்டதுக்கு பதில் ஏதும் சொல்லாது அமைதியாக எழுந்து செல்லும் மனைவியின் பார்வையில் சத்தியமாக தயாநிதி செத்து தான் போனான்.

மாமனும் பாதி சாப்பாட்டில் எழுந்து செல்வதை பார்த்த ருத்ர மூர்த்தி…. “க்ராண்மா வேலக்காரங்க சாப்பாடு கொடுத்தா என்ன….?பாருங்க இரண்டு பேரும் சாப்பிடாம எழுந்து போறாங்க….” என்று தன் பாட்டியை அதட்டி விட்டு தன் மாமன் பின் சென்றான்.

அந்த வீட்டில் அகிலாண்ட நாயகியின் பேச்சுக்கு எதிர் பேச்சு இல்லை என்பதால், சங்கரி அங்கு ஒரு பார்வையாளராய் மட்டும் அனைத்தும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தார்.

தன் மாமனை தேடி தோட்டத்துக்கு சென்ற ருத்ரா அங்கு எங்கோ பார்வையை நிலைக்க விட்டு சோகமாய் இருப்பவரின் தோளை தட்டியவன்….

“  அத்த பாதி சாப்பாட்டில் எழுந்தது அவ்வளவு பெரிய விஷயமா……? என்னவோ நம்ம விமானத்தில் ஒன்னு வெடிச்சி சிதறனா மாதிரி ஒவரா ரியாக்க்ஷன் கொடுக்குறிங்க….?” என்று பேசிக் கொண்டே தன் மாமனை தன் பக்கம் திருப்பியவன் அவரின் கலங்கிய கண்ணை பார்த்து அதிர்ந்தவனாய்….. “மாமா.”

எப்போதும் தன் மாமாவை ஒரு நிமிர்வுடனே பார்த்திருந்தவனுக்கு இந்த கலங்கிய முகம் அவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

“என்ன விஷயம் மாமா….?” என்று கேட்டுக் கொண்டே அவர் கை பிடிக்க. பிடித்த கையை விடாது கெட்டியாக பிடித்துக் கொண்ட தயாநிதி.

மற்றொரு கையால் தன் நெஞ்சை காட்டி…. “இங்கு குத்துதூ….ருத்ரா…இங்கு குத்துதூ….” என்று

சொல்லிக் கொண்டே தன் நெஞ்சை பலமாக அடித்துக் கொள்ளும் மாமனின் மற்றொரு கையையும் பிடித்துக் கொண்ட ருத்ரா…

“மாமா கூல் கூல்.” என்று அமைதி படுத்தியும் கேட்காத தயாநிதி, தன் மனதில் இத்தனை ஆண்டுகளாய் ஏறி இருந்த பாரத்தை தன் மருமகனிடம் கொட்டினாலாது குறையுமா…? என்ற எண்ணத்தில் தன் மனதில் இருப்பதை கொட்ட  தொடங்கினார்.

“விதி அவளிடம் இருந்து  அப்பாவை பறிச்சதுனா…நான் அவ அம்மாவை பறிச்சிட்டேன் ருத்ரா.” இப்படி சொல்லும்  தயாநிதியின் கண்ணில் அப்பட்டமாக குற்றவுணர்வு தெரிய.

சிந்தனையுடன் அங்கு இருந்த மேடையில் அமர வைத்த ருத்ரா…. “எனக்கு சுத்தமா புரியல மாமா. யாரு கிட்ட இருந்து அம்மாவ பறிச்சிங்க.”

தயாநிதிக்கு திருமணம் ஆகும் போது ருத்ர மூர்த்தி தன் பன்னிரெண்டாம் வயதின் இறுதியில் இருந்தான். மாமா இளம் விதவையை திருமணம் செய்துக் கொண்டார் என்பது வரை தான் அவனுடைய பதினைந்தாவது வயதில் புரிந்தது. அதற்க்கு மேல் அவன் அதை பற்றி யாரிடமும்  எதையும் கேட்கவில்லை.

மாமனிடம் அன்பு அதிகம். அதை விட மரியாதை அதிகம் என்பதாலோ என்னவோ அவருடைய பர்சனலை அதற்க்கு மேல் மனதில் கூட யோசிக்காது இருந்தான்.அதனால் மஞ்சுவை பற்றி தெரியாது.

“உங்க அத்தைய கல்யாணம் செஞ்சப்ப ஒரு வருடம் பொறுத்துக்க மஞ்சுவ எப்படியாவது நம்ம வீட்டுக்கு அழச்சிக்குறேன்னு அவ கிட்ட வாக்கு கொடுத்தேன். ஆனா  என்னால அத நிறைவேத்த முடியல. இப்போ என் மாமனாருக்கு கொடுத்த வாக்குறுதியும் நிறைவேத்த முடியுமான்னு தெரியல ருத்ரா.” மாமனின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த ருத்ரா.

“மஞ்சு யாரு மாமா….?” என்ற ருத்ராவை முதலில் குழப்பத்துடன் பார்த்தவர். பின் ஒரு விரக்தி புன்னகையுடன்.

“பார்த்தியா மஞ்சு யாருன்னு கூட உனக்கு தெரியல. அந்த  பேரு கூட யாரு வாயில இருந்தும் வந்துட கூடாது. அந்த அளவுக்கு கட்டுப்பாடு நம்ம வீட்டில.” அவர் பேச்சில் அந்த பெண்ணின் பெயர் மஞ்சுளா என்று புரிந்துக் கொண்ட ருதர மூர்த்தி.

“அத்த பொண்ணு பேரு மஞ்சுளாவா மாமா. சாரி எனக்கு தெரியாது.” என்று வருந்தியவன்.

மாமனை சகஜமாக்கும் பொருட்டு…. “மதியம் பார்த்தேன் மாமா. அப்படியே அத்த மாதிரியே இருக்கா. அத நான் க்ராண்மா கிட்ட கூட சொன்னேன்.” ருதராவின் பேச்சில் மற்றதை விட்டு விட்டு.

“அதுக்கு பாட்டி என்ன சொன்னாங்க….?” என்று தன் மாமன் கேட்கும் போது தான் தன் பாட்டி ஏதோ பேசியது நியாபகத்துக்கு வர. யோசனையுடம் தயாநிதியை பார்த்தான்.

“என்ன உன்ன திட்டினாங்களா….?” என்று கேட்டதுக்கு. “இல்லை” என்று தலையாட்டியவன்.

“இப்போ யோசிச்சா பேச்ச மாத்துனா மாதிரி தெரியுது மாமா” என்று சொன்னவன்.

பின்… “ க்ராண்மாவுக்கு அந்த பொண்ண பிடிக்காதா மாமா.” என்று கேட்டவனை யோசனையுடன் பார்த்த தயாநிதியின் பார்வையில் என்ன கண்டானோ….?

“மாமா கவல படாதிங்க தீர்க முடியாத பிரச்சனை எதுவும் இல்ல.? தன் மாமனுக்கு ஆறுதல் படுத்த.

நினைவு எங்கயோ இருக்க வாய் தன்னால்….“உங்க அத்தைய முதன் முதலா நான் பாக்கும் போது மஞ்சு அவ வயித்துல ஐந்து மாசம்.” அந்த செய்தி ருதர மூர்த்திக்கு புதிது.

“ அப்போ அத்தையோட…” அதற்க்கு மேல் கேட்க முடியாது பாதியில் நிறுதிய ருதரனுக்கு பதிலாய்…

“மஞ்சுவோட அப்பா ஈ.பில ஒர்க் பண்ணிட்டு இருந்தார். மஞ்சு மகியோட வயித்துல மூணு மாசம் இருக்கும் போது பத்து நாள் மழையில அங்க அங்க கரண்ட் கம்பி எல்லாம் அறுந்து விழுந்து இருக்குன்னு பொதுமக்கள் கிட்ட இருந்து ரிப்போட் வந்தப்ப அத சரி படுத்த போய் கரண்ட் ஷாக் அடிச்சி இறந்துட்டாரு.

ஒரு மாற்றமா இருக்க தான் நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வந்தா. அப்போ அவ வயசு என்ன தெரியுமா….? என்று கேள்வி கேட்டவர்.

அதற்க்கு பதிலாய் அவரே….. “பத்தொன்பது. ஒல்லியா, குழந்த சாயல் கூட அவ முகத்த விட்டு அகலாம ஐந்து மாசம் கருவ வயித்துல சுமந்துக்கிட்டு பாக்கவே கொடுமையா இருந்ததுன்னா…..

அதோட கொடும என்னன்னா….?அவளோட நிலமைய தனக்கு சாதகமா பயன் படுத்திக்க நினச்ச  நம்ம இணத்தவங்கல பாத்து அப்படி ஒரு கோபம் எனக்கு.

அவள பாக்க பாக்க நம்ம சங்கரிக்கும் இது மாதிரி நிலமை வர வாய்ப்பு இருக்கோன்னு அவ கிட்ட கேட்டப்ப “அண்ணா நீ இருக்கும் போது எவனாவது என் கிட்ட நெருங்குவானா….?”

அப்போ தான் அதே பாதுகாப்ப மகிக்கு நான் கொடுக்கனுமுன்னு சட்டுன்னு என் மனசுல தோனுச்சி. அண்ணனா பாதுக்காப்பா….? அந்த உறவு முறைய அவளோட நினச்சி கூட பாக்க முடியல .

அப்போ தான் என் மனசே எனக்கு புரிஞ்சது. இது வர நான் அவள அனுதாபத்தில் பாக்கலேன்னு. இனி அவள எவனும்  எந்த மாதிரியும் பாக்க கூடாதுன்னு தான் நான் பாட்டி கிட்ட கல்யாணம் ஒன்னு நடந்தா அது மகி கூட தான்னு சொல்லிட்டதால…. அவங்களும் வேற வழியில்லாம ஒரு நிபந்தனையோட ஒத்துக்கிட்டாங்க.”

“நிபந்தனையா….?” ருத்ர மூர்த்தியின் சந்தேகத்துக்கு.

“ஆ நிபந்தனை தான். இந்த வீட்டுக்கு அவ மட்டும் தான் வரனும். குழந்தைய மகி வீட்டில் தான் வளத்துக்கனும் என்று.”

மாமனின் பேச்சில் ருத்ர மூர்த்தி அதிர்ந்து தான் போனான். அத்தைக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும், அவள் பாட்டி வீட்டில் வளர்கிறாள் என்பது வரை மட்டும்  தான் அவனுக்கு தெரியும்.

ஆனால் பாட்டியின் நிபந்தனைப்படியால் தான் அவள் பாட்டி வீட்டில் வளர்கிறாள் என்ற செய்தி அவனுக்கு புதியது.

பாட்டி மிக கண்டிப்பானவர்கள் என்பது ருத்ர மூர்த்தி அறிந்தது தான். அவனை பொருத்த வரை இந்த காலத்தில் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற பாடத்தை சிறுவயதிலேயே அறிந்ததால்  அது தவறாகவும் அவனுக்கு படவில்லை.

ஆனால் தாயிடம் இருந்து ஒரு குழந்தையை பிரித்தது எந்த வகையில் பார்த்தாலும் அவனுக்கு சரியாக தோன்றததால்….

கோபத்துடன்…. “ஏன் மாமா இதுக்கு நீங்க ஒத்துக்குனிங்க.  குழந்தையோடு தான் அத்த இருப்பாங்க. உங்களுக்கு பிடிக்கலேன்னா நாங்க தனியா  போயிடுறேன்னு சொல்லி இருக்கனும் மாமா.”

தான் வளர்த்தவராய் இருந்தாலும் மாமா செய்த தவறை சுட்டி காட்டியவனை ஆழமான ஒரு பார்வை பார்த்தவர்.

“சொல்லி இருப்பேன் என் தங்கை அவள் கணவனுடன் வாழ்ந்து இருந்தா…..என் மகனாய் உன்ன நினைக்காம இருந்து இருந்தா…..உங்க அப்பா சொத்து மொத்தத்தையும் போட்டு ஏர்லைன்ஸ் தொடங்குன புதிது. எல்லாத்தையும் விட்டுட்டு என்னால எப்படி சுயநலமா முடிவு எடுக்க முடியும் ருத்ரா.

அதுவும் இல்லாம உங்க பாட்டிய போக போக சரிப்படுத்திடலாமுன்னு நினச்ச என் கணக்கு தப்பா போச்சு.இதோ இப்ப வர உங்க பாட்டி மனசு மாறவ இல்ல.அந்த பொண்ண ஏதோ விரோதிய பாக்குறது போல தான் பாக்குறாங்க.

இன்ன வர அந்த பொண்ணுக்கு ஒத்த ரூபா நான் செலவு பண்ணது இல்ல. அப்படி இருக்கும் போது இதோ இப்போ அடுத்த நிபந்தனைய வெச்சிட்டாங்க. உன் சொத்து முழுக்க மதிக்கு மட்டும் தான் போகனுமுன்னு. அதுவும் மகி எதிர்க்கவே அவள கண் எடுத்து பாக்க முடியல ருத்ரா.

இதோ இப்போ பாதி சாப்பாட்டில் எழுந்து போகும் போது என்ன ஒரு பார்வ பார்த்தா பாரு …செத்து போயிட்டேன் ருத்ரா.” எப்போதும் ஒரு வித கம்பீரத்தோடு தன் ரோல் மாடல் என்று கருதும் மாமாவின் மனதில் இவ்வளவு வலி.

அதுவும் அந்த வலியில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை நினைக்க நினைக்க….. “மாமா அம்மா இங்கே வராம  இருந்து இருந்தா…..” அவன் பேச்சை முடிக்க விடாது…

“ருத்ரா என்ன பேச்சு இது. உன்ன விட்டு தான் எனக்கு ஒரு வாழ்க்கைன்னா அது எனக்கு தேவையே இல்லடா….”

அவர் கெட்ட நேரமோ என்னவோ….?சரியாக அந்த சமயத்தில்  கையில் பாலோடு வந்த மகேஸ்வரியின் காதில் அந்த வார்த்தை விழுந்து விட.

தலைகுனிந்துக் கொண்டே பாலை கணவரிடம் நீட்டிய மகி “நம்ம ஒரே பொண்ணு உங்கல தேடுறா….” தயாநிதி அழைப்பதை காதில் வாங்காது விறு விறு என்று தன் அறைக்கு வந்தவளுக்கு தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று சொல்ல முடியாது கண்ணீர் தன்னால் வழிந்தோட….இருந்தவளை தோள் தொட்ட கணவனை பாராது இருந்தவளை, நிமிர்த்திய தயாநிதி.

“மகி அழாத மகி. கூடிய சீக்கிரம் நான் சரி படுத்திடுறேன்.” என்று சொல்லும் கணவனை நிமிர்ந்து பார்த்த மகியின் பார்வையில் தலை குனிய.

“நா தப்பு பண்ணிட்டேங்க….” தன்னை குற்றம் சொல்லுவாள் என்று எதிர் பார்த்த தயா ,அதற்க்கு மாறாய் ஏதோ பேசும் மனைவியை நிமிர்ந்து பார்த்தவனுக்கு ..

அடுத்து அடுத்து வார்த்தை சாட்டையைய் அவனை பலமாக தாக்கியது… “நீங்க நினச்சது போல நான் ஏன் நினைக்கல…..?” மனைவி பேச்சு புரியாது அவளை பார்க்க.

“தங்க மகன விட்டு உங்களுக்கு ஒரு வாழ்கைய யோசிக்கல. ஆனா நான் மகள  விட்டு எவ்வளவு கேவலமான ஜென்மம் நான்.” என்று சொல்லிக் கொண்டு தலையில் அடித்துக் கதறியவளின் கை பிடித்து தடுத்த தயாநிதி.

“மகி அப்படி சொல்லாத மகி. உன் மேல எந்த தப்பும் இல்ல. நான் தான் ஒரு ஆம்பிளையா முடிவு எடுக்காது இருந்துட்டேன்.” என்ன தான்  சமாதானப்படித்தியும் கேட்காது.

“நான் நல்ல அம்மா இல்ல. உங்க தங்கைக்கு  கூட தான் கணவன் இறந்துட்டாரு. அவங்க தன் மகனுக்காக வாழலையா….?ஆனா நான் என் சுகம் தான் பெருசுன்னு ஒரு சின்ன குழந்தைய விட்டுட்டு சே எனக்கே வெக்கமா இருக்கு.”

தயாநிதியின் பேச்சை காதில் வாங்காது தன் பாட்டுக்கு இத்தனை ஆண்டாக மனதில் மண்டி கிடந்த வேதனையைய் வார்த்தைகளாய் கொட்ட.

தயாநிதியுமோ அதற்க்கும் மேல் பேச தன் குற்றவுணர்வே இடம் கொடுக்காததால் அமைதியாகி விட்டார்.

 

Advertisement