Advertisement

அத்தியாயம்—–29

“ அம்மா மஞ்சு சாப்பிட்டாளா…..?” வாயில் உணவை எடுத்து வைத்துக் கொண்டே தன் அன்னையிடன் ருத்ரன் கேட்டதுக்கு பதில்  அகிலாண்ட நாயகியிடம் வந்தது….

“ சொல்லு சங்கரி. அவ சாப்பிடலேன்னா….அவன் கிட்ட கொடுத்து அனுப்பு ஊட்டி விடுவான்.”

“ க்ராண்மா சரியா தான் சொல்றாங்க….மஞ்சு பேபி சாப்பிடலையா….? இல்லேன்னா உங்க அம்மா சொன்ன மாதிரி  ஒரு ப்ளேட்ல எடுத்து கொடுங்க….என் பேபிக்கு ஊட்டி விடுறேன்.” ருத்ரனின் தெனவெட்டான பேச்சில்….

“ வெட்காம இல்ல. வயசான காலத்துல உங்க அம்மாவுக்கு சாப்பாடும் மாத்திரையும் கொடுத்து  மருமக படுக்க வைக்கனும். இங்கே என்னான்னா எல்லாம் தலை கீழே நடக்குது.. பேபியாம் பேபி…..” திருமணத்துக்கு பிறகு அகிலாண்ட நாயகி  திரும்பவும் தன் உணவை டையினிங் டேபிளிலேயே உட்கொள்ள ஆராம்பித்து விட்டார்.

“ என் புருஷன் கட்டுன வீடு எனக்கு இல்லாத உரிமையா…..?” கல்யாணம் ஆனா அடுத்த நாளே வந்து உரிமையுடம் அமர்ந்தவரிடம்…

“ சரியா சொன்னிங்க க்ராண்மா…இந்த வீட்டில் உங்களுக்கு இல்லாதச் உரிமையா….?ஆனா அடுத்தவங்களுக்கும் இருக்கு…அதை நியாபகத்தில் வெச்சிட்டா போதும்.” தன் பாட்டியிடம் சொன்னவன்.

“ மஞ்சும்மா உப்பு இந்த பக்கம் தள்ளு…..இனி அங்கு உட்காரதே என் பக்கத்தில் உட்கார்ந்துக் கொள்.” இங்கு தன் மனைவிக்கும் உரிமை இருக்கு என்று தன் பாட்டியிடம்  மறைமுகமாக உணர்த்தினான்.

இன்று தன் பாட்டி பேச்சு  அவனுக்கு நியாயம் என்றே பட்டது. அத்தை என்ன தான் பாட்டி திட்டினாலும் அவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு கொடுப்பதையோ… “மாத்திரை எடுத்திங்கலா….?” என்ற விசாரிப்பதையும் அவர் மறந்தது இல்லை.

அதுவும் படிப்பு முடிந்த நிலையில்….எனக்கு உணவு கொடுக்காது தன் தாயையும் கவனியாது…..என்ன செய்யிறா…..?பெரும்பால் ஆண்களின் எண்ண போக்கே அவனுக்கும்…..

ஆனாலும் அதை காட்டாது சாப்பிட்டு முடித்து மேல் செல்ல பார்த்தவனை கை பிடித்து தடுத்த தயாநிதி….. “ருத்ரா  சொன்னா புரிஞ்சிப்பா…..” ருத்ரனின் முகபாவத்தை பார்த்தே அவனை புரிந்துக் கொண்ட மாமன் காரன் தன் மகளின் மனநோக கூடாது என்று சொன்னார்.

ருத்ரன் பொறுமை காப்பது என்றால் பொறுமை காப்பான். அவன் பொறுமை  சோதித்து எல்லை கடக்கும் நிலை வந்தால் அவன் வார்த்தை புயலை போல் சுழட்டி அடிக்கும்.

“ மாமா அவ என்  பொண்டாட்டி…..” அவன் எந்த அர்த்ததில் சொன்னான் என்று வளர்த்த அவராலேயே புரிந்துக் கொள்ள முடியவில்லை.

தன் அறைக்கு வந்த ருத்ரன் முகம் கூட தெரியாது இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கும் மனைவியைய் பார்த்து, ஒரு பெரும் மூச்சோடு  ஒரு மாதமாக கட்டிலில் அந்த பக்கம் படுக்கும் ருத்ரன்…

அவள் போர்த்தி இருந்த போர்வை விலக்க.  முட்டை கண்ணை வைத்துக் கொண்டு அவனை திரு திரு என்று பார்த்தாள் நம் மஞ்சுளா…

“ அப்போ இத்தன நாள் நான் வரும் போது முழிச்சிட்டு தான் இருந்தியா…..?”

கணவன் கேட்ட கேள்விக்கு…. “  நான் எப்போ தூங்கிட்டதா சொன்னேன்.”  வாய் அடைத்து நின்று விட்டான் ருத்ரன்.

“ அப்போ ஏன் பேசலே….?”

“ நீங்க கூட தான் பேசலே….” மது ஹனிமூன் பற்றி சொன்னதும் ஒரு எதிர் பார்ப்போடு வீட்டுக்கு வந்தவனை…

இன்று  போல் போர்த்திய போர்வைக்குள்  தான் மஞ்சுவை பார்த்தான். சரி நாளை பேசலாம்… அன்று ஏமாற்றத்தோடு தான்  படுத்தான்.

காலை அவனுக்கு முன் எழுந்து அவள் தங்கையின்  அறைக்குள் நுழைந்தால், அவன் ஆபிசுக்கு செல்லும் வரை வர மாட்டாள். இரவு போர்வைக்குள் மஞ்சு. இந்த ஒரு மாத காலமாய் இதே  தான் தொடர்ந்தது. வந்த நாளு ஞாயிறும் அவனை தவிர்க்க ஏதாவது சாக்கு வைத்திருந்தாள்.

இன்று பாட்டியின் பேச்சில் போர்வையை விளக்கினால்…. பேசை பாரு…. பேச்சை….?

“ தூக்கம்  வரலேன்னா எதுக்கு படுத்துட்டு இருக்கே…. கீழே இருக்கலாம். இல்லேன்னா இங்கேயே டிவி பார்க்கலாம்” என்று சொன்னவனிடம்…

“ எனக்கு பழக்கமில்லையே…..”

“ என்ன பழக்கமில்ல….?”

“ இங்கு வந்ததில் இருந்து ஹாலில் எல்லாம் உட்கார்ந்து பழகல… நான் அப்போ தங்குன அறையில டீவி இல்ல…அந்த பழக்கமும் விட்டுடுச்சி……”

மனைவியின் பேச்சில்….இந்த அறைக்கு வந்த போது இருந்த கோபம் கொஞ்சம் தணிந்தது.

“ சரி தோட்டத்துல போவியே…இப்போ  ஏன் போகறது இல்ல….”

“ நீங்க தான் இருட்டின பிறகு போக கூடாதுன்னு சொன்னிங்கலே…..”

“ இது போல எல்லாத்திலேயேயும் என் பேச்சை கேட்டு நடந்தா நல்லா இருக்கும்….”

“ ம் என்ன சொன்னிங்க அத்தான்…..?”

“ உன் வாயில் இருந்து இந்த அத்தான் வர்றதுக்கு உன் கிட்ட இந்த அளவுக்கு மல்லு கட்டனுமா….?”

“ இப்போ என்ன ….?உங்கல எப்போவும் அத்தான்னு கூப்பிடனும்…. அவ்வளவு தானே….கூப்பிடுறேன்.”

“ அது மட்டும் போதாது…..” ருத்ரனின் இந்த பேச்சில்….. “ வேறு என்ன செய்யனும்…..?” வார்த்தை தந்தி அடித்தது.

“ எனக்கு இனி நீ தான் சாப்பாடு போடனும்…அதே மாதிரி அம்மாவையும் நீ தான் பார்த்துக்கனும். அது மட்டும் இல்ல இது மாதிரி சும்மா சும்மா ரூமுல வந்து உட்கார்ந்துக்க கூடாது.

வேலையாள் எல்லாம் ஒழுங்கா வேல பாக்குறாங்கலா……என்ன…என்ன மெனு…எல்லாம் நீ தான் பாக்கனும்.”

“ அதெல்லாம் செய்ய தான்  என் அத்தையும் உங்க அத்தையும் இருக்காங்கலே அத்தான்.”

என் அத்தை …அவ அம்மாவை அம்மான்னு கூப்பிடாம இருக்க எப்படி எப்படி எல்லாம் பேசுறா…..?

“ அவங்கலுக்கு வயசு ஆவுது லே… இனி நீ தான் பார்த்துக்கனும். முக்கியமா நான்  ஆபிசுக்கு போகும் வரை…..இந்த அறையில தான் இருக்கனும்.” தன் வேலை அவள் மட்டுமே செய்ய உறுதி படுத்திக் கொண்டு குளியல் அறையில் நுழையும் ருத்ரனின் முதுகையே பார்த்திருந்த மஞ்சுவுக்கு  ஒரு பெரும் மூச்சு வந்து போனது…

வேறு என்றதும்….அவள் மனதில் வேறு என்ன என்னவோ வந்து போயின…..

“ மஞ்சு….” மலரம்மாவிடம் பேசிக் கொண்டு இருந்தவளை அவள் கணவன் காலையிலேயே ஏலம் போட..

“ தோ வர்றேன்….” என்றவள்…

திரும்பவும் “ வர்றேன் அத்தான்…..” என்று திரும்பவும்  மலரம்மாவிடம்…..

“ ஆப்பம்….இடியாப்பம் ஒரே நாள்ல வெச்சுக்க  வேண்டாம் மலரம்மா….இதுல ஒன்னு இருந்தா போதும்….” வேளையாளின் கஷ்ட்டத்தை உணர்ந்து சொல்லும் மஞ்சுவின் கன்னத்தை தட்டிய மலரம்மா…

“ நீ போ மஞ்சும்மா  தம்பி கூப்பிடுறாரு பாரு…..” சொன்னதும் சிட்டாக அவர்கள் அறைக்கு  மூச்சு வாங்கி நின்றவள்…

“ எதுக்கு அத்தான் கூப்பிட்டிங்க…..?”

டையைய் சரிபடுத்திக் கொண்டே….. “ நேத்து நான் என்ன சொன்னேன்….?.” அது சொன்னிங்க ஏகாப்ட்டது… இதை மஞ்சு மனதில் தாங்க நினைத்தது. மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லும் அளவுக்கு…..இன்னும் தைரியம் வரவில்லை.

“ என்ன சொன்னிங்க…..?”

“ அதுக்குள்ள மறந்திட்டியா….? நான் ஆபிஸ் போகும் வரை இங்கே இருக்கனுமுன்னு சொன்னானே இல்லையா…..?”

இப்போது அம்மணிக்கும் கொஞ்சம் ரோஷம் எட்டி பார்த்தது….. “ நீங்க தான் மெனு என்னன்னு சொல்லனுமுன்னு சொன்னிங்க…அது பத்தி தான் மலரம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன்.” மூக்கு வெடைக்க….பேசியவளின் மூக்கை பிடித்து திருக ருத்ரன் மனதில் ஆசை வந்த போதும்…

அதை அடக்கியவனாய்…… “ இனி நான் வாக்கிங் போவதுக்குள்ள போய் சொல்லிட்டு, நான் இந்த ரூமுக்குள்ள வந்ததும் நீயும் வந்துடனும்….என்ன புரியுதா…..?”

புரியுது என்று தலையாட்டியவள்…மெல்ல என்றாலும்…. “ நான் ரூமுக்குள்ள வந்து என்ன செய்ய போறேன்…..?” அவள் பேச்சை தலை சீவிக் கொண்டே கண்ணாடி வழியாக அவளை பார்த்துக் கொண்டு இருந்தவன்….

இப்போது அவள் முகத்தை நேர்க் கொண்டு பார்த்தவாறு அப்படியே நின்றுக் கொண்டு இருந்தான். அவன் திரும்பி தன்னை பார்த்ததும் ஏதோ சொல்ல போகிறான் என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள்….

அவன் பேசாது தன்னையே பார்த்திருப்பது என்னவோ செய்தது…அவன் கண்ணில் ஏதோ ஒரு  மாற்றம். என்ன அது….? தெரியவில்லை.

ஆனால் அந்த பார்வை தன்னை என்னவோ செய்கிறது என்று மட்டும் புரிந்தது. தொடர்ந்தார் போல் அவன் கண்ணை பார்க்க முடியாது.

தலை குனிந்து வாறு…. “ நா…ன்  இ..னி ரூமிலேயே இருக்கேன்.”

“ தொடர்ந்து இருந்தா….. நான் எதுக்கு இருக்கே சொன்னேன்னு புரியும்.”

தன் கையைய் அவள் முன் நீட்டி….. “ஷர்ட் பட்டன் போட முடியல…போட்டு விடேன்.”கைய் பகுதியில் இருக்கும் பட்டனை போட சொன்னான்.

அவன் நீட்டிய கைய் அவளின் கழுத்து பகுதிக்கு மிக அருகில் நீண்டு நின்றது.

“ம்….” அவன் கைய் தன் மீது படாத வாறு நின்றுக் கொண்டு  “ கைய கொஞ்சம் கீழே இருக்குங்க….”

“ அவ்வளவு கீழே இல்ல….”

“ ஒரு பட்டன  போட என்ன க்ளாஸ் எடுக்குறடி….? போடு…..” அவள் மீது கைய் படும் படி நீட்டி சொன்னவனின்     பேச்சை மறுக்க முடியாது…போட்டு விட்டதும்…

“ இனி நீ தான் போட்டு விடனும்.”

“இப்படியா…..?”

“இப்படியும் இருக்கலாம்…இதுக்கு மேலேயும் இருக்கலாம்.”

“சரி…சரி ரூமில் வேல முடிஞ்சுடுச்சி…எனக்கு ப்ரேக் பாஸ்ட் ரெடியாயிடுச்சா பாரு….?” விட்டால் போதும் என்று அந்த அறையை விட்டு  ஓடி விட்டாள்.

மூச்சு வாங்க நின்றவள்….” மலரம்மா எல்லாம் ரெடியா….?”

“ ரெடி மஞ்சும்மா….நீ ஏம்மா இப்படி ஓடி வர்ற…..தம்பி எப்போ வருமுன்னு எனக்கு தெரியாதா….?நீயும் உட்காருமா….நான் வைக்கிறேன்.”

“இல்ல…இல்ல நானே அவருக்கு வைக்கிறேன்.” மலரம்மா கையில் உள்ள பாத்திரத்தை பிடிங்கிக் கொண்டு டையினிங் டேபுளில் வைத்ததும்….… அனைவரும்  வந்து அமர்ந்துக் கொண்டனர்.

முதலில் அத்தையின் தட்டிலில் ஆப்பத்தை வைத்ததும்…அகிலாண்ட நாயகி தன் பேரனை பார்க்க…பேரனும் தன் பாட்டியை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.

பாட்டி தன்னை பார்த்ததும்…ஒற்றை புருவத்தை உயர்த்தி இறக்கியவன்….” எப்படி….?” என்பது போல் புன்னகை புரிந்தவன்…

“ பேபிம்மா மாமியார கவனிக்க வேண்டியது தான். ஆனால் இந்த அத்தானால் தான் அவங்க உனக்கு மாமியார் ஆனாங்க…”

அப்போதும் அவன் சொன்னது விளங்காது…..அவனையே பார்த்திருந்த மஞ்சுவை பார்த்த மது….. “அக்கா அத்தான் அவர கவனின்னு சொல்றாரு…..” அக்காவிடம் விளக்கியவள்…

ருத்ரனிடம்….. “அத்தான்  அக்கா என்ன மாதிரி ஸ்மார்ட் இல்ல…..” சொன்ன மதுவுக்கு ருத்ரன் பதில் அளிக்கும் முன்…

“  அதுலா சும்மா.. ஊம ஊரு கெடுக்கும். ஒன்னும் தெரியாத மாதிரி இருந்தா தானே….” அதற்க்கு மேல் பேசாது….

மலரம்மாவிடம்….. “ ஏன்டி சும்மா மூஞ்சிய பார்த்துட்டு நிக்குற….இடியாப்பத்தை  வை…..”

எப்போதும் காலையில் ஓட்ஸ் கஞ்சி மட்டும் குடிக்கும் மகராசி…..இன்று இடியாப்பத்தை யாரை  பிழிய கேட்டாரோ…

மலரம்மா கைய் பிசைந்துக் கொண்டு நின்றார் என்றால்…மஞ்சுவுக்கு கைய் கால் எல்லாம் உதறல் எடுத்து விட்டது.

மதுவுக்கு பூரி கிழங்கு ..தயாநிதி …மகி.  சங்கரி…மூவரும் இட்லி இல்லை தோசை சாப்பிடுவர்.

ருத்ரனுக்கு ஆப்பம் இல்லை இடியாப்பம் இருக்க வேண்டும். அகிலாண்ட நாயகிக்கு காலை இரவு இரண்டு வேளையும் ஓட்ஸ் தான்…

அதனால் தான்  உதவிக்கு ஆள் இருந்தாலும்,  மலரம்மா எவ்வளவு தான் செய்வார்கள் என்று இடியாப்பத்தை தவிர்த்தது…இப்போ பார்த்து பாட்டியம்மா கேட்குறாங்கலே…

காலையில் டீப்ரோட்டின் கேட்க சமையல் அறைக்கு வந்த அகிலாண்டம்… மஞ்சு மலரம்மாவிடம் பேசிக் கொண்டு இருஒபதை பார்த்து…

பேரன் தன் வேலையை ஆராம்பித்து விட்டான். நம் வேலைய  நாம் ஆராம்பிக்கலாம். யார் வீட்டில் யார் அதிகாரம் செய்வது.  வந்த தடம் தெரியாது சென்று விட்டார்.

“மஞ்சு….மாமா இட்லி கேட்குறாரு பாரு…” சொல்லிக் கொண்டே தன் மனைவியைய் பார்த்த ருத்ரனுக்கு ஏதோ தவறாய் பட…

“ பேபிம்மா…என்ன…..?” இவர்களின்  உரையாடலை பார்த்துக் கொண்டு இருந்த அகிலாண்டம்….

“ என்ன இன்னும் மச மசன்னு நின்னுட்டு போ இடியாப்பத்தை எடுத்துட்டு வா….நான் பி.பி மாத்திரை போடனும்.”

மலரம்மா தயங்கி தயங்கி சமையல் அறை நோக்கி  செல்வதையும், மஞ்சு கைய் பிசைந்து பீதியுடன் நிற்பதையும் பார்த்து…. நிலையை புரிந்துக் கொண்ட ருத்ரன்…

“ க்ராண்மா இடிப்பாப்பம் இல்ல. ஆப்பாம் சாப்பிடுறிங்கலா…..?”

“ஏன்….இது எல்லாம் செய்யாம அவ என்ன செய்யிறா……” சமையல் அறைக்கும் சாப்பாடு அறைக்கும் இடைப்பட்ட பகுதியில் நின்றுக் கொண்டு இருந்த மலரம்மாவை பார்த்து சத்தம் போட….

“ நான் தான் வேன்டாமுன்னு சொன்னேன்.” பேரன் இப்படி பழியை தன் மீது போட்டுக் கொள்வான் என்று   தெரியாது அகிலாண்ட நாயகி முழித்தது ஒரு சில நொடி தான்.

“ நீ எப்போ சமையல் அறை பக்கம் எல்லாம் போக ஆராம்பிச்ச  ருத்ரா….?”

“கதிரு வெளிநாட்டுக்கு போனதில் இருந்து.” என்ன பேச்சு என்பது போல் பார்த்தவரிடம்…

“கதிர் அவங்க அம்மாவையும் வெளிநாட்டுக்கு அழச்சிட்டு போகறதா சொன்னான். நான் தான் வம்படியா அவங்கல நிக்க வெச்சி இருக்கேன். ரொம்ப  வேலைய வளத்துக்காதிங்க எனக்கு ரெண்டுல ஒன்னு இருந்தா போதுமுன்னு சொன்னேன்.”

மஞ்சு எதை நினைத்து சொன்னாளே மனம் அறிந்த கணவனாய் சரியாக ஊகித்து சொன்னான்.

“அப்படி  பிடிச்சி வைச்சிக்கனுமுன்னு என்ன தலையெழுத்து. காச வெட்டெறிஞ்சா….வேல செய்ய ஆள் க்யூல நிக்க போறாங்க….” பரம்பரை பணத்திமிர் அவரை அப்படி பேச வைத்தது.

“ நீங்க சொல்வது ஒரு வகையில் சரி தான் க்ராண்மா .” அகிலாண்ட நாயகியின் பேச்சிலேயே அடிப்பட்டு இருந்த மலரம்மா ருத்ரனின் பேச்சில்…

 

Advertisement