Advertisement

அத்தியாயம்……28

(இந்த கதைக்கு நீங்க கொடுக்கும்  கருத்துக்கும்,விருப்பத்துக்கும் நன்றி…நன்றி…..உங்க கருத்து தான் இன்னும் நல்லா எழுதனுமுன்னு யோசிக்க வைக்குது. உங்க மைன்ட் வைய்ஸ்லே என்ன ஓடுதுன்னு தெரியுது. கொடுக்குறதுக்கு ரிப்லே காணும் பேச்சே பாரு…?பேச்ச…சீ சீ எழுத்த பாரு எழுத்த சாரி சாரி….இனி ஒழுங்கா கொடுக்குறேன் பா…..)

“மஞ்சு இங்க என்னடா பண்ற…..?” அங்கு அறுவடை நடந்துக் கொண்டு இருந்ததால்  அதில் எழுந்த புழுதி அவள் முகத்தில் தூசி படிந்து இருக்க…..

தன் கட்சீப்பை கொண்டு துடைத்த வாறே….கேட்ட ருத்ரனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அவன் மனையாள்…..

இப்போ நம்ம என்ன தப்பா கேட்டோமுன்னு இந்த முற முறைக்கிறா….தான் சொன்னதை திரும்பவும் ரீவைன் செய்து பார்த்த போது தான் … தான் பேசியதின் அபத்தம் உணர்ந்து….அவளை பார்க்க….

இடுப்பில் இரு  கையும் வைத்து….. “ என்ன இப்போ புரியுதா……?”

அவள் படித்த படிப்பே விவசாயப் படிப்பு. அப்படி இருக்கும் போது கலத்து மேட்டில் நிக்காத என்று மூளை உணர்ந்த செய்தியை….

வாய் வார்த்தையால் வெளி வர முடியாது….வேறு ஒரு செய்தி அவன் மனதுக்கும், உடலுக்கும் ,கொண்டு சேர்த்தது. அவள் நின்று இருந்த  கோலம்….

சிறந்த ஆடைவடிவமைப்பாளரை  கொண்டு தனிப்பட்டு பிரத்தியோகமாக மஞ்சுவுக்கு என்று  வடிவமைத்த அந்த உடை அவள் எழிலை துள்ளியமாக காட்டியது.

அதுவும் வேலை செய்வோர்க்கும் இவர்களுக்கும் கணிசமான இடைவெளி இருந்தது வேறு அவனுக்கு வசதியாக போனது.

துடைத்து முடித்த முகத்தை திரும்பவும் அவளின் அருகில் வந்து….. “ரொம்ப தூசா  இருக்கு மஞ்சும்மா……” திரும்ப திரும்ப கன்னத்தில் ஒத்தி எடுத்தவனின் கட்சீப் படாது அவன் கை பட்டுக் கொண்டு இருந்தது.

அவள் எதார்த்தமாய்…. “ நேத்து அந்த பக்கம் பம்பு செட்டு பார்த்தேன். போய் ஒரு குளியல் போட்டா சரியா போயிடும்.” என்று  சொன்னது தான்.

“ஆ….ஆ…..” என்று  அவசரமாக அவள் கைய் பிடித்து பம்பு செட்டு பக்கம் இழுத்து செல்ல….

“ மாத்து உடை எடுத்துட்டு வரலியே……”

“ ஆ அது எல்லாம் வேண்டாம். இங்கு இருக்க பெண்கள் எல்லாம் உள்ள போடுற துணியே வெச்சே…..இப்படி கட்டிட்டு போறாங்க…..”

“ நீங்க எப்போ இதெல்லாம் பார்த்திங்க…..?” மஞ்சுவின் உள்குத்து  அறியாது…..

“போன வாரம் கூலி  வாங்கிய பெண்கள் எல்லாம்….நம்ம பம்பு செட்டுல குளிச்சிட்டு மேல் துணிய காய வெச்சாங்க…அப்போ இது மாதிரி தான் கட்டி இருந்தாங்க மஞ்சும்மா…..”

சாதரண மனநிலையில் இருந்து இருந்தால் மஞ்சுவின் முதல் கேள்வியிலேயே….. இதை எல்லாம் ஏன் கேட்கிறாள்…..? என்று நினைத்து இருப்பான்…..

ஆனால் இன்று அவன் முற்றிலும் வேறு மனநிலையில் இருந்ததால்….. ஏதார்த்தாமாய் அனைத்தையும் கொட்டினான்.

“இனி கூலி நான் கொடுத்துக்குறேன்……” அவள் ஏன் அப்படி சொன்னாள் என்று புரியாது.

“ சரிடா….இது இனி எல்லாம் நீ தான் பார்த்துக்கனும்.” அவன் எண்ணம் அனைத்தும்  பம்பு செட்டுக்கு அழைத்து போவதிலேயே இருந்தது.

கணவனின் எதார்த்தமான பேச்சில்….மஞ்சு…. என்ன இது எப்போ இருந்து இப்படி புத்தி கெட்டு யோசிக்க ஆராம்பிச்ச…..உன் எண்ணம் மட்டும் அவருக்கு  தெரிஞ்சது உன்ன பத்தி என்ன நினைப்பார்…..?

மனைவி என்னையே அவர் தப்பா பாக்கல……தன் மனதை குட்டி முடிக்கவும் பம்பு  செட்டு வரவும் சரியாக இருந்தது.

அவனும் தன் அருகில் வந்து நிற்கவும் தான்…..

“நீங்க அந்த பக்கம் கொஞ்சம் போங்க அத்தான். “ ஆமான்டி ….ஆமாம்,  உன்ன தனியா குளிக்க வைக்க தான் இவ்வளவு கஷ்ட்ட பட்டேன் ஆக்கும்.

உண்மையில் அவர்கள்  இருந்த இடத்துக்கும், அந்த பம்பு செட்டுக்கும் அரைகிலோ மீட்டர் தூரமாவது இருக்கும். அரை கிலோ மீட்டர் அவனுக்கு எல்லாம் ஒரு  தூரம் இல்லை தான்.

அது வாக்கிங் என்ற பெயரில், பீச்சில் அதற்க்கு உண்டான ஷூ போட்டுக் கொண்டு நடந்தால்….

காலில் மண் படாது வீட்டிலும் செருப்பு போட்டு நடந்தவனை…..வயல் பூமியில் காலில் செருப்பு போட்டு நடக்க கூடாது என்று….

வயல் காட்டில் களிமண்ணும் கள்ளும் குத்த…..இவ்வளவு தூரம் நடந்து வந்தால்…..

தன் கசங்கி போன…..உடையையும் காலையும் காட்டி….. “நானும் குளிக்கனும் மஞ்சு……” என்று  சொன்னது தான்…

“ என்ன ஒன்னாவா……?” ஒரு அடி பின் நடந்தவளின் தோள் பற்றி  தன் பக்கம் இழுத்தவன்….

“ட்ரஸ் போட்டு தான்டி…..” முதல் முறை அவனின்  டி…. அழைப்பில்…..

விழி விரித்து அவனை பார்த்தவளின் தலை தன்னால் அசைந்து சம்மதம் கொடுத்தது.

ருத்ரன் தன் சட்டையின் பட்டனின் மீது கைய் வைத்ததும்….. தன் மயக்கத்தில் இருந்து கொஞ்சம் தெளிந்தவளாய்…..

“ நீங்க ட்ரஸோட தானே…..”

“சட்டை மட்டும் தான் மஞ்சும்மா……” அவனின் டி என்ற அழைப்பு தன் மனதில் மனைவி என்ற உரிமையில் பேசி கொள்வது போல் சொல்லி விட்டான். இப்போது தன்னால் அவன் மஞ்சும்மா என்ற  அழைப்பு வர….நம்ம மஞ்சு தான்…குழம்பி போனாள்.

முதலில் அவன் பம்பு செட்டில் இறங்கியதும் ,அவள் வர கை கொடுத்தவனின் தன் கை பதியும் வேலை தன் கையை சட்டென்று இழுத்துக் கொண்டவன்….

“கீழே இருப்பதை கழட்டி வெச்சிட்டு வா மஞ்சு…..”

அது சுடியும் இல்லாது ,பாவடை சட்டையும் அல்லாது….கீழே பாவடை அமைப்பையும், மேல் சுடியில் வருவது போல் டிசைனையும், கொண்டு  மஞ்சுவுக்கு பெயரே தெரியாத உடையில் தைத்து இருந்தது.(நிஜமா எனக்கும் அந்த ட்ரஸ் பேரு தெரியாது. ஆனா இப்போ பொண்ணுங்க போட்டு பார்த்து இருக்கேன்.)

“என்னது  ட்ரஸ் கழட்டி வெச்சி வர்றதா….? நான் மாட்டேன்.” தலையை மறுப்பாய் ஆட்டிய வாறு சொல்ல….

“ நீ கீழே போட்டு இருக்குறதுல தண்ணீ பட்டா நடக்க முடியாதுடா……பாரு இங்கு யாரும் இல்ல.”

“நீ இருக்கியே…..” என்பது போல் அவள் பார்க்க…..

“ நான் சொன்ன படி செஞ்சா …என்ன பத்தி தெரியும். அதோட குளிச்சா நடக்க முடியாம  அத கழட்டி கையில எடுத்துட்டு நடந்தா…..” அப்புறம் உன் இஷ்ட்டம் என்பது போல் அவன் ஜலகீரிடத்தில் மூழ்க….

அவள்  தான் அவன் சொன்னது போல் கீழே பாவடையை கழட்டி வைத்து விட்டு……இரு கைய் கொண்டு டாப்பை முட்டி வரையாவது மறைக்கட்டும் என்று இழுத்து விட்டதில்….

அவனிடம் தன் கை கொடாது உள் செல்ல பார்த்தவளை….ஓரத்தில் படிந்து இருக்கும் பாசி வழுக்கி விட…. தன் மொத்த உடலையும் அவன் மேல் சாய்த்து தான் தண்ணீரில் மூழ்கினாள்.

தன் மேல் வந்து சாய்ந்தவளை அது தான் சாக்கு என்று அணைக்காது பிடித்தும் பிடியாது தன் அணைப்பை காட்டி அவளை விடு வித்தவன்….

அவளை கொஞ்சம் தள்ளி வைத்து “ரிலாக்ஸ் மஞ்சும்மா……” அவள் முதுகை தடவி விட்டதும் அந்த குளுமை தண்ணியை அனுபவிப்பவன் போல் கண் மூடி நின்றான்.

நம் மஞ்சுவுக்கு தான் அந்த குளுமையிலும் அணல் அடித்தது  போல்….கன்னம் இரண்டிலும் தக தக வென வெப்பம் கூட…. ஒரு மயக்க  நிலைக்கு தள்ளப்பட்டாள்.

ஏதோ ஒரு எதிர் பார்ப்பில் மஞ்சு கணவன் முகத்தை பார்க்க….அவனோ இவளை பார்ப்பேனா என்பது போல் கண் மூடி இருந்தான்.

அவன் கண் மட்டும் தான் மூடி இருந்தது. மனமோ என்னடா என்ன செஞ்சிட்டு  இருக்க……?அவ சின்ன பொண்ணுடா…..கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் தான்டா ஆகி இருக்கு…..

கல்யாணதுக்கு முன், அவ மனச  சாச்சு புட்டு தான், அவ கிட்ட மனைவின்னு உரிமையே நிலை நாட்டுவேன்னு  நினச்சது என்ன…..? இப்போ செஞ்சுட்டு இருக்குறது என்ன……?

திருமணத்துக்கு அவசரம் காட்டிய அவன் தாம்பத்தியத்தில் அவசரம் காட்ட கூடாது என்று  தான் நினைத்திருந்தான்.

திருமணத்தின் அவசரம் கூட மஞ்சுவுக்காக தான். எங்கு வேறு ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்வாளோ என்ற பயத்தில் திருமணத்தை அவசர அவசரமாய் முடித்துக் கொண்டான்.

ஒன்று  மஞ்சு சின்ன பெண்…..தன் அவசரம் அவளுக்கு பயத்தை கூட்ட செய்யும். மற்றொன்ரு தான் விரும்புவது போல் மஞ்சுவும் தன்னை விரும்ப வேண்டும்.

விரும்பி இணையும் தாம்பத்தையத்தில் வரும் குழந்தை தான் ஆரோக்கியமாய் இருக்கும் ,என்ற நம்பிக்கையில்  உள்ள ருத்ரன் அவளுடன் கூடுவதில் அவசரம் காட்டவில்லை.

தனிமை….இளமை…..அவனை இது வரை கொண்டு வந்து விட்டு விட்டது. இப்போது கூட அவளுடம் கூடலுக்கு இங்கு கூட்டி வரவில்லை.

ஏதோ நினைத்து வந்தவனுக்கு மஞ்சுவின் மொத்த மென்மையும் தன் மேல் பட விழுந்ததில் அவன் மொத்தமாய் வீழ்ந்து போனான்.

மனைவி. ..மனதுக்கு பிடித்த காதல் மனைவி ….கைக்கெட்டும் தூரம்…..தவறு இங்கு வந்ததே தவறு….என்ற வகையில் தான் மனைவி அவனுக்கு மொத்தமாய் வேண்டும் என்று அவன் இளமை தூண்டியது.

அவள் முதுகை தடவிக் கொடுத்தே தன்னை தன்நிலைக்கு கொண்டு வந்தவன் கண் மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவனாய்…

அவளை பாராது  பம்பு செட்டில் இருந்து மேல் வந்தவன்…. “.நீ குளிச்சிட்டு வா மஞ்சும்மா…..” கொஞ்சம் தூரம் சென்று நின்றுக் கொண்டு  அந்த பரந்த வெளியினை பார்த்திருந்தான்.

தண்ணியில் இருந்த மஞ்சுவுக்கு தான் வெளிவர மனது இல்லாது  வந்தவள்….

“போகலாம் அத்தான்.” அவன்  இருந்த மனநிலையில் அவளின் குரல் மாற்றத்தை கவனிக்காது…

“ ம்…..” என்ற சொல்லோடு வீட்டுக்கு வந்ததும் செய்த முதல் வேலை….பெட்டி கட்டுவது தான். மஞ்சுவுக்கோ இங்கு இருந்த செல்ல மனமே இல்லை.

“ சென்னையில் அவசர வேலை இருக்கா அத்தான்…..?” தயங்கினாலும் கேட்டு விட்டாள்.

“ ஆ அந்த ட்ரஸை எடுத்து வைக்கல  பாரு….ஆ அது எடு மஞ்சும்மா…..” என்று சொன்னவன்…

“ என்ன சொன்ன….?”

“ ஒன்னும் இல்ல……” இப்போது மஞ்சு  வார்த்தையை கடித்து துப்பினாள்.

“ என்ன மருமகனே போன மச்சான் திரும்பி வந்தான்னு மாதிரி வந்துட்ட……?” எதிர் இருக்கையில் ருத்ரன் நீட்டிய கோப்பில் கைய்யெப்பம் இட்ட வாறே கேட்க….

“ அதுல என்ன இருக்குன்னு படிச்சி பார்த்து போடுங்க……”

“ என்னடா படிச்சி பாக்குறது…..?நீ என்ன என் சொத்தையா….எழுதி வாங்க போற…..?”

“ ஏன் எழுதி  வாங்க மாட்டேன்னு தைரியமா……?”

“ ம் தைரியம் தான்…..” என்று  சொல்லிக் கொண்டே கோப்பை அவனிடம் நீட்டிய தயாநிதி…

இப்போது சீரியசாய்….. “பிரச்சனை எதுவும் இல்லையே…..?மஞ்சு முகம் கூட ஒரு மாதிரி இருக்கு….”

இப்போது தன்னிலையில் இருந்து வெளி வந்தவனாய்….. “ஏன் ஏன்…..?” தயாநிதி அவனிடம் கேட்டதை அவரிடமே திருப்பி படித்தவன்.

“ நான் இல்லாதப்ப க்ராண்மா  ஏதாவது சொன்னாங்கலா…..?” கோபத்துடன் கேட்க….

“ ஏன்டா உன் பொண்டாட்டி சோகமா இருந்தா….அதுக்கு என் அம்மா தான் காரணமா…..?”

ருத்ரன் பேச்சில் இருந்து அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்ற ஆசுவாசத்தில் தன் மருமகனிடம் கிண்டலில் இறங்க….

“ இல்லேன்னா உங்க அம்மா என் பெண்டாட்டிய ஒன்னும் சொல்றது இல்ல பாருங்க…..?”

யாருக்காக இவர்கள் அடித்துக் கொள்கிறார்களோ அவளோ……தன் தங்கையிடம்…

“ ஆமா நாங்க ஹனிமூனுக்கு பாரின் போனோ பாரு….உனக்கு சென்டு வாங்கி வர…..”

மதுவின்  தோழி அவளின் அண்ணன் திருமணம் முடிந்து போன ஹனிமூனுக்கு தங்கைக்காக வெளிநாட்டு  வாசனை திரவியம் வாங்கி வந்து கொடுக்க….

அதை போட்டுக் கொண்டு வந்து அவள் வகுப்பில் செய்த அட்டூழியத்தில்……” எங்க அக்காவும் ஹனிமூன் தான் போய் இருக்கா….அவ எனக்கு வாங்கி வந்து தருவா…..”

இட்ட சபதத்தை நிறைவேத்த தமக்கையிடம் வந்து நிற்க…..அவளோ இருந்த கடுப்பில் முதல் முறையாக தங்கையை கடிய…..

அவள் போனை அடித்து விட்டாள் தன் அத்தானுக்கு……

“ அத்தான் நீங்க ஏன் ஹனிமூனுக்கு அக்காவ பாரின் கூட்டிட்டு போகல……” எதிரில் தயாநிதி அமர்ந்து இருந்ததால் எழுந்து வெளியில் வந்தவன்….

“ ஏய் குட்டி பிசாசு…இப்போ அது பத்தி உனக்கு என்ன பேச்சு…..? ஒழுங்கா….பப்ளிக் எக்ஸாமுக்கு படிக்குற வழிய பாரு…..”

இந்த குளிரே என்னலா தாங்க முடியாது ஓடி வந்தது எனக்கு தான் தெரியும். இவ வேற பாரினாம் பாரின்.

அவன் அவன் அங்கு செய்யிற அலம்புல…..ஆ நல்லவனா இருக்க நினச்சாலும் இருக்க விட மாட்டாங்க போலவே….

அவன் நினைத்தது போல் அடுத்த இடியாய்….. “நான் ஒன்னும் சொல்லலே அக்கா தான் சொன்னா…..” என்றது தான்…

“ உன் அக்காவா …என்ன  சொன்னா….? என்ன சொன்னா….?” பதட்டத்துடன் கேட்டவனுக்கு…

“ எனக்கு ஏன் இந்த பேச்சு….? நான் போய் படிக்குற வேலைய பாக்குறேன். கவர்மென்ட் எக்ஸாம் வேற…..” போனை வைப்பது போல் பாவனை செய்தவளிடம்…

“ மதும்மா… மதும்மா…..”

“ஆ  இந்த  மதும்மா முன்ன எங்கே போனா….?  என்று கேட்டவளிடம்…

“ அத்தானுக்கு ஆபிஸ் டென்ஷன்டா ல்செல குட்டி…. அக்கா என்ன சொன்னா…..?” தன் காரியத்தில் கண்ணாய் கேள்வியை கேட்க…

அவன் செல்ல குட்டியோ…… “ நான் என் பிரண்ட் கிட்ட….” தான் எடுத்த சபதத்தை சொல்லி முடித்தவள்….மஞ்சு ஹனிமூனுக்கு பாரின் கூட்டி போகாததை சொன்னதை சொல்லாமல் விட…..

ஆ இந்த பிசாசுங்க ஸ்கூல்ல படிக்குறத விட்டுட்டு ஹனிமூன் பத்தி பேசிட்டு இருக்குங்க.  கோபத்தை அடக்கியவனாய்…

“ அதுக்கும் உங்க அக்கா ஹனிமூன் பேசுனதுக்கும் என்ன சம்மந்தம்டா  குட்டி….?”

“ நான் சென்ட் கேட்டதுக்கு….நான் என்ன ஹனிமூனுக்கு பாரினா போனேன்னு சொன்னா…..?”

“ அப்படியா சொன்னா…..?” அவன் குரலில் சந்தேகம். நம் மக்கு மனைவிக்கு அந்த விவரம் எல்லாம் போதாதே….

“ நான் என்ன பொய்யா சொல்றேன்… நீங்கலே வந்து உங்க பொண்ணாட்டி கிட்ட கேட்டுக்குங்க….நான் இந்த விளையாட்டுக்கு வரல…..”கைய்பேசி வைத்தவனுக்கோ…

மது அவ பிரண்ட் கிட்ட சொன்னது போல…இவ ஏதாவது சொல்லி இருப்பாளோ…..

 

Advertisement