Advertisement

அத்தியாயம்—-27

“பிடிச்சி இருக்கா…..?” மஞ்சு  தோளின் மீது ஒரு கைய் போட்டு மற்றொரு கையை தன் பேன்ட் பாக்கெட்டில் விட்ட வாறு கேட்ட  ருத்ரனின் அன்பில் மூச்சு முட்டி தான் போனாள்.

அவளுக்கு மூச்சு முட்டியது உண்மையே….. திருமணம் ஆன இந்த மூன்று தினத்திலேயே அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது, தான் அவனுக்கு தகுதியானவளாய்…..? அப்படி யோசிக்கும் படி வைத்தது ருத்ர  மூர்த்தியின் அன்பு.

ஆம் …. இப்போது கூட  அவனுக்கு தன் மீது காதல் என்று உணரவில்லை.  அப்படி ருத்ர மூர்த்தியால் உணரவைக்க முடியவில்லையோ…..?

திருமண இரவு தனிமை நினைத்து பயந்த மஞ்சுளாவுக்கு….அந்த பயமே அவசியம் இல்லாதது போல் நடந்துக் கொண்டான் ருத்ர மூர்த்தி.

அவளை பற்றி கேட்காது தன்னை பற்றி  மனம் திறந்து சொன்னவன் ….அவளையும் மனம் திறக்க வைத்தான்.

ருத்ரனின் பேச்சில் மஞ்சு கண்டது ஒன்றே…பிரச்சனை தனக்கு மட்டும் தான் என்று எண்ணக் கூடாது. ஒருவர் அதை சொல்வர்…இல்லை முகத்திலாவது காட்டுவர். பிரச்சனை அனைவருக்கும் உண்டு.

ருத்ர மூர்த்தி… “ என் அப்பாவ அவர்  சொந்த அண்ணானே பாய்சன் வெச்சிட்டாரு….”மஞ்சுவுக்கு இது புது செய்தி.

“எதுக்கு….?” அதிர்ந்து கேட்டாள்.

“ சொத்துக்காக…..”

“என்னது சொத்துக்காக சொந்த தம்பிய கொல்லுவாங்கலா…..?”

“மஞ்சு….உன் குழந்தை பருவம்  சந்தோஷமா இல்ல. அது எனக்கு தெரியும். உனக்கு சந்தோஷம் மட்டும் தான் இல்ல. எத்தன குழந்தைங்க…..பாதுகாப்பு  இல்லாம இருக்காங்க தெரியுமா…..?

ஒரு சில குழந்தைங்க ஆசிரமத்தில். பல குழந்தைங்க சொந்த வீட்டிலேயே……உன் தாத்தா உனக்கு பாதுகாப்பு கொடுத்து இருக்காரு. தனக்கு பின்  மாமா கிட்ட ஒப்படச்சி இருக்காரு…

குழந்தைங்களுக்கு இது மட்டும் போதுமான்னு கேட்கலாம். இதுவும் இல்லாம இருக்காங்கலே….  நம்மோட சந்தோஷம் நம்ம கிட்ட தான் இருக்கு மஞ்சு.

மாமா அடிக்கடி என் கிட்ட சொல்வாரு….மனசு நிம்மதிக்கு நம்மோட கீழே இருக்குறவங்கல பாரு…. வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நம்மோட பல படி மேல இருக்குறவங்கல பாருன்னு…. என்னடா பஸ்ட் நைட்ல….ரம்பம் இல்லாம அறுக்குறானேன்னு பாக்குறியா…..?”

இது வரை தன் கையை அவனிடம் கொடுத்து விட்டு, எந்த வித பயமும்மில்லாது அவன் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தவள், ருத்ரனின் இந்த பேச்சில்…

வெடுக்கென்று அவனிடம் இருந்து கையை  உருவிக் கொண்டு…. “ என…க்கு தூக்கம் வருது.”

“தூக்கம் வருதா….நான் கொஞ்ச நேரம் பேசலான்னு இருந்தேன்.”

“பேசறதா இருந்தா பேசுங்க அத்தான்.” இப்போது பேச்சில் எந்த தடங்கலும் இல்லாது வந்தது.

பேசலான்னா மட்டும் துள்ளல் பாரு…இதே பேச்சு வேற ட்ராக் போச்சு, அம்மணிக்கு  தூக்கம் வந்துடும். இதை அவனால் மனதில் தான் நினைக்க முடிந்தது.

விடிய விடிய கதை படித்தேன் என்பார்களே…அது அவர்களுக்கு  சரியாக இருந்தது.

ஒரே  இரவில் அவளின் கூச்சத்தை ஒழித்தானோ இல்லையோ….அவளின் தயக்கத்தை  தகர்த்தினான்.

விடியலில்…. “ உனக்கு எங்கே போகனும் சொல்லு….அங்கே போகலாம்.” ருத்ரனின் பேச்சில்…..

தயங்கினாலும்…. “ ஹனிமூனா…..?” என்று கேட்கும் அளவுக்கு மனதை திறக்க வைத்தான்.

“ஹாக்சுவலா….அதுக்கு தான் போவாங்க….” என்று சொல்லி அவள் முகத்தில்  கலவரத்தை கூட்டியவன்….

பின்…. “ ஆனா நாம மனசு ரிலாக்சேஷனுக்கு போகலாம்.”  என்று சொல்லி அவள் முகத்தில் மீண்டும் ஆசுவாசத்தை வர வழைத்தான்.

உண்மையில்  அப்போது ருத்ரனுக்கு, உடலுக்கு ஓய்வு தேவையோ…இல்லையோ….?மனதுக்கு தேவைபட்டது.

மூன்று மாதத்தில் அவன் திருமணத்தை முடிக்க…அப்ப அப்ப யாரை எல்லாம் சரி கட்ட வேண்டி இருந்தது.

முதலில் தன் பாட்டியின் நடவடிக்கையை  பார்ப்பதிலேயே அந்த மூன்று மாதத்தில் பாதி நேரம் பிடித்தது.

அவனுக்கு அவர்கள் என்ன செய்வார்களோ….இதுவே தான்  பதட்டமாக இருந்தது.

அங்கு அங்கு கல்யாணம் என்றால் ஆயிரம் கனவோடு, தன் வருங்கால மனைவியை சைட் அடித்துக் கொண்டு இருப்பாங்க…

ஆனா நான் வீட்டிலேயே …அதுவும் எதிர் அறையிலேயே பெண்ணை வைத்துக் கொண்டு பாட்டியை  உத்து உத்து பார்த்துக் கொண்டு இருக்கும் மாப்பிள்ளை நானா தான் இருப்பேன். பின் மாமா அத்தை….

மாமா…. “ நீ ரொம்ப அவசரப்படுறியோன்னு தோனுது ருத்ரா….கொஞ்சம் பொறு…” என்பவரை  பேசி சம்மபதிக்க வைத்த பாடு….

அங்கு அங்கு ஊருக்கு ஒரு பொண்ண செட் பண்ணி சுத்திட்டு இருக்கான். நான் முறை பொண்ணை முறையா கைய் பிடிக்க….அப்பா…அப்பா….போதும்…. போதும்…. என்றாகி விட்டது .

திருமணம் முடிந்த மறுநாள் மாமன் தன்னை அழைத்து….. “ எந்த நாடுக்கு டிக்கெட் புக் பண்ணட்டும்…..?” என்று கேட்டதுக்கு….

“எதுக்கு…..?” என்று  கேளாது…..தாங்கள் சொல்ல போகும் ஊரை சொன்னதும்….

“ஏன்டா விளையாடுறியா….?நம்ம கிட்ட வேல பாக்குறவங்க கல்யாணத்துக்கே கிப்ட்டுன்னு ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு டிக்கெட் வாங்கி அனுப்புறேன்.” அவர் சொல்வது நூறு சதவீதம் உண்மையே….

மார்க்கெட்டிங் ஐபேஸ்ட்டில் இருப்பவனின் திருமணத்துக்கு திருமண கிப்ட்டாக கொடுத்து இருக்கிறார்கள். அதை மனதில் வைத்து சொல்ல.

“ மாமா இந்த ஹனிமூன் எல்லாம் அந்த காலத்தில கூட்டுக் குடும்பமா இருப்பாங்க. யாராவது ஒருத்தர் மாத்தி ஒருத்தர்  வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருப்பாங்க.

ம் முக்கியமானது  வீட்டில பெரியவங்க இருக்கும் போது,  பகல்ல அறை கதவை சாத்த கூச்சப்படுவாங்க.” ருத்ரனின் பேச்சில் இப்போது தயாநிதிக்கு தான் கூச்சம்  வந்தது.

“டேய்…டே நான் உன் மாமனாருடா…என் பெண்ணை பத்தி என் கிட்டயே…போடா போ…..” பக்கத்தில் இருந்த  நாளிதழை அவன் மீது வீசிய வாறு கடிய…

அந்த நாளிதழை தன் மீது படாத வாறு  ஒதுங்கி கொண்டவன்….

“ எனக்கு எப்போவும் நீங்க மாமா தான். அத தான்டி பொண்ண கொடுத்தேன்…உயிர கொடுத்தேன்னு இந்த டையலாக் எல்லாம் வேண்டாம்.

ஆ முக்கியமானது இப்போவும் தொழில்  முறை பார்ட்டியில உங்க மீது விழும் பெண்களை எனக்கு தெரியும்.”

தன் மனைவி  எங்கு என்று  அவசரமாய் பார்வை சுழல விட்ட தயாநிதி…. “ டேய் டேய்…உனக்கு குடும்பம் அமச்சி கொடுத்தவன் குடும்பம் மீது கைய் வைக்காதடா…..”

“நீங்க இது மாதிரி பேசமா இருந்தா நான் ஏன்….? இது எல்லாம் சொல்ல போறேன். நான் பன்னிரென்டாம் படிக்கும் போது என் கணக்கு டீச்சர் உங்கல கணக்கு பண்ண என் கிட்டயே உங்கல பத்தி விசாரிச்சாங்கலே….நான் ஏதாவது வாய் திறந்தேன்.” மருமகனின் பேச்சில் ஏகமாய் வெர்த்து  கொட்டிய தயாநிதி…

“ உனக்கு புன்னியமா போகும் .இப்போவும் வாய் திறவமா இருடா ராசா….உனக்கு என்ன உத்திரமேருர் போகனும்.  பேஷா போயிட்டு வா ராசா….”

இப்படி வந்த தங்கள் தேன் நிலவிலும்…..அவள் அங்கத்தை தொட ஆர்வம் காட்டாது. அகத்தினை தொட முயற்ச்சி செய்ததில் வெற்றி கிடைத்தாலுமே…அது அவனுக்கு எதிர் விளைவையே விதைத்தது.

ஆம்….இவனுக்கு நான் தகுதியா….?மூன்று  நாளாய் இதையே தான் அவள் மனதினில் ஓடிக் கொண்டு இருந்தது.

இப்போது அவன் மனம் கதிரை மிகவும் எதிர் பார்த்தது.  இந்த மூன்று ஆண்டுகளாய் ஏதாவது சஞ்சம் ஏற்பட்டால் கதிரிடம் தான் செல்வாள்.

அவனிடம் மறைத்தது ஓவியனை பற்றியது தான். அதனால் அவள் பட்ட அவமானம்….ஆம் அதை அவள் அவமானமாக தான் கருதினாள். காதல், தோல்வி, துக்கம்…. இது எல்லாம் அவளுக்கு தோனவில்லை.

இப்போது தன் மனதில் இருக்கும் குழப்பதை பகிர்ந்துக் கொள்ள தோழன் கதிர் இருந்தால் நன்றாக இருக்குமே…..

மது…..சிறு பெண்.  தங்கை. இந்த விஷயத்தை சொல்ல அவளுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

அதுவும் இல்லாது தான் இதை பற்றி பேசினால்….அதை பற்றி தன் அத்தானிடம் சொல்லி விடுவாள். சரியான அத்தான் பைத்தியம்.

கதிர் இருந்தால் நன்றாக இருக்குமே…..மனது அவனை ஆவளுடன் எதிர் பார்த்தது. இந்த மூன்று மாதத்தில் கதிர் ஒரு  முறை கூட அவளை கைய் பேசியில் அழைக்கவில்லை.

ஒரு நாள் நேராக மலரம்மாவிடம்  சென்றவள்…..” மலரம்மா உங்க பையன் வெளிநாட்டுக்கு  போய் என் கிட்ட ஒரு நாள் கூட பேசல…..”

அப்போது அவள் திருமணம் வீட்டில் ஜருராக நடந்துக் கொண்டு இருந்தது. அதுவும் ருத்ரன் பாட்டியை எதிர்த்து இந்த திருமணத்தை நடத்தி முடிப்பதில்  ஈடுபட்டுக் கொண்டு இருப்பதை அந்த வீட்டின் உண்மையான விசுவாசி மலரம்மா பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்.

இந்த வீட்டின்  முதலாளியாய் ஆகபோகும் பெண் ,தன்னிடம் வந்து  குழந்தை போல் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு குற்றப்பத்திரிக்கை…..வாசிப்பதை பார்த்து….

உள்ளம் பூரிக்க…..தன்னுடைய  கைய்பேசி கொடுத்து அதில் இருந்த  ஒரு எண்ணை காமித்து…. “இதில் இருந்து தான் தினம் பேசுவான் மஞ்சும்மா….” சொல்லி விட்டு சாம்பாரை கலக்க ஆராம்பித்தார்.

அதே எண்ணில் ஆவளுடன் அழைக்க….

தன் அன்னை என்று எண்ணிய  கதிர்…. “சொல்லும்மா…என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்கிங்க…..நல்லா இருக்கிங்கலே…..?” மஞ்சுவை பேச வாய்ப்பு கொடுக்காது கதிர் பேசினான்.

எப்போதும் கதிர் தான் தன் அம்மாவை பேசியில்  அழைப்பது. இப்போது அம்மாவே கூப்பிடவும் கொஞ்சம் பயந்து தான் போய் விட்டான்.

கதிரின் பேச்சில் சிரிப்பு பொங்க….. “ கதிர் நான் மஞ்சு…..” அந்த பக்கம் எந்த ஓசையும் இல்லாது அமைதியாகி விட….

“ கதிர் லைனில் இருக்கியா…..?”

கதிருக்குமே பேசாது அமைதியாக இருந்து விட்டால் லைன் கிடைக்கவில்லை என்று வைத்து விடுவாள் என்று எண்ணிய கதிருக்கு….

இப்போது வைத்து விட்டாலும் திரும்பவுமே அழைப்பாள். பேசி விடலாம் என்று….

“ சொல்லுங்க எஜமானியம்மா  எப்படி இருக்கிங்க…..?” கதிரின் பேச்சில் விலகல் தெரிய…..

யாரோ நினைத்து பேசுகிறானோ…… “ கதிர் நான் மஞ்சு.”

“ ஆ சொல்லுங்க தெரியுது”

“க…திர்.” அவள் அதிர்ச்சியில் கதிருக்குமே பாவமாய் தான் இருந்தது.

ஆனாலுமே….. “ இனி உன்ன…..சாரி சாரி உங்கல புரியுமுன்னு நினைக்கிறேன்.”

“ என்ன கதிர் என்னமோ பேசுற. சத்தியமா எனக்கு புரியல…..?” உண்மையில் கதிரின் பேச்சு அவளுக்கு புரியவில்லை தான்.

இப்படி பேசினாலே சூதகமாய் புரிந்துக் கொள்வாள் என்று  பார்த்தால்…..

“ ருத்ரன் சாரின் மனைவியிடம்  என்னால தோழமை பாராட்ட முடியாது.”

இத்தோடு பேச்சு முடித்துக் கொள்ளலாம் என்று  திட்டவட்டமாக சொன்னவனுக்கு பதிலாய்…..

“ அப்போ உங்க ருத்ரன் சாரை கல்யாணம் செய்துக்கலேன்னா…..என் கிட்ட முன்ன மாதிரி பேசிவியா….?”

தன் திட்டத்தை எல்லாம் கை விட்டவனாய்…..” லூசு….லூசு….நல்லா வாயில வருது.” அந்த திட்டை புகழாரம் போல் வாங்கி கொண்டவளாய் இந்த பக்கம் சிரித்த  மஞ்சுவிடம்…..

“மஞ்சும்மா….ஏதாவது செய்துடாதே….உன்ன கெஞ்சு கேட்டுக்குறேன். ருத்ரன் சார் ரொம்ப நல்லவரு….அவர மிஸ்  பண்ணா உன்னடோ முட்டாள் யாரும் இல்ல.” அவள் நல்வாழ்க்கைக்காக அவளிடமே கெஞ்சினான்.

“அப்போ என் கிட்ட பேசுவியா…..?” அவனிடம் பேரத்தில் இறங்க.

இவனும் கொஞ்சம் இறங்கியவனாய்…..” ஒரு வருடம்  எனக்கு டைம் கொடேன் மஞ்சு.”

“எதுக்கு…..?”

“நட்புக்குள்ள கேள்வி வரக்கூடாது. முதல் மாதிரி உன் கிட்ட பேச….”

மஞ்சுவிடம் இப்போது விளையாட்டு பேச்சு  மறைந்து….. “ கதிர் உனக்கு அங்கே ஏதாவது பிரச்சனையா….. ?ஏதாவது இருந்தா சொல்லு கதிர்….அத்தானிடம் சொல்லி சரி செய்துடலாம்.”

கதிருக்காக எந்த அத்தானை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னாளோ….அந்த அத்தானை கொண்டு கதிரை காப்பாற்றுவதாய் சொன்ன அவளின் சிறுபிள்ளை தனத்தில்….

சிரிப்பு வந்தாலும், அதை அடக்கியவனாய்…

“ இங்கே எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மஞ்சு. என் கிட்ட ஏன் எதுக்குன்னு கேட்காதே….ஒரு வருடம் சென்று நானே உன்னை  அழைக்கிறேன். அது வரை என் கிட்ட எந்த தொடர்பிலும் இருக்காதே…..நம்ம நட்ப மதிக்கிறதா இருந்தா…..” முடிக்கவில்லை.

“ நீ கூப்பிடாமே உன்னிடம் நான் பேச மாட்டேன்.” அதோடு கதிரிடம் பேச்சு இல்லாது போனது.

இப்போது ருத்ரனிடம் தனக்கு உண்டான குற்றவுணர்ச்சி சொல்ல கதிர் இல்லையே என்று  ஏங்கி போனவளாய்….

தன் தந்தை நிலத்தில்…..அறுவடை நடந்துக் கொண்டு இருப்பதை பார்த்திருந்தவளின் மனதில் பலவித போராட்டம்.

ஆம் இப்போது அவர்கள் தங்கி இருப்பது மஞ்சுவின் தந்தை மகேந்திரனின் நிலத்தில் ருத்ரன் கட்டிய  தோப்பு வீட்டில் தான்.

எப்போது மஞ்சுளா  தன் தந்தை நிலத்தில் விவசாயம் செய்ய…..விவசாய படிப்பு படிக்க ஆர்வம் காட்டினாளோ….

அன்றே…..மாமனின் உதவிக் கொண்டு மகேந்திரம்  நிலத்தை கண்டறிந்து …இத்தனை ஆண்டாய் காடாக வளர்ந்திருந்த இடத்தை சுத்தம் செய்து,  நாளா பக்கத்தில் ஒரு பக்கம் நெல்….ஒரு பக்கம் தென்னை தோப்பு. மற்ற இரு பக்கமும் வாழை தோப்பு…..காய் கரித்தோட்டம் என்று அமைத்து நடுவில் வீடு கட்டி இருந்தான்.

அதில் தான் தங்கள் தேனிலவை கொண்டாட  மஞ்சுவை அழைத்து வந்தான். தன் தந்தை நிலம் என்றதும் மஞ்சுவின் காலடி அந்த பூமியில் பட்ட நொடி…..

அவள் உடலில் உள்ள மயிர் கூச தன் கையை பார்த்தாள். சிலிர்த்து விட்டது என்பார்காளே அதை அனுபவத்தில் உணர்ந்தாள்.அதை தந்த தன் கனவனை காதலோடு பார்த்தான்.

ஆம் காதல் தான். ஆனால் தன் கணவனுக்கு தன் மீது காதல் இல்லையோ….பரிதவிப்பு பாதியும்…..குற்றவுணர்ச்சி பாதியுமாய்….நிலைத்தை பார்வையிட்டாள்.

(நிதர்சனத்துல பார்த்தா…..இந்த அத்தியாயத்துல நான் ரொமான்டிக்  எழுதி ஓவர் ப்லோராகி இருக்கனும். நான் ஓவர் ப்லோர் வழிய விடாம அடச்சதுக்கு  முதல் காரணம், இரண்டாம் காரணமெல்லாம் இல்ல.

ஒரே காரணம் எனக்கு வரல….நானே ஒரு கொஞ்சம்  டைப் பண்ணி படிச்சி… அத அடிச்சி….திரும்ப டைப் பண்ணி படிச்சி அத அடிச்சி…..

என்னாலையே படிக்க முடியல…..ஒரு நல்ல கதையில் வர்த்தக ரீதியா ஓட  ஒரு ஐட்டம் சாங் வைப்பாங்க. ரிதம் படம் பார்த்து இருப்பிங்க…..ஒவ்வொரு சீனும் நான் பார்த்து … பார்த்து ரசிச்சது.

எல்லா பாடலும்….அதுல பஞ்ச பூதம்  நிலம், ,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இருக்கும். எல்லா பாட்டையும் ரசிச்ச என்னால அந்த நெருப்பு பாட்டு ….ருசியான பொங்கல் சாப்பிட்டு இருக்கும் போது கல் பல்லுல கடிச்சா எப்படி இருக்கும்  அப்படி தான் எனக்கு…..

சரி உங்கல தொன தொனக்காம அடுத்த இரு அத்தியாயத்திலேயாவது வருதான்னு பாக்குறேன்.)

 

Advertisement