Advertisement

அத்தியாயம்—-26

சென்னையில் உள்ள  அந்த பெரிய திருமண மண்டபத்தில், சென்னையில் மட்டும் அல்லாது வெளிநாட்டிலிருந்தும்  தொழில் அதிபர்களோடு, அமைச்சர்கள், மந்திரிகள் வருவதால் அந்த திருமண மாளிகை சுற்றி ஏகப்பட்ட காவலகள்.

ருத்ர மூர்த்தி முகத்தில் மகிழ்ச்சி குறையாது வந்தவர்களை …மரியாதை நிமித்தம் வரவேற்று இருந்தான்.

வந்தவர்களில் ஒரு சிலர்… “ ருத்ர மூர்த்திக்கு இது  போல் சிரிக்கவும் தெரியுமா……?” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு, அவர்களுக்கு என்று  நியமித்து இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர்.

தயாநிதி….ருத்ர மூர்த்தி அருகில் சென்று….” என்ன ருத்ரா நீ தான் மாப்பிள்ளையே நீ ரெடியாகாம  இங்கு என்ன பண்ணிட்டு இருக்க….? இது எல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா…..?” தன் மருமகனிடம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

அந்த இடத்துக்கு  வந்த தொழில் துறை அமைச்சர்,  பழக்க தோஷத்தில் இரு கையும் மேல்  நோக்கி கூப்பிய வாறே…..அவர்கள் அருகில் வந்து…..

தயாநிதியிடம்…. “ மருமகன் மருமகன்னுட்டு….உங்க பொண்ண கொடுத்து நிஜமா மருமகனாவே ஆக்கிட்டிங்க….” அவர் சந்தோஷத்தில் சொல்கிறாரா…? எரிச்சலில் சொல்கிறாரா ….?என்று  பகுத்தறிய முடியாத வகையில் சொல்ல.

இது அப்பட்டமான வயித்தெரிச்சல் என்ற வகையில் அடுத்து வந்த ஒரு தொழில் அதிபர்….. “ இன்னும் கொஞ்சம் பொறுத்து இரண்டு வருஷம் கழிச்சி அவர் பொண்ணையே கட்டி கொடுத்து இருக்கலாம்.” எதிர் புரத்தில் ருத்ர மூர்த்தி வாங்கி கொடுத்த லெகேங்காவில் தேவதை போல் ஜொலித்து, வந்தவர்கள் தலையில் பன்னீர் தெளித்துக் கொண்டு இருந்த மதுவை பார்த்துக் கொண்டே விஷமமாக சொல்ல.

ருத்ர மூர்த்தியோ…. “ எப்படி உங்க பொண்ண கட்டி கொடுத்திங்கலே அப்படியா…..?” அவர் பின்  வந்த அவரின் பார்ட்டனரும், மருமகனுமானவரை பார்த்துக் கொண்டே அவரையிம் விட நெக்கலாக நாக்கை வாய்க்குள் சுழற்றிய வாறே சொன்னான்.

பங்குதாரருக்கு தெரியாது தொழில் பணத்தை ஏகப்பட்டத்தை ரேசில் விட்டு விட. பங்குதாரரோ அப்போது தான் மனைவி இழந்து,  புது மனைவி தேடுதலில் இருந்தவர்…

“ ஒன்று எடுத்த பணத்தை போடு…இல்ல உன் பெண்ணை கொடு…..” அவருக்கு இரண்டாவது  டீலிங் பிடித்து விட , தன் வயது ஒற்ற ஒருவருக்கு தன் மகளை கொடுத்து தன் தொழிலை நிலை நிறுத்திக் கொண்டார்.

ருத்ர மூர்த்தியின் பேச்சுக்கு எந்த பேச்சும் பேசாது அமைதியாக சென்று விட….தொழில் அமைச்சர்…. “ இந்த பேச்சு தான் உன்ன இந்த வயசுல இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கு. சாதரணமாவே  உங்கள மீறி தொழில்ல யாரும் முன்னுக்கு வர முடியாது. இப்போ ஒன்னா வேறா ஆயிட்டிங்க…..”

தன் மாமனின் தோளில் கை போட்ட ருத்ர மூர்த்தி…..” இந்த கல்யாணத்தால நாங்க  ஒன்னா இல்ல. எப்போவும் நாங்க ஒன்னு தான்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

அங்கு வந்த சங்கரி…. “ என்ன ருத்ரா இன்னும் ரெடியாகாம பேசிட்டு இருக்கு….” தன் மகனிடம் சொன்னவர்.

அண்ணனிடம்…. “ ருத்ரா  ரெடியாயிட்ட பிறகு கோயிலுக்கு கூட்டிட்டு போங்கண்ணா….”

ரெடியாக தன் அறைக்கு போக நினைத்தவன் அன்னையின் பேச்சில்…. “ எதுக்கு இப்போ கோயில்” ஸ்டேஜை காட்டி…

“ ஸ்டேஜிலே தானே நிக்கனும்.”

“ ஏன்டா உன் வயசுல இது வர எத்தன கல்யாணத்துக்கு போயி இருப்ப….? அங்கு பார்த்தது இல்ல…? மாப்பிள்ளை அழைப்பை.”

அவன் எங்கு பார்த்து இருக்கான்…..அவன் கலந்து கொண்டது எல்லாம்  தொழில் துறை திருமணங்கள்.

அந்த சமயத்தில் சென்று  தன் பி.ஏ வாங்கி வைத்திருந்த பரிசை கொடுத்து விட்டு, ஒரு கை குலுக்கலோடு  வந்து விடுவான்.

தன் மகன் போகாது அங்கேயே நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து….. “ நீ கோயிலேருந்து இங்கே வந்தா, மஞ்சு வந்து வெல்கம் பண்ணுவா…அப்புறம் நீங்க இரண்டு பேரும் ஜோடியா  மேடை ஏறலாம்…..”

ஆ இது பேச்சு ….என்பது போல் அதற்க்கு அடுத்து வாய் பேசாது , தன் அன்னை சொன்னது  போல் கோயிலிருந்து வந்தவனை மண்டபத்தின் வாயில் நின்ற மஞ்சுவை பார்த்து….இது மாதிரி இவள  பார்க்கனுமுன்னா இங்கு இருக்க கோயில் என்ன….?

காசிக்கே போகலாமுடா…..(மனசாட்சியோ…..நல்ல சகுனம் காசி.)

அவன் தேர்வு செய்த புடவை. அதற்க்கு ஏற்று அவன் பார்த்து…. பார்த்து…. வாங்கி வந்த வைர செட்டில்,  அந்த விளக்கையே தோற்கடிக்கும் ஜொலிப்போடு அவன் கையில் பூங்கொத்தை கொடுத்து அவன் அருகில் நின்றதும்…

ஏதோ கனவுலகில்  தானும் அவளும் மட்டும் நிற்பது போல் ஒரு மாயை. அங்கு இருந்த அனைவரும் அவுட்டாப் போகஸ் என்பது போல்,  மறைந்து போயினர்.

தன் கையை அவள் கையோடு பிணைத்துக் கொண்டவன், அவளை ஆசையோடு ஒரு பார்வை பார்த்தான். ஆனால் நம் மஞ்சுவோ எப்போதும் இருப்பதை விட பதட்டத்தில் இருந்தாள்.

அங்கு வந்து இருப்பவர்களின் எண்ணிக்கையிலும், வந்து இருப்பவர்களையும் பார்த்து அதிசயத்ததை விட பயந்து போய் விட்டாள்.

தொலைக்காட்சி, பத்திரிகையில் மட்டுமே பார்த்த அமைச்சர்கள், மந்திர்கள்,  தொழில் அதிபர்களை, பார்த்து பயந்தது ஒரு பக்கம் என்றால்….

சில வருடம் பார்க்காத தன் மாமா, அத்தையின்  அதிகப்படியான பாசமழையில் நனைய ஏனோ இன்று அவள்  மனது ஒப்பவில்லை.

ருத்ர மூர்த்தி ஏற்பாடு செய்து இருந்த அழகு நிலைய பெண்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையாக, மேலும் அவளின் அழகை கூட்டிக் கொண்டு இருக்க…

அப்போது அங்கு வந்த தன் மாமா அத்தையை பார்த்ததும், தன்னால் அவள்  எழுந்து நின்றாள். எழுந்து நின்றது மரியாதை பொருட்டா….? அவர்களின் வருகையை எதிர்பாராததாலா…..?

ஆனால் இவளின் இந்த செயல் அத்தையின் எண்ணத்துக்கு தூபம் போட்டது போல் ஆயின. ஓ பொண்ணு இன்னும் மாறவில்லை. தன் கணவனிடம் அவளுக்கு இருக்கும் பாசம் குறையவில்லை . இதை வைத்து நாம் செட்டில் ஆயிடலாம் என்று…

அந்த அழகு நிலைய பெண்களிடம்… “ எங்க வழக்கப்படி பொண்ணுக்கு தாய் மாமன் பொண்டாட்டி தான் அலங்கரிச்சி விடுவோம். நான் வந்துட்டேன்லே, அதனால நீங்க ஒதுங்கி போங்க…..” தன்னுடைய உறவு முறையை நிலை நாட்ட முயன்றாள்.

அந்த அழகு நிலைய பெண்களோ….சங்கடத்துடன் மஞ்சுளாவை பார்த்தனர். அவர்கள்  நடிகை, வி.ஐ.பி இவர்களுக்கு மட்டுமே சென்று அழகு படுத்துபவர்கள்.

அவர்களை விட ருத்ர மூர்த்தி   பணத்தை அள்ளி வழங்கி இருக்கிறான். கொடுக்கும் போது….. “அவ அழகு தான்.அத குறையாம பார்த்துக்குங்க….” இது தான் அவன் சொன்னது.

ஆனால் இந்த அம்மா  அவங்க அழகு படுத்திக் கொண்டு வந்ததிலேயே அவங்க லட்சணம் தெரிந்து விட….பயந்து  விட்டனர்.

அவர்கள் வந்த அதிர்ச்சி மாறி சகஜநிலைக்கு திரும்பி விட்ட மஞ்சு……

மாமனையும் , அத்தையையும்….. “ வாங்க எப்படி இருக்கிங்க…..?” என்று   முறையாக விசாரித்தவளிடம்….

“ என் மருமகளுக்கு நான்  அலங்கரிகிறேன் பாரு….?” தன் அருகில் வந்தவரிடம் கை நீட்டி தடுத்து விட்டு…

“வந்து இருப்பது எல்லாம் பெரிய பெரிய வி. ஐ. பி .ங்க….” அழகுப்படுத்த வந்த பெண்களை காட்டி…

“இவங்க அப்பாயிண்ட் மென்டுக்கு ஒரு வருஷம் கிட்ட காத்துட்டு  இருக்கனும். இவர் அதிகப்படி பணம் கொடுத்து வரவெச்சி இருக்கார். அவர் மரியாதை முக்கியம்.” ருத்ர மூர்த்தி தன்னிடம் சொன்னதை தன் அத்தையிடம் சொன்னாள்.

மஞ்சுவை அழகு படுத்தவந்தவர்களுக்கு ஒத்துழைப்பு காட்டாது…. “வேண்டாம் நானே பண்ணிப்பேன். எனக்கு இது பிடிக்காது.” என்றதும், அவர்கள்  ருத்ர மூர்த்திக்கு போனை அடித்து விட்டனர்.

பின் என்ன….நேர இவளிடம் வந்து…..  “வர இருப்பது பெரிய பெரிய ஆட்கள். நீ ரொம்ப சிம்பிள் என்று  எனக்கு தெரியும். ஆனா வந்தவங்க தங்கள் கற்பனை வளத்தை தட்டி விட்டுடுவாங்க. என் மரியாதைக்காவது இவங்களுக்கு ஒத்துழை.”  அவள் பதிலை எதிர் பாராது அழகுப்படுத்தும் பெண்களிடம்…

“உங்க வேலைய ஆராம்பிங்க.” என்று  சொல்லி சென்று விட்டான். மஞ்சுவும் அதற்க்கு அடுத்து எதுவும் பேசாது அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்துக் கொண்டு இருக்கும் போது தான் அத்தை வந்தது.

ருத்ர மூர்த்தியின் கை அழுத்ததில்  நிகழ்வுக்கு வந்து அவனை நிமிர்ந்து பார்த்தவளின், காதருகில் தன் உதட்டை கொண்டு செல்லும் போது….

அன்று ஏதோ இது போல் செய்து அன்று இரவு முழுவதும் என் தூக்கம் கெட்டது. இந்த தடவை …நான் உஷார் என்ற வகையாக அவன் உதட்டுக்கு தன் காதை  கொடுக்க கூடாது என்று நினைத்த மேதாவி….

சட்டென்று தன்  முகத்தை அவனிடம் திருப்ப…..காதுக்கு கிடைக்க வேண்டிய உதட்டு  ஒத்தடம் கன்னத்துக்கு கிட்டியது.

அத்தனை பேர் நடுவில் அவனின் செயல் பதட்டத்தை விளைவித்தாலும், அதே சமயம் அவன் உதட்டில் இருந்த ஈரப்பதம்,  தன் கன்னத்தை குளிர்வித்ததை உணரவே செய்தாள்.

மஞ்சுவின் கன்னசிவப்பையும், ருத்ர மூர்த்தியின் ஆண்மை மிளிர்வையும் கேமிரா மேன்  அழகாக படம் பிடிக்க, அங்கு ஒரு அழகிய காதல் அரங்கேறியது.

இதை பார்த்த பலர் ரசித்தனர் என்றால்…. சிலர்  வெம்பி கொதித்தனர். அதில் முதலாவதாக அகிலாண்ட நாயகி….

மூனு மாசம் முன்னாடி யாரோடவோ ஓட பார்த்தா…இப்போ என்னன்னா…?இப்படி ஈஷிட்டு இருக்கா…..

மனதால் மட்டுமே கொதிக்க முடிந்தது. தான் ஒரு மாதம் சென்றும் தன் அறையில் உணவு உண்பதை யாரும் கண்டு  கொள்ளாது, அவர் ….அவர் ….வேலையை பார்த்துக் கொண்டு இருந்தனர். அதிலும் தன் மகளே தன்னை கண்டு கொள்ளாது தன் மகன் கல்யாண வேலையில் பிஸியாகி விட.

கூப்பிட்டு கேட்டே விட்டார்….. “ எப்படி அந்த பொண்ண உன் மகனுக்கு கட்டி வைக்க மனசு வருது…..?”

தாயின் பேச்சில்….. “ ஆமாம் எனக்கும் ஒரு மாதிரியாக தான் இருக்கு.”

மகளின் பேச்சில்…. “அப்போ  ருத்ரா கிட்ட பேச வேண்டியது தானே….?”

“ பேசாம இருப்பேனா….?”

“ என்ன சொன்னான்…?” தந்தை இல்லாது வளர்த்த தாய்க்கு மதிப்பு கொடுப்பான் என்று  ஆவளுடன் கேட்டதற்க்கு,

“ இந்த வயசு வித்தியாசத்துல  தான், என் மனசு எனக்கு புரியாம போயிடுச்சி, நல்ல வேல இப்போவாவது புரிஞ்சுதே….மனசுக்கு பிடிச்சிட்டா…இந்த வயசு எல்லாம் பெரிசு இல்லேன்னு சொல்லிட்டான்.”

“ நீ என்ன கேட்ட உன் மகன் கிட்ட…..?”

“ அந்த பொண்ணு சின்ன வயசா இருக்கேன்னு தான்.”

“ அடியே அடியே….பைத்தியம். பைத்தியம் “ தன் மகளை திட்டியவருக்கு அந்த கல்யாணத்தில் தன் சொந்த பந்ததுக்காவது  கலந்துக் கொள்ளும் சூழ்நிலையில் இருந்தார்.

மேலும் எந்த காரணத் தொட்டும் தன் பேரனை விட்டு விலகுவதாய் இல்லை. அதுவும் இங்கு வந்த சொந்த பந்தம் அனைவரும் ஒன்று போல்…..

“ பெரிய மனிஷி, பெரிய மனிஷி தான். மகனுக்கு விதவைய திருமணம் செய்து வெச்சாங்க. இப்போ பேரனுக்கு அந்த பெண்ணை  கல்யாணம் செய்து வைக்கிறாங்க.” அந்த பேச்சு கேட்க அகிலாண்ட நாயகிக்கு பிடித்து இருந்தது.

அதனால் தன்   முகத்தில் கடுமையை விளக்கி, சிரித்த முகமாகவே அந்த திருமணத்தில் முன் நின்று  வந்தவர்களை வரவேற்றுக் கொண்டு இருந்தார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தாலும், நம் ருத்ர மூர்த்தியோ மகிழ்ச்சியோ…. மகிழ்ச்சி….. மனநிலையில் மஞ்சுவின் கழுத்தில்  தாலி கட்டி தன் சரி பாதியைய் ஏற்றுக் கொண்டான்.

 

Advertisement