Advertisement

அத்தியாயம்….25

“ அம்மா புடவை எடுக்க நல்ல நாள் சொல்லுங்கம்மா……” என்று கேட்டதுக்கு…

“தோப்பா……” பஞ்சாங்கத்தை எடுத்து பார்த்த சங்கரி….. “வர புதன் கிழமை  முகூர்த்த நாள்… வளர்பிறையா இருக்கு. அன்னிக்கு எடுக்கலாம்பா…..” சொன்னவரின்  முகத்தையே பார்த்த ருத்ரன்….

“ அம்மா உங்களுக்கு கோபமா…..?” ருத்ரன் சிறுவயது முதலே  தன் மாமன் பின்னாடி தான் சுற்றுவான். அடுத்து தன் பாட்டி…..

தாய் மகன்  மனசு விட்டு பேசியது என்பது குறைவு என்பதை விட,  இல்லவே இல்லை. இது தான் உண்மை.

“எனக்கு என்னப்பா கோபம் இருக்க போகுது…..” அந்த பேச்சிலேயே ஏதோ இருந்தது.

“ கோபம் இல்ல. அப்போ என்னவோ  இருக்கு… சொல்லுங்கம்மா…..” தன் தாயின் கை பிடித்து கேட்டான்.

இது போல் மகன்  தன் கை பிடிப்பது மிக அறிதானது. மகன் கை பிடித்தால் சங்கரியும் தன் இன்னொரு கை கொண்டு இறுக்கி பிடித்து கொள்வார்.

அன்றும் போதே போல் பிடித்தவர்….. “பாட்டிய  அப்படி பேசுனது தப்பு இல்லையா…..?” தன் தாயின் கோபம் அவர் தாயை தான் பேசியது தான். நல்ல வேலை மஞ்சுவை நான் திருமணம் செய்துக் கொள்வதில் இல்லை. ருத்ரனின் மனது நிம்மதி அடைந்தது.

தன் தாயின் கையில் அழுத்ததை கூட்டியவன்….. “ அவங்க செய்வது சரியான்னு தோனுதாம்மா…..?” ஏதோ பேச வந்த தாயை பேச விடாது.

“அவங்க உங்க அம்மாவ இல்லாம. யாரோன்னு நினச்சி யோசிங்க……” மகனின் அந்த பேச்சில் சங்கரி அமைதியாகி விட்டார்.

“ எனக்கும் க்ராண்மாவ ரொம்ப பிடிக்கும்மா…..தொழில்ல முக்கால் வாசி மாமா சொல்லி கொடுத்தார் என்றால்….கால் வாசி க்ராண்மா தான்.

அப்போ எனக்கு தொழில்ல அவங்க குருன்னே  சொல்லலாம். தொழில்ல பர்பெக்ட்டா தெரிந்த க்ராண்மா…. குடும்பத்துல இல்லையோன்னு இப்போ எனக்கு தோனுதும்மா……”

“இப்போன்னா மஞ்சு வந்த பிறகா……?”   சரியான பாயிண்டை பிடித்தார்.

மனது கொஞ்சம் நிம்மதி அடைய  கூடாதே…..அம்மாவுக்கு மஞ்சுவால்  கோபம் இல்லேன்னு பார்த்தா…..

“ மஞ்சு….மூனு வருஷம் முன் இந்த பேர் கூட எனக்கு தெரியாது. அத்தைக்கு ஒரு பொண்ணு இருக்கா,  அவ அங்க தாத்தா கிட்ட வளர்ரா….. அவ்வளவு தான் எனக்கு தெரிந்த விஷயம்.

இந்த நிபந்தனை….அவ அங்கு இல்ல விடுதியில் இருந்தா…..அத கூட விடுங்க. ஆனா மாமா அத்தை கிட்ட கொடுத்த வாக்கு….. நிறைவேத்தாம்மா போனதுக்கு காரணம்  தெரியுங்கலா…..?”

“ என்ன வாக்கு ….?”

“அம்மா வீட்ட சுத்தி  என்ன நடக்குதுன்னு கொஞ்சம் சுத்தி பாருங்கம்மா…..” என்று சொன்ன ருத்ரன் தன்  மாமனின் வாக்குறுதியும் சொல்லி….அதை நிறைவேத்தாம்மா போனதுக்கு நாம தான் காரணம்மா.

“ என்ன சொல்ற ருத்ரா……?”

“ நான் சின்ன பையன். தங்கை இப்படி இருக்கும் போது தான் ஒரு  பெண்ணை கல்யாணம் செய்து தனியா போனா…..எப்படி…..? அவர் எண்ணம் இதுவா தான் இருந்தது அம்மா….” மகன் பேச்சில்…

“ அண்ணன் அப்படி சொன்னாரா…..?”

“மாமா  இத நேரிடையா இத சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறிங்கலா…..? அவர் பேச்சில் இருந்து புரிஞ்சது அம்மா. உங்க கிட்ட இருந்ததை  விட அவர் கிட்ட இருந்தது தானே அதிகம்.” இதை சொல்லும் போது ருத்ரனின் முகம் கலங்கியதோ….

“அப்போ மஞ்சுவ பரிதா….”  சொல்லி முடிக்க விடவில்லை.

“பரிதாப்பத்தில் என் சொத்த கூட முழுசா கொடுத்துடுவேன். ஏன்னா அது என்னால அதை விட அதிகமா  சம்பாதித்து விட முடியும்.”

“அப்போ…..”

“அம்மா இன்னும் நான் உங்க மருமக கிட்டையே இது பத்தி பேசல…..அதுக்கு முன்ன உங்க கிட்ட எப்படி…..?” முன் கலங்கிய முகத்தில்,  இப்போது வெட்கத்தின் சாயல்.

“நீ சந்தோஷமா இருந்தா எனக்கு போதும் ருத்ரா….புதன் கிழமை  புடவ எடுக்க போகலாம். மனச போட்டு குழப்பிக்காம போ ருத்ரா….” அன்று என்றும் இல்லாது மனது நிம்மதியுடன் சங்கரி உறங்கினார்.

அந்த பெரிய ஜவுளிக்கடை மாளிகையில்….மஞ்சு வந்து வாங்குவோர்களை பார்த்திருந்தாளே தவிர….தனக்கு  வேண்டிய முகூர்த்த புடவையை தன் மீது போட்டு போட்டு….சங்கரி, மகி பார்ப்பதை எதிரில் உள்ள கண்னாடியில் நல்லா இருக்கா…..? என்று பார்க்காது யாருக்கோ வந்த  விருந்தோ என்று நின்றுக் கொண்டு இருந்தாள்.

அந்த ப்ளோரில் அமந்து இருந்த ருத்ரன் தன் கைய்பேசியில் பேசிக் கொண்டு இருந்தாலும், மஞ்சுவின் இந்த  ஒட்டாத தன்மையை பார்த்து….

“நான் பிறகு கூப்பிடுறேன்.” என்று அழைப்பை துண்டித்தவன்,  தான் தாய் அருகில் போய் நின்றவன்….

“ என்னம்மா செலக்ட் செய்தாச்சா…..?” பேச்சு தன் தாயிடம் இருந்தாலும், பார்வை மொத்தமும் மஞ்சுவிடமே….

“எங்கே இன்னும் எடுக்கல…..” அவரும் மஞ்சுவை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். மகன் பேச்சில் இருந்து மகனுக்கு மஞ்சு மீது விருப்பம் இருப்பது  தெரிந்து விட்டது.

ஆனால் இந்த பெண்…..? அதுவும்….. வேண்டாம் இதை பற்றி  நான் யோசிப்பது என் மகனுக்கு தெரிந்தால் கூட வருத்தப்  படுவான்…..

“என்னம்மா செலக்ட் செய்தாச்சா…..?” அவனுக்கே தெரியும் இன்னும் எதுவும் எடுக்கலேன்னு…..

“இல்ல ருத்ரா…எனக்கும் ,அண்ணிக்கும்,  குழப்பமாவே இருக்கு…..”

“என்னது உங்களுக்கும்…அத்தைக்கும் குழப்பமா இருக்கா…..?எதுக்கு…..? உடுத்த போறது அவ….அவள  கேக்காம நீங்கலே எடுத்துடுவிங்கலா…..?” ருத்ரன் வந்ததும் தான் மஞ்சுவின் கவனம் அங்கு திரும்பியது.

மஞ்சு பக்கம் வந்தவன்…… வித …வித ….கலரில்,  டிசைனில், அவள் மீது புடவை வைத்து பார்க்க.

இப்போது அவள் கவனம் வேறு  எங்கும் இல்லை. அதுவும் தோள் மீது அவன் கை படும் போது ஒரு வித கூச்சத்தில் நெளிந்தவளை….

“ என்ன மஞ்சு…..”

“ஒன்….னு…..ம்  இல்…ல.” காத்து தான் வரும் போல் அவள் பேச்சு இருந்தது.

அவன் எடுத்த கலர் அனைத்தும் லைட்டான கலராக இருந்ததால்…..சங்கரி….. “ரிசப்ஷனுக்கு நீ எடுத்த கலர் ஓகே….முகூர்த்ததுக்கு மெரூன், பச்சை இல்லேன்னா மஞ்சள் தான் எடுக்கனும்.” என்றதும்…

“ ஓ….” என்றவன் அடுத்து லைட் ரோஸ் கலரில் உடல் முழுவதும் தங்க சரிகை இழையோட புடவை எடுத்து  மஞ்சுவை அங்கு இருந்த கண்ணாடி முன் நிற்க வைத்து பின் பக்கத்தில் இருந்து முன் பக்கம் தன் கை கொண்டு சென்றவன்….

அவள் மீது புடவை வைத்து…… “ஒகேவா…..?” என்று கேட்க,

தலை நிமிர்ந்து கண்ணாடியை பார்க்கும் போது ருத்ரன் தன்னை பின் இருந்து அணைத்தது போல் காட்சி தந்தது அந்த தோற்றம். அவளுமே அந்த தோற்றத்தை மெய்மறந்து பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மஞ்சுவின் பார்வையில், ருத்ரனும் எதுவும் பேசாது  கண்ணாடியில் அவளின் கண்ணையே ஆழ்ந்து நோக்க. அதில் விருப்பம் தெரிந்ததோ இல்லையோ…..?தன் மீதான வெறுப்பு தெரியாதை பார்த்து, நிம்மதி அடைந்தவனாய்…

“ பேபிம்மா நான் இப்படி எவ்வளவு நேரம் நிற்பது என்றாலும் எனக்கு ஓகே தான். ஆனால்…..” சுற்றி முற்றி பார்த்து விட்டு அமைதியாகி விட…

அப்போது தான் அந்த தளத்தில் இருப்பவர்கள் பாதி பேர் தங்களையே பார்ப்பதும், தாயும், அத்தையும் சங்கடத்துடன் தலை குனிந்து இருப்பதையும் பார்த்து…

“அய்யோ…..” என்று  தன் மேல் போட்ட புடவையை எடுத்து அவன் கை கண்ட மேனிக்கு தன் மீது படுவதை  கண்டு கொள்ளாது, அவனிடம் இருந்து தள்ளி நின்றாள். இதை பார்த்த பெரியவர்களுக்கு ஏக திருப்பதி….

தன் செயலிலேயே குறியாக….. “ என்ன மஞ்சு பிடிச்சு இருக்கா…..?” என்று கேட்டதுக்கு, அவசர அவசரமாய் பலமாக தலையாட்டினாள்.

முகூர்த்த புடவை எடுக்க அவன் தேர்வு செய்யும் போது… சங்கரியும், மகியும் பேசிய கலர் நியாபகத்தில்  வர…

மஞ்சு தானே முன் சென்று  தனக்கு பிடித்த புடவை ஒன்றை முன் நீட்டி… “இது நல்லா இருக்கு…..” திருமணத்துக்கு உண்டான வேலையை அவள் உணராமலேயே அவளை  ஈடுபடுத்தினான்.

என்ன ஒன்று திரும்பவும் அவள் மீது புடவை வைத்து பார்க்கும் வாய்ப்பு தான் அவனுக்கு கிடைக்காது போயிற்று.

“ போ அத்தான் உன் பேச்சு கா…..என்ன விட்டு போயிட்டிங்கலே…..?”

“ உனக்கு மாடல் எக்ஸாம்டா குட்டிம்மா…. உன் அக்காவையாவது விட்டுட்டு போவேன்.  உன்னை விட்டுட்டு போவேன்னா….?”

இந்த வருடம் பொது தேர்வு என்பதால் மதுவை ஜவுளிக்கடைக்கு அழைத்து கொன்டு செல்லாது போக….முகத்தை ஒரு முழம் நீளத்துக்கு இழுத்து வைத்து  ஒரு மூளையில் அமர்ந்து விட்டாள்.

ஒரு கவரை அவள் முன் நீட்டியவாரே….. “நானே பார்த்து பார்த்து என் மதும்மாவுக்கு செலட் செய்தேன். உனக்கு வேண்டான வேற யாருக்கு கொடுப்பது….?”  அவள் முன் நீட்டிய கவரை பார்த்ததும் கோபம் பஞ்சாய் பறந்து போக, ஆர்வத்துடன் அவனிடம் இருந்து வாங்கியவள் , அதை பிரித்து பார்த்ததும் அப்படியே வாய் பிளந்து நின்றாள்.

மஞ்சுவுக்கு வாங்கிய ரோஸ் கலரை போலவே பட்டில் லேகேங்காவும் , முகூர்த்த பட்டு  மஞ்சு எடுத்த மெரூன் எல்லோ கலந்தது போல், மெரூன் பாவடையும்….ஜாக்கெட்டும், எல்லோ தாவணியும் வாங்கி,  மதுவை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தான்.

“தேங்ஸ் அத்தான். தேங்ஸ் அத்தான்.” என்று சொல்லி அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைக்க.

மகி…. “ என்ன பழக்கம் இது…..?” தன் சின்ன மகளை  அதட்ட….

“ ஏன் அத்த இப்போ அவள திட்றிங்க…..அவ புதுசாவா எனக்கு முத்தம் தரா…..நீங்க ஏதாவது….?”

“அய்யோ தம்பி…அது இல்லேப்பா….முதலேன்னா அவ மாமா மக மட்டும் தான்.”

“ இப்போ என்ன  அத்த சித்தப்பா மகளா ஆயிட்டாளா…..?”

“இல்லே…..”

“பாருங்க அத்த…..எப்போவும் இருக்கும்  அதே ருத்ரா தான் நான். மஞ்சு உங்க மகளா மட்டும் இல்லாம்மா என் மனைவியாவும்  இங்கு இருக்க போறா ….அவ்வளவு தான் வித்தியாசம்.”

ஏற்கனவே அத்தை தன்னிடம் அவ்வளவு  எளிதாக பேசி விட மாட்டார். இப்போது பெண்ணோட கணவன் என்ற முறையில் இன்னும் ஒதுங்கி போக போகிறார் என்று சொன்னான்.

ஆனால் மஞ்சுவோ ருத்ரனின் இந்த பேச்சில்…. இந்த வீட்டில் தான் தங்க தான் இந்த கல்யாணமே…. என்ற முடிவுக்கு வந்து  விட்டாள்.

அதனால் ருத்ரன் முகத்தையே கண் சிமிட்டாது மஞ்சு பார்த்திருக்க, அவளை கடந்து செல்லும் போது…..ருத்ரன் அவள் அருகில் சென்று….

“ உனக்கும் நான் தானே ட்ரஸ் செலக்ட் செய்து கொடுத்தேன்.” தன் கன்னத்தை தடவிய வாறு வினாவினான்.

“ ஆமா ஒரு புடவை நீங்க செலக்ட் செய்தீங்க…..” உன் தங்கை எனக்கு கொடுத்ததை நீ எனக்கு கொடுக்க மாட்டாயா…..? என்ற அர்த்ததில் ருத்ரன் கேட்க…

மஞ்சுவின் கவனம் இங்கு இல்லாததால்….சிந்தனையில்லாது பதில் அளித்தாள்.

“அப்போ உனக்கு இரண்டும் நானே செலக்ட் செய்து கொடுத்து இருந்தா…கொடுத்து இருப்பியா…..?”  தன் கன்னத்தில் இருந்த கையை அவன் எடுக்கவில்லை.

மஞ்சுவோ….. “ என்னத்த கொடுத்து இருப்பேன்…..?”

“ அப்பா நானும் நீ வளர்ந்திட்டியோன்னு தப்பா நினச்சிட்டேன். தப்பு என் மேல தான். என்ன ஆள விடு.” சொல்லி விட்டு அவளை கடக்கும் போது….

“ ஆமா போக விடாம நானா பிடிச்சி வெச்சி இருக்கேன்…..”  மெல்ல முனு முனுக்க…

அவள் பேச்சில் சட்டென்று  திரும்பி அவளிடம் வந்தவன்….. “ என்ன சொன்ன….?என்ன சொன்ன…..?” அவன் கேள்வியில் அவ்வளவு உற்சாகம்.

“ நா….ஒன்னும் சொல்லலையே….”

“எனக்கு நல்லா காது கேட்கும். நீ  என் கை பிடிக்க தான் காத்து இருக்கேன்.” அவனும் மெல்ல தான் முனு முனுத்தான்.

ஆனால் நம் ருத்ரன் போல் மஞ்சுவுக்கு காது அவ்வளவு ஷார்ப் இல்லை போலும்….

“ என்னது அத்தான்.” அப்பா அத்தானாவது கூப்பிட்டாளே …இப்போதிக்கு இது போதும் என்ற வகையில்…

“ ஒன்னும் இல்ல….நீ சாப்பிட்டியா…..?”

“ஆ சாப்பிட்டேன்.”

“நல்லது போய் போத்திக்குனு தூங்கு…..” அவனுடைய  பேச்சுக்கு சீரியசாக….

“சரியத்தான்.” என்று  சொல்லி விட்டு தன் அறைக்கு நடையை கட்டினாள்.

“ரொம்ப கஷ்ட்டம்…..” பாவம் நம்ம ருத்ர மூர்த்தி.

 

Advertisement