Advertisement

அத்தியாயம்—-24

முகத்தின் புன்னகை  செல்வத்திலோ, கல்வியிலோ, பதவியிலோ வருவதில்லை. ஒரு சிலர் எப்போதும் புன்னகை முகமாகவே இருப்பர்.

அதை பார்த்து ஒரு சிலர் கூட சொல்வர்…..” அந்தம்மாவுக்கு சிரிச்ச முகம்பான்னு…..” சிரித்த முகம் தானாய் அமைவதில்லை.

உள்ளத்தில் எந்த கள்ளமும் இல்லாது, உதட்டில் இருந்து வராது, உள்ளத்தில் இருந்து வரும் புன்னகை எப்போதும் மற்றவர்ளை கவரும் சக்தி இருக்கும். மலரம்மாவுக்கும் அந்த சக்தி உண்டு.

அகிலாண்ட நாயகி என்ன தான் முகத்துக்கு நேர் திட்டினாலும், மலரம்மா அதை முகத்தில் காட்டாது புன்னகை முகமாகவே…. “சரி பெரியம்மா. இனி அந்த தவறு வராம பார்த்துக்குறேன்.” என்று தான் சொல்வார்.

அதே போல் வீட்டில் எவ்வளவு உறவு முறை வந்தாலும், அதனால்  வேலை அதிகமானலும், சிரித்தே முகமாகவே அனைத்தும் செய்து முடிப்பார்.

மகேஸ்வரிக்கு உதவியாய் சாப்பிடும் டேபுளில் அனைத்தும் எடுத்து  வைக்க உதவிய மலரம்மாவையே பார்த்திருந்தவர்….

மதுவுக்கும், மஞ்சுவுக்கும், இடியாப்பத்தையும், தேங்காய் பாலையும் ஊற்றியவள்….ருத்ரனுக்கு ஆப்பம் குருமாவை ஊற்றும் போது ருத்ரன் தன்னால் தன் எதிரில் அமர்ந்து இருக்கும் மஞ்சுவை பார்த்தான்.

மஞ்சுவும் அதே  சமயம் ருத்ரனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள். ருத்ரன் பார்த்ததும் நாக்கு கடித்துக் கொண்டு சட்டென்று  தட்டில் முகத்தை கவிழ்த்துக் கொண்டாள்.

அதை பார்த்து ருத்ரனுக்கு தன்னால் புன்னகை மலர்ந்தது. ஆப்பம் குருமாவை பார்த்ததும் தன் அறையில் மஞ்சுவோடு உண்டது நினைவில் வந்து தான் அவன் அவளை பார்த்தது.

அதே சமயம் மஞ்சுவும் தன்னை பார்க்கிறாள் என்றால், அவளுக்கும் அந்த நியாபகம் வந்து இருக்குமோ….அதை நினைத்ததும் ஏனோ மனதில் மகிழ்ச்சியின்  ஊற்று.

பாவம் நம் மது தான் இவர்களின் பார்வை மோதலை பார்த்து…..மேலே பார்த்துக் கொண்டே…. “ கடவுளே இந்த சின்ன புள்ளைக்கு வந்த  சோதனை பார்த்தியா…..? சாப்பிடுவதை நிறுத்தி விட்டு ,தன் கை இரண்டையும் மேல் நோக்கி சொல்ல.

மகி அவள் தலையில் ஒரு கொட்டு குட்டிய வாறே….. “ என்னடி உனக்கு கடவுள் சோதனை கொடுத்துட்டார்.” பாவம் அவர் இந்த காட்சி எல்லாம் பார்க்கவில்லை.

இரண்டு நாளாய் அத்தை இங்கு வந்து சாப்பிடாது தன் அறைக்கே வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். காரணம் மஞ்சு.

நேற்று அவ்வளவு நடந்தும்,   பேரன் தன் கை விட்டு போக விடக்கூடாது என்று…..சாப்பிடும் அறையில் ருத்ரன் வந்து அமர்ந்ததும்….

எப்போதும் போல் மலரம்மாவை….. “ தம்பி வந்துட்டான். இன்னும் அங்கே என்ன பண்ற….வேலையில் அசமஞ்சமாவே இரு.” என்று ஒரு அதட்டல் போட…

ருத்ரனும் நேற்றைய நினைவு இல்லாது போல்….. “அவசரம் இல்ல க்ராண்மா, பொறுமையாவே எடுத்துட்டு வரட்டும்.” என்று  சொன்னவன்.

மகேஸ்வரியிடம் ….. “மஞ்சுவையும், மதுவையும்,  சாப்பிட கூப்பிடுங்க அத்தை.” என்றது தான்.

என்ன தான் தன் பேரனுக்காக என்று தழைந்து போனாலும், ருத்ரன் மஞ்சுவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில்….என்ன கட்டுப்படுத்தியும் முடியாது வார்த்தையாக….

“ வீட்டு ஆளுங்க மட்டும் தான் இங்கு உட்கார்ந்து சாப்பிடனும்.”

“அப்படியா…..?” என்று கேட்டவன். எழுந்தவன் தன் அன்னையைய் பார்த்து…..” அம்மா எழுந்துக்குங்கம்மா…..இங்கு வீட்டு ஆள் தான் சாப்பிடனுமா…..ஒரு பெண்ணை கல்யாணம் செய்துட்டாலே அது அவ வீடு இல்ல. அப்படி இருக்கும் போது….எழுந்துருங்க.” தட்டில் கைய் வைத்திருந்த சங்கரியை கை பிடித்து எழுப்ப….

ருத்ரனை எப்போதும் ராசா…கண்ணா….

என்று அழைக்கும் அகிலாண்ட நாயகி …. “ என் பெண்….இந்த வீட்டு அன்னியமாடா ….?”

“அத்த பொண்ணு இந்த வீட்டுக்கு அன்னியம்னா….?நானும், அம்மாவும் அன்னியம் தான்.” தன்னையும் அந்த வீட்டில் இருந்து விலக்கி பேசியவனின் பேச்சு போகும் பாதை புரிந்தும், மதுவும், மஞ்சுவும் அங்கு வருவதையும் பார்த்து…..

மலரம்மாவிடம்….. “ இனி சாப்பாடு என் அறைக்கே அனுப்பிடு….” இந்த இரண்டு நாளும் அத்தையின் சாப்பாடு தன் அறை என்று ஆனது.

அதை  பற்றி தயாநிதியும் கவலை படுவதாய் இல்லை. எப்போதும் அடங்கி போன மகிக்கு ஏதோ தவறு செய்வது போல்….அந்த கவலையிலும்….

காலையில் இருந்து மலரம்மா முகத்தில் தெரிந்த வாட்டத்திலும் ….எதையும் கவனிக்கவில்லை.

எப்போதும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாத மகி….மனது பொறுக்காது…..” என்ன மலராம்மா ஒரு மாதிரி இருக்கிங்க….?உடம்பு சரியில்லையா…..?”  என்று கேட்டது தான்….

மலரம்மாவிடம் இருந்து ஒரு விக்கல் வெளிவர….ருத்ரன் தன் கனவுலகம் கலைந்து மலரம்மாவை பார்த்தான்.

“அது மகிம்மா கதிரு…..” அதற்க்கும் மேல் பேசாது தன் அழகையைய் தொடர…

தான் சாப்பிடுவதை விட்டு விட்டு எழுந்த மஞ்சு…. “ கதிருக்கு என்ன ஆச்சி …..?” கதிரை தினம் தோறும் தோட்டத்தில் சந்திக்கும் மஞ்சு நேற்று இருந்த மனஉளச்சலில்  தன் அறையைய் விட்டு எங்கும் போக வில்லை.

தன் அறையைய் ருத்ரனின் அறைக்கு நேர் அறையைய்  மாற்றும் வேலை ருத்ரனின் மேற்பார்வையில் நடைப்பெற்றாலும் மஞ்சு எதிலும் கலந்துக் கொள்ளவில்லை. ஏனோ தவறு  செய்து விட்ட குற்றவுணர்வு.

கதிர் என்று சொல்லி அழுததும் தன்னால் மனம்  பதைத்து விட்டது மஞ்சுவுக்கு…..

“அவன்….அபிசுல ஊருக்கு அனுப்புறாங்கலாம்.”

“ஊப் என்றானது ருத்ரனுக்கு…..” கொஞ்ச நேரத்தில் அவன் மனது எங்கு எங்கேயோ போய் வந்து விட்டது.

அந்த ஆசுவாசம் அடைந்தது ருத்ரன் மட்டும் இல்லை மஞ்சுவும், மகியுமே….. “ என்ன மலரம்மா ஆபிசுல ஊருக்கு அனுப்புவதுக்கே இப்படி முகத்த வெச்சி இருக்கிங்க…..? உங்க முகத்தை பார்த்து நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்.” மகி சொன்ன வார்த்தையில் மலரம்மா மகிழ்ந்து தான் போய் விட்டார்.

தன் முகமாற்றத்தை வைத்தே தன்னை கண்டு பிடிக்கும் வீட்டை விட்டு, எப்படி போவது இல்லை நான் எப்போதும் நன்றி மறக்க மாட்டேன்.

ருத்ரன்  ஊரு என்றதும், ஐடியில் வெளிநாட்டுக்கு அனுப்புவது தான் என்பதை புரிந்து….. “மலரம்மா இது சந்தோஷப்பட வேன்டிய விஷயம். இத போ இப்படி சொல்ற ஒரே ஆளு நீங்களா தான் இருப்பிங்க.”

மஞ்சுவுக்கும் கதிரின் முன்னேற்றத்தில் சந்தோஷம் தான். ஆனால் இனி தினம் பார்க்க முடியாதா….என்றதில் கொஞ்சம் மனது சோர்ந்து தான் போனது.

அந்த மனநிலையில் மலரம்மவிடம்….” எப்போ போய் …..?எப்போ வருவாங்க…..?” என்ற கேள்விக்கு,

“நேத்தே அதுக்கான ஏற்பாடு நடக்க ஆராம்பிடுச்சாம். விசா கிடச்சதும் போக வேண்டியது தானாம் .” என்ன தான் மகன் முன்னேற்றம் என்று மனதில் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாலும், தன் கூடவே  சுத்தி வந்தவனை விட்டு இருப்பது கடினம் என்றே மலரம்மாவுக்கு தோன்றியது.

மஞ்சுவும்…. “கதிருக்கு ஆறுமாசம் முன்னவே  ஹாபர் வந்தது. ஆனா அம்மாவ விட்டு போக முடியாது. வேண்டாமுன்னு சொல்லிட்டதா  என் கிட்ட சொன்னாங்கலே…..”

இந்த செய்தி மலரம்மாவுக்கு புதியது. “அப்படியா….?அப்போ எதுக்கு திடிருன்னு இந்த முடிவு.”

இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த ருத்ரனுக்கு, கதிர் ஏன் இந்த முடிவு எடுத்தான் என்ற விவரம் புரிந்தாலும்….

“வாழ்க்கைய அடுத்த கட்டத்துக்கு எடுத்து போக பார்க்கிறான். அது தப்பா…..?” என்ற பேச்சில்…

“ஆ….அவங்க ஆபிஸ் கிட்ட ஏதோ பழைய ப்ளாட்  இருக்கு. அத வாங்குற ஐடியாவுல இருக்குறதா  சொன்னாங்க.

ஆனா பழைய ப்ளாட் வாங்குறதுல அவங்களுக்கு  அவ்வளவா விருப்பம் இல்ல. ஒரு சமயம் புதுசு வாங்கனுமுன்னு வெளிநாடு போறாங்கலோ……?”

மஞ்சு சொன்ன  இந்த செய்தியும்,  மலரம்மாவுக்கு புதியது “எனக்கு இதெல்லாம் தெரியாது கண்ணு…..தெரிஞ்சி இருந்தா வேண்டாமுன்னு சொல்லி இருப்பேன்.”

“ஆ அது அம்மாவுக்கு சர்ப்ரைசுன்னு  சொல்லிட்டு இருந்தாங்க கதிர். அம்மா இங்கு இருந்து வர மாட்டாங்க. ஆனா நான் வீடு வாங்கி இருக்கேன்னு சொன்னா கண்டிப்பா சந்தோஷப்படுவாங்கன்னு.”

இந்த உரையாடலை கேட்ட ருத்ரனுக்கு மஞ்சு கதிரிடம் எந்த ஒளிவு மறைவும் கிடையாது போலவே….அனைத்தும் பகிர்ந்துக் கொண்டவர்கள்….முகநூல் நட்பை ஏன் சொல்ல வில்லை……?  கேள்வி எழுந்த அதே சமயம்…. மனதில் பதிலாய்….

அவர்களுக்கே தாங்கள் செய்வது தவறு என்று ஏதோ உள்மனது சொல்லி இருக்கு….அதனால் தான் அதை மறைத்து இருக்கிறார்கள்.

ஒருவகையில் அதுவும் சரியே….தங்களை வெளிப்படுத்தி இருந்தால்….இதோ இப்போது சாதரணமாக பேசும் மஞ்சு இப்படி கதிரை பற்றி பேச முடியுமா…..? முடியாது.

ஒரளவுக்கு மஞ்சுவை பற்றி  தெரிந்தவனாய்….கண்டிப்பாக கதிரை தலை நிமிர்ந்து கூட அவளால் பார்த்து இருக்க முடியாது.

இதோ கதிர் நாட்டை விட்டு போவது போல்…வேன்டாம் அதற்க்கு மேல் எதுவும் எண்ண வேண்டாம். இனியாவது அவள் வாழ்க்கை நல்ல படியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன். நல்ல படியாக வைத்து இருப்பேன். தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“ஏன் கதிர் திடிர்ன்னு இந்த முடிவு…..?” கதிரை நேர்க் கொண்டு பார்த்து மஞ்சு கேட்க….

கதிரால் தான் முன் போல் அவள் முகத்தை பார்த்து பேச முடியாது. எப்போதும் மஞ்சு செய்யும் செயலான தூக்கணாங்கூட்டை பார்த்தவாறே…..

“ நானும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போகனும்லே …..” மஞ்சு…. மஞ்சு…. என்று உரிமையுடன் அழைக்கும் அழைப்பு இப்போது கதிரிடம் இல்லை.

“ஓ…..” ஏனோ இன்று கதிரின் பேச்சு நடவடிக்கையில் மாற்றம் போல்…..ஏன் என்று யோசித்தவள் மனதில்……

நான் செஞ்ச தப்பால்…..அதை நினைக்கும் போதே கண் கலங்கி விட…..இவ்வளவு நேரமும் தான் சொன்னதுக்கு எந்த எதிர் பேச்சும் இல்லாது போக அவளை பார்க்க…

அவளின் கலங்கிய முகத்தில் தன்னால் அவள் அருகில் சென்று…. “ என்ன மஞ்சு வீட்டில் ஏதாவது  பிரச்சனையா…..?”

பழைய நட்பும், புதியதாக மனதில் தோன்றிய குற்றவுணர்வும், ஒன்றோடு ஒன்று கலந்து… இரு நிலைக்கும் இடையில் தள்ளாடி தான் போனான் அந்த நல்லவன்.

“ என்ன தப்பா நினைக்கிறியா கதிர்.” மஞ்சுவின் பேச்சு புரியாது….

“தப்பாவா எதுக்கு….?”

“நான் இரண்டு  நான் முன்ன வீட்ட….” எப்படி சொல்வாள்  தன் முட்டாள் தனத்தை….

மஞ்சு என்ன சொல்ல வருகிறாள் என்று  புரிந்த நொடி….. மஞ்சுவுக்கு மேல் பதை பதைத்து போனான்.

“அய்யோ தங்களுடைய முட்டாள் தனத்தால் இந்த பெண் இன்னும் என்ன என்ன மனதுக்குள் போட்டி குழம்பி கொள்கிறாளோ…..?”  முதலில் அவள் மனதில் இருக்கும் குற்றவுணர்வை போக்க வேண்டும்.

“என்ன மஞ்சு இத போய் பெருசா…..அதுலா ஒன்னும் இல்ல.” கதிர் பேச்சை நம்ப முடியாது.

“என்ன  சொல்ற கதிர்…..?”

“அதாவது இது சரின்னு சொல்லலே மஞ்சு.” சரியாக மஞ்சுவை  குழப்பினான்.

“புரியல…..?”

“அதாவது  தனியா இருக்கவங்க முக்காவாசி பேரு….இது போல…..அதுக்குன்னு  தனியா இருக்க எல்லோரும் இப்படின்னு சொல்லலே…. நீ செஞ்சது தப்பு தான்.

ஆனா மன்னிக்க முடியாத தப்பு இல்ல. இனி உனக்கு தனிமை இருக்காது மஞ்சு. ருத்ரன் சார் ரொம்ப நல்லவர். உன்ன அவர் நல்லா பார்த்துப்பாரு…

உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடச்சி இருக்கு. ஏதேதோ….நினச்சி  மனச போட்டு குழப்பிக்காம எதார்த்தமா வாழ பாரு…..”

“அப்போ என் மேல கோபம் இல்லையா கதிர்…..?”

“உன் மேல கோப்ப்பட்டா என் மேலேயும் கோப்பபடனும்.”  ஏதோ நினைத்து சொல்ல…

“எனக்கு புரியல கதிர்.”

“ஒரு  சிலது புரியாம இருக்குறாது தான் நல்லது. நான் இப்போ போனா மூனு வருஷம் கழிச்சு தான் வருவேன். அம்மாவ பார்த்துக்கோ…. அம்மா கிட்ட உன்ன பத்தி கேட்டுக்குறேன். பாத்து இருந்துக்கோ ….”  மஞ்சுவிடம் விடைபெறும் சமயம் அந்த இடத்துக்கு ருத்ரன் வந்து சேர்ந்தான்.

முதல் முறை கதிரிடம் மஞ்சு பேசிய போது …அதை கண்டித்தவன். இப்போது அவர்களின் பேச்சு தான் வந்ததும் நின்று  விட்டதை பார்த்து….

“என்ன நீங்க பேச்சிட்டு இருக்கும் போது இடையில வந்துட்டேனா…..?” வருத்தம் தெரிவிப்பது போல் இருந்தது ருத்ரனின் பேச்சு.

கதிர் பதறி போய்…..” அய்யோ ருத்ரன் சார் அதெல்லாம் இல்ல. பேசிட்டேன். நானே  உள்ளே போறதா இருந்தேன்.” என்று சொன்னவனின் கை குலுக்கி….

“ மலரம்மா சொன்னாங்க….நல்ல படியா போயிட்டு வா கதிர். இங்கு இருக்க எதை பத்தியும் கவலை படாதே,  எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன்.” என்று சொன்னவனை குழப்பத்துடன் பார்த்த கதிரிடம்….

“அம்மாவ சொல்றேன். அவங்கல பத்தி கவலை படாதே…..” கதிரோவியனை பற்றி  தனக்கு தெரியும் என்பதை தெரியப்படுத்தாது அவனை வழியனுப்பினான்.

 

Advertisement