Advertisement

அத்தியாயம்—-23

“அவ கைய விடுடா…..?” அகிலாண்ட நாயகி சொல்லும் போதே, மஞ்சு ருத்ரன் கை பிடியில் இருந்து தன் கையைய் விடுவிக்க  பார்த்தாள்.

அவளால்  முயற்ச்சி  மட்டும் தான் செய்ய முடிந்தது.

மஞ்சுவின் கையைய் லேசாக பற்றி   இருந்த ருத்ரன், மஞ்சுவின் முயற்ச்சியால்…..அவன் கைய் பிடி இறுகியது தான் மிச்சம்.

தன் கைய் பிடி விடாது அகிலாண்ட நாயகியிடம்…… “ முதல்ல வார்த்தையால் தானே சொன்னேன் க்ராண்மா….அப்பவே பேச்ச கேட்டு இருந்தா….?இஸ் டூ லேட்.”

பேரனின் பேச்சில் பதட்டம் கூட….. “அப்படினா…..?”

“ இப்போவும் தொழில்ல உங்கல பத்தி பேச்சு என்ன தெரியுங்கலா…..அந்தம்மா சாணக்கியர் என்று…

நீங்க உங்க புத்திசாலி தனத்த தொழில்ல மட்டும் காட்டி இருந்தா….நல்லா இருந்து இருக்கும். குடும்பத்துக்குள்ளயே……தப்பு பண்ணிட்டிங்க க்ராண்மா…..ரொம்ப பெரிய  தப்பு பண்ணிட்டிங்க. நான் சாகர் கல்யாண பேச்சு பேசினிங்கலே…. அந்த தப்பு மட்டும் சொல்லலே… மாமா கல்யாணத்துல செஞ்ச தப்ப சொல்றேன்.”

அப்போதும்  நான் விடுவேனா என்று….. “நான் ஒன்னும் உன் மாமனுக்கு கல்யாணம்  முடிஞ்சிட்டு சொல்லலையே….

உன் மாமன் வந்து சொன்னப்பவே சொன்னது. அப்போ அவ வீட்டிலேயேயும் பொண்ணுக்கு வாழ்க்கை கிடச்சா போதுமுன்னு நான் சொன்னதுக்கு எல்லாம் தலையாட்டினாங்க. இப்போ வந்து என்ன குத்தம் சொல்றது சரியா…..?”

ஒரு விதத்தில் அகிலாண்ட நாயகியின் பேச்சு வாஸ்தவமானது தான். மகியின் பெற்றோருக்கு பெண்ணுக்கு வாழ்க்கை கிடைத்தால் போதும் என்று நினைத்தனர்.

தயாநிதியோ தன் மனதுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்ய…ஆயிரெத்தெட்டு நொண்டி சாக்கில் ஒரு சாக்காய்  …..தன் அன்னையை லேசாக நினைத்து…மகியிடம் ….

“திருமணம் முடிந்து ஒரு வருடத்துக்குள் நம்ம மகளை நம்மிடம் அழைத்துக் கொள்கிறேன். “ என்று வாக்குறுதியை அள்ளி வழங்கினார்.

மகி…..பத்து வருடம் வாழ்ந்தவனையே புரிந்துக் கொள்வது கடினம். அப்படி இருக்கும் போது கொஞ்ச நாள் அதுவும் முதலாளியாக   மட்டும் பார்த்தவரின் பேச்சை நம்ப வைத்தது எது…..?

தனக்கும்  ஒரு குடும்பம் வேண்டும் என்ற எண்ணமா…..?ஆள் ஆளுக்கு அவர் அவர்களின் நிலை யோசித்து முடிவு எடுத்து விட்டனர்.

பாதிப்பு என்னவோ மஞ்சுவுக்கு மட்டுமே……பிரச்சனை என்றதும்   ஒருவர் மீது மட்டும் பழி சுமத்துவது…..எந்த வகையில் நியாயம்…..?

பாட்டியின் பேச்சில் பேச்சற்று நின்ற ருத்ரன்….பின்…. “அப்போ உங்க மேல தப்பே இல்லேன்னு சொல்றிங்கலா க்ராண்மா…..?”

“என் மேல தப்பு இல்லேன்னு சொல்லலே….என் மேல மட்டும் தப்பு இல்லேன்னு சொல்றேன்.”

“வாய் ஜாலத்திலும் உங்க பாட்டிய மிஞ்ச முடியாது. அவங்க பேச வெச்சே அவங்க மடக்கிடுவாங்கன்னும் சொல்லுவாங்க.

மத்தவங்க கிட்ட நீங்க எப்படி நடந்துக்கிடுங்கலோ….?ஆனா என் கிட்ட அன்பு மட்டும் தான் காட்டினிங்க. அதனால உங்களோட மத்த  முகம் எனக்கு தெரியாது போயிடுச்சி…..”

பேரனின்  பழிசுமத்தலிள் …..உள்ளம் கலங்கினாலும்…..” உன் கிட்ட எப்போவும் நான் அன்பு முகத்தை மட்டும் தான் காட்டுறேன் ருத்ரா…..”

பாட்டியின் பேச்சில் கேலி புன்னகை முகத்தில் வழிந்தோட…..” அப்படியா…..?” சந்தேகம் போல் கேட்டவன்.

“அப்போ எதுக்கு சாகருக்கு மஞ்சுவை…..” அவர்கள் இருவரின் திருமண பேச்சு வந்த்தை கூட வாய் வரவில்லை.

காலையில் இன்நேரம் பேசிய பேச்சு தான். அப்பேச்சு சுத்தமாக தனக்கு பிடிக்கவில்லை. அது மட்டும் தான் அப்போது அவனுக்கு புரிந்த்து.

ஆனால் இப்போது தன் மனது தனக்கு தெரிந்த பின்…. பேச்சாய் கூட எடுக்க மனது இல்லை அவனுக்கு,

ஆனால் பாட்டியோ…..” மஞ்சு சாகர் கல்யாணத்துக்கும் உனக்கு என்னடா சம்மந்தம்….?அதுவும் அவ அம்மாவே ஒத்துக் கொண்ட பிறகு…..?”

ஒற்றை புருவத்தை  தூக்கிய வாறே….. “  என்ன சம்மந்தமா…..? என்னை பத்தி எனக்கே புரியாத விஷயத்தை புரிஞ்சு , நான் தெளிவாகுவதற்க்குள்  விஷயத்த முடிக்க பார்த்த உங்கல…..க்ராண்மா கண்டிப்பா பாராட்டிய ஆகவேண்டும்.” சொல்லோடு தன் கை தட்டி அவருக்கு பாராட்டு தெரிவித்தான்.

மஞ்சுவோ விட்ட கைய் பிடி வலியை  தேய்த்து போக்கிக் கொண்டாள். பாட்டி பேரனின் உரையாடல் சத்தியமாக அவளுக்கு புரியவில்லை.

மஞ்சுவுக்கு புரியவில்லை என்றாலும் தயாநிதிக்கு புரிந்து விட்டது.நான் தான் மஞ்சுவை பார்த்துக் கொள்ளும் படி மருமகனிடம் சொன்னது.

ஆனால் மஞ்சு இல்லை என்றானதும் அவனின் பதட்டம். அந்த  நிலையில் அவர் அப்போது சரியாக கவனிக்கவில்லை என்றாலும், இப்போது அவர் நினைவடுக்கில் வந்து போனது.

அதுவும் வெளியில் நின்று  மஞ்சுவிடம் அவன் பேசிய பேச்சு….இப்போது தாய். ருத்ரனின் உரையாடல்….

ஓ அது தான் அம்மா அந்த நேரத்துக்கு வந்து மஞ்சு திருமணத்தை பற்றி பேசியதா…..?

அவருக்குமே மஞ்சுவின் மேல் அக்கறையில் வந்து பேசுகிறார் என்று நினைக்கவில்லை. மஞ்சுவை நாகரிகமாக இந்த வீட்டை விட்டு அனுப்ப நினைக்கிறார் என்று  மட்டும் தான் அப்போதிக்கு அவர் நினைத்தது.

ஆனால் இப்போது…..தன் பேரன் மனதை தெரிந்தும்…..மஞ்சுவுக்கு நல்ல வாழ்க்கை காத்துக் கொண்டு இருந்தால் யாராலும் தடுக்க முடியாது.

என் சுயநலத்தால்  தனித்து இருக்கும் மஞ்சு. ருத்ரன் மூலம் நல்ல வாழ்க்கை அமைவது என்றால்…

இனியும் நாம் சும்மா இருந்தா…..பாட்டி பேரனின் பேச்சில் இடைபுகுந்த தயாநிதி….. “வயசு பொண்ணு கைய் பிடிச்சி அப்படியே கூட்டிட்டு போக நான் விட்டுட மாட்டேன் ருத்ரா….அது எனக்கு ரொம்ப பிடித்த என் மருமகனே ஆனாலும், இந்த விஷயத்தில் என் மகள் எதிர்கால வாழ்க்கை தான் எனக்கு முக்கியம்.” ருத்ரனை பார்த்து பேசிய பேச்சில் இருந்த கோபம் ….அவர் முகத்தில் இல்லை.

அப்படி போடுங்க மாமா…இந்த பேச்சுக்கு தானே காத்துக்  கொண்டு இருந்தேன், என்று ருத்ரன் மனது துள்ளியது என்றால்….

அகிலாண்ட நாயகியோ…இந்த வார்த்தைக்கு தானே அவன் காத்துக் கொண்டு இருந்தான். கண்டிப்பாக இதை வைத்தே அவன் நினைத்ததை சாதித்துக் கொள்வான்.

ஆனால் அவருக்கு தெரியாதது….தயாநிதி எடுத்துக் கொடுக்கவில்லை என்றாலும், தான் நினைத்ததை அவன் சாதித்தே தீருவான் என்று.

“ஓ அப்போ என்ன செய்யனும்…..? க்ராண்மா சொன்ன மாதிரி எல்லாம் என்னால   அப்படியே விட முடியாது.” திட்ட வட்டமாக தன் முடிவை சொன்னான்.

“அவள் உனக்கு உரிமையா ஆனா மட்டும் தான், அவ முடிவ நீ எடுக்க முடியும் ருத்ரா…..”

“அதுக்கு  நான் என்ன செய்யனும்…..?”

“ஏன் உனக்கு தெரியாதா…..?”

“தெரியும். நல்லா தெரியுமே…..இப்போ என் யோசன கிராண்டா செய்யிறதா….?சிம்பிளா செய்யிறதான்னு மட்டும் தான்.”

நல்ல பேச்சுக்கு நடுவில்  அபஸ்வரம் போல்…. “ ஓவியன் கிட்ட கேளேன்  ருத்ரா…..” யார் சொன்னது….?எல்லாம் நம் அகிலாண்ட நாயகியே தான்.

“பாட்டி…இனி மஞ்சு மகி அத்தையோடோ பொண்ணு மட்டும் இல்ல. என் மனைவியா ஆகப் போறவ. அவள பத்தி யாராவது தப்பா…..யாரா இருந்தாலும் கேட்டுட்டு நான் சும்மா இருக்க மாட்டேன்.”

இது வரை என்ன பேசுகிறார்கள் என்று புரியாது பார்த்திருந்த மஞ்சு, ருத்ரனின் பேச்சில் பொட்டில் அடித்தது போல் விளங்கியது. என்ன….? இவர் என்ன கல்யாணம் செய்துக்க போறாரா….

என்ன இங்கு தங்க வைக்க. அவர் வாழ்க்கையே பாழாக்க போறாரா…மறுத்து பேச வந்தவளின் உடல் மொழி அவள் பக்கத்தில் இருந்த ருதனுக்கு தெளிவாக புரிந்து விட….

அவளுக்கு மட்டும் கேட்கும் மாறு…அவள் அருகில் நெருங்கி காதில்…. “ எது இருந்தாலும் நாம தனியா பேசிக்கலாம் மஞ்சு. நான் என்ன சொல்லி இங்கு  கூட்டிட்டு வந்தேன். உன் முடிவ கூட நான் எடுப்பேன்னு தானே…..?”

“ஆம்….” என்போது போல் தலையாட்டலில் அவனின் உதடு தன் காதில்  ஒத்தட்டம் வைப்பது போல் இருந்தது.

அப்போதும் தன் நெருக்கத்தை விலக்காது….. “ என்ன புரியுதா…..?”

“புரியுது.” என்பது போல் மீண்டும்  அவளிடம் இருந்து ஒரு தலையாட்டால் மட்டுமே …..

“என்னத்த புரிந்த்ததோ…..” தங்களையே குறு  குறு என்று பார்த்திருந்த மதுவின் பார்வைக்காக மட்டும் தான் மஞ்சுவிடம் இருந்து கொஞ்சம் தள்ளி நின்றான்.

நம் மகிக்கோ ருத்ரன் பேச்சில் பாதி புரிந்தது என்றால்….மஞ்சுவிடம் அவன் நெருக்கத்தில் மீது புரிந்தது.

அவர்கள் இருவரும் பக்கத்தில் நிற்க்கும் போது அவர்களின் வயது வித்தியாசம் கூட தெரியவில்லை. ஜோடி பொருத்தம்  அவ்வளவு அருமையாக இருந்தது.

கடவுளே…என்  பெண் மீது இப்போவாவது கருணை காட்டினியே…..? இது வரை என் வேண்டுதல் என் மகள் என்னிடம் பேச வேண்டும் என்று  இருந்தது.

ஆனால் இனி எனக்கு அது  கூட தேவையில்லை. என்னை பற்றி  அத்தை பேசியதும்…அம்மா என்று சொல்லவில்லை என்றாலும், அவங்கல பத்தி அப்படி சொல்லாதிங்கன்னு சொன்னாலே அந்த ஒரு வார்த்தை  போதும் எனக்கு…

மகளின் வாழ்க்கை நினைத்து முகம் தன்னால் பிரகாசத்தை கூட்ட. அதை பார்த்த அகிலாண்ட நாயகி…… “நீ நினச்சத சாதிச்சட்டலே….இரக்கப்பட்டு என் மகன உனக்கு கல்யாணம் செஞ்சு வைச்சா  நல்லா நன்றி கடன் காட்டிட்ட…..”

இன்று ஏனோ அகிலாண்ட நாயகியின் பேச்சு மகிக்கு வருத்ததை அளிக்கவில்லை. தன் முகப்பொலிவும் குறையவில்லை.

“என்ன கதிர்…..கூப்பிட கூப்பிட அப்படி எங்கு அவசரமா போன……?” தாயின் வார்த்தை காதில் விழுந்ததா…இல்லை விழுந்தாலும் அவன் நினைவில் படிந்ததா…..?

தாய் கேட்டதுக்கு எந்த பதிலும் சொல்லாது தன் அறைக்கு முடங்கியவன். ஒரு மணி நேரம் சென்றும் சாப்பிட வராது போக….

மலரம்மாவுக்கு என்ன ஆச்சி இந்த பையனுக்கு எப்போதும் இப்படி இருக்க மாட்டானே…..கதவை தட்டும் போது கதிரே கதவை திறந்து வந்தவன்.

“பெரிய வீட்டில் என்ன ஆச்சும்மா…..?”

“பெரிய வீட்டிலா….?என்னடா சொல்ற….?”

“அய்யோ அம்மா…..நான் போகும் போது ஏதோ சொல்ல….”

“ஆ ஆமான்டா….இந்த மஞ்சு பொண்ணு கிறுக்கு தனமா ஏதோ செஞ்சுடுச்சிடா…..ஏதோ புக்குன்னு….அதுல ஒரு பையன் சிநேகம்….என்ன என்னவோ…பாவம்பா மகிம்மா….ஏற்கனவே பெரியம்மா ஆடுவாங்கா…இப்போ இந்த பொண்ணு செஞ்ச காரியம் அவங்க காலில் சலங்கை கட்டி விட்டது போல ஆயிடுச்சி.”

எதுவும் தொடர்ந்தார் போல் சொல்லாது விட்டு விட்டு சொன்ன தாயை கடிய வாய் திறந்தவன், பின் …. “அம்மா  ப்ளீஸ் விளக்கமா சொல்லுங்க…..?முதல்ல மஞ்சுவ வீட்டுல சேத்துக்குனாங்கலா…..?”

பாவம் அந்த தாய் நாம் மஞ்சு பத்தி ஏதும் விளக்கமாய் சொல்லாமலேயே எப்படி புரிந்தது என்று நினைக்காது….

“அதுவா….முதல்ல அந்த அம்மா மஞ்சு  வீட்டுக்குள்ள வரவே கூடாது, வெளியில் போன்னு தான் சொல்லிட்டாங்க.”

தாயின் பேச்சில் பதறி…. “அய்யோ  இப்போ மஞ்சு எங்கு இருக்கா……?” நட்பில் ஏற்பட்ட பதட்டமா…..?இல்லை குற்றவுணர்ச்சியில் ஏற்பட்ட பதட்டமா…..?மொத்தத்தில்  கதிர் பதறி தான் போனான்.

“நம்ம ருத்ரா தம்பி விட்டுடுவாறா….?” ருத்ரன் சிறுவயதில் சங்கரி கையால் உணவு உண்டதை விட…..  மலரம்மா கையால் உணவு உண்டது தான் அதிகம்.தான் வளர்த்தவனின் வீர செயலை பேச எவருக்கும் ஒரு பெருமை ஏற்படும்.

அந்த பெருமையில்…. “அந்த அம்மா நம்ம மஞ்சு பாப்பாவை தப்பு தப்பா பேசி வெளியே துறத்த பார்த்தாங்க.” அப்போதும் விஷயத்துக்கு வராது நீட்டி முழக்கி பேசும் தன் தாயின் பேச்சில்….ஆத்திரம் வந்தாலும்….

“அம்மா விஷயத்துக்கு வாங்க.”

“அது தான்டா …..நம்ம ருத்ரா தம்பி. மகி அத்தை மகளா….மஞ்சுவ  நீங்க எவ்வளவு வேனா பேசி இருக்கலாம். ஆனா என் எதிர்கால மனைவியா இனி அவள யாரும் தப்பா பேசுவதை அனுமதிக்க மாட்டேன்னு ஒரே போடா போட்டுட்டாரு.”

“எ…ன்….ன…எ…ன்…ன….?ருத்ரா சா…ர். மஞ்சுவ….” அவனால் தொடார்ந்தார் போல் பேச முடியவில்லை.

மகனின் திணறலில்…. “நானும் முதல்ல ருத்ரா தம்பி அப்படி பேசியதும்,  எனக்கும் உன்ன மாதிரி தான் அதிர்ச்சி ஆயிடுச்சி…..

மஞ்சு மேல பாவப்பட்டு தான் இப்படி பேசுறாரோன்னு கூட நினச்சேன். ஆனா நம்ம மஞ்சு பாப்பா பக்கத்துல நின்னு காதுல என்னவோ சொன்னாரு….

அப்போ ருத்ரா தம்பி முகத்த பார்த்து இருக்கனுமே…. ருத்ரா தம்பிக்கு நம்ம மஞ்சு பாப்பாவ கா…. ரொம்ப பிடிச்சி இருக்கு கதிர்.” மகனிடம் காதல் என்ற பேச்சு  பேச கூட கூசிய அந்த தாய் ,பிடித்தம் என்று சொல்லி முடித்தார்.

தாயின் பேச்சில் கதிர் என்ன மாதிரி உணர்ந்தான் ,அவனால் உணர முடியவில்லை. ஆனால் எல்லா வற்றையும் தான்டி….மஞ்சு நல்லா இருப்பா…..அந்த நிம்மதி வந்து போன சமயம்,

இனி அவளிடம் முதல் மாதிரி பேச முடியுமா……? நிதர்சனம் பேச முடியாது, என்று தான் அடித்து கூறியது. தன்னை பார்த்தால் மஞ்சு எப்போதும் போல் தன்னிடம் பேச வருவாள்.

நான் தான் ஓவியன் என்று அவளுக்கு தெரியாது. ஆனால் என் மனசாட்சி……எப்படி அவளை தவிர்ப்பது என்ற முடிவில் ஆபிசில் கேட்ட வெளிநாட்டு ஹாபர் ஒத்துக் கொள்ள வைத்தது.

மஞ்சுவோடு தன் திருமணத்தை முடிவு செய்து விட்டு மஞ்சுவை அவள் அறைக்கு அனுப்பியதோடு மட்டும் அல்லாது நாளை மஞ்சுவின் அறை மாற்றத்தையும் நிர்ணயித்து தன் அறைக்கு வந்த ருத்ரன்…

தன் கைபேசிக்கு வந்த கதிரோவியனின் முகநூல் பக்கத்தை  நிதானமாக பார்க்க ஆராம்பித்தான்.

யார் பக்கம் தவறு….? விடை யார் மீதும் தவறு இல்லை.

 

Advertisement