Advertisement

அத்தியாயம்—-22

தன் கைய்பேசியின் தகவலை பார்த்து  ருத்ரன் அதிர்ந்து நின்றது ஒரு நிமிடம் தான். பின் தன்னை நிலைபடுத்தியவனாய் அவர்களின் அருகில் சென்று……

“போகலாமா…..?” என்று மஞ்சுவையும்,தன்  மாமவையும் பார்த்து கேட்டவன், கதிரின் பக்கம் திரும்பி….. “நீ எப்படி…..?” என் கூட வர்றியா ….?என்ற அர்த்ததில் கேட்டான்.

தன் கையில் உள்ள வண்டி சாவீயை காண்பித்து  ….. “ நான் வண்டியின் தான் வந்தேன் ருத்ரன் சார்.”

“ஓ…..” என்றவன்.

பின்…..“ நீ நட்புக்கு கொடுக்குற மரியாதைய பார்த்து நான் அசந்துட்டேன் கதிர்.” எந்த முகாந்தரையும் இல்லாது  சொன்னவனின் பேச்சில் கதிர் கொஞ்சம் ஆடி தான் போனான்.

“என்….ன….சொல்…றிங்க ருத்….ரன்  சா…ர்.” வார்த்தை அனைத்தும் தந்தி அடித்தது.

தன் கைக்கெடிகாரத்தில் நேரத்தை பார்த்து…..” இப்போ தான் ஆபிசில் இருந்து வந்து இருப்ப  நண்பனை வழி அனுப்ப உடனே வந்துட்டிங்கலே……அதுக்காக சொன்னேன்.”

பின் ஒரு தலையசைப்போடு வந்தவன்.பின் அதற்க்கு அடுத்து தன் வீடு வரை எதுவும் பேசாது அமைதியாக வந்தான்.

காரை விட்டு மஞ்சு இறங்கும் வேளையில் மட்டும்….. “என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குறதா இருந்தா மட்டும் இங்கு இறங்கு. இல்லேன்னா ஒரு நல்ல ஹாஸ்ட்டலா  பார்த்து நானே உன்னை சேர்த்து விட்டுடறேன்.” ருத்ரன் பேச பேச மஞ்சு கதிகலங்கி போய் விட்டாள். இது வரை அன்பு கிடைக்கவில்லை என்று மட்டுமே அவள் ஒரே எண்ணமாக இருந்தது. இப்போது பாதுகாப்பு இந்த மூணு மணிநேரத்தில் தான் இது வரை எவ்வளவு பாதுகாப்பாய் இருந்தோம் என்று அவளுக்கு தெள்ள தெளிவாய் விளங்கியது.

இப்போது இவன் என்ன சொல்கிறான் அதிர்ந்து ருத்ரனை பார்க்க…..அவள் பார்வை பாராது….. “ இப்போ நீ செஞ்ச செயலுக்கு ஆயிரம் காரணம் சொன்னாலும் தப்பு தான்.

விரும்புறது தப்புன்னு நான் சொல்ல மாட்டேன். அதுவும் இப்போ….. நீ செஞ்சது எவ்வளவு பைத்தியகாரத்தனம் இப்போவாவது உனக்கு புரிஞ்சுதா…..?

நான் ஏன் இவ்வளவு பேசுறேன்னா…..என் பாட்டி, சாரி… சாரி…. நம்ம பாட்டி இப்போ சும்மா இருக்க மாட்டாங்க. ஏதாவது பேசுவாங்க. பதிலுக்கு நான் ஏதாவது பேசுவேன். ஆ அந்த பேசுவது உன்ன பத்தி இருக்கலாம். இருக்கலாம் என்ன….?உன்னை பத்தி மட்டும் தான் இப்போ பேச்சு அங்கு ஓடும்.

நான் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், உன் முகத்த பார்த்து பேச முடியாது. உன் முகத்த என்ன….? இது வரை யார் முகத்தை பார்த்தும் நான் பேசியது கிடையாது.”

தன் நெஞ்சை தொட்டு …. “ இது சொல்படி தான் பேசுவேன்.  அது போல நான் ஏதாவது பேச….திரும்பவும் நீ பெட்டிய கட்டிட கூடாது பாரு…..”

மஞ்சுவின் முகம் கலங்குவது பார்த்து…..” ருத்ரா….. “ அதற்க்கு மேல் பேசாது , போதும், வேண்டாம் என்பது போல் தயாநிதி  ஜாடை காட்ட.

“இல்ல மாமா இப்போவே பேசிடறது  நல்லது. க்ராண்மா என்ன பேசுவாங்கன்னு உங்களுக்கே தெரியும். கண்டிப்பா அவங்கல எதிர்த்து பேசும் போது, இவ முடிவ நானே எடுக்கும் படி ஆகும். பிறகு நீ யாரு….? என் கிட்ட கேட்க கூடாதுல்ல.”

“என்ன பேச்சு ருத்ரா….?” என்று தயாநிதி கேட்பதற்க்கும், “ஏன் …அத்…தான் இப்படி பேசுறிங்க……?”

“என்ன சொன்ன ….?சொன்ன…. ?” ருத்ரன் தன் காதில் சரியாக தான் விழுந்ததா…..?என்று  பதட்டத்துடன் கேட்க.

“ஏன் இப்படி பேசு….”

“இல்ல அது இல்ல.எ…ன்ன என்…ன்ன்னு …..கூப்பிட்ட?”  ருத்ரனின் இந்த பதட்டமே, தயாநிதி அவனை கூர்ந்து கவனிக்கும் படி செய்தது.

“அத்தான்னு…..”

“ஆ ரொம்ப சந்தோஷம். அப்போ நான் உன் அத்தான்.  உன் விஷயத்தில் நான் முடிவு எடுக்கலாம்லே….”

பதில் சொல்லாது தன் தலையாட்டளின் மூலம் சம்மதம் சொல்ல.

“ வார்த்தையால் சொல்.” என்று ருதரன் சொல்ல.

“சம்மதம்…..”

“எதற்க்கு இந்த சம்மதம்….?”

தயாநிதியோ என்ன நடக்குதுடா….என்று இருவரின் உரையாடலை பார்த்திருந்தார்.

மஞ்சுவோ இவன் தானே சம்மதமுன்னு வார்த்தையில் சொல்ல சொன்னான். இப்போ என்னன்னா எதுக்கு சம்மதம் சொன்னேன்னு சொல்றான்.

ஏற்கனெவே குழப்பத்தில் இருந்த மஞ்சு திரு திரு என்று ருத்ரன் முகம் பார்க்க. ருத்ரனுக்கு மஞ்சுவின் இந்த பார்வை பாவமாக தோன….

“சரி  சரி…அத விடு. க்ராண்மா  என்ன சொன்னாலும் மனச போட்டு குழப்பிக்க கூடாது. புரியுதா…..?”

புரியுது என்று   தலையாட்ட நினைத்தவள். என்ன நினைத்தாளோ….? “புரியுது….” என்று  வார்த்தையாக சொன்னாள்.

அகிலாண்ட நாயகியே மஞ்சு இப்படி செய்வாள் என்று  நினைத்தும் பார்க்கவிலை. அவளை அந்த கண்ணோட்டத்தில் நினைத்து இருந்தாள்.

தன் பேரன் இருக்கும் வீட்டில் அவள் தங்க விட்டு இருக்க மாட்டாள். சாகருக்கு திருமணம் பேச நினைத்ததும்  கூட…

தன் பேரனின் கவனம் அவள் மீது செல்கிறதோ என்ற சந்தேகத்தில் தானே ஒழியே….மஞ்சு மீது சிறிதும் சந்தேகம் இல்லை.

இந்த பெண் இப்படி செய்தது,  அகிலாண்ட நாயகிக்கே கொஞ்சம் அதிர்ச்சி தான். அதுவும்   முகநூல் பார்த்துக் கொள்ளவில்லை. இந்த விவரம் தன் மகள் சங்கரி மதுவிடம் சேகரித்த விவரம்.

அந்த பெண்  இந்த வீட்டில் இருக்க கூடாது என்று நினைத்தாரே ஒழியே…அவள் வாழ்க்கை சீர் கெட்டு போய் விட வேண்டும் என்று அவர் நினைத்தும் பார்த்தது இல்லை.

தன்னையும் அறியாது அந்த பையன் நல்லவனா இருக்கனும் என்ற வேண்டுதலை வைத்தார்.

கதிர் போன் செய்து மஞ்சு இங்கு இருக்கா என்று சொன்னதும், யார் அந்த  பையன்….? நல்லவனா இருந்தா…..? அவனுக்கு கட்டி கொடுத்துடலாம், என்று நினைத்துக் கொண்டு இருக்க.

புதிய நபர் இல்லாது தன் மகன் பேரன் , மஞ்சு மட்டும் வருவதை பார்த்து, அவர்களுக்கு பின் தன் பார்வையை செலுத்தியவரை கண்டு கொள்ளாது.

மஞ்சுவை பார்த்து…. “போய் தூங்கு உன் ரூமுக்கு மலரம்மாவை பால் கொண்டு வந்து  கொடுக்க சொல்றேன்.” மஞ்சு சாப்பிடவில்லை என்று தெரிந்தே…. கொடுத்து அனுப்பினாலும் கண்டிப்பாக சாப்பிட மாட்டாள். அதனால் பால் மட்டும்  கொடுத்து அனுப்புகிறேன் என்று சொன்னான் ருத்ரன்.

அகிலாண்ட நாயகிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன நடக்குது…..?எதுவும் நடவாது போல் பேசும் ருத்ரனின் பேச்சில் அகிலாண்ட நாயகியே குழம்பி போனார்.

“ருத்ரா அந்த பையன் எங்கே…..?”

“எந்த பையன்…..?” ருத்ரனின் பேச்சில் பல்லை கடித்த அகிலாண்டம்…

மஞ்சுவை காண்பித்து….. “இவ……” அடுத்த வார்த்தை தன் பாட்டியைய் பேச விடாது.

“மஞ்சு உன் ரூமுக்கு தானே போக சொன்னேன்.” அவளை  அனுப்பி விட்டு தன் பாட்டியிடம் பேச நினைத்தான்.

தன் பேரனின் எண்ணம் புரிந்தவராய்……” கண்ட கண்ட இடத்துக்கு போனவ எல்லாம் இங்கு இருக்க கூடாது.”

மஞ்சுவை எங்கு இருந்து அழைத்து வந்தார்கள் என்று தெரியாது. அந்த பையனிடம் இருந்து மஞ்சுவை பிரித்து கூட்டி வந்து இருப்பார்கள் என்று நினைத்து பேச….

“க்ராண்மா….. வார்த்தைய  பார்த்து பேசுங்க.” தன் ஒரு விரல் காட்டி தன் பாட்டியிடம் கண்டிப்புடன் பேசியவன்.

அதே குரலில்…. “ நான் உன்னை உன் ரூகுக்கு போக சொன்னேன்.”

இப்போது விட்டால் இனி மஞ்சுவை வீட்டை விட்டு அனுப்புவது முடியாது. சாகரை திருமணம் செய்து அனுப்பி விடலாம் என்று  நினச்சா…இவ இந்த காரியம் செஞ்சி வைச்சி இருக்கா…

இனி இதை பத்தி பேசினா தன் மகனே…. “ கொஞ்சம் பொறுக்கலாம் என்று சொல்லி விடுவான்.

அதனால்  மஞ்சுவை பார்த்து வாசல் பக்கம் கைய்  காட்டி….. “ஊரு மேஞ்சு வந்தவளுக்கு எல்லாம் இங்கு இடம் இல்ல. இனி நீ அந்த பக்கம் தான் போகனும்.” சொல்ல.

மஞ்சுவுக்கு முகம் வெளுத்து  விட்ட்து. எங்கு வீட்டை விட்டு  அனுப்பி விடுவார்களோ என்ற பயத்தில் ருத்ரன் முகத்தை  பார்க்க….

மஞ்சுவின் பயந்த முகம் ருத்ரனின் கோபத்துக்கு இன்னும் தூபம் போட்டது போல் ஆனாது.

“க்ராண்மா போதும். இதோட நிறுத்திக்குங்க. ரொம்ப பேசிட்டிங்க.”

பேரனின் பேச்சை சட்டை செய்யாது…… “நீ இங்கு இருந்தா என் பேத்தி மதுவும் கெட்டுடுவா……”  அந்த வார்த்தை மஞ்சுவை பலமாக தாக்கியது.

என்னால் என் தங்கை கெட்டுடுவாளா….? அப்போ நான் கெட்ட பெண்ணா…..?தான் செய்த செயலின்  வீரியம் , அப்போதும் அந்த பெண்ணுக்கு தெரியவில்லை.

வாழ்க்கையில் அன்பு காட்டுவது கணவன் தான். கணவன் மனைவி உறவு தான் நிலையானது.

தாத்தா பாட்டி மீது வைத்த பாசம். மாமா அத்தை மீது வைத்த அன்பு. மறுமணம்   செய்ததும் மகளோடு கணவன் தான் முக்கியம் என்று தன்னை விட்டு போன அன்னை. இவர்களின் செயல் இதை தான் உனரவைத்தது அவளை.

அதனால் தன் மீது அன்பு காட்ட ஒருவன். அதை தான் நினைத்தாளோ ஒழியே….வேறு எண்ணம் இல்லை. அது காதலா…..?தெரியவும் இல்லை.

பாட்டியின் பேச்சில்….அப்போ நான் தப்பானவளா…..பாதுகாப்பு பற்றிய பயம் போய்…..தன்னை  பற்றிய சுயத்தில் சிந்திக்க நினைக்கும் போது……

ருத்ரன் மஞ்சுவை பார்த்து…… “வா போகலாம்” எங்கு என்று  சொல்லாது அழைக்க.

“எங்கே……எங்கே…..?”என்று  பதறி போய் கேட்டார் அகிலாண்ட நாயகி.

“ என் வீட்டுக்கு.”

“உன் வீடா…இது தானே உன் வீடு.”

“என் வீடா இருந்து இருந்தா….” மஞ்சுவை காண்பித்து…..

“ இவள் இவ்வளவு நேரம் இங்கு நின்னுட்டு இருந்து இருக்க மாட்டா.”

“இல்ல ருத்ரா……” ஏதோ பேச வந்த அகிலாண்ட நாயகியை தடுத்து….

அடுத்து என்ன சொல்வீங்க…… “ உன் கூட தனியா அனுப்ப மாட்டேன்னு……அதுக்கும் வழி செஞ்சுடுறேன்.”

புலு வருது. புலி வருது என்று நினைத்த அகிலாண்ட நாயகிக்கு, நிஜமாகவே புலி வந்து விட.

என்ன  சொல்வது…..?ஏது செய்வது….? என்று  தெரியாது…..

“எ…ன்னா ருத்ரா சொ…ல்ற…..?”

“புரியல…..உங்களுக்கு புரியலேன்னா நம்ப முடியலையே  க்ராண்மா……”

இனி தன் பேரனிடம்  பேசினால் வேலைக்கு ஆகாது  என்ரு தன் ஒட்டு மொத்த கோபத்தையும்  மருமகள் மீது திருப்பினார்.

“பார்த்தியா…?.பார்த்தியா ….?என் பேரனையே எனக்கு எதிரா திருப்பிட்டலே…. உன் மகளை உன்  கிட்ட இருந்து பிரிச்சேன்னு பழி வாங்கிட்டலே…. உன் ஓடு காலி மகளை வெச்சி என் பேரனை வளச்சி பிடிச்சி…..”

அந்த வீட்டில் வாழ வந்து மகி பதினெட்டு ஆண்டு கடந்து விட்டது. தன் மாமியாரை எதிர்த்து ஒரு வார்த்தை இது வரை பேசியது கிடையாது.

சமீபத்தியத்தில் தான் அவளின் கோபம். அதுவும் தன் கணவரிடம் மட்டுமே…..இப்படி அநியாயமாக தன் மீது பழி சுமத்தியதும் அல்லாது…..தன் மகளை  தரம் இறக்கி பேசுவதை பொறுத்து கொள்ளாது.

“போதும்….. போதும்……” மனைவியின் முகத்தை பார்த்தே….. ஏதோ பெரிய விஷயம் நடக்க போகிறது என்ற  பயத்தில்…

“மகி…..” தன் மனைவியை அடுத்து பேச தடுக்க பார்த்த கணவனை ஒரு பார்வை பார்த்தவள்.

தன் கயிற்றில் உள்ள தாலி ஜயினை காண்பித்து….. “ இதுக்காக இவ்வளவு வருஷம் இருந்துட்டேன். இனி என் பெண் வாழ்க்கைக்காக இருக்க போறேன். அதுக்கு தடையா……” அதற்க்கு மேல் எந்த வார்த்தையும் சொல்லாது தாலி கயிற்றையும், தன் கணவனையும் ,மாறி ….மாறி…. பார்த்தாள்.

மகியை   நோக்கி வந்த தயாநிதி அப்படியே நின்று  விட்டார். தன் மனைவியிடம் இப்படி ஒரு பேச்சி வரும் என்று அவர் நினைத்தும் பார்க்க வில்லை.

மகனின் அதிர்ந்த தோற்றத்தை பார்த்து…… “அருத்துட்டு இருந்தவ கழுத்துல ……”

“பாட்டீடீடீ……” கத்தியது ருத்ரனோ…. மதுவோ….. கிடையாது. மஞ்சுளா தேவி

இது வரை தன் அன்னையிடம்  அவள் பேசவில்லை. பேச்சு என்ன நேருக்கு நேர் கூட அவரை  பார்க்க மாட்டாள். ஆனால் அம்மாவை அருத்துட்டு….அந்த வார்த்தை  அவளால் கேட்க கூட முடியவில்லை.

என்ன வார்த்தை அது…சே…..வெறுத்து போய் விட்டது.

“என்னடீ….என்ன என்னையே பாத்து கத்துற….ஒன்ட இடம் கொடுத்தா….. தனக்கே சொந்தம் ஆக்கி பாத்துக்குமா…அது போல் இருக்கு….. இங்கு நடப்பது.”

“பாட்டி  நான் கத்துனது தப்பு தான். ஆனா அவங்கல….அப்படி பேசாதிங்க. நான் போகனும் அவ்வளவு தானே….”

மஞ்சுவுக்கு அதரவாய்…நான் தான் பேசியாக வேண்டும் என்று நினைத்துவனுக்கு, தன் அத்தையின் புதிய பரிமானத்திலேயே அதிர்ச்சி உற்றவன்…

மஞ்சுவின் பேச்சில் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டான். அதனால்  குறுக்கிடாது கேட்டுக் கொண்டு இருந்தவன்.

மஞ்சு பேச்சு வேறு திசையில் செல்வதை பார்த்து…… “அது தான் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் வா…….”

இப்போது பேச்சில் மட்டும் அல்லாது மஞ்சுவின் கை பிடித்தும் தன் செயலின் காரணத்தை அனைவருக்கு உணர்த்தினான்.

 

Advertisement