Advertisement

அத்தியாயம்—-21

தேவி மெசஞ்சரில்….. “நான் வீட்டை விட்டு வந்துட்டேன். இப்போ சென்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கிறேன். வா…..” என்றதிலேயே கதிர் ஆடி போய் விட்டான்.

விரும்புகிறான் உண்மையே…ஆனால் ஓடி வந்து கல்யாணம். அதுவும் வந்துட்டேன் வா…. என்ன மாதிரி பொண்ணு.அறிவானவள் என்று நினைத்திருந்தவளின் இந்த செய்கை. அவனை நிலை கொலைய வைத்தது.

விரும்புகிறான். ஆனால் அடுத்த கல்யாணம் அதை நினைத்து கூட பார்த்தது இல்லை. அதற்க்காக தேவியை ஏமாற்ற வேண்டும் என்ற  எண்ணம் இல்லை. முன்னுக்கு வர வேண்டும்.

ஆபிஸ் அருகில் செகன்டில் ஒரு  ப்ளாட் விலை பேசிக் கொண்டு இருக்கிறான். அதை வாங்கினாலும் அம்மா அங்கு வர மாட்டார்.

இருந்தாலும் அம்மாவுக்கு மகன் நல்ல நிலைக்கு வருகிறான் என்றால் பெருமை தானே…..

சுகமே அனுபவிக்காத தன் அம்மாவுக்கு, இந்த மகிழ்ச்சியாவது கொடுக்க வேண்டும். லோன் போட்டு வாங்கினால் சம்பளத்தில் பாதி பிடித்து கொள்வார்கள்.

அடுத்த ப்ரமோஷம் அவனுக்கு T.L  லாக உள்ளான். அப்போது சம்பளம் கணிச்சமாக ஏறும். இப்படி இவன் தன் எதிர்காலத்தை திட்டமிட்டான்.

ஆனால் அதில் திருமணம் எப்போது….? அவன் யோசிக்கவும் இல்லை. இந்த பெண் என்ன பைத்தியக்காரி போல் அடித்து பிடித்து ஓடி போனவனுக்கு, அவ்வளவு பெரிய  ரயில்வே ஸ்டேஷனில் தெரிந்த முகத்தை தேடுவதே பெரிய விஷயம். இதில் தெரியாத முகத்தை…..

“எங்கு இருக்க…..?” மொட்டையாக டைப் செய்ய…..அடுத்து ஒன்பதாவது மேடையில் இருக்கேன்.

மூச்சு இறைக்க ஓடி போனதில் கொஞ்சம் தண்ணீர் குடித்தால் நன்றாக தான் இருக்கும். முதலில் தேவியை வீட்டுக்கு அனுப்பி விட்டு தான்.

சுற்றி முற்றி பார்த்ததில் எல்லோ சுடி போட்ட ஒரு பெண், துப்பாட்டாவினால் தலையை சுற்றிக் கொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்து விரைந்த அவன் கால், நெருங்க நெருங்க தன்னால் வேகம் குறைந்தது.

மஞ்சு ஏன் இங்கு இருக்கா…..?தேவியாக மஞ்சு இருப்பாளா ….?சின்ன சந்தேகம் கூட அவனுக்கு எழவில்லை.

அப்போதும் தேவி எங்கு என்று  பார்த்தவன். மஞ்சு முன் எப்படி தேவியிடம்  பேசுவது…..? தேவி எங்கு இருக்கான்னு கேட்ட பின் ….அவளை வெளியே  வரவழைத்து பேசி வீட்டுக்கு அனுப்பி விட்டு…

இந்த மஞ்சு இங்கு என்ன செய்யறான்னு கேட்கனும். எல்லாம் லூசா இருக்குங்க. தலையில் அடித்துக் கொண்டே….

“ நீ சொன்ன ஒன்பதாவது மேடைக்கு வந்துட்டேன். எங்கு இருக்க…..?”

“புக் ஷாப் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் உட்கார்ந்து இருக்கேன்.”

புக் ஷாப் எங்குன்னு பாக்க. அவன் அதன் பக்கத்தில் தான் நின்றுக் கொண்டு இருந்தான். எங்கே பார்த்தவன். எங்கு மஞ்சு பார்த்து விட போகிறாளோ என்ற பதட்டத்தில், அவளை பார்த்துக் கொண்டே….

“ நீ இல்லையே…..” என்று டைப் பண்ண.

மஞ்சுவும்  தன் கைய்பேசியில் பதட்டத்துடன் ஏதோ டைப் செய்வதை பார்த்து சிந்தனையுடன்….”நீ என்ன கலர் ட்ரஸ் போட்டு இருக்க….” இந்த ஆறு வார்த்தை அடிப்பதற்க்குள் உள்ளங்கை  வேர்த்து கொட்ட….விரல் நடுக்கத்தில் தப்பு தவறுமாய் அடித்து, மீண்டும் சரி செய்து அனுப்பியவனுக்கு பெறுடியாய்….”எல்லோ கலர் சுடி போட்டு இருக்கேன்.” என்று டைப் செய்துக் கொண்டே மஞ்சு  தலைமூடி இருந்த துப்பாட்டாவை விளக்கி திரும்பி பார்த்தவளின் கண்ணுக்கு மாட்டாது நின்ற இடத்தில் அமர்ந்துக் கொண்டான்.

என்ன…..என்ன ஆச்சி….?எப்படி…..?பதில் இல்லை. இனி என்ன செய்வது…..? மூளை வேலை செய்ய மறுத்தது. ஒரு நாளுக்கு எத்தனை அதிர்ச்சி தான் அதுவும் தாங்கும்.

எதாவது செய்தாக வேண்டும். அவனால் மஞ்சுவை அது மாதிரி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தேவியிடம் இப்போது வீட்டிக்கு போ….என்று அனுப்பி விட நினைத்தாலும், கைவிட நினைக்கவில்லை.

தன்நிலை சொல்லி புரியவைத்து, தேவை என்றால் அவள் வீட்டில் பேசி இப்படி நினைத்தவனுக்கு, தேவி தான் மஞ்சு என்றதும், அவன் கனவு சுத்தமாக வடிந்து விட்டது.

யோசி..யோசி….எதாவது யோசி. ஸ்தம்பித்த  மூளை பின், அதிவேகமாய்….கைய்பேசியில்…..மனசாட்சி உறுத்த…… “முகநூலில் நான் கடலை போட்ட பெண்ணு எல்லாம் நான் கூட்டி போனால்….என் வீடு தாங்காது யம்மா…..” அனுப்பி விட்டு,

கடையில் எந்த  செய்தி தாள் என்று கூட பார்க்காது ஒன்றை வாங்கி எழுந்து நின்று கடையின் பின் பக்கம் தன் உருவத்தை  மறைத்து செய்தி தாளில் தன் முகத்தை புதைத்து, மஞ்சுவின் எதிர் வினை பார்க்க,

அவன் எதிர் பார்த்தது போல் அதிர்ந்து….தான் சரியாக தான் படிக்கிறோமா……மீண்டும், மீண்டும், மஞ்சு அந்த மெசஜை படிப்பதை பார்த்து…

“மன்னிச்சிக்க மஞ்சு. நானே உன்னை இப்படி கஷ்டப்படுத்துவேன்னு நினச்சி பாக்கல. ஆனா இப்போ கஷ்டமா இருந்தாலும், பின் நீ நல்லா இருப்ப.

என்னால உன்ன அந்த மாதிரி நினச்சி கூட பாக்க முடியாது மஞ்சு. நீயும் ஓவியன் நான் தான்னு தெரிஞ்சா…..வேண்டாம் மஞ்சு. நம் நட்பு கலங்கப்பட்டது என்னோட போகட்டும். என்னாலும் நான் தான் ஓவியனுக்கு உனக்கு தெரியவே கூடாது.

நட்பில் அனைத்தும் பகிர்ந்துக் கொண்ட கதிர், மஞ்சு, தங்கள் காதலை பற்றி பேசாது தவறு செய்தார்கள் என்றால், காதல் என்று தேவி ஓவியனாய் அறிமுகமாகியவர்கள் ஒன்றும் அறியாது நட்புக்கு கலங்கம் வரவழைத்து விட்டனர்.

“என்ன….சொல்றிங்க…..?” கண்ணீர் வடிவதை துடைத்துக் கொண்டே மஞ்சு டைப் செய்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டே,

“இன்னுமா புரியல, நான் டைம் பாஸா தான் உன் கிட்ட பழகினேன். இத போய் சீரியஸா, அய்யோ…அய்யோ நல்ல வேல நான் கொஞ்சம் நல்லவன் என்பதால  இப்போவாவது உண்மைய சொல்லிட்டேன்.

வேறு யாராவது….பார்த்து பத்திரமா வீடு போய் சேரு….”

அதற்க்கு மேல் டைப் செய்ய அவன் மனம் இடம் கொடுக்க வில்லை. அவள் நல்லதுக்கு என்றாலும், மஞ்சுவை இது மாதிரி…..

மஞ்சுவுக்கோ முதலில் வந்த அழுகை இப்போது சுத்தமாக வரவில்லை. இவன் என்ன சொல்கிறான். நான் இப்போவாவது சொன்னேன். மத்தவங்க…..அதை நினைத்து இப்போது துக்கத்தோடு பயம்…பயம் பயம் மட்டுமே….

ஜனநடமாட்டம் அதிகம் இருந்தாலும், தான் மட்டும் தனித்து இருப்பது போல் ஒரு மாயைய். கைய் நடுங்க தான் கொண்டு வந்த சூட் கேசை  கூட எடுக்காது தான் அமர்ந்து இருந்த இருக்கையை விட்டு கொஞ்சம் தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

இது வரை தெரியாத  அந்த இருட்டு,இப்போது பயம் கொள்ள வைத்தது.  அன்பு …அன்பு….அந்த ஒன்றை தேடி எந்த மாதிரி மாட்டிக் கொண்டோம். தனிமை அவளுக்கு பழக்கமான ஒன்று தான்.

ஆனால் இது போல் ஒரு சூழ்நிலை அவளுக்கு வந்தது கிடையாது. தாத்தா வீட்டிலும் , விடுதியிலும், தயாப்பா வீட்டிலும், அய்யோ அப்போது தான் தன் முட்டாள் தனம் உரைத்தது. இது வரை பாதுகாப்பான கூட்டில் இருந்தது. யாரும் அவளை தப்பான பார்வை பார்க்கவில்லையே……

இங்கு வந்ததில் இருந்து ஓவியன் சீக்கிரம் வர வேண்டும். இது மட்டுமே அவளின் கவலையாக இருந்தது.

அதனால் சுற்றி முற்றை பார்த்தாலும், கண்ட காட்சி மனதில் பதியாது போனது.இப்போது அனைவரும் தன்னையே பார்ப்பது போல் . அது தன் பிரம்மமையா…..அவள் நினைக்கும் போதே,

மஞ்சு இரு பெட்டியோடு வந்ததில் இருந்து மூன்று ஜோடி  கண்கள் மஞ்சுவையே வெறித்து பார்த்து இருந்த்து. அவள் பெட்டியை விட்டு வேறு பக்கம் அமர்ந்ததும் அவர்களும் அவள் பக்கத்தில் நின்று நோட்டம் விட  தொடங்கினர்.

ஓ வீட்டை விட்டு வந்த கேசு,  ஈஸியா நம்ம இடத்துக்கு நகர்த்தி கொண்டு போய் விடலாம், என்று நினைத்து அவள் அருகில் செல்லும் போது,

மஞ்சுவுக்கு  அதிர்ச்சி போக சிறிது நேரம் கொடுத்த கதிரின் கண்ணுக்கு, அந்த மூவரின் பார்வையும் தப்பவில்லை.அவர்கள் மஞ்சுவின் அருகில் செல்வதை பார்த்து….

“ என்ன மஞ்சு இங்கே……?”

“ஆ…” என்ன சொல்வது என்று அவள் யோசிக்கும் போதே….

“யாரையாவது வழி அனுப்ப வந்தியா…..?”

“ஆ …ஆ அது தான். அது தான்.”

மஞ்சுவுக்கு அந்த சமயத்தில் கதிரை  பார்த்தது, ஏதோ தெய்வத்தை பார்த்தது போல் இருந்தது. எப்போதும் கை தொடாது தான் மஞ்சு கதிரிடம் பேசுவாள்.

இப்போது தன் கைய் நடுக்கத்தை தவிர்க்க. கதிரின் கையை ஆதாரவாக பற்றிக் கொண்டான்.

முதல் போல் இருந்தால் கதிர் மஞ்சுவை தன் தோளிலேயே சாய்த்து அவள் பயத்தை போக்கி இருப்பான். ஆனால் இப்போது….நட்புக்கு துரோகம் செய்து விட்டோம் என்ற குற்றவுணர்ச்சியில், எதுவும் சொல்லாது அமர்ந்து இருந்தவன்.

பின்…. “ஒரு போன் பண்ணிட்டு வந்துடுறேன் மஞ்சு.” என்று  சொல்லியும் கைய் விடாது இருப்பவளிடம்… “ஒரு நிமிஷம்.” என்று சொல்லி அவள் கைய் பிரித்து எடுத்தவன், கொஞ்சம் தள்ளி சென்று ருத்ரனுக்கு அழைப்பு விடுத்து…. “மஞ்சு இங்கு இருக்கா….” வேறு எதுவும்  சொல்லாது மஞ்சுவின் அருகில் அமர்ந்துக் கொண்டவன் அதற்க்கு மேல் மஞ்சுவிடம் எதுவும் பேசவில்லை.

சீக்கிரம் ருத்ரன் சாரிடம் இவளை ஒப்படைத்து விட  வேண்டும். இது மட்டுகே அவன் எண்ணமாக இருந்தது.

கதிர் கணக்கிட்ட நேரத்தை விட மிக விரைவிலேயே அங்கு வந்தவனை பார்த்து ஒரு நிமிடம் ஆசுவாசம் அடைந்தவனுக்கு,  ருத்ரனையும், அவன் அருகில் நடந்து வந்த தயாநிதியையும் பார்க்க ஏதோ தடுத்தது.

ருத்ரன் பார்வை மொத்தமும் மஞ்சு மஞ்சுவிடம் மட்டுமே…..குனிந்த தலை நிமிராது அமர்ந்து இருந்தவளின் அருகில் இருவர் நிற்பதை பார்த்து வெட வெடத்து…..

கதிரை பார்க்க….அப்போது தான் அவனும் நிற்பது தெரிய….யார் என்று நிமிர்ந்து பார்வை செலுத்தயவளின் கண்ணுக்கு, ருத்ரனும், தயாநிதியும் மங்களாக  தெரிந்தனர்.

வெட வெடத்து எழுந்து நின்றவளின் கண்ணையே சிறிது நேரம் பார்த்தவன், அவளிடம் ஒன்றும் பேசாது கதிரை பார்த்தான்.

கதிருக்கு ருத்ரனையும், தயாநிதியையும் நேர்க் கொண்டு பார்க்க முடியவில்லை. அதுவும் தயாநிதியை தன் அன்னைக்கு ஆதாரவு அளித்தவர். தனக்கு கல்வி கொடுத்தவர்.

இதற்க்கு பதிலாய்  நான் அவருக்கு துரோகத்தை பரிசளித்து இருக்கிறேன். தெரிய கூடாது. தெரிய விட மாட்டேன்.

தன்னையே குறு  குறு என்று பார்த்துக் கொண்டு இருக்கும் ருத்ரனிடம்…

“என் பிரண்ட் ஊருக்கு போகிறான். அவனை வழியனுப்ப வந்தேன்.” ருத்ரன் கேட்காத கேள்விக்கு பதில்  அளித்தவனிடம்,

“அனுப்பிட்டியா….?”

“ஆ….” ருத்ரன் என்ன கேட்கிறான் என்று  புரியாது திரும்ப கேட்டவனிடம்,

“உன் பிரண்ட வழியனுப்பிட்டியா…..?

“ஆ போயாச்சி…..” சொல்லி சமாளித்தான்.

கதிரிடம் பேசிய ருத்ரனின் பார்வை, அந்த இடத்தை சுற்றி வலம் வந்தது. அந்த இடம் வெளி ஊர் செல்வதற்க்கான இரயில் நிற்க்கும் மேடை  இல்லை.

எதுவும் நடக்காது  போல்….மஞ்சுவிடம்…..” வீட்டுக்கு போகலாமா…..?”

“ஆ…..வீட்டுக்கா…..?” ஏற்கனவே அகிலாண்ட நாயகி மஞ்சுவை பார்த்தால் பிடிக்காது. இப்போது வீட்டில் சேர்த்துக் கொள்வார்களா…..?

அன்பு காட்டவில்லை என்பது போய் தனக்கு இனி தங்க இடம் இல்லாது போய் விடுமோ என்ற பயம் பற்றிக் கொண்டது மஞ்சுவின் மனதில்,

“வீட்டுக்கு தான். ஏன் யாராவது வர வேண்டுமா…..?” ருத்ரன் பேச்சில் நக்கல் இருந்ததோ….?

அவசரமாக இல்லை என்று  அவள் தலையாட்டியவளிடம், “அப்போ வீட்டுக்கு தான் போய் ஆக வேண்டும். இங்கேயே தங்க முடியாதுலே அதான்.”  சந்தேகமே இல்லை நக்கல் தான்.

ருத்ரனை கோபமாக  பேசி பார்த்து இருக்கிறாள். பின் அவளிடம் அன்பு என்பதை விட, அக்கறை அவளிடம் அவன் பேச்சும் பேச்சில் அக்கறை இருக்கும். ஆனால் இது போல்….ஏனோ அவன் குரல் ஒரு மாதிரி…..

அவளின் ஆராய்ச்சி தொடர விடாது…. “போகலாமா…..?”

“ம்….” என்று ருத்ரனிடம் பதில் சொன்னவள், தயக்கத்துடன் தயாநிதியைய் பார்க்க.

வந்தது முதல் மஞ்சுவை மட்டுமே பார்த்திருந்த தயாநிதி, மஞ்சு தன்னை பார்த்ததும் தன் இரு கைய் விரித்து அவளை அழைக்க.

“அப்பா…..தப்புப்பா. நான் தப்பு பண்ணிட்டேன்பா. என்ன மன்னிச்சிக்குங்கப்பா….”

ஒரு தடவை தன்னை அப்பா என்று  அழைக்க மாட்டாளா…..என்று ஏங்கியவருக்கு, இன்று காதில் வார்த்தைக்கு வார்த்தை அப்பா போட்டு அழைக்கும் மகளை,  தன் இரு கைய் கொண்டு அணைத்துக் கொண்டவர்….

“தப்பு எல்லார் பேரிலும் தாம்மா இருக்கு. நான் உங்க அம்மாவ உன் கிட்ட இருந்து பிரிச்சி பெரிய தப்பு பண்ணிட்டேன். இந்த பாவத்த நான் அனுபவிச்சி தானே ஆகனும்.” என்று பாவமன்னிப்பு போல் பேசியவர்,

“பயந்துட்டேன் மஞ்சு ரொம்ப பயந்துட்டேன்.” தன் தந்தையின் மார்பில் சாய்ந்து இருந்தவளுக்கு, அவரின் இருதயம் பலமாக துடிப்பது அவளுக்கு நன்கு கேட்டது.

பயந்து போய் தயாநிதியின் முகத்தை பார்த்த மஞ்சுவின் முகத்தை தன் நெஞ்சினில்  அழுத்திக் கொண்டவர்…

“பயப்படாதேம்மா எனக்கு ஒன்னும் ஆகாது. உன்னையும், உன் தங்கையையும் ஒருவன் கையில் கொடுக்காது ,அந்த எமனே வந்தாலும் போக மாட்டேன்.”

அவர்களின் பேச்சை இடையிடாது பார்த்துக் கொண்டு இருந்த ருத்ரனின் கைய்பேசியில் வந்த சத்தத்தில் அவர்களை விட்டு தள்ளி வந்தவன், தனக்கு வந்த தகவலை படித்தவனின் முகம் முழுவதும் குழப்ப ரேகைகள்.

அதில்….கதிரோவியனின் முகநூல் பக்கத்தின் முழுவிவரம் இடம் பெற்று இருந்தது.

 

Advertisement