Advertisement

அத்தியாயம்—-20

“கதிர் நம்ம …..” தன் அன்னை பேச்சை காதில் வாங்காது, கைய்பேசியில் குறுஞ்சேதி….அனுப்பிய வாறே…

“அம்மா நான் அவசரமா வெளியில் போறேன்….எதுன்னாலும் வந்து பேச்சிக்கிறேன்.” தன் அன்னையின் பேச்சை காதில் வாங்காது மீண்டும் மீண்டும் மெசஜை தட்டி விட்டவனுக்கு, பதில் அவனுக்கு சாதகமாய் இல்லாது போக…

பதட்ட்த்துடன்  தன் புல்லட்டின் சாவீ கையில் எடுத்தவனிடம்  மீண்டும்….. “கதிர் நம்ம மஞ்….”

“அம்மா எதுன்னாலும் நான் வந்து பேசிக்கிறேன்னு சொல்றேன்லே…..” வார்த்தையை கடித்து துப்பினான்.

கதிரின் பேச்சில் மறுவார்த்தை பேசாது அப்படியே நின்று விட்டார் மலரம்மா.

தன் தாயை கடிந்தது கூட உணராது  தன் வண்டியின் வேகத்தை கூட்டி பறந்தான் கதிர்.

மலரம்மாவும் அப்படியே நின்றது  சில நொடி தான்.இது வரை கதிர் தன் அம்மாவை கடிந்து ஒரு வார்த்தை பேசியது இல்லை. தந்தை இல்லாது தன் அம்மா தன்னை ஆளாக்க பட்ட கஷ்ட்டத்தை அவன் அறிந்தவன்.

எப்போதும்  கடிந்து பேசாத மகன் இன்று பேசியிருக்கிறான் என்றால், வேலையில் என்ன பிரச்சனையோ ….இது தான் யோசித்தார் மலரம்மா.

பின் ஏதோ நினைவு வந்தவராய் மீண்டும் பெரிய வீட்டை நோக்கி தன் கால் சென்றது.

ருத்ரன்  சொல்லி தான் மலரம்மா தன் மகனிட பேச வந்தது. எப்போதும் வேலையாள் முன் வீட்டு விஷயம் பேசக்கூடாது என்று கொள்கை வைத்திருக்கும் அகிலாண்ட நாயகி பெரும் குரல் எடுத்து பேச ஆராம்பித்ததும் ….

கைபேசியில்   யார் யாருக்கோ அழைப்பு விடுத்து  இருந்த ருத்ரன்….வேலையாள் அனைவரையும்  அவர்கள் தங்கும் கெஸ்ட் அவுஸை தன் ஒற்றை விரலை காட்டி போகும் மாறு சைகை செய்தான்.

அங்கு வேலை செய்யும் அனைவரும் அவன் முகத்தை பார்க்க கூட பயந்தனர். ஏற்கனவே முரட்டு தோற்றம் உடையவன் ருத்ரன் மூர்த்தி. இப்போது அசல் ருத்ர மூர்த்தியாகவே காட்சி அளித்தான்.

பத்து நிமிடம் முன் தான் வீட்டுக்கு  வரவே பிடிக்காது வந்தான். காலையில் இருந்து…ஏதோ நடக்க இருக்கிறது என்று அவன் மனது சொல்லிக் கொண்டே இருந்தது.

அது தான் நடந்து விட்டதே…அத்தை சாகர் வீட்டுக்கு என்னை போக சொல்றாங்க. பேசனும் வீட்டில் பேசனும், எப்படி பேசுவது என்று தான் தெரியவில்லை.

ஆம் காலம் கடந்து தான் அவன் மனம் அவனுக்கு உணர்தியது, அதுவும் மகி அத்தை …. “மஞ்சுவுக்கு சீக்கிரம் கல்யாணத்தை பண்ணி இந்த வீட்டை விட்டு அனுப்பிடலாம்.” என்ற வார்த்தை,

“ இந்த வீட்டை விட்டு அனுப்ப இவங்க யார்……? இப்படி இவன் எண்ணம் ஓடும் போதே….

அவளுக்கு திருமணம் ஆனால்  போக வேண்டியது தானே…..தடுக்க நான் யார்…..? என்ற எண்ணம் வந்த உடன். கல்யாணம் ஆனதும்  அவளின் அனைத்து உரிமையும் அவள் கணவனுக்கு, அந்த உண்மை ஏற்க அவன் மனது முரண்டு பிடித்தது.

அவனுக்கே அவனை  நினைத்து ஆச்சரியம். இந்த வீட்டுக்கு அவள் வந்து மூன்று வருடம் ஆகிறது. இதில் பாதி நாள் வெளிநாட்டு வாசம்.

உள்நாட்டில் இருந்தாலும் அவளிடம் அதிகம் பேசியது இல்லை.

பேச நினைத்ததும் அவளுடைய நன்மைக்கு என்று அவளை  அழைத்து பேசிய பேச்சு தான். இதில் எந்த இடத்தில் என் மனது அவளிடம் சாய்ந்தது. அவனுக்கே தெரியவில்லை.

ஆனால் மொத்ததில் சாய்ந்து  விட்டது. எப்படி….?எதனால்….?என்பதை அவளை திருமணம் செய்து கொண்டு ஆராயலாம். முடிவு எடுத்தவனுக்கு வீட்டில் பேசுவது என்பது பெரிய விஷயம் இல்லை.

அவன் கவலை எல்லாம் அவன் மாமா, மஞ்சு. சின்ன பெண்ணிடம் எப்படி இது பற்றி பேசுவது அவன் வயது அவனை  தடுத்தது.

ஆனால் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு வீடு வந்தவனுக்கு, மதுவிடம்  மாமா ஏதோ கத்தி பேசிக் கொண்டு இருப்பதும் ,அத்தை அழுவதும், அதை தன் அன்னை துடைத்து விடுவதும் கண்ணில் பட்ட்து என்றால், பாட்டி…..

ஷோபாவில் கை கட்டி இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் தெரிந்துக் கொண்டான், இது மஞ்சுவை பற்றி விஷயம் என்று…

விரைந்து தயாநிதியிடம்  சென்றவன்….”மாமா என்ன பிரச்சனை…..?” என்று கேட்டுக் கொண்டே மஞ்சுவை அவன் கண் தேடியது.

“மஞ்சு வீட்டில் இல்லை.” மஞ்சு வீட்டை விட்டு சென்றதை தயாநிதி இப்படி தான் சொன்னார்.

ஆனால் அகிலாண்ட நாயகி….. “அத சரியா சொல் தயா. வீட்டை விட்டி போயிட்டா…..இல்ல. இல்ல .போயிட்டா.” என்று சொன்னதும்,

“க்ராண்மா….”  வீடே அதிரும் படி கத்தினான்.

இந்த கத்தல் மஞ்சு தன் மனதில் புகுந்ததை அறிந்தவன் கத்தல் இல்லை. அறியாது இருந்தாலும் இப்படி தான் சத்தம் போட்டு இருப்பான்.

“என்ன பேச்சு….உங்க வயசுக்கு ஏத்த மாதிரி பேசுங்க.” விட்டால் அதற்க்கு மேல் தன் பாட்டியை என்ன சொல்லி திட்டி இருப்பானோ,

தயாநிதி அவன் தோள் மீது கை வைத்து தனியே அழைத்து  சென்றவன்.

ஏதோ பேச வாய் திறந்தவர் அது முடியாது அவன் தோள் மீது சாய்ந்து கதிரி விட்டார்.

மாமாவா அழுவது அவனால் நம்ப முடியவில்லை. எப்போதும் கம்பீரத்தோடு தன் ரோல் மாடல். சின்ன வயதில் மத்தவங்க எல்லாம் ஒவ்வொரு நடிகன் தோற்றத்தில் கவரப்பட்டனர் என்றால், ருத்ர மூர்த்தியின் ஹீரோ, தன் மாமா தான்.

தன் மாமாவின் அழுகை நம்ப முடியாது பார்த்திருந்தான். தன் தோள் மீது சாய்ந்து அழுகும் தன் மாமானை சமாதப்படுத்த கூட அவனால் முடியவில்லை.

பின் தன்னை நிலைப்படுத்தியவனாய்…..” மாமா மாமா என்ன ஆச்சி…..?”

மஞ்சுவை பற்றியது தெரிந்துக் கொள்ள துடித்த அதே நொடி, வேண்டாம் மாமா எதுவும் சொல்லிடாதிங்க, என்றும் மனம் அடித்துக் கொண்டது.

எப்போதும் தெளிவாய் யோசிக்கும் மனது, மஞ்சு விஷயத்தில் குழம்பி போய் தவித்தது….

“மது என்ன என்னவோ சொல்றாடா…..மஞ்சு ஏதோ பேஸ்  புக்குல ஓவியன்.”அவரால் தொடர்ந்தார் போல் பேச முடியவில்லை.

தான் சந்தேக்கப்பது. அப்போதே விசாரித்து இருக்க வேண்டும். தவறு  என் மீதும் இருக்கு.

தப்பான இடத்தில் மாட்டிக் கொள்ள  கூடாது.

இது போல் முகநூலால்  மாட்டிக் கொண்ட பெண்களின் நிலை ஏனோ நேரம் காலம் தெரியாது நினைவு அடுக்கில் வந்து போனது.

அவனுக்கு பதட்டம் தான். ஆனால் இது பதட்ட பட வேண்டிய நேரம் இல்லை. அமைதியாக யோசித்தால் தான் பிரச்சனையின் தீர்வு கிடைக்கும், என்ன தான் மூளையின் படி செயல் பட வேண்டும் என்று யோசித்து மலரம்மாவை மட்டும் அழைத்து…

ஏதோ பேச வந்தவனிடம்…

“எனக்கு தெரியும் தம்பி மஞ்சுவை பத்தி, ரொம்ப நல்ல பொண்ணு.”

“ம்…” என்றவன். பின்…. “கதிரு கிட்ட இது பத்தி மஞ்சு ஏதாவது சொன்னாளான்னு கேளுங்க.” என்று மலரம்மாவை கதிருடன் பேச அனுப்பி வைத்தது  ருத்ரன் தான்.

இப்போது அந்த தம்பி இடம் என்னன்னு சொல்வது….? என்று தயக்கத்தோடு தான் பெரிய வீட்டுக்கு சென்றது.

மதுவிடம் பேசிக் கொண்டு  இருந்த ருத்ரன், மலரம்மாவை பார்த்த்தும் தெரிந்ததா…..? என்பது போல் அவரை பார்க்க.

மலரம்மா இல்லை என்பது போல் ஜாடை காட்டியதும், ஒரு நிமிடம் சோர்ந்தாலும், மதுவிடம்…

“சொல்…உனக்கு தெரியாம மஞ்சு ஏதும் செய்ய மாட்டா…..”

அரை மணிநேரமாக தன் தந்தை இதையே தான் கேட்டுக் கொண்டு இருந்தார்.உன்னுடம் டான்ஸ் க்ளாஸ் வந்தவ எங்கு போனா…? உனக்கு தெரியாம இருக்காது.” இப்படி பலவகையாக மாற்றி கேட்டும் மதுவின் பதில் ….

“எனக்கு தெரியாது.” என்பதே…

ஆனால் ருத்ரனுக்கு தெரியும். மதுவுக்கு தெரியாது  பெட்டியோடு மஞ்சு வீட்டை விட்டு சென்று இருக்க முடியாது என்று…

எப்படி கேட்டும் மது சொல்லாமல் போக, எப்போதும் கோபத்தை கூட காட்டாது தன் மாமன் மகள் ஓங்கு ஒரு அரைவிட்டான்.

இது வரை கை கட்டி ஏதோ நாடகத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு இருந்த அகிலாண்ட நாயகி….

“ஏன்டா அவ திமிரு எடுத்து ஓடி போனதுக்கு, என் பேத்திய அடிப்பியா…..?”

ருத்ரனுக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு ஆக்ரோஷம் வந்ததோ…..

“அவ போனது திமிரு எடுத்ததால் இல்ல. மத்தவங்களோட அப்பட்டமான சுயநலம் தான். அவள் இப்படி பட்ட ஒரு முடிவு எடுத்து இருக்கா…

மாமா அத்தைய விரும்புனா…. குழந்தையோட ஏத்துக்குற பக்குவம் இருந்து இருந்தா மட்டுமே, நீங்க அவங்க கல்யாணம் நடத்தி வைத்து இருக்கனும். ஆனா நீங்க…..சே……”

அகிலாண்ட நாயகியை பார்த்து பேசிக் கொண்டு இருந்த ருத்ரன் கடைசியா “ சே…. ருத்ரன் சுழித்த முக சுழிப்பில்….

“ருத்ரா…..”

“வேண்டாம் என் கிட்ட எதுவும் பேச வேண்டாம். இந்த வயசுலேயும் உங்க மக உங்க அருகிலேயே இருக்கனும். ஆனா ஒரு குழந்தை அவ அம்மா கிட்ட இருக்க கூடாது.

இது என்ன நியாயம்……? அத்தை இந்த வீட்டுக்கு வந்த உடனே….எங்க அம்மாவ காமிச்சி, இங்க ஏன் இங்கு இருக்கனும் என்று கேட்டு இருந்தா ….?நீங்க என்ன செய்து இருப்பிங்க….

அவங்க தப்பு பண்ணிட்டாங்க செஞ்சி இருக்கனும். அப்போ தான் நீங்க உணர்ந்து இருப்பிங்க.  

இந்த காலத்துல ரொம்ப நல்லவாங்கலாவும் இருக்க கூடாது. அப்படி இருந்தா பெத்த பெண்ணுக்குமே  நாம கெட்டவங்கலா தான் தெரிவோம்.”

மேலும் என்ன பேசி இருப்பானோ அதற்க்குள்  அவன் கைய்பேசியில் இருந்து அவனுக்கு அழைப்பு வர.

தான் எதிர் பார்த்த எண்ணில் இருந்து வராது சோர்த்து போனாலும், அந்த அழைப்பை எடுத்தவனிடம்…

“எங்கே கதிர்….?” பதட்டம், மகிழ்ச்சி, என்ன என்று சொல்ல முடியாத உணர்ச்சியில் கேட்டவனிடம், அந்த பக்கம் என்ன சொல்ல பட்டதோ….

“ நான் வரும் வரைக்கும் அங்கேயே இரு. எங்கும் போயிடாதே…” அழுத்தி சொன்னவன்,  யாரிடமும் எதுவும் சொல்லாது போக பார்த்தவனிடம்…

“ருத்ரா மஞ்சுவ பத்தியா ….?”

“ஆமாம் மாமா.” என்று சொன்னவன், என்ன நினைத்தானோ…

“மாமா நீங்களும் வாங்க.” என்று அவரையும் அழைக்க.

மகேஸ்வரி கைய் பிசைந்த வாரே… “தம்பி நானும் வர்றேன்.”  கெஞ்சும் அத்தையை பார்க்க ருத்ரனுக்கு பாவமாக தான் இருந்தது.

ஆனால்  எல்லா வற்றையும் விட இப்போது அவனுக்கு மஞ்சு தான் முக்கியம். அதனால் நிர்தாட்சணியமாக….. “ வேண்டாம் அத்த உங்கல பார்த்து  ….” முழு வார்த்தை சொல்லாது பாதியில் நிறுத்தியவன், என்ன சொல்லி இருப்பான் என்று புரிந்தமையால் மகி அமைதியாகி விட்டாள்.

தயாநிதிக்கு மனைவியின் நிலை வேதனை அளித்தாலும், அவருக்கும்  ருத்ரனை போல் இப்போது மஞ்சு தான் கவனிக்க பட வேண்டியவள் என்று ருத்ரனோடு சென்றான்.

சென்னையின் போக்குவரத்தின்  நெரிசலில் வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த ருத்ரனின் நிலை சொல்ல முடியாது இருந்தது என்றால்….

மஞ்சுவின் அருகில் அமர்ந்து இருந்த கதிரின் நிலை……வார்த்தையில் அடக்க முடியவில்லை.

நெஞ்சு  மேல் ஏதோ ஒரு பாராங்கல்லை எடுத்து வைத்தது போல் கணத்தது. ஹார்ட் அட்டாக் தான் வந்து விட்டதோ என்று சமயத்தில் அவனுக்குள் பயமே ஏற்பட்டு விட்டது.

கடவுளே ருத்ரன் வரும் வரையாவது எனக்கு ஒன்றும் ஆக கூடாது. என்ன மாதிரி சூழ்நிலை,

தன் முகநூலில் தேவி என்ற பெயரில் தோழியாய்   ஆராம்பித்த அவர்களின் நட்பு , பின் அவளிடம் சேட்டிங் செய்யும் போது நேரம் போவது தெரியாது ஒரு இதம் மனம் முழுவதும் பரவுவது போல்….

தந்தை இழந்து எந்த வித ஆசாபாசத்துக்கும் மாட்டாதவனின் மனம் அந்த சிறிது நேர முகநூல் வார்த்தை கோர்த்த வாசிப்பில் விழுந்தான். இது தான் விதி என்பதோ…..

தன்னுடைய விருப்பத்தை மறைமுகமாக உணர்த்தியவனுக்கு, பதில் அந்த பக்கமும் சாதகமாய் அமைந்து விட. வாழ்க்கை அவனுக்கு வண்ணக் கோலம் போட்டது போல் காட்சி அளித்தது.

தேவியும் தன்னை பற்றி  விசாரித்தது இல்லை. அதே போல் தான் தானும் தன்னை பற்றி  எந்த தகவலும் தேவிக்கு தெரியப்படுத்த வில்லை.

அவள் வார்த்தை  கோர்த்தலில் தெரிந்தது, அவள் ஒரு கல்லூரி மாணவி அவ்வளவே….

எந்த கல்லூரி என்று கூட அவன் கேட்டது கிடையாது, என்பதை விட கேட்க நினைக்கவில்லை.

நிழல்படம் படம் பற்றி  பேச்சு வந்த போது…. நான் அசிங்கமா இருக்க போறேன்னான்னு உங்களுக்கு சந்தேகமா…..?” என்ற தேவியின் வார்த்தையில், பின் அதை பற்றிய பேச்சை  விட்டு விட்டான். தன்னுடைய புகைபடத்தை அனுப்பலாம் என்ற எண்ணத்தையும் அழித்து விட்டான்.

சந்தோஷத்தை கொடுத்த அந்த வார்த்தை கோர்த்தல் , இன்று  இப்படி ஒரு சங்கடத்தில் ஆழ்த்தும் என்று அவன் நினைத்தும் பார்க்கவில்லை.

 

Advertisement