Advertisement

அத்தியாயம்—-19

தன் வாழ்க்கை பற்றி தன்னை கேட்காது அவர்களே ஒரு முடிவு எடுத்ததை பற்றி அறியாது எப்போதும் போல் அந்த தூக்கணாங்கூடை உற்று பார்த்துக் கொண்டு இருந்தவளை…..

“நான் என்ன சொல்லி இருக்கேன்.” திடிரென்று கேட்ட ருத்ரனின் குரலில் பதறி போய் சுற்றி முற்றி  பார்த்தவள்…

பின்….சந்தேகத்தில் அவன் அறையின் பால்கனியை அன்னாந்து பார்க்க, அவள் நினைத்தது போல்….அங்கு தான் நின்று கொண்டு இருந்தான்.

“நைட்ல இங்கு வரக்கூடாதுன்னு சொன்னேனா…..?இல்லையா…..?” தன் கேள்வியிலேயே  நிலைத்து கேட்க.

“இல்ல படிக்கட்டிலோ…..லிப்டிலோ போனா…. பாட்டி பார்த்து எங்கு இருந்து வர்றேன்னு கேட்பாங்க. அது தான்.”

ஆம் முதலில் ஹாலில் சென்றடையும் படிகட்டு வழியாக தான் வர நினைத்தாள். ஆனால் அங்கு பாட்டி சட்டமாக அமர்ந்து இருப்பதை பார்த்து…. “ஈவினிங்கே ரொம்ப கோபமா இருந்தாங்க, இப்போ நம்மல பார்த்தா ….வேண்டாம் என்று தான் பின் பக்க படிகட்டை பயன்படுத்தியது.

தோட்டத்தில் முடியும் இடம் வந்து சேர்ந்ததும், தூக்கணாங்கூடை  பார்க்கவில்லை என்றால் எப்படி….?அது தான் வந்து நின்றுக் கொண்டாள்.

அவள் என்னவோ சாதரணமாக தான்  சொன்னாள். ஆனால் அதை கேட்ட ருத்ரனுக்கு தான், என்ன தவறு செய்தால் இப்பெண்……?

வீட்டில் உள்ள மூத்தவரை தவிர்க்க நினைக்கிறாள் என்றால், அந்த பெரியவர் என்ன மாதிரி இவளை நடத்தி இருப்பார். அவன் சிந்தனையை தடை செய்யும் வகையாக….

“ இனி நான் நைட்டு வரமாட்டேன்.” என்ற மஞ்சுவின் பேச்சில்…

“சரி போய் தூங்கு.” அவன் பேச்சை வளர்க்காது அவளை அனுப்பி விட்டு படுத்தவனின் வயிற்று பகுதியில் இப்போதும் ஈரவுணர்வு இருப்பது போல் இருந்தது.

சீக்கிரமாக ஏதாவது செய்ய வேண்டும். இன்னும் சிறிது நாளில் அவள் படிப்பு முடிவடைகிறது.

தன் தொழிலில் ஏதாவது ஒன்றில்  அவளுக்கு பயிற்ச்சி கொடுத்து அவளிடம்  ஒப்படைக்க வேண்டும். முதலில் தொழிலில் அவளை புகுத்துவோம், பின் குடும்பத்தில் புகுத்தலாம்…

மாமா தொழில் மஞ்சுவுக்கு கொடுத்தா தானே, பாட்டி பிரச்சனை செய்வாங்க. என்  தொழில் என் விருப்பம்.

அவன் எண்ணம் இதுவாக தான் இருந்தது. இதை தவிர வேறு எதுவும் யோசிக்கவிடவில்லை இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்.

அதுவும் மாமன் மகள் மது. இப்போது மகள்கள் மஞ்சு, மது…அவன் இப்படி தான் நினைத்தான். அதுவும் கவனம் முழுவதும் மாமாவுக்கு கொடுத்த வாக்கின் படி அவளை குடும்பத்துடன் சேர வைக்க வேண்டும். அத்தையுடன் பேச  வைக்க வேண்டும். மஞ்சு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

மஞ்சுவை எந்த தொழிலில்  பயிற்ச்சி கொடுக்கலாம், என்று இவன் யோசிக்க,  பாட்டி சகுந்தலாவை எப்படி இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது என்ற வகையில் யோசித்தார்.

யார்….என்ன யோசித்தாலும், கடைசியாக விதியின் படியாகவும் சொல்லலாம், இறைவன் படியாகவும் சொல்லலாம்…நம்மை மீறிய ஒரு சக்தி இருக்க தான் செய்கிறது. பார்க்கலாம் என்ன நடக்கும் என்று,

எப்போதும் போல் உணவு உண்ணும் இடத்தில் மஞ்சும், மதுவும், இல்லை. மஞ்சுவின் அறையில் தான் இருவரும் சாப்பிடுவார்கள் என்று தெரிந்த வேள்வியை கேட்காது இரவு தான் எடுத்த முடிவின் படி தன் மாமனிடம்…

“மாமா மஞ்சு படிப்பு முடிய இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு.”

“ஆ நானும் அத பத்தி உன் கிட்ட பேசனுமுன்னு இருந்தேன் ருத்ரா…..”

“ஆ பரவாயில்லையே அம்மாவின் பயம் போயிடுச்சா…..”  மாமாவும் தன்னை போல் தான் மஞ்சுவை வேலைக்கு அனுப்புவது பற்றியோ…..இல்லை தொழிலை கொடுப்பது பற்றியோ பேச போகிறார் என்று வியந்து மாமாவை பார்க்க.

நானாவது மாறுவதாவது, என்று நிருப்பிக்கும்  வகையாக தயாநிதி….. “நான் இப்போ கங்காதரன் வீட்டுக்கு போகலாமுன்னு இருக்கேன். நீயும் வர்றியா….?”

“ஓ அந்த பிரான்சில் ட்ரையினிங் கொடுக்க போறாரா….ஆனா வீட்டுக்கு எதுக்கு…..?”

அதை கேட்கவும் செய்தான்…..”வீட்டுக்கு எதுக்கு மாமா ஆபிசில் போயே பேசிடலாமே…..”என்று சொன்னவன்.

“மேலும் எனக்கு என்னவோ அங்கு மஞ்சுவை அனுப்புவதை விட….” தயாநிதிக்கு இரு டெக்ஸ்டையில்ஸ் இருக்கு…அதை குறிப்பிட்டு….

“மஞ்சுவை டென்ஸ்டைல்சில் ட்ரையினிங் கொடுத்தா நல்லா இருக்குமுன்னு தோனுது. அதுவும் அடையார் பிரான்ச் பெண்களுக்கு மட்டுமானது. மஞ்சுவுக்கும் கம்பர்ட்டபுலா இருக்கும்.”

அகிலாண்ட நாயகியோ…ருத்ரன் பேச்சில்….நான் அவள வீட்ட விட்டு அனுப்ப நினைச்சா, இவன் தொழிலில் புகுத்த நினைக்கிறானே….அதுவும் அடையார்  டெக்ஸ்டைல்ஸ். அது ஆராம்பித்த உடனே மதுவுக்கு சீராக அவளுக்கு கொடுக்க வேண்டும், என்று முடிவு செய்து அதை பற்றி குடும்ப உறுப்பினர் அனைவரும் முன் சொல்லியும் இருக்கிறார்.

தன் கணவன் இறந்து தொழிலை கட்டி காத்தார். ஆனால் தன் மகள் தொழிலில் புகாது ஒதுங்கி நின்றுக் கொண்டது அவருக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

அதற்க்கு ஈடு சேர்க்கும் வகையாக தன் பேரனின் வளர்ச்சியில் அந்த வருத்தம் மறைந்தும் போயின,

ஆனால் தன் மகள் செய்த தப்பை தன் பேத்தி செய்ய கூடாது. தயாவின் தொழில் மொத்தமும் மதுவுக்கு தான். ஆனால் திருமணத்தின் போதே ஏதாவது ஒரு  தொழிலை மதுவுக்கு கொடுத்தால் தான், அதன் மீது அவளுக்கு நாட்டம் வரும்.

இதை பற்றி விவரித்து சொல்லியும்…இப்போது ருத்ரன் இந்த பேச்சை எடுத்தது அகிலாண்ட நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அதோடு தன் மகனும் அவன் சொன்னதுக்கு மறுத்து ஏதும் சொல்லாது, அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கிறானே…என்று மகன் மீது கோபம் பொங்கியது.

அகிலாண்ட நாயகி கூற்று படி தயாநிதி வாயே திறக்கவில்லை தான். தாய், மனைவி பேச்சு கேட்டு மஞ்சுவுக்கு திருமணம் செய்திடலாம் என்ற முடிவு எடுத்து இருந்தாலுமே…

அவருக்கே கொஞ்சம் யோசனையாய் தான் இருந்தது. இப்போது மருமகனும்  மஞ்சுவின் விஷயமாய் கங்காதரன் வீடு என்றதும், தொழிலை அவளுக்கு கொடுப்பதோ…ட்ரையினிங் கொடுப்பதோ தான் நினைக்கிறான்.

அப்படி என்றால் இந்த முடிவு தவறான முடிவா….? இன்னும் கொஞ்சம் யோசனை செய்ய வேண்டுமோ…..?கங்காதரனிடம் பேசிய பிறகு பின் வாங்குவது சரியாக இருக்காது.

எந்த காரணத்துக்காவும் அத்தனை வருட நட்பில் பிரச்சனை வருவதை அவர் விரும்பவில்லை. அதனால் தான் யோசனையுடன் ருத்ரன் முகத்தை பார்த்திருந்தார்.

மாமாவின் முகமாறுதலில்  முகத்தில் யோசனை இழையோட…. “மாமா என்ன பிரச்சனை…..?” என்று கேட்டுக் கொண்டே தன்  க்ராண்மாவை பார்த்தான்.

தன் பேரன் தன்னை கண்டு கொள்வானோ என்று தனக்கு கொடுக்கப் பட்ட ஓட்ஸ் கஞ்சியை  ஸ்பூனால் கலக்க தொடங்கினார்.

யாரும் எதுவும் பேசாததை பார்த்து மீண்டும் அவர் வாய் திறக்கும் வேளயில்…..மகேஸ்வரி…. “கங்காதரன் வீட்டுக்கு மஞ்சுவோட கல்யாணம் விஷயமா பேச  தான் உங்க மாமா உங்கல கூப்பிட்டார்.”

மகேஸ்வரி பேசிய அர்த்தம் புரியவே கொஞ்ச நேரம் பிடித்தது ருத்ரனுக்கு…புரிந்ததும் தன் பாட்டியை தான் முறைத்து பார்த்தான்.

அவர் இன்னும் அந்த கஞ்சியையே கலக்கி கொண்டு இருப்பதை பார்த்து…

“இங்கு கலக்கி விட்டு  தான் ,அத கலக்கிட்டு இருக்கிங்கலா…..?”

எதை என்று கேட்காது….. “ருத்ரா என்னை ஏன்டா இப்படி பேசுற….?மகளோட அம்மா பொண்ணுக்கு கல்யானம் செய்து வைக்க ஆசை படுறா, இதுல தப்பு இருக்கறதா எனக்கு தெரியல.” தனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லாது போல் பேசும் பாட்டியிடம்…

“இப்போ என்ன சொன்னிங்க….?மஞ்சுவோட அம்மாவா….?யாரு அது…..?” அந்த பேச்சு மகேஸ்வரிக்கு முள்ளாய் குத்தியது.

ருத்ரன் மகேஸ்வரி மனது  வருத்தப்பட இந்த வார்த்தையை உபயோகிக்கவில்லை. ஆனால் தான் செய்ய வேண்டிய கடமை செய்யாது விட்டால், யாருக்கோ பேசிய பேச்சு கூட நம்மை வந்து தாக்கும்.

இது தான் குற்றம் உள்ள நெஞ்சு, குத்துதுன்னு சொல்வாங்க.

தன் கேள்விக்கு பதில் எல்லாம் பாட்டியிடம் எதிர்பார்க்கவில்லை  தொடர்ந்து…… “க்ராண்மா அத்தை கிட்ட பேச்சுக்கு பேச்சு, உன் ஒரே பெண் மதுன்னு…..அதை அவங்க  மனசுல பதிய சொன்னிங்கலா…?இல்ல உங்க மகன் தனக்கு இன்னும் ஒரு பெண் இருக்குன்னு மனசுலேயும், நினைக்கவே கூடாதுன்னு சொன்னிங்கலா….?எனக்கு தெரியாது.

ஆனா இந்த வார்த்தை நீங்க சொல்லி பல தடவை நான் கேட்டு இருக்கேன். இப்போ மட்டும் என்ன….?அம்மா அவங்களுக்கு உரிமை இருக்குன்னு பேச்சு.

இந்த வீட்டில் மஞ்சுவுக்கு  உரிமை வந்துட போகுதுன்னு பேசுறிங்கலோ….?”

பேரனின் அந்த வார்த்தையில் இது கோபப்படும் நேரம் இல்லை. அமைதியாக காரியத்தை முடிக்கவேண்டிய நேரம் என்று தன்னை அடக்கி வைத்திருந்த அகிலாண்ட நாயகி…ருத்ரனி மஞ்சுவுக்கு உரிமை வந்துட போகுது என்ற பேச்சில் வெகுண்டு…

“என்ன உரிமை….?என்ன உரிமை இருக்கு அந்த பொண்ணுக்கு இந்த வீட்டுல…..தோ வந்ததில் இருந்து விருந்தினர் வந்தா தங்குவாங்கல. அங்கு தான் மூனு வருஷமா  தங்கிட்டு இருக்கா.

இன்னும் நம்ம கூட சாப்பிடல …இது தான் அவளுக்கு இந்த வீட்ல இருக்கும் உரிமை.”

ருத்ரனே பாட்டியின் இந்த வெளிப்படையான பேச்சுயை எதிர்ப்பார்க்கவில்லை என்ற போது மற்றவர்களின் நிலை…..அப்படியே நின்று விட்டனர்.

தன்னை சுதாகரித்து ருத்ரன் ஏதோ பேச தொடங்கும் முன் மகி….. “ நீங்க சொல்வது உண்மை  தான். இந்த வீட்டில் உரிமை மதுவுக்கும், ருத்ரனுக்கும் மட்டும் தான்.”

ஒரு சிலருக்கு மட்டும் சொல்லி வைத்தது போல் மாட்டுவார்கள். அது போல் மகேஸ்வரி பேசிய இந்த பேச்சு சரியாக மஞ்சுவின் காதில் விழுந்து வைத்தது.

அதோடு மட்டும் அல்லாது தொடர்ந்து…. “அதனால எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவளை கல்யாணம் செஞ்சு இந்த வீட்டை விட்டு அனுப்பிடலாம்.”

தடுத்து ஏதோ பேச வந்த ருத்ரனிடம்….. “நீயாவது அவ என் பெண் தான் நினச்சா….ப்ளீஸ் உங்க மாமா கூட கங்காதரன் அண்ணா வீட்டுக்கு போங்க.” என்று ருத்ரனிடம் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு போகும் முன் தன் கணவனை பார்த்தாள்.

அந்த பார்வை முழுவதும் வெறுமையே…..மனைவியை சமாதானப்படுத்த தயாநிதி அவள் பின் தொடர. தலை மீது கைய் வைத்து குனிந்த வாக்கில் ருத்ரன்.

தன் திட்டம் நிறை வேறியதில்  வெற்றி களிப்போடு அந்த இடத்தை விட்டு  சென்ற அகிலாண்டநாயகி.

இவர்கள் யாரும் கல்லென்று  நின்ற மஞ்சுவை கவனிக்கவில்லை. தாயின் வீட்டின் உரிமை பேச்சில் பாதி செத்த மஞ்சு, மீதி பேச்சில் முழுதாய் மாண்டாள். அதிர்ச்சி என்ற சொல்  மிக சிறியது. அப்படியே நின்று விட்டாள்.

மஞ்சு அறையில் இருந்து அவள் பின் தொடர்ந்து வந்த மது, உரிமை பேச்சு கேட்கவில்லை என்றாலும், அடுத்து பேசிய பேச்சில் அவளே அதிர்ச்சி அடைந்து விட்டாள்.

“அக்கா …..” அவள் தோள் தொட்டவளின்  கரத்தை தட்டி விட்ட மஞ்சு திரும்பவும் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அக்காவின் இந்த செய்கை மதுவை காயப்படுத்தியது. இந்த  வீட்டுக்கு வந்த புதிதில் யாருடன் பேசவில்லை என்றாலும், தான் பேசினால் தன்னை தவிர்த்தது இல்லை. பின் போக போக தன் அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு சகோதர உறவையும் தாண்டி இருந்தது என்ன….?

இப்போது இந்த புறக்கணிப்பு எதனால்….? அம்மா பேசிய பேச்சாலா….?அப்போ அவளுக்கும் தானே அவங்க அம்மா.

பாவம் அது தான் மஞ்சுவின் பிரச்சனை என்பதை மது அறிவாளா….?அந்த  உரிமை தனக்கு மறுக்கப்பட்டதின் விளைவு தான் இந்த புறக்கணிப்பு.

அக்காவின் உதாசீனத்தில் பலதை யோசித்தாலும், அக்கா பின் செல்வதை மது நிறுத்தவில்லை.

திரும்ப திரும்ப தன் சகோதரியை சமாதானப்படுத்தியதில் மது என்ன செய்வாள் என்று தன் மனக்குமுறலை கொட்ட ஆராம்பித்தாள்.

“அந்த கல்யாணம்  பண்ற கஷ்டம் கூட இவங்களுக்கு வேண்டாம்.” அவள் விடுதியில் தங்கிக் கொள்ள போகிறேன் என்ற எண்ணத்தில் தான் மஞ்சு சொன்னது,

ஆனால் மதுவோ பதினெழுவயதில் இருக்கும் பெண்ணுக்கு புரிந்துக் கொண்டது …. “ஓவியனை கல்யாணம் செய்துக்க போறியா…..?”

“நான் எப்போ  அப்படி சொன்னேன்….?”

“ஓ நீ சொன்னது அர்த்தம் அது இல்லையா…..?” என்று சொன்னவள்.

“அப்போ என்ன செய்ய போற….?இங்கு இருந்தா கல்யாணத்தை பத்தி பேசுவாங்க. அத சட்டமா உன்னால மறுக்க முடியுமா…..?”

மதுவுக்கு அக்கா  ஓவியனோடு கல்யாணம் செய்தால் தான் ,அவள் மகிழ்ச்சியாக இருப்பாள் என்ற எண்ணத்தை, மஞ்சு ஒவ்வொரு முறையும் ஓவியனோடு சேட்டிங் செய்த பின் முகத்தில் மலர்ந்த சிரிப்பில் இருந்து உணர்ந்து கொண்டது.

இவள் இங்கு இருந்தா எங்க அந்த சாகருக்கு திருமணம் செய்து, அந்த சகுந்தலா மாமியாரிடம் மாட்டி விட்டு விடுவார்க்கலோ என்ற பயத்தில் இருந்தாள்.

“நான் விடுதியில் தங்கிக்கலாமுன்னு இருக்கேன் மது.” அவள்  முடிவை சொல்ல.

“அய்யோ பாட்டி உன்னை அப்படி விட்டுட மாட்டாங்க. குடும்ப கெளரவம்  அப்படி, இப்படின்னு, திரும்பவும் வீட்டுக்கு கூடிட்டு வந்து அந்த சகுந்தலா வீட்டுல தள்ளிடுவாங்க.”

“பாட்டிக்கு நான் இங்கு இருக்குறது பிடிக்காது. அதனால நான் போனா அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க.”

“அய்யோ அக்கா இப்படி உலகம் புரியாதவளா இருக்கியே…..? நீ இங்கு இருப்பது பிடிக்கலேன்னாலும், இபோ நீ இந்த வீட்டு பெண்ணுன்னு ஒரளவுக்கு எல்லோருக்கும் தெரியும்.

இதே ஊரில் இருந்து நீ விடுதியில் தங்கினா, அது மானப்பிரச்சனை அது இதுன்னு அப்பா கிட்ட பேசுவாங்க.

அப்பாவுக்கும் நீ விடுதியில் தங்குவது பிடிக்காது. அதனால இது தான் சாக்குன்னு உன்னை கன்வென்ஸ் பண்ணி கூட்டிட்டு வரத்தான் பார்ப்பாங்க.”

அவளுக்கு தெரிந்த வகையில் அவள் விடுதியில் தங்கினால் என்ன..என்ன பிரச்சனை வந்து போகும் என்று விளக்கியவள்.

“எப்படியும் நீ ஓவியனை விரும்புற எனக்கு நல்லா தெரியும்.அப்போ கல்யாணம் செய்துக்குறத, இப்போவே கல்யாணம் செய்துக்க.”

மதுவின் பேச்சில்  முதலில் தயங்கிய மஞ்சு, போக போக….செய்தால் என்ன…..? பெத்ததோட எனக்கு எதுவும் இவங்க செய்யல….கல்யாணம் மட்டும் எதுக்கு…..?

ஊருக்கா….என் பெண்ணை நான் ஒன்னும் அப்படியே விடலேன்னு. விட்டுட்ட அப்படி தான் நினைக்கனும் என்ற எண்ணம் தீவிரம் அடைய….

ஓவியனுக்கு ஒரு மெசஞ்சர் தட்டி விட்டு , இரு பெட்டியோடு சென்ரல்ரயில்வே ஸ்டேஷன் மேடையின் இருக்கை மீது, நகம் கடித்த படி  ஓவியனின் வருகைக்கா காத்துக் கொண்டு இருந்தாள்.

 

Advertisement