Advertisement

அத்தியாயம்—-18

“இப்போ சாகர் பத்தி எதுக்கும்மா  கேட்குறிங்க….?அதுவும் இந்த நேரத்துக்கு…..?” தயாநிதியும்  அம்மா இந்த நேரத்துக்கு தங்கள் அறைக்கு வந்து இருக்கிறார்கள் என்றால், மஞ்சுவை பற்றியோ என்று தான் நினைத்திருந்தார்.

ஆனால் சம்மந்தமே இல்லாது சாகரை பற்றி பேச்சு எடுத்ததும் புரியாது கேட்டவரிடம்….. “எல்லாம் காரணமா தான் தயா….அந்த பையனுக்கு நம்ம மஞ்சு மேல கொஞ்சம் விருப்பம் போல் தெரியுது.”

“என்ன….?” தயாநிதி  அதிர்ச்சியுடன் கேட்டார்.  இது போல் சுத்தமாக அவர் எதிர் பார்க்கவில்லை.

“எதுக்கு எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி தயா…..? நம்ம பொண்ணு அழகுக்கு ஆசை படாம இருந்தா தான் அதிசயம்.” அகிலாண்ட நாயகி வாயில் இருந்து மஞ்சுவை பற்றி  பேசும் போது எல்லாம் பேச்சுக்கு பேச்சு நம்ம பொண்ணு.

இதை தயாநிதி கவனிக்கவில்லை என்றாலும், மகி கவனித்தாள்.தான் சந்தேகப்பட்டது போல் மஞ்சுவை இந்த வீட்டை விட்டு அனுப்பும் நோக்கம் தான்.

என்ன ஒன்று….நாசுக்காக கல்யாணம் என்ற பெயரில். அவர் நோக்கம் புரிந்தாலும், மாமியார் பேச்சை அமைதியாக கவனித்தாள்.  சாகரை சிறு வயது முதல் மகிக்கு நன்கு பற்றி தெரியும்.

குறை சொல்லும் படி எதுவும் இல்லை. அது போல் தான் கங்காதரன் அண்ணாவும், இன்று வரை அவர் கண்ணீல் பாசத்தை மட்டுமே பார்த்து இருக்கிறார்.என்ன சாகரின் அம்மா தான்.

ஆம் மகியும் இந்த திருமணம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று கருத தொடங்கினாள். மாமியார் என்ன நோக்கத்தில் இந்த பேச்சு எடுத்து இருந்தாலும், சாகர் தங்கமான பையன் தான். அதில் சந்தேகம் இல்லை.

இனி  தன் மகள் தன்னோடு ஒட்டுவாள் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வந்திருந்த இந்த சமயத்தில், மாமியாரின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டாள்.

ஆனால் தயாநிதிக்கு தான் இந்த வயதுலேவா…..அதை சொல்லவும் செய்தார்.

“என்னம்மா இன்னும் அவ படிப்ப  கூட முடிக்கல. அதுவும் இல்லாம…..” தன் மகனின் பேச்சை முழுமையாக முடிக்க விடாது … “ என்ன படிப்பு முடிக்க வருஷ கணக்கா இருக்கு….?இதோ இன்னும் மூனு மாசத்துல முடிச்சிட போறா…..இப்போ நிச்சயத்த வெச்சிப்போம். கல்யாணம் படிப்ப முடிஞ்சதும் வெச்சிக்கலாம்.”

மூனு மாசம் கூட  அவர்களுக்கு காலத்தை கொடுக்காது, நிச்சயத்தை முடித்து விட திட்ட மிட்டார் அகிலாண்ட நாயகி.

“அம்மா சாகர் நல்ல பையன் தான். ஆனா அவன் அம்மா…..” மகி யோசித்ததையே தான் தயாவும் யோசித்தார்.

அதை அகிலாண்டமும் ஒத்துக் கொள்ளவும் செய்தார்…. “ ஆமா அவ கொஞ்சம்  ராங்கி பிடிச்சசவ தான், நான் ஒத்துக்குறேன். தெரியாத இடத்துல பொண்ணா கொடுத்தா…..அங்கு இதோடு மோசமா இருந்தா…..?மாப்பிள்ளையே விவகாரம் பிடிச்சவனா இருந்தா……?

இங்காவது மாமியார் தான் ஒரு மாதிரி. மாமனார்,  புருஷன் தங்கமானவங்கலா அமஞ்சுடுவாங்க மஞ்சுவுக்கு, அதுவும் இல்லாம…..” சொல்லாது தன் மகன், மருமகள் முகத்தை பார்த்து தயங்கி நிறுத்தினார்.

அகிலாண்ட நாயகி எதிர் பார்த்த மாதிரியே இப்போ மகேஸ்வரி….. “என்ன அத்தை…..?” தன் மாமியார் ஏதோ வில்லங்கமாக தான் சொல்ல போகிறார் என்று தெரிந்தே கேட்டாள்.

ஒரு விஷயம் கேட்டு விட்டாள்.அது தன் மனதை காயப்படுத்தினாலும், கொஞ்ச நேரமோ….கொஞ்ச நாளோ…நம் மனதை நாம் தேத்திக் கொள்ளலாம்.

ஆனால் ஒருவர்  சொல்ல வந்ததை சொல்லாமல் நிறுத்தி விட்டால், நம் மனது  அதையே தான் நினைத்துக் கொண்டு இருக்கும், அதனால் மகி கேட்டு விட.

“நான் சொல்வத தப்பா எடுத்துக்க கூடாது. நீ என் மருமகள் உன்னை பத்தி எப்போவும் தப்பா நான் நினைக்க மாட்டேன்.” மாமியார் பேச,  பேச அது என்ன ….? என்று மகிக்கு தெரிந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்…

“நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் அத்தை சொல்லுங்க.”

தயாநிதிக்கு அம்மாவின் இந்த பேச்சால் என்ன பூதம் வெளிவரப்போகிறதோ என்று ஒரு வித பதட்டத்தோடு தான் தன் அம்மாவின் பேச்சை கேட்க ஆராம்பித்தார்.

இருவரின் இதய  துடிப்பை எகுற வைத்து விட்டு….. “பொண்ணோட  அம்மா இரண்டாம் கல்யாணம் செய்துக்கிட்டாங்க.  மஞ்சுவை வெளியில் கல்யாணம் பேசுனா…. இந்த பேச்சு வரும்.” சொல்ல நினைத்ததை கச்சிதமாக சொல்லி முடித்தார் அகிலாணட நாயகி.

மாமியாரின் பேச்சில் மகி என்ன மாதிரி உணர்கிறாள்…..?தெரியவில்லை. அதை பற்றி  அடுத்து பேச அவளாள் முடியவில்லை.

ஆனால் தயா…. “ என்ன பேச்சும்மா இது …..? மறுமணம் செய்துக்குறது தப்பா….?அதுவும் அவ்வளவு சின்ன வயசுல. அதுக்காக மகியா தப்பா நினைப்பாங்கலா…..?”

என்ன உலகம் இது…. ?என்று  தான் தயாநிதியால் நினைக்க தோன்றியது. ஆணுக்கு ஒரு நியாயம்….?பெண்ணுக்கு ஒரு நியாயமா….?

அந்த ஆதாங்கத்தில் …. “ நீங்கலே இப்படி பேசலாமா…..?”தயாநிதியின் குரலில் கோபம் எட்டி பார்த்தது.

“ஏம்பா நான் என் மருமகள தப்பா  நினைப்பேனா….மஞ்சுவுக்கு வெளியில் கல்யாணம் பேசுனா, இப்படி நடக்க வாய்ப்பு இருக்குன்னு  என் வயசு அனுபவத்தில் கோடிட்டு காட்டினேன்.”

அகிலாண்ட நாயகி பேசியதில் எது சரியோ….ஆனால் அவர் சொன்ன நானே என் மருமகளை தப்பா நினைப்பேனா….அந்த வார்த்தை சரியே….

இன்னும் சொல்ல போனால் தான் என்ன பேசினாலும் அமைதியாக கடந்து செல்லும் மருமகளின் பொறுமையில்  அகிலாண்ட நாயகிக்கே வியப்பே!!!! நாமே பார்த்து வெச்சி இருந்தாலும் இது போல் மருமகள் கிடைத்து இருப்பாளா….?என்பது சந்தேகமே.

அதுவும் தன் மகளை எந்த பேதமையும் காட்டாது,  உடன் பிறப்பு போல் அன்புடன் பேசுவதில் அவ்வளவு நிம்மதி.

அப்படி இருக்கும் போது அவர் எப்படி தன் அழகு மருமகளை  தவறாய் நினைப்பார். அவர் பிரச்சனை எல்லாம் மஞ்சு தான். சில சமயம் என்ன பல சமயம்…..

செத்தானே பிள்ளை கொடுக்கும் முன்ன செத்து இருக்க கூடாது. மகேஸ்வரியின் முதல் கணவர் பற்றி இப்படி எண்ணியும் இருக்கிறார்.

அவர் கவலை  மஞ்சு இந்த வீட்டு பெண் என்று அடையாளம் காட்ட கூடாது. அதற்க்கு உண்டான பலதை செய்து தான் மஞ்சுவை இக்குடும்பத்தை விட்டு தள்ளி நிறுத்தியது.

ஆனால் அந்த கிழவன் சாவதற்க்கு முன் தன் மகனிடம் பேசி செத்ததால் , அதை எதிர்த்து பேசினால், தன் மகனே தன்னை வெறுத்திட கூடும் என்ற  பயத்தில் தான் மஞ்சுவை இந்த வீட்டில் தங்க அனுமதித்தது.

அதுவும் நீ இந்த வீட்டின் விருந்தாளி தான், என்று மஞ்சுவுக்கு நினைவூட்டவும், அவர் தவற வில்லை. எல்லாம் சரி தான். ஆனால் தன் பேரன் மஞ்சுவுக்கு ஆதாரவாய் குரல் கொடுப்பான் என்று அவர் சிறிதும் நினைத்து பாராது.

மகனை கூட சமாளித்து விடலாம். ஆனால் பேரனை …..அதனால் தான் தன் அடுத்த காய் நகர்த்தலை ஆராம்பித்து விட்டார்.

மாமியாரின் பேச்சு மகிக்கு ஒத்துக் கொள்ளும் படி தான் இருந்தது. இவரை திருமணம் செய்து இந்த வீட்டில் அடி எடுத்து வைத்த அன்று, அவர் கணவர் அறைக்கு அனுப்பும் முன் ஒரு பெண்மணி ஏதோ பேசும் வரும் முன், மற்றொரு பெண்மணி….

“மத்த பெண்ணை போல் கையில் பால் கொடுத்து  அனுப்பும் முன், பார்த்து பதுவுசா நடந்துக்கனுமுன்னு சொல்லி அனுப்புவோம். கொஞ்சம் பயந்த பொண்ணா இருந்தா தைரியம் சொல்லி அனுப்புவோம். ஆனா உனக்கு அது தேவையில்லலே…..”

வக்கிரகுணம் பிடித்த ஜென்மம் ஒன்று இது போல் பேசி வைக்க. அதில் ஒரு பெண் நிஜமாகவே மகிக்கு இது இரண்டாம் திருமணம் என்று தெரியாது. காதல் மணம் மட்டுமே தெரிந்த விஷயம்….

அதனால்…. “ஏன்….பெரியம்மா.” என்று கேட்டு வைத்திட.

“அது தான் கையில் குழந்தையே  இருக்கே….?ஒன்னும் தெரியாமயா வந்து இருக்கும்.” பெண்களை பெண்களே அசிங்கப்படுத்தினால், பெண் விடுதலை, பெண் சுதந்திரம், பெண் சமத்துவம்….கேட்டு என்ன பிரயோசனம்.

மகிக்கு அன்று நடந்ததை நினைத்து….வெளியில் மஞ்சுவை கொடுத்தால்….

“என் வயிற்றில் பிறந்த பாவத்துக்கு இன்னும் அவள் கஷ்டப்படனுமா…..? சாகருக்கே கொடுத்து விட தீர்மானித்தார்.

ஆனால் தயாநிதி…. “நீங்க அப்படி நினச்சா…..இந்த பிரச்சனை மதுவுக்கு வருமேமா…..”  இதை நினைத்து எல்லாம் கல்யாணம் செய்ய கூடாது. என்று நினைத்து கேட்டவனிடம் இருந்து தன் முகமாற்றத்தை மறைத்த அகிலாண்டம்,

“என்ன பேசுற தயா…..மஞ்வோட அப்பா இறந்துட்டாரு.” ஏதோ பேச வந்த மகனை  தடுத்து…

“நீ என்ன சொல்வ நான்  தான் அவ அப்பா. நீ என்ன தான் அவள உன் மகளா பார்த்தாலும், வெளியாளுங்கலுக்கு மஞ்சு மகேந்திரன் மகள் தான். அது தான் உண்மையும் கூட. அத மாத்த முடியாது.(இந்த அம்மா மாத்த விட மாட்டாங்க.)

ஆனா மது உன் மகள். உன் வீட்டுக்கு வந்து பெண் கேட்டு விட்டு  அவல பத்தி ஏதாவது சொல்லி விட முடியுமா….?” (சொல்ல தான் இந்த அம்மா விட்டுடுவாங்கலா….)

இன்னும் அந்த அம்மா என்ன சொல்லி இருக்குமோ…அதற்க்குள் மகி…. “என்னங்க அத்தை சொன்னா மாதிரியே செய்துடலாம்.”

மனைவியின் முகத்தை கூர்ந்து பார்த்த வாறே…. “இல்ல மகி அவசர படாதே…இது விளையாட்டு சமாச்சாரம் இல்ல. எடுத்தோம் கவிழ்த்தோமுன்னு முடிவு செய்ய. யோசிக்கலாம். இது மாதிரி அர்த்த ராத்திரியில் முடிவு செய்ய வேண்டாம்.”

கல்யாணம் என்றால்  சும்மாவா…இப்படி சட்டென்று முடிவு எடுக்கிறாளே…..என்ற ஆதாங்கம் தயாவுக்கு,

“சரி இந்த பையன் வேண்டாம். இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி வேற ஒரு பையனுக்கு கல்யாணம் பேசும் போது அத்தை சொன்ன பிரச்சனை வராதுன்னு எனக்கு வாக்குறுதி கொடுக்க முடியுமா….?

வாக்குறுதின்னா…எனக்கு முதல்ல கொடுத்திங்கலே….அது மாதிரி வாக்குறுதி இல்ல. சொன்னா  நிறைவேத்துவது.”

மருமகளின் இந்த  பேச்சை அதிசயத்து பார்த்திருந்தார் அகிலாண்ட நாயகி. முதல் முறை எதிர்த்து பேசி கேட்பது. தன்னிடம் இல்லை என்றாலும், தன் மகனிடம் தன் எதிரில் பேசுவது…..

எதனால் மகளால் தாய் என்று வந்து விட்டால்…..ம் இது மேல வளர விடக்  கூடாது.

“என்ன தயா மகள பத்தி அம்மாவுக்கு இல்லாத உரிமையா…..தன் மகளுக்கு சாகர் சரியான மாப்பிள்ளைன்னு அவள சொல்ற அப்புறம் என்ன…..?சீக்கிரம் உன் பிரன்ட் கிட்ட பேசி சட்டு புட்டுன்னு முடிக்க பாரு.

ஏன்னா இது மாதிரி தெரிஞ்ச நல்ல பிள்ளை கிடைக்குறது கஷ்டம். வேறு யாராவது தட்டிட்டு போயிட போறாங்க.”

தன் வேலை முடிந்தது என்று…. “சரி டைமாயிடுச்சி நான் பி.பி மாத்திரை போட்டு படுக்கனும். நீங்களும் படுங்க.” என்று சொல்லி அவர் சென்று விட்டார்.

தயாநிதி  வாயே திறைக்கவில்லை. அவர் மனம் முழுவதும் தன் மனைவி  சொன்ன வார்த்தையிலேயே சுழண்டு அடித்தது. இந்த பேச்சை அவள் விடவே மாட்டாளா…..?

நானும் ஒரு சூழ்நிலை கைதியாக தானே இருக்கிறேன். என் மனதில் ஏற்கனவே மஞ்சுவை பற்றிய குற்றவுணர்வில் இருக்கும் போது, இப்படி இவள் பேசுவது வெந்த புண்ணில் வேல் பாய்வது போலேன்னு இவளுக்கு புரியலையா…..?

மாமியார் சென்று சில மணி நேரம் கடந்தும் தன் கணவன் வாய் திறக்காமல் இருப்பதிலேயே, தன் பேசிய வார்த்தை தான் அதற்க்கு காரணம் என்று புரிந்தாலும், ஏதும் பேசாது முதுகை காட்டி படுத்தவளின் செயலில்,

இவள் மொத்தமாய் என்னை வெறுத்து விட்டாளா…..? காதல் கொண்டு மணந்த மனைவியின் இந்த செயலை அவரால் ஜீரணிக்க முடியாது….

அதை கேட்டும் விட்டார்…. “ மகி என்னை வெறுத்திட்டியா…..?”

கணவன் பேச்சில் திரும்பி அவரை பார்த்த மகி…. “தெரியலேங்க….எனக்கே தெரியல.

அதுவும் என் மக என் கிட்ட பேசாம உங்க கிட்ட பேசும் போது……முடியல.”

அதற்க்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாது எழுந்து அமர்ந்து காலில் முகத்தை புதைத்து அழும் மனைவியின் குலுங்கும்  முதுகையே பார்த்திருந்த தயாநிதி, ஏதோ முடிவு எடுத்தவராய்….

“ மகி  இப்போ சொல்றேன்  மஞ்சுவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமச்சி கொடுத்த பிறகு தான், உன் கிட்ட  கணவன்னு உரிமை எடுத்துப்பேன்.”

ஏதோ பேச வந்த மனைவியை தடுத்து….. “நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் மகி. உன் நிலை எனக்கு புரியுது. ஒரு நல்ல அம்மாவ இல்லையேன்னு உனக்குள்ள நினச்சி நினச்சி மனைவியாவும் நடந்துக்க முடியாது நீ உள்ளுக்குள் போராடுவது எனக்கு புரியுது மகி.”

ஆம் தயாநிதி சொல்வது உண்மையே…..திருமணம் ஆனபுதிதில் கணவன் தன்னை நாடினால் வயதுக்கே உரிய ஹார்மோன் துடிப்பில் கணவனுடன் இழைந்து குடும்பம் நடத்தியவள்.

பின் தன் பெண் தன்னுடம் சேர வைப்பான் என்ற கணவன் வாக்கு பொய்த்து போனதில், தன்னை நாடி வந்த தன் கணவனுக்கு தன்னை ஒப்படைத்து  தாம்பத்தியம் நடத்தி வந்தவள்,

ஒரே கூரையில் இருந்து கொண்டு இருதுருவம் போல் தாயும், மகளும் வாழும் வாழ்க்கை நினைத்து, கணவன் தன்னை அன்டினால் தன்னால் உடல் விரைத்துக் கொண்டது.

தயாநிதியும் மனைவியின் மாற்றம் அறிந்து தான் இருந்தார். பல சமயம் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாததில் திரும்பி படுத்துக் கொள்பவர்.

சில சமயம் பிஸ்னஸ் பார்ட்டியில் ஆல்கஹால் நுழைந்த தடுமாற்றமா….இல்லை இந்த வயதிலும் கட்டு கோப்பாய் இருக்கும் தயாநிதியிடம் மேல் விழுந்து பேசும் பெண்களினால் தன் ஆண்மை மீது வந்த கர்வமா…..மகியின் நிலையும் மீறி அவளை எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

தன் மனைவியிடம் கொடுத்த இந்த வாக்கையாவது தயாநிதி நிறைவேற்றுவாரா…..?

 

  

 

Advertisement