Advertisement

 

அத்தியாயம்—-17

மஞ்சு உடல் குலுங்கி  அழுவதை சிறிது நேரம் கூட பார்க்க முடியவில்லை ருத்ரனால். “மஞ்சு கண்ரோல். மஞ்சு கண்ரோல். சாரி உன் கிட்ட இந்த பேச்சே எடுத்து இருக்க கூடாது. ப்ளீஸ் அழுவதை நிறுத்து.” ருத்ரன் அவன்  வாழ் நாளில் இந்த அளவுக்கு இறங்கி பேசி இருப்பானா…..?அவனுக்கே தெரியவில்லை.

இது வரை பேசியில்லாத வகையில் மென்மையான குரலில்…… “ ஏதோ நினைக்க போய் உன் மனச கஷ்டப்படும் படி பேசிட்டேன்.” அவன் குரலில் உண்மையான வருத்தம்.

எந்த ஆதாரவு பேச்சும், மஞ்சுவின் அழுகையை நிறுத்த முடியவில்லை. முடிவில் தான் அமர்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து  அவள் முன் நின்றிவன், முகத்தை மறைத்திருந்த அவள் கையைய் வலுக்கட்டாயமாக எடுத்து விட்டு, அவள் கையில் புதைந்து இருந்த அவள் முகத்தை தன் வயிற்றுக்கு இடம் மாற்றி அழுத்தி கொள்ள.

என்ன காரணத்துக்காக அவன் அவ்வாறு  செய்தானோ….அதன் பலன் எதிர்வினை கொடுத்தது.

ஆம் அவள் அழுகை குறைவதற்க்கு பதில் சத்தம் போட்டு அழுக அராம்பித்தாள்.

அதுவும் அவள் கண்ணீர் துளி தன், வயிற்று பகுதியில் சட்டையும் மீறி ஈரம் படுவதை உணர்ந்து…

“மஞ்சு மஞ்சு என் முகத்தை பார்…..” தன் வயிற்றில் புதைத்திருந்தவளை தன் இருகைய்யின்  உள்ளங்கை அவள் கன்னத்தை பிடித்து தன் முகம் பார்க்க வைத்தான்.

உட்கார்ந்த வாக்கில் அண்ணாந்து தன் முகத்தை பார்த்த மஞ்சுவின் அழுகை முகமும் , சிவந்த கண்களும், சோர்ந்த தோற்றமும் பார்த்து அவளை எழுப்பி தன் அணைப்புக்குள் கொண்டு வந்தவன், அவள் முதுகை தடவியே வாறே…..”ரிலாக்ஸ்….ரிலாக்ஸ்…..” அதை தவிர அவன் வாய் வேறு எதுவும் உச்சரிக்கவில்லை.

ஏதோ ஒரு மெஸ்மெரிசத்துக்கு கட்டு பட்டது போல் மஞ்சுவின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.

“இப்போது ஓகேவா…..?” திரும்பவும் அவள் கன்னத்தை தன் இரு கைய் உள்ளங்கை வைத்து அவள் கண்ணை  நேர்க் கொண்டு பார்த்து கேட்கும் வேளையில்…..

“சார்…..” என்ற அழைப்போடு அந்த அறையின் வாயிலில் மஞ்சு நின்றுக் கொண்டு இருந்தது போல் கதிர் நின்றுக் கொண்டு இருந்தான்.

கதிரின் அழைப்பில் தன் உணர்வு பெற்ற மஞ்சு அப்போது தான் ருத்ரனின் மிக அண்மையில் தான் நின்றுக் கொண்டு இருப்பதை உணர்ந்தாள்.(அப்போ அவன் அணைப்பை அவள் உணரவே இல்லையா….?)

அவசர அவசரமாக அவனை விட்டு விலக. ருத்ரனோ….சாதரணமாக…. “வா கதிர்.” என்று அழைத்தாலுமே….எப்போதும் தன் அறைக்கு வராதவன் இப்போது எதற்க்கு வந்து இருக்கிறான் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

மஞ்சு, ருத்ரன் நெருக்கமாக நின்றுக் கொண்டு இருந்ததை பார்த்த கதிர், யோசனையுடம் மஞ்சுவின் முகத்தை பார்த்தான். அழுது அழுது ஓய்ந்து போன தோற்றத்தை பார்த்ததும்,மஞ்சுவுக்கு ஏதோ பிரச்சனை போல் அது தான் ருத்ரன்சார் ஆறுதல் படுத்தி இருப்பார் என்று சரியாக கணித்தான். மனிதர்களை கணிக்க தெரிந்த அந்த நல்லவன்.

மேலும் இனி  மஞ்சுவை பற்றி  நாம் கவலை பட தேவையில்லை. இனி அனைத்தும் ருத்ரன் சார் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் வந்தது.

மஞ்சு எப்போதும் தூக்கணாங் கூடுவையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து, கதிருக்கு அய்யோ என்று இருக்கும்.

தன் அன்னையின் மூலம் மஞ்சுவை பற்றி அனைத்தும் அறிந்திருந்தான். அதனால் தான் அவள் தனிமையில் இருக்கும் போது எல்லாம் தானே முன் போய் அவளிடம் பேசி நட்பை ஏற்படுத்திக் கொண்டது.

முதலில் கொஞ்சம் தயங்கினாலும் போக, போக , மஞ்சுவும் கதிரின் நட்பை ஏற்றுக் கொண்டு பேச ஆராம்பித்தாள்.

அவனால் முடிந்த மட்டும் மஞ்சுவிடம் அனுசரனையாக இருந்தான். இருந்தாலும்  வீட்டில் இருக்கும் ஒருத்தர் அவளுக்கு துணையாக இருந்தால் நன்றாக இருக்கும், என்று அடிக்கடி நினைத்துக் கொள்வான்.

அதை பற்றி தன் அன்னையிடம் சொல்லியும் இருக்கிறான். அப்போது  மலரம்மா…..” நம்ம சின்ன பாப்பா…தன் அக்கா கிட்ட பாசமா தான் இருக்கும் கதிரு.அதுவும் இல்லாம நம்ம பெரியாம்மா தவிர எல்லோரும் அது கிட்ட பேச தான் செய்யிறாங்க. ஆனா இந்த புள்ள தான் யாரு கிட்டேயும் ஒட்ட மாட்டேங்குது. சிறிது ஆதாங்கத்துடன் தான் மலரம்மா பேச்சு முடிந்தது.

தன் அன்னையிடம் அதற்க்கு எதுவும் சொல்லவில்லை என்றாலும் மஞ்சுவின் நிலையை ஒரு  நண்பனாய் அவனால் உணர முடிந்தது.

மஞ்சு இப்போதாவது தன் வீட்டு ஆட்களிடம் தன் பிரச்சனையைய் சொல்ல ஆராம்பித்து இருக்கிறாளே …. அதை நினைத்து கதிர் மனதுக்குள் சந்தோஷப்பட்டவாறே….

அறைக்குள் நுழைந்ததும், மஞ்சுவை பார்த்து சிரித்துக் கொண்டே தன் கையில் கொண்டு வந்தவற்றை ருத்ரனிடம்  நீட்டினான்.

அதை வாங்கி பார்த்தவன்… “ஓ நன்கொடையா…. எதற்க்கு….?”  இப்போது அதில் இருப்பதை படித்து பார்க்கும் மூடில் இல்லை அவன்.

“நான் சின்ன வயசுல இருந்து ஓர் ஆப்னேஜரிக்கு சர்வீஸ் செஞ்சிட்டு இருந்தேன். அந்த பில்டிங் ரொம்ப பழசாயி இடிஞ்சி விழற ஸ்டேஜூல இருக்கு. அதான் நாங்க எல்லாம் கலெக்ஷன் பண்ணி புது பில்டிங் கட்டலாமுன்னு.” என்று சொல்லி  நிறுத்தியதும்,

“வெரி குட். உன்ன பத்தி நான் தெரிஞ்சிக்க வேண்டியது  நிறைய இருக்கு போலவே….” அவனை பாராட்டிய வாறே…

தன் செக்புக்கை எடுக்கும் வேளயில்….. “நான்  போகட்டுமா…..?” தலை குனிந்துக் கொண்டே ருத்ரனிடம் அனுமதி கேட்டாள்.

மஞ்சுவுக்கு தான் என்ன உணர்கிறோம் என்று  அவளாளேயே சரியாக உணர முடியவில்லை. எப்படி அவ்வளவு அருகில் சென்றேன். நானே போனேனா….அவராய் வந்தாரா…..

நான் உட்கார்ந்து தானே இருந்தேன். எப்படி எழுந்து நின்றேன். இப்படி சந்தேகம் அவள் மனதில் அணிவகுத்து நின்றது என்றால்….

அடுத்தது கூச்சம் அவளை பிடிங்கு திண்றது.அதுவும் ருத்ரனுடன் அவ்வளவு  நெருக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்ததை பார்த்து கதிர் என்ன நினைத்துக் கொண்டு இருப்பானோ….இருவர் முகத்தையும் பார்க்காது தலை சொன்னவளின் பேச்சில்…

தன் தேடுதலை நிறுத்துயவன்…

“ இரு மஞ்சு. தோ செக்கில் கைய்யெழுத்து போட்டு கொடுத்துடுறேன்.” என்று சொன்னவனுக்கு ஆதரவாய் கதிரும்…

“ஆமாம் மஞ்சு. நீ இரு. நான் சார் கொடுத்ததும் வாங்கிட்டு போயிடுவேன்.” என்று மஞ்சுவிடம் சொன்னவன்.

ருத்ரனிடம்….. “மஞ்சு கூட பேசிட்டு இருக்குறது தெரிஞ்சி இருந்தா நான்  பிறகு வந்து இருப்பேன். ” மன்னிப்பு வேண்டியவனிடம்,

“பரவாயில்லை…..” என்ற ஒற்ற சொல்லோடு செக் புக்கை எடுத்து கதிர் எதிர் பார்க்காத அளவுக்கு ஒரு தொகை நிரப்பி கொடுத்ததை பார்த்து …

“ நான் இவ்வளவு தொகை எதிர்ப்பார்கல சார்.” என்று அதிசயத்து சொன்னதும்,

“ரொம்ப எல்லாம் அதிசயத்துக்காத. தொழில் செய்யிறவன் காரணம் இல்லாம பெரிய தொகை கொடுக்க மாட்டான். இந்த தொகைக்கு வரி குறைப்பு வரும்.” என்று சொன்னவனிடம்…

“தேங்ஸ் சார்.” என்று விடைபெற்றவன். மஞ்சுவிடன்  ஒரு தலையசைப்பும் கொடுக்க தவரவில்லை.

கதிர் செல்வதற்க்கு என்று காத்திருந்தது போல்…. “நானும் போறேன்.” அவள் சொன்ன விதம் ஒரு சிறு பிள்ளையின் அடம் போல் இருந்தது.

இன்று இதற்க்கு மேல் மஞ்சுவிடம் ருத்ரனும் பேச விரும்பவில்லை. கதிர் வந்ததும் ,மஞ்சுவை அனுப்புவது அவனுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் அவளை நிறுத்தி வைத்தான். அதனால் “சரி….” அவள் போக அனுமதி கொடுத்ததும், அவள் போகாமல் அதே இடத்தில் நின்றுக் கொண்டு இருந்தாள்.

ருத்ரன் இரு என்று  சொன்னதும், இன்னும் என்ன ….?என்ன ….? பேச போகிறானோ…..என்று இருந்தவளிடம், “சரி போ…..” அவன் பேச்சில் அப்படியே நின்று விட்டாள்.

அந்த இடத்திலேயே நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து…. “இப்போ மலரம்மா பால் கொடுத்து அனுப்புவாங்க. உனக்கும் சேர்த்து கொடுத்து அனுப்ப சொல்லட்டுமா…..?” இன்டர்காமை எடுத்து வாறே கேட்க.

“ அய்யோ….வேண்டாம்.” என்று அந்த இடத்தை விட்டு ஓடியவள், பின் பக்க தோட்டத்துக்கு செல்ல கூடிய படிக்கட்டின் வழியே   தோட்டத்துக்கு வந்து நின்றாள்.

ருத்ரன் கொடுத்த செக்கை வாங்கிக் கொண்டு வந்த கதிரை …..“என்னப்பா ருத்ரன் கொடுத்தானா……?” கதிரை ருத்ரன் அறைக்கு அனுப்பி வைத்த  அகிலாண்ட நாயகி கேட்டார்.

ஆம் எப்போதும் வீட்டுக்கு காரணம் இல்லாமல் வராத கதிரை அப்போது தான் ருத்ரன் சாப்பிட வருவான் வருவான் என்று காத்திருந்தவரிடம் மலரம்மா தயங்கி தயங்கி….. “தம்பி சாப்பிட அவர் அறைக்கே கொடுத்து அனுப்பிட சொல்லிடுச்சிம்மா……” என்றதும், ஒரு நிமிடம் தன் முகம் மாறினாலும், வேலையாள்  முன்னால் தன் கம்பீரத்தை இழக்காமல்……

“அப்படியா….?” என்றதோடு மலரம்மாவுக்கு

வித்தியாசமாக தெரியகூடாது என்று ஏதோ சாப்பிட்டேன் என்று சாப்பிடு எழுந்தவரின் கண்ணில் கதிர் பட.

“என்ன விஷயம் கதிர்….?” என்று கேட்டதுக்கு, தான் வந்த காரணத்தை சொன்னதும், “அப்படியா நல்ல விஷயம் ஆச்சே…ருத்ரன் அவன் ரூமில் தான் இருக்கான். போப்பா போ அவன் தூங்குறதுக்குள்ள வாங்கிடு.” ருத்ரனின் மனநிலை தெரிய கதிரை அவன் அறைக்கு அனுப்பி வைத்தார்.

ருத்ரன் அறைக்கு மஞ்சு சென்று இருப்பது அகிலாண்ட நாயகிக்கே தெரியாத ஒன்று. வேலையாளை ஒரு தூரத்தில் தான் நிறுத்தி வைக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மா என்னடா….இன்று அவரே ருத்ரன் சார் அறைக்கு அனுப்பி வைக்கிறார்.

ஏதாவது உள்குத்து இருக்குமா….?என்று சந்தேகத்துடன் தான் கதிர் ருத்ரன் அறைக்கு சென்றது….

இப்போது தன்னிடம்  துருவி கேட்பதை பார்த்தால்…..இந்த அம்மா மஞ்சு ருத்ரன் சார் அறையில் இருப்பதை தெரிந்து கேட்குறாங்கலா….?இல்ல தெரியாத….?

எதற்க்கும் ஜாக்கிரத்தையாகவே பதில் அளிப்போம் என்று கையில் இருந்த செக்கை காண்பித்து…. “கொடுத்துட்டாரு  மேடம்.” என்று அடுத்து அவரை பேசவிடாது அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அகிலாண்ட நாயகிக்கு பேரனின் இந்த மாற்றம் ஏனோ அடிமனதில் பயம்  கொள்ள வைத்தது. எப்போதும் தன்னிடம் பாசத்துடன் பேசும் ருத்ரன், எந்த ஊருக்கு சென்று வந்தாலும் அதை பற்றி  தன்னிடம் பேசாது இருக்க மாட்டான்.

அப்படி பட்டவன் மஞ்சுவுக்கா தன்னை உதாசினப்படுத்தி விட்டானோ…..முதலில் சந்தேகத்துடன் அதை பற்றி நினைக்க ஆராம்பித்தவர் போக போக…

சந்தேகம் இல்லை அது தான் உண்மை. கடந்த  சில நிகழ்வுகளை வைத்து உறுதி படுத்திக் கொண்டவர் ஒரு முடிவோடு தன் மகன் அறை வாயிலில்   கதவை தட்டிய வாறே நின்றான்.

“என்னம்மா இந்த நேரத்துல…..?”

“ஏம்பா ஒரு மகன் கிட்ட பேச நேரம் பார்த்து வரனுமா…..?” எப்போது இது போல் சென்டிமென்ட் பேச்சு என்பது அகிலாண்ட நாயகியிடம் இருக்காது.

தான் நினைப்பதை தேங்காய் போல் உடைத்து பேச கூடியவர். ஆனால் இன்று பேச வேண்டிய விஷயத்துக்கு இந்த பேச்சு அவசியம் என்று உணர்ந்தே  தழைந்து பேசினார்.

“என்னம்மா இது ….வாங்க …..வாங்க.” தங்கள் அறைக்கு தயாநிதி அழைத்தார்.

அகிலாண்ட நாயகியும் எந்த மறுப்பும் சொல்லாது….. “இந்த விஷயத்தை மகியோடு தான் உன் கிட்ட பேசனும். அவ தூங்கிட்டாளா…..?” என்ற பேச்சியவாறே அறைக்குள் வந்தவருக்கு அங்கு மருமகள் இல்லாது போக,

“எங்கேப்பா மகி…..” என்று  கேட்பதற்க்கும் குளியல் அறையில் இருந்து மகேஸ்வரி வருவதற்க்கும் சரியாக இருந்தது.

தங்கள் கட்டிலில் மாமியார் அமர்ந்து இருப்பதை பார்த்து, தங்கி அப்படியே நின்று விட்டாள் மகேஸ்வரி.

திருமணம் ஆனா இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட தங்கள் அறைக்கு மாமியார் வந்தது இல்லை. இன்று ஏன்…..?

மாலை நடந்த நிகழ்வால் தன் பெரிய மகள் இனி இங்கு இருக்க கூடாது என்று சொல்ல வந்து இருக்கிறாரோ…..கடவுளே  அப்படி சொன்னால்…..நான் என்ன செய்வது…..?

பெரிய மகளுக்காக அவளுடன் செல்வதா….?  இல்லை சின்ன மகளுக்காக இவருக்கு மருமகளாய் இருப்பதா…..?

முடிவில் சின்ன மகளுக்கு இத்தனை பேர் இருக்கிறார்கள். பெரிய பெண்ணுக்கு இத்தனை ஆண்டு செய்ய முடியாததை செய்ய தான் அவர் ஆசை பட்டார். ஆனால்  அதற்க்கு முதலில் அவள் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமே… மனதில் கலக்கத்துடன் நின்றுக் கொண்டு இருந்த மருமகளை…..

“வாம்மா வா….…..” எப்போதும் இல்லாத குரலில்  அழைத்த அகிலாண்ட நாயகி தன் பகத்தில் அமர சொன்னதும் தயக்கத்துடம் அமர்ந்துக் கொண்டே தன் கணவனை பார்த்தாள்.

தயாநிதியும் அப்போது தன் மனைவியே தான் பார்த்துக் கொண்டு இருந்தார். மகி தன்னை பார்த்ததும், கண்ணால் கவலை படாதே என்று ஆறுதல் படுத்துவது போல் தன் இமையை  மூடி திறக்க.

மகள் தன்னோடு இல்லாத போது கூட தான் இந்த வேதனை அனுபவிக்க வில்லை. ஆனால் ஒரே வீட்டில் இருந்துக் கொண்டு….தன்னோடு முகம் கொடுத்து பேசாததை நினைத்து அதற்க்கு காரணம் இவர் தானே….சமீபத்திய எண்ணம் மகேஸ்வரிக்கு,

அதனால் கணவனின் ஆறுதலை கணக்கில் கொள்ளாது தன் மாமியாரை பார்த்தாள்.

தயாநிதியும் தன்னோடு அமர வைத்துக் கொண்ட அகிலாண்ட நாயகி….. “தயா  நீ உன் நண்பன் கங்காதரன் மகனை பத்தி என்ன நினைக்கிற….?” என்று கேள்வியோடு மகன் மருமகளை பார்த்தார்.

Advertisement