Advertisement

அத்தியாயம்—-13

ருத்ரனின் அறை கீழ் தளத்தின் பாதியைய் உள்ளடக்கி  கட்டப்பட்டது போல் இருந்தது. இரண்டாம் தளத்தில் அமைந்து இருந்த அந்த அறையில், முதன் முதலாக காலடி எடுத்து வைத்த மஞ்சு.

அந்த அறையின் பிரமாண்ட அமைப்பில் வியந்து  அங்கு அங்கு அமைந்து இருந்த கலைநயமிக்க பொருட்களை ஆர்வத்துடன் பார்த்திருந்தாலும்…

“எதுக்கு கூப்பிட்டு அனுப்பிச்சாங்க…..?” என்ற கேள்வி மனதில் எழுந்ததால்….முழுமனதுடன் அதை ரசிக்க முடியாது, கண்ணை சுழலவிட்ட மஞ்சுவுக்கு, ருத்ரன் கண்ணில் படாது போகவே…எங்கு போனார்…..? என்று யோசிக்கும் வேளயில், ஒரு கதவின் உள் இருந்து தண்ணீர் விழும் சத்தத்தில் ….. “ஓ….குளிக்கிறாரோ….?” என்று  நினைத்தவளுக்கு அந்த அறையின் பால்கனியில் அமைந்து இருந்த ஊஞ்சல் அவளை வா…வா….என்று அழைக்க.

ஒரு நிமிடம் குளியல் அறையின் கதவை பார்த்தவள். பின் சரி அவர் வருவதற்குள் அதில் உட்கார்ந்து விடுவோம், என்று  நினைத்து அதில் அமர்ந்தவளுக்கு அதில் இருந்து எழவே மனது இல்லை.

அதுவும் அந்த ஊஞ்சலில் அமர்ந்தால், நேர் எதிர் தூக்கணாங்கூடு தெறிய. நம் மஞ்சுவுக்கு கேட்கவும் வேண்டுமோ….?

பாதி குளியலில் இருந்த ருத்ரனுக்கு தன் அறையின் கதவு திறக்கும் சத்தமும், தொடர்ந்து மெல்லிய சலங்கை ஒளியிலும், மஞ்சு வந்து விட்டாள் என்று  அவசர அவசரமாக குளித்து விட்டு ஒரு பெரிய டவளை இடுப்பில் சுற்றியவன், மற்றோரு சிறிய டவல் கொண்டு நனைந்த தன் முடியை துடைத்துக் கொண்டே வந்தவனுக்கு,  தான் போன மாதம் ராஜஸ்தானில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த கல்பதித்த சிகப்பு கலர்குர்த்தியும், கருப்பு கலர் பட்டியாலாவும், போட்டு கொண்டு, அந்த இளம் வெயில் மஞ்சுவின் முகத்தில் பட,

இருபக்கமும் ஊஞ்சலில் இருந்த சங்கிலியை  பிடித்துக் கொண்டு , தரைக்கும் நோகுமோ என்று, தன் கால்பாதத்தில் இருக்கும் கட்டை விரலை மட்டும் தரையில் மெல்ல பதித்து எடுத்து விட்டதில் அந்த ஊஞ்சல் ஆடிய மெல்லிய ஆட்டத்தில், முகத்தில் புன்னகை ததும்ப தன் நேர் எதிர் இருந்த தூக்கணாங்கூடை பார்த்துக் கொண்டு இருந்தவளின் வரிவடிவம், ஒரு தேர்ந்த சிற்ப்பி செதுக்கிய சிற்பம் போல் இருந்தது.

எவ்வளவு நேரம் தன்னை மறந்து பார்த்து இருந்தானோ…..ருத்ரனின் கைய் பேசி ஓசையில் அவனை மட்டும் இல்லாது மஞ்சுவையும் நினைவுலகுக்கு கொண்டு வர.

சத்தம் வந்த திசை பக்கம் மஞ்சு திரும்பி பார்க்க. அங்கு ருத்ரனின் முதுகு மட்டுமே கண்ணில் பட. அய்யோ என்று அவசரமாக எழுந்ததால்…..ஊஞ்சலின் முனை பகுதி மஞ்சுவின் கால் முட்டியின் பின்பக்கம் பட்டு விட.

“அம்மா….” என்று தரையில் அமரவும். அவள் சத்தத்தில் திரும்பி பார்த்த ருத்ரன், கைய்பேசியில்  அவசரமாக…. “பிறகு அழைக்கிறேன்.” என்று வைத்து விட்டு மஞ்சுவின் அருகில் ஓடி வந்தவன்.

“என்ன அவசரம் கொஞ்சம் மெதுவா தான் இறங்குறது.” என்று அவளை கடிந்துக் கொண்டே,  மஞ்சு தேய்துக் கொண்டு இருந்த பகுதியில் இருந்து அவள் கை விலக்கி விட்டு, அவள் வேலையை ருத்ரன் தொடர.

வெற்று  மார்புடன் அரைகுறை உடையில் அமர்ந்து இருந்தவனை கண் கொண்டு பார்க்க முடியாது தலை குனிந்து, “பரவாயில்ல. இப்போ வலிக்கலே…” என்று  பேச்சுக் கூட தடைப்பட பேசியவளின் பேச்சை காதில் வாங்காது தேய்த்து விட்டு விட்டு,

அதே ஊஞ்சலில் அவளை அமரவைத்தவன் , “ இப்போ பெட்டரா இருக்கா….?” என்று கேட்டதுக்கு அவனை நிமிர்ந்து பார்த்து அவசரமாக தலைகுனியவும் தான் தன் நிலை உணர்ந்து…

அவள் சங்கடத்தை அதிகரிக்காது…”இங்கேயே  உட்காரு தோ வர்றேன்.” என்று சொல்லி விட்டு அவசரமாக தன் உடையை அணிந்துக் கொண்டு அவள் அமர்ந்து இருந்த ஊஞ்சலின் ஒரு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டவன்.

“இப்போ ஓகேவா….?” அவன் எதற்க்கு கேட்கிறான் என்று தெரியாமலேயே தலையைய் மையமாக ஆட்டியவளின் சின்ன ஜிமிக்கியும் சேர்ந்து ஆட.

அந்த ஜிமிக்கியை தன் ஒரு விரல் கொண்டு ஆட்டி விட்டு ரசனையுடன்…. “இது எப்போது வாங்குனது….?” இது கேட்கவா கூப்பிட்டான் என்று மனதில் நினைத்தாலும், அவன் கேட்ட கேள்விக்கு பதில் தன்னால்…. “ எனக்கு மொட்டை  அடிக்கும் போது போட்டது.”

“ குழந்தைக்கு கம்பல் ஜிமிக்கியா….? அதுவும் பெருசா….?” இந்த வயதுக்கு சிறியதாக அழகாக இருந்த ஜிமிக்கி, குழந்தை என்று வரும் போது பெருசு தானே….? குழந்தையின் மெல்லிய காது எப்படி தாங்கும்…என்ற ஆதாங்கத்தில் கேட்க.

“எனக்கு ஐந்து வயதில் தான் மொட்டை அடித்து காது குத்தினது.” குழந்தை  இல்லை என்று விவரித்தவளின் பேச்சில்,… “ஐந்து வயது ஒன்னும் பெரிய வயது இல்ல.” என்று சொன்னவன்.

“ஏன் ஐந்து வயதுக்கு மொட்ட போட்டாங்க….?பொதுவா ஒரு வயது..இல்லேன்னா மூனு வயசுக்கு தானே மொட்டை போடுவாங்க….?” என்று  கேட்டதுக்கு,… “ தெரியவில்லை.” என்ற உடல் பிதுக்கலே பதிலாய் அவனுக்கு கிடைத்தது.

உண்மையாகவே மஞ்சுவுக்கு தெரியாது தான். குழந்தை பிறப்பதற்க்கு முன்னவே  கணவன் இறந்த நிலையில், தன் தந்தை மொட்டை அடிப்பது பற்றி கேட்டதும், வாழ்கையே விரக்தியில் இருந்த மகேஸ்வரி…. “ இப்போ வேண்டாம்  மூன்றாம் வயதில் பார்த்துக்கலாம்.” என்று தட்டி கழிக்க.

குழந்தையின் ஒன்றரை  வயதாக இருக்கும் போது மறுமணம்  செய்துக் கொண்ட மகேஸ்வரி, மஞ்சுவின் முன்றரை வயதில் மொட்டை அடிக்கலாம் என்று தாத்தா யோசிக்கும் போது மகேஸ்வரி குழந்தை உண்டாகி இருப்பது கேள்வி பட்டவுடன்….

“என்ன தான் வரப்போக இல்லை என்றாலும் ஒரு குழந்தை உண்டாகி இருக்கும் போது மற்றோரு குழந்தைக்கு மொட்டை அடிக்க கூடாது.”  என்று மஞ்சுவின் பாட்டி சொல்லி விட்டதால் மஞ்சுவுக்கு ஐந்து வயதில் மொட்டை அடிக்க வேண்டியாதி விட்டது.

எதுவும் சொல்லாது தன்னையே பார்த்திருந்த  ருத்ரனை பார்த்து… “எதுக்கு கூப்பிட்டிங்க….?” தயங்கி தயங்கி கேட்டவளிடம்,

திரும்பவும் சம்மந்தமே இல்லாது… “அது என்ன எந்த உறவும் இல்லாது கூப்பிடுற….உனக்கு நான் என்ன உறவு ஆகனுமுன்னு தெரியும்லே…..?” என்ற கேள்விக்கு.

பலமாக “தெரியும்.” என்பது போல் தலையாடியவளின் தலை பிடித்து நிறுத்தியவன்.

“ம் சொல்லு என்ன உறவு….?”

“மது கூப்பிடும் அத்தான்.”

“ஆ அத்தான். மதுவுக்கு மட்டும் இல்ல உனக்கும் நான் அத்தான் முறை தான்.” என்று  சொன்னவன்.

“என்ன கூப்பிடுவியா….?” என்று கேட்டதுக்கு,

“ நான் இன்னும் சாப்பாடு என் அறையில் தான் சாப்பிடுறேன். எப்போ என்னை பாட்டி எல்லோரும் சாப்பிடும் டையினிங் டேபிளில் சாப்பிட்ட அலோ பண்றாங்கலோ, அப்போ உங்கல உறவு முறை வெச்சி கூப்பிடுறேன்.”

தயங்கி, தயங்கி என்றாலும் தன் மனதில் தோன்றியதை தைரியமாக  சொல்லி விட்டாள்.

மஞ்சுவின் பேச்சுக்கு பதில் பேச்சு ருத்ரனால் பேசமுடியவில்லை. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் பின்….”சீக்கிரம் என்னை அத்தான்னு கூப்பிடுவ.” என்ற சொல்லோடு நிறுத்துயவனை நம்பாத ஒரு பார்வை பார்த்தவளிடம்…”நிஜமா நடக்கும். இந்த அத்தான நம்புமா…..” அவன் சொன்ன பாவனையில் லேசாக அவள் இதழில் சிறு புன்னகை பூத்தது.

“எப்போவும் இதே மாதிரி சிரிச்சிட்டே இரு மஞ்சு. பாக்க அழகா இருக்கு.”

“ இப்படி சிரிச்சிட்டே  இருந்தா என்ன அழகின்னு சொல்ல மாட்டாங்க. பைத்தியமுன்னு தான் சொல்லுவாங்க. எப்போவாவது செய்தா தான் அந்த  செயலுக்கு மதிப்பு.” அவள் பேச்சில் முன் இல்லாத மாற்றம்.

அவள் பேச்சின் மாற்றத்தில் அவளை எதுக்கு அழைத்தோம் என்பது நியாபகத்தில் வர, ட்ராயரில் இருந்து  தான் கொண்டு வந்த மேக்கப் கிட்டை எடுத்து வந்து கொடுக்க.

அதை ஆவளாக திறந்து  பார்த்தவளிடம்….. “பிடித்து இருக்கா…..?” என்று  கேட்க.

கண்ணில் ஒளி மின்ன… “ரொம்ப…” என்று சொன்னவள்.

“தேங்ஸ்….” என்று சொல்ல.

“நீ என்ன அத்தானா ஏத்துக்கலேன்னாலும், நான் உன்ன மாமா பொண்ணா  ஏத்து ரொம்ப நாள் ஆச்சி. அதனால இந்த தேங்ஸ் எல்லாம் வேண்டாம்.” என்று சொன்னவன்.

பின் இதை கேட்கலாமா…?வேண்டாமா….? என்று யோசித்தவனுக்கு கேட்டு விடுவது தான் நல்லது என்று  தோன்றி விட.

“ நான் பேஸ் புக் பாக்கும் போது எல்லாம்  நீ ஆன்லைனிலேயே இருக்கியே…அதுவும் நைட் பதினோரு  மணிக்கும்.” ருத்ரன் பேச பேச இத்தனை நேரம் இருந்த இலகு தன்மை மறைந்து முகத்தில் பதட்டம்  குடி கொண்ட வாறே…

“ எ…ந் கூட படிக்கிற  பெண் கூட தான் சேட்டிங் செய்துட்டு இருப்பேன்.” அவள் பேச்சில்…

“ ஓ அப்படியா….” அதோடு தன் பேச்சை முடித்துக் கொண்டவன்.  “சரி மஞ்சு நீ போ…” என்றது தான்.

“சரி…” என்பதாய்  தலையாட்டி விட்டு, அந்த இடத்தை விட்டு ஓடியே விட்டாள்.

ஊஞ்சலை விட்டு எழுந்து நின்று பின் பக்க தோட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்த ருத்ரனின் மனதில் ஆயிரெத்தெட்டு சந்தேகங்கள் அணிவகுத்து நின்றான.

இந்த ஒரு வருடமாக தான் வெளிநாட்டில் இருந்து வரும் போது எல்லாம் மதுவோடு மஞ்சுவுக்கும் பரிசு பொருள் வாங்கி வந்து கொடுத்து இருக்கிறான்.

ஆனால் அதை எல்லாம் மஞ்சு பயன் படுத்தி அவன் பார்த்த்தே இல்லை. சமீபகாலமாய் தான் கொடுத்ததை எல்லாம் பயன் படுத்துகிறாள்.

ஏன் இன்று அணிந்து இருந்த குர்த்தி கூட போன வருடம் ராஜஸ்தான் சென்று வந்த போது இருவருக்கும் ஒரே போல் வாங்கி வந்தான்.

மது அதை போட்டு பழசே கூட ஆக்கி இருப்பாள். ஆனால் மஞ்சு அதை இப்போது தான் உபயோகப்படித்துகிறாள் என்பதை ஆடையின் பொலிவு காட்டி கொடுத்தது.

இது மட்டும் இல்லாது  மஞ்சுவிடம் ஏகப்பட்ட மாற்றம்.குறிப்பாய் ஆடை அணிகலன் அணிவதில்…..

கல்லூரி செல்வதால் மட்டும் தான்  இந்த மாற்றம் என்றால் பரவாயில்லை.  அவன் நினைவை தடை செய்யும் வகையாக திரும்ப தன் காலை தரையில் டம், டம் என்று நடந்து வந்த மது….

“என் கிட்ட எப்போ எது கொடுத்தாலும், அக்காக்கு கொடுன்னு கொடுப்பிங்கலே….இன்னிக்கி அக்கா கிட்ட கொடுக்கும் போது தங்கச்சிக்கு கொடுன்னு எதுவும் கொடுக்கலையா…..?”

அவள் கேட்டவிதமும், கேட்கும் போது அவள் முகமாற்றமும் பார்த்து இத்தனை நேரம் இருந்த சிந்தனை சடுதியில் பறந்தோட…

“இது மாதிரி பேச உன்னால மட்டும் தான் முடியும் மதும்மா….” என்று செல்லம் கொஞ்சவனின் பேச்சில் மயங்காது.

“நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லலே அத்தான்.” தன் பேச்சிலேயே குறியாக இருக்க.

தன் இரண்டு காதிலும் கை வைத்தவன்.  “சாரி மதும்மா…அவ கிட்ட பேசிட்டே கொடுத்தேனா….அதுல மறந்து போயிடுச்சி.” என்று ருத்ரன் சொன்னதும்,

“நீங்க மட்டும் தானே பேசிட்டு இருப்பிங்க. அக்கா வாய் திறந்து இருக்க மாட்டாங்கலே…..” என்று சொன்ன மதுவிடம்,

“ இல்ல  இன்னிக்கி என்னோட உங்க அக்கா தான் நிறைய பேசினா….” என்று சொன்னதும்,

பேச்சி வாக்கில்…. “ஆமா ஆமா… சேட்டிங் பண்ண ஆராம்பிச்சதுல இருந்து இப்போ எல்லாம் நிறைய பேசுறாங்க.” என்று சொன்னவளின் முகத்தையே பார்த்திருந்த ருத்ரனை பார்த்த மது…

“என்ன அத்தான் எதுவும் பேசாம என்னையே பார்த்துட்டு இருக்கிங்க. நான் என்ன அம்புட்டு அழகாவா இருக்கேன்.” எப்போதும் தன் அத்தானிடம் வம்பு வளர்ப்பது போல் பேச.

ஆனால் ருத்ரனோ எப்போதும் போல்  அவள் வம்பு பேச்சுக்கு பதில் பேச்சு பேசாது அமைதியாக அவளையே பார்த்திருந்தவன்.

“சொல். உன் அக்காவை பத்தி சொல்.” ருத்ரன் நேரிடையாக விசாரணையில்  இறங்க.

“அக்காவ பத்தியா…..அக்காவை பத்தி என்ன சொல்லனும்….?” பாவம் பேச்சி வாக்கில் தான் என்ன சொன்னோம் என்று கூட தெரியாது கேட்டவளிடம்.

“அது தான் உங்க அக்கா சேட்டிங்கை பத்தி.” என்று சொன்னதும் தான்…அய்யோ உலறி வைத்து விட்டோமே….என்று  மனது பதறினாலும் அதை முகத்தில் கொண்டு வராது.

“காலேஜ்  லைப்பில சேட்டிங், ராகிங், டேட்டிங். இதெல்லாம் சகஜம் அத்தான்.” என்று சொல்லியும் கூட விடாது தன்னை பார்த்துக் கொண்டு இருந்த ருத்ரனை சமாளி மதுடா சமாளி…

உன் பேச்சில் உன் அக்கா எதிர்காலமே இருக்கு. மதுவுக்கு தன் அக்கா ஓவியனின் பழக்கத்தால் தான் முன்னை விட சிரிக்கிறாள். தன்னை அழகு படுத்திக் கொள்கிறாள். தன்னிடம் முன்னை விட நெருக்கம் காட்டுகிறாள்.

ஓவியனால் தான் இது எல்லாம் என்றால். அக்கா அந்த ஒவியனையே திருமணம் செய்துக் கொண்டாள். அந்த சிறுபெண்ணுக்கு அது தான் தோன்றியது.

அதனால்  அக்காவை அத்தானிடம் மாட்டி விடாது…. “என்ன அத்தான் எனக்கு மேக்கப் கிட் கொடுக்கலேன்னு பேச்ச மாத்த பாக்காதிங்க.” அவன் தன்னை சந்தேகத்துடன் கேட்கிறான் என்பதை அறியாது போல் வெகுளியாக பேசுவது போல்  ருத்ரனிடம் பேசினாள்.

மது ருத்ரனிடம் மறைக்கும் உண்மை. மஞ்சுவுக்கு நன்மை தருமா…..?இல்லை தீங்கு விளைவிக்குமா…..?

 

Advertisement