Advertisement

அத்தியாயம்—-12

தான் விரும்பிய படிப்பு படித்ததாலோ, கதிரின் நட்பாலோ, இல்லை தனியாக வளர்ந்தவளுக்கு சகோதரி என்று புது உறவு கிடைத்ததாலோ….. இல்லை புது நட்பாக முகநூலில் கிடைத்த ஒவியனாலோ…..?மொத்தத்தில் இந்த ஒரு வருடமாக மஞ்சு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், முதலில் தோன்றிய அந்த தனிமை உணர்வு இல்லாது  நிம்மதியாக இருந்தாள்.

என்ன ஒன்று அப்போ, அப்போ, அகிலாண்டநாயகியின் குத்தல் பேச்சும், தொழில் நட்பு என்று  பெயர் சொல்லிக் கொண்டு அந்த வீட்டில் வந்து போகும் சாகரின் தொடர் பார்வையாலும் சங்கடம் வந்தாலும், மொத்தத்தில் வாழ்க்கை இலகுவாகவே சென்றது எனலாம்.

அதுவும் ஓவியனுடம் முகநூலில் தன் கருத்தினை பகிரும் போது, சில சமயம் அதை ஏற்றுக் கொண்டாலும், பல சமயம் அதை ஏற்காது எதிர்த்து அவனின் விவாதம் ஆரோக்கிய விவதமாக இருப்பதோடு, அது அவளுக்கு மிக பிடித்தும் இருந்தது.

ஓவியன் சென்னையில் இருக்கிறான். அதை தவிற வேறு எதுவும்  மஞ்சுவுக்கு தெரியாது . அது போல் தான் மஞ்சுவை பற்றியும் ஓவியனுக்கு ஒன்றும் தெரியாது.

ஆனாலும் அவர்களுக்குள் ஆரோகியமான நட்பு இருந்து வந்ததாக    போன மாதம் வரை கருதி வந்தாள்.

போன மாதம் அவனின் சேட்டிங்கில் சிறிது மாற்றம் இருந்தது போல் கருத்தியவள். அடுத்து அவன் சொன்ன “நான் உன்னை விரும்பிகிறேனோ…..?” என்று அவன் தன் சந்தேகத்தை கேட்கும் போது தெரிந்தது தான் அவனை விரும்புகிறேன் என்று.

எந்த பூசும் இல்லாது…. “எனக்கு அந்த சந்தேகம் இல்லை.  நான் விரும்புகிறேன்.” என்ற இவளின் ஒப்புதலால் பேச்சில் ஒரு சில மாற்றங்கள்.

மாற்றம் என்றால்….காதல் ரசம் ஓழுக என்று நினைத்து விட வேண்டாம். பல எதிர் காலதிட்டம். அவனும் தன்னை போலவே தந்தை இல்லாது வளர்ந்தவன் என்று அவன் சில பேச்சில் தெரிந்துக் கொண்டது.

அதை  தவிர அவனை பற்றி வேறு எதுவும் தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் விரும்பவில்லை. அதே போல் தான் ஓவியனும். இருவரின் புகைப்படம் பறிமாற்றம் இல்லாது ஒருவர் மேல் ஒருவர் அக்கறை கொள்ள. அங்கு ஒரு இனிதான காதல் உதையமானது.

“என்ன அக்கா இப்போ எல்லாம் உன் முகம் கொஞ்சம் ப்ரைட்டா ஆயிட்டு வருது.” மது  அப்படி சொன்னதும், தன் முகத்தை அவசரமாக துடைத்துக் கொண்ட மஞ்சு.

“சேச்சே  அதெல்லாம் இல்லை.”

“இப்போ நான் எது கேட்டேன்னு நீ இல்லேன்னு சொல்ற.”

“ஆ அது தான் முகம்…..” இந்த பேச்சிலேயே தான் உளறிவிட்டது தெரிந்து விட. பேச்சை பாதியில் நிறுத்தி உதடு  கடித்து நின்றவளை ஒரு மார்க்கமாக பார்த்த மது.

“ ஆளு சரியில்லையே. ….” என்று  சொல்லிக் கொண்டு அவளை சுற்றி பார்த்தவள்.

“நீ எவ்வளவு தான் ட்ரஸ் செய்தாலும், அவர் பார்க்க முடியாது. அப்போ எதுக்கு வேலமெனக்கெட்டு ட்ரஸ் பண்ற…..?”

“என்னடி சொல்ற…..? ஏதாவது உளறு……” அத்தோடு அப்பேச்சை முடித்துக் கொண்டு போக பார்த்தவளின் கை பிடித்து நிறுத்திய மது.

“என்ன ஓவியன்  ப்ரோப்போஸ் பண்ணிட்டாரா….?” என்ற கேள்வியில் மஞ்சுவை அதிர வைத்தாள் மது.

“என்ன அக்கா பண்ணிட்டாரா…..?எப்போ……?” மதுவுக்கு மஞ்சு  தினம்தோறும் ஓவியனோடு சேட்டிங் செய்வது தெரியும்.

முதலில் பயந்தாலும் ஓவியனின் சேட்டிங்கில் இடம் பெற்ற ஆராக்கியமான விவாதத்தில் இவன் நல்லவன் என்ற நம்பிக்கையில் அதற்க்கு ஆதரவு கொடுத்ததோடு,

எப்போதும் மஞ்சுவோடு இருக்க வேண்டும். அவள் புதியதாக ஏதாவது செய்தால் என்னிடம் சொல்ல வேண்டும். என்ற ருத்ர அத்தானின் பேச்சை கூட  கிடப்பில் போட்டு மஞ்சுவின் இந்த உரையாடலை யாருக்கும் தெரியாது வைத்துக் கொண்டாள். அந்த அளவுக்கு அக்கா, தங்கைக்கு நம்பிக்கை கொடுத்து இருந்தான் ஓவியன்.

“என்னக்கா நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே…..?” திரும்பவும் கேட்டதும்,

பயந்துக் கொண்டே…..”போன மாசம்.” என்று சொல்லி விட்டு சுற்றும், முற்றும் பார்த்தவளின் தலையை கொட்டிய மது,

“பாத்தியா இத சொல்லவே இல்லையே….நான் ஏதாவது உன் கிட்ட மறைக்கிறேனா……?இரண்டு மாசம்  முன்னாடி மகேஷ் என் கிட்ட லவ் லட்டர் கொடுத்ததும், நேரா உன் கிட்ட தானே வந்து கொடுத்தேன்.” அவள் தன் நியாயத்தை கேட்க.

மற்றதை விட்டு விட்டு… “ இப்போ அவன் உனக்கு பிரச்சனை கொடுப்பது இல்ல தானே…..?”

மகேஷ் மதுவோடு கூட படிக்கும் பையன். அவன் கொடுத்த லவ் லட்டரை பிரித்துக் கூட பார்க்காது….தன் அக்காவிடம் கொடுத்து விட்டாள்.

அதை படித்த நம் மஞ்சுக்கு தான் கைய் உதற ஆராம்பித்து விட்டது.

“ஏய் என்னடி இது லவ் லட்டர்.” என்று ஏதோ மதுவுக்கு தெரியாதது போல சொல்ல.

“நான் மட்டும் லீவ் லட்டருன்னா சொன்னேன்.” என்று சொன்னவள்.

அந்த லட்டரில் மகேஷ் செய்த கிராமர் மிஸ்ட்டேக்கை சுட்டி காட்டி….. “இவனோட லட்டர் பார்த்தா லவ் இருந்தாலும் ஓகே சொல்ல தோனாது போலவே….” என்ற மதுவின் பேச்சில் நெஞ்சில் கை வைத்தவள்.

“ஏய் என்னடி  சொல்ற….உனக்கு அவனை பிடிக்குமா…..?”

இதே பத்தாவது படிக்கும் போது தான் தன் தாத்தாவிடம் தன் திருமனத்தை பற்றி பேசியது. ஆனால் தன் தங்கை இந்த வயதில் காதலா….?அதை ஏற்றுக் கொள்ள கூட அவளால்  முடியவில்லை.

அப்போது தான் அவளுக்கு ஒன்று தோன்றியது. தன் திருமணம் பற்றி பேசும் போது தாத்தா எவ்வளவு பயந்து இருப்பார் என்று.

இவள் பயப்படுவது தேவையே இல்லை போல் தான் இருந்தது அவளின் பதில்….”என்னது லவ்வா….?இந்த வயசிலேயா….?”

அவள் பேச்சில் ஆசுவாசம் அடைந்த மஞ்சுளா…..”அப்போ எதுக்குடி இந்த லட்டர வாங்கிட்டு வந்த….?”

“அவன் கொடுத்தான்….”

“கொடுத்தா கிழிச்சிவன் எதிரேலேயே போட்டுடனும். இது மாதிரி வாங்கினா உனக்கும் விருப்பமோன்னு நினச்சி இருப்பான்.” என்று தன் தங்கைக்கு தெளிவு படுத்த…

“அப்படியாயா….நினச்சி இருப்பான்.”

“அப்படி தான் நினச்சி இருப்பான். எதுக்கு எடுத்து வந்த.” திரும்பவும் மஞ்சு கேட்டதுக்கு,

“ இது வரை நான் ஒரு லவ் லட்டர் கூட படிச்சது இல்ல அக்கா.” அதுவும்  பிரன்சுங்க எல்லோரும் பசங்க எழுதின லவ் லட்டர பத்தி சொல்லி சொல்லி சிரிச்சிப்பாங்கலா…..

அப்போ எனக்கு மட்டும் ஏன் யாரும் ஒரு லவ் லட்டர் கூட கொடுக்கலேன்னு ப்ளீங்கோ…ப்ளீங். அப்போ இவன் கொடுத்தானா டபக்குன்னு வாங்கிட்டேன்.”

என்ன தான் வயதுக்கு மீறிய முதிர்ச்சி மதுவிடம் இருந்தாலும், அந்த வயதுக்கே உறிய  ஒரு ஆர்வமும் அவளிடம் இருந்தது.

சொன்னவளின் காதை பிடித்து திருகிய மஞ்சு. “நாளைக்கு  உன் கூட வர்றேன்.” என்று சொன்னவள். சொன்னபடி மதுவோடு சென்று அந்த பையன் மகேஷிடம் பேசினாள்.

அந்த பையனுக்கோ மஞ்சுவை பார்த்ததும்  பயந்து விட்டான்.அதனால் மஞ்சு சொன்னதுக்கு எல்லாம்….

“சரிக்கா. சரிக்கா. என்ற பதிலே அவனிடம் இருந்து வந்தது. மஞ்சுவுக்கும் அந்த  பையனை பார்த்தால் தவறானவன் போல் தெரியவில்லை.

வயது கோளாரோ…இல்லை மத்த பசங்க ஏத்தி விடும் பேச்சாலோ தான் லட்டர் கொடுத்து இருப்பான் என்று அந்த விஷயத்தை அதோடு விட்டு  விட்டாள்.

இப்போது மது அந்த பேச்சு எடுத்தது கொஞ்சம் பயம் மஞ்சுவுக்கு பற்றிக் கொண்டது….”அக்கா அக்கா நீங்க பயப்படும் அளவுக்கு எல்லாம் அவன் வெர்த் இல்ல.” என்று அவளை சமாதானப்படுத்தியும்,

“அப்போ எதுக்குடி அவன் பேச்சே எடுத்த.”

“ஆ நான் எல்லாம் லட்டரே உன் கிட்ட கொடுத்தேன். நீன்னா லவ் அக்செப்ட் பண்ணத சொல்லலே. அப்போ எனக்கு எப்படி இருக்கு….. போ நான் கோச்சிக்கினேன்.” என்று முகத்தை திருப்பிக் கொண்டவளின் முகத்தை தன் பக்கம் பார்க்க  வைத்த மஞ்சு…

“சாரிடி சாரிடி தப்பு தான்.” என்று சொன்னவள் . கொஞ்சம் தயங்கி….”எனக்கு  நீ வீட்டில் சொல்லிடிவீயோன்னு கொஞ்சம் பயம் மது.” என்று சொன்னது தான்.

முதலில் விளையாட்டுக்கு கோபம் போல் நடித்தவள். இப்போது உண்மையாகவே…. எப்படி நீ அப்படி நினைக்கலாம்.” என்று கோபித்துக் கொள்ள.

மஞ்சு சில, பல சமாதானம் செய்து. பின் தன் காதல் சொன்னதை சொல்லவும். கோபம் மறந்தவளாய்….”என்னது நீ தான் சொன்னியா…..அக்கா ஆச்சரியமா இருக்குக்கா. அப்போ  உனக்கு ஓவியன் மீது அந்த அளவுக்கு காதலா….?” என்று வியந்து கேட்க.

நாயகன் படம் போல்… “தெரியல மது. ஆனா எனக்கு ஓவியன் கூட சேட்டிங் ரொம்ப பிடிச்சி இருக்கு. அவர் வேல இருக்குன்னு ஆன்லைன் வராத போது எல்லாம் அன்னிக்கு ஏதோ இழந்தா மாதிரியே இருக்கு.” தன் மனதின் எண்ணத்தை தெளிவாக விளக்க.

நம் மதுவோ….”அப்போ இது கன்பாம் காதலே…யூ கண்டினீயூ. நான் யார் கிட்டேயும் மூச்சே விட மாட்டேன்.”  அவள் சொன்னது போல் மது யாரிடமும் சொல்லவில்லை.

ஆனால் தினம் தோறும்…”அக்கா எதுக்கும் அவர் போட்டோவே அனுப்ப சொல்லேன்.” என்று சொன்னதும்,

மனித உணர்வு கொள்ள இது மனித காதல் அல்ல.  என்பது போல்….. “ அழகு பார்த்து தான் காதலா…..?” என்று கேட்டவளிடம்.

“சரி அப்போ நீயாவது அனுப்பு.”

“ம் ..ம் மாட்டேன்.” என்று திட்டவட்டமாக சொல்லி விட்டாள்.

காடாரு மாசம் நாடாளு மாசம் என்பது போல் , வெளிநாட்டுக்கு பறந்துக் கொண்டு இருந்த ருத்ரனுக்கு, மஞ்சுவிடம் தெரிந்த பெரிய மாற்றத்தில் மகிழ்ச்சி தெரிந்தாலும், ஏதோ இருப்பது போலவே அவன் உள்ளுணர்வு சொன்னது.

“மதும்மா அக்கா என்ன ரொம்ப ஹாப்பியா இருக்கா….என்ன மேட்டரு….?” போட்டுவாங்க பார்த்தவனிடம்,

காதலை காப்பற்ற பிறந்தவள் போல்…. “ அதுவா…இப்போ அப்பா கூட நல்லா பேசுறால …அதுவா இருக்கலாம்.” இப்போது முதலோடு தயாநிதியிடன் நன்றாக பேசிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் தாயின் உறவு முறையில் அவள் எந்த முன்னேற்றமும் காட்டவில்லை.

“அப்படியா….?அப்போ வேறு எதுவும் இல்லையா….?” தன் சந்தேகம் கைய்விடாது கேட்டவனிடம்.

“என்ன இருக்குமுன்னு நீங்க நினைக்கிறிங்க அத்தான். சொல்லுங்க நான் ஆமாவா…இல்லையான்னு சொல்லிடறேன்.”

எது என்று தெரியாததை எப்படி கேட்க முடியும்.

“ஒன்றும் இல்லை.” என்று சொன்னவன்.

சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்த மேக்கப் கிட்டை அவளிடம் நீட்டியவன்.

“இது உனக்கு மட்டும் இல்ல. மஞ்சுவுக்கும்.” என்று சொல்லி கொடுக்கவும்,

மூஞ்சு சுளித்து விட்டு… “கொடுத்துடுறேன் அத்தான். கொடுத்துடுறேன். இப்போ என்னோட  அவ தான் ரொம்ப பண்ணிக்கிறா…..” என்று சொன்னதும் தான் ருத்ரனுக்கு மஞ்சுவிடம் தெரிந்த மாற்றம் என்ன என்று விளங்கியது.

கொடுத்த மேக்கப் கிட்டை வாங்கிக் கொண்டு …”நீ மஞ்சுவ அனுப்பு. நான் அவ கிட்டேயே கொடுத்துடுறேன்.” என்று சொன்னதும்,

“அப்போ நான் கொடுக்க மாட்டேன்னு நினச்சிங்கலா…போங்க  எனக்கு வேண்டவே வேண்டாம்.” தரையில் கால் அதிர நடந்து சென்றவளிடம்,

“சரி. ஆனா உன் அக்காவை அனுப்பி வை.” என்று சொன்னதும் திரும்பி நின்று தன் அத்தானுக்கு அழகு காட்டி விட்டு சென்றவள், மறக்காது தன் அக்காவையும் ருத்ரன் அறைக்கு அனுப்பி  வைத்தாள்.

 

Advertisement