Advertisement

அத்தியாயம்—-11

“அம்மா தூங்கிட்டாங்கலா…..?” தயாநிதி கேட்ட கேள்விக்கு,

“தூங்குனாங்கலோ, இல்லையோ, எது இருந்தாலும், காலையில் பேசிக்கோங்க.”

மாமா இப்போது பேச்சை ஆராம்பித்தால், க்ராண்மா கண்டிப்பாக அவர்களின் பேச்சை இன்றைக்கு முடிக்க மாட்டார்கள்.

நாளை ஊருக்கு செல்ல இருப்பத்தால், தன் மாமனிடம் மஞ்சுவை பற்றி  இன்றே பேச வேண்டி இருப்பதால், பாட்டியிடம் பேசுவதை தள்ளி வைத்தவன்.

“மாமா டையாடா இருக்குதா….?” ருத்ரனின் இந்த கேள்வியே சொன்னது. அவன் ஏதோ பேச நினைக்கிறான் என்று.

“இல்ல ருத்ரன்.” என்று சொன்னவர். அவன் பேசுவதை கேட்க வசதியாக அவன் முகம் பார்க்கும் மாறு திரும்பி அமர.

ருத்ரனும் நேரிடையாக….. “மஞ்சு ,மேல என்ன படிக்க போறான்னு தெரியுமா மாமா.” என்று கேட்டதுக்கு,

யோசனையுடன்….. “ இல்லை…..” என்றவர்.

“உன்னிடம் ஏதாவது சொன்னாளா…..?”

“ம்….இல்ல. என் கிட்ட அந்த அளவுக்கு நெருக்கம் ஆகல.” என்று சொன்னான்.

என்ன தான் கதிர் , மஞ்சுவின்  நட்பு பற்றி தெரிந்தாலும், தன்னோடு அவனிடம்  அனைத்துமே பகிர்ந்து இருக்கிறாளே….ஆண்களுக்கே உண்டான அந்த கோபம். தன் குடும்பத்தால் இப்போது தான் முன்னுக்கு வருபவன். பிறந்ததில் இருந்து செல்வத்தோடு வளர்ந்த திமிர் ருத்ரனை இது தான் நினைக்க தோன்றியது.

சரி நம்மிடம் தான் நெருங்கவில்லை. இந்த மாமா என்ன செய்துக் கொண்டு இருக்கிறார். அவள் வாங்கிய மார்க்குக்கு பார்ட்டி வைத்தால் போதுமா…..?

அவளின் எதிர்காலத்தில் அக்கறை செலுத்த வேண்டாமா….?அதுவும் மது மஞ்சுவை பற்றி சொன்னதில் இருந்து, என்ன  தான் எதையும் முகத்தில் காட்டாது, இன்று நடக்க இருக்கும் விழாவுக்கான வேலையைய் பார்த்தாலும், அவன் மனதில்  மது சொன்னது தான் ஓடிக் கொண்டு இருந்தது.

நாளை ஊருக்கு செல்லும் முன் மாமாவிடம் பேசி விட வேண்டும் என்று. அதன் பொருட்டே மஞ்சுவை பற்றி பேச ஆராம்பித்தான்.

பின் அவனே….”அவ விவசாயப் படிப்பு படிக்கனுமுன்னு ஆச படுறா…..”

“உனக்கு எப்படி தெரியும்…..?”

“கதிர் விண்ணம் வாங்கி கொடுத்தான் அப்போ தான் எனக்கே  தெரியும்.”

ருத்ரனின் பேச்சில் யோசனையான  தயாநிதி….. “கதிர் கிட்ட மஞ்சு பேசுறாளா…..?” இது தயாநிதிக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

வலிய சென்று  பேசினாலும் , தேவைக்கு  அதிகப்படியாக மஞ்சுவின் பேச்சு இருக்காது. அதுவும் மகி இடம் பேச்சு வார்த்தை என்பதே இல்லை.

மதுவிடம் தான் கொஞ்சம் பேசுகிறாள். அதுவும் மது பேச வைக்கிறாள். அப்படி இருக்கும் போது கதிரிடம் படிப்பு பற்றி சொல்லி இருக்கிறாள்.

என்ன தான் தன் கண் பார்க்க வளர்ந்தவன் என்றாலும், கதிரை மலரம்மா மகனாய் மட்டும் தான் பார்க்க தோன்றியது.

மாமனின் மனம் அறிந்து…..”நீங்க கவல படுறா படி எதுவும் இல்ல மாமா.” என்று சொல்லியும்,

“என்ன கவல படவேண்டாமுன்னு சொல்ற. இதே மது சொல்லி இருந்தா அது சாதரணம். ஆனா மஞ்சு. யோசிக்க வேண்டியதா இருக்கே…..”

“மாமா இது பத்தி ஒன்னும் இல்ல. நான் பார்த்துக்குறேன். இதோட முக்கியமான விஷயத்தை பத்தி பேச தான் வந்தேன்.”

“இதோட முக்கியமானதா…இதுவே எனக்கு ஷாக்கு தான்டா…..சொல்லு,” கேட்டு தானே ஆக வேண்டும்.

“ மஞ்சுவின் தாத்தா  மஞ்சுவை பத்தின் உங்க கிட்ட சொல்லி இருக்காரா மாமா……?”

“ம்….” என்று தலை குனிந்துக் கொண்டார் தயாநிதி.

குனிந்த தலையை பார்த்த ருத்ரன்… “என்ன சொன்னார்…..?” என்று கேட்டதுக்கு, மிக சங்கடத்துடன்…

“இப்போ எல்லாம் வீவுக்கு கூட மஞ்சு வீட்டுக்கு வர்றது இல்லன்னு சொன்னவரு. அவரு மருமகள் மஞ்சுவ சரியா நடத்துறது இல்ல. அப்புறம் கடைசியா…. அவர் மகனே மஞ்சுவை அடிச்சிட்டான்னு சொல்லிட்டு. எனக்கு ஏதாவது ஆச்சின்னா…..அவ கல்யாணம் வரையாவது நீங்க பார்த்தா போதும்.” கடைசி வார்த்தை சொல்லும் போது தயாநிதி பேச்சு கர கரத்து ஒலித்தது.

எப்போதும் ஆறுதலாக மாமன் தோள் கொடுக்கும் ருத்ரன். ஏனோ இப்பேச்சுக்கு அப்படி செய்ய முடியவில்லை. என்ன இருந்தாலும் சின்ன பெண்ணை அப்படி விட்டு இருக்க கூடாது.

என்ன தான் ஆயிரம் காரணம் இருந்தாலுமே….அத்தைய கல்யாணம் செய்யும் போதாவது நான் சின்ன பையன். மஞ்சு தாத்தா இவரிடம் பேசிய போது, என் தொழிலை நானே ஏற்று  நடத்திக் கொண்டு தானே இருந்தேன்.

இதோ இப்போது பேசியது அன்று  என்னிடம் பேசி இருக்கலாமே…..யோசிக்க யோசிக்க மாமா  இன்னும் மஞ்சு விஷயத்தில் அக்கறை காட்டி இருக்கலாம், என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஏற்கனவே குற்றவுணர்வில் இருக்கும்  மாமனை மேலும் இதை பற்றி பேச விரும்பாது.

“நடந்தது விடுங்க மாமா.” என்று சொன்னவன்.பின் “நான் சொல்வதை கேட்டு ஷாக் ஆக கூடாது.” ருத்ரனின் பேச்சில்,

இன்னுமா…என்பது போல் தான் தயாநிதியின் பார்வை இருந்தது.

“மஞ்சுவின் தாத்தா இறப்பதுக்கு முன்நாள் அவரு மஞ்சு கிட்ட ப்ளஸ் ஒன்ல  என்ன க்ரூப் எடுக்க போறேன்னு கேட்டதுக்கு, நான் மேல படிக்க விருப்பம் இல்ல. எனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிடுங்கன்னு சொல்லி இருக்கா…..”

அதை கேட்டு அதிர்ச்சியுடன்…. “ஏன்…ஏன்….எதுக்கு….?” பதினைந்து வயதுடைய பெண் கல்யாணத்தை பற்றி பேசியது, அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இப்போது இருக்கும் பெண்கள் இருபத்தி ஐந்து கடந்தும் கூட ,கல்யாணப்பேச்சு எடுத்தால்…. “இவ்வளவு சீக்கிரம் எதுக்கு….?  தான் கேட்குறாங்க. பதினைந்து வயதில் திருமணம் செய்ய கேட்டு இருக்கிறாள். தயாநிதி மற்ற பெண்களோடு மஞ்சுவை எடை போட்டார்.

பாவம் சின்ன வயதில் இருந்து பாசத்துக்காக ஏங்கி போனவளுக்கு, தனக்கே தனக்காக அன்பு செலுத்த கூடிய உறவு திருமண உறவு மட்டுமே …என்று அந்த சின்ன வயதில் படிந்து போனதை இவர் அறிவாரா….?

அந்த எண்ணம் அவள் மனதில் உருவாக முதல் அடி எடுத்து வைத்தது தான் செய்த செயல் தான் என்று  அவருக்கு தெரிந்தால்…..? பின் அது வலுப்பெற காரணம். தன்னிடம் பாசமாக இருந்த மாமன் திருமணம் ஆனவுடன் தன்னை ஒதுக்கியது.

அந்த பிஞ்சு மனதில் படிந்தது…..நிலைத்த உறவு திருமண  உறவு தான் என்று. தன்னை மட்டுமே அன்பு காட்ட ஒரு உறவு வேண்டும் என்று  தான். திருமணம் செய்து வைத்து விட தன் தாத்தனிடம் கேட்டாள்.

ஆனால்  …அவள் கேட்ட்தும், தனக்கு அன்பு காட்டிய அந்த  உறவும் இல்லாது போனது தான் மிச்சம்.

இது தெரியாது பதைத்து போய் தயாநிதி காரணம் தேட……மஞ்சு மதுவிடம் … “தனக்கு மட்டுமாய் பாசம் காட்ட ஒரு உறவு தேவை.” என்று பேசியதை புட்டு புட்டு வைத்ததும் தயாநிதியின் கை தன்னால் தலை மேல் அமர்ந்தது.

“மாமா கவலை படாதிங்க  இப்போ அவளுக்கு அந்த எண்ணம் இல்லை.”

“எப்படி சொல்ற ருத்ரா…..?”

“நான் கதிர்  கிட்ட பேசினேன். அவள் இந்த படிப்பு படிக்க ரொம்ப ஆர்வமா இருக்கிற மாதிரி தான் பேசினாள்.” என்று சொன்னதும்,

அவசரமாக…..”மஞ்சு கல்யாணம் செய்து வைன்னு சொன்னத அவன் கிட்ட சொல்லலே…..”

“மாமா……” என்று  அழைத்து விட்டு அவரை முறைத்து பார்த்தவன்.

“எனக்கு எது சொல்லனும் எது சொல்ல கூடாதுன்னு தெரியும் மாமா.”

ருத்ரன் என்ன தான் பேசினாலும் மஞ்சு திருமணத்தை பற்றி பேசியது அவருக்கு சரியாக படவில்லை.

இன்னும் அவர் முகம் தெளியாததை பார்த்து……”மாமா நீங்க கவலை படாதிங்க மஞ்சு என் பொறுப்பு. நான் எதுக்கு உங்க கிட்ட இது பத்தி சொன்னேன்னா…..

வீட்டில் இருக்கும் போது அவக்கிட்ட கொஞ்சம் பேசுங்க. இனி க்ராண்மாக்கு எல்லாம் பயந்துட்டு அவள ஒதுக்கி வைக்க வேண்டாம்.

நாளைக்கு இன்ன விழாவ வெச்சி கண்டிப்பா க்ராண்மா பிரச்சனை பண்னுவாங்க. தைரியமா சொல்லுங்க. மஞ்சு என் பொண்ணு…..என் வீட்டில் என் பொண்ணுக்கு பார்ட்டி வெச்சது என்ன தப்புன்னு.” தன் மாமனுக்கு தைரியம் சொல்லி  விட்டு சென்றான்.

அவன் நினைத்து போல் தான் அகிலாண்ட நாயகி ,விடிந்தும்  விடியாத காலையிலேயே தன் சுப்ரபாதத்தை ஒலிக்க விட்டார்.

என்ன ஒன்று  இன்னும் கொஞ்சம் நேரம் சென்று பேசியிருந்தால் தான் நினைத்து எல்லாம் கேட்டு இருக்கலாம். ருத்ரன் ஊருக்கு கிளம்பும் முன்னவே ஆராம்பித்து விட்டதால்,

“க்ராண்மா  இதே மாதிரி ஒன்னு ஒன்னுத்துக்கும்,  பிரச்சனை செய்துட்டே இருந்திங்கன்னா நான் அம்மாவ  கூட்டிட்டு தனியா போயிடுவேன்.” ருத்ரனின் அந்த வார்த்தை நன்றாகவே வேலை செய்தது. அந்த பேச்சை விட்டவர்.

அந்த கோபத்தை மகியைய் முறைத்து வெளிப்படுத்த. “ அம்மா ஏதாவது சொன்னா அத பெருசா எடுத்துக்காத மகி.” கணவனின் ஆறுதலில் அமைதி அடைவதற்க்கும் பதில் மகிக்கு கோபம் தான் அதிகத்தது.

“நீங்க சொன்னது சரி தான். உங்க அம்மா பேச்சே பெருசா எடுதுக்காம இருந்து இருந்தா…. என் மகளின் பாசத்த நான் இழக்காம இருந்து இருப்பேன்.”

எப்போதும் அமைதியுடன் கடக்கும் மகேஸ்வரி. தன் மகள் தன்னை ஒதுக்க ,ஒதுக்க  தன் இயலாமை கோபமாக கணவன் மேல் உறுமாறியது.

ருத்ரன்  ஊருக்கு போகும் போது ….மஞ்சுவை அழைத்து தன் கைபேசி எண்ணை கொடுத்து விட்டு அவளுடையதும் பெற்றவன்.

“ ஏதாவதுன்னா  என்னை கூப்பிடு….அது எந்த நேரமானாலும் சரி.” என்று  சொல்லி விட்டு தான் ஊருக்கு கிளம்பினான்.

வெளிநாடு ருத்ரனுக்கு புதியது இல்லை. ஆனால் இந்த தடவை ஏனோ தனிமையாக இருப்பது போல் ஒரு எண்ணம். வேலை முடிந்து  அறைக்கு வந்தால் குளிப்பது, உணவு தொழில் வட்டத்தில் முடித்து விட்டால் படுத்து விடுவான். இல்லை என்றால் சாப்பிட்டு படுத்தான்  என்றால் ,….அடுத்த நிமிஷம் அவனை நித்திரா தேவை வந்து அழைத்துக் கொள்வாள்.

ஆனால் இன்று ஏனோ வழக்கத்துக்கு மாறாய் படுத்து அரை மணி நேரம் கழித்தும் உறக்கம் வராது இருக்க.

முகநூலை பேருக்கு வைத்திருந்தவன். இப்போது அதை எடுத்து பார்த்துக் கொண்டு இருக்கும் போது மது முகநூல் நட்பு வட்டத்தில், மஞ்சு இருப்பதை பார்த்து நட்பு அழைப்பு விடுத்து விட்டு கைபேசியே பார்த்திருந்தவனுக்கு, அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றதும்,

அவளுக்கு நேரம் கூட கொடுக்காது மதுவுக்கு மெசஜை தட்டி விட்டான். மஞ்சுவிடம் முகநூலில்  என் நட்பை ஏற்க சொல் என்று.

அதுவும் இப்போதே அவள் அறைக்கு சென்று  சொல் என்றதும்.

பதிலாய்…மதுவிடம்….”நான் அக்கா ரூமில் தான் இருக்கேன். நானும் அக்காவும் முகநூலில் தான் இருக்கோம். சொல்றேன் அத்தான்.” என்று பதில் மெசஜ் வந்த கொஞ்ச நேரத்துக்கு எல்லாம்  ருத்ரனின் நட்பை ஏற்றுக் கொண்டதாக முகநூல் சொல்லியது.

 

Advertisement