Advertisement

அத்தியாயம்—-10

லைட் ரோஸ் நிற லாங்ஸ்கட்டும், அதற்க்கு எதிர் பதமான   டார்க் பிங்க் நிறத்தில் டாப்பும், வெள்ளை நிறக்கற்கள் பதித்த செயற்க்கை அணிகலன்கள் அணிந்து, அந்த விழாவில் தேவைதை என  ஜொலித்தாள் மஞ்சு.

கூடவே அவள் கைய் பற்றி இருந்த மது அப்போது தான் உண்டான பருவ மாற்றத்திலும், தாய் கவனித்த அதிகப்படியான  ஊட்டச்சத்திலும், கன்னம் இரண்டில் கொஞ்சம் சதை போட்டு, குழந்தையில் இருந்து நான் குமரி நிலைக்கு அடி எடுத்து வைத்து இருக்கிறேன் என்று  தெரிவிக்கும் வகையாக மாறி இருந்தது அவளின் தோற்றம்.

அதுவும் தன்னை அலங்கரித்துக் கொண்ட நேரத்தை விட, தன் தங்கைக்கு அதிகபடியான நேரத்தை ஒதுக்கி அலங்கரித்ததுக்கு மதுவின் தோற்றத்தில்  நல்ல மாற்றம் தெரிந்தது.

காலையில் நடந்த நிகழ்வால் கொஞ்சம் சஞ்சலம் அடைந்த மனதுக்கு இரு பெண்களின் தோற்றமும், ஒற்றுமையாக கை கோர்த்து இருந்ததை பார்த்த தயாநிதிக்கு , காலையில் நடந்தது கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்பட்டது என்று கூட சொல்லலாம்.

மகேஸ்வரி எப்போதும் போல் தன் உணர்ச்சியைய் முகத்தில் காட்டாது, வந்திருந்தவர்களை உபரிசரித்துக் கொண்டு இருந்தாலும், பார்வை அவ்வப்போது தன் இருமகள்களின் மீது படிந்து படிந்து மீண்டு வந்தது.

மஞ்சுவுக்கு காலையில் நடந்த பிரச்சனை எதுவும் தெரியாததால் எப்போதும் போல் அமைதியுடன் சிறு சிரிப்போடு அனைவரையும் எதிர் கொண்டாள்.

தயாநிதியின் தொழிலில் இருபது சதவீதம் பங்குதாரர் கங்காதரன்,  தன் குடும்பத்தோடு அந்த விழாவிக்கு வந்து இருந்தார்.

கங்காதரன்  மகன் சாகரின் பார்வை  வந்ததில் இருந்து ஒரே இடத்தில் செல்வதை பார்த்து யாரை இவன் பார்க்கிறான் என்று  பார்த்த போது மஞ்சுவையே பார்த்திருப்பதை பார்த்து யோசனையில் ஆழ்ந்தார்.

அவருக்கு தயாநிதியின் குடும்பத்தை பற்றி அனைத்தும் தெரியும். அதில் மஞ்சுவும் அடக்கம். இப்போது தான் தன் படிப்பை முடித்து தங்கள் தொழிலை கையில் எடுத்து உள்ள மகனுக்கு திருமணம் செய்ய இன்னும் மூன்று நான்கு வருடம் பிடிக்கும்.

தன் மகன் விருப்பம் மஞ்சு என்றால் …..இருவருக்கும் திருமணம் செய்ய சரியான வயதாக அப்போது இருக்கும். அவருக்கும் மகன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தன் மனைவி அவர் நினைத்ததுக்கு ஏற்ப.

அவர் மனைவி சகுந்தலா……தன் பருத்த உடலின் கழுத்து பகுதியை ஒரு வெட்டு வெட்டிய வாரே…..

“அது எப்படி தான் தன் மனைவியின் முதல் புருஷனுக்கு பிறந்த குழந்தையைய் இப்படி எல்லோரையும் கூப்பிட்டு வெச்சி காட்டி பெருமை பீத்திக்கிறாரோ…. சேச்சே…”

என்னவோ அருவெருப்பை பார்த்தது போல் முகத்தை அஷ்டகோணலாக்கி சொன்னவளை கங்காதரனோடு சாகரும் யோசனையோடு பார்த்தான்.

அப்போது தான் அவர்களை பார்த்த தயாநிதி…. “ வா கங்கா ….” என்று அவரை அணைத்துக் கொண்டு சகுந்தலையை பார்த்து.

“எப்படி இருக்கேம்மா….?” என்று  நலம் விசாரிப்போடு சாகரை பார்த்து வியந்து,

“கங்கா பையன் நல்லா வளந்துட்டான்.” என்று ஆச்சரியமாக சாகரை பார்க்க.

“அவன் நம்ம ஆபிசுக்கு ஒரு மாசமா வந்துட்டு தான் இருக்கான்.”

“ஆ மேனஜர் சொன்னாங்க கங்கா. அந்த பிரான்சுக்கு என்னால வர முடியல. ரொம்ப டையிட் ஒர்க். அதுவும் இல்லாம அந்த பிரான்சை நீ பார்க்கும் போது எனக்கு என்ன கவலை…..?” என்று சொன்னதோடு…

தன் மனைவியைய் கூப்பிட்டு  சிறிது நேரம் பேசிவிட்டு தான் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

எப்போதும் தயாநிதி குடும்ப செல்வசெழிப்பின் மீது ஒரு வித பொறாமை தனம் சகுந்தலாவுக்கு இருந்துக் கொண்டே இருக்கும்.

வெறும் இருபது சதவீதம் பங்கு கொடுத்து விட்டு….அந்த பிரான்சை தன் கணவனின் மேற்பார்வையில் விட்டு விட்டு, தயாநிதி மென் மேலும் புது புது தொழில் ஆராம்பித்து செல்வத்துக்கு மேல் செல்வம் சேர்ப்பதை பொறுக்க முடியாது.

தன் கணவரிடம் புலம்பும் போது எல்லாம்…. “தோ பாரு சகுந்தலா. அந்த இருபது சதவீதம் கூட மத்தவங்களுக்கு கொடுத்து தொழில் செய்யும் நிலையில் அவன் இல்லை.

ஊரில் இருக்கும் சொத்த வித்து வந்து என்ன செய்வது என்று நான் முழித்த போது தன்னுடன் சேர்த்துக் கொண்டு, இந்த வாழ்க்கை அவன் எனக்கு கொடுத்தான். அதனால் தான் உன் அப்பன் உன்னை எனக்கு கொடுத்தார். நாம வாழும் வாழ்க்கை அவன் கொடுத்தது. சும்மா சும்மா அவனை பார்த்து பொறாமை படாதே….” பள்ளி பருவத்தில் இருந்த நண்பனை விட்டு கொடுக்காத பேச்சாக தான்  எப்போதும் கங்காதரனின் பேச்சு இருக்கும்.

இவர்களின் உரையாடலுக்கு நடுவில்  ருத்ரன் அவர்களின் அருகில் வருவதை பார்த்து வாய் முழுவதும் பல்லே இருப்பதை போல காட்டி….

“ ருத்ரா தம்பி வா வா..இப்போ தான் உன் அங்கிள் கிட்ட ருத்ரன் எங்கேன்னு கேட்டுட்டு இருந்தேன்.” என்று சிரித்து பேசியவருக்கு மரியாதை நிமித்தமாக …. “கேட்டரிங் ஆளுக்கிட்ட பேச்சிட்டு இருந்தேன் ஆன்டி….” என்று அவருக்கு பதில் அளித்தவன்.

கங்காதரனை பார்த்து… “அங்கிள் எப்படி இருக்கிங்க…..?” என்று உண்மையான அன்புடன் நலம் விசாரித்தவன். பக்கத்தில் நின்றுக் கொன்டு தன்னையே பிரமிப்போடு பார்த்திருந்த  சாகரை பார்த்து…

“ஏய் சும்மா ஹீரோ கணக்கா இருக்க…..” அவன் இரு தோளையும் பிடித்து அவனை மேலில் இருந்து கீழாக பார்த்த வாறு சொல்ல.

அதில் கொஞ்சம் கூச்சம் அடைந்த சாகர். சிரித்துக் கொண்டே….. “ நீங்க தாண்ணா எனக்கு ஹீரோ.”

பள்ளிப்படிப்பு, கல்லூரி அனைத்தும் ருத்ரன் படித்ததில் தான் படித்தான். அங்கு ருத்ரனின் ஹீரோ இமேஜை பார்த்து மலைத்தவன் இன்னும் மலை இறங்க வில்லை. அது தான் இந்த பிரமிப்பு.

“நீ இன்னும் மாறவே இல்லடா…..” என்று சொல்லியதோடு அவனை கூடவே அழைத்துக் கொண்டு சென்றான்.

இருவரும் ஒரு சேர போவதை பார்த்து பூரித்து போன சகுந்தலாவை பார்த்த கங்காதரன்.

“ வீணா ஆசையா வளத்துக்காத  சகு.” என்று சொன்னவரின் பேச்சை கேளாது அவர்கள் இருவரின் மீது தான் பார்வை இருந்தது.

சகுந்தலாவுக்கு தன் மகள் சுமுனாவை ருத்ரனுக்கு திருமணம் செய்து  கொடுத்திட கடந்த ஐந்து வருடமாக பகல் கனவு கன்டு கொண்டு இருக்கிறாள்.

அதுவும் சுமுனாவை ருத்ரன் எங்கு பார்த்தாலும் , பேசாமல் இருக்க மாட்டான். அது வேறு அவளின் ஆசைக்கு நெய் ஊற்றியது போல் ஆனாது.

கங்காதரனுக்கு தெரியும் தன் மேல் உள்ள மரியாதையில் தான் தன் இரு பிள்ளைகளுடனும் அவன் நன்கு பழகுகிறான் என்று. இதை சொன்னாள் இவள்  நம்புகிறாளா….?ஆசை யாரை விட்டது.

ருத்ரனுடன் பேசிக் கொண்டே வந்த சாகர் மஞ்சுவின்  இடத்துக்கு அழைத்து வந்ததை பார்த்து மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும், அதை முகத்தில் காட்டாது அடக்க பெரும் பாடு பட்டான்.

புத்திசாலியான ருத்ரன் கண்டு பிடித்து விட்டால் அவ்வளவு தான். கொஞ்சம் காலம் அடக்கி தான் வாசிக்க வேண்டும் என்று கருதியவனாய் முகத்தை சாதரணமாக வைத்திருக்க.

ருத்ரன் மஞ்சுவை காமித்து…. “இவ மஞ்சு மகி அத்த பொண்ணு.இவளுக்காக தான் இந்த பார்ட்டி.” என்று சாகரிடம் சொன்னவன்.

மஞ்சுவிடன்… “இவன் சாகர் மாமவோட பிசினர் பார்ட்னர் மகன். இப்போ ஒரு மாசமா அய்யாவும் தொழிலில் இறங்கி இருக்காரு.” என்று  சிரித்துக் கொண்டே இருவருக்கும் அமுகப்படுத்த…

அனைவரையும் பார்த்து சிரித்தது போல் தான், மஞ்சு சாகரையும் பார்த்து உதட்டை மெல்ல விரித்து சிரித்து வைத்தாள்.

ஆனால் நம் சாகரோ அந்த புன்னகைக்கே அடியோடு சாய்ந்தது போல் விழிவிரித்து பார்த்து நின்று  விட்டான்.

ருத்ரனுக்கு இது போதாத….யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மது.

“நாங்களும் உங்க அத்த பொண்ணு தான். எங்களையும் அறிமுகப்படுத்தலாம்.”  என்று கோபமாக பேசுவது போல் பேச.

“நாங்க நாங்கன்னு சொன்னியே…என் மாமாவுக்கு உங்க இரண்டு பேர தவிர பொண்ணுங்க இருக்கா என்ன…..? அதுவாவது பாக்குற  மாதிரி இருக்குமா…?இல்ல….”

“அய்யோடா ஜோக்கு இதுக்கு நாங்க சிரிக்கனும்.” என்று கடுப்புடன் சொன்னவள்.

பின்….. “எங்களோட ,அழகு அத்த பொண்ணு வேணுமோ…..ஆ நினப்பு தான். உங்க மனைவி பாக்க அப்படியே கண்றாவியா வருவாங்க பாருங்க . நான் சாபமிடுறேன்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…

ஆர்பாட்டமாக அந்த இடத்துக்கு வந்த அகிலாண்ட நாயகி…..விழாவை பார்த்து யோசனையுடன் பார்க்கும் போதே…

அந்த வீட்டில் அகிலாண்டம் வைத்தது தான் சட்டம் என்பதை புரிந்துக் கொண்ட சகுந்தலா….அகிலாண்டத்தை பார்த்து அவர் அருகில் சென்றவள்.

“வாங்க வாங்க. வந்த உடனே உங்கல தான் கேட்டேன். உங்க மருமக ஊருக்கு போயி இருக்கிறதா சொன்னா.” என்று  சொன்னவள்.

பின் ஆதாங்கம் படுவது போல்…. “இந்த பார்ட்டி  நீங்க இருக்கிறப்ப வெச்சி இருக்கலாம்.” என்று சொல்லி விட்டு அகிலாண்ட நாயகியின் ரியாக்க்ஷனை பார்க்க.

ஏற்ற இறக்கத்துடன்  சகுந்தலாவை பார்த்த அகிலாண்டம்….. “யாரு வீட்ல இருந்து யார வரவேற்குற.ஆ …. மகி இந்த வீட்டு மருமக. அவள மரியாதையோடு சொல்ல பழகு.”  என்று சொல்லி விட்டு நடந்தவர்.

பின்  திரும்பவும் திரும்பி….”இது அவ வீடும். இந்த வீட்டில் எப்போ வேணா விழா நடத்த அவளுக்கு முழு உரிமையும் இருக்கு.” இது தான் அகிலாண்ட நாயகி.

மகேஸ்வரிக்கு அந்த வீட்டில் முழு உரிமையும் கொடுத்து இருந்தார். ஒன்றை தவிர, ஆனால் அந்த ஒன்றால் தான் மகி அந்த வீட்டில் எந்த உரிமையும் எடுக்காது  இருந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்த அகிலாண்டம் ருத்ரன் மஞ்சுவிடம் சிரித்து பேச்சிக் கொண்டு இருப்பதை பார்த்து நெற்றி சுருங்கினாலும், சாகரின் ஆர்வ பார்வையைய் பார்த்து விட்டு மனதுக்குள் அவசரமாக கணக்கிட்டு தான் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

தன் தாய் வருவதை பார்த்தாலும், தயாநிதி பயம் கொள்ளாது தான் இருந்தார். அவருக்கு தன் அன்னை பற்றி தெரியும். யாரும் முன்னும் குடும்ப உறுப்பினரை மரியாதை குறைவாக பேச மாட்டார் என்று.

அதற்க்கு ஏற்ப தான் வந்த விருந்தினர், அகிலாண்ட நாயகியைய் பார்த்து வம்பு வளர்க்கும் கூட்டத்தில் ஒருவர்

“ நீங்க இல்லாம உங்க மகன் தன் மகளுக்கு விழா எல்லாம் நடத்துறாரு…” என்று சொல்லி விட்டு அவர் முகத்தை ஆவளுடன் பார்க்க.

நம்ம அகிலாண்டமோ….. “நான் தான் நீ நடத்து. இன்னும் என்ன நீ சின்ன பையனா…ஒன்னு ஒன்னுத்துக்கும் என்னை எதிர் பார்த்துட்டு இருக்கேன்னு சத்தம் போட்டேன்.” என்று  சொன்னவர்.

மேலும்….”நான் என்ன மக்கு பையனையா பெத்து வெச்சி இருக்கேன். ஒன்னு ஒன்னுத்துக்கும் அவன் என்ன செய்யிறான்னு பார்த்துட்டு இருக்க…..?”

வம்பு வளர்க்க பேச்சை ஆராம்பித்த அந்த அம்மாவின் மகன் தொழில் செய்கிறேன்  என்று முதல் போட்டு ஆராம்பித்த நான்கு தொழிலும் ஆராம்பித்தவுடனே படுத்து விட.

பின் என்ன மகன் செய்யும் அனைத்து செயலையும் கண் குத்தி பாம்பாய் பார்த்துக் கொண்டு இருப்பது தான் அவர் முழு நேரம் வேலையாகி விட்டது. அதை வைத்து தான் அகிலாண்டம் அவரை மறைமுகமாக தாக்கியது.

தாக்கப்பட்டது தெரிந்தாலும் …”ஆமா ஆமா நம்ம தயாக்கு  தெரியாதா….” என்று அடுத்த இடம் வம்பு வளர்க்க அவர் சென்று விட்டார்.

என்ன தான் மற்றவர்களிடம் தன் மகனையும், மருமகளையும் விட்டு கொடுக்காது பேசினாலும்,  தனக்கு தெரியாது முதல் முறை இந்த வீட்டில் நடக்கும் விழா. மனதில் எண்ணிக் கொண்டு மஞ்சுவை ஒரு பார்வை பார்த்தவர் தன் அறைக்கு செல்லும் வழியில்…

இடைப்பட்டோர்…. “ என்ன நீங்க எங்கே போறிங்க….?” என்ற  விசாரிப்புக்கு எல்லாம், வந்த , தலைவலி ,என்று தன் அறைக்குள் மற்றவர்களிடம் இருந்து முதல் முறையாக ஒதுங்கிக் கொண்டார்.

எதிலும் தலையிடாது ஒதுங்கி நிற்க்கும் சங்கரி கூட, தன் அன்னை ஒதுக்கப்பட்டத்தில் முதல் முறையாக அண்ணன் மனைவி மீது கோபம் எட்டி பார்த்த கூடவே மகன் மீதும்.  அவருமே தன் அன்னையோடு இப்போது தான் வந்தார்.

எப்படி சொல்லாமல் விட்டு விட்டான். அண்ணன்  மீது ருத்ரனுக்கு இருக்கும் மரியாதை என்ன என்பது தெரியும். இருந்தும் சொல்லி இருக்கலாம், என்று நினையாமல் இருக்க முடியவில்லை.

அது வரை சின்ன சிரிப்பை மட்டுமே உதிர்த்து வந்த மஞ்சு, கதிர்  பூங்கொத்தோடு ஒரு கவரையும் அவளிடம் சேர்த்து நீட்ட.

யோசனையுடன் அதை வாங்கி பிரித்து பார்த்தவள், விவசாய கல்லூரிக்கான விண்னப்பத்தை பார்த்து.

“தேங்ஸ் தேங்ஸ்….” கூடுதல் மகிழ்ச்சியோடு அவனுக்கு நன்றி தெரிவிக்க.

அப்படி அவன் என்னத்த கொடுத்தான் என்று யோசனையுடன் ருத்ரன் பார்த்தான் என்றால்…..சாகர் பொறாமையுடன் பார்த்திருந்தான்.

“என்ன கதிர் எங்க மாமா வைரம் கொடுத்தப்ப கூட இந்த அளவுக்கு சிரிக்கல. நீ அப்படி என்னத்தை கொடுத்த. மஞ்சும்மா இப்படி ஹாப்பியாகும் அளவுக்கு.” கதிரின் மஞ்சும்மா என்ற அழைப்பையே ருத்ரனும் சொல்ல.

“அது மஞ்சும்மாவுக்கு பிடித்த  விவசாய படிப்பின் விண்ணப்பம்.” என்று சொன்னதும், ருத்ரன் அதிசயத்து மஞ்சுவை பார்க்க.

சாகர்….. “ என்னது விவசாய படிப்பா…..?” அவன் குரலில் தெரிந்த இகழ்ச்சியில், ருத்ரன் அறிமுகப்படுத்தியவன் என்று மரியாதை கண்ணோட்டத்தோடு பார்த்த மஞ்சுவின் பார்வையில் இப்போது மாற்றம் வந்தது.

 

Advertisement