Advertisement

அத்தியாயம்—–9

“வாழ்த்துக்கள் ….” என்று சொன்னவருக்கு தன் கை நீட்ட.

நீட்டிய கையை பார்த்த தயாநிதி….கையை இறக்கி மஞ்சுவை இறுக்கி அணைத்துக் கொண்டவர்.

“ உன் மார்க்கு பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா….”  என்று சொல்லிக் கொண்டே தன் அணைப்பை கூட்ட.

அவருடைய இறுகிய அணைப்பில், இது வரை காணப்படாத பாதுகாப்பு உணர்ச்சி மனதில் எழுந்தாலுமே, அவருடைய அணைப்பில் இருந்து விலக பார்த்தவளை…

அப்போது தான் பாட்டு க்ளாஸ் சென்று வீட்டுக்கு வந்த  மது, ஓடி வந்து மஞ்சுவோடு சேர்த்து தன் தந்தையையும் அணைத்துக் கொண்டதால், தயாநிதியை விட்டு விலகமுடியாது அந்த பாசப்பிணைப்பில் இருந்தவளுக்கு,  இது வரை தோன்றாத உணர்வு.

இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வில்  சிக்கி தவித்தவளை, பால் கோவா நிறம்பிய கிண்ணத்தில், நடுவின் ஸ்பூன்  சொருகிய படி தன் முன் நீட்டிய மகியின் கையைய் மட்டுமே பார்த்திருந்த மஞ்சு, தவறி கூட நிமிர்ந்து அவர் முகத்தை பார்க்காது, அவர்களின் அணைப்பில் இருந்து விலகி போக பார்த்தவளின், கை பிடித்து தடுத்த தயாநிதி.

தன் மனைவியிடம் இருந்து அந்த கிண்ணத்தை வாங்கியவர். அதில் இருந்து சிறிது பால் கோவாவை எடுத்து மஞ்சுவின் உதட்டருகில் போக.

ஒரு நிமிடம் தயங்கினாலும் வாய் தன்னால் அந்த ஸ்பூன்  உள்புகும் அளவுக்கு உதட்டை பிரித்ததும், சிரித்துக் கொண்டே ஊட்டியவருக்கு அந்த இனிப்போடு அவரின் அன்பும் உண்டதாலோ என்னவோ….உதடு தன்னால் “தாங்ஸ் தயாப்பா….” என்று உரைக்க.

ஒரு நிமிடம் அந்த அழைப்பில் நெகிழ்ந்தவர், நெற்றியில் இதழ் பதித்து…..”அப்பாக்கு எங்கேன்னா தாங்ஸ் சொல்லுவாங்கலா…..?” என்றதற்க்கு ஒரு புன்னகை புரிந்தவள்.

அனைவரும் தன்னையே பார்த்திருப்பதை பார்த்து ஒரு மாதிரியான சங்கடத்துடன்….. “நான் என் ரூமுக்கு போகவா….?” தயாநிதியிடன் அனுமதி வாங்கினாள்.

இப்போது அவளுடைய தயாப்பா என்ற அழைப்பு இல்லாது போனாலும், கொஞ்சம் கொஞ்சமாக தான் மாற்ற முடியும் என்று  மனதை தேற்றியவராய்…..

“சரிம்மா ரெஸ்ட்டு எடு. ஈவினிங் பார்ட்டி இருக்கு.”

எதற்க்கு என்பது போல் பார்த்த மஞ்சுவிடம்….. “என் பெரிய பெண் 1188 மார்க்கு எடுத்து இருக்கா, அத நான் ஊருக்கெல்லாம் சொல்லி பெருமை பட வேண்டாமா….?” அவரின் அளவுக்கு அதிகமான அன்பில் அதை மறுக்க முடியாது…. “ சரி….” என்று தலையாட்டினாலுமே, மஞ்சுவுக்கு ஏதோ ஒரு தயக்கம் மனதில் இருக்க தான் செய்தது.

மஞ்சு தன் அறைக்கு சென்றதும். இது வரை கட்டுப்படுத்தி வைத்திருந்த கண்ணீர் விம்மிக் கொண்டு வெளிவர. தயாநிதியும் மஞ்சுவின் தயாப்பா என்ற அழைப்பில், தன்னிலை மறந்து இருந்தவர், மனைவியின் விம்மலில் மனைவியின் முகத்தை பார்த்தவருக்கு,

அதில் தெரிந்த அளவு கடந்த  சோகத்தில் அது ஹால் என்பதையும் மறந்து மனைவியை அணைத்துக் கொண்டவர்.

“மகிம்மா அவ சின்ன பெண் தானே…போக போக உன்ன பத்தி புரிஞ்சு உன் கிட்ட வருவா பாரேன். “என்று  அவளுக்கு ஆறுதல் வழங்கிய தயாநிதியின் அணைப்பில் இருந்து வெளியில் வந்தவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவளின் முகத்தில் இப்போது சோகம் இல்லை.

மாறாய் அதில் அளவுக் கடந்த கோபம் காணப்பட…. “மகி….” என்று கை நீட்டியரை தன் கை கொண்டு தடுத்த மகி.

“நீங்க பேசாதிங்க…..” என்ற அவள் குரலில் காணப்பட்ட கோபம். அவள் முகத்தில் தெரிந்த ஆத்திரம். திருமணம் முடிந்து இந்த பதினாறு ஆண்டுகளில் ஒரு நான் கூட பார்த்திராதது, கேட்டும் இராதது.

தயாநிதி தன் மனைவியிடம்…… “நான் கூடிய சீக்கிரம் உன் கூட மஞ்சுவை பேச வைக்கிறேன். என்னை நம்பும்மா……”  மேலும் ஏதோ பேச வந்தவரை, மதுவின்…… “பதினாறு வருஷம் இதையே தானே சொல்லிட்டு இருக்கிங்க. “என்ற பேச்சில்,

மாலை நடைபெறும் விழாவுக்கு   கைய்பேசி மூலம் அழைப்பு விடுத்து தோட்டத்தில் இருந்து ஹாலுக்கு வந்த ருத்ரன், மஞ்சு தன் மாமனின் அணைப்பில் இருப்பதை பார்த்து அவர்கள் அருகில் செல்லாது  தூர இருந்தே அதை ரசித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.

பின் மஞ்சு சென்றதும். இன்னும் யார் யாரை அழைக்க வேண்டும் என்று தன் மாமனிடம் கேட்க அவர்களை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தவன் ,மூன்றாம் அடி எடுத்து வைக்காது தன் அத்தையின் கோபக்குரல் தடை செய்தது.

கணவன் மனைவி சண்டையில் இடைப்புகுவது  நாகரிகம் இல்லை. திரும்பவும் தோட்டத்து பக்கம் நகர்த்த பார்த்த தன் காலுக்கு, மதுவின் பேச்சு நாகரிகமாவது ஒன்னாவது என்று தூக்கி போட்டவனாய்,

மதுவின் அருகில் கோபத்துடன் செல்ல…..அத்தான் வரும் வேகத்தை பார்த்து தன்னால் மது தன் தந்தையின் பின் தான்  மறைந்தாள்.

குழந்தை என்று எண்ணிக் கொண்டு இருந்த தன் மகளின் பேச்சில் வாய் அடைத்து இருந்த தயாநிதி. தன் மகள் தன் பின் மறையவும் தான் தன்னிலைக்கு வந்து, கோபத்துடன் வந்த தன் மருமகனின் முன் கை நீட்டி தடுத்தவர்.

“வேண்டாம் ருத்ரன் சின்ன பெண் விடு.” என்று தன் மாமன் சொன்னதும்,

“பேச்சில்  அப்படி இல்லையே மாமா. பெரியவங்க மாதிரி பேசுறா…..” தன் கோபத்தை மாமனிடம் காட்ட முடியாது சாதரணமாக பேசினாலும், கண்ணால் மதுவிடன் தன் கோபத்தை காட்ட தவறவில்லை.

இது வரை அன்பு மட்டுமே காட்டிய தன் அத்தானின் இந்த கோபமுகம்,  மதுவுக்கு பயத்தை கொடுத்தாலும், ருத்ரன் பேசிய பேச்சில் தான் என்ன தவறாய் பேசினோம்.

தன்மானம் சிங்கம் எழுந்துக் கொள்ள….. “பெரியவங்க பெரியவங்கலா நடந்துக்கல. அதனால தான் சின்ன பெண் நான் பெரிய மனுஷியா பேசினேன்.”

மறைந்து இருந்த தன் தந்தையிடம் இருந்து வெளியில் வந்து தைரியமாக அவனிடம் பேசும் மதுவின் இந்த தோற்றம் ருத்ரனுக்கு புதியது.

யோசனையுடன் அவளை பார்க்கும் அதே வேளை…..தயாநிதியும் சந்தேகத்துடன் தன் மனைவியைய் பார்த்தார்.

அனைத்தும் சொல்லி விட்டாளா…..? பெண் குழந்தைக்கு தன் தந்தை தான் ஹீரோ. அவளிடன் என்னை வில்லனாக சித்தரித்து விட்டாளா….? தந்தையின் பார்வை சடுதியில் புரிதுக் கொண்ட மது.

“பார்த்திங்கலா….உனக்கு எப்படி தெரியுமுன்னு என்ன கேட்காம. அம்மாவ சந்தேகப்படுறிங்க. இப்போ இல்ல எப்போவும் உங்களால அவங்கல புரிஞ்சுக்க முடியாது.”

மதுவின் பேச்சு ஒரு பதினான்கு வயதுடையவளின் பேச்சை  போல் இல்லை. ருத்ரன் இப்போது தன் கோபத்தை விடுத்து அவளை கூர்ந்து கவனிக்க தொடங்கினான்.

முன்பு கூட ஏதோ பொடி வைத்து பேசினது போல் சொன்னாளே…..அப்போது நான் இவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் புதிய பங்குதாரர்களுடம் தொடங்கிய தொழில் அதை செய்ய விடாது தன்னுடைய நேரத்தை மொத்தமும்  எடுத்துக் கொண்டு விட்டதே…..முன்பு போலவே இனி குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நினைத்தவன்.

தன் மாமனிடம்… “மாமா நான் பேசிக்கிறேன்.” என்று அவரிடம் சொல்ல.

தயாநிதி முகத்திலோ சொல்ல முடியாது சோகம். மனைவியிடம் சொன்ன வார்த்தையை காப்பற்ற முடியவில்லை, என்ற குற்றவுணர்வோடு இப்போது மகளின் நிலையில் நாம் தாழ்ந்து போய் விட்டோமோ…..

அதுவும் மது சொன்ன. அம்மா சொல்லவில்லை. என்றதில் மகள் சொன்னது போல் நான் அவளை சரியாக புரிந்துக் கொள்ளவில்லையோ….எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை.

“மாமா….” அவரை தன்னிலைக்கு கொண்டு வந்த ருத்ரன். “எல்லாத்தையும் நான் சரிபடுத்திடுறேன் என்னை நம்புங்க.” என்று தைரியம் வழங்க.

“உன் மாமாவை போலவா…..” எப்போதும் மரியாதையுடனே தன்னிடம் பேசும் அத்தையின் இந்த பேச்சில் அவரை பார்க்க.

எதோ ஒரு ஆதாங்கத்தில் பேசிவிட்ட மகேஸ்வரி ருத்ரன் தன்னை திரும்பி பார்க்கவும் தன் தவறை உனர்ந்தவளாய்..

“மன்னிச்சிக்கோ தம்பி.” என்று மன்னிப்பு வேண்டியவளிடம்.

“என்ன அத்தை என்னோட  நீங்க பெரியவங்க .என் கிட்ட எல்லாம் மன்னிப்புன்னு.” என்று அவளிடம் சொன்னவன்.

பின் மதுவை பார்த்த வாரே….”நான் கண்டிப்பா எல்லாத்தையும் சரிபடுத்திடுவேன் அத்த. என்னை நம்புங்க.” என்று திரும்பவும் தன் அத்தைக்கு வாக்குறுதி வழங்கினான்.

முன் பக்க தோட்டத்தில் இருந்த அந்த வெள்ளை ரோஜாவையே பார்த்திருந்த மதுவின் முகத்தையே தான் ருத்ரன் பார்த்திருந்தான்.

ஒரு இரண்டு மாதத்தில் ஒரு பெண்  முதிர்ச்சி அடைந்து விடுவாளா….? சந்தேகமே இல்லை. அடைந்து விடுவார்கள். இதோ தன் கண் முன்னே மது நிற்கிறாளே….

இந்த முதிர்ச்சி பருவம் ஏய்ததாலா….?இல்லை அவள் அம்மாவை பற்றி அறிந்ததாலா…..?…..அவன் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டியவளோ தன்னை திரும்பியும் பாராது இருக்க…

நேரிடையாக….. “அப்பா கிட்ட அப்படி பேசினது தப்பு தானே….?” என்ற ருத்ரனின் பேச்சில் தன் பார்வையை ரோஜாவில் இருந்து ருத்ரனின் முகத்துக்கு இடம் பெயர்த்தவள்.

“இல்லை….” எந்த வித சப்பை கட்டும் சொல்லாது பேசியவளை யோசனையுடன் பார்த்திருக்க.

“ ஒரு குழந்தையை அவள் அம்மா கிட்ட இருந்து பிரிப்பதை விட எதுவும் தப்பு இல்ல.” பேச்சில் ஒரு சிறுபிசிறு  கூட இல்லாது பேசும் தன் மாமன் மகளின் பேச்சை கேட்டு ருத்ரன் அசந்து தான் போனான்.

அப்போ விஷயம் தெரிந்து தான் பேசுகிறாள். யார் சொல்லி இருப்பா….?

“யாரும் சொல்லலே….அப்பாவும் நீங்களும் அக்கா வந்தப்ப பேசினத. அங்கு இருக்கும் ஜன்னலை காட்டி அங்கு இருந்து கேட்டேன்.”

அவள் அறையின் ஜன்னலை காட்டி சொன்னவளை பார்த்திருந்தவனுக்கு, எப்படி சொன்னாள் சரியாக  புரிந்துக் கொள்வாள்.

“அப்பாவ தப்பா நினைக்காத மதும்மா. அப்பா நிலை அப்படி.”

“ஓ….” என்று சொன்னவள். இதோடு விட மாட்டாள் என்று  அவளை பார்க்க.

அவன் எதிர் பார்த்தது போல்…… “அப்போ அம்மாவை ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டாங்க. அக்காவுக்கு அம்மாவாவது இருந்து இருப்பாங்கலே….

நான் இங்கு அம்மா, அப்பா, பாட்டி, நீங்க, அத்தைன்னு இவ்வளவு பேரு  கூட இருக்கேன். ஆனா அக்கா யாரும் இல்லாம. இந்த கல்யாணம் நடந்து இல்லாம இருந்தா அட்லீஸ்ட்டு அக்காவுக்கு அம்மாவாவது இருந்து இருப்பாங்கலே…

எத்தன நாள் அம்மா தூங்குறப்ப அழுது இருப்பாங்க , அப்போ நான் கேட்டா கண்ணுல தூசு.  ஒரே டையலாக்.

இப்போ தான் தெரியுது அவங்க கண்ணுல தண்ணீ வந்ததுக்கு, மத்தவங்க மனசுல இருக்க தூசு தான் காரணமுன்னு. குறிப்பா சொல்லனுமுன்னா  உங்க பாட்டியோட மனசுல இருக்கும் தூசு தான்.”

அவள் பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் ருத்ரனால் பதில் கொடுக்க முடியவில்லை. எப்படி கொடுப்பான்…? அவள் கேட்டது அனைத்தும் நியாயமானது தானே….

இன்னொன்றும் அவன் மனதில் பதிந்தது. அவள் பேச்சில் ஒரு தடவை கூட அத்தான் என்று தன்னை அழக்கவில்லை.

தன்னிடமும் கோபமா….?

“ இந்த கல்யாணத்தாலே அப்பா  அவங்க அம்மாவை பிரியல, தங்கைய பிரியல  தங்கை மகனையும் பிரியல, ஆனா எங்க அம்மா அவங்க மகள பிரியனும்.

அப்பவே அப்பா அம்மா கிட்ட அக்காவ பிரியனுமுன்னு சொல்லி இருந்தா அம்மா அப்பாவ கல்யாணம் செய்துக்காம அக்கா கூடவே இருந்து இருப்பாங்கல.”

இவளை தொடர்ந்து பேச விட்டால் தன்னையே மாமனுக்கு எதிராக திருப்பி விடுவாள் என்று பயந்து, அவள் பேச்சை நிறுத்தும் பொருட்டு….

“  மதும்மா அம்மா அந்த வயசுல தனியா எல்லாம் இருக்குறது நல்லது இல்லேம்மா….. நீ சின்ன பெண்ணு. உனக்கு ஒரு சிலது சொன்னா புரியாது.” என்று சொல்ல.

“உங்களுக்கு புரியற மாதிரி சொல்ல தெரியலேன்னு சொல்லுங்க.” என்று ஒரே அடியாக அடிக்க.

அடக்கடவுளே….தொழிலில் தன் பேச்சுக்கு யாரும் எதிர் பேச்சு பேச மாட்டார்கள். இவள் என்ன வென்றால் எனக்கு புரிவது போல சொல்ல தெரியலேன்னு சொல்லுறா…

“அப்பா நல்லவரு மதும்மா.”

“நான் கெட்டவருன்னு சொல்லலையே…..” என்று சொன்னவள். தொடர்ந்து “யாரும் யாருக்கும் நல்லவங்கலா இருக்க முடியாது.”

“நீ என்ன சொல்ற மது. ஈவினிங் பங்ஷன் நிறைய வேலை இருக்கு.” என்று சொன்னவன் பின் ஏதோ நினைவு வந்தவனாய்.

“அப்பாக்கு அக்கா மேல பாசம் இல்லாமலையா பார்ட்டி எல்லாம் வைக்கிறாரு.” என்று  தன் மாமனை நியாயப்படுத்தி பேச.

சம்மந்தமே இல்லாது…. “ வீட்டில பார்ட்டி நடக்குது  ஊருல இருக்க பாட்டிய கூப்பிடலையா…..?” கேட்டு விட்டு ருத்ரனை ஒரு பார்வை பார்க்க. அந்த பார்வை அவள் பேசாத பேச்சு எல்லாம் பேசியது.

அம்மா இல்லாத அப்போ திருட்டு தனமா பார்ட்டி வைக்கிறாரு. பாட்டி வந்தா அக்கா கூட சரியா பேசுறது கூட இல்லேன்னு.

ஆம் அகிலாண்ட நாயகி எதிரில் மஞ்சுவிடம் பேசுவற்க்கு கூட தயாநிதிக்கு தயக்கம் தான்.

அதற்க்கு காரணம் மஞ்சு மனது புண்படும் படி  ஏதாவது அம்மா பேசி விடுவாரோ என்று தான்.

இவ்வளவு நேரமும் தைரியமாக பேசிக் கொண்டு இருந்த மது. தொண்டை அடைப்பட….. “தாத்தா எப்படி இறந்தார் தெரியுமா அத்தான்.” இத்தனை நேரம் அழைக்காத அழைப்பில் பேசிய மதுவை யோசனையுடன் பார்த்த ருத்ரனிடம்.

“அக்கா கிட்ட தாத்தா டென்த் லீவப்ப. என்ன சப்ஜெக்ட் எடுக்குறேன்னு கேட்டதுக்கு, நான் மேல படிக்கல. கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேட்டு இருக்கா….அத கேட்டு படுத்தவரு  தான். உயிர் போயிடுச்சி….”

ருத்ரனால் மதுவின் பேச்சை கிரகித்துக் கொள்ளவே ஒரு சில நொடிகள் பிடித்தது.

“ஏன்….?” என்ற தன் கேள்விக்கு மது சொன்ன பதிலில் நாம் நினைப்பது போல் மஞ்சுவை ஹான்டில் செய்வது அவ்வளவு ஈஸி இல்லையோ….தானும் மாமனின் வார்த்தையை காப்பற்ற முடியாதோ…..?

அது தான் யோசிக்காது வாக்கு கொடுக்க கூடாது என்பது.

Advertisement