Advertisement

அத்தியாயம்—-8

நன்கு பரிட்ச்சை எழுதி இருந்தாலுமே ,தேர்வு முடிவு அன்று மனதில் ஒரு  கிலி பரவுமே….அந்த உணர்வில் மஞ்சு,  குளித்து கைக்கு கிடைத்த ஏதோ  ஒரு உடையை எடுத்து மாட்டியளுக்கு, அந்த அறையில் இருப்பதை விட தோட்டத்துக்கு சென்றால் மனதில்  இருக்கும் டென்ஷன் குறையுமோ என்று நினைத்து பின் பக்கம் நோக்கி சென்றாள்.

இப்போது எல்லாம் மஞ்சு தன் அறையில் இருக்கும் நேரத்தை விட பின் பக்க தோட்டத்தில் தான் அதிக நேரம் செலவிடுகிறாள். அதற்க்கு காரணம் தூக்கணாங்கூடு.

ஆம் அங்கும் தூக்கணாங் குருவியின் கூடு அழகு பட கட்டப்பட்டு இருந்தது. ஆனால் அதில் இருந்த பெண் குருவி தான் தன் குஞ்சோடு வேறு இடத்துக்கு இடம் பெயர்ந்து விட்டது.

அதில் இருத ஆண் குருவி  மட்டும் வேறு பெண் குருவிக்காக தனித்து காத்திருந்தது.இந்த தகவல்கள்  அனைத்தும் மஞ்சுவுக்கு கதிர் தான் ஒரு  நாள் மஞ்சு அந்த கூட்டையே பார்த்திருந்த போது சொன்னது.

அதை கேட்டதும்…. “அப்போ அந்த குருவி ஒரே குருவியோடு காலம் முழுவதும் இருக்காதா….?” குழப்பத்தோடு கேள்வி எழுப்பியவளுக்கு,

“இல்ல மஞ்சும்மா…..அந்த ஆண் குருவி பெண் குருவியை விரட்டுவது இல்லை. பெண் குருவி தான் தன் குஞ்சோடு வேறு இடத்துக்கு இடம் பெயர்கிறது. தூக்கணாங்குருவி இனத்தை பொறுத்தவரை பெண் குருவிக்கு தான் முக்கியத்தும்.அதனால் அதன் விருப்பப்படி தான் நடக்கும்.” என்று தெளிவு பட  விளக்கிய கதிரை, அன்றிலிருந்து உற்ற தோழனாக கருத ஆராம்பித்தாள்.

ருத்ரன் சொன்னது போல் இரவு நேரத்துக்கு வருவது இல்லை. பகல் முழுவதும் அவளின் இருப்பிடம் தோட்டம் தான். மரங்கள்  படர்ந்து இருந்த அந்த இடத்தில் உச்சி வெய்யில் கூட அதன் தாக்கத்தை காட்டது குளிர்ந்து தான் இருந்தது.

கதிர் ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை செய்வதால், அவனுக்கு ஷிப்ட்டு மாறி, மாறி, வரும். நைட் ஷிப்டில் விடியற்காலை நான்கு மணிக்கு வரும் கதிர் தூங்கி  பத்து மணிக்கு விழித்து விடுவான். அன்று   மஞ்சுவோடு பகல் நேரத்தை போக்க. அவர்களுக்குள் ஒரு நல்ல நட்பு மலர்ந்தது.

அதுவும் தந்தை இன்றி வளர்ந்த கதிரின் அன்பான பக்குவமான பேச்சில், அனைவரிடமும் ஒதுக்கம் காட்டியது போல் கதிரிடம் காட்ட முடியவில்லை மஞ்சுவாள்.

தலைக் கூட  காயது  அந்த கூட்டையே பார்த்திருந்த மஞ்சுவின் அருகில் நடந்து  வந்த கதிர்….என்னம்மா இன்னிக்கி ரிசல்ட். அந்த டென்ஷன் கூட இல்லாம, எப்போதும் போல் அந்த கூட்ட ஆராய்ச்சி பண்ண வந்துட்ட….?” என்று  சொல்லிக் கொண்டே,

அவள் முகத்தை பார்த்த கதிருக்கு, அதில் தெரிந்த அதிகப்படியான பயத்தை பார்த்து…. “மஞ்சும்மா…..எதுக்கு இப்படி பயப்படுற…..? நீ நினச்சத விட நல்ல மார்க்கு தான் வரும்.” என்று தைரியம் சொல்லியும் அவள் முகம் தெளியாததை பார்த்து…

“நீ கவல படுறத பார்த்தா…டென்த்துல நீ காப்பி அடிச்சி மார்க்கு வாங்கினியோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.”

மஞ்சுவின் டென்த் மார்க்கு கதிருக்கு தெரியும். அதனால் அதை வைத்து அவளை வெறுப்பு ஏத்த…

அவன் எதிர் பார்த்தது போல்…. “தான் கள்ளன் பிறரை நம்பான்னு சொல்லுவாங்க. அது  போல நீங்க வேணா  அப்படி காப்பி அடிச்சி கோல்ட் மேடல் வாங்கி இருக்கலாம். நான் எல்லாம் அப்படி இல்லேப்பா.” என்று ரோஷம் பொங்க சொல்ல.

“அப்போ எதுக்கு இந்த டென்ஷன் பீ கூல்.” என்று சொன்னதும்.

 “நான் ஒன்னும் டென்ஷன்ல இல்ல.” பயத்தை தன் முகத்தில் இருந்து மறைத்து  கெத்தாக சொல்ல.

“பயம் இல்லேன்னா சரி தான்.” என்று அவர்கள் உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில்…

நேற்று இரவு பன்னிரெண்டு மணிக்கு தான் பிஸ்னஸ் பார்ட்டி முடித்து வீட்டிக்கு வந்து  நேரம் கழித்து உறங்கியதால் , நேரம் கழித்து எழுந்த ருத்ரனுக்கு முதலில்  நினைவுக்கு வந்தது, இன்று பன்னிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவு.

கட கடவென்று காலை கடனை முடித்ததும், எப்போதும் காபியை அறைக்கே வரவழைத்து குடிப்பவன் அன்று படிகட்டை பயன் படுத்தாது லிப்ட்டின் மூலம் கீழ் தளம் வந்தவன்.

“மலரம்மா காபி.” என்று  சொல்லி விட்டு கண்ணை சுழல விட்டான்.

காபி கப்போடு வந்த மலரம்மா…. “யாரையாவது கூப்பிடனுமா தம்பி.”  மலரம்மா கையில் ஐந்து மாத குழந்தையோடு அந்த வீட்டுக்கு வரும் போது ருத்ரனுக்கு ஆறு வயது. சமீபத்தில் தந்தையை இழந்த குழந்தை மீது அதிகமாக பாசத்தை பொழிந்தார்  மலரம்மா.

பத்துபன்னிரெண்டு வயது வரை ருத்ரனும் மலரம்மாவிடம் எந்த பேதமையும் காட்டாது தான் இருந்தான். வயது கூட கூட அந்த வயத்துக்கே உறிய ஒதுக்கத்தை காட்ட.

மலரம்மாவும் தன் நிலை தெரிந்து ஒதுங்கிக் கொண்டார். இருந்தும் மனதில் ருத்ரன் மீதும் அந்த குடும்பத்து மீதும் அளவுக்கு மீறி,  பாசம் என்பதை விட நன்றி கடன் அவருக்கு இருந்தது.

கை குழந்தையுடன் தவிக்க விட்டு வேறு பெண்ணோடு கணவன் ஓடியதால் அக்கா வீட்டுக்கு அடைக்கலம் புகுந்தவளை, மாமன் தப்பான கண்ணோட்டத்துடன் பார்க்க.

அவனை திட்டாது…… “பாவம் பார்த்து என் வீட்டில் சேர்த்த பாவத்துக்கு….. என் புருஷனையே கை கீழே போட்டுக்க பாக்குறியா….?” தன் அக்காவின் பேச்சில் எதுவும் சொல்லாது வெளியில் வந்தவளுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்த வீடு.

சொந்தம் கொடுக்காத பாதுகாப்பை அந்த வீடு தந்ததற்க்கு இந்த நன்றி கூட இல்லை என்றால் எப்படி….?

ருத்ரனின் தேவையை அவன் முகத்தை பார்த்தே கண்டு பிடித்து விடுவார். என்றும் இல்லாது கீழே வந்து காபி கேட்டது. படிக்கட்டை உபயோகிக்காது லிப்ட்டை உபயோகித்தது, அதில் இருந்தே யாரோ தேடுகிறான் என்பதை அறிந்துக் கொண்டு கேட்க.

“மஞ்சு எங்கே மலரம்மா….?” என்று நேரிடையாக கேட்டதுக்கு,

“காலையில் இருந்து ஏதோ ஒரு இதுவாவே இருக்கு தம்பி. தோ இப்போ தான் எப்போவும் போல் தோட்டத்துக்கு போயி இருக்காப்பல.”

“காபி குடிச்சாளா….?”

“இல்ல தம்பி. நான் கேட்டதுக்கு ஒரேடியா டிபனே  கொடுக்க சொல்லிடுச்சி….” என்று சொன்னதும்.

“ஒரு காபி கலக்குங்க.” என்ற ருத்ரனின் பேச்சில் ,யாருக்கு என்று புரிந்துக் கொண்ட மலரம்மா…..

மஞ்சுவின் ருசிக்கு ஏற்ப காபி கலக்கி அவனிடம் கொடுத்ததும், அதை பெற்றுக் கொண்ட ருத்ரன் பின்தோட்டத்தை நோக்கி சென்றான்.

அங்கு கதிரும், மஞ்சுவும் ஏதோ தீவிரமாக பேசிக் கொன்டு இருப்பதை பார்த்துக் கொண்டே அவர்களை  நோக்கி வந்தவன் மனதில்,

இவர்களின் பேச்சு புதியதாக பேசுபவர்களை போல் தெரியவில்லை. எப்போதும் பேசுவது போல் தான் அவர்களின் முகபாவம் இருக்கிறது என்று  நினைத்தாலும், எதையும் முகத்தில் காட்டாது, அவள் முன் காபி கப்பை நீட்ட.

அப்போது தான் ருத்ரனை பார்த்த மஞ்சு, இது வரை இருந்த இலகு தன்மை மறைந்து ஒரு அன்னியத்தன்மையோடு….

“நான் மலரம்மா கிட்ட வேண்டாமுன்னு சொன்னனே….” என்று ஒரு வித சங்கடத்துடன் சொன்னவளிடம்,

“பரவாயில்ல குடி…… டிபன் பொருமையா சாப்பிடலாம்” என்று சொன்னவன் நீட்டிய கோப்பை இறக்காது வாங்கு என்று ஜாடை சொன்னவன் பேச்சை மீற மிடியாது பெற்றுக் கொண்டு  குடிக்க தொடங்கியதும்,

இது வரை கதிரிடம் பார்வை செலுத்தாது இருந்தவன். இப்போது அவனை பார்த்து…. “ம் அப்புறம் கதிர். ஆபிஸ் ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு….” என்று சாதரணமாக விசாரிக்க.

எப்போதும் ஒரு புன்னகையுடன் கடக்கும் ருத்ரனின் இந்த பேச்சில் யோசனையுடனே…. “ஆ நல்லா போகுது சர். “என்று சொன்னதும்.

“நீ காலேஜில் கோல்ட் மெடல் வாங்குன அப்போ,  மாமா கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்தது நியாபகம் இருக்கா …..?”

சம்மந்தமே இல்லாத இந்த பேச்சில் குழம்பிய கதிர்… “நியாபகம் இருக்கு சர்.”

“என்னன்னு….?”

இப்போது கதிருக்கு குழம்பவில்லை தன்னிடம் ஏதோ உணர்த்த முயல்கிறார் என்று புரிந்ததும்….. “ தயாநிதி அய்யா கிட்ட உங்கல மறக்க மாட்டேன். இந்த படிப்பு நீங்க கொடுத்தது  தான். இதுக்கு என்ன கை மாறு செய்ய போறேன்னு  தெரியலேன்னு சொன்னதுக்கு,

 தயாநிதி அய்யா….எனக்கு எந்த கை மாறும் வேண்டாம். எனக்கு ஏதாவது செய்யனுமுன்னு தோனுச்சின்னா…..நீ நல்லா வளர்ந்ததும்,  குறைந்தது இரு பிள்ளைகளின்  படிப்பு செலவ ஏத்துக்கனுமுன்னு சொன்னாரு.”என்று சொன்னவன்.

“இந்த மாசம் தான் என் சம்பளம் பத்து பர்சென்ட் ஏறி இருக்கு.  கண்டிப்பா அடுத்த வருஷம் ஒருத்தவங்க படிப்பு செலவே ஏத்துப்பேன் சர். ஒரு மூணு வருஷம் கழிச்சி இன்னொருத்தவங்களையும் படிக்க வைப்பேன். அய்யா சொன்னது போல் நான் நல்ல நிலைக்கு வந்தா என்னால முடிஞ்சளவுக்கு  பசங்கல படிக்க வைப்பேன்.” ருத்ரன் கேட்டது கேட்காது எல்லாவற்றுக்கும் சேர்த்து பதில் சொன்னவன்.

கூடுதலாக…… “உண்ட வீட்டுக்கு  ரெண்டகம் செய்ய நினைக்க  மாட்டேன்.” என்று ருத்ரனை நேர்க் கொண்டு பார்த்து சொன்னவன்.

மஞ்சுவை பார்த்து….. “கவலை படாதே நல்ல மார்க் வரும்.” என்ற சொல்லோடு…

ருத்ரனை பார்த்து…. “நைட் ஷிப்ட்டு பார்த்து தூங்கிட்டு இருந்தேன் சர். அம்மா தான் மஞ்சு  பொண்ணு சோகமா இருக்கான்னு சொன்னாங்க. அப்போ தான் இன்னிக்கு ரிசல்ட்டு நியாபகத்தில் வந்தது. அது தான் பேச்சு கொடுத்துட்டு இருந்தேன்.  நீங்க பேசுங்க சர் நான் தூங்க போறேன்.” மடியில் கணம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். அதனால் ருத்ரனை  நேர்க் கொண்டு பார்த்து சொல்லி விட்டு தன் வீட்டை நோக்கி சென்றான்.

கதிரின் பேச்சில் ருத்ரனின்  முகம் தன்னால் புன்னகை பூசிக்  கொள்ள, அந்த முகபாவத்தை மாற்றாது மஞ்சுவிடம் பார்வையை செலுத்தினான்.

காபி குடித்துக் கொண்டே இவர்களின் சம்பாஷனையை கேட்டு கொண்டு இருந்தவளுக்கு, இவன் ஏன் இந்த பேச்சை எடுத்தான்…..? என்ற  யோசனையின் முடிவில்…

ஓ கதிரையே என் மாமன் படிக்க வெச்சாரு. உன்னை பட்டிக்க வைக்க மாட்டாரா….என்று தனக்கு புரிய வைக்க நினைக்கிறாரோ…..தன் கவலைக்கு இது தான் காரணம் என்று நினச்சிட்டாரோ…..? என்று நினைத்த அந்த அறிவாளி.

“ அப்பா கவர்மெண்ட் எம்பிளாயி…..” எப்போதும் ஒரு வார்த்தை ஒரு சொல் என்று  முடித்துக் கொள்பவள். தொடர்ந்தால் போல் மூன்று வார்த்தை பேசியதில்…

தெரிந்த தகவலாக இருந்தாலும்…..அப்போது தான் கேள்வி படுவது போல்…

 “ஓ அப்படியா…..” என்று பேச்சு இழுக்க.

“அவர் பென்ஷனும் என் பெயரில் தான் தாத்தா போட்டுட்டு வந்து இருக்காரு அதுவும் சேர்த்து நிறைய என் பெயரில் பணம் இருக்கு.” அவள் எதற்க்கு அவள்  வங்கி தொகையைய் தன்னிடம் சொல்கிறாள் என்று  புரியவில்லை என்றாலும்,

தன் அம்மாவின் வசதி தெரியாது தன் வங்கி கணக்கில் இருக்கும் அந்த சொற்ப பணத்தை பற்றி பெருமையாக பேசும் மஞ்சுவின் வெகுளி தனப்பேச்சில் மனதில் சிரிப்பு வந்தாலும், அதை காட்டாது.

“ஓ அப்படியா….?அப்போ மஞ்சு பணக்காரின்னு சொல்லு.” என்று சொன்ன ருத்ரன். அவள் குழம்பிய முகத்தை பார்த்து இன்னும் குழப்பும் பொருட்டு…. “அப்போ எனக்கு பிஸினசுக்கு ஏதாவது  பணம் தேவையா இருந்து கேட்டா கொடுப்பியா மஞ்சும்மா….?”

ருத்ரனின் முகபாவத்தில் இருந்து எதுவும் தெரியாது குழம்பிய மஞ்சு…அவனை குழப்பத்துடன் பார்க்க.

“ என்ன மஞ்சு கொடுக்க மாட்டியா….?நான் வேணா திருப்பி கொடுக்கும் போது வட்டியோடு கொடுத்துடுறேன். ஆ பேங்க் வட்டி தான் கொடுப்பேன். இந்த மீட்டர் வட்டியெல்லாம் போட்டா அத்தான் தாங்க மாட்டேன்.” கடையாசிக அவன் பேசி முடிக்கும் போது எவ்வளவு கட்டு படுத்தியும் புன்னகை வந்து விட.

தன்னை கிண்டல் செய்கிறான் என்று மனதில் ஆத்திரம் வந்தாலும், இது வரை தன் கோபத்தை  கூட காட்டாது இருந்தவள். இப்போது கூட எப்படி அதை காட்டுவது….?அதுவும் ருத்ரனிடம் என்று நினைத்தாலுமே….

“ உங்களுக்கு பணம் கொடுக்குற அளவுக்கு எனக்கு வசதி இல்லை தான். ஆனால் என் செலவுக்கு மத்தவங்க கிட்ட வாங்குற அளவுக்கு என் அப்பாவோ, தாத்தாவோ விடல.”

“விட்டேன்னா…..எங்கே போய் விழுவேன்னு தெரியாது.” ருத்ரன் இது வரை அவன் தோற்றம் மட்டும் தான் கடுமையாக காணப்பட்டான். பேச்சிலும், செயலிலும் மஞ்சுவிடம் அவன் கடுமையைய் இந்த இரண்டு மாதத்தில் காட்டியதே இல்லை. அவளின் இந்த ஒதுக்கத்தை போக்கி இந்த குடும்பத்தில் இவளும் ஒருத்தி என அவள் மனதில் பதிய வைக்க வேண்டும்.

தன்னுடைய இயல்பையும் மீறி தன் குரலில் அவ்வவளவு மென்மையை கொண்டு வந்து தான் மஞ்சுவிடம் பேசுவான். ஏன் இன்னும் சொல்ல போனால் இவளிடம் காட்டும் பொறுமை கூட மதுவிடம் காட்டியது இல்லை என்று  கூட சொல்லலாம்.

அப்படி நாம் பார்த்து பார்த்து நடந்தால், என்ன பேச்சு பேசுகிறாள். அந்த கோபத்தில் கத்தி விட.

இப்போது தான் மூன்று நான்கு வார்த்தை தொடர்ந்தால் போல் பேசியவள் பேச்சே மறந்தார் போல் அவனையே  ஒரு வித நடுக்கத்துடன் பார்த்தவளின் நிலை புரிந்தாலுமே ருத்ரனின் கோபம் குறைவதாய் இல்லை.

“சின்ன பொண்ணு வாயில் இருந்து என்ன பேச்சு இது….?உங்க பணம் என் பணமுன்னு, இப்போ ஒரு ஏர்லைன்ஸ் சொந்தமா இருக்கு. இன்னொன்னும் ஆராம்பிக்க போறேன். இது எல்லாம் என் ஒருத்தனால வந்தது இல்ல.

என் மாமன் அவர் இல்லேன்னா…..நான் இல்ல. அவர் என் அப்பா பனமுன்னு நினச்சி அப்படியே வெச்சி இருந்தா…..நான் இந்த நிலையில் இருந்து இருக்க  மாட்டேன்.

மாமா பிஸினஸ்  வேற , என் பிஸினஸ்  வேற. ஆனா எனக்கு உதவின்னு தேவை பட்டா அவர் வந்து நிற்ப்பார். அதே மாதிரி தான் நானும்.

ஏதோ ரிசால்ட்டுன்னு டென்ஷனா இருக்கியே, அதே குறைக்க ஏதோ  விளையாட்டுக்கு பேசினா…..என்ன பேச்சு பேசுற….” மஞ்சுவிடம் இவ்வளவு பேசியும் ருத்ரனின் கோபம் குறையவில்லை.

 

 

 

 

 

 

Advertisement