Advertisement

அத்தியாயம்—–16

தன் அறையில் குளியலை முடித்துக் கொண்ட ருத்ரன்…..சமையல் அறையில் இருக்கும் தொலைபேசியின் இணைப்பின் மூலம்…

“மலரம்மா டின்னர என் ரூமுக்கே அனுப்பிடுங்க.” என்றவனும்கு …..

“சரி தம்பி.” என்று மலரம்மா பதில் அளித்தாலும்,  பார்வை முழுவதும் சாப்பிடும் அறையில் அமர்ந்து இருந்த அகிலாண்ட நாயகி மீதே இருந்தது.

மலரம்மாவும் அங்கு நடந்த பிரச்சனையைய் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். அகிலாண்ட நாயகி தான் அநாதரவாய் இருக்கும் போது அடைக்கலம் கொடுத்தவர். முதலாளி என்னும் கெத்தில் இருந்தாலும், சமபளத்தில் என்றும் குறை வைத்தது இல்லை.

அதுவும் தன் மகனை தயாநிதி அய்யா தான் படிக்க வைக்கிறார் என்று தெரிந்தாலும், அதை எதிர்க்காது இருந்தார்.

என்ன ஒன்று…அவ்வப்பொழுது…. “நீயும் உன் மகனும் எப்போதும் என் வீட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்”.  என்ற அந்த வார்த்தை அவர் வாயில் இருந்து வந்து விழும்.

மலரம்மாவுக்கு அந்த வார்த்தை என்றும் வேதனை அளித்தது இல்லை. இன்னும் சொல்ல போனால் அவர் சொல்வது வாஸ்த்தவமானது தானே…அந்த எண்ணம் தான் அவருக்கு.

ஆனால் டீன் ஏஜில் இருந்த கதிரின் முன்  பழக்க தோஷத்தில் அகிலாண்ட நாயகி சில சமயம் அந்த வார்த்தை சொல்ல கேட்டதும்.

அந்த வயதுக்கே உரிய  ஆவேசத்தில்….தன் அன்னையிடம்…. “அது என்ன வார்த்தை விசுவாசம் என்று. அப்படி என்ன அவங்க வீட்டுக்கு துரோகம் செய்துடுவோம். படிப்பு முடிஞ்சதும். இந்த வேல வேண்டாம். நாம தனியா போயிடுவோம்.” வீராப்பாய் பேசும் மகனின் வாயை…

“இதோ நீ இப்போது  பேசுனியே…இதுவும் ஒரு வகையில்  துரோகம் தான். என் காரியம் முடிஞ்சதும் இந்த வீட்ட விட்டு போயிடலாமுன்னு சொல்றியே…

இந்த வீடு என் கைய் பக்குவத்துக்கு பழகிடுச்சி. இனி வேறு ஒருத்தவங்க சமச்சி இவங்களுக்கு பிடிக்குமோ….? இல்லையோ. ….?

என் உசுரு இருக்கும் வரை என் கையால தான் இவங்களுக்கு சமச்சி போடுவேன். அது நீ என்ன பெரிய படிப்பு படிச்சி எவ்வளவு பெரிய ஆளா ஆனாலும் நான் இந்த  வீட்டு சமையல் காரியா சாக தான் ஆசைபடுறேன்.”

தன் மகனிடம் இப்படி பேசும் அளவுக்கு அந்த வீட்டின் மேல்  விசுவாசம் மலரம்மாவுக்கு கழுத்து அளவு நிறைந்து இருந்தது.

அகிலாண்ட நாயகி தன் பேரனுக்காக சாப்பிடாமல் படிகட்டில் கண் பதித்து இருக்க. ருத்ரனோ சாப்பிட தன் ரூமுக்கு அனுப்பி விடுமாறு சொன்னதும்…

கடவுளே…இந்த வீட்டில் நிம்மதி நிலைத்து இருக்க செய்யுங்க,  என்ற வேண்டுதலோடு சமையலுக்கு உதவிக்கு இருக்கும் ஆளிடம், ருத்ரனுக்கு பிடிக்கும் என்று செய்த ஆப்பத்தையும், குருமாவையும், கொடுத்து அனுப்பினார்.

இந்தியாவின் உள்ள தொழிலின் விவரத்தை மடிகணினி மூலம் பார்த்திருந்த ருத்ரனுக்கு….இதே அறையில் போன வருடம் கேட்ட  அதே மெல்லிய கொலுசொலியில் தலை நிமிர்ந்து பார்க்க.

அவன் நினைத்தது போலவே…..கதவின் ஓரத்தில் நின்றுக் கொண்டு இருந்த மஞ்சு, ஒரு கையை கதவை தட்டிய வாறே…

மறு கையில் கொஞ்ச நேரத்துக்கு முன் தான் கொடுத்த முத்துமாலையின்  நகை பெட்டியை கையில் பிடித்துக் கொண்டு நின்றுக் கொண்டு இருந்தாள்.

மஞ்சுவை பார்த்து சிரித்துக் கொண்டே…..தன் மடி கணினியைய் அணைத்த வாறே….. “வா மஞ்சு.” என்று அழைத்தவன்.

மஞ்சுவின் கையில் இருந்த நகை பெட்டியை பார்த்துக் கொண்டே….. “என்ன பாட்டி சொன்னதும் அதை என் மூஞ்சியில் வீச வந்துட்டியா…..” பேச்சு என்னவோ சாதரணம் போல் தான் இருந்தது.

ஆனால் அவன் பேசியதின் அர்த்தத்தில்….வாய் தன்னால்…. “அய்யோ இல்ல.” மஞ்சு பதறி பதில் அளிக்க.

“ஓ அப்போ எனக்கு போட்டு காமிக்க வந்தியா…..? சரி போட்டு காமி. நான் பாக்குறேன். நான் நினச்சது போல் நல்லா இருக்கா….?இல்ல ரொம்ப நல்லா இருக்கான்னு சொல்றேன்.”

ருத்ரன் சொன்னது போல் அந்த முத்து மாலையை ருத்ரனிடம் கொடுக்க தான் வந்தாள்.

முதலில் மதுவிடம் …. “இதை நீயே வைத்துக் கொள். உனக்கு வாங்கியது வேனா எனக்கு கொடு.”

பாட்டியின் குற்றச்சாட்டு…. “என் பேத்திக்கு சின்னது. அவளுக்கு பெரியதா….? என்பது தானே…அதனால் மதுவிடம் மாற்றிக் கொள்ளவே தான் மதுவின் அறைக்கு சென்றது.

மஞ்சு நீட்டயதை வாங்கி பரத்த மது…. “என்னுடையதை விட உன்னுடையது நல்லா தான் இருக்கு.” என்று இழுத்தார் போல் மது சொன்னதும்.

“ உனக்கு பிடிச்சி இருக்கு தானே…அப்போ இந்தா  இத நீயே வெச்சிக்கோ…உனக்கு கொடுத்ததை என்னிடம் கொடுத்து விடு.”

மது கொடுத்ததும் வாங்க மாட்டாள். அவளிடம் எவ்வளவு வாதட வேண்டுமோ…என்று நினைத்து வந்தவளுக்கு ,பிரச்சனை இவ்வளவு சீக்கிரம் முடிந்ததும்  மகிழ்ந்து போய் தனக்கு கொடுத்த முத்துமாலை அவள் மடியில் வைத்து விட.

“இரு இரு….இந்த மாலை அத்தான் உனக்கு கொடுத்தது. நீ அவரிடம் போ இதை மதுவுக்கு கொடுத்துடுங்கன்னு அவரு கிட்டயே கொடுத்துடு. அவரு என் கிட்ட கொடுத்தா நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன்.” நீட்டி முழக்கியவளின் பேச்சை கேட்ட மஞ்சுவுக்கு.

“அடிப்பாவி வேண்டாமுன்னு சொல்ல தான், இப்படி சுத்து வளைத்தாளா…..?” என்ன தான் சொன்னாலும் இதை வாங்க மாட்டாள்.

சரி ஒரு முயற்ச்சியாய்…..ருத்ரனிடமே  நிலமையைய் விளக்கி கொடுத்து விடலாம் என்று தான் அவன் அறைக்கு வந்தது.

ஆனால் அதன் பேச்சே எடுக்காத வாறு ருத்ரனின் பேச்சு இருக்க. அதை பற்றி பேசாது. திரும்ப பார்த்தவளிடம்…

“என்னடா அத்தானுக்கு போட்டு காட்டாம போற…..?” என்ற ருதரனின் கிண்டல் பேச்சில்…

“நான் போட்டு காட்ட வரல.” முகத்தை தூக்கி வைத்த வாறு சொன்னவளின் பேச்சும், செயலும் ,ரசிக்க தக்கத்தாய் இருந்தது.

“ஓ…” என்று அதற்க்கு பிறகு என்ன பேச்சு வளர்ப்பது என்ற யோசனை ருத்ரனுக்கு.  எப்போதும் வெட்டொன்றும், துண்டு இரண்டுமாய் பேசும் ரகமானவனுக்கு, இந்த கடலை போடுவது தெரியாத காரணத்தால் திண்டாட.

அவனுக்கு உதவி செய்வது போல் மலரம்மா அனுப்பி வைத்த ஆள் கையில் தட்டோடு கதவை தட்ட. அப்பா இவள இழுத்து பிடிக்க சரியான காரணம் கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் ருத்ரன்….

“வா ..வா…” கைய் இரண்டும் தட்டிய வாறே அந்த ஆளை அழைக்க. “நமக்கு இவ்வளவு வர வேற்ப்பா…”ஒரு நிமிடம் அதிசயத்து போன அந்த ஆள்.

பின் “சேச்சே இருக்காது. பசியா இருக்கும்.” தவறாய்  கனித்தவனாய்…..ருத்ரனுக்கு பரிமாற முயல.

“வேண்டாம் நீ போ.” என்று அவனை அனுப்பியவன், மஞ்சுவை பார்த்து…. “எனக்கு கம்பெனி கொடேன்.”

அவளை நிறுத்தி வைக்க சாப்பிட அழைப்பு விடுத்தவனை, தயக்கத்துடன் பார்த்த மஞ்சு….

“உங்களுக்கு மட்டும் தான் கொண்டு வந்து இருப்பாங்க.” தயங்கிய வாறு கொண்டு வந்த உணவின் அளவை பார்த்து சொன்னவளிடம்…

ஆப்பத்தின் எண்ணிகைய் காட்டி….” பாரு நிறைய தான் கொடுத்து இருக்காங்க. மலரம்மா நீ இங்கு வந்ததை பார்த்து இருப்பாங்க போல. அது தான் உனக்கும் சேர்த்து கொடுத்து விட்டு இருக்காங்க.”

அந்த ஆப்பத்தின் எண்ணிகை ருத்ரனுக்கு மட்டுமே…ஆப்பம் குருமா என்றால் குறைந்தது ஏழு எட்டு இறங்கும் . அதனால் எட்டு எண்ணிகையில் தான் மலரம்மா ஆப்பாத்தை வைத்து அனுப்பியது.

ஆனால் ருத்ரன் எவ்வளவு சாப்பிடுவான் என்பது தெரியாத மஞ்சுவோ அப்படியும் இருக்குமோ என்று  அவனின் எதிரில் அமர்ந்தவளிடம்.

ஒரு புன்னகையுடன்…. “ நீயே எடுத்து வைய்யேன்.” அவள் பரிமாற தான் சாப்பிட வேண்டும் என்று அவன் உணர்ந்து பேசுகிறானா….இல்லை யதார்த்தமாக மற்றவர்களை ஏவி பழக்கப்பட்டதன் விளைவாக மஞ்சுவை பரிமாற  சொன்னானா….? அது கடவுளுக்கே வெளிச்சம்.

ஆப்பத்தை மூடிய தட்டில் நாளை வைத்து அதிலேயே குருமாவை ஊற்றி, அவன் பக்கம் நகர்த்தினாள்.  எப்போதும் தனி கிண்ணத்திலேயே தொட்டு கொள்ளும் பழக்கம் உள்ள ருத்ரன் எதுவும் சொல்லாது சாப்பிட ஆராம்பித்தவன்…

“நீயும்  வைத்துக் கொள்.” என்றதும் மறுக்க முடியாது…..இரண்டை எடுத்து வைத்தவள்  சிறிய கிண்ணத்தில் இருக்கும் குருமாவில் ஆப்பத்தை தொட்டு சாப்பிட ஆராம்பித்தாள்.

ருத்ரனுக்கு மஞ்சு ஊற்றிய குருமா ஒரு ஆப்பத்துக்கே சரியாக இருக்க. மிச்ச மூன்று  ஆப்பதுக்கும் மஞ்சு தொட்டு சாப்பிட்ட குருமா கிண்ணத்திலேயே அவனும் தொட்டு சாப்பிட்டான்.

அவன் செயலை தடுக்க இயலாது ….ஒடு வித கூச்சத்தில்  மஞ்சு உணவை தொடர. அவனோ எப்போதும் மஞ்சுவுடன் உணவு உட்கொள்பவன் போல்…

“அப்புறம் காலேஜ் எல்லாம் எப்படி போகுது…..?”

“ம் நல்லா போகுது.” ஒரு வினா விடைக்கு போல் மஞ்சு பதில் அளித்தாள்.

அப்போதும் அவன் விடாது….. “சின்ன போதில்  இருந்தே இந்த படிப்பு மீது உனக்கு விருப்பமா மஞ்சு…..”

“இல்ல அப்பாவோட விவசாய நிலம் இருக்கு. எனக்கு இந்த  சிட்டி லைப் அவ்வளவா விருப்பம் இல்ல. சரி இந்த படிப்பு படிச்சா அப்பாவோட நிலத்த கரும்போக்க போட தேவ இல்ல. அதோட எனக்கு பிடிக்காத சிட்டியில் இருக்க தேவையில்லை.”

மஞ்சுவின் பதிலில் “யப்பா இப்போவாவது பெருவினாவுக்கு பதில் அளித்தாளே….சந்தோஷம்.” மனதில் நினைத்தவனாய்…

“மாமாவோட எந்த நிலத்துல விவசாயம் பண்ணலாமுன்னு இருக்க.”

“எந்த நிலமா…அப்பாவுக்கு ஒரு இடத்தில் தானே இடம் இருக்கு.” அந்த பதிலில் யாருடைய நிலத்தை அவள்  குறிப்பிட்டாள், என்று தெரிந்ததும் அடுத்த என்ன பேசுவது என்று தயங்க.

மஞ்சுவுக்கும் கொஞ்ச நேரம் சென்று தான் ருத்ரன் யார் நிலத்தை கேட்டான், என்பது  புரிந்தவளாய்…. “ நான் தயாப்பாவை சொல்லலே.” சங்கடத்துடன் சொல்ல.

மஞ்சுவின் சங்கடத்தை போக்க. தன் தயக்கம் உதறி…. “நீ அப்பான்னு சொன்னதும் எனக்கு தயா மாமான்னு நினச்சிட்டேன்.” என்று சொன்னவன்.

பின்…..” நீ இதுல தயங்க ஒன்னும் இல்ல மஞ்சு. அவர் இறந்தாலும் அவர் இன்ஷியல் தான் உன் பெயருக்கு முன் இருப்பது. நீ தோன்ற காரணமானவர் அவர பத்தி  பேச நீ தயங்க கூடாது.” என்று சொல்லி நிறுத்தியவன்.

“ ஆனா உன்னுடைய இந்த தயாப்பான்னு இந்த அழைப்பு,  கூடிய சீக்கிரம் அப்பான்னு மாறனும். உன் மேல அவர் ரொம்ப அக்கறை வெச்சி இருக்காரு.”

“ எனக்கு தெரியும்.” என்ற மஞ்சுவின் இடையூற்றால் மெல்லிய புன்னகை பூக்க.

“ஓ தெரியுமா…..பரவாயில்லையே….”

அடுத்து பேசும் பேச்சு மிக நுட்பமானது. இதை  தான் மஞ்சுவிடம் பேசுவதா….? வேண்டாமா…..?தன் மனதில் ருத்ரன் ஒரு பட்டிமன்றமே நடத்தி முடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இன்று வரை மஞ்சு அவள் அம்மாவிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்றானதும், இதை இப்படியே தொடர விடுவது சரியில்லை என்று முடிவு எடுத்தவனாய்….

தன் பேச்சை ஆராம்பித்தான்….. “மஞ்சு நான் உன் பர்சனல் விஷயத்தை பேசலாமா…..?எனக்கு  அந்த உரிமை இருக்கு தானே …..?உனக்கு சங்கடம் கொடுக்கும் என்றால் வேண்டாம்.” என்று கேட்டு விட்டு மஞ்சுவின் முகத்தை பார்த்தான்.

இப்படி கேட்டவனிடம்…… “என்னுடைய பர்சனல் விஷயம்  நீ பேசுவது பிடிக்கவில்லை என்றா சொல்ல முடியும்….?”

அதனால்…. “பேசலாம்.” என்று  தயங்கி கொண்டே சொன்னவளுக்கு, என்ன கேட்பானோ….என்று அவள் தயங்க.

அவள் தயக்கத்துக்கு ஏற்ப தான் அவன் பேச்சு இருந்தது.

“உங்க அம்மா கிட்ட ஏன் நீ பேச மாட்டேங்குற…..? அந்த வயசுல  கணவன் இல்லாம தனியா இருப்பது எவ்வளவு பிரச்சனையே கொண்டு வருமுன்னு அப்போ உனக்கு தெரியல. ஏன்னா அத பத்தி எல்லாம் புரியும் அளவுக்கு உனக்கு வயசு இல்ல.

அதனால உன் அம்மா மேல கோபமா இருந்த பேசல. அது சரி.

ஆனா இப்போ உனக்கு இருபது வயசு ஆகுது. இப்போவும் உங்க அம்மா  அப்போ எந்த அளவுக்கு பிரச்சனையே சந்திச்சி இருப்பாங்கன்னு புரியாம அவங்க கிட்ட முகத்த திருப்புவது சரியில்ல.”  என்ன கேட்க நினைத்தானோ அது கேட்டு விட்டான்.

“நான் அவங்க திருமணம் செஞ்சதால பேசலேன்னு நான் எப்போ…. யாரு கிட்ட சொன்னேன்.”  மஞ்சுவின் பதிலில் அதிர்ச்சியுற….

“அப்போ எதுக்கு பேசலே….”

“அவங்கல பத்தி யோசிச்சவங்க. ஏன் என்ன பத்தி யோசிக்கல.” மஞ்சுவின் பேச்சில் அவள் முகத்தையே பார்க்க.

தொடர்ந்து…..”தயாப்பா அம்மா மேல தப்பு இல்ல. அவங்க சைடுல அவங்க சொன்னது நியாயம் .  தன் ரத்தம் சொந்தம் தான் தன் வீட்டு வாரிசு. அந்த காலத்தவங்க அப்படி தான் நினைப்பாங்க.

தயாப்பா  அம்மா மேல விருப்பம். இப்போ சரி சொல்லி சரிபடுத்திடலாமுன்னு சொல்லி இருக்காரு. காதலிக்கும்  போது ஆயிரெத்தெட்டு வாக்குறுதி கொடுப்பாங்க. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் தான் அது அரசியல்வாதி வாக்குறிதின்னு தெரியும். அது அவங்க மேல தப்பு இல்ல.

தனக்கு பிடிச்ச பெண்ண கல்யாணம் செய்துக்கனும் என்ற அவங்க ஆசை. அதனால தயாப்பா மேல கூட தப்பு சொல்ல முடியாது. என்ன ஒன்னு அவங்க அம்மாவ லேச நினச்சிட்டாரு.

என்ன விட்டு பார்த்தா அவங்க மனைவிய தயாப்பா நல்லா தான் வெச்சி இருக்காரு. அவருடைய எதிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு …

தன் அம்மாவுக்கு நல்ல மகனாய். தன் தங்கைக்கு நல்ல அண்ணனாய். உங்களுக்கு தாய் மாமனாய்  தந்தை ஸ்தானத்தில். மதுவுக்கு நல்ல அப்பாவா….எனக்கும் ஒரு நல்ல அப்பாவ தான் இருக்க நினச்சி இருக்காரு, ஆனா ….முதல்ல சொன்ன நல்லவராய் இருப்பதில் என்னுடையது அடி பட்டு போயிடுச்சி.

அவர் உறவ அவர் எந்த நாளும் விடவில்லை. ஆனா இவங்க ஒரு தாயா…..” இவ்வளவு நேரமும் தங்கு தடையின்றி பேசிக் கொண்டு இருந்த மஞ்சு, அடுத்த வார்த்தை பேச முடியாது கேவிய வாறு முகத்தை மூடிக் கொண்டாள்.

 

Advertisement