Advertisement

அத்தியாயம்….8

தன் அதிர்ச்சியில் இருந்து வெளி வந்த ஜானகி ராமன்….அப்போது தான் தன் மகனின் முகத்தை கூர்ந்து பார்த்தார்.

அதற்க்கு இவன் ஏன் இப்படி  சோர்ந்து இருக்கான்…..? “ அஷ்வத் உன்ன அவங்க ஏதாவது பேசிட்டாங்கலா…..?”

“ பேசுறதுக்கு என்னை அவங்களுக்கு தெரிந்து இருக்கனும். ஒருத்தன திட்டனும் என்றாலும் ,ஒரு உரிமை இருக்கனும்.  இது எதுவும் இல்லாத போது…..” கடைசி வார்த்தை விரக்தியில் முடிந்தது.

மகனின் சோர்வு சொந்தம்  இருந்தும், தனியாக இருப்பதா….. ?ஜானகி ராமன் அதை பற்றி   கேட்க நினைக்கும் போது….

“ அத்தை  பொண்ணுக்கும் , சித்தப்பா மகனுக்கும் கல்யாணம். அதனால நகை எடுக்க வந்து இருக்காங்க.”

மகனின் வாயில் இருந்து இது போல் அத்தை, சித்தப்பா, என்ற வார்த்தை சாதரணமாக வந்து விழவும் அவனை கூர்ந்து பார்த்தார்.

“ நீ  அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்கியா…..?”

“ எந்த பொண்ணு…..?”

“ நாம படிக்க வைக்கிறோமே…..” தந்தையின் பேச்சில் அவரை கடிவது போல் ஒரு பார்வை பார்த்தவன்.

“ நம்ம தேவியிடமா…..?”

“ தேவியா…..?” இப்போது ஜானகி ராமன் குழம்பி  போனார்.

தந்தையின் குழம்பிய பார்வையில்….. “ நம்ம ஷ்ணமதி அத்தை பொண்ணு பேரு சம்பூர்ணா தேவி தானே…”

“ஓ…..” என்றதோடு தன் மகனின் முகத்தை பார்த்தார்.

தந்தையின் பார்வையில்…. “ நான் எங்கு பேசினேன்…..? அவ தானே வீண்  வம்பு செய்து, முதல் நாளே பிரச்சனை செய்தா….. அத கூட நீங்க ரசிச்சி பார்த்திங்கலே…..”

மகனின் பேச்சு புதியதாய் தோன்றியது. ஒரே வார்த்தையில் பதில் அளிக்கும்  தன் மகனின் பேச்சு போல் இல்லை.

“ அஷ்வத்  நான் செஞ்ச துரோகத்தை நீ செஞ்சிடாத…..”

“புரியலப்பா…..?”

புரியலேன்னா நல்லது. புரிஞ்சப்ப நான் சொன்னத நியாபகத்தில் வெச்சிக்கோ….. வீல் சேரை நகர்த்திக் கொண்டு தன் அறைக்கு செல்லும் தந்தையின் முதுகையே பார்த்திருந்தவனுக்கு ஏதோ புரிவது போல்….

“ குட்டிம்மா…..உனக்….”  மாதவன் தன்னை கடற்கரைக்கு  அழைத்து வந்ததில் இருந்து, இது போல் தான்..

“ குட்டிம்மா….” என்று ஆராம்பிப்பது பின் “ஒன்னும் இல்ல.” என்று  சொல்வது. இது போல் இருபது தடவை சொல்லி இருப்பான்.

சுண்டல் மடித்து கொடுத்த காகிதத்திலேயே கையை நன்றாக துடைத்துக் கொண்டவள்.

“ ஆ இப்போ சொல்லுங்க  அத்தான். என்ன பேச என்ன இங்கே கூட்டிட்டு வந்திங்க……?”

“ சும்மா தான். ஏன்  உன்னை நான் வெளியில் கூட்டிட்டு  வந்ததே இல்லையா…..?”

“ஆ கூட்டிட்டு வந்து இருக்கிங்க. நான் இல்லேன்னு சொல்லலையே….. கூடவே உன் ப்யார் கமலாவோட தானே…..”

“நான் ஒன்னும் உன் அண்ணனை  வேண்டாமுன்னு சொல்லலே….அவன்  தான் நீங்க இரண்டு பேரும் போங்கன்னு சொன்னான்.” மாதவன் சொன்னது உண்மை தான்.

இரண்டு வாரத்தில் , ஒரு ஞாயிறு எங்காவது அவளை வெளியில் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் அம்மாத்தாவுக்கு போன் போட்டு…. “நான் தனியா சுத்த போறேன்னு …..” சொன்னா போதும்…..

பேச்சும்மாவிடம் இருந்து பேரன்களுக்கு போன்  பறக்கும்…பின் என்ன விதியே என்று அழைத்து செல்வர்.

அதனால் எதற்க்கு வம்பு ….?என்று ஒரு வாரம் விட்டு, ஒரு  வாரத்தில் அவள் சொன்ன இடத்துக்கு கூட்டிக் கொண்டு சென்று, மதியம் ஏதாவது  ஒரு ஓட்டலில் அவளின் வயிற்றை நிறப்பி விட்டு, அவள் தங்கி இருக்கும் விடுதியில் தள்ளி விடுவர்.

அதே போல் இன்றும் தன் விடுதிக்கு வெளியில் இருவரும் வந்தனர். ஆனால் கமலக்கண்ணன்…. “ நீங்க இரண்டு  பேரும் மட்டும் போங்க…..”. என்று சத்தமாக சொன்னவன்….

பின் தனக்குள் “நான் எதுக்கு நந்தி  மாதிரி….?” அந்த வார்த்தை இருவர் காதிலும் விழுந்தது.

அதற்க்கு ஏதாவது மாதவன் சொல்வான் என்று அவன்  முகத்தை பார்த்தால், அவனும் அதை ஏற்றுக் கொள்வது போல்…

அண்ணனிடம்….. “ பைய்டா….”

“ ஏதோ சரியில்ல…..அவனும் காலையில் இருந்து தன்னிடம் ஏதோ சொல்ல வருவதும் தயங்குவதுமாக இருக்க.

கடற்கரைக்கு வந்தால் சொல்வான் என்று  தான் வந்தது. ஆனால் இங்கும்….ஆராம்பிப்பதோடு சரி.

“ என்ன அத்தான்….என்ன பிரச்சனை…..?  கல்யாணத்தை பற்றியதா…..?” வெளிப்படையாகவே கேட்டு விட்டாள்.

“ஏன்…?ஏன்….? அப்படி  கேட்ட….? இந்த கல்யாணத்துல உனக்கு ஏதாவது பிரச்சனையா….?” இந்த  வார்த்தை பேசுவதற்குள் மாதவன் பேச்சில் அப்படி ஒரு தடு மாற்றம்.

“ உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா…..அத்தான்…..?”

“இல்ல.இல்ல.இந்த கல்…யாண…த்துல என..க்கு எ…ன்ன பிரச்சனை…..? இது தான் எப்போத்துல இருந்தே  ஓடிட்டு இருக்க…..?”

“ அதே தான் எனக்கும். இப்போ புதுசா என்ன அபிப்பிராயம்…..?”

“அதானே…..” என்று சொன்ன மாதவனை கூர்ந்து பார்த்தாள் சம்பூர்ணா தேவி.  சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சொல்ல வில்லை என்பது புரிந்தாலும் அவனே சொல்லட்டும் …. பேசாது கடலை  பார்த்திருதாள்.

தூரத்தில் அது யார்….?அஷ்வத்தா….. ?அவனும் தன்னை பார்ப்பதை பார்த்து கை ஆட்டுவதா…..? யோசனையில்….

மாதவன்…. “ அப்போ போகலாமா….?” என்று  அழைத்தது சம்பூர்ணாவின் காதில் விழவில்லை.

அஷ்வத் தங்களை நோக்கி வருவதை பார்த்து சம்பூர்ணாவின் கைய் காற்றால் கலைந்த முடியை ஒழுங்கு படுத்தியது.

மாதவனும் அஷ்வத்தை பார்த்து எழுந்து நிற்க…கூடவே  சம்பூர்ணாவும், இருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே….

“ என்ன காத்து வாங்கவா…..?” என்ன பேசுவது என்று  தெரியாது பேச்சை ஆராம்பித்தான் அஷ்வத்.

“பின்ன பீச்சுக்கு காதல் வாங்கவா வருவாங்க….” எப்போதும் போல் வாய் துடுக்கோடு கேட்டாள் சம்பூர்ணா…

“ அது வாங்க தான் நிறைய பேரு வந்து இருக்காங்க.” அங்கு இருந்தவர்களை கண்ணால் வலம் வந்த வாறு சம்பூர்ணாவுக்கு பதில் அளித்தான்.

மாதவன் அவர்கள் பேச்சை இடையூறு இடாது கேட்டுக் கொண்டு இருந்தான். இவர்கள் பேச்சு….

காலேஜில் எத்தனை பேர்  படிப்பார்கள். அத்தனை பேரையுமா இவருக்கு தெரியும்.  முதல் நாள் பிரச்சனையின் சம்பூர்ணாவை நியாபகத்தில் வைத்திருந்தாலும்…இந்த பேச்சு…

சம்பூர்ணாவை  பற்றி தெரியும்.  ஆள் கிடைத்தால் போதும் பேச ஆராம்பித்து விடுவாள்.

ஆனால் அஷ்வத்…..தன் பிரச்சனை மறந்து அவர்களை கவனிக்க ஆராம்பித்தான். அஷ்வத் ஏதோ கேட்க முயல்வது போல்…

சிறிது நேர பேச்சுக்கு பின்….. “ எப்போ கல்யாணம்….?”

இது பத்தி எல்லாம் சொல்லி இருக்காளா….சம்பூர்ணாவை மாதவன் பார்க்க…

சம்பூர்ணாவோ….” உங்க…ளுக்கு எப்…படி  தெரி…யும்….?”

இது வரை சாதரணமாக பேசிக் கொண்டு இருந்த சம்பூர்ணா…. அவன் வாயில் இருந்து தன்னுடைய கல்யாணம் பற்றி பேசியதும் பேச்சு தடுமாறியது.

“ போனவாரம் நகை கடையில்  உங்களை பார்த்தேன். தா….உங்க தாத்தா பேசிட்டு இருந்தது கேட்டேன்.”

இப்போது மாதவன்…. “ உங்க பிரண்ட் கடையா…..?” மாதவன் பேச்சு புரியாது அஷ்வத் அவனை பார்க்க.

“இல்ல நகை கடைக்கு  வந்திங்கன்னு சொன்னிங்கலே…உங்க பிரண்ட் கடையான்னு கேட்டேன்…..” சம்பூர்ணா இப்போது மாதவனின் பேச்சை கவனிக்க ஆராம்பித்தாள்.

மாதவன் அதிகம் பேசுவது தன்னிடம் மட்டுமே….தன் அண்ணனிடம் பேசுவான். ஆனால் என்ன பேசுகிறார்கள் என்று யாருக்கும் தெரியாது.

காதும் ,வாயும்  உரசிக் கொள்வது போல் தான் அவர்களின் பேச்சு இருக்கும். இதை   வைத்தும் தான் சம்பூர்ணா அவர்களை கிண்டல் அடிப்பது.

வெளியாட்களிடம் மாதவனின் பேச்சு குறைவே…இப்போ இவனிடம் மட்டும் என்ன அவங்க பிரண்ட்ட பத்தி எல்லாம் கேட்குறான்.

ஏதாவது உள்விவகாரம் இருக்குமோ…..சம்பூர்ணா  நினைத்தது போல் தான் அஷ்வத்…. “ என் ஆபிஸ் ஸ்டாப் பங்ஷனுக்கு நகை வாங்க  வந்தேன்.”

“வாங்கிட்டிங்கலா….?”

வாய் தன்னால்…. “ இல்லை.” என்று பதில் சொல்லும் போதே…எதுக்கு….? இப்படி இவன் நோண்டுகிறான் ….? நினைக்கும் போதே…

“ ஓ அவசரமா வேலை வந்துட்டுச்சா….?” இப்போது அஷ்வத் பதில் அளிக்காது  நான் உனக்கு அண்ணன்டா என்பது போல் கை கட்டிக் கொண்டு மாதவனை பார்த்தான்.

சம்பூர்ணா தான்…. “இப்போ உனக்கு எதுக்கு அந்த ஆராய்ச்சி…..?”

“ஆ சும்மா  ஜென்ரல் நாலேஜிம்மா…..”

“போதும். போதும்.  உன் நாலேஜ் வளந்தது. வா போகலாம்.” அவன் கை தன் கைக்குள் அடக்கிக்  கொண்டு இழுத்து சென்றாள்.

அஷ்வத்தின் பார்வை அவர்களின் இணைந்த கைகள் மீதே இருந்தது.

மாதவனின் பார்வையோ …அஷ்வத்தின் முகத்தின் மீதே இருந்தது. சம்பூர்ணாவோ இந்த உலகிலேயே இல்லை என்பது போல் வேறு  எங்கோ …..

“மது ஏதாவது  பிரச்சனையா….?” கமலக்கண்ணன் கேள்வியில்…

“இல்லையே…திடிர்ன்னு என்ன இந்த கேள்வி….?”

“கொஞ்ச நாளா ஏதோ யோசனையிலேயே  நீ இருக்குற மாதிரி இருக்கு…அதான்.”

“சேச்சே சும்மா ஆபிஸ் பிரச்சனை தான்.”

“ஆபிஸ் பிரச்சனையா மட்டும் இருந்தா பரவாயில்ல. வேறு ஏதாவது பிரச்சனைன்னா….மனசு விட்டு சொல்லு…..நமக்குள்ள இருக்கும் உறவு. வரப்போற உறவு  அது எல்லாம் அடுத்து தான். நீ சந்தோஷமா இருக்கனும். அதான் எனக்கு வேண்டும்.”

கமலாவின் பேச்சில் அவனை அணைத்துக் கொண்டவன். “ நான் சந்தோஷமா தான் இருக்கேன். எனக்கு என்னடா…..?”

“சம்பூர்ணாவை கல்யாணம் பண்ன பிடிக்காம. அத எப்படி என் கிட்ட சொல்றதுன்னு….”

“சீச்சீ  என்ன பேச்சு….?நம்ம குட்டிம்மாவுக்கு  என்ன குறைடா…..?”

“ஒரு பெண்ண கல்யாணம் செய்ய விருப்பம் இல்லேன்னா…அப்பெண் கிட்ட குறையால் மட்டும் இல்லாம, அந்த  பையனுக்கு வேறு பெண் மீது நாட்டமா கூட இருக்கலாம்.”

“ஏய் என்ன பேச்சு பேசுற கமலா…..? உனக்கு தெரியாம…..”

“எனக்கு நீயும், குட்டிம்மாவும்,  வேறு வேறு இல்லடா….. உங்க இரண்டு பேரின்  கல்யாணத்துல அதிக சந்தோஷம் எனக்கு தான். அதே சமயம் உன் விருப்பம் இதுல ரொம்ப முக்கியம்.”

“அப்போ குட்டிம்மா விருப்பம் முக்கியம் இல்லையா….?”

“ அவ என்னடா சின்ன  பொண்ணு…அவளுக்கு என்ன தெரியும்…..?”  என்று சொல்லிக் கொண்டு வந்தவன்…

பதறியவனாய்…. “ குட்டிம்மா உன் கிட்ட ஏதாவது சொன்னாளா…..?”

“நீ எப்போத்துல இருந்து சந்தேகத்துக்கு பிறந்தவன் ஆன…..?முதல்ல என்னை.  இப்போ குட்டிம்மாவையா…..? அவ ஏதும் சொல்லலே…..” ஒரு வகையில் அது உண்மை தானே….

“மது எதுவும் இல்லையே….?” திரும்பவும் கேட்டவனிடம் ….

“இல்லை….” மனதறிந்து பொய் உரைத்தான்.

அஷ்வத் தினம் தினம் சம்பூர்ணாவை கல்லூரியில் பார்த்தாலும், அருகில் சென்று பேச முயவில்லை.

அவளை பார்க்கும் போது…..மாதவனுடன் அவள் இணைந்த கைய்யே கண் முன் நின்றது.

மாதவன் தனக்கு தம்பி…தம்பி விரும்பும் பெண். தனக்கும் அத்தை மகள் தான். ஆனால் அவள் அம்மாவுக்கு என் அப்பா செய்தது நம்பிக்கை துரோகம்.

மாதவனின் அப்பா…. தன் தந்தை விட்டு வந்த   பெண்ணை மணந்தவர். இன்றும் அந்த குடும்பத்துக்கு ஒரு தூணாய் இருப்பவர்.

எல்லா வகையிலும்  சம்பூர்ணா மாதவனை திருமணம் செய்வது தான் சரி. அறிவுக்கு தெரிந்த விஷயத்தை, மனது ஏற்க மறுப்பது ஏனோ…..?

“ நான் கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்கலே…..?” தயங்கி தயங்கி சகாயம் தன்னிடம் கேட்க…

“உங்க கிட்ட எத்தன தடவ சொல்றது சார்….என் கிட்ட எதுன்னாலும் தாரளமா கேட்கலாமுன்னு…..?”

“ அந்த பெண் மீது விருப்பமுன்னா அப்பா கிட்ட சொல்லலாமே….அப்பாக்கு தெரிஞ்ச பெண் தான் முடிச்சி கொடுத்துடுவாரு….”

அஷ்வத் எந்த பெண்…..? என்று  கேட்கவில்லை.

“அந்த பெண்ணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சி சகாயம் சார்.”

“ என்ன தம்பி சொல்றிங்க…..?” பதறி தான் போனார்.

அஷ்வத்தின் தெளிவு இல்லா முகத்தை பார்த்து……

“கல்யாணம் இன்னும் நடக்கலைலே…நான் ஜானகி கிட்ட பேசுறேன் தம்பி. கவலை படாதிங்க. அவரும் காதல் கல்யாணம் செய்துக்கிட்டவரு தானே….?” அது தான் பிரச்சனையே என்று தெரியாது பேசினார்.

“இல்ல வேண்டாம்.” திட்ட வட்டமாக மறுத்து விட்டான். இதற்க்கு மேல் ஒரு ஊழியனாய்  என்ன பேச முடியும்.

முகநூலில் தனக்கு வந்த வாழ்த்து செய்தி பார்த்து தலை மேல் கைய் வைத்துக் கொண்டான் மாதவன்.

மாதவனின் முகநூல் நட்பு அனைவரும்  கமலக்கண்ணன் முகநூல் நட்பிலும் இருப்பவரே….கமலக்கண்ணன் தன் திருமண செய்தியை சொல்லி விட… I.A.S பயிற்ச்சியில் இருந்த  அனைவரிடம் இருந்தும் வாழ்த்துக்கள். ஒருவரை தவிர.

“சாரி…சாரி சோனா….நடக்காதுன்னு தெரிந்தும்,  உன் மனசுல ஆசை வர மாதிரி நடந்துக்கிட்டது என் தப்பு தான். ஆனா உன் மேலான விருப்பம் என்னையும் மீறி நிகழ்ந்தது.”

அஷ்வத் போல் இங்கு மாதவனும் தன்னுள் மருகிக் கொண்டு இருந்தான். மாதவனுக்கு தன் குடும்பமா…..?காதலா….?யோசித்ததில் தன் குடும்பம் தான் முன் நின்றது.

 

Advertisement