Advertisement

அத்தியாயம்……7

“ நீங்க அம்மாவ தான் கல்யாணம் செய்துக்குறேன்னு சொன்னதும், உங்கல வீட்ட விட்டு அனுப்பிட்டாங்கலா…..?” அத்தையின் நிலை பாவம் தான்,

ஆனால் ஏற்கனவே ஒரு பெண்ணை காத்தலிப்பவரை, வேறு பெண்ணோடு திருமணம் செய்து வைத்தால், அந்த பெண் வாழ்க்கையும் சேர்ந்து தானே பாழாகும்.”

“நீ சொல்வது ஒரு வகை சரி தான். என்ன ஒன்னு முன்னவே சொல்லாம, மணமேடையில் சொன்னேன்.”

“அப்பா…..” அதிர்ந்து விட்டான்.

“ என்னப்பா சொல்றிங்க……?”

“ திடிர்ன்னு ஒரு நாள் அப்பா….என்னை  உடனே வீட்டுக்கு வான்னு கூப்பிட்டாரு….நானும் போய் ஆகனும் என்ற கட்டாயத்தில் தான் இருந்தேன். சரின்னு போனப்ப….என் கிட்ட அந்த பொண்ணு பேரு அப்போ நியாபகத்தில் இல்ல. ஆனா இப்போ நியாபகம் இருக்கு. செல்லாயி….கட்டிக்க,  என் கிட்ட அபிப்பிராயம் கூட கேக்கல. கட்டிக்கனுமுன்னு சொன்னாங்க. என் தங்கைய பார்த்தேன் முகம் பூரா புன்னகை.

சரின்னு சொல்லிட்டேன்.

ஒரே நாள்ல இரு மணமேடை அமைத்து  இரண்டு திருமணம் செய்வதுன்னு முடிவு பண்ணப்ப…நான் முதல் முகூர்த்ததில் தங்கை திருமணம் நடக்கட்டும், அடுத்த  முகூர்த்ததில் நான் தாலி கட்டுறேன்னு சொன்னேன்.”

தந்தையின் பேச்சில்…. “அப்போ நம்ப வெச்சி கழுத்து அறுத்துட்டிங்க…..?”

மகனின் பேச்சில் தலை குனிந்தவர்….. “ ஒரு வகையில் அது தான்.”

“ ஒரு வகையில் இலேப்பா….எல்லா வகையிலும் அந்த பேரு தான். முதல்லையே அம்மாவ பத்தி சொல்லி இருந்து இருக்கனும்.” மகனின் பேச்சு நியாயத்தின் பக்கமாய் இருந்தது.

ஆனால் சூழ்நிலை ஒன்று …..அதை யாராலும் மாற்ற முடியாது. “ என்னால என் தங்கை கல்யாணம் நின்னுடுமோன்னு சரின்னு சொல்லிட்டேன்.

அடுத்த வாரத்திலேயே வீட்டு முன்ன பந்தல் போட்டு, முதல்  முகூர்த்ததில் என் தங்கை கல்யாணம் முடிஞ்சதும்….

அடுத்து என்ன கூப்பிட்டப்ப….நான் உங்க அம்மாவ பத்தி சொல்லிட்டேன். எங்க அம்மா “மணமேடை வரை வந்த பெண்ணை கை விட கூடாது. தாலி கட்டுன்னு சொன்னப்ப…..”

இது வரை தங்கு தடையின்றி பேசி வந்த தந்தை கொஞ்சம் தயங்கவும்…..” “என்னப்பா…..?

“ என் குழந்தையோட தாய கை விட முடியாதுன்னு……” எந்த ஒரு தந்தையும் தன் மகனிடம் பேச கூடாத விவாதம்….

அதே போல் தன் பிறப்பு முறை…..வந்த வழி….அஷ்வத் தன் முகத்தில் கூட அதிர்ச்சியை காட்டவில்லை.

தந்தையின்  வாழ்க்கையில் ஏதோ ரகசியம்….என்று  நினைத்து கேட்டது….தன் பிறப்பின் ரகசியம் வெளிவரும் என்று நினையாதது.

“ மன்னிச்சிக்க அஷ்வத்….எந்த ஒரு மகனும் கேட்க கூடாதது நீ கேட்க வேண்டியதாயிடுச்சி…..”

நெருப்பை முழுங்குவது என்று கேள்வி பட்டு இருக்கிறான். தந்தையின் பேச்சு நெருப்பு குண்டலத்தையே விழுங்கும் நிலையில் இருந்தாலும்,

“ அப்புறம் என்ன  ஆச்சி…..?”

என் அப்பா  என் சட்டைய பிடிச்சி….. “ இதை  முதல்லையே சொல்றதுக்கு என்ன…..?நம்ப வெச்சி கழுத்த அறுத்திட்டியே…. அந்த வீட்டில் தான் உன் தங்கை வாழ போகுது. நீ செஞ்ச காரியத்தால அவளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் கொஞ்சமாவது நினச்சியான்னு…..”

இன்னும் என்ன என்னவோ கேட்டாரு….எனக்கு நியாபகம் இல்ல.

ஆனா கடைசியா நானு….. “உங்க ஊனமான பெண்ண கரையேத்த என் வாழ்க்கைய பனையம் வைக்க சொல்றிங்கலா…..?” கடைசியா நான் பேசிய பேச்சு அது தான்.

அதற்க்கு பிறகு என் தம்பி என்ன பேச விடலே….. “ நீ போங்கன்னு….” அவனும் அந்த ஒரு வார்த்தை தான். கடைசியா  நான் அங்கு இருந்து வரும் போது பார்த்த முகம் என் தங்கையோட முகம் தான்.

அப்போ அந்த முகத்தில் இருந்த வலி  எனக்கு தெரியல….ஆனா தன் வீல் சேரை தடவிய வாறே….. “ இப்போ தெரியுது.”

அஷ்வத் தீரன் அதன் பின் தந்தையின் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை.

“ என்ன அஷ்வத் அப்பா இப்படி பட்டவரான்னு இருக்கா….”

பேச்சுக்கு கூட இல்லை என்று சொல்லாது “நீங்க செஞ்சது ரொம்ப தப்பு. அப்புறம் நீங்க ஊருக்கே போகலையா…..?” இல்லை என்பது போல் தலையாட்டிய தந்தையை வேதனையுடன் பார்த்த அஷ்வத் தீரன்…

“ உங்க விபத்து நடந்து…. அம்மா செத்த பிறகு தான் அவங்க நியாபகமே வந்ததா…..?”

அதற்க்கும்…. “ ஆம்….” என்ற தலையாட்டால் மட்டுமே….

“சரி தூங்குங்க…..” அவரின் வீல் சேரை தள்ள வந்தவனின் கை பற்றியவர்.

“ என் மேல கோபமா….?என்னை வி…ட்டு…வியா….?”

ஒரே வார்த்தையாக…..” நீங்க செஞ்ச தப்ப நான் செய்ய மாட்டேன்.” என்று சொன்னவன் அவர் அறையில் அவரை படுக்க வைத்து விட்டு போர்வை போர்த்தும் சமயம்….

“ அப்போ அந்த பெண்ணுக்கு  கல்யாணம் ஆகலையா….?”

“அதே  முகூர்த்ததிலே ஆயிடுச்சி…என் தம்பி மனைவியா எங்க வீட்டு மருமகளா தான் இருக்கா…..”

தன்னையே பார்த்திருந்தவனை…. “ மாதவன் என் தம்பி மகன். கமல கண்ணன், சம்பூர்ணா தேவி என் தங்கை பசங்க…..”

“ பிராயசித்தம்.” என்றதோடு விளக்கை அணைத்து விட்டு சென்றான்.

அஷ்வத் தீரன் எப்போதும் போல் தன் மருத்துவகல்லூரியில் பார்வையிட்டுக் கொண்டு  வந்த போது….

சம்பூர்ணா  தேவி நடுவில் அமர்ந்து இருக்க, அவளை சுற்றி நாளு பேர்கள் சூழ்ந்து இருப்பதை பார்த்து, அவசர அவசரமாய் அவர்களிடத்தில் செல்லும் போது….

அங்கு வந்த சிரிப்பு சத்ததில் தன்னால் தன் நடையின் வேகத்தை  குறைத்து அவர்கள் அருகில் செல்ல ….

“ என் ஊர் மட்டும் வில்லங்கப்பட்டு இல்லடா….அங்கு இருக்கும் ஆளுங்கலும் வில்லங்கமானவங்க….என்ன புரியுதா…..?” சம்பூர்ணா தன் ஊரின் கெத்தை காட்ட…..

“ அத நீ சொல்லனுமா….?”  அவளை சூழ்ந்து அமர்ந்து இருந்த  மாணவர்கள் முதல் நாளே சம்பூர்ணாவினால் சஸ்பென்ட் செய்ய பட்டவர்கள்.

அந்த மாணவர்கள் அஷ்வத் தீரனை பார்த்து மரியாதைக்கு எழுந்து நின்றனர். சம்பூர்ணாவும் எழுந்து தான் நின்றாள்.

ஆனால் நிற்க்கும் விதத்தில்  எந்த பணிவும் இல்லாது, தெனவெட்டாக ஒரு பார்வை பார்த்த வாறு நின்று கொண்டு இருந்தாள்.

இது போல் சுற்றி வரும் போது யாரிடமும் நின்று பேச மாட்டான். ஏதாவது குறை தெரிந்தால்…..தன் அறைக்கு வந்து சம்மந்த பட்டவர்களை  கூப்பிட்டு விசாரிப்பான்.

பெண்களிடம் பேச்சே இருக்காது. ஆனால் இன்று….. நான்கு வருட பழக்கத்தை மாற்றியவனாய் தன் கைக்கெடிகாரத்தை பார்த்த வாறே …..

“ இந்த டைம் உனக்கு க்ளாஸ் ஆச்சே ….இங்கு என்ன செஞ்சிட்டு இருக்க……?”

“ நைட்  தூங்கவே இல்ல சார்….” கதை சொல்வது போல் தன் பேச்சை ஆராம்பிக்க….

“ இப்போ இங்கு என்ன செஞ்சுட்டு இருக்க…..? அத மட்டும் சொல்.”

“அதான் சார்…..நைட் தூங்காத தொட்டு ….க்ளாஸ் நடத்துறப்ப கொஞ்சம் கண் அசந்துட்டேன். அதுக்கு போய் என்ன வெளியே அனுப்பிட்டாங்க…..”

முறைத்து விட்டு…. “ இனி இது போல் சின்ன புள்ள தனமா எல்லாம் நடந்துக்க கூடாது. வருங்கால டாக்டர். அது போல தான் உன் பேச்சு , நடத்தை, எல்லாம் இருக்கனும். சரியா…..?” என்று  சம்பூர்ணாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, அந்த இடத்துக்கு வந்த சகாயம் சார் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டே வந்ததை பார்த்து….

“ சரி எல்லோரும் அவங்க ….அவங்க…. க்ளாசுக்கு போங்க.” என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு சகாயத்திடம் வந்தவர்.

அவரின் பார்வையில் இருந்து தப்பிக்க….. “ இப்போ பசங்க அட்டகாசம் ஜாஸ்த்தியா ஆயிட்டு வருது.  நம்ம காலம் போல் இல்ல சார்.” அவன் பேச்சில் சிரித்த சகாயத்தை பார்த்து…

“ என்ன சகாயம் சார் சிரிக்கிறிங்க…..?”

“இல்ல நம்ம காலமுன்னு உங்களையும் என்னோட சேர்த்திக்கிறிங்கலே…..நீங்களும் இந்த காலத்து இளைஞன்  தான் சார்.” என்று சொன்னவர்,

பின் ஒரு வித  ஆராயும் பார்வையுடன்…. “ உங்க அப்பாவுக்கு மட்டும் இல்ல.  உங்களுக்கும் வில்லங்கப்பட்டு சம்மந்தப்பட்டு இருக்கு போல…..” சிரிப்புடன் கேட்டவரிடம்,

அதே சிரிப்புடன்…. “ம்….” சொல்லி விட்டு தன் அறைக்கு சென்றான். அந்த ம் என்றது தாத்தா பாட்டியின் ஊர் என்பதால் மட்டுமா…..? பார்க்கலாம்.

இப்போது எல்லாம் அஷ்வத் கல்லூரியை சுற்றி  வரும் நேரத்தை மாற்றிக் கொண்டான். அதாவது க்ளாஸ் ஆராம்பித்த  பின் வலம் வருபவன், இப்போது எல்லாம் ஆராம்பிக்கும் முன்னவே பார்வையிட ஆராம்பித்தான்.

அப்போது தானே சம்பூர்ணாவையும் பார்வையிட முடியும். சம்பூர்ணாவும் இதை உணர்ந்தே இருந்தாள். ஒரு சில சமயம் அவன் பார்வைக்கு பதில் பார்வை தருபவள்.

பல சமயம் தான் வருவதை பார்த்து    தலையை தரையை பார்க்கும். அதை வெட்கம் என்றோ, பயம் என்றோ,  நம்ப அவன் தயாராய் இல்லை.

ஏன் அவன் மனதில் குடைந்து கொண்ட கேள்விக்கு அன்று பதில் கிடைத்தது. சகாயம் சாரின் பேத்திக்கு காது குத்தும் விழா அடுத்த வாரம் …அதற்க்கு குழந்தைக்கு ஏதாவது நகை எடுக்கலாம் என்று நகை கடைக்கு சென்ற போது தன் மொத்த குடும்பத்தையும் அங்கு பார்த்தான்.

ஆம் அவனின் தாத்தா , பாட்டி , சித்தப்பா , சித்தி, அத்தை, மாமா,  இவர்களோடு சம்பூர்ணா, மாதவன், கமலக்கண்ணனும் இருந்தனர்.

சம்பூர்ணாவின் கழுத்தில் சித்தி ஆரம் வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார் என்றால், அத்தை மாதவனின் விரலுக்கு மோதிரம் போட்டு அளவை சரி பார்த்துக் கொண்டு இருந்தார்.

தாத்தா, சித்தப்பா மாமா தன்னை நோக்கி வருவதை பார்த்து நம்மை தெரியுமா….?எப்படி மனது பட பட வென்று  அடித்துக் கொண்டது. ஆனால் அவன் அருகில் வந்தவர்கள் தன்னிடம் பேசாது, பெண்கள் இருக்கும் திசை பக்கம் பார்வை  பார்த்துக் கொண்டே…

“ இப்போ என்னடா பண்றது….?”  தாத்தா சித்தாப்பாவிடம் கேட்டார்.

என்ன பிரச்சனை விசாரிக்கும் ஆவல். ஆனால்  என்ன உரிமையில் கேட்பது…..?தயங்கி நின்றான்.

இவர்களை நோக்கி கமலக்கண்ணன் வருவதை பார்த்து திரும்பி நின்றுக் கொண்டான். அவனுக்கு தன்னை சம்பூர்ணாவின் காலேஜ் டீனாக  தெரியுமே, என்று தன்னை மறைத்துக் கொண்டான்.

“ என்ன  அவங்க செலக்ட்  பண்ணிட்டாங்க. நீங்க இங்கு நிக்கிறிங்க…..?” என்றதுக்கு, தாத்தா தயங்கிக் கொண்டே….

“ இல்ல கமலா…. குட்டிம்மாவுக்கு ஐந்து பவுனில் தான் ஆரம் எடுக்குறதா இருந்தது.இப்போ….”

ஓ பணப்பற்றாக்குறையா…..? அப்போ அவங்க பொருளாதாரம் …..இப்போவும் அதே தானா….

அதான் அப்பா இவங்களுக்கு தெரியாது படிப்புக்கு உதவி செஞ்சாரா…..? பெரிய மகனிடம் அளவுக்கு அதிகமாகவே பணம் இருக்கிறது.

ஆனால் அனுபவிக்க  ஆட்கள் இல்லை. ஆனால் அங்கு…..

அஷ்வத்தின் யோசனையிடையே…..  “ நீங்க என்ன பத்தி என்ன நினச்சிட்டு இருக்கிங்க….?கையாலாகதவனா….?” கமலக்கண்ணனின் சூடு பேச்சில்…

இருவரும் …. “அய்யோ என்ன பேச்சு…..?” பதிலுக்கு அவனை அதட்ட….. அனைவரும் இருந்தும் தான் அனாதையாய் அன்று உணர்ந்தான்.

“ அப்போ பணத்த பத்தி பேச்சு இப்போ எதுக்கு….? என் தங்கை கல்யாண செலவு மொத்தமும் என்னுடையது.” கமலக்கண்ணனின் அந்த பேச்சு, தன் தலையில் கூடை நெருப்பை வாரி  கொட்டியது போல் இருந்தது.

தொடர்ந்து  அவன் பேசிய பேச்சில்….. “ அதுவும் மது மச்சானுக்கு நான் எவ்வளவு வேனா செலவு செய்வேன்.”

ஓ மாதவனை  தான் கல்யாணம் செய்துக்க போறாளா….? அவன அத்தானா மட்டும் இல்லாம, தனிப்பட்ட முறையிலும் பிடிக்குமா…..?

அப்போ என்ன ஏன்…? அப்போ, அப்போ,  அந்த பார்வை பார்த்தா…..? அவளை தப்பானவளாக நினைக்க கூட முடியவில்லை.

சகாயம் பேத்திக்கு நகை வாங்காமலேயே வீடு போய் சேர்ந்தான். எப்போதும் தந்தை ,மகன் பேச்சு குறைவு தான். ஆனால் இப்போது இன்னும் குறைந்து வேலை ஆட்களிடம்….” அப்பா சாப்பிட்டாரா…..?”

தந்தையின் உதவிக்கு  வைத்திருந்தவரிடம்…..” அப்பாக்கு மருந்து எல்லாம் வேலை தவறாம  ஒழுங்கா கொடுக்கிறிங்கலா….? தந்தையிடம் கேட்க கூடியது எல்லாம் வேலையாளிடம் கேட்டு தெரிந்துக் கொண்டான். பேசக் கூடாது எல்லாம் இல்லை. ஆனால் ஏதோ தடுத்தது.

அன்று என்றும் இல்லாது சோர்ந்து போய் ஹாலில் அமர்ந்து இருந்தவனை பார்த்து….நீண்ட நாட்களுக்கு பிறகு….  “என்ன அஷ்வத் உடம்பு சரியில்லையா…..?” கேட்டவரை நேர் கொண்டு பார்த்தவன்….

எப்போதும் ஒன்று இரண்டு வார்த்தை பேசும் மகன். சமீபத்தில் அதுவும் இல்லை. இப்போதோ…..“சகாயம் சார் பேத்திக்கு நகை வாங்க நாம எப்போதும் போகும்  கடைக்கு போனேன்.” அவன் கையை பார்த்த ஜானகி ராமன்…

“ அங்க  உங்க மொத்த குடும்பத்தையும் பார்த்தேன்.”

இப்போது ஜானகி ராமன் முகத்தில்,  பதட்டம் குடிக் கொண்டது.

 

Advertisement