Advertisement

அத்தியாயம்…..5

இரவு படுத்ததும் உறங்கும் அஷ்வத்துக்கு, அன்று ஏனோ உறக்கம் வர மறுத்தது. காரணம் நம்  சம்பூர்ணாவின் அழகு என்றால்…..?தவறு.

அவள் தன் கல்லூரியில் இன்று செய்த அட்டகாசத்துக்கு நினைக்க நினைக்க அவன் பி.பி தான் எகிறியது. கஜா புயலால் பாதிக்கப்பட்டது பல  பேர் இருந்தால்….நம் அஷ்வத் அதனால் தான் இன்று தப்பித்தான்.

தன் அத்தானுக்கு அழைப்பு விடுத்து அனைவரையும் ஒரு லுக் விடுத்து தொலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு  “உடனே வாங்க…..”

அந்த பக்கம்….. “ ஏய் லூசு அங்க, அங்க,  புயல் வந்து மனுஷன் அல்லாடிட்டு இருக்கான். நீ  வான்னு சொன்னா வர்றதுக்கும், போன்னு சொன்னா போறதுக்கும், உன் வேலைகாரனா….?நான் பப்ளீக் சர்வெண்ட்…. புயலுக்கு முன்னச்சரிக்கை நடவடிக்கையில் இருக்கேன்.” தன்னிலை விளக்கம் கொடுத்தும் கூட…

முதல் போல் இப்போது பேச்சில் கெத்து இல்லை. ஆனாலும்…. “ இங்கு இல தானே….கொஞ்சம் வரலாமே…..”

அந்த பக்கம் அந்த  மாதவன் பல்லை கடித்து இருப்பான் போல்….. “வந்த புயல் உன்ன தூக்கலையே…..” என்ற சொல்லோடு அந்த பக்கம் தொலைபேசி அணைக்கப்பட்டது.

அங்கு இருந்தவர் அனைவருக்கும்  சிரிப்பை அடக்குவது நன்றாக தெரிந்ததோ என்னவோ….. அப்போதும் தன் கெத்தை விடாது.

“பார்த்திங்கலே ஊருக்கு இந்த அளவுக்கு அக்கறை  செலுத்தரவரு, வீட்டுக்கு எந்த அளவுக்கு அக்கற செலுத்துவாரு, இன்னும் நான் என்னன்னு சொல்லலே….  சொல்லி இருந்தா…..?” தன் விரலை நீட்டி எச்சரித்ததும்.

அந்த மாணவர்கள் நால்வரும் உண்மையாக வருந்தி  சம்பூர்ணா தேவியிடம், மன்னிப்பு வேண்டினர்.

அதிலும் இலவச கல்வி பயிலும்  மாணவன்….. “ நிஜமா உங்க அத்தான் க்ரேட் தான். சாரி.” தன் உறவு முறையை புகழ்ந்ததாலோ என்னவோ….கொஞ்சம் மலை இறங்கி.

அஷ்வத் சொன்ன பத்து நாள் சஸ்பெண்ட்க்கு ஒத்துக் கொண்டு தன் முதல் நாளே….நாலு பேரை சஸ்பெண்ட் செய்து  வகுப்புக்கு சென்றாள்.

இந்த ரணகலத்திலும் தன் தந்தையின் மீது பார்வை செலுத்துவதை மறக்கவில்லை அஷ்வத் தீரன். சப்பூர்ணா தேவியின் பேச்சில் புலங்காகிதம் அடைந்தார் என்றால்…

கைய்பேசியில் கேட்ட மாதவனின் பேச்சிலும், அதே அளவுக்கு அவர் முகத்தில் பெருமையைய் பார்த்தான்.

தந்தையின் செயலில் தான் அன்று அஷ்வத் தீரனின்  இரவு தூக்கம் கெட்டது. மாதவன் பேச்சி என்ன அவன்  அப்பா போல் இருந்ததோ……இந்த எண்ணம் தான் அஷ்வத்துக்கு…

அஷ்வத் தீரன்  கிண்டலாய் நினைத்தாலும், உண்மை அதுவே….. மகன் குழப்பத்தில் தூக்கம் தொலைத்தான் என்றால்….

தந்தை தன் அறையில் அதிகப்படி  மகிழ்ச்சியில் தூக்கத்தை தொலைத்தார்.

வெங்கட்  ராமா…உன் மகன் உன்னை போலவே இருக்கான்டா….. அவன் கடமை செய்யிறதில், நான் தான் நன்றி கெட்டவனா ….வேண்டாம்.

ரொம்ப நாள் கழித்து நான் மகிழ்ச்சியா இருக்கேன். இப்போ அந்த  நினைவு வேண்டாம். தலை உலுக்கி வேண்டாத நினைவுகளில் இருந்து வெளி  வந்தவர், அன்று தூக்க மாத்திரை உதவி இல்லாமலேயே ஆழ்ந்த நித்திரைக்கு போனார்.

விடுதியில் தனக்கு அறை ஒதுக்கியதும், தன் பெட்டியில்  இருந்து துணிகளை அங்கு இருந்த அலமாரியில் அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தவளின் கைய்பேசி இடை விடாது, தொல்லை பேசியாக அடித்து …அடித்து ….ஓய்ந்தது.

அவள் அறையை பகிர்ந்து கொள்ள இருக்கும் காஞ்சனா …. “அத கொஞ்சம் எடேன்.” பாவம்  தன்மையாக தான் சொன்னாள்.

கைய் பேசி எடுத்து அதை சைலண்டில் போட்டு விட்டு,  தூக்கி வீசுகிறேன் என்று பாதுகாப்பாய் கட்டில் மேல் உள்ள மெத்தையில் போட்டு…

“ இப்போ உனக்கு தொந்தரவு இல்லையே…..?”

பாவம் காஞ்சனா….. “ அய்யோ நான் தொந்தரவுக்குன்னு சொல்லலே….அவசரத்துக்கு யாராவது கூப்பிட போறாங்கன்னு….” பாவம் வார்த்தையை முடிக்காது மென்று முழுங்கினாள்.

ஒரே நாளில் சீனியரையே கதிகலங்க விட்ட அம்மையாரின் புகழ் காலேஜ் முழுவதும் ஒரே நாளில் பரவி விட்டது. அதுவும் தன் மார்க் சொல்லாது அவள் கொடுத்த பில்ட்டப்பில்….. சீனியர். ஜூனியர், என்ற பாகுபாடு இல்லாது  காலேஜே அம்மையாரை பயபக்தியோடு தான் பார்த்தது.

அப்படி இருக்கும் போது சம்பூர்ணா தேவியை போல் முதல் நாள் கல்லூரிக்கு வந்த காஞ்சனாவின் நிலை சொல்லவும் வேண்டுமோ…..?

காஞ்சனாவின் பேச்சில்…. “ அவசரமுன்னு என்னை கூப்பிடுறாங்கலா….” தன் துணி அடுக்கும் பணியைய் நிறுத்தி….. “ நாம இப்போ தான் டாக்டர் படிப்புக்கு முதல் கிளாஸ் வந்து இருக்கோம். இன்னும் டாக்டர் ஆகல….அவசரத்துக்கு என்னை கூப்பிடுறதுக்கு, எல்லாம் அந்த வீணா போன எங்க அத்தான் தான்.”தன் கடமை செய்யும் கலெக்டர் அவளுக்கு வீணா போனவன் ஆனான்.

“யாரு  கலெக்டரா…..?” பயந்தாலும் ஒரு ஆர்வத்தில் கேட்டு விட்டாள்.

அன்று சம்பூர்ணா தேவி  அந்த காலேஜில் பயத்தில் பிரபலம் ஆனாள் என்றால், மாதவன் கதாநாயகனாக பிரபலம் ஆனான்.

அந்த கல்லூரி பெண்கள் முழுவதும் பேசிய மாதவன் பேச்சில்,  பயத்தையும் மீறி கேட்க தூண்டியது.

“என்ன லவ்வா…..?”

“அய்யோ இல்ல…. இல்ல…..” பாவம்  பதறி போய் விட்டாள்.

“லவ்வு என்ன கெட்ட வார்த்த மாதிரி இப்படி பயப்படுற……?” அவள்  பேச்சில் காஞ்சனா முகத்தில் பயத்தையும் மீறி ஆர்வம் துளிர் விட்டது.

“ஆனா எங்க வீட்டுல அது கேடு கெட்ட வார்த்தை தான்.” சம்பூர்ணா தேவி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை.

ஒரு நாள்  காதல் திரைப்படம் காதல் திருமணம் செய்துக் கொண்டவர்களின் அன்னியோனியத்தை காட்டும் படம்.

அதை பார்த்து சம்பூர்ணா  தேவி…..

“ காதல் கல்யாணம் செய்தா  இவ்வளவு சந்தோஷமா இருக்கலாமா…..?  அப்போ நான் காதல் கல்யாணம் தான் செய்துப்பேன்.” சும்மா பேச்சுக்கு சொன்ன அந்த வார்த்தையில் அவள் வீட்டில் இரண்டு துடப்பகட்ட பிய்ந்து  விட்டது. இன்னும் கேட்டால் அந்த வார்த்தை சொல்லும் போது அவள் வயது பதிமூன்றே…..

எதார்த்தமாய் வாழும் தாத்தா பாட்டி,  தாய் தந்தை … அத்தை, மாமா இவர்களை பார்த்தவளுக்கு திரைப்படத்தில் காட்டப்பட்ட வெளிப்படையான அன்பில் பிரமித்து அந்த வார்த்தை சொல்லி விட்டாள்.

பின் அவள் வயது ஏற…ஏற….தன் குடும்பத்தினரின் வாழ்க்கை  தான் சிறந்தது என்பதை விட நல்லது என்று கருதினாலும், அப்போ அப்போ தன் அம்மாத்தாவை வெறுப்பு ஏற்ற…

“ பாரு கிழவி ஒரு நாள் இல்லேன்னா ஒரு நாள் மாலையும் கழுத்துமா நிக்க  போறேன்.” என்று சொல்லி அம்மாத்தாவின் பி.பி யை எகுற வைப்பாள்.

ஆனால் அந்த எண்ணம் அவளுக்கு சிறிதும் இல்லை. அவள் வீட்டில் பார்க்கும்  மாப்பிள்ளையை தான் திருமணம் செய்துக் கொள்வாள். அவன்…. எவன்…. என்றும்…. அவளுக்கு தெரியும்.

தெளிந்த நீரோடை போலது சம்பூர்ணாவின் வாழ்க்கை….. அதில் கல் எறிய எவன் வருவானோ……?

சம்பூர்ணா தேவி கல்லூரியில் சேர்ந்து அன்றோடு ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. இரு வாரம் முன்னவே  அவள் அண்ணன் கமலக்கண்ணன் காஞ்சிபுரத்தில் பதவி ஏற்று இருந்தான்.

காலையிலேயே அம்மாத்தாவுக்கு போன் போட்டு….. “ உன் இரண்டு பேரனும் என்ன கூட்டிட்டு போகலேன்னா…. நானே சுத்த போயிடுவேன்.” என்ற சொல்லோடு தன்  கைய் பேசியை அணைத்து விட்டு அன்று வெளியில் செல்வதற்க்கு தயாராகிக் கொண்டு இருந்தாள்.

இந்த ஒரு மாதத்தில் அவள் கல்லூரி, கல்லூரி விட்டால் விடுதி,  சென்னையில் இது மட்டும் தான் பார்த்தாள்.

ஞாயிறு போன் போட்டு தன் அண்ணாவுக்கோ அத்தானையோ அழைத்தாள். ஒரே வார்த்தை….. “ வேலை இருக்கு.” இப்போ என்ன செய்வீங்க…..?

தன் அம்மாத்தாவின் மீது இருக்கும் நம்பிக்கையில் ரெடியாகி இருக்க. அவள் நம்பிக்கை பொய்த்து போகாது….அவள் கைய்பேசி….அவளை அழைத்து….. “ கீழே நிக்கிறோம். வந்து தொல.”

“ஆ அந்த பயம் இருக்கட்டும். யாரு கிட்ட…..” தன் கைய் பேகை எடுக்கும் போது காஞ்சனா தன்னையே பார்த்திருப்பதை பார்த்து….

“ என்ன நீ எங்கேயும் போகலையா……?” சம்பூர்ணா கேட்டதுக்கு பதில் அளிக்காது,

“ நீ உன்  அத்தான் கூட வெளியில போறியா…..?” அவள் குரலில் அப்படி ஒரு ஏக்கம்.

அவளை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டே….. “ அத்தான் மட்டும் இல்ல. அண்ணாவும் தான்.” என்றதோடு வெளியேறி விட்டாள்.

காஞ்சனாவோ,   சம்பூர்ணா ஒரு சம்பிரதாயத்துக்காவது தன்னை கூப்பிடுவாள், என்று ஒரு எதிர் பார்ப்போடு காத்திருந்தாள்.

காஞ்சனாவின் ஆர்வ பார்வையில் தான் சம்பூர்ணா அவளை அழைக்கவில்லை. வீண் ஆசையை அவள் மனதில் விதைக்க அவள் விரும்பவில்லை.

அவள் ஆசை நிறை வேற வாய்ப்பு இல்லாத போது, எதுக்கு அவள் மனசை கெடுப்பானேன். மற்ற பெண்களும் சம்பூர்ணாவிடம் பேசும் போது கடைசியில் மாதவனை பற்றி கேட்காது போக மாட்டார்கள்.

அது சும்மா….ஒரு ஈர்ப்பு. அவர்களின்  செயல் மூலமே தெரிந்தது. தன்னிடம் மாதவனை பற்றி கேட்டுக் கொண்டு இருக்கும் போதே, அந்த வழியே அஷ்வத் தீரன்  போனால் போதும் மொத்த கவனமும் அவனிடம் திரும்பும்.

நம் சம்பூர்ணா உட்பட…. “பரவாயில்ல நல்லா தான் இருக்கான். சண்டையில இவன சரியா பாக்கல…ஆனா இவன் முகம் ரொம்ப பழக்கமான முகம் போல்……” அவள் மனசாட்சியோ சென்னைக்கே  நீ புதுசு. உன் ஊரு பேரையே அவன் கேள்வி பட்டு இருக்க மாட்டான். அப்படி இருக்கும் போது எங்கு பார்த்து இருப்ப……?அப்படி மனது நினைக்கும் போதே கண் தன்னை அறியாது அவனை ரசிக்க தான் செய்தது.

ஆனால் காஞ்சனா அந்த லிஸ்ட்டில் சேர மாட்டாள். அவள் ஆவளுடம் கேட்பது மாதவனை தான் என்றான போது தான், அவள் கவனம் ஆனால்…

அதுவும் வாரத்துக்கு இரண்டு நாள் மாதவன் தவறாது தன்னை அழைத்து பேசுவான். சில சமயம் வீடியோ  காலும் செய்வான்.

அப்போது காஞ்சனா   மாதவனிடம் தன்னை அறிமுகம் செய்ய மாட்டாளா…..? ஒரு எதிர் பார்ப்போடு  தன்னை பார்க்கும் போது….

அவள் எதிர்பார்ப்பு என்ன என்று  புரிந்த சம்பூர்ணா, மாதவனிடம் அவள் அறையில் இருக்கும் போது பேசுவதை தவிர்த்து விடுவாள்.

அதுவும் வீடியோ கால் அறவே தவித்து விட்டாள். அதனால் தான் அவர்கள் கீழே இருக்கிறார்கள் என்றதும், அவசரமாக இறங்கி போனாள்.

மூச்சு வாங்க வந்து நின்றவளை….. “இப்போ எதுக்கு இப்படி மூச்சு வாங்க வந்த…பொறுமையா வந்து இருக்கலாமில்லே…..?” அண்ணன் பாசமாக கேட்டான் என்றால்,

மாதவனோ…. தன் கைக்கெடிகாரத்தை பார்த்து…. “அவ கொட்டிக்கிற டைம் வந்துடுச்சி. அதான் இந்த ஓட்டம்.”

“சீக்கிரம் வண்டிய எடுங்க …..” என்று சம்பூர்ணா அவசரப்படுத்தினாள்.

எப்போதும் தான் ஏதாவது கிண்டல் செய்தால், பதிலுக்கு தன்னை கிண்டல் செய்யாது விட மாட்டாள். அப்படிப்பட்டவள் ஒன்றும் சொல்லாது தங்களை  துரிதப்படுத்தியதில்…

“ குட்டிம்மா….ஏதாவது பிரச்சனையாடா….. ?” அக்கறையுடன் கேட்டதுக்கு,

“முதல்ல வண்டி எடுங்க, அது போதும்.” எரிந்து  விழுந்தவளை, இருவரும் பார்த்துக் கொண்டே வண்டி எடுத்து விட்டனர்.

அந்த விடுதி விட்டு சிறிது தூரம் சென்ற பிறகு  தான், அவள் முகம் தெளிவடைந்தது. அவளையே பார்த்திருந்த இருவருக்குமே அவளின் மாற்றம் புரிந்ததில்,

காரை ஓட்டிக் கொண்டு இருந்த மாதவனிடம்….. “ மாது வண்டிய  ஓரமா நிறுத்து.” கமலக்கண்ணன் சொன்னதும், மாதவனும் காரை ஓரம் கட்டினான்.

இதே சம்பூர்ணா சாதரணமாக இருந்து இருந்தால்…..அண்ணன் அழைத்த மாது என்ற அழைப்புக்கு அவர்களை ஒரு வழி செய்து இருப்பாள்.

மாதவனும் , கமலக்கண்ணனும் அவ்வளவு க்ளோஸ். ஒருத்தரை ஒருத்தர் விட்டு கொடுக்க மாட்டார்கள்.

சின்ன வயதில் இருந்தே ஒருவர் தப்பு செய்து திட்டு வாங்கினால், அந்த பழியை தன் மீது சுமத்திக் கொண்டு மற்றவர்களை காப்பாற்றுவார்கள்.

அப்படி பட்ட அன்னியோனியம் அவர்களிடம். ஒரு வயது ஆனா பின் கமலக்கண்ணன் மாதவனை அழைக்கும் மாது என்ற அழைப்பில் சம்பூர்ணாவின் கிண்டல்  எல்லையை கடக்கும்.

அதுவும் சமீபத்தில்  இருபாலர் திருமணம் பற்றி வழங்கிய தீர்ப்பில்….  “இனி என்ன உங்களுக்கு தடை….?” இப்படி பேசி அவர்களை ஒருவழி செய்து விட்டாள்.

இன்று அது பற்றி சம்பூர்ணா தேவி  ஒன்றும் கேட்காது….அவர்களை பார்க்க.

கமலக்கண்ணன் …. “சொல்லு குட்டிம்மா என்ன பிரச்சனை…..?” என்றதில் முதலில் மறுத்தவள், பின் சொல்லியே ஆக வேண்டும் என்ற அண்ணனின் வற்புறுத்தலில்…. காஞ்சனாவை பற்றி சொல்ல,

ஏதோ தன் தங்கைக்கு தான் பிரச்சனை என்று டென்ஷனில்  இருந்தவன், பிரச்சனை கேட்டதும்…. “இவ்வளவு தானா….?” என்ற ஆசுவாசத்தில்,

“குட்டிம்மா…இந்த வயசுல வர்ற ஒரு ஹீரோசத்தில்  பேசுவது இத போய்…..” கமலக்கண்ணன் விழுந்து விழுந்து சிரித்தான் என்றால், மாதவனின் முகம் முழுவதும் சிந்தனையில்…..

 

Advertisement