Advertisement

அத்தியாயம்—-4

புது மாணவ, மாணவியர்கள் கூட இந்த அளவுக்கு டென்ஷனாய் இருப்பார்களா….?சந்தேகம் கொள்ளும் அளவுக்கு இருந்தது ஜானகிராமனின் செயல்கள்.

நீண்ட நாட்கள் கழித்து பார்க்கும் நண்பனிடம் ஆர்வமுடன் சகாயம் பேச. ஆனால் ஜானகி ராமனோ அவர் கேட்டதுக்கு ஏனோ…. தானோ….என்பதாக தான் அவர்  பதில் இருந்தது.

புதுமாணவ, மாணவியர்கள் வருகையான இன்று …..அவருக்கு ஏகப்பட்ட வேலை வரிசை கட்டி காத்திருந்தாலும், விபத்ததில் இருந்து , வராதவன் இன்று   வந்ததை நினைத்து அனைத்து வேலைகளையும் தள்ளி வைத்து பேசியவருக்கு நண்பனின் கவனம் இங்கு இல்லை என்றானதும்…..

“ஜானகி ஏதாவது பிரச்சனையாப்பா……?” கவனம் இங்கு இருந்தால்  தானே….. அவர் கேட்டது காதில் விழுவதற்க்கு…..?

வீல் சேரை ஜன்னல் பக்கம் பார்க்கும் படி அமைத்துக் கொண்டவரின் பார்வை முழுவதும் அங்கேயே நிலைப் பெற்று இருந்தது.

அந்த கல்லூரிக்கு மூன்று நுழைவாயில் இருந்தது. எந்த நுழைவாயில் என்று தெரியாது குத்து மதிப்பாய்  பஸ் நிற்க்கும் நுழைவாயில் பார்த்த படி இருந்தார்.

அவர் நினைத்தால் இலவச மருத்துவ கல்வி பயில  வந்தவர்களை தன் அறைக்கு அழைத்து பேசி இருக்க முடியும். ஆனால் அது செய்ய முடியாது   தன்னையே விரைத்து பார்க்கும் மகன் தடுத்தான்.

பல்லை கடித்து காத்துக் கொண்டு இருக்கும் போது…..சகாயம் வந்து பேசியதில் சுத்தமாக அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.

திரும்பவும்…. “ஏதாவது பிரச்சனையா ஜானகி….?” என்று கேட்டதும் தான்.

“இல்லையே…..?” ஏன் அப்படி கேட்டாய்  என்று கூட கேட்காது திரும்பவும் அவர் பார்வை ஜன்னல் பக்கமே சென்றது.

“சகாயம் சார்….நீங்க என்ன பேசுனாலும் அப்பா காதுல விழாது. நீங்க உங்க வேலையாவது பாருங்க.” என்று அனுப்பி வைத்தவன். நானும் பார்க்கிறேன். என்பது போல் கை கட்டி அவரையே பார்த்திருந்தவனுக்கு….

சகாயம் முகத்தில்  டென்ஷனோடு மீண்டும் அறைக்குள் வரவும்…..

“என்ன சகாயம் சார்….ஏதாவது பிரச்சனையா….?” தந்தையிடன் அவர் கேட்ட கேள்வியை அவரிடமே திருப்பி கேட்டான்.

ஜானகி ராமனின் கவனமும் இப்போது சகாயத்திடம்…. “ சீனியர் பசங்க ஒரு பொண்ணு ட்ரஸை  பிடிச்சி இழுத்து இருக்காங்க……” என்று சொன்னது தான்.

“என்ன ஈவ்டீசிங்கா……? என்ன சகாயம் சார் இது……? அது போல எதுவும் நடக்காம இருக்க அனைத்து ஏற்பாடும் செய்துமா……?”

அவன் சகாயத்திடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே…..சம்பூர்ணா தேவி அந்த அறைக்குள் நுழைந்தாள்.

நிர்வாகம் மகன் கையில் ஒப்படைத்து விட்ட படியால் அவன் என்ன செய்கிறான் என்று  இடையூறு இல்லாது பார்த்திருந்த ஜானகி ராமன், தன் தோள் மீது துப்பட்டா போர்த்திய படி சம்பூர்ணாவை பார்த்ததும், தன் நிலை மறந்து எழுந்து கொள்ள பார்க்கும் போது, விழ பார்த்தவரை ஓடி வந்து தாங்கி பிடித்த அஷ்வத் தீரன்…..

“நான் பார்த்துக்குறேன்பா டென்ஷன் ஆகாதிங்க.”

அவனும் காலையில் இருந்து சம்பூர்ணா தேவியின் வருகைக்காக தான் காத்திருந்தான். ஆனால் இப்படி பட்ட சூழ்நிலையில் ….

அப்பாவின் செயல் பாடில் இருந்து அந்த பெண் அப்பாவுக்கு  மிக முக்கியமானவள். எந்த வகையில்….?அது அவனுக்கு தெரியாது.

அப்படி இருக்கும் போது தன்  நிர்வாகத்துக்கு கீழ் உள்ள கல்லூரியில் இப்படி நடந்தது.

நான் பார்த்துக் கொள்கிறேன்…..தந்தையை வீல் சேரில் அமர வைத்தவன். சம்பூர்ணா தேவியை எதிர் இருக்கையை காட்டி அமரும் மாறு சைகை செய்தான்.

கண்டிபாக இது போல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு  படப்படப்பாக இருக்கும் என்று அமர பணித்தவன்….

சம்பூர்ணாதேவியின் பின் ஓடி வந்த அட்டண்டரை….. “தண்ணீ  கொண்டு வாங்க.” என்று சொல்லி விட்டு சம்பூர்ணாவை பார்த்தான்.

அவளுக்கு இந்த மருத்துவ கல்லூரியில் அனுமதி கொடுத்ததில் இருந்து அவள் அட்மிஷன் பாமில் இருக்கும் அவளின் புகை படத்தை எத்தனை தரம் பார்த்தானோ…. அவனுக்கே நினைவில்லை.

புகைப்படத்தில் தெரியாத அவளின் நிமிர்வு நேரில் தெரிந்தது. தான் அமர சொல்லியும் அமராது அங்கு இருப்பவர்களை வெறித்து கை கட்டி பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அந்த கை கட்டலில் கொஞ்சமும் பணிவு இல்லை. அவள் முன் வைத்த தண்ணீரும் குடிக்காது அப்படியே இருந்தது.

இதை பார்த்த அஷ்வத் தீரனுக்கு கொஞ்சம் கோபம் கூட எழுந்தது. ஆனால் இது நிர்வாகத்துக்கு நல்லது இல்லை. தன்னை கட்டு படுத்திக் கொண்டவன்….

“ உட்கார்ந்து என்ன நடந்ததுன்னு சொன்னா தான் நாங்க ஆக்க்ஷன் எடுக்க முடியும் மிஸ்……” பெயர் தெரியாது போல் இழுக்க.

“சம்பூர்ணா….சம்பூர்ணா தேவி நல்லக்கண்ணு.” தன் முழு பெயரையும் சொல்லி  ஒரு நிமிர்வோடு ஒரு பார்வை பார்த்தாள்.

என்னவோ ப்ரைம்மினிஸ்ட்டர் பொண்ணு ரேஞ்சிக்கு என்ன லுக்கு வேண்டி கிடக்கு….?  உனக்கு இங்கு அட்மிஷன் கிடச்சதே ஒரு போர்ஜரி….இதுல இந்த லுக்குல்லாம் நான் பாக்க வேண்டியதா இருக்கே…. தன் தந்தைய முறைக்கவும்  தவரவில்லை.

நிதானமாகவே….. “மிஸ் சம்பூர்ணா தேவி நல்லக்கண்ணு.” அவள் சொன்னது போலவே அவள் பெயரை நீட்டி முழக்கியவன்.

இருக்கையை காட்டி…. “உட்கார்ருங்க பேசலாம்.”

தன் பெயரை நீட்டி சொன்னதில்  கிண்டலோ….என்ற சந்தேகத்தில் அஷ்வத்  தீரன் முகத்தை பார்த்தவள்…ஒன்றும் கண்டு பிடிக்க முடியாது போக….

தனக்கு தானே…நம்மல கிண்டல் செய்ய முடியுமோ….ஒருத்தன் பண்ணி தான்  வெட வெடன்னு வெளியில் நின்னுட்டு இருக்கானே…..

அலட்சியத்தை முகத்தில்  அப்பட்டமாக கொண்டு வந்தவள், அஷ்வத் காண்பித்த இருக்கையில் போனா  போகுது என்ற பாவனையில் உட்கார்ந்தவளை பார்த்து…இப்போது கடுப்பாகுவது  அஷ்வத் தீரன் முறையானது.

“சொல்லு….” உனக்கு  இந்த மரியாதை போதும் என்ற வகையில் தான்  அவன் பேச்சு இருந்தது.

தன் மேல் போர்த்தி  இருந்த துப்பாட்டாவை  சட்டென்று எடுத்து….”தோ பாருங்க  சார்…. என் ட்ரஸை கிழித்து விட்டான்.”

அப்படி அவள் செய்வாள் என்று அவன் நினைத்து பார்க்கவில்லை. அதுவும் சுற்றி நான்கு ஆண்கள் இருக்கும் போது….ஏரெடுத்து பார்க்காது ….  “போர்த்திகுங்க……..போர்த்திகுங்க” அவசரகதியில் சொல்ல.

“பார்த்தா தானே சார் தெரியும்.” என்ன இந்த பெண் இப்படி செய்கிறாள் என்று சங்கடமாக அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு…

இப்போது பெண்கள்  மாடல் என்ற பெயரில் கழுத்து பகுதி முழுவதும் வெட்டி தான் ட்ரசே தைக்கிறார்கள். இது பின் இழுப்பட்டதில் கொஞ்சம் கிழிந்து இருந்தது.

அதுவும் சரியாக உள்ளாடையின் மேல் ஸ்டாப் வரும் பகுதியாகி கிழிந்து  விட்டதால் அது கொஞ்சம் தெரிந்தது.

தவறு தான். அதில் சந்தேகம் இல்லை. பேஷன் என்ற பெயரில் அவர்களே வெட்டியோ….கிழித்தோ….  விட்டுக் கொண்டாள் தவறு இல்லை. ஒருத்தர் வலுக்கட்டயமாக இழுத்தால் கோபம் வரத்தான் செய்யும்.

ஆனால் இந்த பெண் துப்பட்டாவை இழுத்து போர்த்தி வந்ததை பார்த்து கொஞ்சம் பயந்து தான் விட்டான்.

சின்னதோ….பெரியதோ….தன் கல்லூரியில் நடந்த இந்த ஒழுக்ககேட்டை  கேட்க வேண்டும்.

“யார் செய்தது…..?” விசாரிக்கும் போது கேட்கப்பட வேண்டிய கேள்வியை தான் அவனும்  கேட்டான்.

ஆனால் அவளோ…. “ இழுத்தவன் அவன் ஜாதகத்தை கொடுத்து செய்யல சார். அவன் பேரு எல்லாம்  தெரியாது. ஆனா அவன் வெளியில் தான் நிக்குறான்.”

அட்டண்டரை அஷ்வத் ஒரு பார்வை பார்க்க….உடனே வெளியில் இருந்த நான்கு பையன்களை அழைத்து வந்தார்.

இதில் யார் என்பது போல்  அஷ்வத் தீரன் சம்பூர்ணா தேவி முகத்தை பார்க்க. அவளோ வந்து நின்ற நால்வரையும் பாகு பட்ச்சம் பார்க்காது முறைத்திருந்தாள்.

“ உன் துப்பட்டாவை யாரு இழுத்தது…..?” என்று கேட்டதுக்கு, நடுவில் நெட்டையாக நின்றுக் கொண்டு இருந்தவனை  நோக்கி தன் விரலை நீட்டியவள்.

பின்….. “ இவனுக்கு  மட்டும் இல்ல சார். இவங்க நாளு பேருக்கும் பனிஷ்மெண்ட் தரனும்.” என்று  அஷ்வத் தீரனிடம் சொன்னவள்.

அவர்கள் நால்வரையும் பார்த்து….. “ கிராமத்து பெண்ணுங்கன்னா அவ்வளவு இலப்பம்மா…..? சிட்டு ….பட்டுன்னு…. சொல்லிட்டு இருக்கிங்க. கிராமத்து பொண்ணு உங்க சீட்டை  எப்படி கிழிக்கிறான்னு மட்டும் பாருங்க.”

சீட்டை கிழிப்பது பற்றி பேசியதும் அந்த நால்வரும் இன்னும் வெட வெடத்து போயினர்.

இப்போது அந்த நால்வரும்  சம்பூர்ணாவை பாராது…..அஷ்வத்தின் காலில் சாஷ்ட்டாங்கமாய் விழுந்து விட்டனர்.

“சார் நாங்க ட்ரஸ் கிழிக்கனும் எல்லாம் பண்ணல சார். சும்ம பயம் காட்ட துப்பட்டா பிடிச்சி இழுத்தேன். அது கொஞ்சம் கிழிஞ்சிடுச்சி….

நீங்கலே பாக்குறிங்கலே, கொஞ்சமா தான்  சார் கிழிஞ்சி இருக்கு. ஆனா அதையும் நாங்க வேனுட்டும் செய்யல சார்.” அந்த நால்வரும் பயந்து விட்டனர்.

அதிலும் நால்வரில் ஒருவன் சம்பூர்ணா தேவி போல் இலவச கல்வி படிப்பவன். நன்கு படிக்கும் பையன் தான். அந்த நால்வரும்  கெட்டவர்கள் கிடையாது.

தன்னை ஈவ்டீசிங் செய்தார்கள். நாம் செய்யலேன்னா அப்புறம் நான் என்ன சீனியர்….? என்ற வகையில் விளையாட்டாய் செய்ய போய் இப்படி வினையாக முடிந்தது.

“என்னது சின்னதா…..? ஓ அப்போ பெருசா கிழிச்சா தான் தப்பா…..?”

“அய்யோ நாங்க அப்படி சொல்லலே மேடம்.” உலக வரலாற்றிலேயே ஜீனியரை பார்த்து மேடம் என்று சொன்ன சீனியர்கள் இவர்களாய் தான் இருப்பார்கள்.

“ஆ மேடம். கொஞ்ச நேரத்துக்கு முன்ன…. நாட்டு கட்ட…சவுக்கு கட்டன்னு….  வாய் உள்ள பிள்ள தான் பொழைக்குமுன்னு எங்க அம்மாத்தா சொல்வது சரி தான் போல.”

ஜானகி ராமன்….. “யாரு….?அப்படி சொல்வாங்க……?”

“எங்க அம்மாத்தா…..”

“அம்மாத்தான்னா அம்மவோட அம்மா தானே…..?”

சம்பூர்ணா தேவி ஜானகி ராமன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாது அஷ்வத் தீரனை பார்த்தாள்.

அஷ்வத்துக்கோ இங்கு என்ன ஓடிட்டு இருக்கு, அவர் என்னன்னா உறவு முறைக்கு அர்த்தம் கேட்டுட்டு இருக்கார்.

சம்பூர்ணா பார்த்த பார்வைக்கு…. “ இவர் எங்க அப்பா.” என்ற பதிலில்….

திரும்பவும் ஜானகி ராமனை பார்த்த சம்பூர்ணா தேவி….. “ ஆமா சார் அம்மாக்கு அம்மாவ தான் அம்மாத்தான்னு கூப்பிடுவோம்.”

பாவம்  அந்த நால்வரும் தான்,என்ன நடக்குமோ…..? என்று பயந்து போய் இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்தனர்.

திரும்பவும் சம்பூர்ணா…. “ இவங்க மேல ஆக்க்ஷன் எடுங்க சார்.” என்று சொன்னதும்,

“கண்டிப்பா…. ஆனா நீங்க சொன்னா மாதிரி காலேஜ் விட்டு அனுப்ப எல்லாம் முடியாது. விசாரிப்போம். தப்பு அவங்க மேல இருந்தா….பத்து நாள் சஸ்பெண்ட் செய்வோம்.”

“என்னது….வெறும் பத்து நாள் சஸ்பெண்ட் தானா……?” என்று கேட்டவள்.

பின்….” என்ன காலேஜ் சார் இது. எங்க ஊருல எல்லாம் பொம்பள பசங்கல பார்த்தாலே….மரத்துல கட்டி வெச்சி அடிப்பாங்க.”

தன்னிடமே…தன்  கல்லூரியையே குறை சொன்னது  பிடிக்காது….. “ அப்போ உங்க ஊரிலேயே படிக்க வேண்டியது தானே…இங்கு ஏன் அப்ளிகேஷன் போட்ட…..”

“நா ஏன் சார் இங்கு எல்லாம் அப்ளிகேஷன் போட போறேன். என் மார்க்கு பார்த்து நீங்கலே தானே என்ன படிக்க கூப்பிட்டது. என்ன மாதிரி படிக்கிற பசங்க உங்க காலேஜில படிச்சா உங்க காலேஜூக்கு தானே பெருமை.”

இது வேறையா…..அப்போதைக்கு  அஷ்வத்தால் தன் தந்தையை முறைக்க மட்டும் தான் முடிந்தது.

“ஆமா…ஆமா உன் மார்க்குக்கு யார் காலேஜிலாவது கூப்பிட்டு….படிக்கும் காலேஜின்னு அவங்க பெருமை தட்டிக்கிட்டாங்கன்னா….அது தான் நாங்கலே…உங்கல கூப்பிட்டோம். “

சகாயத்தை தவிர அங்கு இருந்த மற்றவர்கள் அவர்களின் உரையாடலில் சம்பூர்ணா தேவியை பிரமித்து பார்த்தனர்.

அதுவும் அந்த நால்வரும்…..அய்யோ இந்த பெண்  சொல் பேச்சை நிர்வாகம் கேட்டு விடுமோ என்று பயந்திருக்க…

“ அப்போ இவங்க டிஸ்மிஸ் செய்ய மாட்டிங்க.”

“ நீங்க என்ன நடந்ததுன்னு விவரமா சொன்னா…. அதுக்கு தக்க படி ஆக்க்ஷன் எடுப்போம்.”

சம்பூர்ணாவின் பேச்சு…புதுமாணவி போல் இல்லை. என்னவோ அந்த கல்லூரியில் அவளும் ஒரு நிர்வாக இயக்குனர் என்பது போல் தான் இருந்தது.

சம்மந்தமே இல்லாது…. “ என் அண்ணா யாருன்னு தெரியுமா…..?எங்க அத்தான் யாருன்னு தெரியுமா……?”

இப்போது அஷ்வத் தீரனின் பார்வை கூர்மை அடைந்தது.ஒரே ஊர் ஒரே முகவரியில் மூவருக்கு…..  கல்வி உதவி, அஷ்வத் நினைவில் வந்து போயின.

“எங்க அண்ணா…..I.P.S இப்போ பூனேவில் இருக்காரு. அடுத்த வாரம் காஞ்சிபுரத்துக்கு வந்துடுவாரு. வர வழிக்க போறது யாரு தெரியுமா….?எங்க அத்தான்…..I.A.S காஞ்சிபுரம் .  ஏதோ கிராமத்து பொண்ணு ஏமாத்திடலாமுன்னு நினைக்கிறிங்கலா……?” அவள் பேச்சு அவ்வளவு சட்டமாக இருந்தது.

கடவுளே என்று அஷ்வத் தீரன் தலையில் கை வைக்கும் அளவுக்கு இருந்தது அவளின் பேச்சு.

அந்த நால்வர்களுக்கும் அவள் சொல்லும் பதவியை கேட்டு…..அய்யோ என்றானது.

ஆனால் ஜானகிராமனோ அவளின் பேச்சை ஒவ்வொன்றும்  ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தார்.

அவளின் தைரியமான பேச்சில் தன்னால்…..” பாக்க மட்டும் இல்ல. தைரியமும் அவ அம்மா போலவே….” முனு…முனு என்று மெல்ல தான் சொன்னார். ஆனால் அவர் அருகில் அமர்ந்து இருந்த அஷ்வத் தீரனின் காதில் தெளிவாக விழுந்தது.

 

Advertisement