Advertisement

அத்தியாயம்….3

மருத்துவ கல்லூரியில் இன்று தான் புது மாணவ, மாணவியர்களின் முதல் வகுப்பு ஆராம்பம். எப்போதும் எட்டரைக்கு சாப்பிடும் அறைக்கு வரும் அஷ்வத் ….எட்டுக்கே வந்து…… தோசை வார்த்துக் கொண்டு இருக்கும் சமையல்லாம்மாவிடம்…..

“இன்னுமா ஆகல….” நேரத்தை பார்த்துக் கொண்டே குரல் கொடுக்க.

“தோ தம்பி……” வார்த்த தோசையை அஷ்வத் தட்டில் வைக்கும் வேளையில்….ஜானகிராமனின் வீல் சேர் லிப்ட்டில் இருந்து வெளி வருவதை பார்த்து, சாப்பிடுவதை நிறுத்தி விட்டு தந்தையைய் பார்த்த அஷ்வத்….. அவர் எங்கேயோ போவதற்க்கு  ஏற்ப உடை உடுத்தி இருப்பதை பார்த்து…..

“மெடிக்கல் செக்கப்பா அப்பா……?” கேட்ட தன் மகனை  நிமிர்ந்து பார்த்த ஜானகிராமன்….

“நானே டாக்டர் …..இது மறந்துட்ட போல….?”

“என்னத்தான் நீங்க பெரிய  டாக்டரா இருந்தாலும், உங்க பி.பியை மத்தவங்க தான் செக்கப் செய்யனும். இத்தன ஆண்டு நம்ம மருத்துவமனையில் இருந்து, உங்க  ஜூனியர் வந்து தான் உங்க மாதந்திர மருத்துவ பரிசோதனை செய்யிறாங்க.”

“தெரியுதுல….என் பரிசோதனைய நான் வீட்டிலேயே செய்துக்குறேன்னு. அப்புறம் எதுக்கு ஹாஸ்பிட்டலான்னு கேட்குற……?”

“இல்ல ஹாஸ்பிட்டலுக்கு கூட போகாது வீட்டிலேயே மருத்துவ பரிசோதனை நடக்குது. அப்படி இருக்கும் போது, காலையில் எங்கேயோ போவது போல் ரெடியாகிட்டு வந்தா நான் என்னன்னு எடுத்துக்குறது….?அது தான் கேட்டேன்.”

பாவம் அப்பா,மகன், இந்த உரையாடலை சமையல்காரம்மா இவங்க சாதரணமா பேசிக்கிறாங்கலா….இல்ல சண்டை போட்டுக்குறாங்கலான்னு தெரியாது  விழித்து ஜானகிராமனுக்கு குடிக்க வேண்டிய ஓட்ஸ் கஞ்சியை எடுத்து வந்து வைத்தார்.

இந்த ஒரு மாதத்தில் சம்பூர்ணா யார்….?என்று  கேட்டதை விட, வில்லங்கப்பட்டு ஊருக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்….? வித விதமாக கேட்டு விட்டான்.

பதில் “என் நண்பனின் ஊர்.” என்ற பதிலே…. சின்ன குழந்தை கூட அவர் சொன்னது நம்பாது அப்படி இருக்கும் போது அஷ்வத்.

சரி இன்று கல்லூரியில் அந்த பெண்ணை அழைத்து பேசிவிடலாம் என்று சீக்கிரம் கிளம்பினால், அங்கு இவர் வருவார் என்று அவன் நினைத்து பாராதது.

விபத்து நடந்ததில் இருந்து அவர் எங்கேயும் போவது இல்லை. அவர் சொன்னது போல் மருத்துவ பரிசோதனையும் வீட்டிலேயே தான்.

விபத்து நடந்து ஒரு வருடம் சென்றதும், தந்தை வீட்டிலேயே முடங்கி இருப்பதை பார்த்து…..” அப்பா நீங்க ஒரு மருத்துவர். நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. உங்களால் நடக்க தான் முடியாது. உங்க சேவை எத்தனை பேருக்கு தேவைன்னு உங்களுக்கே நன்றாக தெரியும். கல்லூரிய நான் பார்த்துக்குறேன். மருத்துவமனைக்கு செல்லுங்க.” என்று சொன்னதும்,

“வீட்டிலே வெட்டியா இருக்கேன்னு சொல்லி காமிக்கிறியா…..?” மற்றவர்கள் பிரமித்து பார்க்க இருந்து விட்டு, பின் முடமாவது என்பது…..வேதனையானது. அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

அந்த மருத்துவமனையில் ஜூனியர்  டாக்டர் பின் வர. கம்பீரத்தோடு வலம் வந்து விட்டு, அதே மருத்துவமனையில் இப்படி வீல் சேரில் போவது பிடிக்கவில்லை.

தன்னம்பிக்கை குறையும் போது ஒரு இயலாமை வரும். அது இப்படி தான் வார்த்தைகளாய் கொட்டும்.

தன் தந்தையைய் நன்கு புரிந்துக் கொண்ட அஷ்வத்….. “உங்களுக்கே  எப்போ வரனுமுன்னு தோனுதோ அப்போ வாங்க.” என்ற சொல்லோடு பேச்சை நிறுத்தி விட்டான்.

இப்போது அந்த சம்பூர்ணாவுக்காக….ம் பார்க்கலாம் எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் பார்க்க தானே போறேன் என்று…..

“நீங்க எங்கே போறீங்கலோ…அங்கு தான் நானும் போறேன். எப்படி என் கூட வர்றிங்கலா….? இல்ல வேறு காரில் வர்றிங்கலா…..?” மகன் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது….

“நீ எப்போவும் பொறியல் கல்லூரிக்கு போயிட்டு தானே மருத்துவ கல்லூரிக்கு போவ…..?”

“ இன்னிக்கு புதுசா வர்ற பசங்கல வெல்கம் பண்ணலாமுன்னு தான்.வர்றிங்கலா….?”

“ம்….” என்று தன் தந்தை சொன்னதும் வீல் சேரை தள்ளிக் கொண்டு தந்தை எங்கேவாது செல்ல வேண்டி வசதியாக வாங்கி வைத்த காரில் வீல் சேரை ஏற்றி விட்டு காரை  மருத்துவ கல்லூரி நோக்கி செலுத்தினான்.

“பார்த்து குட்டிம்மா …பசங்க ஏதாவது சொன்னா கூட வாய  மூடிட்டு இருக்கனும். வாய் பேச கூடாது. இது நம்ம ஊரு இல்ல. ஜாக்கிரதை.” மாமன் மகன் சொன்னதுக்கு எல்லாம்,  தலைய நாலா பக்கமும் சும்மா சுழல விட்டவளின் செயலில் டென்ஷனாகிய மாதவன்,

“சம்பூர்ணா தேவி.” அத்தை மகளிடம் கோபம் இருந்தால் மட்டுமே அவளின் முழுபெயரை வைத்து அவளை அழைப்பான்.

“ அப்படி அக்கறை இருக்கவங்க. வர்றது…..?” என்ன தான் தைரியசாலி என்றாலும், புது ஊர். புது கல்லூரி, கொஞ்சம் பயம் இருக்க தான் செய்தது.

அதுவும் நேற்று மருத்துவ விடுதியில் , அந்த விடுதி காப்பாளர் “உங்களுக்கு ஒதுக்கி இருக்கும் அறை நாளை தான் காலியாகும். உங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் விவராம இருக்குமே…..”

“ஆ இருக்கு இருக்கு…..” சம்பூர்ணாவினால் முனக தான் முடிந்த்து.

அவள் ஊரில் தெரியாதவங்க யாராவது ஊருக்கு வந்தாலே…..இடம் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.

இடம் ஒதுக்கி, அவர்கள் அந்த ஊரில் வந்த காரியம் முடியும் வரை மூன்று வேலை உணவும் ஒவ்வொரு வீட்டில் இருந்து செல்லும்.

அப்படி இருக்கும் போது இங்கு தங்க வேண்டிய பெண். நடுயிரவில்  தங்க இடம் இல்லேன்னு சொல்றாங்கலே…..வில்லங்கப்பட்டு விலங்கப்பட்டு தான்.

வந்த முதல் நாளே தன் சொந்த ஊர் நினைத்து ஏங்கவும், புது ஊரின் செயலில்  அவள் கலங்க. அதை பார்த்த மாதவன்…. “தன் கை கடிகாரத்தை பார்த்துக் கொண்டே சரி குட்டிம்மா….நீ சீக்கிரம் கிளம்பு. நான் உன்னை விட்டுட்டே போகிறேன்.”

நேற்று விடுதியில் இடம் இல்லை என்றதும் தான் தங்கி இருந்த கலெக்ட்டர்கள் தங்கும் இருப்பிடத்துக்கு தான் அழைத்து வந்தான்.

அதுவும் வந்ததில்  இருந்து தொலைபேசி மாதவனுக்கு தொல்லை பேசியாக ஆகிவிட்டது. இடைவிடாது போன்…..அந்த பக்கத்தில் இருந்தவர்களிடம்….

“நாளைக்கு பத்து மணிக்கு இருப்பேன்.” ஒவ்வொரு அழைப்பும் பதில் இதுவாக தான் இருந்தது.

பாவம்  வேலை பளுவில் தன்னை அழைத்துக் கொண்டு வரத்தான் வந்தானா என்று நினைத்து….. “இங்கு இவ்வளவு வேலைய வெச்சிட்டி நீ எதுக்கு வந்த…..?”

“கண்ணன் இருந்தா அவன் பார்த்துப்பான். அவன் இல்லாத பட்சத்தில்  உன்னை நான் தானே பார்த்துக்கனும்.” இருவரும் எலியும், பூனையுமாய் சண்டை போட்டுக் கொண்டாலும்,  சம்பூர்ணாவின் மீது அக்கறை அதிகம்.

ஏற்கனவே எனக்காக தன் வேலை ஒதுக்கி வந்தான். இப்போது சென்னையில் என்னை விட்டுட்டு திரும்பவும் காஞ்சிபுரம்…. “பரவாயில்ல மாதவா….. நானே போயிக்கிறேன்.” முகத்தில் தைரியத்தை வரவழைத்து சொல்ல.

“சமாளிச்சிப்பியா…..?”

“ஆ…..” இந்த முறை பலமாக தலையாட்டினாள்.

அவள் உடுத்தி இருந்த உடையை பார்த்து …. “இது வேண்டாம் குட்டிம்மா….அந்த அலமாரியில் உனக்குன்னு போன வாரம் பர்ச்சேஸ் செய்தது வெச்சி இருக்கேன். அது போட்டுக்கோ….”

அவள் உடை எப்போதும் அடிப்பது போலவே இருக்கும். வாங்கி வருவது அம்மாத்தா. தாத்தாவாச்சே….அவங்க  கண்ணுக்கு நிறைந்த கலரில் தான் உடை எடுப்பார்கள்.

மாதவனின் பேச்சில் தன்னை குனிந்து பார்த்தவள். ஒன்னும் சொல்லாது மாதவன் சொன்னது போல் அவன் வாங்கியதில் சான்டிலும், மெரூனும் கலந்து  இருந்த ஒரு சல்வாரை போட்டு வந்தவளை பார்த்து…

“இது ஒகே….” என்று தன் தனிப்பட்ட காரை ஒரு ஆக்டிவ் ட்ரைவரை வரவழைத்து ஆயிரம் பத்திரம் சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.

ராகிங்….அது இல்லை என்று அனைத்து கல்லூரியும் மார்த்தட்டிக் கொண்டாலும், நிர்வாகத்துக்கே தெரியாது  அங்கு இங்கு நடக்க தான் செய்கிறது.

அதுவும் கிராமத்து பைங்கிளி பார்த்தால் அவ்வளவு தான். அது எப்படி தான் முகத்தை பார்த்தே கண்டு பிடித்து விடுவார்களோ…..?

தன் மனதுக்குள் பயப்படாதே…பயப்படாதே….என்று சொல்லிக் கொண்டாலும் காரில் இருந்து இறங்கிய சம்பூர்ணா தேவி  அங்கு வந்த பெண்களை பார்த்து மிரண்டு விட்டாள்.

ஆம் பெண்களே தான். படிக்க வந்தாங்கலா….?இல்ல பேஷன் ஷோவுக்கு வந்தாங்கலா….?அப்படி சந்தேகப்படும் படி தான் இருந்தது அவர்களின் உடை.

அதுவும் இவளின் உடையை பார்த்து உதடு பிதிக்கி ஏதோ ஜந்துவை பார்ப்பது போல் பார்த்த பார்வையில்….

தன் அம்மாத்தா சொன்ன ஊரோடு ஒத்து வாழனும் என்ற பழமொழி நியாபகத்தில் வர. ஆ என்னலா இப்படி எல்லாம் உடை உடுத்த முடியாதுப்பா….

பெண்களின் பார்வையில் இருந்து ஆண்களின் பார்வை வட்டத்துக்குள் வந்த சம்பூர்ணா தேவி, அவர்களின் பார்வையில்  ஒழுங்காக போட்டு இருந்த துப்பாட்டாவை குனிந்து பார்க்கும் படி இருந்தது அவர்களின் பார்வை.

எப்போதும் பெண்கள்  கண்ணோட்டதுக்கும், ஆண்கள்  கண்ணோட்டதுக்கும், மாறுபடும் அல்லவா….?பெண்களின் பார்வைக்கு பட்டிகாடாய் தெரிந்த சம்பூர்ணா….ஆண்களின் பார்வையில் சம நாட்டுகட்டையாக தெரிந்தாள்.

“மச்சான் அங்கு பாரு….மண் வாசனை வருது.” சம்பூர்ணாவை காமித்து ஒருவன் சொல்ல.

“நீ சொன்னா மாதிரி மண்வாசனை தான். ஆனா பார்த்தா நீயூ அட்மிஷன் மாதிரி இல்லையே…..?” மற்றொருவன் தன் சந்தேகத்தை சொன்னான்.

சம்பூர்ணா வயதுக்கு மீறி தெரியமாட்டாள். ஆனால் அவள் வயது பத்தொன்பது என்பது போல் தான் தெரியும்.

“இல்லடா புதுசு தான். பார்வையே சொல்லுதே…அதுவும் இல்லாம  சீனியரா இருந்து இருந்தா நம்ம கண்ணுக்கு மாட்டாமயா இருந்து இருப்பா…..?நாட்டு கட்டைன்னா அப்படி தான். நம்ம  சிட்டி பொண்ணுங்க மாதிரி உடச்சலா எல்லாம் இருக்க மாட்டாங்க.” என்று பெண்களின் உடல் சீரை விளக்கியவன்….

இரு விரலை வாயில் வைத்து ஓசை எழுப்ப…அது  காதில் விழாது, சம்பூர்ணா தேவியோ ஆடை என்று கிழிந்து தொங்கிய ஜீன்ஸை பார்த்துக் கொண்டே நடந்து போன போது…

திடிர் என்று ஏதோ ஒன்று    தன் முன் எகிறி வந்து குதிக்கவும், பயந்து ஒரு ஸ்டெப் பின் வைத்தவள்.

பின் தன் முன் குதித்தது மனிதன் தான் என்ற ஆசுவாசத்தில், தன் நெஞ்சை  நீவி விட்டதோடு இல்லாது….

“நான் குரங்கோன்னு பயந்துட்டேன்.”

அவள் ஊரில் மலையைய் ஒட்டி இரு குகை கோயில் உள்ளது. சஷ்டி அன்று மிக விசேஷமாக அந்த கோயிலில் பூஜை நடக்கும். அவள் அம்மாவால் படி ஏற கஷ்ட்டம் என்பதால் “அம்மா நீங்க போனா என்ன….? நான் போனா என்ன…..?   எல்லாம் ஒரே பலன் தான்.” என்று சஷ்டி சஷ்டி அந்த கோயில் போவாள்.

பயபக்தியோடு இல்லை. பயத்தோடு…..காரணம் குரங்கு அதிகம். அதுவும் பர்ட்டிகுலரா நம்ம சம்பூர்ணாவை பார்த்தாள், அனைத்து குரங்கும் அவளை ரவுண்டு கட்டும்.

மாதவன்…. “பார்த்தியா எங்க கிட்ட எல்லாம் வராம உன் கிட்டயே வருது. இனம் இனத்தோடு தான் சேரும்.” என்று  கிண்டல் செய்வான்.

குரங்கு என்றால் சம்பூர்ணாவுக்கு கொஞ்சம் என்ன ……?நிறையவே  அலர்ஜீ. தன் முன் ஒன்று குதிக்கவும் பழக்க தோஷத்தில் குரங்கு என்று பயந்து பின் சென்றாள்.

அது குரங்கு இல்லை. மனிதன் என்றதும் வாய் விட்டு சொல்லி விட்டாள். “என்னது குரங்குன்னு நினச்சியா……?”

மரத்தடியில் அமர்ந்து இருந்த மற்ற (குரங்குகளை)  “ஏன்டா மாப்பி இங்கு வா…நம்ம கிராமத்து சிட்டு என்னவோ  சொல்லுது….?” அவர்களையும் துணைக்கு அழைக்க.

“சிட்ட இங்கு கூட்டிட்டு வாடா…என்ன ஏதுன்னு தெளிவா விசாரிக்கலாம்.” என்று மற்றொருவன் சொன்னதும்,

இரண்டு கையை முன் காண்பித்து….. “வாராய் நீ வாராய்…..”  அந்த பாடலில் என்ன நடக்கும் என்று தெரிந்து பாடினானா….?தெரியாமல் பாடினானா…..?ஆனால் சிட்டிவேஷனுக்கு சரியாக பாடி, அந்த மரத்தடிக்கு அவளை அழைத்து சென்றான்.

ஏதாவது நடக்குமோ என்று பயப்படும் மனது….அது நடக்கும் போது தன்னால் ஒரு தைரியம் நம்மை அறியாது வந்து விடும்.

அது தான் நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்பது. அந்த தைரியம் இப்போது சம்பூர்ணாவுக்கு வந்தது.

அதுவும் கிராமத்து சிட்டு என்று தன்னை கேலி செய்தவனை சும்மா விட கூடாது, என்று  பயந்து இல்லாது வீரு நடை போட்டே வந்தாள்.

அதுவும் அவன் அந்த பாடு பாடியதும் பயப்புள்ள சரியா தான் பாடறான்….இருடா…..தாவணியாக இருந்து இருந்தால், முந்தியை  சொறுகி கொண்டு நடந்து இருப்பாள்.

அப்படி கையை நீட்டி நடந்து வந்தவளை பார்த்த அந்த கூட்டத்தினர். “ஏய் என்ன…..பெரிய போலீஸ் காரகுடும்பமுன்னு நினப்பா….லெப்ட், ரைட் போட்டு நடக்குற…..?”

“அட ஆமாப்பா ஆமா…எப்படி எல்லா பயளுங்கலும் இப்படி உண்மைய பேசுதுங்க.” மனதில் கவுண்டர் கொடுக்க.

“ஏய்…என்ன ஏத்தம்மா…..?சீனியர் பேசிட்டு இருக்கோம், இப்படி வாய திறக்காம இருக்க.” கூட்டிக் கொண்டு வரச்சொன்னவன் எகுற.

“அய்யோ திமிரெல்லாம் இல்லேண்ணா…..பெரியவங்க பேசுனா எதிர்த்து பேசக்கூடாதுன்னு என் அம்மாத்தா சொல்லுமுண்ணா, அது தான் அமைதியா நிக்கிறேன்.” வார்த்தையில் இருந்த பணிவு அவள் உடல் மொழியிலோ…..குரலிலோ….இல்லை. மிக தெனவெட்டாக நின்றுக் கொண்டு பதில் பேசினாள்.

“ஏய் என்ன லந்த்தா…..பேச்சுக்கு, பேச்சு ,அண்ணா அண்ணான்னு சொல்ற….?”

“என்னண்ணா  இப்படி சொல்லிப்புட்டிங்க……? நீங்க தானே சீனியருன்னு சொன்னிங்க. எங்க ஊருல வயசு பெரியவங்கல….மரியாதையா பெரியப்பு, சித்தப்பு, அண்ணாத்தேன்னு  தான் அழைப்போம்.”

“ம் அப்படியா…..ஆனா எங்க ஊருல வயசு பெரியவங்க மாமன் ,மச்சான், அத்தான்னு தான் கூப்பிடுவோம்…..” என்று சொன்னவன் பக்கத்தில் அமர்ந்து இருந்தவனை பார்த்து கண் அடித்து….. “இப்போ பாரு  குட்டியே….” என்று சொல்லி விட்டு,

சம்பூர்ணாவை பார்த்து…. இதோ இப்போ நான் சொன்ன உறவ வெச்சி, இங்கு இருக்கறவங்கல…என்ன …என்ன உறவு வெச்சி கூப்பிடனுமோ கூப்பிடு.”

“இது எப்படி இருக்கு….?” என்பது போல் சொல்ல.

இப்போது வார்த்தையில் இருந்த பணிவு கூட சம்பூர்ணாவுக்கு காணமல் போய் இருந்தது.

“கூப்பிடலேன்னா என்ன பண்ணுவீங்க…..?” இரு கையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கேட்டாள்.

இது வரை சாதரணமா ஏதோ கிண்டல் என்று  பேசிக் கொண்டு இருந்தவர்கள், இவளின் பேச்சில் மொத்தமாய்  அவளை சூழ்ந்துக் கொண்டு….

“ கூப்பிடலேன்னா இந்த இடத்தை விட்டு அசைய  முடியாது.” அவளை சுற்றி நடந்துக் கொண்டே பேசினான் ஒருவன்.

நடந்துக் கொண்டே இருந்ததால் சிறிது இடம் கிடைத்தால் கூட பரவாயில்லை போய் விடலாம் என்று நினைத்தவளுக்கு, அவர்கள் நிற்காமல் நடந்துக் கொண்டே இருந்ததால்….

தள்ளி தான் போய் ஆகவேண்டுமோ…..?அதற்க்கு ஒருத்தன் மேல் கைய் வைக்கும் படி ஆகுமே…..பரவாயில்ல, என்று  நினைத்து ஒருவனை தள்ள தன் கை தூக்கும் வேளயில்….

“சிட்டு என்ன தான் மாமன் மச்சான், அத்தான்னு நினச்சிட்டாடா…அதான் வாயல் கூப்பிடாம கைய் தொட்டு உங்களுக்கு காட்டுறா….. இனி யாரும் சிட்டுவ தொந்தரவு கொடுக்க கூடாது.” யாரை கை தொட்டு தள்ளி விட நினைத்தாளோ…..அவன் இவ்வாறு பேச.

மற்றவர்கள் கோரசாக…… “மச்சா நம்ம டீலே…..ஒருத்தவங்க ஆளு மத்தவங்களுக்கு சிஸ்டர். அப்போ எங்கல அண்ணான்னு கூப்பிட்டது தப்பே இல்ல தங்கச்சி.” என்று சொன்னதும் கடுப்பாகிய சம்பூர்ணா…

“ஏய் நடந்து வரப்ப வழில மாடு வழி மறிச்சிச்சிதுன்னா….. தள்ளி தான் விடுவேன். அப்போ எனக்கு அது என்ன மாமனா….?மச்சானா….?அத்தான்னா…..?”

சம்பூர்ணா மட்டும் வாய் பேசாது அவர்கள் கேட்டதுக்கு பதில் அளித்து இருந்தால், சும்மா வாய் பேச்சோடு  போய் இருக்கும். தன் துடுக்கு தனத்தில் வாய் விட்டு விட….

மாடு என்று சம்பூர்ணாவினால் சொல்ல பட்டவன் அவள் துப்பட்டாவின் மீது கைய் வைத்து இழுக்க. பின் குத்தாது இருந்து இருந்தால் வெறும் துப்பாட்டா மட்டும் அவன் கையில் மாட்டி இருக்கும்.

பக்கவாய் பின் குத்தி வந்த சம்பூர்ணாவின் துப்பட்டா இழுக்கப்பட்டதால்…..பின்னோடு தோள் பகுதியில் இருந்த துணியும் கூடவே வந்து விட…

தோள் பகுதியில் வரும் உள்ளாடையின் ஸ்டாப் மாநிறத்து மேனியில்  வென்மையாக தெரிந்தது.

இழுத்தவனே  ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான். பின் தன் கையில் உள்ள  துப்பாட்டாவை அவள் தோள் சுற்றி போட்டவனை ஒரு பார்வை பார்த்தவள் நேராக சென்ற இடம். அஷ்வத் தீரனின்  அறை.

 

Advertisement