Advertisement

அத்தியாயம்—-2

“வில்லங்கபட்டா…..?அப்படி எல்லாமா  பேரு வைப்பாங்க…..?” என்று கேட்ட அஷ்வத்.

“எதுக்கு சகாயம் சார்….அது அப்பா ஊரான்னு கேட்டிங்க…..?” என்று கேட்டவனுக்கு பதில் வாயில்  சொல்லாது.

கணினியில் ட்ரஸ்ட் மூலம்  உதவி செய்தவர்களின் முகவரி பகுதிக்கு சென்றவர், மூன்று ஆண்டுக்கு முன் உதவி செய்த வில்லங்கட்டு ஊரை சேர்ந்த கமலக்கண்ணனுக்கு I.P.S படிப்புக்கு செய்த உதவியும், அடுத்த ஆண்டு அதே ஊரில் இருந்து மாதவனுக்கு I.A.S படிப்புக்கு செய்த உதவியும்,  எடுத்து காட்டியவர். பின் சம்பூர்ணாதேவியின் முகவரியை எடுத்து காட்ட…..

அதை பார்த்த அஷ்வத்  முகத்தில் குழப்பம்.

அதை சகாயத்திடம் காட்டாது…. “தெரிந்தவங்கலா இருப்பாங்க.” என்று சொல்லி சகாயத்தை அனுப்பிய அஷ்வத்  உதவி செய்தவர்களின் முழுவிவரத்தை படிக்க ஆராம்பித்தான்.

முழு விவரத்தில் புகைபடமும் இருக்க. அதில் மாதவனின் முகத்தில் தன் சாயல் அதிகமாய் தெரிவதை பார்த்து அஷ்வத்  நெற்றியில் கோடுகள் விழுந்தன.

“அம்மாத்தா எனக்கு   J.A மெடிகல் கலேஜில் இருந்து அட்மிஷன் வந்து இருக்கு.” தன் கையில் உள்ள  காகிதத்தை அம்மாத்தாவின் தலை மேல் தூக்கி காட்டி சத்தமிட்டு, தன் சந்தோஷத்தை வெளியிட்ட தன் மகள் வயிற்று பேத்தி சம்பூர்ணாதேவியின் முகத்தை திருஷ்ட்டி சுத்தி போட்ட முத்து பேச்சு….

“ என் பேத்தி  படிப்புக்கு, அகெரிக்காவிலே கொடுக்கனும். இங்க  இருக்க பட்டணத்தில் கொடுக்க மாட்டாங்கலா…..?”

பெண்கள் கல்வி என்பது அந்த ஊரில் அறிதான ஒன்று. காரணம் அந்த ஊரில் எட்டாம் வகுப்பு வரை தான் இருக்கிறது.

அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும் என்றால்….. அடுத்த ஊரின் எல்லைக்கு தான் செல்ல வேண்டும். சுத்தி செல்வது என்றால் இருபத்திஐந்து கிலோ மீட்டர் போக வேண்டும்.

குறுக்கு வழி என்றால் ஐந்து கிலோ மீட்டர் தான். அந்த பாதையில் சுடுகாடும் இருப்பதால் வயது பிள்ளைகளை  யாரும் அனுப்ப மாட்டார்கள்.

ஆண்பிள்ளைகளே அறிதாய் தான்  பட்டபடிப்பு படித்து இருக்கிறார்கள். அப்படி பட்ட ஊரில் இருந்து தன் பேத்தி இத்தனை மதிப்பெண் எடுத்து இருந்தது பெருமை கொள்ள வேண்டிய ஒன்று தானே……

கோயிலில் இருந்து கையில் பிரசாதத்தோடு வீட்டுக்குள் நுழைந்த ஷண்மதி, தன் அம்மா, மகளின் சந்தோஷ முகத்தை பார்த்து…..

“என்ன ஆத்தா பாட்டி, பேத்தியின் முகத்தில் அதிகப்படியா  ஜொலிக்குது, என்ன விஷயம்…..?”

தாயின் பேச்சை காதில் வாங்காது….. “நீங்க ஏம்மா தனியா கோயிலுக்கு போனிங்க…..?” தாயின் கையில் உள்ள பிரசாதத்தை வாங்கியவள், அவரை இருக்கையில் அமர வைத்து பேனை போட்டவள்.

வெயிலுக்கு குளுமையாக மோரை எடுத்து வந்து தாயின்  கையில் கொடுத்துக் கொண்டே….தன் துப்பாட்டாவினால் தாயின் முகத்தின்  வியர்வையை துடைத்து விட்ட வாறே….

“அப்பா, மாமா வரும் வரைக்கும் காத்திருக்கலாமில்லே……?”  சம்பூர்ணா பேச்சில் அவ்வளவு வருத்தம் காணப்பட்டது.

“இன்னிக்கி அறுவடைனால அப்பாவும், மாமாவும், வெல்லனவே போயிட்டாங்க.இன்னிக்கி நெல்ல மில்லுக்கு கொண்டுன்னு போகனும் வேற சொன்னாங்க. அதான் நானே போயிட்டு வந்துட்டேன்.” இவ்வளவு சொல்லியும் சம்பூர்ணாவுக்கு சமாதானம் ஆகவில்லை.

“அப்படி என்ன இன்னிக்கே கோயிலுக்கு போகனுமுன்னு அவசரம். நாளைக்கு போகலாமுல்லே.”

“இல்லடா இன்னிக்கி பிரதோஷம். அதுவும் சனி பிரதோஷம். அதான்.”

“சரி. இன்னிக்கி ஒரு நாளுக்கு விடறேன். இனி அப்பா, மாமா கூட தான் போகனும்.” தாயிடம் கடிந்து பேசிய பின் தனக்கு சென்னையில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்து இருப்பதை பற்றி சொல்ல.

“பார்த்தியா பார்த்தியா… பிரதோஷத்துக்கு கோயிலுக்கு போறது பலன் தராம இருக்கவே இருக்காது. அதுவும் சனி பிரதோஷம் கேக்கவே வேண்டாம்.”

“ம் நான் இங்கு மாங்கு மாங்குன்னு படிச்சி சீட் வாங்கினா…..நீங்க பிரதோஷம் போய் சீட் கிடச்சிடுச்சின்னு  மொத்த பெருமையும் சிவனுக்கு கொடுத்துட்டிங்க.” மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டு பேசும், மகளின் தாடையை பிடித்து ஷண்மதி ஏதோ பேச.

இதை பார்த்துக் கொண்டு இருந்த முத்து பேச்சியின் முகத்தில் தன்னால் கண்ணீர் சிந்தியது.

சம்பூர்ணா தேவி தன் அன்னையை  தனியாக போக கூடாது என்று அவ்வளவு கண்டிப்புடன் சொல்ல காரணம், ஷண்மதியின் கால் ஒன்று மற்றோரு காலை விட வளர்ச்சி கம்மி. இதனால் கொஞ்சம் இழுத்து இழுத்து தான் நடப்பார்.

அப்படி நடக்கும் போது ஷண்மதியின் முகத்தில் தெரியும் வலியின்  சாயலை பார்த்து, யாரும் அவரை நடக்க விட மாட்டார்கள். ஷண்மதியை உள்ளங்கையில் வைத்து அந்த குடும்பம் தாங்கினர்.

தன் மகன் வெங்கடராமன்  மருமகன் நல்லக்கண்ணு தங்கை செல்லாயியை தான் மணந்து இருக்கிறார்.

ஆதாவது பெண் கொடுத்து பெண் எடுத்ததால் ஒரே கூட்டு குடும்பமாய் தான் இருக்கிறார்கள்.இது வரை சண்டை சச்சரவு என்பதே அக்குடும்பத்தில் இல்லை. மருமகள் அவருக்கு இன்னொரு மகள்  தான். இருந்தும் பேச்சும்மாவுக்கு நிறைவு இல்லை. காரணம்…..பேச்சும்மாவின் யோசனையை ஷண்மதியின் குரல் தடை செய்தது.

“ஆத்தா மதினி எங்கே…..?”

“கலத்து மேட்டுக்கு கூலி கொடுக்க போயி இருக்கா. உன்ன சாப்பிட சொன்னா….அவ வர கொஞ்சம் நேரம் கடக்குமுன்னா……”

“நீங்க சாப்பிடுங்க ஆத்தா. நான் மதினி கூடவே சாப்பிடுறேன்.”

தாயிக்கும், மகளுக்கும் உணவு பரிமாறியவள் தன் அண்ணிக்காக காத்திருக்க. நெற்றி வியர்வை துடைத்த படி வந்த அண்ணிக்கு, தன் மகள் தனக்கு செய்ததை  செய்து விட்டு, உணவு எடுத்து வந்து கொடுத்தவர் , தனக்கும் ஒரு தட்டில் எடுத்து கொண்டு அருகில் அமர்ந்து சாப்பிடும் ஷண்மதியை முறைத்து…

“ நான் அத்த கிட்ட நான் வர காலமாகுமுன்னு சொல்லிட்டு தானே போனேன் மதனி. இப்போ மூனு ஆகுது. இது வரை சாப்பிடாம இருபிங்கலா…..?” கடிந்துக் கொண்ட மதனியிடம்..

“வேல செய்யாம இருக்க எனக்கு பசி பொறுக்காது …வெல்லன போயி  நேரம் சென்டு வர உங்களுக்கு பொறுக்கும், எந்த ஊரு நியாயம் இது….?”

“ஆ எல்லாம் வில்லங்கப்பட்டு ஊரு நியாயம் தான்.” என்று சொல்லி சிரிக்கும் மகள் மருமகளின் ஒற்றுமையில் கண் குளிர்ந்து விட்டது பேச்சும்மாவுக்கு,

பெட்டியில் துணிகளை அடிக்கி வைத்துக் கொண்டு இருந்த சம்பூர்ணா தேவியிடம்….. “ஏன்டி யம்மா பெரிய பெட்டியில, இத்துணுன்டு இடம் இல்லையாடி…..?” தன் கையில் கிச்சிலுக்கா, நெல்லிக்கா,  ஊறுகாயை வைத்துக் கொண்டு கெஞ்சிக் கொண்டு இருந்த பாட்டியிடம்…

“அம்மாத்தா  நான் போறது சென்னை. அது என்ன உங்க ஊரு  வில்லங்கப்பட்டுன்னு நினச்சிங்கலா ….?டிபார்ட்மெண்ட் போனா போதும் கிடைக்காத பொருள் இல்ல. தெரிஞ்சுக்கோங்க…..?”அங்கேயே  பிறந்து அங்கேயே வளர்ந்தவள் போல், சென்னையின் புகழ் பாட. அதை பாட்டியும் கேட்டு வைத்தார்.

“நீயே இப்போ தான் அங்கு கால் வைக்க போற, என்னவோ காலம்   காலமா அங்கேயே இருந்தா மாதிரி பேச்சை பாரு….?”

“முதல்  தடவையா….? ஏன் அம்மாத்தா பொய் சொல்றிங்க…..?”

கல்லூரியில் சுற்றுலா என்ற பெயரில், கல்லூரி பேருந்து சென்னையில்  ஒரு இரண்டு மணி நேரம் இருந்தது. அதை தான் அம்மணி நான் சென்னைக்கு புதுசான்னு…..?தன்  பாட்டியிடம் தர்க்கம் செய்து கொண்டு இருக்கிறாள்.

அந்த வீட்டின் மருமகள்  செல்லாயி….. “அம்மாத்தா அவ்வளவு  தூரம் கெஞ்சுறாங்கல…..அந்த பையில ஓராம கொஞ்சம் இடம் இருக்கு பாரு…..அந்த பக்கம் அதை வைக்கலாம்  குட்டி.” பேச்சோடு தன் மாமியார் கையில் இருந்த ஊறுகாயைய் அதில் திணித்தும் வைத்தார்.

மூஞ்சியை நாளு முழத்துக்கு தூக்கி வைத்துக் கொண்ட சம்பூர்ணாதேவி….. “என் மானம் போக போகுது.”

எண்ணை செக்கில் தலையை நுழைத்தது போல் தலையில் எண்ணை வைத்துக் கொண்டு தன்   தாத்தா….போன தீபாவளிக்கு கொடுத்த ஆராஞ் மிட்டாய் நிறத்தில் சுடி என்ற பெயரில்  பாதரியார் உடை போல் அணிந்து கொண்டு இருந்த சம்பூர்ணாவின் பேச்சை கேட்டுக் கொண்டு வந்த  அந்த வீட்டின் இளைய வாரிசு மாதவன்….

அவளை ஏற இறங்க பார்த்துக் கொண்டு…. “அத நீ சொல்ற…..?எல்லாம் நேரம் தான்.”  என்று சொன்னவனிடம்….

“ஏம்பா நீ இங்கு இருந்து போகும் போது எப்படி இருந்த…..?நீயே இப்படி ஆகும் போது, நானெல்லாம் வேற லெவலு.”

அவள் சொல்வது முற்றிலும் உண்மையே…..இழுத்து வாரிய சடையும், அடிக்கிற உடையிலுமே….அவளின் தோற்ற பொலிவை தோற்க்கடிக்க  முடியவில்லை.

அழகு என்பது உடையிலோ….செய்து கொள்ளும் அலங்காரத்திலோ இல்லை. அது இயற்க்கையில் வரம்   என்பதை நிருபிக்கும் வகையாக…..

மாநிறத்தில் மூக்கும்,  முழியும் செதுக்கியது போல் இருந்தது என்றால்….புருவம் சிறந்த ஓவியனை கொண்டு வரைந்து போல் வளைந்து இருந்தது.  

கிராம பெண்ணுக்கே உள்ள அறியாமை கண்ணில் தெரிய, அது அவளுக்கு ஒரு கூடுதல் தகுதியாக இருந்தது.

தங்கள் நிலத்தில் சிறுவயது முதலே படிப்பு நேரம் போக உழைத்த உழைப்பு  எங்கும் சதை போடாத அவளின் நெளிவு, சுளிவுகளின் மூலம் அறிய முடிந்தது. மொத்தத்தில் கிராமத்து பைங்கிளியாக காட்சி அளித்தவளை….

மண்ணும், கல்லும் போல தான் பார்த்து வைத்தான் மாதவன்.  பின் அங்கு வரிசை கட்டி வைத்திருந்த பெட்டிகளின் எண்ணிகைய் பார்த்து….. “ஏன்டி நீ படிக்க போறியா….?இல்ல குடும்ப நடத்த போறியா….?எதுக்குடி இத்தன பெட்டி…..?” மாதவன் பேச்சை கேட்டுக் கொண்டே அந்த இடத்துக்கு வந்த  தாத்தா வேங்கையன்…

“என்னலே பேச்சு இது….?” தன் குரல் ஓங்க பேரனை கண்டித்தாலும் அவன் பேச்சு அவரை ஏதோ செய்தது.

அந்த முதியவரின் முகத்தில் இருந்தே …..அவரின் மனநிலை புரிந்துக் கொண்ட குடும்ப உறுப்பினர், அவர் தோள் பற்றிக் கொண்டு….

“சின்ன பிள்ள ஏதோ தெரியாம பேசிட்டான். இத போய் பெருசா எடுத்துக்கலாமா…..?”

அதை அந்த வீட்டின் இளைய தலைமுறை இருவரும் , ஏதோ நாடகத்தை பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

இது அந்த வீட்டில் அவ்வப்போது நடப்பது தான். கொஞ்சம் நினைவு தெரிந்த உடன் “என்ன அம்மாத்தா விஷயம்….” என்று சம்பூர்ணா, கமலக்கண்ணன் கேட்டால்…

“இது பெரியவங்க விஷயம். நீங்க உங்க ஜோலி படிக்கிறத மட்டும் பாருங்க.” பேச்சை முடித்து கொள்வார் பேச்சும்மா… அதே போல் மாதவன் தன் தாத்தவிடம் கேட்டால்….அதே பதில் வேறு மாதிரி.

அதனால் கேட்பதையே விட்டு விட்டனர். ஆனால் ஏதோ இருக்கு….தெரியும் போது தெரியட்டும்.

“குட்டிம்மா பாத்து சூதனமா நடந்துக்கனும். படிக்க போற, படிப்ப மட்டுமே பாத்துக்கனும். வேறு எந்த ஜோலிக்கும் போக கூடாது.”

அந்த வீட்டின் பெரிய தலைமுறை காதலில் விழ கூடாது என்று சுற்றி வளைத்து அறிவுரை சொன்னதுக்கு,

தலையை நாளா புறமும்   ஆட்டி….விட்டால் போதும் என்று தன் மாமன் மகனுடன்  சென்னை பயணமானாள்.

“அண்ணா வரலையா அத்தான்…..?” என்று கேட்டவள், அவன் பதிலை எதிர் பாராது….

“உங்க பவர யூஸ் பண்ணி அண்ணாவையும் நீங்க இருக்கும்  ஊருக்கே கூட்டிக்கலாம் இல்லையா….?”

ஏதோ வாய் திறக்க வந்த மாதவனை சட்டை செய்யாது….. “வந்தா எங்கே உன்னோடு என் அண்ணாவை ஊரு புகழ்ந்துடுமுன்னு உனக்கு வயித்தெரிச்சல்.” இப்படி   பேசி மாதவனின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்டாள் சம்பூர்ணா.

“இன்னும் ஒரு மாசம் தான் அவனும் காஞ்சிபுரத்துக்கே வந்துடுவான். எல்லாம் புகழும் இறைவனுக்கே என்பது போல…

எல்லா மண் கொள்ளையர். புரம்போக்கு நிலத்த பட்டா கேட்கும் புரம்போக்குங்க எல்லோரும் அவனையே டார்க்கெட் பண்ணட்டும் எனக்கு என்ன…..?”

“ஏய் என்ன சொல்ற…..?”

“ அது தாம்மா புகழ நான் மட்டும் மூட்டை கட்டிக்கிறேன்னு சொன்னியே, கூடவே உன் அண்ணனும் சேர்த்து கட்டிகிட்டோமுன்னு காஞ்சிபுரத்துக்கே அவனை  வரவழைக்க போறேன்.”

“ ஏய் நான் அது கேக்கல…என்னவோ மண், புரம்போக்குன்னு சொல்லிட்டு இருந்தியே அது….”

“யப்பா…என்ன மரியதை…என்ன மரியாதை .அத்த மக வாயில் இருந்து ஏய்…அப்படியே காதுல தேன் பாயுது.”

“இப்போ நான் கேட்டதுக்கு பதில் சொல்லலே….நான் வண்டியில் இருந்து குதிச்சிடுவேன்.” என்று மிரட்ட.

“குதி நல்லா குதி. உன் சீட்டு யாருக்காவது நல்லா படிக்கிற பசங்களுக்கு போய் சேரட்டும்.”

“யாரு அது என்னடோ…..?”

ஆம் அவளை பொறுத்த வரை அவள் தான் அதி புத்திசாலி. அப்படி தான் அவள் ஊரில் அவளை ஏற்றி  விட்டு இருந்தனர்.

“தோ பாரு குட்டிம்மா….நீ நல்லா படிக்குற பொண்ணு தான், அதில் சந்தேகமே இல்ல. ஆனா இந்த இலவச மருத்துவ படிப்பு கொடுக்குற அளவுக்கு இல்ல. அதுவும் உன்னோட  சின்ன பசங்க எல்லாம் நல்ல மார்க்கு எடுத்து காத்துட்டு இருக்கும் போது….”

மற்றவர்களை   விட சம்பூர்ணா இரண்டு வயது பெரியவள். அவள் ஊரில் எட்டாம் வகுப்பு படித்த உடன் அவள் தாத்தா போதும் என்று  நிறுத்தி விட்டார்.

அவளும் விட்டது தொல்லை என்று ஒரு வருடம் தங்கள் நிலத்தில் வேலை செய்துக் கொண்டு ஜாலியாக தான் இருந்தாள்.

தன் அண்ணனுடன்  படிக்கும் பெண்கள் ஒரு சமயம் தன் வீடு வந்த போது இவளிடம்…. “என்ன படிக்கிற…..?” என்று கேட்க.

“படிச்சி முடிச்சிட்டேன்.” என்னவோ நாளு டிகிரி முடிச்சாப்பல கெத்தாக தான் சொன்னாள்.

அவளின் கெத்தை பார்த்து…. “என்ன இந்த வயசிலேயே டபுல் பிரமோஷன் வாங்கி வாங்கி ஒரு நாளு டிகிரி முடிச்சியா…?இல்ல அதுக்கும் மேலயா…..?”

தன் வீட்டில் தான் அவமானப்படுவது எவ்வளவு கொடுமை என்று, அன்று அவள் உணர்ந்தாள். தன் தங்கை தலை குனிந்து செல்வதை பார்த்து கமலக்கண்ணனுக்கே ஒரு மாதிரியாக ஆகிவிட்டது.

பின் தன் நட்பு வட்டத்தை விரைவில் விடை கொடுத்து விட்டு வந்து நின்றது தன் தாத்தாவிடம்….

“தாத்தா சம்பூர்ணாவ படிக்க அனுப்புங்க.” அனுமதி கேட்கவில்லை. அனுப்பி ஆகவேண்டும் என்று தீர்மானத்தோடு பேசும் பேரனின்  பேச்சை அந்த பெரியவர் மறுக்கவில்லை.

அவரும் தன் பேத்தி அவமானப்பட்டத்தை பார்த்துக் கொண்டு தானே இருந்தார்.

“சரிப்பா….” என்று அவர் அனுமதி வழங்கியும் அந்த ஆண்டு மூன்று மாதம் சென்று பள்ளியில் சேர்க்க சென்றதால், அந்த ஆண்டும் அவளுக்கு வீணாகி போனது.

அதனால் தான் பதினெழுவயதில் எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை பத்தொன்பது  வயதில் தேர்ச்சி பெற்றாள்.

அதை தன் மாமன் மகன்  சுட்டி காட்டியதில், ஏகத்துக்கும் புசு….. புசு…. என்று கோபம் எகுற….அந்த கோபத்தை அவனிடம் காட்டாது தன் நகத்தை கடித்து துப்பியதில் காட்ட…

அவள் கோபம் வந்தால் என்ன செய்வாள்  என்பதை அறிந்த மாதவன்…. “ சீ கைய எச்சில் படுத்தாதே…..”

“என்ன நீ அசிங்கப்படுத்துவ….நான் என் கைய எச்சில் படுத்த கூடாதா….?” இன்னும் இன்னும் நகத்தை  கடித்து ரத்தம் வந்து மேலும் கடிக்க அங்கு நகமே இல்லை என்றானதும் தான் அதை விட்டாள்.

“ம்…. ரொம்ப கஷ்டம்.”

“என்ன …என்ன கஷ்டம்…..?” விட்டால் அடித்து விடுபவள் போல் கேட்டாள் அத்தை மகள்.

“சென்னையில் காலம் தள்ளுவது ரொம்ப கஷ்டம்.”

“எல்லாம் நான் பார்த்துப்பேன். நீ உன் வேலைய ஒழுங்கா பாரு.”

சென்னையில் அவளுக்கு என்ன காத்துக் கொண்டு இருக்கிறது என்பது அறியாது, தான் சினிமாவில்  பார்த்த காலேஜ் வாழ்க்கையில் உள்ளம் பூரிக்க வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.

 

Advertisement