Advertisement

அத்தியாயம்—–10

அஷ்வத் சொல்லி முடிக்கவும் அந்த இடத்துக்கு சம்பூர்ணா  வருவதற்க்கும் சரியாக இருந்தது.

வந்ததும் அவள் கேட்டது இது தான்……” அண்ணா  சின்ன வயசுல இருந்து அத்தான கல்யாணம் செய்துக்க சொன்னாங்க…..இவங்களும் எனக்கு அத்தான் முறையா தானே ஆகுது.” அஷ்வத் அவள் பேச்சில் ஒரு நொடி ஆடி போனான்.

இவளுக்கும் நம் மீது விருப்பமோ…..? எண்ணும் வேளையில்…..” நீங்க தப்பா எடுத்துக்காதிங்க….அவ எப்போமே இப்படி தான் விளையாட்டா பேசுவா…..” அஷ்வத்திடம் சொன்ன கமலக்கண்ணன்…

சம்பூர்ணாவிடம்….. “ என்ன குட்டிம்மா எதுல விளையாடுறதுன்னு வேணாம்” தன் தங்கையை கண்டித்தவன். அதற்க்கு மாதவனிடம்  எந்த விளக்கமும் சொல்லவில்லை. தன்னோடு தன் தங்கை பற்றி மாதவனுக்கு நன்கு தெரியும் என்ற நம்பிக்கை.

கமலக்கண்ணன் நம்பிக்கை பொய்த்து  போகவில்லை. அண்ணனோடு தன் அத்தை மகளை மாதவன் சரியாக தான் கணித்து வைத்திருந்தான்.

சம்பூர்ணா விளையாட்டு பெண் தான். ஆனால் எதில் விளையாடுவது என்பது அவளுக்கு நன்கு தெரியும். தன் மனதில் இருப்பதை எப்போதும் பேசும் துடுக்கு தனத்தில் அவள் சொல்லி விட்டாள்.

புரிந்துக் கொள்ள வேண்டிய அண்ணன்காரன் தான் புரிந்துக் கொள்ளவில்லை என்றால்…..சம்பூர்ணா பேச்சில் மகிழ்ந்த அஷ்வத்தின் ஆசையிலும் தீயை மூட்டி விட்டான் கமலக்கண்ணன்.

“நீங்க கண்டிப்பா கல்யாணதுக்கு வரனும்.” என்று  சொன்ன மாதவன்.

“வீட்டு முகவரி கொடுக்க முடியுமா….?பெரியப்பாவையும் கூப்பிடனும்.” ஏதோ நினைத்தவனாய் சொல்ல.

குடும்ப திருமணம் தாங்கள் மட்டும் அன்னியமாய்….அழைப்பிதழ் கொடுத்து அழைக்கும் அவலம்…..

“ம்….” என்றவன்…..வீட்டு முகவரி சொல்ல.சம்பூர்ணாவுக்கு தான் காத்து போன பலூன் நிலை.

மாதவனை சம்பூர்ணாவுக்கு பிடிக்கும். சிறுவயதில் இருந்து…..ஒன்றாய் வளந்ததில் மாதவனை தோழனாய்….அண்ணனாய் பாக்க முடிந்ததே ஒழிய….காதலானாவோ…..கணவனாய்…..கனவில் கூட நினைக்க முடியவில்லை.

ஆனால் அம்மத்தா சின்ன வயதில் இருந்து அத்தான தான் கட்டிக்கனும் வாக்கு….. அப்போது கல்யாணம் பிறகு உண்டான வாழ்க்கை தெரியாது. தலையாட்டி விட்டு இப்போது…அய்யோ…எப்படி மாதவன் அத்தானை…..

அஷ்வத்தை  பார்த்த உடனே பிடித்தது என்று இல்லை. பிடித்து விட்டது. எப்போது ….?கேட்டால் அவளுக்கே  தெரியாது. ஆனால் பிடித்து விட்டது.

வீட்டின்  நிலை தெரியும். அதனால் தன் மனதை அவனுக்கு தெரியப்படுத்தவும் இல்லை. அவனையும் தெரியவில்லை. அஷ்வத்தே  அத்தான்…..அப்படியே பறந்து வந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.

தன் அண்ணன் சொதப்பினதும் அஷ்வத்தை தான் பார்த்தாள். அப்போது அஷ்வத்தும் சம்பூர்ணாவையே பார்த்திருக்க….

ஒரு சிரிப்போடு….. “ படிப்பு எப்படி போகுது…..?” என்று  கேட்டவனை…..

“ உங்க பெண்டாட்டி கிட்டயாவது வேறு  ஏதாவது பேசுவிங்கலா…..? நீங்க காலேஜ் கட்டி விட்டு இருக்கிங்க…தெரிது. அத இப்படி பேசி தெரிவிக்க வேண்டாம்.

அவன் கண்ணுல ஏதாவது தெரியுதா….?முதல்ல ஏதோ ஆர்வமா பார்த்தானே….இப்போ அத்த பொண்ணு வேறு….ஏதாவது சொல்லுவான்னு பார்த்தா…..

மாதவன் சம்பூர்ணா பேச்சில் சிரித்துக் கொண்டே….அஷ்வத்திடம் ஏதோ சொல்ல வர…

கை நீட்டி தடுத்து…… “ அவ விளையாட்டுக்கு சொன்னா…..புரியுது.” அவர்கள் மூன்று பேரில் அன்னியோனியம், தானும் அவர்களின் ஒருவன். ஆனால் நான் மட்டும் தனியே…..அவனை இப்படி பேச தூண்டியது.

கமலக்கண்ணனுக்கு அஷ்வத்தின் பேச்சு என்னவோ போல் இருந்தது. பணத்திமிரில் பேசுகிறானோ என்று…

ஆனால் மாதவனுக்கோ…… “சரியா சொன்னிங்க அண்ணா…..உங்க அத்த பொண்ண பத்தி உங்களுக்கும் தெரியும்லே…..”

என்னடா நடக்குது இங்கு….?என்பது போல் இருந்தது அவர்களின் உரையாடல்….

“ வீட்டுக்கு போக வேண்டுமா…..?” மாதவனிடம் கமலக்கண்ணன் இதை எத்தனையாவது முறை கேட்கிறான் அவனுக்கே தெரியாது.

“ உனக்கு தாய் மாமன். எனக்கு பெரியப்பா…..அதுவும் அண்ணா பெரியப்பாவின்  உடல் நிலை பத்தி சொல்லியும் பார்க்காம இருக்குறது நல்லா இல்ல…..”

“ சரி…போகலாம். குட்டிம்மா எதுக்கு…..?” தாவணியை சரி படித்துக் கொண்டு அங்கு வந்த சம்பூர்ணாவை பார்த்துக் கொண்டே கேட்க…

“ அப்பத்தா தான் கூட்டிட்டு போக சொன்னாங்க……”

போட்டோவை பத்தி சொன்னதும் அழுகையோடு வயசுல அவன் செய்ததுக்கு, வீம்புக்கு நான் செத்தாலும் வராதேன்னு சொல்லிட்டேன்.  ஆனா இப்போ அவன் கையால கொல்லியிடாம என் கட்ட வேகாது…..” என்று சொல்லி தான் சம்பூர்ணாவை அனுப்பியது.

அதுவும் மாதவன் பெரியப்பா உடல் நிலை பற்றி சொன்னதும்….. “ நான் உடனே வர்றேன். நான் கள்ளுக்குண்டு கணக்கா இருக்க….என் மவன் இப்படி ஒரு நிலையா….?” தாய் உள்ளம் பதறியது.

மாதவன் தான்….. “ நான் எப்படியாவது பெரிப்பாவையும், அண்ணாவையும் அழச்சிட்டு வர்றேன்.” என்று சொன்னதும்…

பேரன் நினைவில்….. “ எப்படி இருக்கான்டா ராசா….?”மாதவன்  யார்….? என்று கேடகவில்லை.

“ உண்மையா ராசா கணக்காவே இருக்காரு…..பார்த்தா அசந்து போயிடுவிங்க…..சும்மா வெள்ளக்கார துரை மாதிரி இருக்காரு…..”

“ அவ அம்மா செவத்த தோள இருப்பாளோ….அதான் இவன் மயங்கிட்டான்.”

“ அப்பத்தா அவங்க இறந்தே போயிட்டாங்க…..உங்ம மாமியார் தனத்த காட்டாதிங்க…..?”

“ ஏன்டா உன் ஆத்தா கிட்ட நான் மாமியாராவா நடந்து இருக்கேன்.” அப்பத்தாவின் பேச்சின்  உண்மையில்…..

“ மன்னிச்சிக்க அப்பத்தா…நான் அப்படி சொல்லி இருக்க கூடாது. ஆனா நீங்களும் இறந்தவங்கல….. வேண்டாம் அப்பத்தா விட்டுடுங்க……”

“ புத்திக்கு புரியுறது மனசுக்கு புரியுறதுலேடா ராசா….அன்னிக்கி மட்டும் உன் அப்பன்….இல்லேன்னா….”

“ விடுங்க அப்பத்தா அது தான் நல்ல படியா முடிஞ்சுடுச்சிலே…..” என்ற  பேரனின் ஆறுதலில்…

“ சரி ராசா…நீ பெரியப்பாவையும், அண்ணாவையும் எப்படியாவது அழச்சிட்டு வந்துடு….நான் அதுக்குள்ள இந்த கிழவனை சரிப்படுத்திடுறேன்.” மகிழ்ச்சியான தருணங்களில் இது போல் தான் பேச்சும்மா பேச்சு இருக்கும்.

அப்பத்தாவின் திட்டப்படி திட்டத்தை  நிறைவேற்ற சம்பூர்ணாவோடு…தன் பெரியப்பா வீட்டுக்கு சென்றான் மாதவன்….

வருவதை முதலிலேயே சொல்லி விட்டதால்…. தந்தை மகன் இருவரும் இருந்தனர். தங்கை மகளை  பார்க்கவே அவ்வளவு ஆர்வம் காட்டிய ஜானகிராமன்…

தம்பி…மகன்….தங்கை மகன்….கூடவே சம்பூர்ணா கேட்கவும் வேண்டுமோ…வேலையாட்களை அதட்டி கொண்டு இருந்தார்.

“ பூ ஜாடியில ஏன் பூவே மாத்தல…..?”

“நேத்து தான் மாத்துன பெரியய்யா……” வாரம் இரு தடவை மட்டுமே மாற்றப்படும்.  அதனால் வேலையாள் அவ்வாறு சொல்ல….

“ ஏன் தினம் மாத்துனா  என்ன…..? போ…போ போய் மாத்து…..” ஜானகி ராமன்  அதட்டிய வேலையாளை கண் அசைவில் போய் மாற்று என்பது போல் ஜாடை காட்டினான் அஷ்வத்.

அந்த வீட்டில் இது வரை  உறவு முறை என்று ஒருவரும் வந்தது இல்லை.  தாயின் தகப்பனாரோடு தான் இவர்களின் வாசம்.  உறவு என்று முதன் முதலில்,

வாழ்க்கையில் இவ்வளவு உயர்ந்தும், தன் வளர்ச்சியை பகிர்ந்துக் கொள்ள இல்லாத வாழ்க்கை நரகம்.

ஜானகி ராமன் பணத்தின் பின் ஓடும் போது தெரியவில்லை. ஓய்ந்த போது அருகில் யாரும் இல்லை. இப்போது தன் ரத்த உறவு முறை வீட்டுக்கு வருவதில் அவருக்கு தலை கால் புரியவில்லை.

அஷ்வத்துக்கும் மனதுக்கு பிடித்த பெண் தன் வீட்டுக்கு வருவதில் மகிழ்ச்சி…..கூடவே வரும் காரணம்….

“  எதுக்கும் வலது கால எடுத்து வை  குட்டிம்மா…..” என்று சொன்னது சம்பூர்ணா காதில் விழுந்ததோ இல்லையோ கமலக்கண்ணன் காதில் நன்றாகவே விழுந்தது

யோசனையுடன்  மாதவனை பார்த்த வாறு கமலக்கண்ணன் வலது காலை எடுத்து வைத்தான்.

“ கமலா பெரியப்பாவுக்கு பொண்ணு  இல்ல….” மாதவனின் பேச்சு செல்லும் பாதை தெரிந்தாலும் அமைதியாகவே இருந்தான்.

“வா ராசா….வா ராசா…..” தன் அருகில் இருபுரத்தில் நின்ற இருவரின் கைய் பற்றி பேச…

மாதவன் மட்டுமே….அவரின் காலில் விழுந்து ஆசி வாங்கினான். கமலக்கண்ணன் ஒரு புன்சிரிப்பே…..

தன் தாய் பற்றி நினைக்காது அவரை மட்டுமே யோசித்த அவரின் சுயநலம் அவனுக்கு பிடிக்கவில்லை. சம்பூர்ணாவுக்கு அது எல்லாம் இல்லை போல்…

“ மாமா நானும் வந்து இருக்கேன். எனக்கும் கை இருக்கு. என்னையும் பிடிக்கலாம்.” என்று  சொன்ன தங்கை மகளின் பேச்சில்…

சிரிப்பு பொங்க…. “ வாடா ராசாத்தி…..” என்று அழைக்க…

மாதவனோ…. “ பெரிப்பாவுக்கு இரு கை தான் இருக்கு. நாங்க பிடிச்சி இருக்கோம். நீ வேணா அண்ணன் கைய்ய பிடிச்சிக்கோ…..”

கமலக்கண்ணனுக்கு தெரிந்து விட்டது….மாதவன் ஏதோ திட்டத்தில் இருக்கிறான் என்று…ஆனால் மற்றவர்கள்.

சம்பூர்ணாவோ….முகத்திலே தெரியுதோ…. முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.

அஷ்வத் அப்போது தான் மாதவனின் பொடி வைத்த பேச்சை கவனிக்க ஆராம்பித்தான். ஜானகி ராமனுக்குமே மாதவனின் பேச்சு அதிர்ச்சியை கொடுத்தது.

அவருக்குமே தன் மகனின் மனநிலை சிறிது தெரியுமே……அத்தை பெண் என்ற உரிமையில் ஏதாவது சொல்லி விட்டானா…..மகனை பார்த்தவருக்கு… அங்கும் குழம்பிய முகமே…..

அழைப்பிதழை கொடுக்காது…. “ பெரியப்பா நீங்க கல்யாணத்துக்கு வந்துடனும்.”

“எங்கேப்பா பத்திரிக்கை…..?” எப்போது என்று பார்க்கவே கேட்டது…

“ மகன் கல்யாணத்துக்கு உங்களுக்கு பத்திரிக்கை வைக்கனுமோ…..?” அஷ்வத்  பார்க்க…

“ பெரியப்பா நான் உங்களுக்கு மகன் இல்லையா…..?”

“ நீயும் எனக்கு பையன் தான்பா…..” வாய் பேசினாலும்….ஏதோ இருப்பது போல் அவருக்குமே….

“ என்ன கூப்பிடுறியே…பெரியவங்க ஒத்துப்பாங்கலா…..?” மாதவனிடம் ஜானகி ராமன் கேட்க…

“ எல்லாம் அப்பத்தா ப்ளான் தான்.”

“ என்ன ப்ளான்…..?” அஷ்வத் ஆராயும் பார்வையுடன் கேட்க… அய்யோ உளறிட்டோமோ…..

“ எங்க வீட்டு கிழவி ஆயிரம் ப்ளான் போடும்.நீங்க எந்த ப்ளான் கேட்குறிங்கன்னு தெரியல…இருந்தும் சொல்றேன். தாத்தாவ அவங்க சமாளிச்சிடுறாங்கலாம். உங்கல கைய்யோட கூட்டிட்டு வர சொன்னாங்க.” மூச்சு வாங்க சொல்லி முடித்தவன்…

“ வந்து இவ்வளவு நேரம் ஆகுது. குடிக்க கூட ஏதும் கொடுக்கலையே….கிராமம் கிராமம் தான்பா….ஏம்மா தேவத…..போய் ஏதாவது கொண்டா…..இப்பவே ப்ராக்ட்டிஸ் எடுத்தா மாதிரி இருக்கும்.”

அத்தானின் பேச்சில்…..ஏதோ புரிந்தவளாய் சம்பூர்ணா சமையல் அறை பக்கம் ஓடினாள்.

சம்பூர்ணாவின் தலை மறைந்ததும்….“ நான்  செஞ்ச துரோகத்தை என் மகன் செய்ய விட்டுடாதே…மாதவா…..உன் பேச்சு போகும் பாத புரியுது. வேண்டாம் விட்டுடு…..” பெரியப்பாவின் பேச்சில்…

“ என்னால  குட்டிம்மாவுக்கு துரோகம் செய்ய முடியாது பெரியப்பா…..”

“ என்ன சொல்ற மாது…..?” இது வரை வாய் திறவாத….கமலக்கண்ணன் மாதவனை கூர்பார்வையுடன் கேட்க…

“ அப்போ பெரியப்பா நிலையில் தான் நான் இருக்கேன்.” சொன்னவன் அவசரமாய்…

“ அய்யோ அப்படி பாக்காதிங்க.  மனசு மட்டும் தான் டச் பண்ணி இருக்கேன்.” மாதவனின் அந்த பேச்சு ஜானகி ராமன் மனதை  முள்ளாய் குத்தியது.

வயதில் செய்யும் ஒரு சில செயலின் வீரியம் அப்போது தெரிவதில்லை. வயதான பிறகு தன் சந்ததியர் வாயில் இருந்து வரும் போது….சரியாகவே குறி பார்த்து தாக்குக்கிறது.

அனைவருக்கும் குளிர்பானத்தை எடுத்து  வந்து கொடுத்த சம்பூர்ணா அனைவரின் முகமும் ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்து…

“ என்ன ஏதாவது பிரச்சனையா…..?”

“ பிரச்சனையாக பார்த்தது குட்டிம்மா  இப்போ இல்ல….லே மாப்பிள்ளை….” கமலக்கண்ணன் இந்த அழைப்பு அஷ்வத்தை பார்த்து சொன்னான்.

வாசலில் ஜானகி ராமனை அப்படி வீல் சேரில் பார்த்ததும் முதலில் ஓடி வந்தது ஷண்மதி தான்….

“ அண்ணே எப்படி அண்ணே இருக்க….?என்ன அண்ணா….இது….?” அவரின் வீல் சேரை தடவிய வாறே  கண்ணில் கண்ணீர் வழியே கேட்க…

“ முற்பகல் செய்தல்,  பிற்பகல் விளையும்…..”

“ அண்ணே,….” தங்கையின் கண்ணீரை துடைத்துக் கொண்டு இருக்கும் போது….

ம்…ம்  கணைக்கும் சத்ததில் நிமிர்ந்து பார்க்க…..வேங்கையன் அதே கம்பீரத்தோடு….

“ உடம்பு சரியில்லாதவன இப்படி தான் வாசல வெச்சி பேசுறதா…. மக்க மனுஷால் எல்லாம் வந்து இருக்காங்க பாரு…போய் அவங்க அவங்க வேலைய பாருங்க….” மற்றவர்களை அதட்டியவர் பெரிய மகனை பார்த்தாலும் பேசவில்லை. ஆனால் அஷ்வத்தை வாரி அணைத்துக் கொண்டார்.

“ அப்படியே சீம ராசா மாதிரியே இருக்க ராசா…..”

“ அவன் எனக்கும் பேரன் தான்.” கணவனின் பிடியில் இருந்து தன் பிடிக்கு கொண்டு வந்த பேச்சும்மா….அஷ்வத்தில் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்தமிட்டார்.

இந்த பாசம்…இந்த அன்பு…கண்ணீர் அனைத்தும் அஷ்வத்துக்கு புதியது. அவன் பழகிய  வட்டாரத்தில் அழுகை என்பது அவமானமாக கருதப்படுவது. ஆனால் இந்த கண்ணீர் அப்பத்தாவின் கன்னத்தில் அவன் முத்தம் இட….

சம்பூர்ணா எல்லோரும் அவனை சீம ராசான்னு சொல்றாங்கலே…தன் மாநிற கைய் பார்த்துக் கொண்டே ….

கருப்பு… வெள்ளை… படமா தெரிவோமோ… அஷ்வத் அவள் அருகில் வந்து….. “ டிக்கேஷனும் பாலும் கலந்தா  வர காபி எனக்கு ரொம்ப பிடிக்கும் குட்டிம்மா…..”

“ நான் குட்டிம்மாவா…? நான் குட்டிம்மாவா….?”

“நாளைக்கு தெரிஞ்சுடும்….” நாளை தான் மாதவனுக்கும் சம்பூர்ணவுக்கும் திருமணம் செய்ய உள்ளது.

அவளும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே….” பாக்க தானே போறிங்க…..உங்க காலேஜ் பசங்கலையே சும்மா தெரிக்க விட்டு இருக்கேன். நியாபகத்தில் வெச்சிகோங்க….”

“ம்…ம்…” இருவரும் புன் சிரிப்போடு பேசிக் கொண்டு இருப்பதை கவலையோடு பார்த்திருந்தார் வேங்கையன்.

“மாதவன் கூட படிச்சவங்க எல்லாம் வந்து இருக்காங்க…..” வெங்கட் ராமன் மகனின் தோழ…தோழியர்களை அழைத்து வர சென்று  இருந்தவர் வந்ததும்….

தன் மனைவி பார்த்து சொல்ல “மேல்  அறையில பசங்கல…தங்க வைங்க.கீழே பெண் பிள்ளைகளை தங்க வைங்க…..

கை பிசைந்துக் கொண்டு நின்று இருந்த செல்லாயியை பார்த்து…. “ என்ன பிள்ள  தலைக்கு மேல வேல இருக்கு…இப்படி நீ மச மசன்னு நின்னுட்டு இருக்க…..” மனைவியை அதட்டிக் கொண்டு இருந்தவர்.

அப்போது தான் தன் அண்ணாவை பார்த்து….” வாங்கண்னா…எப்படி இருகிங்க…..? என்ன அண்ணா மதனி இறந்தப்ப சொல்லி அனுப்பிச்சி இருக்கலாமுல…..” தம்பியின் பேச்சில்..

“ என் மேல கோபம் இல்லையாடா….?”

“ உங்கலாலே தான் எனக்கு செல்லாயி கிடச்சா…அப்போ கோபம் இருந்தது இப்போ இல்ல…..”

“ ஆமாம் மச்சான்….” சொன்னது வேறு யாரும் இல்லை  தங்கை கணவன் நல்லக்கண்ணு….. செல்லாயிக்கு பட்டணத்து வாழ்க்கை சரி பட்டு இருக்காது…

வெங்கடராமனை திருமணம் செய்ததே நல்லது என்று நினைக்க வைக்க வைத்திருந்தார் வெங்கட்டராமன்.

விடியலில் இரு மேடை போட்டு இருப்பதை பார்த்து வேங்கையன்….. “ யாரு போட சொல்லுச்சி….?”

“பெரிம்மா தாங்க…..” அப்போது தான் அங்கு வந்த பேச்சும்மாவை கை காட்டி விட்டான் அந்த வேலையாள்.

“ அப்போ செஞ்ச தப்ப இப்போ நாம செய்ய கூடாதுன்னு தான் இந்த ஏற்பாடு….”

மூடிய அறையில் குளித்து பழக்கப்பட்ட அஷ்வத்துக்கு,  கிணத்து அடியில் எப்படி குளிப்பது என்று பாடம் எடுத்து கொண்டு இருந்த சம்பூர்ணாவை பார்த்துக் கொண்டு சொன்ன மனைவியின் பேச்சு புரிவதாய்…

“ அப்போ மாது….”

“அவனுக்கு என்ன…..” மேல்  நோக்கி பார்த்த வாரு சொல்ல…

கட்டம் போட்ட பட்டு புடவையும் தலை நிறைய மல்லிகை பூவும்  வைத்துருந்தாலும், அந்த உடல்வாகும், கலரும், அடித்து சொல்லியது அப்பெண் வட நாட்டு பெண் என்று…

பட்டு வேஷ்ட்டி சட்டையில் முகத்தில் பூரிப்பு பொங்க அப்பெண்ணிடம்  பேசிக் கொன்டு இருந்த மாதவனை பார்த்த வேங்கையனிடம்…

“ நம்ம பசங்க வளந்துட்டாங்கன்னு புரியாது, பெரியவங்க…..நம்ம பேச்சு கேப்பாங்கன்னு நம்ம இஷ்ட்த்துக்கு முடிவு செஞ்சுடுறது. அப்புறம்…. வேண்டாங்க இத்தன வருஷம் என் பெரிய மவன நான் பிரிஞ்சு இருந்தது போதும். இனி ஒரு பிரிவு நம்ம குடும்பத்துக்கு  வரக்கூடாது.

பெரியவங்க  அவர்கள் பிழைதீர்த்துக் கொண்டார்கள் என்றால்….ஜானகிராமன் தன் தம்பி மகனின் மனது புரிந்து அவன் விரும்பிய வாழ்க்கை அமைத்து கொடுத்ததோடு, தன் மகன் விரும்பிய வாழ்க்கையும் அமைத்து கொடுத்து விட்டார்.

      நிறைவு

 

Advertisement