Advertisement

அத்தியாயம்….9

ஆயிஷா சொன்னது   போல் அனைத்தும் செய்து முடித்த சர்வேஷ்வர் ஆயிஷா  பத்திரிகைகாரர்களை சந்திக்கும் முன்,

“ பாத்து பேசு ஆயூ. இது உன்னோடது  மட்டுமான விஷயம் இல்லை.” சர்வேஷ்வர் சொன்னதும்

“ ஓ…. உன்னோடதும்   சொல்றியா…..?”

“ லூசு மாதிரி பேசாதே…..இன்னிக்கி வந்ததால் என் பேரு புதுசா கெடல.  இது நம்ம அபி சம்மந்தப்பட்டது பாத்து பேசு.”

“ இப்போ சொன்னியே நம்ம அபின்னு. இந்த வார்த்தைய நம்பலாம்மா…..?”  ஆயிஷா இப்படி கேட்டதும்….

சர்வேஷ்வர் தன் முகத்தில் எதையும் காட்டாது…..  “நீ தான் சொல்லனும். என்னை நம்பலாமா…..? வேண்டாமான்னு…..?”

“ நம்பறேன்.”

“ இந்த நம்பிக்கை  கொஞ்ச நேரம் முன் எங்கே போயிடுச்சி….ஆயிஷா…..?”

“ சர்வே…ஷ்.”

“விடு. ஆனா  உன் சூழ்நிலையில் நான் இருந்து இருந்தா, உன்ன முழுசா நம்பி இருப்பேன்.”

“சாரி சர்வேஷ்.”

“விடு. அவங்க காத்துட்டு இருக்காங்க வா. இன்னும் கொஞ்சம் லேட்டா போனா நாளைக்கும் அவங்களுக்கு தீணி கொடுத்தது போல ஆயிடும்.”

“ இனி அந்த பிரச்சனையே வராது சர்வேஷ்.” சொன்ன ஆயிஷாவின் முகத்தில் தெரிந்த தெளிவை பார்த்து….

“ஆயிஷா எது பேசுறது என்றாலும் பார்த்து பேசு. எனக்கு அபி மட்டும் இல்ல நீயும் முக்கியம்.”

“தெரியும் சர்வேஷ்.” இந்த வார்த்தையை சர்வேஷ்வரிடம் சொல்லவில்லை மனதில் நினைத்துக் கொண்டாள். அவனின்  கையை அழுத்தி பற்றி விடுவித்து விட்டு பத்திரிக்கைகாரர்களை நோக்கி சென்றாள்.

தன்னை பார்த்த பத்திரிகைக்காரர்கள், தங்களுக்குள்  குசும்பாய் சிரிப்பதை பார்த்தும் பார்க்காதது போல்….

“ என்னை  மதித்து இவ்வளவு நேரம் அமைதியா காத்திருந்ததுக்கு நன்றி.” தன் இரு கை கூப்பி வணங்கியவளின் செயலை பார்த்த பத்திரிக்கைகாரர்கள் முதல் போலவே  ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் முன் போல் அவர்கள் முகத்தில்  குசும்பு இல்லாது, குழப்பம் காணப்பட்டது.

“முதல்ல *****பத்திரிக்கையின் செய்தி தானே…பழைய பறவை, புதிய பறவைன்னு ,ரைமிங்கா எழுதுன்னது.”

எப்போதும் தங்களை பற்றி வந்த செய்திகளை  கண்டும் காணாது கடந்து விடும் ஆயிஷாவின் இந்த செயல் புதியதாக இருக்க….ஏதோ  வில்லங்கம் வரப்போகுதோ….? அந்த பத்திரிக்கைகாரர் என்னும் வேளையில்…..

அவர் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையாக ஆயிஷாவின் வக்கீல் அந்த இடத்துக்கு வந்தார்.சர்வேஷ்வருக்கே  ஆயிஷா என்ன செய்ய போகிறாள் என்று தெரியாத போது மற்றவர்களின் நிலை….

“ இவர் என் வக்கீல்” அவரை  அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவள், வக்கீலிடம்….

“ நான் சொன்ன படி தானே  டைப் பண்ணி இருக்கிங்க.” அவர் கொடுத்த பேப்பரை வாங்கி பார்த்துக் கொண்டே கேட்டு விட்டு….

அதில்  குறியிடப்பட்ட இடத்தில் தன் கையெப்பத்தை வைத்து விட்டு நிமிர்ந்த ஆயிஷா….

அனைவரையும் பொதுவாக பார்த்து….. “ இன்று  செய்திதாளில் வந்து இருக்கும் பெண்ணின் பெயர் அபிராமி.”

அவள் சொன்னது தான், தன் கையில் இருந்த பேசியில் பதிவு செய்ய வசதி செய்துக் கொண்டு இருந்த பத்திரிக்கைகாரர்களிடம்….

“ நீங்க தனியா எழுதவே வேண்டாம். என் வக்கீல எழுதி வந்து இருக்காரு. அதை எல்லோருக்கு ஒரு காபி கொடுக்க சொல்றேன்.” என்று சொல்லி முடித்தவள்.

அப்போது வேலையாள் கொண்டு வந்த காபி கோப்பையை பார்த்து…… “இப்போதிக்கு இந்த காபிய குடிங்க.” அனைவரும் குடித்து முடிக்கும் வரை அமைதி காத்து விட்டு பின்…

“ம் இப்போ பேசலாமா….? அபிராமி இவர் எழுதியது போல் அவ புது பறவை இல்ல. எனக்கு பழைய பறவை தான். என் தங்கை.”

பின்ட்ராப் சைலாண்ட் என்பார்களே….  அது போல் ஒர் சூழ்நிலை தான் அங்கு நிலவியது.

“நேற்று எனக்கும் அவளுக்கும் பிறந்த நாள். அதற்க்காக ஒன்றாய் பிறந்தோமுன்னு இல்ல.எனக்கு ஆறுவருடம் பின் பிறந்தாள். நேத்து போனது என் கெஸ்ட் அவுஸ். சகோதரியான எங்க பிறந்த நாளுக்கு என் இடத்தில் என் நண்பனோடு பிறந்த நாள் கொண்டாடினேன்.  இது என் தனிப்பட்ட விஷயம்.” மேலும் ஆயிஷா என்ன சொல்லி இருப்பாளோ….

புதிய,  பழைய பறவை, எழுதிய பத்திரிகைக்காரர் … “ பொதுவில் நடிக்கைன்னு வந்துட்டா நாங்க எழுத தான் செய்வோம்.”

அதற்க்கு உண்டான பதில் சர்வேஷ்வரிடம்  உடனடியாக வந்தது….. “ அப்படின்னு பார்த்தா ஆயிஷா மட்டும் தான் நடிக்க வந்து இருக்கா….அவ தங்கை பத்தி எழுத யாருக்கும் உரிமை கிடையாது.”  இதை சொல்லும் போது சர்வேஷ்வரின் முகத்தில் அப்படி ஒரு கோபம்.

“ சர்வேஷ் கூல். என்ன அமைதியா இரு இருன்னு சொல்லிட்டு நீங்க ஏன் டென்ஷன் ஆகுறிங்க. நான் பாத்துக்குறேன்.”

ஆயிஷாவின் பேச்சில் எப்போதும் இல்லாத ஒரு நிதானம். திரும்பவும் பத்திரிக்கைகாரர்களிடம்…

“சாரி அவர் வருங்கால மனைவி பத்தி தப்பா  செய்தி வந்ததில் அவர் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டார்.” இதை சொல்லும் போது ஆயிஷாவின் பார்வை முழுவதும் சர்வேஷ்வர் மீதே….

ஆயிஷாவின் இந்த பேச்சுக்கு….சர்வேஷ்வரின் முகத்தில்  எந்த மாற்றமும் இல்லை. அவன் இதை எதிர் பார்த்து இருப்பான் போல்…

அவள் பேசி முடிக்கும் தருவாயில்….இதழ் ஓரம் சிறு புன்னகை அவ்வளவே….நடிகன்டா….கை தட்டி சொல்ல தூண்டியது ஆயிஷாவுக்கு… இந்த செய்தி பத்திரிகைகாரர்களுக்கு  புதியது.

“இன்று வந்த இந்த செய்தியால்

இப்போ என் தங்கை ஹாஸ்பிட்டலில் இருக்கா….”

“வாட்…..?” சர்வேஷ்வருக்கும் இது புதிய செய்தி.

பதட்டத்துடன் பார்த்த  சர்வேஷ்வரை கண்ணில் அமைதியாக இரு கண் ஜாடை காட்டி விட்டு….

“ என் குடும்ப அமைதி கெட காரணமாக இருந்த இந்த பத்திரிகை மீது மானநஷ்ட்ட வழக்கு போட போறேன்.”

அப்போதும் அந்த பத்திரிகைக்காரன் சும்மா விடாது…

“ அக்கா  குடும்ப நடத்தி, தங்கை கல்யாணம் செய்துப்பாங்கலா…..அது போட்டதுக்கு மானம் போச்சின்னு அதுக்கு ஒரு நஷ்ட ஈடாம்…..?கேட்க நல்லா இருக்கு.” சர்வேஷ்வர் அவரை அடிக்கவே கை ஓங்கி விட்டான்.   அதற்க்கு மற்றவர்கள் கண்டனம் தெரிவிக்க.

“ சர்வேஷ்வருக்கு வந்தது நியாயமான கோபம் தான். தப்பு செய்யாதவங்க மேல் பழி விழுந்தா  கோபம் வர தானே செய்யும்.”

“தப்பு நடக்கலையா…..?” அங்கு இருந்த ஒருவர் கிண்டலாய் கேட்க.

“ தப்பு நடந்ததுக்கு உங்க கிட்ட ஆதாரம் இருக்கா…..?ஏதோ சொல்ல வந்த ஒருவரின் பேச்சை தடுத்து….

“ஆனா என் கிட்ட ஆதாரம் இருக்கு.”

சடுதியில் அவள்  எந்த ரூட்டில் போகிறாள் என்று புரிந்துக் கொண்ட சர்வேஷ்வர்….

“ ஆயூ வேண்டாம். போதும் இந்த பேச்சு வார்த்தை.” ஆயிஷாவை வேறு ஏதும் பேசாது தடுக்க பார்த்தான்.

அதற்க்குள் அங்கு குழுவி  இருந்தவர்கள்…. “ அது எப்படி S.R சார். ஆதாரத்த  மேடம் காட்டட்டும்.” கடைசியில்…

 “இருந்தா….” என்ற சொல்லோடு முடிக்க.

தன் முன் இருந்த  ஒரு கோப்பை எடுத்து….. “ இது என் மருத்துவ அறிக்கை.”

அதில் என்ன இருக்க போகுது….நடிகைங்க சொல்ற டிப்ரெஷன்னு இருக்க போகுது…..அவர்கள்  என்னும் வேலையில்….

“ எனக்கு H.I.V இருப்பதற்க்கான மருத்துவ சான்று. அப்படி பட்டவங்க கூட நீங்க சொன்ன உறவில் இருந்தா….அவங்களுக்கு என்ன ஆகுமுன்னு நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.  எப்போ வேணா சர்வேஷ்வர் மருத்துவ சோதனைக்கு தயாராய் இருக்கிறார். இப்போ சொல்லுங்க நான் மானநஷ்ட்ட வழக்கு போட தகுதி இருக்கா….?இல்லையா…..?

அங்கு இருந்த அனைவருக்கும்  என்ன சொல்வது என்றே தெரியவில்லை.இதை அவர்கள் சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

நக்கல் நைய்யாண்டி அனைத்தும் தான்டி, அந்த நோயின் வீரியம் தெரிந்தவர்கள் ஆயிஷாவை பாவமாக பார்க்க….

“ நீங்க பாவப்படும் அளவுக்கு நான் நல்லவ கிடையாது. இந்த நோய்  ரத்தம் ஏத்துனாங்க அப்படி…. இப்படின்னு சொல்லி தப்பிக்க விரும்பல….இது நான் செஞ்ச தப்பால் தான் வந்தது.

ஆனா நான் செஞ்ச தப்பு என் குடும்பத்தை  குறிப்பா என் தங்கைய பாதிக்க கூடாது. தப்பு செஞ்சவங்க  தான் தண்டனை அனுபவிக்கனும்.அதுக்கு தான் உங்கல நான் கூப்பிட்டேன்.”

இதோடு பேச்சு முடிந்தது போல் திரும்பவும் தன் இரு கை கூப்பி வணங்கி  அந்த இடத்தை விட்டு சென்றாள்.

அபிராமி பற்றி எழுதிய அந்த பத்திரிக்காரர்  முகம் முழுவதும் வியர்யின் துளிகள்.

“ஆயூ…. நிஜமா அபி தற்கொலைக்கு முயற்ச்சி செய்தாளா…..?”

“ இப்போ இவங்க நேரா  எங்கே போவாங்கன்னு நினைக்கிற….அவ சேர்த்து இருக்க மருத்துவமனைக்கு தான்.”

“ஓ ஷிட்….. எதுவும்  சீரியஸ் இல்லையே…..?” ஆயிஷாவின் “ இல்லை….” என்ற தலையாட்டலுக்கு பிறகு…

“உன்னோட தங்கையா அவ…..?என்ன இது பைத்தியக்கார தனம்….இதுக்கு போய்…..எது வந்தாலும் போஸ் பண்ண வேண்டாமா….?இப்படியா கோழையா இருப்பா….?” அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தால்…அந்த ஆதாங்கதில் கத்தினான்.

“அவ பேஸ்  செய்துப்பா…முதல்ல நீ பேஸ் வாஷ் பண்ணிட்டு வா…..இப்படியே  போனா… அபி மட்டும் இல்ல எங்க அப்பா கூட நீ தான் சர்வேஷ்வர் என்றால் நம்ப மாட்டார்.”

அவள் சொன்னதுக்கு  தகுந்தார் போல் தான் அவன் உடை ,தலை, இருந்தது.

எப்போதும் போல் தாய் காபி கொடுப்பற்க்கு முன்னவே…தந்தை செய்திதாளை தன் முன் போட்டு….” இது என்ன கூத்தூ…..?”

முன் எப்படியோ நேற்று நடந்த பிரச்சனையால் பதறி போய் தான்  செய்திதாளை தந்தையிடம் இருந்து பிடிங்கினான்.

அவன் பயந்தது போல் அபிராமியின் படம் பார்த்ததும்….குணாவுக்கு பேசியில்  கத்தி விட்டு…

“ஆயிஷா வீட்டுக்கு வந்துடு.” குணாவிடம் பேசி விட்டு கார் சாவீயை எடுக்கும் போது கை பற்றிய…

நாகேந்திரன்…. “யாருடா இந்த பொண்ணு.”

“புனிதமானவ வேண்டும் என்று  சொன்னிங்கலே….இவ புனித மானவ தான். ஆனா இந்த  சாக்கடை கூட அவ கலப்பாளா….தெரியல.” சொன்னவன்.

“ இவ தான் உங்க மருமகளா வரப்போறா…..ஆ முக்கியமானது. இவ ஆயிஷாவின் தங்கை.” தந்தையின் முகமாறுதலில்…

“ அயிஷா என் தோழி அவ்வளவு தான். அபி ஆயிஷாவின் தங்கை  என்பதால் தான் இந்த விளக்கம். அவ முன் எதுவும் பேசிட கூடாது.” மகனின் பேச்சில் அபிராமி தான் தன் மருமகள்.

மகனின் பேச்சில் நல்ல பெண் தான் போல். அது தான் செய்திதாளில் வந்ததும் இப்படி பதறுகிறான்.

நாகேந்திரன் அபிராமியை மருமகளாய்  ஏற்க தயாராகி விட்டார். அபிராமி மருமகளாய் போவாளா…..?

 

Advertisement