Advertisement

அத்தியாயம்….3

அந்த  மாலில்  அன்று வழக்கத்தை விட  கூட்டம் அதிகமாய் இருப்பதை பார்த்த அபிராமி,  தன் தோழி தேவியின் கைய் பிடித்து…..

“  இன்னொரு நாள் வரலாமா…..?” தேவி ஒத்துக் கொள்ள மாட்டாள் என்று தெரிந்தே ஒரு எதிர் பார்ப்பில் கேட்டாள். தேவி அவள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகள்.

அவள் நினைத்தது போலவே தேவி…. “இன்னிக்கி சனிக்கிழமை, இப்படி தான் கூட்டமா இருக்கும் வா…..” வம்படியாய்  அபிராமியின் கைய் பிடித்து அழைத்து சென்றாள்.

ஆற்காடு அப்படி ஒன்னும் கட்டுப்பட்டியான ஊர் இல்லை. ஆனால் சென்னை போல் இப்படி ஆடம்பரமான நகரமும் இல்லை.

வித விதமான உடையில் ஆணா ….?பெண்ணா…..? என்று உத்து பார்த்து தெரிந்துக் கொள்ளும் படி டையட் என்று  உடம்பை ஸ்லிம்மாக வைத்திருந்த பெண்கள், பெண்களோ என்று சந்தேகம் படும் படியான கூந்தலை வைத்திருக்கும் ஆணின் கரம் பற்றி… பேசிக் கொண்டு சென்று இருந்தார்கள் காதில் வைத்திருந்த ஹட்போனின் மூலம்.

லைப் ஸ்டைல் கடையின் முன் நின்று…. “வா போய் பார்க்கலாம்.” தேவி அழைக்க.

“வேண்டாம் தேவி பாக்கவே ரொம்ப விலையா இருக்கும் போல…..” அபிராமிக்கு ஆற்காடில் கூட  தோழி என்று சொல்லி கொள்ளும் படி ஒருவரும் இல்லை.

பதினான்கு வயது வரை சுதந்திரமாக வளர்ந்தாள் என்று சொல்ல முடியாது. ஆனால் ஆயிரம் கட்டு திட்டங்கள் இல்லை. அக்கா அப்படி செய்த பின்….

அதுவும் அக்கா போன அடுத்த நாளே இவள் பெரிய மனிஷியாகி விட. அப்பா “ இது எப்போ தன் தலையில் கல்லை தூக்கி போட போகுதோ…..”  அன்றிலிருந்து ஏகப்பட்ட கெடுபிடிகள்.

பெண்தோழி கூட வீட்டுக்கு வரக்கூடாது. போன் செல் இல்லை.  லேன் லைனில் மூலம் தான் அனைத்து பேச்சும். பாடத்தில் சந்தேகம் என்று ஒருத்தி போன் செய்தால் போதும்….

எதுவும் சொல்லவில்லை என்றாலும் அன்று அம்மா முகம் வாடி விடும். அதன் பின் தோழி என்று ஒருவரும் இல்லை. கோயில் அம்மாவோடு மட்டும்.

படிப்பு முடிந்து இடம் தழையாததால் தான் அம்மா, அப்பாவின் கருணை பார்வை தன் மீது விழுந்து உள்ளது.

சென்னை வந்த இந்த ஐந்து வருடத்தில் தேவியோடு நன்கு பழக்கம்.  தேவியில்லாது மற்ற பெண் பிள்ளைகளோடு பேசினாலும், இனி ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று  அவளுக்கு தெரியும். இருந்தும்….

தேவியின் முகத்தை பார்த்து ஏதோ நினைவில் மூழ்கி இருந்த அபிராமியின் கைய் பிடித்து அழைத்து செல்ல….

அங்கு ஹாங்கரில் மாட்டி இருந்த டாப்சின் விலை பட்டியலை பார்த்த அபிராமி, தேவியின் காதில்…. “ ரொம்ப அதிகமா இருக்குடி, வா போகலாம்.”  அடுத்த வாரம் அபிராமியின் பிறந்த நாள் அதற்க்கு துணி எடுக்கவே இந்த ஷாப்பிங்.

அபிராமி எடுப்பதாக இருந்தால் இப்போது தான் குரோம்பேட்டையில் அனைத்து கடையுமே வந்து விட்டதே, அதில் ஏதாவது ஒன்றில் எடுத்து இருப்பாள்.

தேவியின் பிறந்த நாளுக்கு அபிராமி சுடி  எடுத்து கொடுத்தாள். அதை ஈடு செய்ய பதிலுக்கு தேவி எடுத்துக் கொடுக்கிறேன் என்று இங்கு அழைத்து வந்து விட்டாள்.

அபிராமி கிசு கிசுப்பில் அவளை ஒரு பார்வை பார்த்த தேவி…. “ ஏன்டி இங்கு  துணி எடுக்கிறேன்னு சொன்னேனா…..?”

குழப்பமான முகத்துடன்… “ அப்போ எதுக்கு  இங்கு தள்ளின்னு வந்த…..”

அபிராமி பேச்சில் அவள்  கன்னத்தை தொட்டு செல்லம் கொஞ்சுவது போல்…. “ அய்யோ மாமி வர வர என் பாஷை  நீ நல்லா பேசுற போ…..” நெட்டி முறிக்க.

“அதை  விடு. வாங்காததுக்கு ஏன்டி இங்கு வரனும்.”

“ விண்டோ  ஷாப்பிங்ன்னா என்ன…..?” தேவியின் கேள்விக்கு,

“ என்ன…..?” கேள்வியை அவளிடமே திருப்பினாள்.

“ உன்ன நிறைய மாத்துனும்டீ. தோ பாரு விண்டோ  ஷாப்பிங்ன்னா…..கடை கடையா ஏறி , ஏறி இறங்கனும். பத்தோ இது நான் குறச்சி சொல்றேன். ஏறி இறங்கிய  பின், எதுவும் பிடிக்காம போய்….முதல் கடையில் பார்த்த டாப்பு தான் நமக்கு பிடிச்சி இருக்கும். அலைந்த அலச்சலில் வயிறு லேசா கப கபன்னு இருக்கும்.” தேவியை முடிக்க விடாது.

“ சாப்பிட போகனுமா…..?”

“ஏய் அதிகப்பிரசங்கி,  நான் சொல்றத முழுசா கேளு. இனி நீ சென்னை வாசி. அதனால இங்கு இருக்க சூட்சிமத்த புரிஞ்சிக்கனும். இங்கு எல்லாம் பசிச்ச உடனே சாப்பிட கூடாது.”

“ஏன்….?”

“காபி விலை நூத்திமுப்பது ரூபா.”

அபிராமி எதுவும் பேசவில்லை வாயில் மீது கைய் வைத்துக் கொண்டாள்.

“காபி விலையே இப்படின்னா அப்போ மத்த ஐட்டம் நினச்சி பாரு.”

“ இங்கு வந்தா தண்ணீ  மட்டும் தான் குடிக்கனுமா…..?”

“ஏய்…ஏய் அவசரப்பட்டு விலை கேட்காம வாங்கிட போற….ஏன்னா இங்கு அறுபது ரூபா தராம தண்ணீ பாட்டல் கொடுக்க மாட்டான்.”

“அ…ப்போ…”

“தண்ணியோட…. காபி விலை கம்மியா…அதனால ஒரு காபிய வாங்கிட்டு….ஷேரிங் ஒகே”

“ஓகே…ஒகே…”

“இது நல்ல பிள்ளைக்கு அழகு.”  அவள் சொன்னது போல் பத்து கடைக்கி அலையாது மூன்று கடைக்கு அலைகழித்த பின்…

திரும்பவும் க்ரோவுன் ப்ளோரில் வந்து ஒரு கபி வாங்கி ஷேர் செய்து கொடுத்தவள்.

“மட மடன்னு குடிக்க கூடாது. சுத்தி முத்தி பார்த்து…. கொடுத்த காசுக்கு ஏசிய அனுபவிச்சி, சுத்தன சுத்தலுக்கு காலுக்கு ரெஸ்ட் கொடுக்க, நிறுத்தி நிதானமா குடி.”

சொன்னவள் அப்படி செய்யாது…..கையில் வைத்திருந்த காபியை டேபுளில் வைத்து விட்டு…..

“ஏய் வாடி…. நாம போன  லைப் ஸ்டைல் கடைக்கு,   S.V சார் போனதை பார்த்தேன்.” தேவி சொன்னது போல்  காபியை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கும் பொருட்டு காபியின் அளவு வாயில்  குறைவாக இருந்ததால்,

புரை ஏறும் போது  அவள் உடுத்தி இருந்த துணி பாழாகாது தப்பியது. துப்பாடாவை கொண்டே….வாயிலின் அருகில் படிந்திருந்த காபியை  ஒத்தி எடுத்தவள்,

“ நடிகர் S.V யா…..?”

“பாரேன் உனக்கே தெரியுது. அவரே தான்.” திரும்பவும் அபிராமி சொன்னது போல் அவளை தள்ளிக் கொண்டு போனாள்.

எனக்கே தெரியுதா…..? பழைய நினைவு மனதில் ஓட…அவள் எங்கு அழைத்து செல்கிறாள் என்று  அவள் உணரும் முன், லைப் ஸ்டைல் கடையின் நுழை வாயில் அருகில்.

சுத்தி வயது வித்தியாசம், ஆண், பெண் பேதமின்றி…இது வரை நாகரிகத்தின் மொத்த உருவம் நாங்கள் என்று  நடந்துக் கொண்டவர்கள், அவனுடன் ஒரு செல்பி எடுக்க கூட்டத்தில் அடித்து பிடித்து அவன் அருகில் செல்ல இருந்தவர்களை…

கருப்பு சபாரி போட்டிருந்த நான்கு பாதுகாவலர்கள் அவன் அருகில் செல்ல விடாது,  நான்கு பக்கமும் காவல் இருக்க,

அவனோ…. “பேன்ஸ்…..”  என்று சொல்லி அனைவருக்கும் ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டவன்…. “ சாரி என் பிரண்ட்டுக்கு கிப்ட் கொடுக்க  ட்ரஸ் எடுக்க வந்தேன். கொஞ்சம் எடுக்க விடுங்க, பிறகு ஆட்டோகிராப், செல்பி, ஒகே.”

அங்கு இருந்தவனில் ஒருவன்… “ கிப்ட் ஆயிஷா மேடமுக்கா சார்…..?”

“ உன்னோட கெஸ் சரி.” உண்மையில் ஆயிஷாவுக்கு ட்ரஸ் எடுக்கவே இங்கு வந்தான்.

போனவாரம் அவளின் பேச்சின் மூலம் தான் அவளின் பிறந்த நாள்  அவனுக்கு தெரியும். இது வரை அவள் பிறந்த நாளே கொண்டாடியது இல்லை.

அதற்க்கு  சர்வேஷ்வர் கிண்டலாக….. “ உன் வயது  ஏறுவது தெரிய போகுதுன்னு தானே கொண்டாடுவது இல்லை.” இப்படி நிறைய தடவை கேட்டு இருக்கிறான்.

அதற்க்கு பதிலாய் ஆயிஷாவிடம் ஒரு தோள் குலுக்கலே….சர்வேஷ்வர் ஆயிஷாவிடம் எதை பற்றியும் தூண்டி துருவி கேட்டது  கிடையாது. அதனால் தான் அவர்களின் நட்பு இத்தனை ஆண்டு நீடிக்கிறது.

போன வாரம் தான் அவள் கொண்டடாமல்  இருப்பதற்க்கு காரணம் சொன்னாள். “ அன்று தான் என் தங்கையின் பிறந்த நாளும்.”

“ஆனா …” ஏதோ நினைவு வந்தவனாய் இழுக்க….

“ட்வீன்ஸ் எல்லாம் இல்லை. எனக்கும் அவளுக்கும் ஆறுவயது வித்தியாசம். காலையில பாயசோத்தோட தான் எங்க பிறந்த நாள் தொடக்கம் இருக்கும்.”

“உனக்கு உன் தங்கைன்னா  ரொம்ப பிடிக்குமோ…..?”

“ம்…” ஒரு விரக்தி சிரிப்பை உதிர்த்தவள்.

“ எனக்கே அது இப்போ தான் தெரியுது. இஸ் டூ லேட் ”

“ஏன் அப்படி சொல்ற….?உனக்கு தான் இப்போ அவ எங்கு வேலை பாக்குறான்னு தெரியும்ல….   அவளுக்கு ஏதாவது கிப்ட் வாங்கிட்டு போய் அன்னிக்கி புல்லா அவ கூட டைம் ஸ்பென் பண்ணு.”

சர்வேஷ்வர் பேச்சில்….. “என் கிட்ட பேசுவாளா…..?” ஆர்வத்துடன் கேட்டவளிடம்…

“ அவ இந்த ஜெனரேஷன். கண்டிப்பா உன்ன மன்னிப்பா…. ஏதாவது வாங்கிட்டு அவள போய் பாரு.”

பிறந்த நாளுக்கு அவள் தங்கைக்கு இவள்  வாங்கி கொடுப்பாள். இவளுக்கு நினைத்ததும் இங்கு வந்து விட்டான்.

ஆயிஷாவுக்கு ட்ரெஸ் செலக்ட்  செய்ய சர்வேஷ்வருக்கு அரைமணி நேரம் பிடித்தது. அவ்வளவு நேரமும், ரசிகர் கூட்டம் இவனை பார்க்க அந்த கடையின் முன் கூடி இருந்தனர்.

ஷாப்பிங் முடித்து வந்ததும்,  காத்திருந்த அனைவருக்கும் ஆட்டோ கிராப் போட்டு கொடுத்து நெருங்கி வந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண்டு இருந்தாலும், அந்த ப்ளோர் மூலையில் இரு பெண்களின் செய்கை அவனுக்கு வித்தியாசமாக பட்டது.

ஒரு பெண் இங்கு வர அவள்  கை பிடித்து இழுப்பதும்,மற்றொரு பெண் மறுப்பதும், அவனுக்கு  சுவாரசியம் கூடியது.

தன் பாதுகாவலர்களிடம்  ஏதோ சொல்ல….அவன் அபிராமி, தேவியின் அருகில் சென்று  ஏதோ பேசினான்.

அவன் பேச்சுக்கு தேவியின் முகம் சந்திரனாய் ஜொலித்தது என்றால், அபிராமியின்  முகம் விளக்கெண்ணை குடித்தது போலானது.

அந்த பாதுகாவலன் பேச்சை கேட்டதும்,  தேவி அபிராமி பேச்சை கேட்பதாய் இல்லை. “ எவ்வளவு பெரிய ஸ்டார். நாம  கூச்சத்துல ஒதுங்கி நிக்கிறோமுன்னு அவரே கூப்பிட்டு அனுப்பி இருக்காரு…பெரிய மனுஷன் பெரிய மனுஷன் தான்னு சும்மாவா சொன்னாங்க.”

சர்வேஷ்வர் செய்லில் புலங்காகிதம் அடைந்தவள், எப்போதும் போல் அபிராமியின் கை பிடித்து இழுத்தாள்.

“ நீ போவதுன்னா போ….”

“சரி போடி….” அந்த பாதுகாவனுடன்  தான் மட்டும் நடையை கட்ட திட்ட மிட்டாள். ஆனால் அந்த  அவனோ…

“ சார் முக்கியமா எல்லோ சுடிதார் பெண்ணை தான் அழைத்து வர சொன்னார்.”

தேவி இப்போது  அபிராமியின் ட்ரைஸை உத்து பார்த்தாள். அபிராமி இந்த துணி உடுத்தும் போது எல்லாம்….

“ அம்மனுக்கு கூழு ஊத்த போறியா…..?” எத்தனை தடவை கிண்டல் செய்து இருக்கிறாள். இப்போது அந்த துணி இவளை பார்த்து கிண்டல் செய்வது போல் தெரிந்தது தேவிக்கு,

“உனக்கு S.V சாரை முன்னவே தெரியுமா…..?” தேவி சந்தேகத்துடன் வினவ.

“தெரியாது…..” என்பதையே கம்பீரத்துடன் சொல்லும் அபிராமி…இந்த…. “தெ…ரி…யா…து.” நான்கு திக்கலில் சொல்லி முடித்தாள்.

“அப்போ வா…..”

“அந்த ஆள பாக்கனுமுன்னா நீ போ, நான் வரல…..” அபிராமி அந்த ஆள் என்ற வார்த்தை சொன்னதும்,  இத்தனை வருட முதலாளி விசுவாசத்தில் பாதுகாவலன் அபிராமியின் கை முறுக்கி இழுத்து சென்றான் S.V சாரின் முன்.

அப்போது தான் ப்ளீங்ஸ் மாலுக்கு S.V சார் வந்து இருக்கிறார் என்று கேள்வி பட்ட மீடியாகாரர்கள் அங்கு வர…

தன் பாதுகாவலன்  அந்த பெண்ணின் கை பிடித்து இழுத்து வந்த காட்சியை பார்த்து….. “இடியட்….” திட்டியவன்.

கையில்  கேமிராவோடு அந்த ப்ளோருக்கு வந்த பத்திரிக்கைகாரர்களை  பார்த்ததும்…. இரு பெண்களையும் காட்டி…. “சேப்….” என்று கத்தினான்.

சேப் என்றால் என்ன அர்த்தம் என்று புரிந்த அந்த நான்கு பாடிகார்ட்டும் இருபெண்களின் முகம்  தெரியாது முகத்தை மறைக்க…

அதில் அபிராமி அதை விளக்க பார்ப்பதை பார்த்து அவளின் காதுக்கருகில்…. “  அந்த பத்திரிக்கை காரன் படம் பிடித்தால், எனக்கு ஒன்னும் இல்ல. எத்தனையோ கிசு கிசு, அதில்  இதுவும் ஒன்னுன்னு துடச்சி போட்டு போயிட்டே இருப்பேன். நீங்க எப்படி…..?” அதை கேட்டதும், நகர்த்த பார்த்த கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

தேவியோ….. “ அய்யோ என் அப்பா பார்த்தா என்ன உப்பு கண்டம் போட்டுடுவார்.” என்று  சொன்னவள்…

பின் ஏதோ நினைத்து…. “ ஓ உனக்கு உப்பு கண்டமுன்னா என்னன்னு தெரியாதுல….உன் அய்யராத்து பாஷையில்  வடகம் போட்டுடுவார் அபிராமி வடகம் போட்டுடுவார்.”

அபிராமி பெயர் எங்கோ…தேவியின் அய்யராத்து என்ற வார்த்தை  துணை சேர்க்க….சர்வேஷ்வரின் கை தானாக எல்லோ சுடி பெண்ணின் தோள் மீது    படிந்தது. செய்தியார்களின் கேள்விக்கு பதில் அளிக்காது பாதுகாப்பாக தன் சொகுசு காரில் ஏறியதும்…

ட்ரைவரிடம்….  முகத்துணியை விலக்கிய அபிராமியை பார்த்துக் கொண்டே “ஆயிஷா வீட்டுக்கு போ….” என்று சொன்னான்.

“சார் நடிகை ஆயிஷாவா…..? அய்யோ.” தேவிக்கு மகிழ்ச்சி பிடி படவில்லை.

“நான் இங்கேயே இறங்கிக்கிறேன்.”  அபிராமியால் காரின் கதவை திறக்க முயற்ச்சி மட்டுமே  செய்ய முடிந்தது.

“ இன்னும் கொஞ்ச நேரம் தான்.  ஆட்ட மேடிக்க திறக்கும்.”

“நான்  வரல…..”

“எங்கே வரல….?”

“நீங்க எங்கேயோ போகனுமுன்னு சொன்னிங்கல…அங்கே…..” அபிராமியின் பேச்சு சர்வேஷ்வருக்கு சிறுபிள்ளை தனமாகவே தெரிந்தது.

தாயிடம் கோபித்துக் கொண்டு அவளிடம் போகாது இருக்கும் குழந்தை போல்….

சிறிது நேரத்துக்கு எல்லாம் ஆயிஷாவின் இல்லம் வந்து விட. கார் நின்றதும் அவன் சொன்னது போல் ஆட்ட மேடிக்காக காரின் கதவு திறந்தது.

இப்போது காரில் இருந்து இறங்காது அப்படியே அமர்ந்து இருந்தவளை பார்த்து புன்னகை சிந்திக் கொண்டே….

தேவியிடம்….. “ ஆயிஷா மேடத்தை பாக்க நீங்க வாம்மா.” சொன்னவனின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில்… ஏதோ இருக்கு.

பாவி எனக்கு S.V  தெரியுமுன்னு சொல்லவே இல்லையே….சும்மாவா சொன்னாங்க. கமுக்காம இருக்குறவங்கல நம்பவே கூடாதுன்னு.

மனிதன் மனம் குரங்கு தானே…..ஒரு நொடியில் ஓராயிரம் சிந்தனை வந்து போகும். இத்தனை நேரத்துக்குள் தேவியின் கற்பனையின் முழுவடிவமாக அவள் மனதில் உருப்பெற்ற கதை.

அபிராமியும், S.V  சாரும், லவ் பண்ணி இருக்காங்க. ஆயிஷா மேடத்தை வைத்து வந்த  கிசு கிசுவால் ப்ரேக்கப் ஆயிடுச்சி. ஆனா S.V சார் அபிராமிய விடுவதாக இல்லை.

அவர்களை வைத்தே சமாதானப்படுத்த தான் S.V  சார் அபிராமியை இங்கு அழைத்து வந்து இருக்கார்.

அதனால் தேவி  S.V சாரிடம்….. “ நான் அபி கிட்ட பேசுறேன் சார்.”

“புதுசா என்ன இது அபி. என்  பெயரை நீட்டி முழக்கி தானே கூப்பிடுவாள். S.V  சாரின் முன் அபிராமிக்கும் தனக்கும் எப்படி பட்ட நட்பு  என்று நிருபிக்கவே இந்த பெயர் சுருக்கம்.

S.V  சாரிடம் வாக்கு கொடுத்தது போல்…. “அபி ஒரு பிரபலமானவரை  லவ் பண்ணா, இது மாதிரி பிரச்சனை வந்து தான் ஆகும். இது லவ் பண்றதுக்கு முன்ன யோசித்து  இருக்கனும். சார் தான் ஆயிஷா மேடத்துக்கு முன்னவே க்ளியர் பண்றேன்னு சொல்றாருலே….அப்புறம் என்ன…..?”

அபிராமிக்கு தேவியின் பேச்சு சுத்தமாக புரியவில்லை. சர்வேஷ்வர் ஆராம்பத்தில் குழம்பினாலும், முடிவில்  அவள் எதை நினைத்து சொல்கிறாள் என்று புரிய, தந்தை அன்று சொன்ன புனிதமான பெண் வந்து போன செகன்டில், திரும்ப தன் தந்தையிடம் சொன்ன அதுக்கு நாமும் அப்படி இருக்குனும்லே என்ற நினைவும் கூடவே எழுந்தது.

 

Advertisement