Advertisement

அத்தியாயம்….7

“ பெரியவனே…பெரியவனே கேட்டியா சேதி….?கெடான்னா என்னன்னு கேட்குறா…..இவ அந்த கங்காதரன் மகள் தானா….. நல்லா தெரியுமா…..? சாட கூட வேறாப்பல இருக்கு….” இன்னும் என்ன சொல்லி இருப்பாரோ….

தன் அறையில் இருந்து விரைந்து வந்தவன்….. “ உனக்கு கெடான்னா என்னன்னு தெரியாதா….? நீ இந்த ஊரு தானே…..இல்ல நேத்து தான் சீமையில் இருந்து இந்த ஊருக்கு வந்து குதிச்சியா…..?”

அவன் கேட்பது ஒரு வகையில் நியாயமான கேள்வி தான்.  ஆடு வளர்ப்பு என்பது இவர்கள் தொழில்.

ஆனால்  அந்த ஊரில் மத்த தொழில் செய்பவர்கள்  வீட்டில் கூட, இரண்டு ஆடாவது வளர்ப்பர். அப்படிபட்ட ஊரில் பிறந்து கெடா என்று கேட்டால் கோபம் வரத்தானே செய்யும். இவ வந்ததில் இருந்து ஏற்கனவே ஆத்தா ஆடுது . இவ பேச்சு அதுக்கு சலங்க கட்டுனாப்பல தானே இருக்கு.

அம்மா…மகன்  இவ்வளவு பேசுகிறார்கள். பேச்சின் நடுவே கெடான்னா என்ன என்று ஒரு வார்த்தை கூட சொல்லாது திட்ட….இப்போதும் அவளுக்கு புரியவில்லை.

அந்த ஊரில் முக்கால் வாசி பெண்கள் ஓய்வு நேரத்தை…பூந்தோட்டத்தில் பூக்கள் பறிப்பதற்கோ…

அறுவடை சமயம் என்றால் வயலுக்கோ….அதுவும் இல்லை என்றால் வீரப்பாண்டி செய்யும் ஏற்றுமதி, இறக்குமதியில் ஒரு  வேலையான கறியை ஒரே அளவாய் வெட்டி டின்களில் அடைத்து கொடுப்பார்கள்.

இந்த வேலை  செய்பவர்கள் எல்லாம்  அவர்கள் இல்லாத பட்ட ஜீவனத்துக்கு  இல்லை. வசதி படைத்த வீட்டில் இருக்கும் பெண்கள் கூட, தங்கள் ஓய்வு நேரத்தை பணமாக்கி கொள்வார்கள்.

அப்படி பட்ட ஊரில் பிறந்தவள் கேட்கும் கேள்வியா இது…..? அவர்களுக்கு என்ன தெரியும் அவள் வளர்ந்த சூழ்நிலை.

இந்த ஊரில் பிறந்து அடுத்த ஊரில் கல்லூரியில் பயின்றாலும், போக வர கார் தான்.அவள் அறைக்கு குளு குளு சாதனம். அவள் மட்டும் பார்ப்பதற்க்கு என்று தனியாக அவள் அறையில் தொலைக்காட்சி பெட்டி. இருந்த இடத்தில் சாப்பாடு. அப்படி வசதியாக வளர்ந்த பெண்.

எந்த வகையிலும் பொறுத்தம் இல்லாத இந்த வீட்டில் இருவாரம் வாசம். ஒரு சொல் கேட்டு இல்லை . புஷ்பவதியின் வாய் மூலம் திட்டுவதற்க்கு இத்தனை சொல் இருக்கா….?அறிந்துக் கொண்டு விட்டாள்.

இத்தனை  நாள் தான் தைரியமானவள் என்று நினைத்து  இருந்தவளை, தன்னிடம் இருந்தது தைரியம் இல்லை.  என் குடும்பம் என்னை விட்டு விட மட்டார்கள் என்ற  நம்பிக்கையில் தான் நான் இத்தனை நாள் கடந்து வந்து இருக்கிறேன்.

கோயிலில்  தன்னை விட்டு போனாலும், ஏதாவது செய்து தன்னை இங்கு இருந்து கூட்டிட்டு போவாங்க….என்ற நம்பிக்கை, நாள் போக போக ஆட்டம் கண்டதில், மனதில்  தைரியம் இருந்த இடம் காணாமல் ஓடி போயின.

பேச்சே வாங்கி இராத போது எங்கு இருந்து அடி வாங்கி இருக்க போகிறாள். அப்படி பட்டவளுக்கு வந்த முதல் நாளே இடியென விழுந்த அடிகள் …

இது போல் அடி  மேல் அடியாக, அவள் மேல் விழுந்ததில் அவள்  மொத்தமாய் பயந்து போய் விட்டாள்.

அந்த பயத்தின் விளைவாய்…அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கும் நிலையில் மதி நிற்க. அவர்கள் கெடாவுக்கு அர்த்தம் சொல்லி விட்டு திட்ட கூடாதா…. என்று நினைக்கும் நிலையில்   இருந்தாள்.

பயந்துக் கொண்டே  …. “சத்தி…யமா…எனக்…கு தெ..ரியா..து.” அவள் சொல்வதே அது உண்மை என்று வீரப்பாண்டிக்கு தெரிந்தது.

கூடுதலாக அவள் முகத்தில் தெரிந்த பயம்….கண்ணை மூடி தன்னை நிலைப்படுத்தியவன்…

“ உங்க வீட்ல கவுச்சி சாப்பிடுவிங்க தானே …..?” நல்ல வேலை அதற்க்கு அர்த்தம் அவளுக்கு தெரிந்தது.

“ம்….” தலையாட்டினாள்.

“அப்போ எந்த ஆட்ட அடிப்பதுன்னு வீட்ல பேசிக்க மாட்டாங்கலா…..?”

“அதுக்கு எதுக்கு ஆடு அடிக்கனும்…..?” மெல்லிய குரலில் கேட்டாள்.

இவள் என்ன பேசுவது கூட இப்படி பதுசா பேசுறா….? நம்ம வீட்டு பெண்கள் முன் கட்டில் இருந்து “ஏலே…அங்க  என்னலே செய்யிற…வேல செய்யாம வெட்டியா பணம் வாங்கிட்டு போகலாமுன்னு பாக்குறியாலே….? புரத்தால காய்கறி பரிப்பவர்களை  சத்தம் போட்டு வேலை வாங்குவார்கள்.

அதுவும் கறி சாப்பிட ஆட வெட்டனுமான்னு கேட்குறா….” ஒரு சமயம் இவங்க வீட்ல கோழி கறி தான் சாப்பிடுவாங்கலோ….”

அந்த ஊரில் கோழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆடு தான். இருந்தும்…. “ உங்க வீட்ல கோழி கறி தான் சாப்பிடுவிங்கலோ….?”

அதற்க்கும் இல்லை என்று தலையாட்டியவளிடம்….அதற்க்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாது விழித்து நின்றான் வீரப்பாண்டி.

ஏதோ கோபமாய் புஷ்பவதி  பேசும் முன் கோசலை…. “ ஆட்டு கறிய  கடையில் இருந்து வாங்கிவிங்கலோ…..?” சரியாக கணித்து கேட்டார்.

அதற்க்கு “ ஆமாம்…ஆமாம்.” என்று பலமாக தலையாட்டல்.

“அடியாத்தி….” இப்படி ஒரு வீடா என்பது போல் மோவாட்டில் கை வைத்து அதிசயத்து பேசினார் புஷ்பவதி.

பொதுவாக அவ்வூரில் ஆடு வளர்க்கவில்லை என்றாலும், வீரப்பாண்டி பட்டில் இருந்து நல்ல கெடா ஆடாக வாங்கி தான் அடிப்பர்.

தேவைக்கு மீதம் இருப்பதை உப்பு கண்டம்  போட்டு வைப்பர். அதனால் அவ்வூரில் ஆடு கறிக்கடையே இல்லை. அடுத்த ஊரில் தான் இருக்கிறது.

இவ்வளவு கேட்பவர்கள் கெடான்னா என்னன்னு இன்னும் சொல்லலையே…. முதல்ல அவுங்க என்னவோ சொன்னாங்கலே…சூப்பு…மூள ஒரு சமயம் ஆடு தான் கெடவா…..? ஆ அந்த கறிய பத்தி தானே  விசாரிச்சிட்டு இருக்காங்க…..

ஒரு யூகத்தில்…. “ கெடான்னா ஆடா அம்மா.” கோசலையை பார்த்து கேட்டாள்.

“ஆமாம் கண்ணு .” என்ற கோசலையிடம் புஷ்பவதி…

“ கொஞ்சுனது போதும். எப்படி பதமா செய்யனுமுன்னு சொல்லி  குடு.” என்று தன் நாத்தனாரிடம் சொன்னவர்….

“ தோ பாரு சொல்றத கவனமா கத்துக்க. இனி நீ தான் இது எல்லாம் செய்யனும்.”

“சரி…சரி….” என்று பலமாக தலையாட்டினாள்.

வீரப்பாண்டிக்கு  இவள் செய்தா மாதிரி தான். அவன் சந்தேகத்துக்கு ஏற்பவே… கோசலையும், மதியும் பின் கட்டுக்கு போன  கொஞ்ச நேரத்துக்கு எல்லாம்….

கோசலை ஓடி வந்து…. “ அப்பூ அப்பூ மதி மயக்கம் போட்டு விழுந்துடுச்சி…..”

அந்த நேரம் வீரப்பாண்டியனோடு  சரவணனும் இருந்தான். இருவரும் ஓடி போக….இவர்களுக்கு முன் யசோதா அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவள் மயக்கத்தை  தெளிய வைக்க முயற்ச்சித்துக் கொண்டு இருந்தாள்.

“யசோ கொஞ்சம் தள்ளு….” அவளை நகர்த்தி அந்த  இடத்தில் தான் அமர்ந்து தண்ணீர் தெளித்ததோடு இரு கன்னத்திலும் மாறி மாறி தட்டவும் தான் கொஞ்சம் சுரணை வந்தது மதிக்கு….

கண் திறந்ததும் முக அருகில் தெரிந்த முகம் வீரப்பாண்டியன் முகம் தான். வீரப்பாண்டியனுக்கு கண் எப்போதும் சிவந்து தான் இருக்கும்….

மதியை பொறுத்தவரை கோபம் வந்தால் கண் சிவக்கும். இது தான் அவள் படத்தில் பார்த்ததும்,  கதையில் படித்ததும். மிக அருகில் அவன் சிவந்த கண் பார்த்த மயக்கத்தில் எங்கே மீண்டும் மயக்கத்துக்கு சென்று விடுவோமோ….பயந்தாலும்…

“ ரத்தம் பார்த்து பயந்துட்டேன். நான் வேணுமுன்னு எல்லாம் விழல.” வீரப்பாண்டி பின் நின்ற புஷ்பவதி அதை தான் சொல்ல முனைந்தார். அதையே மதி சொல்லவும்…

“இதை தான் எங்க ஊருல, எங்க அப்பன் புதருக்குள்ள இல்லேன்னு சொல்லுவாங்க….வேல செய்யாம இருக்க என்ன என்ன மாயஜாலம் எல்லாம் செய்யிறா… வேலைக்கே இப்படின்னா மத்ததுக்கு என்ன என்ன செய்வா….? இத தான் கோத்திரம் அறிஞ்சு பொண்ணு எடு. பாத்திரம் பார்த்து பிச்சை போடுன்னு சொல்லுவாங்க.”

“ இதுவும் உங்க ஊருல தான் சொல்லுவாங்கலா ஆத்தா…..?” எப்போதும் மற்றவர்களை ஏதாவது சொல்லி சிரிக்க  வைக்கும் சரவணன் இப்போது வீட்டு சூழ்நிலையை மாத்த விளையாட்டாக பேசினான்.

இங்கு வந்ததில் இருந்தே   மதியின் முகத்தில் சிரிப்பே பார்த்து இராதவர்கள் சரவணனின் இப்பேச்சில் இதழ் விரித்து லேசாக சிரித்து வைத்தாள்.

அந்த லேசான நகைக்கே….இடது கன்னத்தில் கொஞ்சம் குழி  விழுந்ததோ….மயக்கம் தெளிய வைக்க மதியின் அருகில் அமர்ந்த வீரப்பாண்டி… மதியின் மயக்கம் தெளிந்தும் எழாது இருந்ததால், அந்த சிரிப்பில் அவன் மயங்கி தான் போனான்.

மதிக்கு ஏனோ சரவணனை பார்க்காது பிடித்து விட்டது எனலாம். காரணம்  கோசலை அறையில் இருந்த போது சரவணன் கேட்ட “மதனி எங்கே…..?” அந்த வார்த்தையாக  கூட இருக்கலாம்.

வீரப்பாண்டி போல் முரட்டு தோற்றம் தான் சரவணனுக்கும்….ஆனாலும் அதையும் தான்டி ஒரு தோழமை அவன் முகத்தில் இருந்ததாலோ….இல்லை இது போல் சிறு சிறு பேச்சாலோ…. தெரியாது.

மொத்ததில் அந்த வீட்டில்  கோசலைக்கு அடுத்த படியாக பிடித்த நபர் யார்  என்று மதியிடன் கேட்டால்….சரவணன் பக்கம் கை காட்டுவாள்.

“ ஒரு  ஆட்ட வெட்டி வாய்க்கு  ருசியா சமச்சி போட துப்பு இல்ல. ஆம்பிள பேச்சுக்கு சிரிப்பு மட்டும்….”  அங்கு அறுப்பட்ட நிலையில் இருந்த ஆட்டையும், அதை சுற்றி தெளித்திருந்த ரத்த துளிகளையும் காட்டி திட்டியவர்.

“ அசமஞ்சமா நிக்காம வெரசா சமச்சி போடு.” மாமியாரின் பேச்சில்…

“என்னது திரும்பவும் அந்த வெட்டுன ஆட்டு கிட்ட போகனுமா…..? ஆடு திருடியள் போல் அவள் பார்த்த பார்வையில்…

“ நீ உள்ளார போ…..நான் இத பதமா வெட்டி எடுத்தாறேன்…” என்று  சொன்ன வீரப்பாண்டி…

“ சமைக்க தெரியுமா…..?” சந்தேகமாக கேட்டான். அவள் தலையாட்டலில் அவனின் சந்தேகம் வலுப்பெற்றது.

“ உன் வூட்ல என்ன பண்ணுவ….” வீரப்பாண்டி கேள்விக்கு பதில் இல்லாது போக….

“ சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி எழுந்துப்பியா….?” அவள் முழியிலேயே தெரிந்தது அது தான் உண்மை என்று.

புஷ்பவதி  மட்டும் தான் அந்த இடத்தை விட்டு அகன்றார். மற்ற அனைவரும் அவர்கள் சுற்றியே இருந்தனர். இவர்களின் இந்த உரையாடலை ஏதோ நாடகம் பார்ப்பது போல் சுவாரசியமாக பார்த்தனர். அவர்களின் அந்த பேச்சு வார்த்தை கோசலை நெஞ்சில் நம்பிக்கையை வர வழைத்தது.

திருமணம் முடிந்ததில் இருந்து வீரப்பாண்டி வீடே தங்குவது இல்லை. அர்த்த ராத்திரியில் வருபவன் விடியும் முன்னவே கிளம்பி விடுவான்.

மதி தன் அறையில் கொடுத்தது சாப்பிட்டு மழையில் நனைந்த கோழி குஞ்சி  போல், வெட வெடத்துக் கொண்டே எப்போதும் ஒரு வித பயத்தோடு காணப்பட்டாள்.

மதனியோ  மதியை பார்த்தாலே கரித்துக் கொட்டிக் கொண்டு அவர்களின் இயல்புக்கு மாறாய் நடந்துக் கொள்வதை பார்த்து இது எங்கு முடியுமோ ….?

கூடவே  மதியின் தோற்றம்….அவளின் சுபாவம்…இக்குடும்பத்துக்கு சரிப்பட்டு வருமா….? சந்தேகத்தையும் கிளப்பி விட்டது.

இவர்களின் இந்த பேச்சால் போக போக சரியாகி விடும் என்ற நம்பிக்கை ஊற்று மனதில் எழுந்தது. அந்த மகிழ்ச்சியில்…

“ அது தான் அப்பூ பதமா வெட்டி எடுத்துட்டு வரேன்னு  சொல்லிடுச்சில நீ வா…..” மதியை கை பிடித்து அழைத்து சென்றவர்…என்ன நினைத்தாரோ….

அங்கு நின்றுக் கொண்டு இருந்த யசோதாவை பார்த்து….. “ நீ என்னடி மச மசன்னு நின்னுட்டு இருக்க…வா வந்து எனக்கு கொஞ்சம் மசாலா அரச்சி கொடு….” சொல்லி விட்டு போக பார்த்தவரின் காதில்….

“ இரண்டு  வாரம் சென்டு,  இப்போ தான் மவ உங்க கண்ணுக்கு தெரியறேன்னோ…..அதுவும் மசாலா அரைக்க…..”  அவள் பேச்சில் என்ன இருந்தது என்று பகுத்தறிய முடியவில்லை என்றாலும்…. என்ன தான் திடக்காத்திரமான உடல் என்றாலும் பலத்த அடி பட்டு மருத்துவமனையில் இருந்து அன்று தான் வீடு வந்திருந்த சரவணனுக்கு, அதிக நேரம் நின்றதால் வந்த  கலைப்பில் தன் அறைக்கு ஓய்வு எடுக்கலாம் என்று போக பார்த்த சரவணனுக்கும் . அறுவா கொண்டு ஆட்டை வெட்டிக் கொண்டு இருந்த வீர்ப்பாண்டியனுக்கும் இது யசோதா பேசும் பேச்சு போல் இல்லையே அண்ணன் தம்பி ஒன்று போல் நினைத்தனர்.

கோசலைக்கு சொல்லவே தேவையில்ல…. “என்னடீ இப்படி சொல்லிப்புட்ட…..”

“எப்படி சொல்லிப்புட்டேன். இல்லாததையா….?இருக்குறதை தானே சொன்னேன்.”  ஆட்டை நறுக்கிக் கொண்டு இருந்த வீரப்பாண்டி அதை விடுத்து யசோதாவின் அருகில் சென்றானே தவிர… எதுவும் பேசவில்லை.

அன்னையிடம் பேசினால்   என்ன ஆகும் என்று அமைதி காத்தானோ…அதே அமைதியை தான் யசோதாவிடமும் பின் பற்றினான்.

ஆனால் சரவணா…. “ என்ன யசோதா நீயே  இப்படி பேசுற….? என் சேக்காளி நீ தான் அண்ணாவை இவங்கல  கட்டிக்கன்னு சொன்னதா சொன்னான்.”

“ ஆமாம். நான்  இல்லேன்னு சொல்லலையே…. பெரிய மச்சான தான் கட்டிக்க  சொன்னேன். என் ஆத்தால தார வார்த்து கொடுக்கல….”

என்ன தான் தன் சம்மதத்தோடு இந்த திருமணம் நடந்து இருந்தாலும், இந்த வீட்டு பெரிய மருமகள் நான் என்ற கெத்து அவள் நெஞ்சில் எப்போதும் இருக்கும்.

அதுவும் ஒவ்வொரு தடவையும் பூக்கள் பறிப்பவர்களுக்கு, காய்கறி பறிப்பவர்களுக்கு, வீட்டு வேலையாட்களுக்கு தன் கையால் கூலி கொடுக்கும் போது…..எஜமானி என்ற பிம்பம் மனதில் பதிந்து விட்டது.

மாமா இருக்கும் போதும்….பணத்தை  எடுத்து வந்தால் நேராக…. “யசோ கண்ணு இத பெரிய மர பீரோவில் வைம்மா…..” மனைவியிடம்  கொடுக்காது தன்னிடம் தான் நீட்டுவார். பெரிய மச்சானும் அதே கதை தான். சின்ன மச்சான் தான் தன் அண்ணனிடம் கொடுப்பார். அடுத்து அது தன்னிடம் வந்தாலும், நேரிடையா கொடுப்பது இவர்கள் தான்.

இப்போது…தன் உரிமை பறிபோவது போல்….அதுவும் இன்று வீரப்பாண்டி மதியையை பார்த்த பார்வையில்… இத்தனை ஆண்டு நான் தான் அவன்  மனைவி என்ற பேச்சு இருந்துக் கொண்டு தானே இருந்தது.

அப்போது எங்கே  போச்சு இது போல் பார்வை எல்லாம்.வெள்ளத்தோலுக்கு இருக்கும் மவுசே தனி தான் போல…

அன்னிக்கி  அந்த எடுப்பட்ட பயலும் என் நிறத்த வெச்சி தானே பேசினான். நிறம் குறைந்த பெண்களுக்கே எழும் தாழ்வு மனப்பான்மை அவள்  மனதில் எழுந்தது.

அழகு என்பது நிறத்தில் அல்ல ….என்பதை புரிய வைப்பவர்கள்  அவர்கள் பாணியில் சொன்னால் தான் புரியும் போல்….

இது வரை மதியை ஒதுக்கி வைத்ததால் தோன்றாத எண்ணம் , வீரப்பாண்டியின் பார்வை. வீட்டு விசயம் என்று  எதற்க்கும் வந்து நிற்காதவன் தன் மனைவிக்கு என்பதால் தானே வந்து நிற்க்கிறான். இவை அனைத்தும் சேர்ந்து மனம் புகையும் வேளயில்,  கோசலை அழைப்பில்….கொட்டி விட்டாள்.

வீரப்பாண்டியும், சரவணனும் தன்னை பார்த்த பார்வையில் தன் தவறை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டே….

“ எதோ மன உளச்சல்ல பேசிட்டேன் மச்சான்.” இரு வரையும் பார்த்து சொன்னவள்  அந்த இடத்தை விட்டு ஓடி போய் விட்டாள்.

யசோதாவின் பேச்சில் மதி அதிர்ந்தாலும், கோசலையின் கையை விட வில்லை. இன்னும் சொல்ல போனால் பிடி தான் இறுகியது.

இந்த வீட்டில் அடி எடுத்து வைத்தது  முதல் இங்கு இருந்தவர்ளில் அனைவரையும் பற்றி ஏதோ கணித்து வைத்திருந்த மதி….

யசோதாவை பற்றி நல்லதாகவும் நினைக்கவில்லை. அதே போல் கெட்டதாகவும் இல்லை. அதற்க்கு காரணம்  இது வரை இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாதது கூட இருக்கலாம்.

இப்போதும்  நேரிடையாக யசோதா பேசவில்லை. ஆனால் யசோதாவின் இந்த பேச்சு மதியை பலமாக தாக்கியது. இந்த வீட்டின் ஒரே  பற்று கோளான கோசலை அம்மாவையும் பிரித்து விடுவாளோ….அதன் விளைவே தன் கை பிடியின் பலத்தை கூட்டியது.

யசோதாவின் பேச்சில் வீரப்பாண்டி….. “ அது என்ன எப்போ பாரு அவங்க கை பிடிச்சிட்டே  அலையுற…ஏன் உனக்கு தனியா நடக்க தெரியாதா…..?” அத்தை , மனைவியின் இணைந்த கைகளை பார்த்த படி கோபமாக  பேசினான்.

இந்த  கோபம் யசோதாவின் பேச்சாலா….? தன்னை  கண் கொண்டும் பாராது தன் அத்தை பின்னே சுற்றி திரியும் மனைவியின்   செயலாலா….?

 

Advertisement