Advertisement

அத்தியாயம்….6

“என்ன நினச்சிட்டு இருக்காங்க இவங்க ….?ஆவுன்னா கை நீட்டுறாங்க….கேக்க நாதி இல்லேன்னு நினச்சிட்டாங்களா…..?” கன்னத்தில் கை வைத்து கொண்டு மனதில்  நினைத்ததை பயத்தையும் மீறி கேட்டு விட்டாள்.

வீரப்பாண்டி  வாய் திறப்பதற்க்குள் புஷ்பவதி….. “ஆமா நீ கெதி கெட்டவ தான். இரண்டடிக்கு பயந்து உன்னை அம்போன்னு விட்டுட்டு போனவங்க தானே…உன் அய்யனும், ஆத்தாலும், கெதி கெட்டவளுக்கு இந்த வீராப்பு கூடாது புள்ள….”

புஷ்பவதி இயற்கையில் மிக நல்ல குணம் கொண்ட பெண்மணி. அவரின் உயரத்தையும், தோற்றத்தையும் பார்த்து இவங்க  சண்டை காரர்களோன்னு நினைத்து ஒதுங்குனவங்க கூட, போக போக அவர் குணத்தை பார்த்து வலிய வந்து பேச்சு கொடுப்பர்.

அப்படி பட்ட புஷ்பவதி இப்படி பேச  வைத்தது எது….? மாமியார் என்ற எண்ணமா…..? தன் மகளின் வாழ்க்கை பற்றிய பயத்தாலா….?காலையில் பெண்களை காட்டி தன் சின்ன மகனை அடித்த  மதியின் குடும்பத்தவர்களின் பேடி குணத்தாலா…..? மொத்தத்தில் தன் தாய் பேசிய பேச்சை அதிர்ந்து கேட்டுக் கொண்டு இருந்த வீரப்பாண்டி தன் அத்தை கோசலையை பார்த்தான்.

அவரும் அதிர்ந்தார் தான். ஆனால் வீரப்பாண்டி அளவுக்கு இல்லை. அவர் தான் காலையிலேயே இது போல பேச்சை கேட்டு விட்டாரே…அதனால் சீக்கிரத்தில் தன் அதிர்ச்சியிலிருந்து  மீண்டு தன் மருமகனை பார்த்தார்.

அவன் கண்ணின் செய்தியில்….. வீரப்பாண்டி அடித்ததால் மூலையில் முடங்கி இருந்த ஸ்ரீமதி, புஷ்பவதியின் இந்த பேச்சால் வாய் அடைத்து இன்னும் மூலையில்  தன்னை சுருக்கில் கொண்டு அதிர்ந்த பார்த்த அவள் பார்வையில் இரக்கம் மேலிட…

“ நீ வாம்மா….மதனி ஏதோ கோபத்தில் பேசிட்டாங்க நீ வா….” கன்னத்தில் வைத்திருந்த அவள் கை எடுக்கும் போது தான் பார்த்தார் இரு கன்னத்திலும்  இருந்த கை தடத்தை….

அதுவும் அவளின்  நிறத்துக்கு ஐந்து விரலும் பதிந்து இருந்தது தெளிவாக தெரிந்தது. அதை பார்த்ததும் கை தன்னால் இழுத்துக் கொண்டு அதை தன் நெஞ்சில் வைத்து இரண்டடி தள்ளி அமர்ந்து விட்டார்.

அத்தையின் பார்வையில் தான் வீரப்பாண்டியனும் மதியை உத்து பார்த்தது. கல்யாணம் ஆனாதிலிருந்து அவன் எங்கே அவளை பார்த்தான்.

கை தடத்தை பார்த்து எதற்கும் அஞ்சாத அவன் மனமே ஒரு  நிமிடம் ஆடி தான் போய் விட்டது. அதுவும் தான் ஒரு கன்னத்தில் ஒரே அடி தானே அடித்தோம்.  இது என்ன இரண்டு கன்னத்திலும் கை விரல் தடையம்.

தன் ஆராய்ச்சி முடிவில்  தன் அன்னையை நம்பாது பார்த்தான். தன் தம்பிக்கு இந்த பெண்ணை மணம் முடிக்க முடிவு எடுத்த போதே….அந்த பெண்ணை  பழிவாங்கும் எண்ணம் எல்லாம் அவனுக்கு இல்லை.

எந்த ரத்தம் அவங்க  வம்சத்தில் உதிக்க கூடாது என்று நினைத்தார்களோ…..அந்த ரத்தம் தான் அவர்களின் வம்சமாய் இருக்க வேண்டும்.

இது ஒன்றே குறியாய் வைத்து தான் அனைத்து காரியத்தையும் செய்து முடித்தான். என்ன  ஒன்று வீட்டுக்கு இரண்டாவது மருமகளாய் வரவேண்டியவள், மூத்த மருமகளாய் வந்து விட்டாள். அவ்வளவே…

கோபத்தில் அடித்து விட்டு என்ன காரியம் செய்து விட்டோம் அவளை சமாதானம் செய்ய நினைக்கும் வேளையில், அன்னையின் அடுத்தடுத்த பேச்சிலேயே என்ன இது….?அதில் இருந்தே அவன்  வெளியில் வராத போது…

அடிப்பது….?அதுவும் காலை மணமானவளை….  இப்போது தான் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் வேறு ஒரு அர்த்தம் பிறக்கும் என்று எதுவும் பேசாது அமைதியாக அந்த இடத்தை விட்டு அகன்றான்.

மருமகன் ஏதாவது  செய்வான் என்று தன் அதிர்ச்சியில் இருந்து  மீண்ட கோசலை விரப்பாண்டியனின் இந்த செய்கையில்…

“ வாம்மா …..” மதியின் கை பிடித்து எழுப்ப.

“ கழுவிட்டு வரட்டுமா…..?” கை காட்டி  கேட்டவளின் பாவனையில்… ஒரு பெண்ணின் தாயாய் துடி துடித்து விட்டார்.

“சரிடா கண்ணு.”

அவள் கை கழுவி வந்ததும் தன் அறைக்கு அழைத்து வந்து மதியின்  இரு கன்னத்திலும் பத்திட்டவர் பின் மின் சுழலை சுழல விட்டு…

“ செத்த நேரம் தூங்கி எழு கண்ணு.” தலை கோதி சொன்ன கோசலையின்  கை பிடித்து….

“தூங்கி எழுந்தா எல்லா  சரியாகி விடுமா அம்மா…..”  மதியின் அம்மா என்ற அழைப்பிலும், மதி பேசிய பேச்சிலும் கண்ணில்  இருந்து கண்ணீர் வர அதை மதிக்கு காட்டாது ..

“எந்த யோசனையும் வெச்சிக்காம  தூங்கு.” பேச்சில் அதட்டல் போட்ட  கோசலை, செய்கையில் அவள் கையில் அழுத்தம் கொடுத்து நான் பார்த்துக்குறேன் என்ற தைரியத்தை கொடுத்தே சென்றார்.

ஏதோ யோசனையில் வந்த கோசலையின் கவனத்தை புஷ்பவதியின் …… “ உன் வாழ்க்கை பறிச்சது பத்தாதுன்னு உன் ஆத்தாளையும் பறிச்சிக்க பாக்குறா பாத்து சூதனமா இரு யசோ…..” மதனி பேச்சு காதில் விழுந்தாலும் எதுவும் பேசாது தன் அடுத்த வேலையை பார்க்க சென்றார்.

தன் அறையில் இருந்த வீரப்பாண்டியனுக்கும், அன்னையின் பேச்சு காதில் விழவே செய்தது. தனிமையில் அன்னையின் செயலை நினைத்து யோசிக்கும் வேளயில் தான் அவன்  செய்த முட்டாள் தனம் அவனுக்கு புரிந்தது.

தன் மகள் வாழ்க்கை பாழாக காரணமான வீட்டின் பெண்ணை எப்படி இவர்கள் சாதரணமாக ஏற்றுக் கொள்வார்கள்…..? சாதி வெறி பிடித்த கங்காதரனை பழிவாங்க யோசித்த நான் இதை யோசிக்க வில்லையே…..? அப்போது தான் வேறு ஒன்றும் அவன் கவனத்தில் வந்தது. அப்பெண்  பெயர் என்ன என்று…..?

அத்தை அவளிடம் பேசும் போது பெயர் வைத்து அழைத்தார்களா…..? யோசித்ததில் இல்லை என்றே தோன்றியது. பெயர் கூட தெரியாத  பெண் இப்போது அவள் வீட்டுக்கு மருமகள். அவனுக்கு மனைவி ….நினைக்க அவனுக்கே சிரிப்பாய் தான் இருந்தது.

தான் போட்ட திட்டத்தில் தான் எத்தனை ஓட்டை…. சந்ததி வர வேண்டி செய்த திருமணம். ஆனால் பெயர் தெரியாது. தம்பிக்கு எனும் போது, அவன் இவளை பார்த்தது கூட இல்லை. தான்  முதன் முதலில் அவளை பார்த்தது நினைவில் வந்து போனது. இனி தம்பி கட்டிக்க இருந்த பெண் நினைவில் கூட வரக்கூடாது நினைத்தவனுக்கு…

அவளை முதலும் கடைசியுமாக பார்த்த  அன்று அவன் நினைத்தது என்ன….?இப்போது நடந்து முடிந்தது என்ன…..?விதி என்பது இது தானோ….?இப்படி என்னாது இருக்க முடியவில்லை.

சே என்ன இது இப்போது இருக்கும் நிலையில் இது எல்லாம். ஆத்தா  இப்படி நடந்துக்குறதுக்கு காரணம் இருக்கு தான், ஆனால் அதற்க்கு  இந்த பெண் என்ன செய்வாள்.

இதை சொன்னால்…..வேண்டாம் இதை பொறுமையாக  தான் கைய்யால வேண்டும்.

அவனின் இந்த பொறுமையால் எந்த சந்ததி உருவாக்க பெண் பெயர் கூட தெரியாது பெண்ணுக்கே விருப்பம் இல்லாது திருமணம் செய்தானோ…..அந்த சந்ததிக்கே ஆபாத்து என்று தெரிந்து இருந்தால்……உடனடியாக தன் அன்னையிடம் பேசி இருப்பானோ…..?

வீரப்பாண்டிக்கு திருமணம் முடிந்து இதோ அதோ என்று இரண்டு வாரம் கடந்த பின் தான்,  சரவணப்பாண்டி மருத்துவமனையில் இருந்து வீடு வந்து சேர்ந்தான்.

அந்த இரு வாரமும் மதியின் அடைக்கலம் கோசலை அறை தான். வீரப்பாண்டி கன்னத்தில் அரைந்த அரையில் ஏதோ குருட்டான் போக்கில் இருந்த அவள் வீரமும் ஓடி ஒளிந்துக் கொண்டது எனலாம்.

கோசலை அறையிலேயே சாப்பாடு அனைத்தும் நடந்து விட்டது. அப்படி கோசலை உணவு எடுத்து வந்தால்…..

“ என்ன மகாராணி வந்து சாப்பிட மாட்டாங்கலோ…..நீ என்ன அவளுக்கு சேவகம் செய்வது.” இப்படி பல பேச்சுக்கள்.

“ அத்தை விடுங்க…..”  யசோதாவின் இந்த பேச்சுக்கு  அடுத்து ஒரு வார்த்தை பேசாது போய் விடுவார்.

அதே போல் ஒரு சில பேச்சால்  அவள் புரிந்துக் கொண்டது, அந்த வீட்டின் அனைத்து அதிகாரமும் யசோதாவின் வசம் தான் என்பதை….

புஷ்பவதி…. “ யசோ கண்ணு அரிசி மண்டி சுப்பு, பத்து ஆடு வாங்கிட்டு போய் இருக்கான்.துட்டுக்கு பதிலா அரிசி மூட்டை இறக்கிடுறேன் சொல்றான்  நீ என்ன கண்ணு சொல்ற…..?”

“வேண்டா அத்தை. போன கொடைக்கு கூட இப்படி தான் சொல்லி இறக்கின அரிசி  மூட்ட நல்ல ரகம் இல்ல. துட்டாவே வாங்குங்க…..”

அடுத்து  புஷ்பவதி பேசியது “ சரி கண்ணு….” என்பதே…

வருடம் ஒரு முறை வீரப்பாண்டி தன் பட்டியில் இருக்கும் ஆட்டில் ,  பத்தில் இருந்து இருபது சதவீதம் கழித்து விடுவான். பிறக்கும் புது ஆடுகள் இந்த கழிவினை ஈடுகட்டி விடும்.

அப்படி கழித்த ஆட்டில் வந்த பணத்தை கொண்டு வந்த வீரப்பாண்டி … “ யசோ உள்ளார வைய்.” அப்போ பணக்கணக்கும் யசோதாவின் வசம் தான்.

இது எல்லாம் கோசலையின் அறையில் இருக்கும் வேளயில் …. அவள் விரும்பாமலேயே  காதில் விழுந்ததை வைத்து அறிந்துக் கொண்டது.

சரவணாவின் வருகையால்  ஏதோ அமைதியாக போய் கொண்டு இருந்ததுக்கும் வேட்டு வந்தது. இப்போது உடைந்த கை ஒராளவுக்கு சரியாகி விட்டதால் தானே உணவு  உண்ண ஆராம்பித்திருந்தான்….

சாப்பிடும் வேளயில் அனைவரும் இருக்க…புது பெண் இல்லையே என்று தன் பக்கத்தில் அமர்ந்து உணவு உண்ட வீரப்பாண்டியனிடம்….

“ மதனி எங்கேண்ணே…?வந்ததுல  இருந்து பாக்கவே இல்ல.” தான் கட்ட நினைத்த பெண்.  அண்ணன் கட்டியதும், அவன் வாயில் இருந்து சாதரணமாக மதனி என்ற வார்த்தை வந்து விழுந்தன.

வீரப்பாண்டி எதுவும் பேசாது உணவு  உண்ண.கோசலை தான்…. “ நா அவளுக்கு கொடுத்துட்டேன் அப்பூ…..”

“ஏன்…எங்கே….?” கேள்வி கேட்பது சுலபம்.  அதற்க்கு பதில்….

ஆனால் அது எல்லாம் புஷ்பவதிக்கு இல்லை போல்…. “ ஆ ஊருல இல்லாத  சித்திராங்கிய கட்டியாந்து இருக்கோம்ல…அது தான் வேள வேளைக்கு இங்கு சேவகம் நடக்குது.”

“என்ன ஆத்தா சொல்லுறிங்க …?எனக்கு ஒன்னும் விளங்கல….?”

“எனக்கும் தான் ஒன்னும் விளங்கல  சின்னவனே…..மருமக வந்தா மாமியார்காரி கட்டைய கொஞ்சம் சாச்சிப்பா….ஆனா இன்னும் ஒருத்தருக்கு கூட வேல செய்யும்  நில எனக்கு.

அதை கேக்க இங்க  நாதி இருக்கா எனக்கு…..இதே உங்க அய்யன் இருந்தா  மத்தவங்களுக்கு சேவகம் செய்ய என்ன விட்டு இருப்பாரா…..?”  எப்போதும் போல அவர் மூக்கை சிந்தும் வேலையை ஆராம்பித்து விட்டார்.

“ ஆத்தா  செத்த சும்மா இருங்க. உடம்பு முடியாதவன் இப்போ தான் கொஞ்சம் தேறிட்டு வருது.  பட்டியில் இருந்து நல்லா கெடா ஆட்ட எடுத்து வந்து புரத்தால கட்டி இருக்கேன். சூப்பு ஏதாவது வெச்சி அவன் உடம்ப தேத்துங்க….”

“ என் மவன அவள் அப்பன் காரன் அடிப்பான். நான் தேத்துறேன்.” மூக்கில் வழிந்த நீரை தன் முந்திக் கொண்டு துடைத்த வாறே…அதற்க்கும் மதியை இழுத்தார்.

இது வரை  தன் கோபத்தை அடக்கி வைத்திருந்தவன்…. “அத்தை அந்த பொண்ண கூப்பிடுங்க…”

வீரப்பாண்டியன் பேச்சில்….. “ எந்த பொண்ணு அப்பூ….?”  பாவீ மவன் ,இப்போ கூட அவனுக்கு அவள் பெயர் தெரியவில்லை. கோசலையும் புரியாது தான் கேட்டார்.

பூந்தோட்டம், காய்கரித்தோட்டத்தோடு,   வீட்டிலேயே கரவ மாடு என்று இருப்பதால். வீட்டு வேலைக்கு என்று  இரு பெண்கள் இருப்பர். காலை வந்தால் மாலை பாலை கரந்து கொடுத்து விட்டே செல்வர். வேலையாளை கேட்கிறானோ என்று தான் அறியாது கேட்டு விட்டார்.

ஆனால் மகனின் பேச்சு தாய்க்கு புரிந்து விட்டது…. “ பெரியவன் எவளை கூப்பிட  போறப்பல…எல்லாம் புதுசா வந்த சித்ராங்கிய தான்.”

“ ஆத்தா….” என்று அதட்டியது பெரியவன் என்றாலும் மனசு ஆறி இருக்குமோ ….சின்னவன் அதட்டலில்…

“ நீயுமா சின்னவனே…..”

தாயின் பேச்சில் நாம் எப்போ அவளுக்காக ஆத்தவை அதட்டினோம் நினைத்ததை கேட்கவில்லை. திரும்பவும் அத்தையிடம்….

“ அவள கூப்பிடுங்க….”

“ என்ன அண்ணா பேரு வெச்சி கூப்பிடாம இப்படி…..?”

“ தெரிஞ்சா சொல்ல மாட்டேனா…..?” முதலில் அந்த பெண் பெயர் என்ன யோசித்தது தான், அடுத்து அந்த சிந்தனை இல்லாது வேலை அவனை இழுத்துக் கொண்டது.

தங்கை இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று   அவள் படிப்பை தொடர செய்தான். என்ன ஒன்று முதலில் விடுதியில் இருந்து போனாள்…இப்போது வீரப்பாண்டி தனியாக வீடு எடுத்து தக்க பாதுகாப்பு வசதி செய்து கொடுத்தே அவளை படிக்க அனுப்பினான்.

அடுத்து தம்பியின் மருத்துவமனை வாசம், அவனின் பாதி நேரத்தை  எடுத்துக் கொண்டது. மதி கோதையின் அறையிலேயே முடங்கி கொண்டதால்,  அவளை அவன் பார்க்க முடியாது போனதால் அவளின் சிந்தனை வராது போனது . மொத்தத்தில் தாலி கட்டி இழுத்து வந்து தள்ளியதோடு சரி.

வீரப்பாண்டியின்  பேச்சில் அதிர்ந்தது சரவணா மட்டும் இல்லை, ஆனாளப்பட்ட நம்ம புஷ்பவதியே  அதிர்ந்து போய் பின்…. “ என் மவன் ஆச்சே…. சிவப்பு தோலுக்கு எல்லாம் மயங்கிடுவானா….? மனதில் நினைத்ததை   சொல்ல வில்லை.

“நானும் கேக்கல அப்பூ…..” கோசலையின் குரலில் குற்றவுணர்வு. இரு வாரம் ஒரே அறைவாசம். பெயர் கூட கேட்காது “ நான்  உன்னை மகளா நினைக்கிறேன்.” அந்த பெண்ணிடம் சொல்லி என்ன பிரயோசனம்.

ஸ்ரீமதி அந்த வீட்டுக்கு மருமகளாய் வந்து இரு வாரம் கடந்து விட்ட நிலையிலும், பெயர் தெரியவில்லை. அந்த குற்றவுணர்ச்சியில்  மற்ற அனைவரும் வாய் அடைத்து விட்டனர்.

எனக்கு அது எல்லாம் இல்லை என்பது போல்….கோசலையின் அறை கதவை தட்டி….தவறு  மதியின் காதுக்கு இடித்தது போல் கேட்டது.

“ஏய்  வா….” அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை கூப்பிடுவது போல்  கூப்பிட்டார்.

புஷ்பவதியின் செயல்கள் கோசலை போல் வீரப்பாண்டிக்கும்  பழகி விட்டது. ஆனால் நம் சரவணா….

“ அண்ணா என்ன நடக்குது…..?”

என்ன நடப்பது என்று அவன் வாய் திறக்கும் முன்,  பயந்த நிலையில் ஸ்ரீமதி அங்கு வந்து நின்றாள். அவள் கண்ணில் கண்ணீர் அப்போதோ இப்போதோ என்று  விழும் நிலையில்…

“ உன் பேர சொல்லு…..? வீட்டின் மருமகளை ஏதோ புது மாணவியை பார்த்து கேட்பது போல் கேட்டார்.

“ஸ்ரீமதி…..” மெல்ல வாயோடு முனு முனுத்தாள்.

“ஆ சத்தமா சொல்லு…உன் வீட போல தண்ணி பாலா குடிக்கிற…நல்லா கரந்த பால சுண்ட காச்சி தானே தினம் கோசலை கொடுக்குறா … சத்தமா சொல்லு…..”

விழுவேனா இருந்த கண்ணீர் கர கர என்று சுரந்து விழுந்தது. சட்டென்று  அந்த இடத்தை விட்டு வீரப்பாண்டி அகன்று விட்டான்.

மகன் எதற்க்கு போய் விட்டான் என்று அறிந்துக் கொண்டவராய்…தோள் பட்டையில்  தன் முகத்தை இடித்துக் கொண்டு…

“வாயில  என்ன கொழுக்கட்டையா வெச்சி இருக்க….?சத்தமா சொல்லு உன் பேர….” பேர என்பதில் ஆயிரம் இழுவை இழுத்து  நிறுத்தினார்.

இப்போது கொஞ்சம்  சத்தமாக…. “ ஸ்ரீமதி…..” குரலில் அழுகையின் சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

“ துடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சனமுன்னு பேரு வெச்சாங்கலாம்.”

“ஆத்தா…..” கத்தியே விட்டான் சரவணப்பாண்டி…

“ என்ன நடக்குது இங்க…..? அண்ணாவும் ஒன்னும் கண்டுக்காமல் போறாங்க…. இத்தனை நாளுல பேரு கூட தெரிஞ்சி வெச்சிக்கல….இது நீங்க இல்லையே ஆத்தா….” ஒரு மகனாய் தாயின் செயலில் அதிர்ந்து போய் கேட்டான்.

“ என்னலே ஆள் ஆளுக்கு என்ன வில்லி மாதிரி பாக்குறிங்க…இவங்க வீட்டு ஆளுங்க  செஞ்சத மறந்துட்டிங்கலோ…..இவ நல்ல வூட்டு பொண்ணு இல்ல மதிக்கிறதுக்கு.

கற்பபைய் மேலேயே கை வெச்ச குடும்பம். நம்ம கொஞ்சம் சூதனமா இல்லேன்னா…. சொல்ல முடியாது,  நாம அசந்த நேரமா பார்த்து நம்ம தலையில கள்ள போட்டுடுவா….. இவள எல்லாம் ஆராம்பத்திலேயே அடக்கி வைக்கனும்.” என்று  தன் சின்ன மகனை வாய் அடைக்க செய்து விட்டு…

“ பெரியவன் கெடாவை எடுத்துட்டு வந்து இருக்கான். அதை பதம் பார்த்து செய். முதல்ல எலும்பு எடுத்து கொஞ்சம் சூப்பு வெச்சி சின்னவனுக்கு கொடு.

மூளைய பாத்து எடுடீ….செதைய கூடாது. கொஞ்சம் துண்ட உப்பு கண்டம் போடு.”

அனைத்துக்கும்  பயந்தது போல், அவர்கள் வளர்க்கும் ஆடு ஆட்டுவது போலவே தலையை ஆட்டிய மதி…கடைசியில் அதே பயத்தோடு…

“ கெடான்னா என்னன்னு….?” கேட்டாளே ஒரு கேள்வி.

 

Advertisement