Advertisement

அத்தியாயம்…..4

வீராப்பாண்டி  சரவணா சேக்காளிக்கு அழைத்து…. “ அவனால் வர முடியுமா….?”

“முடியாதுண்ணே…இன்னும் ஒரு வாரத்துக்கு படுக்கை விட்டு எழ கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.”

யோசனையுடன்….“ நீ கை மட்டும் தானே வீங்கி போய்  இருக்குன்னு சொன்னே….?”

“இல்லேண்ணா  கொஞ்சம் பலமான அடி  தான்.” தயக்கத்துடன் சொல்லி முடித்தான்.

“ பெருசா….” வீரப்பாண்டி என்ன கேட்க வருகிறான் என்று புரிந்து இல்லேண்ணா…அதுலா ஒன்னும் இல்ல.”

உயிருக்கு ஆபாத்து இல்லை ஆசுவாசம் அடைந்தாலும்,  கோழைப்போல் பெண்களை வைத்து அடித்ததை நினைத்தால் ….

“ என்னப்பூ இன்னும் எத்தன நேரம் தான் இங்க உங்க முகத்தையே  பார்த்துட்டு இருக்க. எங்களுக்கு அடுத்த வேலை இல்லையா….?” என்று பொதுவாக சொன்ன சங்கரன்.

கங்காதரனை பார்த்து…. “ மாமா நம்ம வூட்டு பொண்ண கூட்டிட்டு வாங்க…..”

திருமணம் முடியாது எப்படி தன் வீட்டுக்கு அழைத்து செல்வது….யோசனை விரப்பாண்டிக்கு….

சங்கரனுக்கோ இதையே சாக்கா  வைத்து கங்காதரனிடம்…. “ எப்போவும் பொண்ண அடக்காத்துட்டு இருக்க முடியுமா….? கேட்டு… உள்விவகாரம் தெரியாதவன் அப்படி தூக்கி போன பொண்ண எப்படி  கட்டுவான்….?அப்படி கட்டிக்கிட்டாலும், நாளை பின்ன ஏதாவது சொல்லி காட்ட மாட்டானா….?” நைச்சியமாக பேசி இதை வைத்தே தன் திருமணத்தை முடித்து விட வேண்டியது தான்.

இதற்க்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் ஸ்ரீமதி கை கட்டி யாருக்கோ வந்த விருந்து என்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

முதலில் பெண்ணாய் பயந்தால் தான். திருமணம் பற்றி அந்த வயதுகே உறிய ஆசைகள் அவளுக்கும் இருக்க தானே செய்யும்.

இப்படி தூக்கி யாரோ என்று தெரியாத ஒருவனுக்கு பகை முடிக்க  கட்டி அவள் வாழ்க்கை வீணாவதா….? பயந்தாலும் அதை காட்டாது சாதுர்யமாக தான் செயல் பட்டாள்.

மாப்பிள்ளை அடித்து விட்டார்கள். சே…பாவம் என்று நினைத்தது ஒரு நொடி தான், நம்மல  தூக்குணாங்கல நல்லா வேண்டும்.

தன் தந்தை தன்னை  நோக்கி வருவதை பார்த்து…..அவரை நோக்கி விரைய பார்த்தவளின் நடுவில் வந்து  நின்றவளை யோசனையுடன்….மதி பார்க்க..

யசோதா அவளை பார்க்காது…. திரும்ப கங்காதரனை பின் இருந்த சங்கரை பார்த்துக் கொண்டே….

“ இன்னும் கண்ணாலம் முடியலையே….? முடிஞ்ச போறவு தானே பொண்ணு வூட்டுல கால் மிதிக்கனும்.”

“ ஏய் என்ன பேச்சு… உன்ன மிதிச்சிடுவேன்.”  கங்காதரனை தாண்டி சங்கர் எகுற… அவன் அந்த வார்த்தை சொல்லி முடிக்கவில்லை.

வீரப்பாண்டியனின்  ஒரே குத்தலில் மூக்கில் இருந்து ரத்தம் குபு குபு என்று கொட்டியது.

“ நீ பேசப்படாது….பொம்பள வெச்சி ஆம்பிளைய அடிக்கிற….பேடி பையன் எல்லாம் சபையில ஒரு ஓராம நிக்கனும்.” சத்தமாக பேசியவன்.

அவனுக்கு மட்டும் கேட்கும் குரலி…. “ ஆழம் தெரியாம கால வெச்சிட்ட…..இடுப்புக்கு மேலவாவது தேறி இழுத்துப்பியான்னு பாக்குறேன் உன் சாமர்த்தியத்த….”

வீரப்பாண்டியன் குரலும், கண்ணில் தெரிந்த ரவுத்திரத்திலும் சங்கரால் வாயை திறக்க முடியவில்லை.

தன் இனத்தவரை அவமதித்து பேசுவதா….. “ கல்யாணம் முடியாம பொண்ண உன் வீட்டுக்கு கூட்டிட்டு போவியா….?”

அவர்களின் ஊரின்  சட்ட திட்டப்படி…. எந்த சம்மந்தமும் இல்லாத வீட்டில் திருமணம் முடியாது ஒரு பெண்  இரவு தங்க கூடாது. அது வேறு பேச்சுக்கு வழிவகுக்கும். அதுவும் வேத்து இனத்தில் தங்கினால் பஞ்சாயத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதை நினைத்து தான் சங்கரன் காய் நகர்த்தியது…..

கங்காதரன் பேச்சுக்கு…. “கல்யாணம் முடிச்சி தான் அய்யா….”தன்  கையை மூக்கில் வைத்து தலை குனிந்து பவ்யமாக பேசியவளின் பேச்சில்….

சங்கருக்கு ஏதோ சரில்லை என்று தோன்றியது…. “மாமா வீண் பேச்சு எதுக்கு…? நம்ம பொண்ண கூட்டிட்டு போகலாம்….”

யசோதா…. “ என்ன பெரிய மச்சான் நம்ம வீட்டுக்கு  வர பொண்ண அவங்க கூட்டிட்டு போறேன்னு சொல்றாங்க….நீங்க பார்த்துட்டு சும்மா இருக்கிங்க….” வீரப்பாண்டியனை பார்த்து கேட்டாள்.

இப்போது வீரப்பாண்டியன் பார்வை மொத்தமும் யசோதாவிடம் மட்டுமே….. “ அத்த மனசுல ஒரு சஞ்சலம்…பெரியவன் கண்ணாலம் முடியாம சின்னவனுது பண்றோமுன்னு…..இப்போ அந்த வெசனமும் காணாம போயிடும்.”

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று  புரிந்து கொண்ட வீரப்பாண்டி… “யாசோ….” அவன் என்ன சொல்லி இருப்பானோ…

சங்கரன்…. “  அவர் அய்யன் வாக்கு என்னத்துக்கு ஆகுறது….?” வீரம் இருக்கும் இடத்தில் தான், அளவுக்கு மிஞ்சு ரோஷமும் மிதமிஞ்சி இருக்கும்.

எதை சொன்னால்  வீரப்பாண்டியனை தடுக்கலாம் குறிபார்த்து அடித்தான். அது நன்றாகவே வேலை செய்தது…

தயங்கியது போல் யசோதவை பார்த்து விட்டு தொடர்ந்தார் போல  மதியை பார்க்க…அவள் முகத்தில் காணப்பட்ட கேலியில்…

பல்லை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்தினான். இவ்வளவு செய்து….மொக்க கொலையவா….?

நான் உங்களை அந்த நிலைக்கு தள்ள மாட்டன் என்பது போல் இருந்தது அடுத்து பேசிய யசோதாவின் பேச்சு….

“ என் மாமா வாக்குக்கு என்ன….? வாக்கு தவறா  பரம்பரைக்கு ஏற்ப…நான் என் சின்ன மச்சான கட்டிக்கிட்டு…அந்த வூட்டு மருமகளா  ராணி மாதிரி இருப்பேன்.” சேல முந்திய இடுப்பில் சொறுகி சங்கரனை பார்த்து மிதப்பாக பேச..

கோசலை, புஷ்பவதி, இருவரும் … “ யசோதா….” இருவரையும் ஒரு சேர பார்த்து…

“மாமா என்ன சொன்னாங்க….? யசோதா  தான் இந்த வீட்டு மருமக…. அது சின்ன மச்சான கட்டிக்கிட்டாலும் ஆகலாம்.”

சரவணனை அடித்து  விட்டார்கள் என்று தெரிந்ததும் காத்தமுத்துவுக்கு அந்த பெண்ணுக்கு ஏத்தவன் வீரப்பாண்டி தான். இந்த பிரச்சனை  திருமணத்தோடு முடியும் விசயம் இல்லை.

அதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பம். கங்காதரன் திருமணம் முடிந்த பின்  தன் பெண்ணை கண்டிப்பாக விட்டு வைக்க மாட்டான்.

சரவணனும் வீரமானவன் தான். ஆனால் வீராப்பாண்டி அளவுக்கு….  ? விராப்பாண்யனிடம் கேட்க பயம். வீட்டில் அவனுக்கு என்று முறைப்பெண் காத்துக் கொண்டு இருக்க…

நீ மணந்துக் கொள்…ஒரு பெரிய மனிதனாகவும், பெண்ணின் தகப்பனாகவும் கேட்க தயங்கினார்.

இப்போது அந்த முறைப்பெண்ணே வழிவகுத்து கொடுத்ததும்…. “ அந்த புள்ளயே சொல்லுச்சி அப்புறம் என்ன….தம்பி…வெரசா  தயார் ஆகுங்க.” வேஷ்ட்டி சட்டை எடுத்து வீரப்பாண்டியனிடம் நீட்ட…

அதை வாங்க தயங்கியவனை….. “ நான் இந்த கருச்சட்டிய கட்டிக்க மாட்டேன்.” மதியின் பேச்சில், கை தன்னால் அதை வாங்கிக்  கொண்டது.

அவளை மணவரையில் அமர்த்த படாத பாடு பட….கங்காதரன் குழுவினர் அடிதடியில் இறங்க….ஒரு முறை சுற்றி பார்த்த வீரப்பாண்டியனை…

“நீங்க  கிளம்பு தம்பி…அவனுங்க எல்லாம் வாய் சவுடால் தான்.” சொன்னது போல் ஒருத்தர் பத்து பேர் அடிக்கும் திடத்தில் இருக்கும் வீரப்பாண்டியன் ஆட்கள்  முன், அவர்களால் கொஞ்ச நேரம் கூட தாக்கு பிடிக்க முடியாது போக…அவர்களை அடித்து விரட்டி விட்டனர்.

வீரப்பாண்டி பட்டு வேஷ்ட்டி கட்டி முடித்து  வந்த பின்னும் அங்கு இருந்த பெண்களால் மதியை மணவரையில் அமர்த்த முடியாது போனது.

யசோதா  போனால் ஒரே  தள்ளு போதும். உட்கார வைத்து விடுவாள். ஆனால்…சங்கரன் கங்காதரனை, எதிர்க்க முடிந்த அவளாள் மதியை அடக்க முடியாது.

வீட்டு ஒற்றுமை, அந்த வீடு அவளுக்கு கோயில் போல்…அதனால் தான் சிறுவயது முதல் இவன் தான் கணவன் என்று நினைத்து  இருந்தவனை, அக்குடும்ப மானம் காக்க ஒரே நிமிடத்தில் தூக்கி கொடுக்க முடிந்தது.

“விடுங்க….அவள விடுங்க.” மதியை அமர வைக்க முயற்ச்சி செய்த பெண்களை பார்த்து சொன்னவன்.

மதியை நேர்க் கொண்டு பார்த்து….“ என் ஆத்தா ஒன்னு சொல்லும் பூன கண்ணு மூடிட்டா  பூலோகமே இருண்டுட்டதா….?” அவன் பேச்சில் மதியின் முகம் சூடாவதை பார்த்து…

“ என்ன அம்மணிக்கி புரிஞ்சுடுச்சி போல….?” இது வரை ஸ்ரீமதியிடம்  குடிக் கொண்டு இருந்த அந்த தெனவெட்டான பார்வை வீரப்பாண்டியனிடன் இடம் பெயர்ந்தது.

“ நீ உட்கார தேவயில்ல…இதுவே வசதியா தான் இருக்கு.” அவன் சொல்லிக் கொண்டே ஐயர் எடுத்து வந்து கொடுத்த அவன் குடும்ப தாலியை மதியின் இரு தோள் மீது தன் இருக்கை  அழுந்த வைத்து மூன்று முடிச்சியையும் மிக பொறுமையாக மதியின் பின் நின்ற யசோதாவை பார்த்துக் கொண்டே போட்டான்.

அவளுக்கு அவன் கை அழுத்தில் ஒரு சிறு அசைவு கூட அவளால் நகர முடியாது போனது. தோளிலில் உலக்கை வைத்தது போல்…

ஸ்ரீமதி  ஐந்தேகால்  அடி உயரத்தில், நாப்பத்திஐந்து கணத்தில்….சிவந்த நிறத்தில் பார்க்க வெட வெட என்று இருப்பாள்.

அவள் முகத்தில் எடுப்பாய் முதலில் தெரிவது அவள் கண் என்றால்,  அடுத்து தெரிவது மூக்கு….கன்னம் கொஞ்சம் ஒட்டிய வாக்கில் இருப்பதால்…அப்படி தெரியுதோ….எப்படி இருந்தாலும் பார்க்க கண்ணுக்கு லட்சணமான  பெண்.

தாலி கட்டி முடித்ததும், சோசலையும்…புஷ்பவதியும் ஒதுங்கி இருப்பதை பார்த்து…

“அத்தே…ஆத்தா…இரண்டு பேரும் இங்கன வாங்க….”

“ வேண்டாப்பூ….” இருவரும் சொன்னதுக்கு…

“ வாங்க….” அவன் குரலின்  அழுத்தத்தில் தன்னால் அவன் அருகில் போக….

“ குங்குமம் எடுத்து கொடுங்க….”

“நாங்கலா….?”

“நீங்க தான்.”  அவர்கள் கொடுத்ததும் மதியின்  வகிட்டில் திலகம் தீட்டி….அவள் நெற்றியில் இட்டு முழுமையாக தன் மனைவியாக்கிக் கொண்டவன்.

காத்தமுத்துவை அழைத்து….” அண்ணே…நான் ஹாஸ்பிட்டலும் போறேன். இங்கு எல்லாத்தையும் நீங்க பார்த்துக்குங்க.” தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டிக் கொண்டே  சொல்ல.

“ பெரியவனே…கண்ணாலம் முடிஞ்சி முதல்ல  அங்கன வேண்டாம்.”

“ஆத்தா இவனுங்கல ஜெயிக்க விடக்கூடாதுன்னு தான் இத்தன நேரம் பல்ல கடிச்சிட்டு இருந்தேன். தம்பிய பார்த்தா தான் அடுத்த ஏதுன்னாலும்….” சொன்னவன்..

காத்தமுத்துவிடம்….” பார்த்துண்ணே….பொட்ட பயலுங்க பேடியா தான் ஏதாவது செய்வானுங்க….” அங்கு இருந்த இளந்தாரிகளிடம்…

“பாத்துலே….” சொன்னவன் பின்..

யசோதாவிடம்… “ சூதனமா இரு….” சங்கர் யசோதாவை பார்த்த பார்வை ஏனோ வீரப்பாண்டியனுக்கு சரியாக படவில்லை. அவளை எச்சரித்தவன்,  ஸ்ரீமதி பக்கம் தன் பார்வை செலுத்தாது விரைந்தான்.

“ கையில தான் எலும்பு முறிவு.கால்ல தசை பிசகு தான்.” மருத்துவர் சரவணனின் உடல் நிலை குறித்து தன் மருத்துவ அறைக்கை சொல்ல.

கேட்க ஒன்றும் இல்லாது போல் தோன்றினாலும்….சரவணனை பார்த்த வீரப்பாண்டியனுக்கு…..

செவிடு(கன்னம்) வீங்கி….சங்கு (கழுத்து) பகுதியில்  கன்றி போய்….குறுக்கு (முதுகு) ரத்தக்காயத்தோடு….பார்க்க பார்க்க….மாட்டினால் அவனுங்க சங்க அறுத்திடனும்…இவன் இப்படி கருவ..

சரவணனோ… “ அண்னே….என்னால எல்லாம் சொதப்பிடிச்சி அண்ணே..என்ன மன்னிச்சிக்கோ…..” வீரப்பாண்டியனிடம் மாப்பு (மன்னிப்பு) வேண்டினான்.

இப்போது வீரப்பாண்டியனுக்கு தர்மசங்கடமாய் போனது….எப்படி சொல்வேன் உனக்கு கட்ட நினைத்த பெண்ணை நான் கட்டிக்கிட்டேன் என்று.

அவனுக்கு அந்த கஷ்டத்தை கொடுக்காது வீரப்பாண்டியனோடு வந்த சேக்காளி ஒருவன்..

“ அது எல்லாம் ஒரு சொதப்பும் சொதப்புலலே… இன்னும் மூஞ்சில கறிய பூசி தான் அனுப்பினோம்.”

“எப்படி ….?” என்பது போல் தன் அண்ணனை பார்த்தான்.

“ நானே கட்டிக்கிட்டேன்.” சொல்லி முடித்து அவன் முகத்தையே பார்த்திருந்தான். அந்த பெண்ணை பார்த்தானா…?இல்லையா தெரியாது.

பார்த்திருந்தாலும் ஆசை பட்டு இருக்க மாட்டான். ஆனால் கண்ணாலம் பேசிய நேரத்தில் இருந்து அவன் மனதில் ஆசை துளிர்த்திருந்தால்….

சரவணன் அண்ணன் பேச்சை கேட்டு அதிர்ந்த பார்வை  பார்க்க…அந்த பார்வையில் வீரப்பாண்டி பஸ்பமாய் பொசுங்கி போக பார்த்தவனை….

“ அண்ணே யசோதா….?”

“யப்பா  யசோதாவுக்கு தான் இந்த அதிர்ச்சியா….?”என்று  நினைத்தவன்…

“ அவ தான் கட்ட சொன்னா….?”

சரவணன் முகத்தில் மேலும் அதிர்ச்சி….. “அவளா….?உங்க மேல அம்பூட்டு பிரியத்த வெச்சி இருந்தாளே….? இச்சொல் வீரப்பாண்டியனை என்னவோ செய்தது.

அந்த பெண் கழுத்தில்  தாலி கட்டும்(பொண்ணு பேரு கூட தெரியாம  தாலி கட்டுனவன் இவனா தான் இருப்பான்.) வரை ஏன் இப்போது வரை அவர்களிடம் தோற்க கூடாது.  இதுவே அவன் எண்ணமாய் இருந்தது.

இப்போது….இடையில் சரவணா சேக்காளி…. “ஏன்லே நீ வேற…அந்த புள்ள அம்பூட்டு  சாதிசனத்துக்கு முன்ன…நான் என் சின்ன மச்சன கட்டிக்கிறேன்னு சொல்லுடுச்சி அப்புறம் என்னப்பூ….?”

அதை கேட்ட சரவணன் முகத்தில் வியந்த ஒரு பார்வை அவ்வளவே….கண்ணை  மூடிக் கொண்டான்.

 

Advertisement