Advertisement

அத்தியாயம்…..3

வீரப்பாண்டியன்  கோயிலில் நுழைந்ததும்  காத்த முத்து…. “ என்ன தம்பி நீங்க மட்டும் வந்து இருக்கிங்க…..?”

“தோ வந்துடுவாங்க அண்ணே…..” சொன்னவன் அடுத்து ஏதோ கேட்க வருவதும் தயங்குவதுமாய் இருந்தான்.

காத்த முத்துவோ அவனை கவனியாது ஐய்யரிடம்…. “ வெரசா  முடிச்சிடனும் சாமீ….சாங்கியம் எல்லாம் சுருக்கமா பாத்துக்குங்க.”  சொன்னவன்…

அங்கு மறைவாக  இருந்த பகுதியை நோக்கி …. “ என்ன இன்னுமா பொண்ணுக்கு  சீல கட்டல….?”

அங்கு பெண்ணுக்கு துணி மாற்ற  அறை என்று தனியாக எதுவும் இல்லை. திருமணம் தள்ளி போனால் ஒரு சிலர் இங்கு திருமணம் செய்கிறோம் என்று வேண்டிக் கொள்வர். அது போல் இங்கு பல திருமணங்கள் நடந்தும் இருக்கிறது.

கோயில்  நடுக்காட்டில் இருப்பதால் அது கொஞ்சம் பாழடைந்தது போல் தான் காணப்படும்.

கொடை(திருவிழா….) அப்போது தான் இந்த கோயிலில் கூட்டம் அலைமோதும். மத்த  நேரத்தில் வனாந்திரம் தான். அதனால் பெண்ணுக்கு உடை மாற்ற என்று அங்கு தனியாக அறை என்பது  இல்லை.

ஒரு மூலையில்  கணத்த மரங்கல் நான்கு  சூழ்ந்தார் போல் இருக்கும். அதில் நாள்  புறமும் துணியை வைத்து மறைத்து, அங்கு தான் பெண் புடவை மாற்றுவதோ…மாப்பிள்ளை வேஷ்ட்டி சட்டை மாற்றுவதோ நடைபெறும்.

தான் குரல் கொடுத்தும் இன்னும் வராததை பார்த்து…. “ என்ன பெண்டுகலா உங்களுக்கே சேல கட்ட  மறந்துடுச்சா என்ன…..?”

தன் மனைவியையும் ,மருமகளையும் ,பெண்ணுக்கு  இது போல் உதவி தேவைப்படும் என்று அழைத்து வந்த காத்த முத்து உரிமையுடம்….சத்தம் மிட…

காத்தமுத்துவின் மருமகள்….மாமனாரின் பேச்சில் விரைந்து வந்து…. “ அந்த பொண்ணு பாக்க தான் ஒல்லி பிச்சான் போல இருக்கு. என்ன வலு…என்ன வலு….புடவைய இடுப்புல சொருக விட மாட்டேங்குது.”

வீரப்பாண்டியன் கண்டு கொண்டான.  புடவை கட்டி தானே….மணவரையில் உட்கார வைக்க  வேண்டும். நேரம் தாழ்த்த இப்படி செய்கிறாள் என்று….இதில் ஆண் நுழைய முடியாது.

“ அந்த புள்ள என்ன  உடை உடுத்திட்டு இருந்தது….?”

“ பான்ட் சட்ட போல அண்ணே….” காத்த முத்துவின் மருமகளின் பேச்சில் அது சுடி என்று புரிந்துக் கொண்டவன்.

“அதையே போட்டுக்க சொல்லு….”

“ என்ன தம்பி….” காத்தமுத்துவின் பேசுக்கு…

“ அந்த பொண்ணு நேரம் போக்க பாக்குது. அதுக்குள்ள வீட்ல இருந்து யாராவது வந்துடுவாங்கன்னு…..அது  மேலயே புடவை சுத்திக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல. வெரசா….” அப்பெண்ணை அவசரப்படுத்தி அனுப்பியவனின் கைய்பேசி அழைப்பில் அதை ஏற்றவன்..

மறுபுரத்தில் சொல்லப்பட்ட செய்தியில்…. “என்னலே சொல்ற….?”

“ யெண்னே….நம்ம சின்னாய்யாவ அடிச்சி புட்டங்கா…யெண்ணா…..” இதை சுத்தமாக அவன் எதிர் பார்க்கவில்லை. எதிர் பார்த்து இருக்க  வேண்டுமோ….

ஓடிய எண்ண ஓட்டத்தை தடைசெய்து…. “பெருசா ஒன்னும் இல்லலே…..?”

“ கை வீங்கி போகுதுண்னே…நான் ஹாஸ்பிட்டலுக்கு தான் கூட்டுட்டு போறேன்.”

“ நம்ம பரமு ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போலே…”

“ மத்தவங்களுக்கு ஒன்னும் இல்லலே…”

அந்த  பக்கம் லேசா தயங்குவது போல் இருக்கவும்… “ ஏய் சொல்லுலே ஒன்னும் இல்லலே….?”

“ இல்லேண்ணே இல்ல. அவங்க எல்லோரையும்  கோயிலுக்கு தான் பாதுக்காப்ப அனுப்பி வெச்சி இருக்கேன்.  நான் நம்ம மத்த பசங்கல கூட்டிட்டு போறேன்.”

“ பாத்துலே….” சொல்லோடு போனை அணைத்தவனுக்கு இந்த ஒரு மாதமாக கட்டு படுத்திய கோபம் பொங்கியது.

அவனில் ஒருத்தன் எதிரில் இருந்தால் போதும்….குடலை உருவி இருப்பான். என்ன செய்யிறது…?என்ன செய்யிறது….? தோக்க கூடாது. தோக்க கூடாது. இதுவே அவன் எண்ணமாய் இருந்தது.

இப்போது பேசியில் பேசியவன் சரவணனின் சேக்காளி (நண்பன்) தான். பெண்களை பாதுகாப்பாய் அனுப்பினேன் என்றால்…அவர்களையும் ஏதாவது செய்ய பார்த்தார்களா….

இந்த ஊரை பொறுத்தவரை கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள். ஆனால் பெண்கள்  மீது கை வைப்பது என்பது பிரச்சனையானது என்பதை விட…

“பெண்டுகள் மீதாடா கை வெச்சா….?” கேட்கும் விதத்திலேயே  நாண்டு கிட்டு செத்து விடலாம். அதனால் தான் சரவணாவை மட்டும் வீட்டு பெண்களை அழைத்து வர அனுப்பினான்.

அதுவும் சங்கரனின் பார்வை சரியில்லை என்ற பட்சத்தில் தான். அவன் எதிர் பார்த்தது அவர்கள்  கல்யாண பெண்ணையே ஏதாவது செய்து விடுவார்கள் என்று, அவன் கவனம் முழுவதும் கல்யாண பெண் மீது இருந்தது தான் அவன்  செய்த பெரிய தவறாய் போனது.

“ தம்பி யாரு போன்ல….?”

“சரவணாவோட சேக்காளி தான் ….சரவணனை  அடிச்சு புட்டாங்கலாம். அதான் ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறான்.”

“ என்னப்பா இது….?இப்போ என்ன செய்யிறது….? சின்ன தம்பிக்கு பெருசா ஒன்னும் இல்லையே….?”

வீரப்பாண்டி  யோசனையுடன் ……. “அவன் சொல்றத பார்த்தா  கை முறிவு போல, அது வரை தான் தெரியுது.”

“ வீட்டு பெண்களுக்கு ஒன்னும் இல்லலே….?” காத்த முத்து தொடர்ந்து கேள்வி கேட்டதில்,

வீரப்பாண்டியனுக்கு இவர் கொஞ்ச நேரம் சும்மா இருந்தா நல்லா இருக்குமோ என்று தோன்றியது. தங்கள் மேல் உள்ள அக்கறையில் தான் இந்த விசாரணை தெரிகிறது.

இப்போது அவனுக்கு தனியாக யோசிக்க வேண்டி இருந்தது. அதற்க்கு ஏற்றார் போல்…. “ தம்பி இப்போ என்ன செய்யிறதப்பூ….?”

“அது தான்  கொஞ்சம் அமைதியா இருங்க. அப்போ தான் என்ன செய்யிறதுன்னு யோசிக்க முடியும்.”

ஒரு ஆலமரத்தின் கீழ் அமர்ந்து தலை மேல் கை வைத்து அமர்ந்து விட்டவனின் காதில்….. “என்ன  சீல கட்டல…?” அந்த கேள்வியில் தான் எத்தனை நக்கல்.

“ ஓ மாப்பிள வரலையா…..?”  காத்த முத்து தன் மனைவியை அழைத்து சொன்ன விஷயத்தை அவர் தன் மருமகளுக்கு ஒலிப்பரப்பும் போது கேட்ட கல்யாணப்பெண்ணுக்கு அத்தனை குதுகலம். அதனால் விளைந்ததே இந்த பேச்சு…

குடும்பமே திமிர் பிடித்த குடும்பம். அடக்குறேன் மொத்த பேரையும் அடக்குறேன். அவன் எண்ணத்துக்கு தீபம் காட்டுவது போல் வந்த அவர் குடும்ப பெண்களின் வெளிர் தோற்றத்தில்…

“ என்ன ஆத்தா…..?” முகம் குழம்பி போனவராய்…

“ ஒன்னும் இல்ல அப்பூ…நம்ம சின்னவன நினச்சி தான்.” இழுத்தார் போல் சொல்லி முடித்தார்.

“ இல்ல அப்பூ…. அடிக்கிறப்ப அடிப்பட்டு இருந்தா பரவாயில்ல…..ஆனா அடிக்காம அடி வாங்கி நிக்கிறது.” கோசலையில் பேச்சில்….

“என்ன அத்த…என்ன ஆச்சி….?”

“நம்ம வீட்டு பெண்கள் மேல கை வைப்பேன்னு….அவனுங்க யசோதா சுத்தியும், ஷெண்பா சுத்தியும்  சூழ்ந்துட்டு கண்ட இடத்துகிட்ட கை கொண்டு போய் தொடராப்பல…..ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க அப்பூ….”  சொல்லி விட்டு தலையில் அடித்துக் கொண்டவரின் கைய் பிடித்து“தொட்டானுங்கலா….?தொட்டானுங்கலா….?” வீரப்பாண்டி கத்திய கத்தலில்…

புஷ்பவதி…. “ இல்ல பெரியவனே..இல்ல. அதுலா  இல்ல.” ஆத்திரத்தில் ஏதாவது செய்து விடுவானோ… என்ற பயத்தில் தன் மகனின் கோபத்தை குறைக்க….அவன் தோள் பற்றி  அமைதி படுத்துயவரின் பேச்சை காதில் வாங்காது தன் அத்தையை பார்த்து…

“ நீங்க சொல்லுங்க அத்த…..”

“இல்ல அப்பூ. ஆனா நீங்க என் ஆளு மேல கை வெச்சா தொடுவோமுன்னு அந்த சங்கரன் கை கொண்டு போனான். நம்ம சரவணா அது பார்த்து தான் பயந்து அவனுங்க அடிக்க அடிக்க வாங்கிட்டு இருந்தான் அப்பூ… அது பார்த்து என் ஈரக்குடல கலங்கிடுச்சி  அப்பூ….”

வீரப்பாண்டியனுக்கும் சரவணப்பாண்டியனுக்கும்,  இரண்டு வயது தான் வித்தியாசம். தன்னுடைய ஆறாவது வயதில் தான் அத்தைக்கு திருமணம் ஆனாது.தங்களை  வளர்த்தது மொத்தமும் அத்தை தான்.

திருமணம் முடிந்து உடனே வீட்டுக்கு வந்த தங்கையின் துக்கத்தை போக்க அவர்  கையில் தன் இருபிள்ளையும் கொடுத்த வீராச்சாமி….

“ இனி இவர்கள் உன் பொறுப்பு….” தான் வளர்த்த பிள்ளை  தன் கண் எதிரில் அடிவாங்கியதை பொறுக்க முடியாது…

“ அவனுங்கல விடாக்கூடாது அப்பூ…அவனுங்கல விடக்கூடாது. எந்த கல்யாணத்த நிறுத்த அவனுங்க இப்படி செஞ்சாங்கலோ அத நடத்தி காட்டனும் அவங்களுக்கு….”  கோசலை ஆவேசமாக பேசிக் கொண்டு இருக்கும் வேளயில்…

இந்த இடைப்பட்ட நேரத்தில் ஊரு ஜனம் மொத்தமும் அக்கோயிலில் கூடிவிட்டது. பஞ்சாயத்தில் நடக்க வேண்டிய சண்டை இங்கு தொடர்ந்து ஆள் ஆளுக்கு பேசி பேசி சண்டை நீண்டுக் கொண்டே  போனது.

இதை தானே சங்கரன் எதிர் பார்த்தான். அவன் முகத்தில் மட்டும்  மந்தகாச புன்னகை.

“ தாலி கட்டுற மாப்பூ தான்  ஹாஸ்பிட்டல படுத்திட்டானே…..இப்போ தூக்கி வந்த பொண்ண ஊறுகாயா போட போறிங்க….?” சங்கரின்  பேச்சில் அப்படி ஒரு நக்கல்…

சங்கரனின் பேச்சை கேட்டு மீசை என்று ஒட்டிக் கொண்டு இருந்த நாளு ****விரல் கொண்டு நீவி விட்டவாறே சங்கரனை பார்த்தான்.

பெண்ணை தூக்கியதும்  கங்காதரனோடு சங்கருக்கு தான் பகிர் என்று ஆகிவிட்டது. அவ்வூரில் பாதி சொத்து வீரப்பாண்டியது என்றால் மிச்ச பாதி கங்காதரனுடையது.

கங்காதரனுடைய பலவீனம் ஜாதி வெறி .தன் ஜாதிக்காக என்ன வேணா செய்பவர். தன் தகுதி அவன் ஜாதி….அதை பயன் படுத்தி அவன் வீட்டுக்குள்  நுழைந்து, அவர் மனதில் இடம் பிடித்து, அவர் காலால் இட்ட வேலையை தலை ஏற்று செய்தது எதற்க்காக….? அவரிடம் இருக்கும் பாதி சொத்தை மகள் மூலம் பெற…

அவனின் அதிர்ஷ்டம் சித்தார்த்தின் காதல் மணம். மகனையே கொல்ல திட்டம் தீட்டி கொடுத்ததோடு மட்டும் அல்லாமல் அவன் சந்ததியும் அழிக்க சொல்லி விட்டான்.

நாளை பின்ன சொத்து பிரச்சனை வந்துட கூடாதுலே. இது வரை அவன் வக்கீல் மூளை  நன்றாகவே வேலை செய்தது.

“ மாமா நம்ம ஸ்ரீமதிய இனி காலேஜ் அனுப்ப தேவையில்லை. நம்ம குடும்ப  கவுரவம் காக்கா ஒரு பலி கொடுத்தது போதும்.”

சங்கரனின் பேச்சை புரிந்திக் கொண்டு…அடுத்த நாளில் இருந்து பெண்ணை காலேஜை விட்டு நிறுத்தி விட்டார்.

பின் தான் சங்கரனுக்கு அப்பாடி…என்று இருந்தது. முதலில் சொத்துக்காக தான் அந்த வீட்டில் வலைய வந்தது. வருட கூட கூட ஸ்ரீமதியின்  அழகும் கூடிக் கொண்டே போவதை பார்த்து….

“என்ன  இந்த புள்ள  வர வர அழகு கூடிட்டே  போகுது. காதல் கீதலுன்னு போயிடுமோ….” அவன் பயத்துக்கு ஏற்ப அண்ணன் காதலித்தது மட்டும் அல்லாது, திருமணம் முடித்து குழந்தையும் கொடுத்து விட்ட செய்தி அறிந்து …

அதை கங்காதரனிடம் பத்த  வைத்து…..பாதி சொத்தை முழுதாக்கி….இப்படி ஏகப்பட்ட வேலை செய்து தான் காத்திருக்க…

நோகாம நோம்பு கும்பிடுறது போல…இவனுங்க பொண்ண தூக்கிட்டு போயி தாலி கட்டுவாங்கலா…..?

நானெல்லாம் யாரு…..? அந்த சகுனி கிட்டயே சடுகுடு விளையாடுவேன்லே…. பஞ்சாயத்தில் கதி கலங்கி கங்காதரன் …

“ இப்போ என்ன செய்யிறது சங்கரா….? நான் வீட்டு பொண்ணுங்க மேல கை வைக்க மாட்டேங்கன்னு நினச்சனே….?”

“ நானும் தான் மாமா…அது தான் கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டேன். மாமா இது பயப்படுற நேரம் இல்ல. நீங்க இந்த பஞ்சாயத்த சீக்கிரம் முடிங்க….அதுக்குள்ள  ஏதாவது யோசனை….செய்யிறேன்.”

சொன்னது போலவே…. “ மாமா இப்போ நம்ம ஆளு மூலம் தான் தெரிஞ்சது அவங்க குலகோயில்ல வெச்சி…நம்ம பொண்ண கல்யாணம் கட்ட போறது.”

“ என்னது கல்யாணமா….? என்ன சங்கரா சொல்ற….?”

“ஆமாம்….” சொன்ன சங்கரிடம்…. “ எத்தன வெளி ஆளுங்க வேணா கூட்டிக்க… எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்ல….தாலி கட்டுறதுக்கு முன்ன பொண்ண கூட்டிட்டு வர முடிஞ்சா கூட்டிட்டு வாங்க… முடியலேன்னா…..முடிச்சிடுங்க.” இது தான் கங்காதரனின் சாதி வெறி….

உம் பொண்ண எமனுக்கு கொடுக்க தான் உன் பின்னாடி நாய் மாதிரி சுத்தினேனா…..மனதில் நினைத்தவன்…

“ மாமா வெளியாட்களை கூட்ட எல்லாம் நேரம் இல்ல.”

“நம்மாலா அவனுங்கல எதிர்த்து பொண்ண கூட்டிட்டு வர முடியுமா….?” எதிரியோட பலத்தையும் நன்கு தெரிந்து வைத்திருப்பவர் கங்காதரன்.

“ முடியாது…”

“அப்போ எப்படி சங்கரா….?”

“நம்ம பலமே …” தன் தலையில் தட்டி கொடுத்து…. “ இது தான் மாமா…”

“ இப்போ அவனுங்க மொத்த கவனமும் பொண்ணு மேல தான் இருக்கும். நாம இப்போ பையனை தான் தடுக்கனும்.”

“யாரு அந்த வீரப்பாண்டியனையா…..முடியுறதை  பேசு சங்கரா…..”

“ மாப்பிள்ள வீரப்பாண்டி இல்ல…சரவணப்பாண்டி….”

“மூத்தவன் இருக்கும் போது….”

“ மூத்ததுக்கு தான் வீட்லயே ஒரு கருவாச்சி இருக்கே…. அவர் அப்பா சொல்லிட்டு போய் இருக்காரே…..சொன்ன வாக்கு காப்பாத்துற பரம்பரையாச்சே….”

“ம்..இப்போ புரியுது சங்கரா….நீ நடத்து…அவனுங்கலா….? நம்மலான்னு….? ஒரு கை பார்த்துடலாம்.” அப்போது நீவ ஆராம்பித்த மீசையை இப்போது வரை நீவிக் கொண்டு  தான் இருக்கிறார்.

சங்கர் வாய் வைத்துக் கொண்டு சும்மா இருந்து இருந்தால்….அவன் எதிர் பார்த்தது போல் தான் நடந்து இருக்கும்.

ஆனால் விதி…யாருக்கு யார்…?என்று கடவுள் போட்ட முடிச்சியை மாத்த முடியுமா….? சரவணனை  அடிக்க அவர்கள் வீட்டு பெண்ணிடம் கை கொண்டு போனானே ஒழிய கை வைக்கவில்லை.

அதில் எல்லாம் அவன் சுத்தம் தான்…..யசோதா….. “ பொம்பளைங்கல காட்டி அடிக்கிறியே …நீ எல்லாம் ஒரு ஆம்பிளையா….?” துப்பாத குறையாக கேட்க.

“ ஏ கருவாச்சி நல்லா பூப்பா மாதிரி இருக்குற உன் மேல கை வைக்க எனக்கு  ஒன்னும் ஆசை இல்ல. இப்போ நான் உன்ன பிடிச்சி இருக்கிறதுக்கே எத்தன தடவ கை கழுவனுமோ….? ஸ்ரீய கை பிடிக்க உன்ன எல்லாம் பிடிக்க வேண்டி இருக்கே…நானே  வெறுப்புல இருக்கேன். செத்த வாய மூடி சும்மா இரு.”

என்ன தான் தைரியமான பெண் என்றாலும், தன் தோற்றத்தையும், நிறத்தையும் வைத்து கேலி செய்தால் பாதிக்க தானே செய்யும். யசோதா அவனின் பேச்சில் பலமாக அடி வாங்கினாள்.

ஸ்ரீ யார்….? யோசனையின் முடிவில்…உனக்கு அவ கிடைக்க விட மாட்டேன்டா….அவள் சபதம்….அவன் ஆசைக்கு சமாதியாய் முடிந்தது.

 

Advertisement