Advertisement

அத்தியாயம்…2

கிழிந்த நார் போல் கிடக்கும் ஷெண்பாவை பார்க்க பார்க்க அந்த தாய் உள்ளம் வேதனை அடைந்தது என்றால்…

இளம் ரத்தமான வீரப்பாண்டியனுக்கும், சரவணப்பாண்டியனுக்கு ரத்தம் கொதித்தது. எப்போதும் கோபத்தை அப்போதே வெளிப்படுத்தும் தன் அண்ணனின் இந்த அமைதி ஏனோ சரவணனுக்கு பிடிக்கவில்லை.

“ அண்ணா அவனுங்கல சும்மா விடக்கூடாது.”

“நானும் விடனுமுன்னு சொல்லலையே….”

“ அப்போ  ஏண்ணே… சும்மா இங்க இருக்கனும்.” இது போல் கை கட்டி அந்த மருத்துவமனையில் நிற்பது, சரவணனுக்கு ஏதோ கையாலாகாத தனமாக தோன்றியது.

“ என்ன செய்யலாம். போய் அருவா எடுத்து சீவிப்புடலாமா….?” அதை தான் நினைத்தான் அந்த இளம்காளை.

“ அவனுங்க எப்படி சூதனமா செஞ்சாங்கலோ ….அதே அவனுங்களுக்கு திருப்பி கொடுக்கனும்.”

“ என்ன செய்யலாம்…?.”

“ இங்கே பேச வேண்டாம்.  வீட்ல பேசிக்கலாம்.” அந்த மருத்துவமனை கங்காதரன் ஜாதிக்காரனுடையது.

இவர்களை கண்காணிக்க என்று  ஐந்து பேர் வருவதும் போவதுமாய் இருந்தனர். இது தான் கங்காதரன்.

படித்த படிப்பை நல்லதுக்கு காட்டாது ஜாதி வெறிப்பிடித்து ….அவன் ஜாதியில் வேத்து இனத்தவர் கலந்தால்….ஒன்று பெண்ணை சாய்த்து விடுவர். இல்லை பையனை.

சாய்ப்பது என்றால் அருவாள் கொண்டு இல்லை. திருமணம் முடிந்து தலை மறைவாகியவர்களை எப்படி கண்டு பிடிப்பார்களோ….விபத்து…. இல்லை அவர்கள் தங்கி இருக்கும் வீட்டில் திருடன் புகுந்து தடுக்க வந்த ஒருவரை வெட்டி விட்டான். இப்படி தான் அவர்கள் வீழ்த்துவது.

இப்போது தன் மகனையே…..

“ சொல்லி இருக்கலாம்.”  தன் தங்கை திருமணம் முடிந்து அவனோடு குடும்பமும் நடத்தி இருக்கிறாள். இது தான் வீரப்பாண்டியனுக்கு மனது ஆறவில்லை.

“செய்து இருக்கலாம். ஏதாவது செய்து இருக்கலாம். இப்படி வம்சம் அழித்து.”

ஆம் கங்காதரன் தன் வம்சத்தை அழித்ததோடு ஷெண்பாவின் கருப்பைய்யே அகற்ற சொல்லி விட்டான். அதுவும் அந்த மருத்துவர் சொன்ன….

“ இப்போ இருக்க படிக்கிற பிள்ளைங்களுக்கு என்ன அவசரமோ….போன தடவை செய்த கருக்கலைப்பில் கருப்பபை புண் ஆகி செப்டிக் ஆகிவிட்டது.

“ அத எடுக்கலேன்னா உயிருக்கே ஆபத்து. அதான் எடுத்து விட்டோம்.” கங்காதரன் படிக்க வைத்த பையன் அவன் சொன்னதை அச்சு பிசகாமல் அப்படியே ஒப்பு வித்தான்.

“எங்களை கேட்காது எப்படி….?” கேட்க முடியாது. கங்காதரன் மகன்   சித்தார்த் ஷெண்பாவின் கணவன் என்ற முறையில் கைய்யெப்பம் இட்டு இருக்க…

பதிவு திருமணம் செய்துக் கொண்டவர்ளை இது செல்லாது என்று அண்ணன் என்ற முறையில் கூட தங்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது தான் கங்காதரனின் நரித்தந்திரம்.

எப்படி பட்ட சூழ்ச்சி….?தன் வீட்டில் காத்தமுத்து சொன்னதை நினைத்தால் இப்போதும்…..

“ தம்பி அவனுங்க  திட்டம் போட்டு எல்லாம் செஞ்சி முடிச்சிட்டாங்கப்பா….அவன் வீட்டு பையனை இங்கு வரவழச்சி….அங்கு புருஷன் செக்கப் கூப்பிடுறான்னு நம்ம பாப்பாவை ஹாஸ்பிட்டலும் போக வெச்சி,  பரிசோதனை என்ற பேருல கருப்பைய்யவே எடுத்துட்டானுங்க….”

வீழ்த்த வேண்டும் அவனுங்களையும் இதே போல் வீழ்த்த  வேண்டும், திட்டம் வகுத்த விரப்பாண்டி….

ஷெண்பாவை  வீட்டுக்கு  அழைத்துக் கொண்டு  வரும் வரை அமைதி காத்தான். அனைத்தையும்  செய்த அவன் தங்கையிடம் முகம் கொடுத்து பேசவில்லை.

ஒரு நாள் பேசவில்லை என்றாலும் அன்றைய நாள்  என்னவோ போல் கழித்தவன். ஒரு மாதம் சென்று வீட்டுக்கு அவளை அழைத்து  வந்தும் பேசவில்லை.

ஆனால் ஒரு அண்ணனாய்  இவளை இந்த நிலைக்கு தள்ளியவர்களை  சும்மா விட அவன் தயாராய் இல்லை.

ஒரு நாள் காலையிலேயே பஞ்சாயத்து பெரிய தலையை வீட்டுக்கு வரவழைத்து….தன் தங்கையின்  நிலை சொல்லி பஞ்சாயத்து கூட்ட சொன்னான்.

“ நடந்து இத்தன நாள் சென்டு  இப்போ என்ன…..?” அந்த தலைவர் கங்காதரனின் ஆள்.

“இப்போ தான் என் தங்கச்சி  வீட்டுக்கு வந்தா….உடம்பும்  தேறனும்லே….”

“எதுக்கு தம்பி….? நம்ம வூட்டு பொண்ணுக்கு நடந்தது ஊருல எல்லோருக்கும் தெரியப்படுத்தனுமா…..? அப்படியே கமுக்கமா விட்டுடுவீயா….?”

“ விட்டா…விட்டா என் தங்கையின் கருவறை அவளுக்கு திரும்பவும் கிடைத்துடுமா….?சொல்லுங்க விட்டுடுறேன். மாட்டின் மடியில்  இருந்து கரந்த பாலை எப்படி திரும்பவும் அதில் சேர்க்க முடியாதோ…

அதே நிலையில் தான் என் தங்கையின் வாழ்க்கையும் இருக்கு. அவனுங்களுக்கு இதுக்கு உண்டான தண்டனை கிடைக்கனும்.”

“சரிப்பா…நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன். நீ கேட்கல நீ சொன்னாப்பல…கூட்டிடலாம் பஞ்சாயத்தை.”

பஞ்சாயத்தில் பாதி பேர் வீரபாண்டியன் இனத்தவர்கள் என்றால், மீதி பேர் கங்காதரன் இனத்தவர்கள். இரு பிரிவினருக்கும்  தீர்ப்பு பொதுவாக இருக்க வேண்டும் என்று தான், வழி வழியாக இரு பிரிவினரையும் பஞ்சாயத்தில் இருக்கும் படி பார்த்துக் கொண்டனர்.

தன் இனத்தவரை கூட்டி அவர் காதில் ஏதோ கிசு கிசுத்து விட்டு அவரை அனுப்பி விட்ட  வீரப்பாண்டியன் பின் தன் வீட்டில் உள்ள அனைவரையும் கூப்பிட்டான்.

அதில் தன் தங்கையும் அடக்கம்….முதலில் கொதிப்பில் இருந்த சரவணப்பாண்டியன் தன் அண்ணன் சொல் கேட்டு அமைதியாகி விட்டான்.

அண்ணன் ஏதோ  பெருசா திட்டம் போடுகிறார் என்று…இப்போது கூப்பிட்டதும் ஆவளுடன் வந்தது சரவணப்பாண்டி தான்….

முதலில் தங்கையை பார்த்து…. “ அடுத்து நீ என்ன செய்ய போற….?” அடுத்தவரிடம் பேசும் அதே கடுமையான குரலில் தான் கேட்டான்.

“அண்ணா…”  அழைத்தவள் அதன் பின் ஒரு வார்த்தை  கூட வாயில் இருந்து வரவில்லை. அழுது  அழுது கேவிக் கொண்டு போனது.

அங்கு இருந்த  அனைவருக்கும் கண் உடைப்பு எடுத்தாலும், யாரும் அவளை தேத்தவில்லை. செய்தது  சின்ன காரியமா…..? அதால் நடந்தது….அவள் வாழ்க்கையே குழிதோண்டி புதைத்து விட்டதே…இனி அவள் வாழ்க்கை.

அதை நினைத்து தான் வீரப்பாண்டிக்கும் மனது கொதித்து விட்டது. இனவெறியில் தன் மகனை கொன்றாலும் கொல்ல காரணமாக அமைந்தவளின் கருக்கலைப்போடு   விடாது….இனி வாழ்க்கையே இல்லாது போக வேண்டும் என்று மொத்தமாய் அழித்து விட்டனரே….

“இவள் சொல்லி இருந்து  இருந்தால்….இவ்வளவு தூரம் செல்ல விட்டு இருக்க மாட்டனே…..” நம்பியதுக்கு  கிடைத்த பலன் அவனை பலமாக தாக்கியது.

“இப்போது அழுது ஒன்னும் பிரயோசனம் இல்ல. நடந்ததை மாத்த முடியாது. ஆனா அடுத்து என்ன அது தான்…”

“அடுத்துன்னா….?” திருவிழாவில்  காணாமல் போன குழந்தையின் நிலையில் தான் ஷெண்பா இருந்தாள்.

“ படிப்பு போயிட்டு தானே இருக்கு…..?”

“ ம் அது போயிட்டு தான்  இருக்குண்ணே….”

“விடுதி….”

“ அதுல தான் தங்கிட்டு இருக்கேண்ணே….?”

ஒரு அண்ணனாய் அப்போ எப்படி குழந்தை உருவாச்சி கேட்க முடியாது தங்கையின் முகத்தை பார்த்தான்.

கடந்த  ஒரு மாதமாய் அவளை கவனித்து பார்க்கவில்லை. பார்த்தால் உடைந்து விடுவேன். இது உடையும் நேரம் இல்லை,  என்று கருதியே தங்கையின் விஷயம் அனைத்துக்கும் தம்பியை அனுப்பியது.

நினைத்தது போலவே கண்ணை சுற்றிய கருவளையம். ஆண்களை போல் ஷெண்பா அடர்ந்த நிறம் கிடையாது. மாநிறத்தில் தோற்ற பொலிவோடு தான் இருப்பாள்.

இப்போது தண்ணீர் காட்டாத செடி எப்படி வதங்கி காணப்படுமோ  அந்த நிலையில் தங்கையை பார்த்ததும்…

விடக்கூடாது விடக்கூடாது. உங்க வீட்டு வம்சம் மத்த இனத்தவரின் கருவறையில் உருவாக கூடாதா…?

“ சரவணா உனக்குன்னு தனிப்பட்டு ஏதாவது விருப்பம் இருக்கா….?இருந்தா இப்போவே சொல். நீயும் என் கழுத்தை அறுத்துடாதே….”

இந்த பேச்சில்…ஷெண்பா அழுகையோடு தன் அறைக்குள் ஓட….

“அண்ணா என்னண்ணே..என் கிட்ட போய். என்ன விஷயம் சொல்லுங்க….”

“ நாளைக்கு  பஞ்சாயத்தை கூட்ட சொல்லி இருக்கேன்.”

“ நியாயம் கிடைச்சிடுமாண்ணே…..?”

“கிடைக்குமுன்னு சொல்லலையே….”

அப்போ எதுக்கு இந்த பஞ்சாயத்து என்பது போல் தன் அண்ணனை பார்க்க…. “அவங்க இனம் இதுல சம்மந்தப்பட்டு இருக்குன்னா….அவங்க ஜாதிக்காரன்  ஆம்பிளைங்க அத்தன பேரும் பஞ்சாயத்துல தான் இருப்பாங்க.

ஒரு  மாசமா கங்காதரன்  தன் பொண்ண காலேஜ் அனுப்புறது இல்ல.  இங்கு பஞ்சாயத்து ஆராம்பிச்சதும் நம்ம ஆளுங்க அவங்க வீட்ல இருந்து பொண்ண தூக்கிடுவாங்க.”

அனைத்தும்  அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த சரவணப்பாண்டியன் கடைசியாக கேட்டானே ஒரு கேள்வி….. “ எந்த பொண்ணை…..?”

எல்லோருக்கும் காபி கொடுத்துக் கொண்டு இருந்த யசோதா சரவணன் பேச்சில் சிரித்து விட….

சிறிது நாளாய் சிரிப்பே மறந்து இருந்த அக்குடும்பம் யசோதா சிரிப்பையே ஆராம்பமாய் பற்றிக் கொண்டு அனைவரும் சேர்ந்து சிரித்தனர்.

“ இது ஒன்னும் அவ்வளவு பெரிய ஜோக் இல்ல.”

தண் அண்ணனிடம் கேட்ட பிறகு தான் அவனின் முட்டாள் தனம் புரிந்தது. கங்காதரன் வீட்டில் புகுந்து அவர் மனைவியா தூக்க சொல்வார். மகளைய் தானே….

அதுவும் இருமகள் இருந்தால் பரவாயில்லை. பெயர் தெரியாது. பார்த்ததும் கிடையாது. ஊரின் பெரிய தலை என்ற வகையில் அக்குடும்பத்தை பற்றி தெரியும். அப்படி இருக்கும் போது இக்கேள்வி….

இனி அண்ணா சொல்லி முடிக்கும் வரை  வாய் திறக்க கூடாது…..முடிவு எடுத்தவன் யசோதாவை முறைக்கவும் தவறவில்லை.

“நான் ஏன் பஞ்சாயத்து நடக்கும்  போது அந்த பெண்ண தூக்க சொன்னேனா… நம்ம தூக்குனது எல்லோருக்கும் தெரியனும்.

தன் இனம் அடுத்த இனத்தவரை கல்யாணம் செய்தது கூட தெரிய கூடாதுன்னு தானே காதும்  காதும் வெச்சா மாதிரி காரியத்தை முடிச்சாங்க.”

“நாம  அனைவருக்கும்  தெரிஞ்சு தூக்கனும். தூக்குறது முக்கியம் இல்ல. நம்ம அந்த பொண்ண தூக்குன அடுத்த நிமிஷத்தில் இருந்து, அந்த பெண்ணோட உயிருக்கும் ஆபாத்து. பாதுகாப்பு ரொம்ப முக்கியம். ஊர் அறிய நம்ம குடும்பத்தோட வாரிசு அவ வயித்துல உருவாகனும்.”

அண்ணன் பேசி முடிக்கும் வரை ஏதூம் பேசக்கூடாது என்று இருந்த சரவணப்பாண்டியன்….

“வாரிசு….” என்றதில்…

“அண்ணா….”

“நாளைக்கு உனக்கும், அந்த பெண்ணுக்கும், நம்ம கருப்பண்ணச்சாமி கோயில்ல கல்யாணம். அதுக்கு உண்டான ஏற்பாட்ட… அடுத்த ஊர்க்காரங்க  இங்கு கல்யாணம் செய்யனும் வேண்டுதல் போல செய்ய ஏற்பாடு செஞ்சிட்டேன்.

அந்த பொண்ண அங்கு தூக்கிட்டு வந்துடுவாங்க…நாமே நேர அங்கு போயிடலாம். அம்மா நீங்க எல்லாம் எப்போவும் போல சாதரணமா கோயிலுக்கு வாங்க.

அங்கு  வந்து புடவை மாத்திக்குங்க…நகையும் தான். ஆ மறக்கமா ஷெண்பா வரனும்.”

“ அண்ணா….” எப்படி கேட்பது தயங்கியவனிடம்…

“ என்ன பொண்ண பாக்கனுமா….?”

“அய்யோ அதுலாம் இல்லேண்னே…..உங்களுக்கு முன்ன…..”

வீரப்பாண்டி பேச்சை மறுக்காது கேட்டாலும், அனைவரின் மனதிலும் இது தான் இருந்தது. பெரியவன் இருக்க சின்னவனுக்கு எப்படி என்று….?

சின்ன மகன் கேட்ட தைரியத்தில் புஷ்பவதியும்…. “பெரியவனே எனக்கும் அது தான் யோசனையா இருக்கு….”  பெரிய மகனுக்கு வீரப்பாண்டி என்று தன் மாமனார் பெயர் வைத்ததால் , பெயர் சொல்லி அழைக்காது பெரியவனே என்று கூப்பிட ஆரம்புத்த புஷ்பவதி சின்ன மகனை சின்னவனே என்று அழைக்க ஆராம்பித்தார்.

“ஆத்தா  இப்போ அது எல்லாம் பாக்கும் சூழ்நிலையில  நாம இல்ல.”

“சரி…பாத்து சூதனமா  செய்ங்க. எதுக்கும் துணிஞ்சவங்க….” தன் மகளை நினைத்து தன் மகன்களுக்கும்  ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் சொன்னார்.

“என்ன மதனி …..ஆம்பிள சிங்கங்கல பெத்துட்டு கண் கலங்கலாமா….?” எல்லாம் அவங்க பாத்துப்பாங்க.”

வீரப்பாண்டி  திட்டப்படி தான் அனைத்தும் நடந்தது. பஞ்சாயத்து நடக்கும் போது இவன் எப்போது அப்பெண்ணை  தூக்க வேண்டும் என்று தன் கைய்பேசி மூலம் சொல்ல…

சரியாக செய்து முடித்து விட்டதுக்கு அடையாளமாய் அவன் பேசியில் வெற்றியின் குறி வந்ததும், அவன் எதிர் பார்த்தது போலவே…

அந்த பதட்டத்தில்  அங்கு ஓடி வந்த கங்காதரனின் மனைவி தேவகி…. “ என்னங்க….நம்ம பொண்ண தூக்கிட்டு போயிட்டாங்க.”    பஞ்சாயத்தில் அனைவரின் முன்னும் போட்டு உடைத்தார்.

“ சனியனே சனியனே….எங்கு எது சொல்றதுன்னு தெரியல….?” பெண்ணை தூக்கி விட்டார்களே என்ற  பயத்தை விட…

அதை தன் மனைவி அனைவரின் முன்னும் சொல்லி விட்டாளே என்ற ஆத்திரமே அவரிடம்  காணப்பட்டது.

கங்காதரன் பெண்ணை தூக்கி விட்டார்கள் என்று  சொன்னதும் பஞ்சாயத்தில் இருந்தவர்கள் அனைவரின் கண்ணும் இவர்கள் மேல் தான்.

இது தானே எதிர் பார்த்தேன்….. “ இப்போ என்ன சொல்றிங்க என் தங்கச்சிக்கு நியாயம் கிடைக்குமா கிடைக்காதா…..?”

ஆனால் சும்மா சொல்ல கூடாது கங்காதரனும் ஒன்னும் நடவாது போல் பஞ்சாயத்தை கவனித்தோடு தன் மனைவியையும் அடக்கி வைத்தார்.

“ அது தான் அப்பூ பேசிட்டு இருக்கோம்லே….” ஒரு பெரிய தலை சொல்ல…

“ பேசிட்டே தான் இருக்கிங்கே…..”

“இது பட்டுன்னு சொல்ற விஷயம் இல்ல அப்பூ. தீர விசாரிச்சிட்டு தான் சொல்ல முடியும்.”

“ சரி எப்போ சொல்வீங்க….?” வீரப்பாண்டியன்  அவர் என்ன சொல்வார் என்று தெரிந்தே கேட்டான்.

அதற்க்கு ஏற்றார் போல் அவர் கங்காதரனை பார்க்க…அவரோ சங்கரை பார்த்தார்.

பின்…. “ அடுத்த வாரம் திரும்ப பஞ்சாயத்து கூடும்.” பொதுவாக சொல்லி கங்காதரனிடம் தீவிரமாக ஏதோ பேசினார்.

சங்கர் கங்காதரனின் மூளை  என்று சொல்லலாம். வக்கீலுக்கு படித்து இருக்கிறான். நீதி மன்றத்தில் இருப்பதை விட எப்போதும் கங்காதரன் வீடே கதி என்று கிடப்பான்.

சங்கரின் அந்த நிதானம் வீரப்பாண்டியனை அந்த இடத்தில் இருந்து சட்டென்று போக விடாது தடுத்தது.

தங்களை பார்த்துக் கொண்டே கங்காதரனிடம் பேசியவனின் செயலில் ஏதோ திட்டம் போட்டுட்டான்.

“சரவணா…..நீ நம்ம வீட்டு பெண்களை கோயிலுக்கு கூட்டிட்டு வா….நான் கோயிலுக்கு போறேன்.”

அவன் எதிர் பார்த்தது தன் மகனை கொன்றது போல் மகளையும் ஏதாவது செய்து விடுவார் என்று….எதிர் பார்த்ததை செய்யாது,  எதிர்பார்க்காததை செய்வது தானே கங்காதரனின் தனித்திறமை.

 

Advertisement