அத்தியாயம்….14
அந்த நட்சத்திர ஓட்டல் பெயருக்கு ஏற்றார் போல் மின்னியது என்றால்….பாலாஜி ஜமுனா அந்த ஓட்டலையே தோற்கடிக்கும் வகையாக மின்னினர். அதுவும் பாலாஜி கேட்கே வேண்டாம். பாலாஜி ஜமுனாவுக்கு புடவை, நகைகளை பார்த்து ….பார்த்து… வாங்கினான் என்றால்…
ஜமுனா பாலாஜிக்கு அவனுக்கு எது செட்டாகும் என்று யோசித்து…. யோசித்து ….வாங்கிய அந்த கோட் சூட்டில் பாலாஜியின் ஆண்மை பளிச்சிட பாலாஜி ஜமுனா ஜோடி பார்ப்பதற்க்கு அவ்வளவு பொருத்தமாய் இருந்தது.
விழாவிற்க்கு வந்த மக்களின் எண்ணிகையை பார்த்து.. “ இவனுக்கு யாரும் இல்லேன்னு சொன்னா நம்புவாங்களா…?.” அப்படி திரண்டு வந்து இருந்தனர். பாலாஜி அழைத்தவர்களில் ஒருவர் கூட விடாது வந்து விட்டனர்.
அதிலும் பாலாஜி விடுதி கட்டி கொடுத்த இன்ஞினியர்…. அவரின் கீழ் வேலை பார்த்த ப்ளம்மர்….பெயிண்டர்….என்று ஒரு பக்கம் வந்தனர் என்றால்…. விடுதி கட்ட அங்கு அங்கு பணம் கொடுத்த அதிகாரிகளும் வந்து இருந்தனர்.
அதோடு வைதேகியோடு வேலை பார்க்கும் ஊழியர்கள்…ஜமுனாவோடு வேலை பார்க்கும் ப்ரன்ஸ் என்று மக்கள் கூவிந்து விட்டனர். பாலாஜியின் சித்தப்பாவுக்கே பாலாஜியின் உண்மையான நிலை அப்போது தான் தெள்ள தெளிவாக தெரிந்தது.
விருந்தில் போட்ட உணவின் சுவையிலும்…ஓட்டலின் பிரமாண்டத்திலும்… பாலாஜி ஜமுனாவின் ஜோடி பொருத்தத்தையும் பார்த்து வந்திருந்த மக்கள் ஒரு சிலர் மனதார வாழ்த்தினர் என்றால்..
ஒரு சிலர் ஜமுனாவை நினைத்து…. “அவளுக்கு வந்த வாழ்வை பாரேன்…. இது போல் புளியங்கொம்பை பிடிக்க தான் காதல் சொன்ன அனைவரையும் தட்டி கழித்தாளோ….இப்படி அவர்களுக்குள் பேசிக் கொள்ள…
இது அனைத்தையும் பார்க்கும் கேட்கும் சூழ்நிலையில் இல்லாது தங்கள் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தனர் அந்த இளம் ஜோடிகள். அதுவும் ஜமுனா வானத்தில் பறந்துக் கொண்டு இருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஜமுனாவின் இன்றைய மனநிலை வானிலை மாற்றம் போல்…. விடியலில் மகிழ்ச்சியிலும்…பின் கோபம் துக்கம்…ஆதாங்கம் என்று கலந்து ஏதோ கலக்கத்தில் இருந்த ஜமுனாவின் மனநிலை பாலாஜின் பேச்சிலும்…. அவனின் காதலிலும்…. அவளின் மனம் வானில் மழை வருவதற்க்கும் முன் கூடிய மேகம் போல் இருந்தது என்றால்…
இப்போது தன் விழாவில் தன்னை ராணி போல் உணர வைத்த பாலாஜி மேகம் கூடி மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுவது போல் மகிழ்ச்சி கடலில் அவளை மூழ்கடித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் நிச்சயத்துக்கே இத்தனை ஜனத்தை ஜமுனா எதிர் பார்க்கவில்லை. முகம் கொள்ளா சிரிப்போடு வந்த ஜனத்தை வரவேற்றுக் கொன்டு இருந்த வைதேகியை பார்த்த ஜமுனாவின் மனது நிறைந்து விட்டது.
இது போதும்…எனக்கு…இதோடு மகிழ்ச்சியை யாரும் எனக்கு தரமுடியாது. இந்த மகிழ்சிக்கு காரணம் பாலாஜி…பாலாஜி எனக்கு இதை அனைத்தும் செய்ய காரணம் காதல். அப்போ காதல் சுகமானது தானா….அவள் நினைவலையில் மூழ்கி இருந்தவளை..
“ ஜம்மூ….இவர் நம்ம ஏரியா S.I” என்று அவளுக்கு அறிமுகப்படுத்த இரண்டு தடவை அழைத்த பின்னே தன்னிலைக்கு மீண்ட ஜமுனா… அழகாக கரம் குவித்து… “ வணக்கம்…” என்று சொள்ளியவளின் மரியாதை ஏற்றுக் கொள்ளும் வகையாக அவரும் வணக்கம் தெரிவித்தவர்…
பாலாஜியிடம்…. “ இப்போ தான் உங்க தகுதிக்கு ஏற்ப உடை உடுத்தி இருக்கிங்க….” என்று சொன்னவருக்கு பதில் அளிக்காது பாலாஜி ஜமுனாவை பார்த்தான்.
அதை பார்த்தவர்….“ ஓ.. மேடமோட செலக்க்ஷனா…அப்போ இனி உங்கள வித விதமான உடையில பார்க்கலாம்.” அதற்க்கும் பாலாஜி ஜமுனாவை பார்த்து ஒரு புன்னகை புரிய….
“ நீங்க எப்போதும் இப்படியே சிரிச்சிட்டே இருக்கனும் சார்.” என்று மனதார வாழ்த்தி விட்டு அவர் மேடை இறங்கி சென்றார்.
விழா ஆராம்பித்ததில் இருந்து பாலாஜி ஜமுனாவின் சிரித்த முகம் விழா முடியும் வரை இருந்தது. பாலாஜியின் ஏற்பாடாய் ஜமுனாவுக்கு நலங்கு வைக்கும் பெண்களுக்கு தாம்புலத்தோடு பரிசாக கைய்பையும் கொடுத்தான்.
அந்த கை பையின் அழகில் “ நலங்கு வைக்க வாங்க…..” என்று அழைக்காமலேயே… அறிந்தவர் தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாது விழாவுக்கு வந்திருந்த அனைத்து பெண்களுமே ஜமுனாவுக்கு நலங்கு வைத்தனர். மொத்தத்தில் நிச்சயமே ஜமுனா எதிர் பாராத அளவு அமர்க்களப்படுத்தி விட்டான் பாலாஜி.
நிச்சயம் முடிந்து ஐந்து நாள் கடந்த பின் தான் ஜமுனா சகஜ நிலைக்கு வந்தாள். அது கூட முழுமையாய் இல்லை. நிச்சயத்தின் வேலையில் உடல் சோர்வு நீங்கயதே தவிர…. நிச்சயத்தின் மகிழ்ச்சி மனம் முழுவதும் இப்போது சிலு சிலு ஓடைப்போல ஜில் என்று இருந்தது.
அவள் ஆபிசில் அவளோடு வேலை பார்த்தவர்கள் பேசியது காதில் விழ விழ அவள் அந்தரத்தில் பறந்துக் கொண்டு தான் இருந்தாள். “ ஜமுனாவின் பியன்ஸி ஹான்ஸம் பா…” என்று ஒருவள் சொன்னாள் என்றால்..
மற்றொருவள்… “ என்ன ஒரு மேன்லி லுக்….” என்று சிலாகிக்க….ஜமுனாவின் நிலை கேட்கவும் வேண்டுமோ… அந்த மகிழ்ச்சி மனநிலையிலேயே ஜமுனா பாலாஜியின் விடுதிக்கு சென்றாள்.
முருகேசனின் வணக்கத்தை புன்சிரிப்போடு ஏற்றுக் கொண்டே பாலாஜியின் அலுவலக அறைக்குள் நுழைந்தவளை சாந்தியின் முதுகுபுறம் வரவேற்ப்பு கொடுத்தது.
அத்தோடு பாலாஜி சாந்தியிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டு இருக்கும் முகபாவத்தை பார்த்துக் கொண்டே…அன்று வைதேகி அமர்ந்த பாலாஜியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள்….எதுவும் பேசாது அவர்கள் இருவரும் பேசுவதை கேட்கும் வகையாக பார்த்தாள்.
பாலாஜி ஜமுனாவை பார்த்து ஒரு சிரிப்போடு சாந்தியிடம் தன் பேச்சை தொடர்ந்தான்…. “எதுக்கும் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்குறது நல்லது. அவன் சொன்னதை ஈஸியா எடுத்துக்காதிங்க…. இவ்வளவு செஞ்ச அவங்க..எதுன்னாலும் செய்ய தயங்க மாட்டாங்க.” என்று பாலாஜி சாந்தியிடம் சாதரணமாக பேசினான்.
ஆனால் சாந்தியால் பாலாஜி போல் ஜமுனா எதிரில் சாதரணமாக பேச முடியவில்லை. ஒரு வித தயக்கத்தோடு சாந்தி ஜமுனாவை பார்க்க….ஜமுனா தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டே…
“ நான் வெளியில் இருக்கேன்.” என்று பாலாஜியிடம் சொல்லி விட்டு போக பார்த்தவளின் கை பற்றிய பாலாஜி….
“ எது என்றாலும் நீங்க ஜமுனா எதிரிலேயே பேசலாம். எப்படின்னாலும் நிங்க பேசுவதை நான் இவ கிட்ட சொல்ல தான் போறேன்.” இவளுக்கு மறைத்து நான் செய்ய எதுவும் இல்லை என்பதை சாந்தியிடம் தெளிவு படுத்தி விட்டான்.
அவன் இவ்வளவு சொல்லியும் அடுத்து பேச சாந்தி தயங்குவதை பார்த்து…. “ தோ பாருங்க… நான் இது வரை..இந்த விடுதியில் எவ்வளவோ நடந்து இருக்கு. இப்போ உங்கல கூப்பிட்டு பேசுவது போல யாரையும் வர வெச்சி பேசுனது இல்ல.”
பாலாஜியின் பேச்சில் …. “ இப்போ மட்டும் ஏன் எந்த மாற்றம்….” என்பது போல் இரு பெண்களும் பாலாஜியை பார்த்தனர்.
பாலாஜியோ…. “ ஏன்னா இது வரை எனக்குன்னு குடும்பம் இல்லை. இந்த பாவம் புன்னியம்…இதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை. அதனால ஏதாவது பிரச்சனைன்னா நமக்கு எதுக்கு வம்புன்னு தான் ஒதுங்கி போயிடுவேன்.
ஆனா இப்போ அது போல என்னால இருக்க முடியாது. நாம நல்லது செஞ்சா நல்ல பலனும். தீங்கு செஞ்சா தீங்கும் கிடைக்கும். அத கண் கூட நான் பார்த்த பிறகு…. நல்லது செய்யலாமே என்று தான் இப்போ உங்கல அழச்சி பேச்சிட்டு இருக்கேன்.”
பாலாஜி சொன்ன நல்லது கெட்டது என்ற வார்த்தையின் அர்த்தம் சாந்திக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் இதில் அவள் தவறு….என்ன…? அது தான் அவளுக்கு புரியவில்லை.
இப்படி அவள் எண்ணிக் கொண்டு இருக்கும் போது…. “ உங்க அப்பா ஏதாவது பேசினாரா….?” என்ற பாலாஜியின் பேச்சில்…
இத்தனை நாள் தந்தை அழைப்பை ஏற்காது இருந்தவள்… நேற்று தான் தாயின் கைய்பேசி எண்ணை பார்த்து அந்த அழைப்பை சாந்தி ஏற்றாள். அன்னையின் பேசி மூலம் தந்தை சொன்ன…
“நான் உனக்கு சொத்து மட்டும் இல்லேம்மா பாவத்தையும் சேர்த்து வெச்சி இருக்கேன்னு இப்போ தான் புரியுது. என்ன மன்னிச்சிடு தாயி….என்ன மன்னிச்சிடு…” தந்தையின் அழுகுரலுக்கு எந்த வித பதில் சொல்லாது பேசியை அணைத்து விட்டாள்.
பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை தானே சேரும்….கடன் மட்டும் இல்லை பாவமும் சேர்த்து சேரும் போல்…. ஆனால் அந்த பாவக்கணக்கு தன்னோடு முடிந்து விட்டால் போதும்..தன் தங்கையும் தொடர வேண்டாமே…
ஆம் சாந்தி இந்த விசயத்தை அவ்வளவு எளிதாக விடுவாய் இல்லை. முதலில் ஆர்வம் காட்டிய மீடியா கூட இப்போது பாதிக்கப்பட்ட பெண்களே …தங்கள் போட்டோவை போட சொன்னது போல் ஒரு பிம்பத்தை மக்களிடம் காட்டுவது போல் இருக்க….
மகளிர் சங்கம் மூலம் ஏதாவது செய்ய முடியுமா…என்று பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்று கூடி போய் பேசினர். அது எப்படியோ அந்த ஹக்யூஸ்ட்டுகளுக்கு தெரிந்து விட்டது போல்…
நேற்று போனில்… “ என்ன உன் தங்கையின் முழுநிர்வாணமும் வரனும் என்று நினைக்கிறியா….? நீ நினைக்கலாம் உன் தங்கையோடு அது மாதிரி போட்டோ எங்களுக்கு எப்படி கிடைக்குமுன்னு….
இது எல்லாம் எங்களுக்கு ஒரு மேட்டரே இல்ல. உன் தங்கை முகம் மட்டும் இருந்தா போதும்… எந்த உடலிலும் மேட்ச் செய்துடுவோம். அப்புறம் என்ன… ஊரு மொத்தமும் உங்கல பத்தி தான் பேசும். குடும்பமே பலா பட்டர கேசு போலன்னு சொல்லுவாங்க…
என்ன சொல்ற….? நம்ம மட்டும் நாருனது போதும்… நம்ம தங்கச்சியாவது நல்லா இருக்கனுமுன்னு நினைக்கிறியா….? இல்ல அந்த நாத்தத்துல உன் தங்கச்சியும் தள்ள போறியா….?” அந்த போன் காலின் பேச்சில் சாந்தி பயந்து தான் விட்டாள்.
இரவு முழுவதும் அதை நினைத்து அழுக…அவள் அறையில் தங்கியிருக்கும் பெண்…காலையில் அடுத்த அறை பெண்ணிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது அந்த பேச்சு பாலாஜியின் காதில் விழுந்தது.
முன் என்றால் அதை கண்டு கொள்ள மாட்டான். ஆனால் இப்போது அவனால் அப்படி இருக்க முடியவில்லை.அப்பெண் ஜமுனாவின் சகோதரி என்பதால் இல்லை.
வைதேகியினால் பாதிக்கபட்ட பெண்ணின் மனநிலையை கொஞ்சம் அறிந்து இருந்ததால் …சாந்தியை அழைத்து பேசிக் கொண்டு இருக்கும் போது தான் ஜமுனா வந்தது.
கேட்ட விஷயம்….பாலாஜிக்கு கொஞ்சம் பயம் தட்டியது எனலாம். அதுவும் முகம் மட்டும் இருந்தால் போதும் எங்களால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற அந்த பேச்சில்…
இதில் நாம் இறங்கினால் தன் வீட்டு பெண்களை வைத்து இது போல் அச்சுறுத்தல் வரும் தானே…. வரும் முன் காப்பது தான் அறிவாளி தனம். வந்த பின்…அதன் பொய்மையை தகர்த் தெரிந்தாலுமே பாதிப்பு பாதிப்பு தானே…
அதுவும் இது போல் ஒரு நிலையில் ஜமுனா அதை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இப்போது தான் ஜமுனாவும் அத்தையும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்த மகிழ்ச்சியை எந்த காரணத்துக்குக்காவும் அவர்கள் இழக்க கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான்.
அதனால்… “ உனக்கு உதவி என்னால் முடிஞ்சது தான் செய்ய முடியும். அதுவும் பின்னால் இருந்து தான்.” என்பதை திட்ட வட்டமாய் சொல்லி விட்டான்.
அதை பற்றிய பேச்சில்…. ஜமுனா…. “ பின்னால் இருந்து செய்வது நீங்கன்னு அவனுங்களுக்கு தெரிஞ்சிடுச்சின்னா….. உங்களுக்கு ஏதாவது பிரச்சனை வராதா….?”
ஜமுனாவுக்கு சாந்திக்கு உதவி செய்வது செய்ய கூடாது என்பது பற்றி எல்லாம் யோசனை இல்லை. இதில் பாலாஜிக்கு ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ….? என்ற பயத்தில் தான் கேட்டது.
இப்படி அவர்கள் அறியாமலேயே இருவரும் ஒருவர் மற்றொருவர் மீது அக்கறையுடன் யோசித்ததை பார்த்ததில் சாந்திக்கு கொஞ்சம் மனநிறைவு ஏற்பட்டது எனலாம்.
ஜமுனாவுக்கும் பாலாஜிக்கும் கொஞ்சம் தனிமை கொடுக்க…. “ சரி சார் நான் கிளம்புறேன்.” என்று சொல்லி விட்டு சாந்தி எழுந்துக் கொண்டாள்.
“ சரி எதுன்னாலும் பார்த்து. அவனுங்க மோசமானவங்கலா இருக்காங்க” என்ற பாலாஜியின் இந்த அக்கறை பேச்சியில் சாந்தியின் கண் தன்னால் கலங்கியது.
தந்தையின் செயலில் அவரை ஒதுக்கியதோடு வீட்டோடு எந்த வித தொடர்பிலும் இல்லாது….அதுவும் இந்த சமயத்தில் மிக மனஉலைச்சலில் இருந்தவளுக்கு பாலாஜியின் இந்த அக்கறை பேச்சில்…
“ தாங்ஸ் சார்.” என்று சொன்னவள் ஜமுனாவின் முகம் பார்க்க…அப்போது ஜமுனாவும் சாந்தியின் முகம் பார்த்தாளே ஒழிய…தன் முகத்தில் எந்த வித முகபாவத்தையும் காட்டாது பார்த்திருந்தாள். சாந்தியும் ஜமுனாவிடம் விடை பெறாது சென்றதும்.
இவர்களின் இருவரையே பார்த்திருந்த பாலாஜி…. “ சாந்தியிடம் பேசுவதில் உனக்கு எந்த வித ஆட்சபினையும் இல்லையே….?” இன்னும் பாலாஜிக்கு ஜமுனாவை பற்றிய மன கணக்கிடு தெரியாது கேட்டான்.
அவனை பொறுத்தவரை..தன் வாழ்க்கை தான் தனக்கு மிக முக்கியம். அதில் அவன் மிக தெளிவாய் இருந்தான். சாந்தியின் பிரச்சனை கேட்க மனது கொஞ்சம் கஷ்டப்பட்டது தான். அதனால் தான் சாந்தியை அழைத்து பேசியது. இந்த பேச்சால் ஜமுனாவின் மனது வாடுமானல் அதை விட்டொழிய அவன் தாயாராய் இருந்தான்.
ஆனால் நம் ஜமுனாவோ… “ உங்க விடுதியில் தங்கி இருக்க பெண்ணிடம் நீங்க பேசுவதில் எனக்கு என்ன ஆட்சேபினை இருக்க போகுது.” சாந்தி என்னை பொறுத்த வரை உன் விடுதியில் தங்கி இருக்கும் பெண் அவ்வளவே என்ற வகையில் ஜமுனா பேச்சை முடித்துக் கொண்டாள்.