Advertisement

அத்தியாயம்….9

“மாது நமக்கு  படிப்புக்கு உதவி செய்த ட்ரஸ்ட்டுக்கு இன்விடேஷன்  வைக்க போறேன் நீயும் வர்றியா…..?” கமலக்கண்ணன் அழைத்தவுடன் சிறிது யோசித்த மாதவன்…

“சரி கமலா…..” இன்று திரும்பவும் சம்பூர்ணாவிடம் பேசலாம் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

ஆண், பதவியில் இருக்கும் தனக்கே குடும்பத்தை எதிர்த்து யோசிக்க முடியவில்லை. அதுவும் மனதில் ஒரு பெண் இருந்தும்.

சம்பூர்ணா வீட்டை விட்டு இப்போது தான் கல்லூரியில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிறுபெண். தனக்கு சொன்னது போல தானே அவளுக்கும் தங்களுடைய திருமணத்தை சொல்லி இருப்பார்கள்.

அவளுக்கு  இதில் என்ன மாற்று கருத்து இருக்க போகிறது….. என்று யோசிக்கும் போதே…அன்று கடற்கரையில் அஷ்வத்தும், சம்பூர்ணாவும், பேசிய  பேச்சு நினைவு வந்தது….

இருந்தும், சம்பூர்ணா மனதில் எதையும் வைத்திருக்க மாட்டாள். அஷ்வத்தும் சிட்டி பெண்ணை பார்த்த கண்ணுக்கு, கிராமத்து பெண் வித்தியாசமாக தெரிந்து இருக்கும்….

அவளிடம் பேசி என்ன பிரயோசனம் என்ற நினைவு வந்த உடன்,  எதிலும் பிடித்தமில்லாத ஒரு தன்மை வந்து விட்டது. கமலக்கண்ணன் அழைத்ததும்,

சரி நமக்கு உதவி செய்தவர்களை  இது வரை பார்த்தது இல்லை. பார்க்கலாம்,  என்று கிளம்பி விட்டான்.

கணக்கில் தன் சந்தேகத்தை கேட்டுக் கொண்டு இருந்த அஷ்வத்துக்கு தெளிவு படுத்திய சகாயம்….

“இன்னிக்கி ஒரு நாள் தான் தம்பி  உங்களுக்கு ஓய்வு. இது எல்லாம் நான் பார்த்துக்க மாட்டேனா…..?” கேட்ட சகாயத்திடம்,

“ ஓய்வு  எடுக்க வேண்டிய வயசுல நீங்கலே…..வரும் போது …..”  அதற்க்கு மேல் பேசாது ட்ரஸ்ட்டின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டு இருக்கும் போது,

அந்த ட்ரஸ்ட்டின்  ஊழியர் வந்து….. “ உங்கல பார்க்க யாரோ வந்து இருக்காங்க சார்……”

“வரச் சொல்லுங்க…..” என்று சொல்லி விட்டு திரும்பவும் விடுபட்ட கணக்கில்  மூழ்கி போனான்.

சொன்னவனும்  வந்தவர்கள் யார்….? என்று சொல்லவில்லை. வரச் சொன்னவனும் யார்…..? என்று கேட்கவில்லை.

“ஹலோ…..” குரலை கேட்டு கணினியில் இருந்து முகத்தை நிமிர்த்திய அஷ்வத் அங்கு மாதவன், கமலக்கண்ணனை எதிர் பார்க்கவில்லை. அதே நிலை தான் வந்த இருவருக்கும்.

அஷ்வத்தை அங்கு ஊழியன் என்று எண்ண கூட முடியவில்லை இருவருக்கும். மாதவனின் முகம் இப்போது பெரும் சிந்தனையில்….. அதே நிலையில் தான் இருந்தான் கமலக்கண்ணனும்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு படிப்பு உதவி….சம்பூர்ணா மதிப்பெண்….ஏதோ இருக்கு.

உள்ளுக்குள் இவ்வளவு சிந்தனை ஓடினாலும் அதை வெளியில் காட்டாது….அஷ்வத் கை காட்டிய இருக்கையில் அமர்ந்ததும்…..அங்கு இருந்தவனை அழைத்து  “ மூன்று காபி…..” சொல்லி விட்டு அவர்களை பார்க்க.

கமலக்கண்ணன் தாங்கள்  வந்த காரணத்தை சொல்லி அழைப்பிதழை நீட்டினான்.  என்ன முயன்றும் தன் முகத்தில் வந்து போன வாட்டத்தை அஷ்வத்தால் தடுக்க முடியவில்லை.

அவனையே  கவனித்துக் கொண்டு இருந்த மாதவனின் கண்ணுக்கும், அந்த மாற்றம் தப்பாது மாட்டியது.

அழைப்பிதழை   வாங்கிய அஷ்வத்….மாதவனின் கை பற்றி தன் வாழ்த்தை தெரிவித்தான்.அந்த கைய்பற்றலில்  அஷ்வத்தின் கை நடுங்கியதோ…..

காபி வந்ததும்….. “குடிங்க…..” என்று  சொன்னவன், அவனும் தனக்கு உண்டானதை எடுத்து பருகினான்.

அப்போதாவது தன் பதட்டம் குறையுமா….?என்று. சம்பூர்ணாவின் திருமணம் நெருங்க நெருங்க தான், எந்த அளவு அவளிடம் தன் மனது சென்று  இருக்கிறது என்பதை அறிந்துக் கொண்டான்.

இதே வேறு யாராவது இருந்து இருந்தால் தூக்கி இருப்பான். அந்த தைரியம் அவனிடம் நிறையவே இருக்கிறது.

ஏற்கனவே தன் தந்தை குடும்பத்துக்கு செய்த நம்பிக்கை துரோகம் , அவன் கையை  கட்டி போட்டு விட்டது.

இன்று  எழுந்ததும் அவன் நினைவில் இதே….அடுத்த வாரம் திருமணம். அதை மறக்க தான் இங்கு வந்தது.

ஒரு பெரும் மூச்சுடன்….. “ அப்புறம் உங்க வேலை எல்லாம் எப்படி போகுது…..?” அஷ்வத் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காது…..

“ எங்க குடும்பத்தை உங்களுக்கு முன்னவே தெரியுமா…..?” கமலக்கண்ணன் கேள்வியில்….

தடுமாறினாலும்….. “ இல்ல.  சமீபத்தில் தான் தெரியும்.” அவன் சொல்வதும்  ஒரு வகையில் சரி தானே…..

எதற்க்கு இந்த கேள்வி….?தப்பி தவறி கூட அந்த வார்த்தை  அஷ்வத் வாயில் இருந்து வரவில்லை. அதை இருவரும் கவனித்தனர்.

திரும்பவும் “ உங்க முகம் ரொம்ப பேபிலியரான முகம் போல இருக்கு…..?” கமலக்கண்ணன் சொன்னவுடன்….அஷ்வத்தின் பார்வை தன்னால் மாதவனை தொட்டு தழுவியது.

“கடங்காரனுங்க என்ன விட்டுட்டு  அவனுங்க மட்டும் ஊர் சுத்த போயிட்டாங்க…..” மனதில் இருவரையும் அர்ச்சித்த வாறே…போன முறை ஊருக்கு சென்ற போது எடுத்து வந்த பழைய குடும்ப ஆல்பத்தை நேரம்  கடத்த பார்த்துக் கொண்டு இருந்தாள். அதை எத்தனை தடவை பார்த்து இருக்கிறாள் ….?அவளுக்கே கணக்கு தெரியாது.

மிக பழைய ஆல்பம் ஒன்று கண்ணில் பட…..” இத நாம பார்த்ததே இல்லையே!!!!!! நமக்கு தெரியாம நம்ம வீட்டில ஒரு பொருளா….?”

அந்த ஆல்பத்தை எடுத்து தன்  மடி மீது வைத்துக் கொண்டவளுக்கு, அப்போது தான்…இது அம்மத்தா மரபீரோவில் புடவையின்  கீழே இருந்து எடுத்தது நினைவு வர…

ஆர்வமுடன் ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்திருந்தாள்.குழந்தையில் தன்  அம்மா மாமா ….. மத்தியவயதில் தாத்தா….அம்மத்தா ….அனைத்து படத்திலுமே யாரு அது…?

நடுமைய்யத்துக்கு வந்த போது அம்மா, மாமா ,வாலிபவயதில். இப்போது அந்த கூட இருந்த நபர் யார்….? அடையாளம் தெரியும் படி இருந்தது அப்புகைப்படம்.

மாதவன், கமலக்கண்ணன் இருவருக்கு ஒரு சேர கைய்பேசியில்  வாட்சாப் வந்ததுக்கான அழைப்பு விடுக்க.

அதில் வந்த புகைப்படத்தை பார்த்து….. “ இந்த  லூசு எதுக்கு பழைய படத்தை அனுப்பி இருக்கு…..?” தனக்கு வந்த  புகைப்படத்தை கமலக்கண்ணனிடம் காட்டி கேட்க.

அவனும் தனக்கு வந்ததை அவனிடம் காட்டி….. “குட்டிம்மா போர் அடிச்சா இது தானே  செய்வா…..”

அதில் புதியதாக இருந்த நபரை இருவரும் கவனிக்கவில்லை. கவனித்து இருந்தாலும் அவர் யார்….? என்று  அவர்களுக்கு தெரியாது. சம்பூர்ணா மட்டும் தானே அஷ்வத்தின் அப்பாவை பார்த்து இருக்கிறாள்.

அவர்கள் இருவரின் பேச்சில் சம்பூர்ணாவை பற்றியது தான் பேச்சு என்பது புரிந்த அஷ்வத்  தன்னையும் மீறி…

“என்னது….?” இருவரின் கைய்பேசியை பார்த்துக் கொண்டே கேட்க.

கமலக்கண்ணன் பதில் அளிக்கும் முன்….. மாதவனுக்கு சம்பூர்ணாவிடம் இருந்து கைய்பேசியில் அழைப்பே வந்து விட்டது.

“மன்னிக்கனும்…..” கைய்பேசியின் அழைப்பை ஏற்று மாதவன் வெளியேறியதும், தன் கைய் பேசியில் இருந்த புகைபடத்தை காட்டாது…

“ என் தங்கை போர் அடிச்சா…..பழைய போட்டோவை பார்த்துக் கொண்டு இருப்பா…..இன்னிக்கி அதுல இருந்து இரண்டு படத்தை அனுப்பி இருக்கா…..”

ஆவளுடன்….. “ நான் பார்க்கலாமா…..?” கேட்கும் போதே அவன் கை கமலக்கண்ணன் பக்கம் நீட்டி இருந்தது.

தன் ஒட்டு மொத்த குடும்பத்தை புகைப்படத்தில் பார்க்க ஆசை அவனுக்கு.

எங்கள் குடும்ப பழையப்படத்தை பார்ப்பதில் இவருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்….? மனதில் நினைத்தாலும் தன்னால் தன் கைய்பேசியை அஷ்வத்திடம் நீட்டினான்.

இரண்டு புகைப்படத்தையும் காட்டி….. “ இவங்க யார்….?இவங்க யார்…..?” கேட்டுக் கொண்டே அந்த  படத்தை உத்து உத்து பார்த்தவன்.

“  தாத்தா…. இப்போவும் இந்த  கம்பீரத்தோடு இருக்காங்கலா…..?” அந்த புகைப்படத்தில் வேங்கையன்  ராணுவ வீரன் போல் இருப்பக்கம் மீசை பெரியதாகவும், அடர்த்தியாகவும்  வைத்திருந்தார். அதில் அவர் அவ்வளவு கம்பீரமாய் காணப்பட்டார்.

அஷ்வத்தின் சந்தோஷ முகத்தை பார்த்துக் கொண்டே….. “ மீசை அப்படியே தான் இருக்கு. ஆனா வெளுத்து.”

“அது இன்னும் அவருக்கு கம்பீரத்தை கொடுக்கும்லே…..?”

அஷ்வத்தின்  பேச்சை கேட்டுக் கொண்டே அங்கு வந்த மாதவன்….. “ம்…..எங்க  ஊரு பாட்டிங்க எல்லாம் எங்க தாத்தாவ இன்னும் சைட்டிங். அதனால  எங்க பாட்டி பைட்டிங்…..” என்று சொன்னவன்….

“ஓ சாரி சாரி……நம்ம ஊரு. நம்ம தாத்தா….நம்ம பாட்டி…..இப்போ சரியா…..அண்ணா.”

இருவரின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த கமலக்கண்ணனுக்கு ஏதோ புரிவது போல்…. “எ..ன்ன….?”

“ நாங்க  சொல்றது இன்னும் புரியல….?அந்த படத்துல்ல, எல்லா படத்திலேயும் நடுவாப்பல ஒருத்தர் இருக்கார….யாருன்னு அத கொஞ்சம் உத்து  பாருங்க…..”

தன் தந்தை இருப்பதை முதலிலேயே பார்த்து விட்டான். இவர்களுக்கு  தெரியாது என்று நினைத்தான்.

இப்போது இவர்களின் வாட்சாப்புக்கு ஏன் சம்பூர்ணா இப்புகைப் படத்தை அனுப்பினால் காரணம் விளங்கி விட்டது. என் அப்பாவ ஒரே தரம் தானே அந்த குட்டி சாத்தான் பார்த்தா…..

கமலக்கண்ணன்…. “ என்ன மது…..?”

“ இவரும் உனக்கு மச்சான்னு இப்போ தான் உன் தங்கச்சி சொன்னா……” அந்த வார்த்தை அஷ்வத்தின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது.

“புரியல……?” அஷ்வத் தங்களுக்கு உறவு முறை என்பது வரை அவனுக்கு புரிந்தது.

அந்த புகைப்படத்தில் இருந்த ஜானகிராமனை காமித்து…… “ இவர் அஷ்வத்தின் அப்பா…அதாவது உனக்கு இன்னொரு தாய் மாமன். எனக்கு பெரியப்பா…..”

உறவு முறை என்றால் ஏதோ தூரத்து முறையாக இருக்கும் என்று நினைத்தானே ஒழிய….தனக்கு இன்னொரு தாய் மாமனாய் நினைத்து பார்க்கவில்லை.

“ஏய் போட்டல இருந்தா…..” சொல்லிய அவன் பேச்சு அவனுக்கே … “எல்லா போட்டோவிலும் இருக்காரா….?”

“ம் குட்டிம்மா எல்லா போட்டோவிலும் இருக்கார்.…..இது  அப்பத்தா அவர் பீரோவில் மறச்சி வெச்சி இருந்தாங்கலாம்.”

“எல்லா போட்டோவிலும் இருந்தா…..” கமலக்கண்ணனுக்கு இப்போது அஷ்வத்தின் முகஜாடை யாரை போல் அடையாளம் தெரிந்தது.

“ஓ ஷிட்….எப்படி எப்படி கவனிக்காம விட்டேன். இதுல நான் போலீஸ் வேற…சே…..” இவை அனைத்தையும் அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தான் அஷ்வத் தீரன்.

“குட்டிம்மாவுக்கு எப்படி தெரிஞ்சது…..?”

முதலில் தோன்றாத அனைத்து சந்தேகமும் கமலக்கண்ணனுக்கு இப்போது அணிவகுத்து நின்றது.

“ பெரியப்பாவ காலேஜில பார்த்து இருக்கா…எல்லா போட்டோவில் பார்த்ததும் , அப்பாத்தாவுக்கு போன் போட்டு கேட்டு இருக்கா….ஒரே அழுகையாம். எல்லா சொல்லிட்டாங்க…..”

இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த அஷ்வத்திடம்….. “ பாஸ் இப்போவாவது வாய திறக்குறது.” அதற்க்கும் ஒரு புன் சிரிப்பே…

“ தெய்வீக சிரிப்பய்யா உன் சிரிப்பு……”

“நாங்களும் எங்க திறமைக்கு தான் உதவி கிடைக்குதுன்னு நினச்சிட்டு இருந்தோம். அதுவும் குட்டிம்மா….அவ தான் இந்த உலகத்திலேயே அறிவாளி போல்….அது தான் தாங்க முடியல…..” இதற்க்கு அஷ்வத் வெடி சிரிப்பு சிரித்து வைத்தான்.

“ இவ்வளவு வருஷம் உறவு  தெரிந்தும் வரலலே….. அதுவும் வயசானவங்க இருக்காங்க….அவங்க போறதுக்குள்ள…..வந்து பாக்கனும். உனக்கும் தோனல…..அவருக்கும் தோனலலே…..” அவர் யார்….?என்று  அஷ்வத் கேட்கவில்லை.

மேலும் நீ வா போ….என்ற  வார்த்தை மாதவன் வாயில் இருந்து சகஜமாய் வந்து விழுந்தன.

“எனக்கு….கொஞ்ச நாள் முன்ன தான்  எனக்கு இவ்வளவு உறவு இருக்குறதே தெரியும்.”

“….என்…ன….சொல்ற….?அப்போ எங்க படிப்பு…..” கமலக்கண்ணன் கேட்டதுக்கு,

“அப்பா தான்….. அதுவும் அவர் விபத்துல தான் அவருக்கு ஞானோதயம் பிறந்தது.” என்று சொன்னவன் அனைத்தையும் சொல்லி முடித்தான்.

 

Advertisement