அத்தியாயம் எட்டு :
ஹாஸ்பிடல் செல்லும் வரை திரும்ப மூவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஹாஸ்பிடல் உள்ளே செல்லும் போது வெளிப்புறமே சொன்னது பெரிய செட் அப் என, மிகப் பெரிய இடம், ஐந்து மாடிக் கட்டடம்.
“இது உங்க ஹாஸ்பிடல்லா” என்றான் அபிமன்யுவிடம்.
“எஸ், தாத்தா, அப்பா சித்தப்பா மூணு பேருமே ஓனர்ஸ், பாட்டி, அம்மா, சித்தி மூணு பேருமே டைரக்ட்ராஸ், அத்தை ஒருத்தங்க இருக்காங்க. அவங்களும் டைரக்டர். எல்லோருமே டாக்டர்ஸ், பாட்டி, அத்தையைத் தவிர.. பசங்க எல்லோருமே டாக்டர்ஸ், அக்காவைத் தவிர” என்று அக்ஷராவைப் பார்த்தபடி சொல்லவும்,
“ஏன் அக்ஷி அப்புறம் அந்த சின்ன வீட்ல தனியா இருக்க?” என்று கேட்டு விட,
அக்ஷரா பதில் பேசாமல் இருக்கவும், “ப்ளீஸ் சொல்லு, ஐ அம் ரியல்லி வொர்ரீட் அபௌட் யு” என்றான்.. மிகவும் தணிந்த பணிந்த குரலில்,
“நான் என்னோட சம்பாதனையில மட்டும் தான் வாழறேன், தயவு செஞ்சு ஏன் எதுக்கு கேட்காத. என்கிட்ட என்ன இருக்கோ அது எனக்கு போதும்!” என்றபடி இறங்கினாள்.
திரும்பவும் எதோ நிகில் சொல்ல வர.. “ப்ளீஸ்…” என்றவள், கூடவே “ஷட் அப்” என்றும் அதட்ட,
வாயை மூடிக் கொண்டான்.. “அண்ட் நீ என்கிட்டே எது பேசறதா இருந்தாலும் தனியா தான் பேசணும். யார் முன்னையும் பேச வேண்டாம்… ப்ளீஸ் புரிஞ்சிக்கோ…” என,
எல்லாவற்றையும் அமைதியாக பார்த்திருந்தான் அபிமன்யு. இறங்கியவளிடம் அவன் ஒரு புறம் “அக்கா! ப்ளீஸ், யார் என்ன பேசினாலும் கோபப்படாத, கண்டுக்காத!” என,
அவனையும் ஒரு பார்வை பார்த்தவள், உள்ளே நடக்கத் துவங்கினாள், அபிமன்யு நிகிலை “வாங்க!” என்றழைத்து உள்ளே சென்றான். அங்கே ஒரு ரூமில் ஷ்ரத்தா இருக்க, கூட வரதராஜனும் ஷங்கரும் ஒரு சிஸ்டரும் இருந்தனர்.
ஷ்ரத்தா ஒரே அழுகை அம்மாவைக் கேட்டு.. அந்த சிஸ்டரும் ஷங்கரும் திரும்ப ட்ரிப்ஸ் ஏற்ற முயல, விடவே இல்லை. “அம்மா வந்துட்டே இருக்கா பேபி” என்று ஷங்கர் எவ்வளவு சமாதானம் செய்தும் விடவேயில்லை. அம்மாவைப் பார்த்ததும் ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.
“ஒன்னுமில்லை ரூ, அழக் கூடாது!” என்று அக்ஷரா சமாதானம் செய்த பிறகே அழுகை மட்டுப் பட்டது. பின்பு “ரூ பேபிக்கு காய்ச்சல் போயிடுச்சு. இது வேண்டாம்” என்று ட்ரிப்ஸ் உள்ளே போக இருந்த ஊசியைக் காட்டி ஷ்ரத்தா சொல்ல,
“ஓகே, வேண்டாம்! இப்போ தாத்தா பேபியைப் பார்த்துட்டு சொல்வார்!” என,
“வேண்டாம்!” என மீண்டும் அழுகை ஆரம்பிக்க, “சரி, சரி, வேண்டாம்!” என்றபடி அப்பாவைப் பார்த்தாள். “கொஞ்ச நேரம் போகட்டும்” என்று அவர் சொல்ல, “கொஞ்ச நேரம் கழிச்சும் வேண்டாம்!” என்றாள் ஷ்ரத்தா.
“சரி, வேண்டாம்!” என்று மீண்டும் அம்மாவாக சமாதானம் செய்து, “கொஞ்ச நேரம் தூங்குவீங்களாம்” என்று அக்ஷரா படுக்கையில் அமர, ஷ்ரத்தா அவளின் மடியில் தலை வைத்து படுக்க,
எல்லோரும் சுத்தி இருக்கவும், “வெளில இருக்கலாமே பா! இத்தனை பேர் இருந்தா அவங்களுக்கு அன்காம்ஃபர்டபிளா இருக்கும்” என்றான் நிகில்.
“இங்க அப்பாவும் தம்பியும் இருக்குறது அப்படி இல்லை!” என்றார் சற்று ஸ்ட்றிக்டாகவே வரதராஜன்… “அப்பாவும் தம்பியும்னா அப்போ ஏன் தனியா இருக்கா” என்றான் ஆதங்கமாக. இரவில் தனியாக குழந்தையை தூக்கி வந்திருகின்றால் என்பது அவனுக்கு இன்னும் பெரிய விஷயமாக இருந்தது. அவர்கள் அழைத்தும் உதவிக்கு உடனே வராத அந்த நிலை அவனுக்கு கோபத்தை கொடுத்து இருந்தது.
“நிகில், திஸ் இஸ் நன் ஆப் யுவர் பிஸ்னெஸ்! ஸ்டே ஆன் யுவர் லிமிட்ஸ்” என அடிக்குரலில் சீறினார் வரதராஜன், ஏனோ தன் மகன் அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவதாக தான் அவருக்குப் பட்டது. அது அவர்களின் குடும்ப விவகாரம் இவனுக்கு என்ன வந்தது, தோழி என்றாலும் வரைமுறை உண்டல்லவா என்பது தான் அவரின் எண்ணம்.
அப்பாவிற்கு பதில் கொடுக்க நிகில் முனைய.. “பேசாதே!” என்று வாய் மீது விரல் வைத்துக் காட்டியவள்… அபி “நிகிலை உன்னோட ரூம்ல இருக்க வை” என,
நிகிலும் பதில் பேசாமல் செல்ல, வரதராஜன் மீண்டும் அவர்களிடம் “சாரி” என, “இட்ஸ் ஓகே!” என்றார் ஷங்கர்.
“அப்பா ப்ளீஸ், பேபி தனியா இருந்தா தான் தூங்குவா!” என்றாள் அக்ஷராவும், “நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல வர்ரேன்!” என்று வரதராஜனையும் கூட்டிக் கொண்டு அவர் கிளம்பினார்.
அவர்கள் வெளியே சென்றதும், சிஸ்டரிடம் “அபிமன்யு வர சொல்லுங்க” என.. அபிமன்யு வந்ததும் நிகிலை வரச் சொல்லி, அபிமன்யுவை வெளியே அனுப்பி, “நிகில், ஐ நோ யு கேர் ஃபார் மீ எ லாட், ஆனா அதை காட்டுற இடமோ சமயமோ இது கிடையாது.. நீ வீட்டுக்குப் போ.. நான் வந்த பிறகு பேசிக்கலாம்!” என்றாள் பொறுமையாக.
“ஏன்? உன் ஹஸ்ன்ட்க்கு பிடிக்காதா?” என,
“ஹேய்! என்ன நீ? நல்லாதானே இருந்த! எப்போ இருந்து அடுத்தவங்க பெர்சனல் விஷயத்தை இவ்வளவு கேட்க ஆரம்பிச்ச”
“உன்னை அப்படி நினைக்க முடியவில்லை என்றா சொல்ல முடியும்”, “எஸ், தெரியலை!” என்றவன் திரும்ப அமைதியாகிவிட்டான். அவனுக்கே அவனின் செயல்கள் அதிகப் பிரசிங்கித்தனமாகத் தான் தோன்றியது.
அபிமன்யுவை மீண்டும் அழைத்து, “நிகிலை வீட்ல விட்டு வா அபி இப்போவே” என பணித்தாள். “வாங்க” என்றான் அபிமன்யு, “என்ன செய்து கொண்டிருக்கின்றேன் நான்” என்ற எண்ணம் மனதினில் ஓடிக் கொண்டிருந்த போதும்,
“இரு, லெட் மீ செக் பேபி” என, அவளின் அருகில் வந்தவன்.. ஷ்ரத்தாவைப் பார்க்க.. அவள் உறக்கத்திற்கு செல்ல ஆரம்பித்து இருந்தாள்… இவன் தொடவும் விழிக்க..
“பேபி, எப்படி இருக்க? என்ன பண்ணுது உனக்கு?” என்று சொல்லிக் கொண்டே அவளின் வைடல் சைன்ஸ் பார்த்து, செஸ்ட் எக்ஸாமின் செய்து பார்க்க.. எல்லாம் நார்மல் போல தான் இருந்தது.
“என்ன சாப்பிட்ட நீ இப்போ?” என, “ஒன்னுமே சாப்பிடலை..”
“ஓஹ், பைன் கான்டீன் போகலாமா? நானும் ஒன்னும் சாப்பிடலை! உனக்குப் பசிக்குதா?”. பதில் பேசாமல் ஷ்ரத்தா அம்மாவின் முகத்தைப் பார்க்க.. “பசிக்குதா” என்றாள் அக்ஷரா.
“ம்ம்” என்று ஷ்ரத்தா தலையாட்டா.. “நம்ம போகலாமா” என்றான்..
“நான் கூட்டிட்டுப் போறேன்!” என அக்ஷரா எழ.. “நீ இல்லை, நானும் பேபியும் மட்டும்!” என்று வாயால் சொல்லாமல் கையினால் நிமிடத்தில் அக்ஷராவிற்கு சைகை காட்டினான்.
“உன்னோட வரமாட்டா!” என அக்ஷரா சொல்ல,
அவளை ஒரு பார்வை பார்த்தவன், “நான் டூ டேஸ் முன்ன தான் இந்தியா வந்தேன். எனக்கு இங்க எதுவுமே தெரியலை, பேபி என்னை கூட்டிட்டு போறியா.. உன் அம்மா நேத்து நைட் ஃபுல்லா தூங்கலை, அவ இங்க தூங்கட்டும்.. வர்றியா!” என,
ஷ்ரத்தா அம்மாவைப் பார்க்க.. “வரச்சொல்” என்று மீண்டும் ஒரு கையசைப்பு. எல்லாம் அபிமன்யு வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தான் எதிலும் தலையிடவில்லை.
“போ பேபி, நிகிலும் டாக்டர் தான், நீ அவர் சொல்ற மாதிரி கேட்டா ஊசியே போடமாட்டாங்க!” என,
“நிஜம்மா” என நிகிலை பார்த்துக் குழந்தை கேட்க.. “நிஜம்மா ஃபீவர் குறைஞ்சா போடவே மாட்டேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.
“அப்போ இதை எடுங்க” என்று அவளின் கையினில் இருந்த நீடிலை காட்ட, “இப்போ எடுத்தா ரத்தம் வரும், அப்புறம் திரும்ப வீக் ஆகிடுவ.. நல்லா சாப்பிட்டு ஸ்ட்ரெந்த் வந்த பிறகு கண்டிப்பா எடுக்கலாம்” என சொல்லி குழந்தையைப் பார்த்து கை நீட்ட.. அவனின் பேச்சைக் கேட்ட அக்ஷராவின் முகத்தில் சிறு புன்னகை.
அம்மாவின் மடியை விட்டு எழுந்து படுக்கையை விட்டு இறங்கியவள், நிகிலின் கையை பிடித்துக் கொண்டு, “நீ தூங்கு மம்மா, நான் வந்து எழுப்பறேன்!” என்று பெரிய மனுஷியாக சொல்ல, “சரி” என்பதாக ஒரு தலையசைப்பு..
“பேபி! யு லுக் வெரி டையர்ட். நான் தூக்கிக்கட்டுமா!” என்று மீண்டும் ஷ்ராத்தாவின் சம்மதம் கேட்க.. அவள் திரும்ப அம்மாவைப் பார்த்தாள், அக்ஷரா “சரி” என தலையாட்டா,
“நீ பெரிய பேபி ஆகிட்ட, எல்லா விஷயத்துக்கும் அம்மாவை பார்க்கக் கூடாது நீ டிசைட் பண்ணனும்” என்று சொல்லியபடி ஷ்ரத்தாவை தூக்கினான்.
அதற்கும் ஷ்ரத்தா அம்மாவை பார்க்க.. நிகிலை பார்த்து திரும்பவும் வாய் மேல் விரல் வைத்து பேசாதே என்பது போல அக்ஷரா சைகை காட்டினாள். “இவ என்னை பார்த்து இதைத் தவிர வேற ஒன்னும் சொல்ல மாட்டேங்கறா” என்ற எண்ணம் மனதினில் ஓடிய போதும்..
நிகில் அந்த பொற்குவியலை தூக்கிய பரவசத்தில் இருந்தான்.. ஒரு மெல்லிய வாமிட்டிங் ஸ்மெல் வர.. “கொஞ்சம் ஹாட் வாட்டர் கிடைக்குமா அபிமன்யு” என… “இங்க டேப்ல வரும்” என்று அங்கே இருந்த பாத்ரூம் காட்டினான்.
குழந்தையோடு பாத்ரூம் நோக்கி செல்ல, அக்ஷரா கூட வரவும், மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு, “உன் பொண்ணு எனக்கும் பொண்ணு தான். அவளை ஃப்ரீயா விடு! டோன்ட் பீ ஓவர் ப்ரொடக்டிவ்.. போ!” என..
அவனின் வார்த்தைகள் கொடுத்த தாக்கத்தில் பேசாமல் திரும்பி விட்டாள்.
ஷ்ரத்தாவோடு நிகில் உள் செல்லவும்.. அபிமன்யு அவளிடம்.. “உனக்கு ரொம்ப ஃபிரண்டா” என,
“ஆம்!” என்பது போலத் தலையாட்டினாள்… அபிமன்யு கவனித்துக் கொண்டே இருந்ததினால் முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் இருக்க மிகவும் சிரமமாக இருந்தது. அழுகை வரும் போல இருந்தது.
அதற்குள் உள்ளே சென்ற நிகில் ஷ்ரத்தாவை வாய் கொப்பளிக்க வைத்து, மீண்டும் தூக்கி கொண்டு வந்து, வெளியே செல்ல.. “போ அபி, கான்டீன் காட்டிட்டு வந்துடு!” என,
“இல்லை, நான் தேடிக்கறேன்!” என அபிமன்யுவை நிறுத்தி அவன் செல்ல, அக்ஷராவோடு அபிமன்யுவும் அமைதியாக அமர்ந்து கொண்டான். அதற்குள் வரதராஜனும் ஷங்கரும் வந்தனர்.
“பேபி எங்கே?” என.. “நிகில் கேண்டீன் கூட்டிட்டுப் போயிருக்காங்க!” என அபிமன்யு சொல்ல..
“என்ன?” என்று ஷங்கர் கேட்க.. “பார்த்துக்குவான் ஷங்கர், அவன் ஆர்த்தோபீடிக் சர்ஜன், ஸ்பைன்ல ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கான், சர்ஜரி மட்டும் தான் அவனோட ஸ்பெஷலைசேஷன் கொண்டு, மத்தபடி எல்லாம் மேனேஜ் பண்ணுவான்”
“ரொம்ப டெடிகேடட் டுவர்ட்ஸ் ப்ரோஃபஷன்… நைன் மந்த்ஸ் ஹாஸ்பிடல் பேசிஸ்ல வொர்க் பண்ணுவான்.. மீதி மூணு மாசம், எங்க நீட் இருக்கோ அங்க போய்டுவான்.. வோர்ல்ட்ல எந்த பார்ட்னாலும் போர், வெள்ளம், பஞ்சம் அந்த மாதிரி இடங்கள்.. லாஸ்ட்யியர் கூட சோமாலியால ஒரு த்ரீ மந்த்ஸ் இருந்தான்” என்றார் மகனைப் பற்றி பெருமையாக.
“ஓஹ், ஸ்பைன்னா குட்!” என்றார் ஷங்கர்..
“எல்லோர்கிட்டயும் ஈசியா பேசுவான், பட் ரொம்ப டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணுவான். லிமிட்ஸ் எப்பவும் க்ராஸ் பண்ண மாட்டான், ஃபர்ஸ்ட் டைம் இங்க தான் இவ்வளவு பேசறான். மே பீ காலேஜ் டேஸ்ல ஃபிரண்டா இருக்கும், அப்போ அந்த ஏஜ் ஃபிரண்ட்ஸ் ஸ்பெஷல் தானே” என விளக்கம் கொடுத்து, திரும்ப ஷங்கரும் வரதராஜனும் பேசிக் கொண்டிருக்க..
அதற்குள் துர்கா வந்திருந்தார்… எல்லோரும் காத்துக் கொண்டிருக்க.. மெதுவாக கதை பேசியபடி நிகிலும் ஷ்ரத்தாவும் வந்தனர். பார்க்கவே கவிதையாய் இருந்தது. இப்படி யாரையாவது என் பெண் காதலித்து இருக்கக் கூடாதா என்று தான் துர்காவின் மனதினில் ஓடியது.
அப்போதும் அவளை கையினில் தூக்கி வைத்து தான் இருந்தான்.. ஏழு வயது குழந்தை சற்று கனமாகவும் இருப்பாள்… உள்ளே வந்ததும் ரூமில் இத்தனை பேர் இருப்பதைப் பார்த்து நிகில் தயங்கி நிற்க.. “துர்காம்மா” என ஷ்ரத்தா அழைக்க…
“பேபி” என துர்காவும் அருகில் வந்தார்.. ஷ்ரத்தா அவரை அழைத்தாலே தவிர அவரிடம் செல்லவில்லை, நிகிலின் கரத்தில் தான் இருந்தாள். நிகிலும் அவளை அவரிடம் விடவில்லை. ஏனோ விடத் தோன்றவில்லை. வைத்துக் கொண்டே இருக்கலாம் போல ஒரு உணர்வு.
“மைல்ட் டெம்ப்ரெச்சர் இருக்கு… அது டிஹைட்ரேஷன்னால தான்னு நினைக்கிறேன்” என்றபடி அவளை படுக்கையில் விட..
“ஊசி வேண்டாம்” என்று திரும்ப நிகிலின் கழுத்தை கட்டிக் கொண்டாள். “ஓகே வேண்டாம், கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தா நீ சரியாகிடுவ” என சொல்லி, பேசி, அவளை படுக்கையில் விட்டவன்..
“அவ தூங்கட்டும், ஃப்ளுயிட் நிறையக் கொடு அக்ஷரா” என்றவன், “என்னை வீட்ல யாரையாவது விட சொல்லு அபிமன்யு” என,
“நான் வர்றேன்” என்றவன், “வாங்க” என முன் நடக்க.. நிகில் ஒரு பொதுவான தலையசைப்போடு கிளம்பினான்.
அக்ஷரா ஷ்ரத்தாவை முனைப்பாகத் தூங்க வைக்க.. வரதராஜன் “நானும் வர்றேன்” என்று சொல்லும் முன்னரே அபிமன்யுவும் நிகிலும் சென்றிருந்தனர். “அடடா, நான் ஒருத்தன் இருக்கிறதையே என் பையன் மறந்துட்டான்” என்று நொந்து கொண்டார்.
காரில் அபிமன்யு செல்லும் போது மெதுவாக.. “அக்காக்கு நீங்க ரொம்ப ஃபிரண்டா” என, எதற்கு கேட்கிறான் என்று புரியாமல் “எஸ்” என,
“அப்போ உங்களுக்கு அவங்களோட மத்த ஃபிரண்ட்ஸ் எல்லாம் தெரியுமா, அவளோட ஹஸ்பன்ட் அங்க இருக்காறாமே அவரைத் தெரியுமா?” என
“என்ன, அவ ஹஸ்பன்ட் அங்கேயா?” என்று குழப்பமாக கேட்டான்.
“ஆமாம்! அங்க இருந்து வந்த கொஞ்ச நாள்ல அவ கன்சீவ் இருக்குறது தெரிஞ்சது. அப்போ தான் எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு சொன்னா, ஹஸ்பன்ட்க்கும் அவளுக்கும் ப்ராப்ளம் அதான் பிரிஞ்சிட்டோம் சொன்னா?” என தயங்கித் தயங்கி, சன்ன குரலில், அபிமன்யு சொல்லலாமா வேண்டாமா, என வெகுவாக யோசித்து சொல்லச் சொல்ல என்ன ஏதென்று தெரியாமல் நிகிலின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது..
“எப்போ வந்த போது, அவளோட படிப்பு முடிச்சப்போவா” என்று இதையம் அவனிடம் இருந்து எகிறி வெளியே வரும் அளவிற்கு துடிப்பு அதிகரிக்க கேட்டான்.
“எஸ், அப்போ தான், வரும் போதே, கன்சீவா இருந்தா!” என சொல்லி சொல்லியது சரியா தவறா எனத் தெரியாமல் அபிமன்யு வேதனையில் கண்களை மூடித் திறந்தான்.
நிகிலின் இதயம் நின்று துடித்தது.
கார் நின்றதும் இறங்கியவன்.. “அக்ஷராக்கு ஃபோன் பண்ணிக்கொடு” என்றான்.
அபிமன்யு அழைத்துக் கொடுக்க…
தனியாக விலகி சென்றவன், “ஷ்ரத்தாவோட பர்த் டேட் சொல்லு” என நிகிலின் குரல் ஒலிக்க.. அங்கே அக்ஷராவின் வின் இதயம் நின்று துடித்தது.
“அக்ஷரா” என சற்று கடினமாக அழைத்தான்.
“ம்” என்ற அக்ஷராவின் குரல், கேட்டுக் கொண்டு இருக்கின்றேன் என உறுதி செய்ய, “இஸ் ஷ்ரத்தா மை பேபி” என, “எஸ்” என சொல்லியே விட்டாள்.
“ஹொவ் குட் யு டூ திஸ் டு மீ.. ஐ நெவெர் எக்ஸ்பெக்டட் திஸ் ஃப்ரம் யு”
“நான் என்ன பண்ணினேன் உன்னை. நான் குழந்தை பெத்துக்கிட்டேன், நான் வளர்க்கிறேன், அவ்வளவு தான், புரிஞ்சதா! நான் உன்னை எந்த வகையிலும் ப்ளேம் பண்ணலை… நான் இதை யார்கிட்டயும் சொல்லலை, சொல்லப் போறதும் இல்லை!”
“யார் கிட்ட சொன்னா என்ன? சொல்லலைன்னா என்ன? என்கிட்ட ஏன் சொல்லலை?”
“எதுக்கு சொல்லணும்.. நீ தான் என்னோட ப்ரேக் பண்ணின.. அண்ட் இட் வாஸ் எ கிளீன் கட்.. அப்படி இருக்கும் போது நான் எதுக்கு சொல்வேன்”
“ப்ச், சும்மா ரீசன் அவுட் பண்ணாத! வாட் யு டிட் இஸ் எ மிஸ்டேக், வெரி பிக் மிஸ்டேக்.. எப்படி என்கிட்டே இதை நீ சொல்லாம இருக்கலாம்” என அவனையும் மீறி கத்தினான். அதுதான் அவன் அக்ஷராவிடம் அப்போதைக்கு பேசிய வார்த்தை.. அதன் பிறகு அவளிடம் பேசவேயில்லை.