ஷ்ரத்தாவை அவளிடம் இருந்து பிரித்து தூக்கிக் கொண்டவன், “இனிமே நிக் வேண்டாம்! அப்பா கூப்பிடு!” என,
ஷ்ரத்தா அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமொன்று பதிக்க, பார்த்திருந்த அக்ஷராவிற்கு கண்கள் கலங்கியது. கூடவே அதுவரை ஷ்ரத்தாவிடம் எப்படி சொல்வது என்ற டென்ஷன் இருக்க, வேறு எதுவும் தெரியவில்லை. இப்போது நிகில் போகிறான் என்பது மனதில் பாரமாக அழுத்தியது.
வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். நிகில் ஷ்ரத்தாவிடமே லயித்து இருந்தான். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விமான நிலையத்திற்கு யாரும் வரவேண்டாம் என்று சொல்லி, அவர்கள் மூவர் மட்டுமே கிளம்பினர்.
ஃபளைட்டின் கால் கேட்க, எழுந்தவனிடம், “என்னமோ நான் பக்கத்துல இருந்தா யாருமே கண்ணுக்கு தெரிய மாட்டாங்க சொன்னே. நான் உன் பக்கத்துலேயே தான் இருக்கேன். ஆனா ரெண்டு மணிநேரமா உன் பொண்ணை மட்டும் தான் நீ பார்க்கிற!” என்று சொல்லியே விட்டாள்.
நிகிலுக்கு சிரிப்பு வர, “நீ எப்போ காட்டினாலும் நான் பார்ப்பேன் அக்ஷி. ஆனா நீ காட்டவேயில்லை! அப்புறம் நான் எப்படி பார்ப்பேன்!” என பேச, முறைத்தவள்,
பின்பு அவனின் குறும்புப் பார்வையில் சிரித்து விட்டு, “எப்படி தான் உன்னால மட்டும் இப்படி பேச முடியுதோ?” என சிரிக்க,
“வில் மிஸ் யு பேட்லி அக்ஷி, ஏதாவது ஒரு பாசிபிளிட்டி இருந்தா மெசேஜ் பண்ணினா கூட போதும், ஷ்.. பறந்து வந்துடுவேன்!” என சைகை காட்டி சிரிப்போடு சொல்ல,
பதிலுக்கு அவளும் சிரிப்போடே, “ஒரே பாசிபிளிட்டி கல்யாணம் மட்டும் தான்!” என்றாள் தெளிவாக.
மெதுவாக அவளின் கன்னம் தட்டியவன், ஷ்ரத்தாவை தூக்கி முத்தமிட்டு கீழே இறக்கி,
“என்னோட மைன்ட் செட் மாத்த ஃபுல் ட்ரை கொடுக்கறேன், ஆனா முடியாம போனாலும் நீ வருத்தப்படக் கூடாது!” என,
அக்ஷரா அதற்கு பதில் சொல்லவில்லை. ஆனால் புன்னகையுடன் தான் பார்த்திருந்தாள். கண்டிப்பாக மாறுவான் என்ற நம்பிக்கை இருந்தது. “கால் பார்த்துக்கோ!” என,
“சரி” என்பது போல தலையாட்டி புன்னகையுடன் விடை கொடுத்து, வெளியில் வந்த போது, அபிமன்யு இருந்தான்.
“நீ எங்கே இங்கே! இப்போ தான் போனாங்க! கொஞ்சம் முன்னே வந்திருக்க மாட்டே!” என்ற அக்ஷராவிடம்,
“நான் வந்து ரெண்டு மணிநேரம் ஆச்சு!” என, “அப்புறம் ஏன் உள்ள வரலை”
“நான் உங்களை பிக் அப் பண்ண தான் வந்தேன். டசின்ட் வான்ட் டு டிஸ்டர்ப் யு” என்று சொல்லி காருக்கு அழைத்துப் போக, அங்கே ஒரு புத்தம் புது ஃபார்ச்சுனர் கார் நிற்க,
“புது கார் வாங்கினியா? சொல்லவே இல்லை!” என,
“நான் வாங்கலை, உன் வீட்டுக்காரர் வாங்கினார் உனக்கு! அவர் போன பிறகு உன்கிட்ட கொடுக்க சொன்னார்!” என, ஷ்ரத்தாவை பார்க்க,
“நானும் நிக்கும் தான் போய்..” என ஆரம்பித்தவள், “இல்லையில்லை நானும் அப்பாவும் தான் போய் செலக்ட் பண்ணினோம்” என்றாள் குதூகலமாக.
“லவ் யு பேபி!” என்று அக்ஷரா அவளைத் தூக்க,
“நீங்க தான் மம்மா ஓட்டணும்!” என்று சொல்லி, அக்ஷரா கால் காயம் கட்டை யோசிக்க,
“கொஞ்சம் தூரம் மூவ் பண்ணிட்டு, கொடுத்துடு அக்கா!” என அபிமன்யு பின்புறம் அமர, ஷ்ரத்தா முன் புறம் அம்மாவின் அருகினில் அமர்ந்தாள்.
நிகில், “ஏன் இங்க தனியா இருக்க? வசதி வாய்ப்பும் உங்க வீட்டை கம்பேர் செய்யும் போது ஒன்னுமே இல்லை” என,
“அப்பா, அம்மா, பேச்சை நான் எதுவுமே கேட்கலை, ஆனா அவங்க சம்பாத்தியம் மட்டும் யூஸ் பண்றது தப்பு மாதிரி தெரிஞ்சது. அதனால முடிஞ்சவரை அவாய்ட் பண்ணிட்டேன். எங்கம்மாவோட ஒரு நாள் இன்கம் தான் என் சேலரியே. பட் ஓகே! இது லைஃப் லீட் பண்ண போதும்” என்றவளை வியப்போடு பார்த்தான்.
இந்த அக்ஷராவின் பரிமாணம் அவனுக்கு கூடத் தெரியாது. எதோ திட்டினார்கள், கோபத்தில் எதுவும் உபயோகிப்பது இல்லை என தான் நினைத்து இருந்தான்.
அதனை முன்னிட்டே இந்த கார் பரிசு, அதற்கு மேல் எதுவும் இப்போதைக்கு வாங்க மாட்டாள் என தெரியும். சற்று பெருமையாகக் கூட இருந்தது, தனக்கு பிடித்த பெண் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் சிறந்தவள் என்று.
கிட்ட தட்ட ஒன்பது மாதங்களுக்கு பிறகு ஒரு மூன்று மாத டூரிஸ்ட் விசாவில் அக்ஷரா, ஷ்ரத்தாவை அழைத்துக் கொண்டு யு எஸ் சென்றாள்.
அதுவும் ஷ்ரத்தா “நம்ம எப்போ அப்பாவோட இருக்கப் போறோம்!” என்று சில முறை கேட்டிருக்க, அம்மா சரியாக பதில் சொல்லாததால், அதை நிகிலிடமும் ஷ்ரத்தா கேட்டு விட, நிகில் வற்புறுத்தி அழைத்து இருந்தான். அதனை முன்னிட்டே இந்த பயணம்.
விமானம் தரையிறங்கவும் முதல், “அப்பா! இங்கே வந்திருப்பாங்களா? வருவாங்க தானே!” என்று விடாமல் தொனதொனத்துக் கொண்டிருந்த ஷ்ரத்தாவிடம் பதில் சொல்லி மாய்ந்து போனால் அக்ஷரா.
கண்கள் நிகிலை தேட, இவர்களை பார்த்து கையசைத்தவன், வேகமாக அருகில் வரவும்,
ஷ்ரத்தா அவனை நோக்கி ஓட,
“ஹே, ஓடாத, நில்லு!” என அக்ஷரா பிடிக்க முற்பட்ட போதும் ஓடியிருந்தாள்.
தன்னை நோக்கி வந்தவளை, அப்படியே தூக்கியவன், “ரூ பேபி, இன்னும் வளர்ந்துட்டாங்க!” என,
“என் கிளாஸ்ல நான் தான் ஹைட்” என்று பெருமை பேச, அப்பா மகளின் பேச்சுப் படலம் ஆரம்பமனாது.
மகளிடம் பேசியபடி இருந்தாலும், பார்வை முழுக்க அக்ஷராவிடம் தான்.
மகள் முடித்ததும் “ஷ்ரத்தா மாதிரி நீ ஓடி வந்திருந்தா பரவாயில்லை!” என, வெறும் புன்னகை மட்டுமே! நிகிலை பார்த்த பரவசத்தில் இருந்தாள்.
எட்டு வருட பிரிவு கூட அப்படியில்லை. எட்டு மாத பிரிவு ஏங்க வைத்து இருந்தது.
தான் மிகவும் பலவீனமாகி விட்டோமோ என்ற எண்ணம் கூட. அதற்கு பெயர் பலவீனம் அல்ல, காதலாகக் கூட இருக்கலாம் என்ற நினைப்பு ஒரு ஓரத்தில் இருந்தது.
மகளை இறக்கி விட்டு, ஒரு ஜீன்ஸ் டீ ஷர்டில் இன்னும் இளமையாக தெரிந்த அக்ஷராவிடம்,
“ஆமா! எதுக்கு இப்படி உன் ஸ்ட்ரக்சர் மெயின்டெயின் பண்ற? என்ன யூஸ்?” என்று அவளை அணு அணுவாக ரசித்தபடி மகளுக்கு கேட்காத மெல்லிய குரலில் பேச,
“என்னை கல்யாணம் பண்ணினா தானே, என்ன யூஸ்ன்னு காட்ட முடியும்!” என்று அவனுக்கு பதில் கொடுத்து, சற்றும் சளைக்காத பார்வை பார்த்தாள்.
“பண்ணியே ஆகணுமா? வேற எதுவும் பாசிபிளிடி கிடையாதா?” என
“இருக்கே” என்றவள், “ஆனா என்னோட கிடையாது! வேற யாராவது பார்த்துக்கோ” என சிரிப்போடு சொல்ல,
“எனக்கு வேற யாரும் வேண்டாம். நீ தான் வேண்டும்” என்றான்.
“சொல்லிட்டே மட்டும் இரு!” என்று கிண்டல் செய்ய,
“நீ நிறைய ரூல்ஸ் போடற. அதுல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணக் கூடாதா?”
“ம்கூம்! நோ வே!” என்றபடி நடக்கத் துவங்க, பின் தொடர்ந்தான்.
அவளிடம் பேசியது எல்லாம் வாய் வார்த்தைக்காக மட்டுமே! திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தான்.
அதற்கான சட்டரீதியான வேலைகளையும் ஆரம்பித்து இருந்தான். நாட்கள் இனிமையாக கழிய, அங்கே இருந்த இரண்டாவது மாதம் சட்டரீதியாக நிகிலின் மனைவியாக அக்ஷரா மாறினாள்.
பின்பு அடுத்த நாளே ஷ்ரத்தாவை வரதராஜனிடமும் காவ்யாவிடமும் விட்டு, அங்கே இருந்த ஒரு பிரசித்தி பெற்ற பாலாஜி கோவிலில் முறைப்படி தாலியும் அணிவித்து மனைவியாக்கி கொண்டான்.
சட்டரீதியான திருமணத்தை பெற்றோரிடம் சொன்ன போதும், இதை இருவருமே யாரிடமும் பகிரவில்லை.
திருமணம் முடிந்து அமர்ந்த போது, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அக்ஷரா இருப்பது போல தோன்ற,
“வாட்ஸ் ஈட்டிங் யு” என,
“என் வாழ்க்கையோட வொர்ஸ்ட் பார்ட், கொஞ்சமா பெஸ்ட் பார்ட் டா மாறிடுச்சு இல்லையா” என்றாள்.
“நம்ம சேர்ந்து இருந்தது வொர்ஸ்ட் டா” என்று நிகில் முகத்தை சுருக்க,
“அப்படி சொல்லலை! இந்த மாதிரி ஒரு பாண்டிங் ( உறவு முறை ) இல்லாம” என்று தன் தாலியைக் காட்டியவள்,
“அந்த மாதிரி ரிலேஷன்ஷிப் வொர்ஸ்ட் தானே!” என,
“எல்லாம் நம்ம மனசு தான் அக்ஷி, மனசோட பாண்டிங் தான் முக்கியம்! அது இல்லைன்னா இது கூட ஒன்னும் பண்ண முடியாது” என அவளின் கழுத்தினில் இருந்த தாலியைக் காட்டினான்.
“ஒப்பினியன் டிஃப்பர்ஸ்” என்று புன்னகைத்தாள்.
“நான் கூட இதுக்கு அதிக மதிப்பு குடுக்கறதில்லை, ஆனா இது இல்லாம இருக்க முடியாது, ஏன்னா நான் இருக்குற சொசைட்டி அப்படி, அண்ட் இதனால யாரும் ஷ்ரத்தாவை தப்பா சொல்லிடக் கூடாது” என்றவள்,
“ரொம்ப கார்னர் பண்ணிட்டேனா கல்யாணத்துக்கு?” என,
“என்ன கார்னர் பண்ணின நீ?” எனக் கேட்டவனிடம்,
“ஷ்ரத்தா” என,
“ம்கூம்!” என மறுத்தவன்,
“ஹண்ட்ரட் பெர்சென்ட்ல ட்வென்டி ஃபைவ் ஷ்ரத்தா, ட்வென்டி ஃபைவ் நீ, பாக்கி ஃபிப்டி பெர்சன்ட் நான் தான், நான் மட்டும் தான் ரீசன். ரொம்ப யோசிச்சேன், இப்போ ஓகே! ஃபிசிகலா எந்த பொண்ணு வேணா என் தேவைகளை சேடிஸ்ஃபை பண்ண முடியும். பட் ஏஜ் ஆன பிறகு மென்டலா ஒரு தேவை இருக்கும் போது எல்லாராலையும் முடியாது, ஒன்னு நமக்கு பிடிச்சவங்களா இருக்கணும், இல்லை அவங்களுக்கு நம்மை பிடிக்கணும்!”
“இந்த ரெண்டுமே நம்ம விஷயத்துல பொருந்தும், அதனால தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். சோ, இது அதிகம் சுயநலமான முடிவு. அண்ட் யு நோ ஒன்திங், ஃபிசிகலா கூட உன்னை தவிர யாரும் என்னை சேடிஸ்ஃபை பண்ண முடியாது!” என்று உணர்வுப் பூர்வமாக சொல்ல,
“அப்போ, அதுக்கு தான் என்னை கல்யாணம் செய்துக்கிட்டியா?” என்று முறைக்க,
“இருக்கலாம்” என்று கண்ணடித்து சிரித்தான்.
“இருக்கலாம் என்ன? அதுதான் நிஜம்!” என முறைத்துக் கொண்டே எழ,
“கண்டுபிடிச்சிட்டியா, ஆமாம்! எப்படி உன்னால மட்டும் முதல் நாள் எப்படி அட்ராக்ட் பண்ணுனியோ அப்படியே இன்னும் முடியுது!” என,
“ஐயோ ரொம்ப தான்!” என்று சலித்தபடி நடந்தவளுடன்,
தானும் சேர்ந்து கொண்டவன், “எஸ்! இப்போதைக்கு இது முக்கிய காரணம், அப்புறம் கொஞ்சம் ஏஜ் ஆச்சுன்னா மாறும். காரணங்கள் அந்த அந்த வயசுக்கு தகுந்த மாதிரி மாறிக்கிட்டே இருக்கும்” என்றான்.
“ரொம்ப பேசற நீ!” என்று நிஜமாகவே சலித்தபடி காரில் அமர்ந்தாள்.
ஆனாலும் மனது சொன்னது, இந்த திருமணதிற்காக மிகவும் யோசித்து இருக்கின்றான் என்று.
மேலே போய் மேகமாய் நின்று குளிர்வித்தாலும், இன்னும் வானத்தை அடைந்து மழையாய் பொழியும் பக்குவம் வரவில்லை என புரிந்தது!
இந்தக் குளிர்ச்சியே பாலைவனமாய் உணர்ந்த தன் வாழ்க்கைக்கு இப்போதைக்கு போதும் என நினைத்தாள்!
நாளை நடப்பதை யார் அறிவர்! தாங்கள் மிகச் சிறந்த தம்பதிகளாய் கூட மாறலாம்! திருமணம் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று என்று நிகிலே சொல்லும் நிலை கூட வரலாம்!
யார் கண்டார்!
“யு ஆர் ஜஸ்ட் ஸ்டன்னிங் இன் திஸ் அவுட் பிட்!” என அவளின் புடவைக் காட்டி நிகில் சொல்ல,
“தேங்க் யு” என்றவளிடம்,
அதற்கு மேல் பொறுமை காக்க முடியாது, அணைத்து முத்தம் மிட,
எப்போதையும் விட அந்த முத்தம் மிக நுணுக்கமான ஒரு நிறைவை கொடுத்தது. நிகிலுக்கு சரியாக ஈடு கொடுக்க வைத்தது. உணர்வுகளையும் மிக அதிகமாக எந்த தடையும் இன்றி அனுபவிக்க வைத்தது.
இது தான் திருமணத்தின் மகத்துவமோ!
இருவரின் மனம் முழுவதும் ஒரு நிறைவு!
(நிறைவுற்றது)