அத்தியாயம் பதினைந்து :
மறு நாள் பொழுது விடிய, அக்ஷரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஷ்ரத்தா எழுந்தவள், பெட் ரூம் கதவு திறந்து இருப்பதைப் பார்த்து வெளியே வந்தவள், அங்கே நிகில் வெறும் தரையில் படுத்திருப்பதை பார்த்தாள்.
அவனை எழுப்பி “நிக்! ஏன் இங்க படுத்து இருக்கீங்க?” என ,
“என் பொண்ணு அவ அம்மாவை விட ரொம்ப நல்லவ போலவே! எழுப்பி எவ்வளவு மரியாதையா பேசறா” என்று சலித்தபடி எழுந்தவன்,
“எதுக்கு பேபி இவ்வளவு சீக்கிரம் எழுந்த?” என,
“சீக்கிரமா எழுந்துட்டேன்?” என்று ஜன்னலைப் பார்க்க, அங்கு வெளிச்சம் பரவி இருக்க, மணி எட்டு எனக் காட்ட..
“இல்லை, சீக்கிரம் இல்லை!” என்ற படி எழுந்து அமர்ந்தவன்,
அக்ஷராவை பார்க்க, அவள் இன்னும் உறக்கத்தில் இருக்க, கதவை வெளிப்புறமாகப் பூட்டிக் கொண்டு, அவனின் பெற்றோர்கள் இருந்த ப்ளாட்டிற்கு சென்றான், வரதராஜன் சோபாவில் அமர்ந்திருக்க, அவரின் அருகில் அமர்ந்து “மா.. காஃபி” என,
“எப்படி தான் ஒன்னுமே நடக்காத மாதிரி இப்படி வர்றானோ?” என்றபடி வரதராஜன் பார்க்க,
“என்ன உங்க மைன்ட் வாய்ஸ்?” என..
அவனிடம் பதில் சொல்லாமல் ஸ்ரத்தாவை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். அவனின் வாய்ஸ் கேட்டு வெளியே வந்த காவ்யா, அவனை முறைத்துப் பார்க்க, “நீங்க எதுக்கு முறைக்கறீங்க அம்மா?” என,
“எப்படிடா இப்படி ஒரு குழந்தையை பக்கத்துல உட்கார வெச்சிக்கிட்டு ஒன்னுமே நடக்காத மாதிரி பேசற?” என,
“மா!” என்று அவரை கடிந்தவன், “இன்னும் அவளுக்கு எதுவும் தெரியாது!” என,
“ஏன் இன்னும் சொல்லலை?” என்றவரிடம்,
“அப்போ உங்களுக்கு ஓகே வா! என் மேல கோபமில்லையா?” என,
“எனக்கு கோபம்ன்னு சொன்னா, என்ன செய்வ?”
“ஒன்னும் செய்ய மாட்டேன்!” என்று அசால்டாகத் தோளைக் குலுக்கினான்.
“அப்புறம் எதுக்குடா நான் கோபப்படணும்” என்றவரிடம்,
“மா எப்போ இருந்து இவ்வளவு இன்டெலிஜென்ட் ஆன?” என,
“இந்த பேபி நம்ம பேபின்னு தெரிஞ்ச உடனே” என்று காவ்யா ஷ்ரத்தாவை கொஞ்ஜ ஆரம்பிக்க,
“போ! பேபிக்கு முதல்ல ஏதாவது கொடு!” என்றார் வரதராஜன்.
ஷ்ரத்தா தயங்க, “மம்மாக்கு உடம்பு சரியில்லை தானே! அதனால தான் போ!” என்றான் நிகிலும். அவர்கள் செல்ல,
வரதராஜன் நிகிலிடம் “யார் மேல தப்பு சரின்னு எல்லாம் பார்க்க வேண்டாம் நிகில், எந்த தப்புனாலும் உன் மேல போட்டுக்கோ!” என,
“ என்ன தப்பு செஞ்சேன் நான்?” என்றான்.
அவனை முறைத்து பார்த்தார் வரதராஜன்.
“என்ன தப்புன்னு தெரிஞ்சா தானே ப்பா என் மேல போட முடியும்” என்றவனிடம்,
“மேரேஜ், அப்புறம் நீங்க பிரிஞ்சது, எல்லாம் உன்னால சொல்லிக்கோ, மேரேஜ் நீ பண்ணியிருப்பன்னு எனக்கு தோணலை” என,
அதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான். “அப்படி ஒரு வேளை இருந்திருந்தா கண்டிப்பா அது யாருக்கும் தெரிய வரக் கூடாது. அது அக்ஷராவை அஃபக்ட் பண்ணும், அதை விட ஷ்ரத்தாவை இன்னும் அஃபக்ட் பண்ணும், புரியுதா! அது தான் இங்க பெரிய தப்பு! மன்னிக்க முடியாத தப்பு!” என்றவர்,
“இந்த என்னோட பேச்சை எப்பவும் மீறிடாத ப்ளீஸ்!” என்றார் கெஞ்சல் குரலில்.
“புரியுதா?” என மீண்டும் கேட்க, புரிந்ததற்கு அடையாளமாய் தலையாட்டினான்.
சரியாக அப்போது ஷங்கரும் துர்காவும் வர, வீட்டின் சாவியைக் கொடுத்தவன் “ஷி இஸ் ஸ்லீப்பிங்” என, அவர்கள் வந்து ஒரு மணிநேரமாகியும் அக்ஷரா எழவில்லை. எழுப்பியும் எழவில்லை!
“ப்ளீஸ் மா! தூக்கம் வருது!” என்று தூங்கினாள். குழந்தையை பொறுப்பற்று விட்டு சென்று விட்டானோ என நிகில் சென்ற நாளாக தூங்காத தூக்கத்தை தூங்கினாள்.
வீட்டில் சில விஷேஷங்கள் இருப்பதால், ஹாஸ்பிடலும் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் கிளம்பினர் .
“டிரெஸ்ஸிங், நான் பண்ணிடறேன்!” என்று அந்த கிட்டை வாங்கி வைத்துக் கொண்டான். ஷ்ரத்தாவை அவர்கள் மாலை அனுப்புவதாக கூறி, வரதராஜனையும் காவ்யாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பும் போது,
துர்கா தயங்கி தயங்கி “எதாவது டிசைட் பண்ணியிருக்கீங்களா, நீங்க சேர்ந்து இருக்கிறதைப் பத்தி” என,
நிகில் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்து, பின் “நான் மட்டும் சொல்ல முடியாது, அக்ஷரா எழட்டும்” என, அவரின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்படையாய் தெரிந்தது.
காரில் போகும் போது வரதராஜன் அவர்களிடம், “உடனே எல்லாம் சரியாகிடாது. ஆனா சரி பண்ணிக்குவாங்க! நம்புவோம்!” என்றார்.
அக்ஷரா விழித்ததும் “குட் மார்னிங்” என்றவன், “உன் மம்மி டேடி வந்தாங்க!” என,
“என்ன சொன்னாங்க?” என்றாள். “ஒன்னும் சொல்லலையே!” என்றவன், “ஆனா கேட்டாங்க! என்று முடிக்க,
“என்ன கேட்டாங்க”
“நம்ம எப்போ சேர்ந்து வாழப் போறோம்னு” என சொன்னவனிடம்,
“ஓஹ்” என்றவள் முடித்துக் கொண்டாள்.
மெதுவாக எழுந்து அவள் வெளியே வர, “காஃபி, டிஃபன்” என்று வரிசையாக அவளுக்கு கொடுத்தவன், “ஏதாவது பாசிபிளிட்டி இருக்கா?” என்றான் அக்ஷராவிடம்.
“எதுக்கு?” என்று புரியாமல் அவள் கேட்க,
“நாம சேர்ந்து வாழ?” என்று குறும்பாகக் கேட்க,
“இருக்கே!” என்றவள், அவன் முகம் ஒரு மகிழ்ச்சியைக் காட்டவும்,
“ஆனா! அதுக்கு நம்ம நிஜமா கல்யாணம் பண்ணனும். அப்போ மட்டும் தான் பாசிபிள்!” என
“வேற ஏதாவது ஆப்ஷன் இருக்கா” என்று விடாமல் அவனும் கேட்க,
“வேற எந்த ஆப்ஷனும் இல்லை!” என்றாள் ஸ்திரமாக. பின்பு தட்டு தடுமாறி ஒரு வழியாய் அவள் குளித்து “ஷப்பா!” என்று அமர,
“இந்த டிரெஸ்ஸிங் மாத்திடலாம்!” என்று நிகில் சொல்ல,
“வேண்டாம்! வேண்டாம்! வலிக்கும். நான் இந்த டாக்டர்ஸ் நம்பறது இல்லை, கொஞ்சமா இருக்குற வலியை பெருசாகுவீங்க!” என முகம் சுளிக்க,
“உன்னை சுத்தி அத்தனை பேரும் டாக்டர்ஸ், நீ எங்களை கிண்டல் செய்வியா?” என்று கேட்டபடி அருகில் அமர்ந்தான்.
அருகில்! மிக அருகில்! மிக மிக அருகில்!
“எதுக்கு இப்படி உட்காருற நிகில், தள்ளி உட்காரு” என,
“அக்ஷி, ப்ளீஸ்! ஐ குட் நாட் ரெசிஸ்ட் எனி மோர்!” என்று சொல்ல,
இவன் என்ன சொல்லுகிறான் என்று அக்ஷரா கலவரமாகப் பார்க்க, “அட்லீஸ்ட் எ கிஸ்!” என்று சொல்ல ஆரம்பித்து, முடிக்கக் கூட இல்லாமல், அவளை அணைத்திருந்தான் முத்த மிட துவங்கியிருந்தான்.
ஒத்துழைத்தால் என்று சொல்ல முடியாவிட்டாலும், தவிர்க்கவில்லை.
சிறிது நேரம் அனுமதித்தவள், மெதுவாக அவனை விலக்க, அவளின் உடல் மொழி புரிந்து விலகியவன், “நம்ம இதை இன்னும் கொஞ்சம்…” என்று அவன் ஆரம்பிக்கும் போதே,
“அது பாசிபிள் இல்லை நிக்!” என்றாள் அமைதியான குரலில்.
“ஏன்? அதுதான் நம்ம மேரிட் தானே சொல்லப் போறோம்”,
“அது மத்தவங்களுக்கு, ஆனா எனக்கு தெரியும் தானே! இனிமே மேரேஜ் இல்லாத ரிலேஷன்ஷிப் நமக்குள்ள கண்டிப்பா முடியாது!” என,
நிகில் ஏதோ பேச வர,
“ப்ளீஸ்! நான் பேசி முடிச்சிடறேன்!” என்றவள்,
“மேரேஜ் உனக்கு ரொம்ப கஷ்டம்ன்னு தெரியும், ஏன்னா? உன்னை யாரும் கேள்வி கேட்கறது உனக்குப் பிடிக்காது. நீ எங்கே போற? எங்கே வர்ற? எப்போ போற? எப்போ வர்ற? உன்னோட மத்த ஃபிரண்ட்ஸ் யாரு, இப்படி எதுவும் கேட்கக் கூடாது! ஜஸ்ட் இதை சாப்பிட்டு பாரு நல்லா இருக்கும்னு சொன்னா கூட, நோ நோ எனக்குப் பிடிக்காது! என்னை கம்பல் பண்ணாத சொல்லுவ”
“அடிக்கடி நீ என்னை டாமினேட் பண்ணற சொல்லுவ! நான் உன்கூட இருக்கும் போது உலகமே மறந்து போகுது அப்படி எல்லாம் என்னால இருக்க முடியாது சொல்லுவ! நீ ஹாஸ்பிடல் போன பிறகு நீயா கால் பண்ற வரை நான் பண்ணக் கூடாது சொல்லுவ! திடீர்ன்னு ஒரு எமர்ஜென்சி வந்தா ரெண்டு நாள் கூட ஹாஸ்பிடல்ல இருப்ப! எனக்கு இன்ஃபார்ம் கூட பண்ண மாட்ட!”
“ஏன்னு கேட்டா வொர்க் பிசில மறந்துட்டேன்னு சொல்லுவ, உன்னோட சில கேர்ள் பிரண்ட்சை என் முன்னாலயே கிஸ் பண்ணுவ! ஆனா நான் கேட்கக் கூடாது சொல்லுவ!”
“மேரேஜ்ன்னு ஒன்னு நடந்தா, இதெல்லாம் கண்டிப்பா இருக்கும். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், நீ உன் இஷ்டத்துக்கு இரு நான் என் இஷ்டத்துக்கு இருக்கேன்னு, என்னால டைலாக் பேச முடியாது! கண்டிப்பா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ணுவேன்! நான் கேட்கற கேள்விக்கு நீ பதில் சொல்லித் தான் ஆகணும்! சோ, மேரேஜ் நமக்குள்ள பாசிபிள் இல்லை!”
“அதனால வேற எதுவும் பாசிபிள் இல்லை!” என்று கடகடவென்று பேசினாள்.
“அம்மாடி!” என்று அவள் பேசியதையே பார்த்திருந்தான்.
“இவ பேசி கேட்கும் போதே எனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே, இதை எல்லாம் ஃபாலோ பண்ணனும்னா!” என்று அவன் யோசிக்கும் போதே..
“அண்ட் இன்னைக்கு கிஸ் பண்ணின ஓகே! ஆனா இனிமே பண்ணாத! ஃபீலிங்க்ஸ் ஆர் சேம்! ஐ மிஸ் யு பேட்லி! டோன்ட் டெம்ப்ட் மீ! என் உணர்வுகளை தூண்டாதே!” என்று அக்ஷரா சொல்லும் போதே குரல் உள்ளே சென்று இருந்தது.
அவளின் முகத்தை பார்த்து இருந்தவன், அவளின் உணர்வுகளை படித்துக் கொண்டே, “சாரி! இனிமே பண்ண மாட்டேன், ஆனா இப்போ பண்ணினோம் இல்லை, அது இன்னும் ஒரு முறை!” என்று சொல்லி, அவளின் முகத்தை அருகில் இழுத்து,
“ப்ளீஸ்!” என சொல்லி, மீண்டும் முத்தமிட, இந்த முறை சிறிது ஒத்துழைப்பு கூட அக்ஷராவிடம் இருந்து.
அது இன்னும் நிகிலை தவிக்க வைத்தது. அவனுடைய அணைப்பும் முத்தமுமே அவளுக்கு நிகிலின் வேட்கையை உணர்த்த, சிரமப்பட்டு விலகியவள் “என்ன பண்ணற நீ” என முறைத்தாள்.
“ரொம்ப வருஷம் ஆகிடுச்சு! அதான்!” என்று அசடு வலிந்தவனிடம்,
“உன் லைஃப்ல அப்போ பொண்ணுங்க இல்லவே இல்லையா?” என்று நம்பாமல் கேட்க,
“இருந்தாங்க! ஆனா கிஸ் மட்டும்தான். அப்புறம் வேற கொஞ்சமும், அதுக்கு மேல ப்ரொசீட் பண்ணினது இல்லை!”
“அவ்வளவு நல்லவனா நீ! என்னை நம்பச் சொல்றியா!” என்று அக்ஷரா முறைக்க,
“நல்லவன் எல்லாம் இல்லை! ஆனா யாரோட ஸ்மெல்லும், என்னால கொஞ்சம் நேரம் கூட டாலரேட் பண்ண முடியாது! கிஸ் முடிஞ்சு மேல போகும் போதே நகர்ந்துடுவேன், இப்போல்லாம் அது கூட இல்லை, வேற யாரும் பக்கத்துல வந்தாலே பிடிக்கறது இல்லை!” என்று சொல்ல..
மெதுவாக தலையிலடித்துக் கொண்டவள், “இதை நீ சொல்ல வேற செய்யறியா?” என,
“பின்ன, நானும் நிறைய ட்ரை பண்ணினேன் முடியலை” என்றான் உண்மையாக.
இப்போது அவனை தோளில் அடித்தவள் “கிஸ் ஓகே, அது என்ன வேற கொஞ்சம் செஞ்ச?” என,
“அதெல்லாம் சொல்ல முடியாது, வேணும்னா டெமான்ஸ்ட்ரேட் பண்ணவா?” என கேட்க,
அவனின் பார்வையில் இருந்த தாக்கத்தில் முகத்தை திருப்பியவள், “போடா!” என்று சிரிப்போடு எழ,
“என்ன பயமா?” என நிகில் கேட்க,
“பயமா எனக்கா?” என புருவம் உயர்த்தி பாவனையாக கேட்க, அதில் தொலைந்தவன்,
“அப்போ ஒரு ட்ரை குடுப்போமா” என,
“தோடா! போ!” என்று சிரிப்போடே விலகி விட்டாள். அதற்கு மேல் எதற்குமே நிகிலை அனுமதிக்கவில்லை.
அங்கிருந்த மூன்று நாட்களும் அவர்களோடு தான் இருந்தான். அக்ஷராவின் வீட்டினில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.
துர்கா “என்ன? என்ன பண்ணப் போறீங்க” என்ற போது,
“நிகில் யு எஸ் போயிட்டு, அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நாங்க போறோம்மா!” என்றாள்.
நிகில் அதை கேட்டுக் கொண்டு இருந்தாலும் எதுவும் பேசவில்லை. மூன்று நாட்களுமே அக்ஷராவிடமும், நிகிலிடமும், ஒரு அமைதியோடு கூடிய யோசனை.
வேறு ஒன்றுமில்லை! ஷ்ரத்தாவிடம் இன்னும் சொல்லவில்லை.
“சொல்றேன்!” என்று அக்ஷரா சொல்லும் போது,
“இல்லை! நான் போகும் போது சொல்லு, பேபி அக்சப்ட் பண்ணாம, வேற மாதிரி ரியாக்ட் பண்ணினா, எனக்கு கஷ்டமா போகும்!” என்றான்.
இன்னும் இரண்டு மணிநேரத்தில் ஏர்போர்ட் கிளம்ப வேண்டும் என்ற போது, மெதுவாக ஷ்ரத்தாவிடம், “பேபி! எனக்கும் அப்பாக்கும் சண்டை தானே! டூ விட்டுட்டேன் தானே!” என பேச,
“எஸ்! மம்மா!” என , “அது என்ன டூ?” என்ற அதி முக்கியமான கேள்வியை நிகில் கேட்க,
“வாயை மூடு!” என்று எரிச்சலில் கத்தினாள்.
“ஓகே! ஓகே!” என்று நிகில் அமைதியாக,
“அதுவா நிக், டூ ன்னா, நம்ம கோபம் வந்தா டூ சொல்லிப் பேச மாட்டோம்!” என்று ஷ்ரத்தா விளக்கம் கொடுக்க,
“உனக்கு மேல இருக்கா உன் பொண்ணு!” என்ற பார்வை பார்த்தாள் அக்ஷரா.
“ப்ச், ஷ்ரத்தா! லிசன் டு மீ!” என்று ஒரு அதட்டல் போட,
“சொல்லுங்க மம்மா!” என்று ஷ்ரத்தா திரும்பவும் அட்டன்ஷன் பொசிஷன் வர,
“நான் பழம் விடட்டுமா” என அக்ஷரா கேட்க,
“அது என்ன பழம்?” என விழித்தான்.
“ஓஹ் விட்டுடலாமே!” என்று ஷ்ரத்தா குதிக்க, முகம் மலர்ந்தவள்,
“அப்பா யாரு கேட்க மாட்டியா?” என,
“இவர் தானே!” என்று அசால்டாக நிகிலை காட்ட,
“எப்படி பேபி தெரியும்? யாராவது சொன்னாங்களா?” என அக்ஷரா கேட்க,
“யாரும் சொல்லலை!” என்று தலையசைத்தாள்.
“அப்புறம் எப்படி தெரியும்?” என நிகில் கேட்க,
“அப்பா மட்டும் தானே நம்மோட ஒரே வீட்ல இருப்பார். எல்லோர் வீட்லயும் அப்படி தானே. நிக் நம்மோட த்ரீ டேஸ்ஸா இருக்கார் தானே, அப்புறம் என்னோடவே இருக்கார் தானே! அப்பா தானே அப்படி இருப்பாங்க! வேற யாரும் நம்ம வீட்ல இருந்தது இல்லையே! வேற யாரையும் என்னை நீ பார்த்துக்க விட்டது இல்லையே!” என்று நீளமாக சொல்ல,
அசந்து விட்டனர் இருவரும், “பேபி யு ஆர் இன்டெலிஜென்ட்” என்று சொல்லி அக்ஷரா அவளை அணைத்து கண்கள் கலங்க,
நிகிலுக்கு அது மிகவும் நெகிழ்ச்சியான தருணம், யாரும் சொல்லாமலேயே “இவர் தன் அப்பாவாய் இருந்தால் தான், இப்படி இருக்க முடியும்” என்று ஷ்ரத்தாவின் புரிந்து கொள்ளக் கூடிய தன்மை வியக்க வைத்தாலும்,
அவள் இன்னும் எதுவும் புரிந்து கொள்ளும் முன் உறவை சீராக்கி கொள்ள வேண்டும் என்ற விதை அவனின் மனதின் உள் விழுந்தது.