எவ்ளோ தான் காசு பணம் புகழ்னு சம்பாதிச்சாலும் சில விஷயங்கள் அது எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதா இருக்கு.அப்பா வந்துருந்தார் வழக்கம் போல அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை.

அவர் மேல இருந்த கோபத்துல அம்மா என்னையும் நிறையவே பேசிட்டாங்க.அது மட்டுமில்லாம இப்போ எல்லாம் ப்ராஜெக்ட்ஸ்ஸும் டல்லா தான் போய்ட்டு இருக்கு.என் ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்த்து  ட்ரிங்க்ஸ் அதிகமா கன்ஸ்யூம் பண்ண ஆரம்பிச்சுட்டேன்.அதுவும் மீடியா எப் பினு போட்டு ரொம்ப அவமானமாஆயிடுச்சு.

எல்லாத்தையும் யோசிச்சு என்ன பண்றதுனு தெரியாம தான் இப்படி ஒரு பைத்தியகாரத் தனத்தை பண்ணிட்டேன்.”

வாழ்க்கையில கஷ்டம் இல்லாதவங்க யாரு ரேஷ்..எல்லாத்துக்கும் மரணம்தான் முடிவுனா யாருமே வாழா முடியுதாது இல்லையா?”

ஆமோதிப்பாய் தலையசைத்தவன் அமைதியாய் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான்.

 அவனை வீட்டில் விட்டுவிட்டு வேலைகாரரிடம் உடல்நிலை சரியில்லை என்று மட்டும் கூறி கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு கிளம்பினான் ஆத்விக்.அதற்குள் ஜீவிகா வீட்டிற்குச் சென்று  விட்டதையும் உறுதி செய்து கொண்டான்.

அடுத்த பத்து நாட்கள் சாதாரணமாய் நகர அன்று தன் மதிய உணவு இடைவேளையின் போது ஜீவிகாவிற்கு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.யாராக இருக்கும் என்று எண்ணியவாறே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

ஹலோ ஜீவிகா?”

யெஸ் சொல்லுங்க யார் பேசுறீங்க?”

நா ரேஷ்வா பேசுறேன்..”

ஹே ஹாய் எப்படியிருக்கீங்க?”

அம் குட்..நீங்க?”

சூப்பரா இருக்கேன்.என்ன விஷயம் சொல்லுங்க எதுவும் ப்ராப்ளம் இல்லையே?”

நத்திங் டு வொரி நாளைக்கு லஞ்ச்க்கு உங்களை இன்வைட் பண்ணலாம்னு தான் கால் பண்ணேன்.நீங்க நான் ஆத்விக்..என்னோட ஒரு சின்ன தேங்க்ஸ் கிவ்ங் பார்ட்டினு வச்சுக்கோங்களேன்.”

அது..அதெல்லாம் எதுக்கு..”

முடியாதுனு சொல்லாதீங்க கண்டிப்பா வரணும்..”

அம்மா விடுவாங்களானு தெரில..இருந்தாலும் கண்டிப்பா வர ட்ரைப் பண்றேன்.”

யூ ஹேவ்டு கம்..பாய்..”,என்றவன் அழைப்பைத் துண்டித்திருக்க யோசனையாய் ஆத்விக்கை அழைத்தாள்.

சொல்லு ஜீ..”

டேய் ரேஷ்வா கால் பண்ணி லஞ்ச்க்கு கூப்டார்.””

ம்ம் என்கிட்டேயும் சொன்னார்..நானும் நீ வர மாட்டனு எவ்ளவோ சொல்லிட்டேன்..நானே கூப்டுறேன்னு நம்பர் வாங்கிட்டார் டீ..ஒருநாள் தான வாயேன்..பாவம் நல்ல மனுஷன் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிட்டு வரார்.”

ம்ம் நீயே நல்லவன்னு சொல்றனா நல்லவனா தான் இருக்கும் ஆனாலும் உனக்கு எப்படி டா இப்படி ஒரு ஆள் மாட்னாரு

பேசுவ டி பேசுவ கூடவே இருக்குறதுனால உனக்கு என் அருமை தெரில டி எரும..”

அரும எரும அடடா என்ன ஒரு டைமிங் ரைமிங்..சரி சரி வரேன்.உன் வீட்டுல வண்டியை விட்டுட்டு அங்கிருந்து நீ தான் கூட்டிட்டு போனும்.தனியா போக ஒருமாதிரி இருக்கும்.”

சரி ஜீ நானே கூட்டிட்டு போறேன்.”

மறுநாள் கல்லூரி விடுமுறை என்பதால் தாயிடம் ப்ரெண்ட் ட்ரீட் தருவதாக பாதி உண்மையைக் கூறி கிளம்பிச் சென்றாள் ஜீவிகா.ஆத்விக் வீட்டில் வண்டியை விட்டு விட்டு இருவருமாய் அவன் காரில் கிளம்பினர்.

ரேஷ்வாவின் வீட்டை நெருங்கியதும் வாயை பிளந்தவள்,

ஏன் ஆத்வீ வீட்டை கட்ட சொன்னா கப்பலை கட்டி வச்சுருக்காங்க..ஏரியா பேரை வச்சே இதை நா எதிர்பார்த்துருக்கனுமோ!”

அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜீஅவரு அப்படி பழகுற ஆள் இல்ல..ஜாலியா வா..”,என்றவாறு காரை விட்டு இறங்கும் போதே ரேஷ்வா அவர்களை வாசலில் வந்து வரவேற்றான்.

ஹாய்..வாங்க வாங்க..வா ஆத்வி..வாங்க ஜீவிகா..தேங்க்ஸ் பார் கமிங்..”

அன்றைக்கு பார்த்தவனா இவன் எனுமளவிற்கு க்ளீன் ஷேவ் செய்து டீஷர்ட் ஜீன்ஸில் ஹீரோ தோரணையோடு இருந்தான்.

அத்தனை பெரிய வீட்டில் அவன் மட்டுமா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை ஜீவிகாவால்.

என்ன ஜீவிகா என்ன யோசனை?”

இல்ல அவ்ளோ பெரிய வீட்ல தனியா மஇருந்தா வாழற ஆசை கண்டிப்பா போய்டும் தான்.”,என்றவளை தலையிலேயே தட்டினான் ஆத்விக்.

வந்தவுடனே ஆரம்பிக்காத உன் வாயை..”

விடு ஆத்வி அவங்க சொல்றதும் உண்மைதான..”

ஆமா அதென்ன அவன மட்டும் நீ வா னு சொல்றீங்க என்னை மட்டும் ஏதோ பெரியவங்களை கூப்டுற மாதிரி வாங்க போங்கனு சொல்றீங்க?”

இனி அப்படி சொல்லல..”

ம்ம் சரி நாம எதுக்கு இங்க வந்தோம்?”

என்ன??”

இல்ல சாப்ட வாங்க வாங்கனு கூப்ட்டு சாப்பாட்டை கண்ணுலயே காட்ட மாட்றீங்களே பசி உயிர் போகுது..”

சோ சாரி வாங்க வாங்க எல்லாம் ரெடியா தான் இருக்கு.”

ஏன் ஜீ நீ எப்பவும் ஒரு மணிக்கு மேல தான சாப்டுவ இன்னைக்கு அதுகுள்ள பசிக்குதா?”

இல்ல டா ஹெவியா சாப்டுற போறோமேனு காலைல இருந்து ஒண்ணுமே சாப்டல அதனால தான்..”

எப்போ பாத்தாலும் சோறு சோறு..”

சோறு அதானே எல்லாம் நீ இன்னும் அந்த ஜென் நிலையை அடையல தம்பி..வளரணும்..”

நல்லா வாய்ல வந்துரும் போய் கொட்டிக்கோ போ..”

இருவருக்குமாய் பரிமாறியவாறே ரேஷ்வாவும் உண்ண ஆரம்பித்தான்.

உங்களுக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்குனு கேள்விபட்டேன்..கங்க்ராட்ஸ்.”

தேங்க் யூ..ஆனாலும் இப்படி அப்பப்போ யாராவது நியாபகப்படுத்தினா தான் உண்டு..”

ஏன் என்னாச்சு?”

என்னாச்சா போன் நம்பர்கூட தரலைங்க..அவருதான் கொடுக்கலைனா இந்த பெருசுங்களுக்காவது அறிவு வேணாம்.ஒண்ணும் வாயே திறக்கல..நம்மாளைப் பத்தி ஒண்ணும் தெரியாது.

அவரை பத்தி தெரிலனானாலும் பரவால்ல பயபுள்ள பார்த்த வரை அமைதியாதான் இருந்தது.ஆனா என்னைப் பத்தி எதுவுமே தெரியாம வந்து சிக்க போறாரேனு நினைச்சாதான்..ப்ப்ச்ச்..கடவுளுக்கு இரக்கமே இல்ல..என்னடா ஆத்வி..”,என்று சீரியசாய் கூற ரேஷ்வாவோ அடக்க மாட்டாமல் சத்தமாகவே சிரித்துவிட்டான்.ஆத்விகுமே சிரித்துக் கொண்டு தான் இருந்தான் ஆனாலும் ரேஷ்வாவை அப்படி பார்ப்பதற்கு நிறைவாய் இருந்தது.

நீ வேற லெவல் ஜீவிகா..என் லைஃப்ல நா இப்படி சிரிச்சு பல வருஷம் ஆச்சு..”

அடப்பாவிகளா என் கல்யாணம் உங்களுக்கு சிரிப்பா இருக்கா?சரிதான்..ஆமா நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?”

ம்ம் அப்படி ஒரு ஃபீல் யார் மேலேயும் வரல

பார்ரா என்னா என்னா பீலீங்குகாலாகாலத்துல கல்யாணம் பண்ணி பொண்டாட்டி புள்ள குட்டினு செட் ஆகாம இந்த பக்கியோட சுத்திட்டு இருக்கீங்களே!”

என்ன ஏன் டீ இழுக்குற?”

ஆமா இவரு வயசு பொண்ணு கையை பிடிச்சு இழுத்தாங்க..நீங்க சொல்லுங்க ரேஷ்?”

கல்யாணத்தை பத்தியெல்லாம் யோசிச்சது இல்ல..எனக்கு ட்ரீம் அக்டிங்ல பெரிய இடத்துக்கு வரணும்..நிறைய படம் பண்ணணும்..சம்பாதிக்கணும்னு சொல்றத விட என்னோட ப்ஷேன் ஆக்டிங் அதுல பெஸ்டா வரணும்..

ஆனா இப்போ எல்லாம் அதுவும் டல்லா தான் போகுது..மைண்ட் மொத்தம் தேவையில்லாத எண்ணங்கள் தான் நிறைய இருக்கு.”

ம்ம் உங்களுக்கே தெரியுதுல தேவையில்லாததுனு அப்பறம் ஏன் மைண்டை குப்பைத் தொட்டியா வச்சுருக்கீங்க?எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு கேரியர் பத்தி யோசிங்க.

அண்ட் நம்மளோட சந்தோஷமோ துக்கமோ அதுக்கு நாம தான் எப்பவும் காரணமா இருக்கனும்.மத்தவங்க கையில நம்ம சந்தோஷத்தை கொடுத்தோம்னா வாழ்க்கை நரகமாய்டும் ரேஷ்..

உங்களை நீங்களே ஹேப்பியா வச்சுக்கோங்க..எது என்னவானாலும் லைஃப் ஹஸ் டு மூவ் ஆன் இல்லையா..சோ எப்பவுமே ஒண்ணு மைண்ட்ல வச்சுகோங்க கோ வித் ஃப்லோ..அவ்வளவு தான் சிம்பிள்.”

தேங்க்ஸ் ஜீ.உங்க வார்த்தைகள் எனக்கு எவ்ளோ தேவைனு உங்களுக்குப் புரியுமானு தெரில ஆனா இந்த ஒன் அவர் வாழ்க்கையை புதுசா யோசிக்க வச்சுருக்கீங்க.

ஆத்வியோட ப்ரெண்ட்ஷிப்பே எனக்கு காட்ஸ் கிப்ட்னு தோணும்..நீ இப்போ அதைவிடவும் பெருசுனு உணர்த்திட்ட.இந்த மாதிரி எதையும் எதிர்பார்க்காத நட்பும் அன்பும் எனக்கு கிடைச்சதில்ல ஜீவி.இப்போ ஒருவித புது தெம்பு வந்துருக்கு.

நிச்சயமா இனி நா ஒழுங்கா இருப்பேன்.என் லைப்போட அடுத்த ஸ்டேஜ்க்கு போறதுக்கான எல்லா முயற்சியும் பண்றேன்.

தேங்க் யூ போத் ஆப் யூ தேங்க் யூ சோ மச்”,என்று உற்சாகமாய் கூறுபவனை பார்த்த ஆத்விக்கு மனம் கொள்ளா மகிழ்ச்சி நிறைந்திருந்தது.அதன் பின் சிறிது நேரம் பேசிவிட்டு இருவருமாய் கிளம்பத் தயாராகினர்.

ஆனாலும் ஜி உன்கிட்ட ஏதோ மேஜிக் இருக்கு டி

ம்ம் குரளி வித்தை கத்துருக்கேன் டா..”

லூசு..”

பின்ன என்ன நா ஏதோ நம்மாள முடிஞ்சதுனு சொன்ன அட்வைஸ்க்கு இவ்ளோ பில்டப் கொடுக்குற?”

அப்படி இல்ல டி நீ இப்போ சொல்றதெல்லாம் நா அவருக்கு சொல்லிருக்க மாட்டேன்னு நினைக்குறியா?ஆனா உன் அளவுக்கு பக்குவமா எல்லாம் சொல்ல தெரில..கோ வித் ப்ளோ..எவ்ளோ உண்மை இல்ல..”

விட்றா ஏதோ நம்மாள முடிஞ்சது..காசா பணமா அதையும் தாண்டி இந்த மாதிரியான ஆறுதல் தான் பல நேரத்துல மனுஷங்க எதிர்பாக்குறது..என்ன அதை தேவைபடுற நேரத்துல கொடுக்க பாதிக்கு மேல யாரும் தயாரா இல்ல.விடு இனி அவர் நல்லாயிருப்பார் நீ கவல படாத..”

உண்மைதான் ஜீ..இப்போவே அவர்கிட்ட பயங்கர சேஞ்ச் தெரியுது.உன்கிட்ட அவர் கேஷுவலா பழகினதே எனக்கு செம ஷாக் தான்..மனுஷனுக்கு யாரு மேலேயும் அவ்ளோ ஒட்டுதலே கிடையாது..ப்ரெண்ட்ஸே இல்லாம ஒரு ஆள் இருப்பானா சொல்லு..

கேட்டா சொல்லுவாறு ஒரு கட்டத்துக்கு மேல யாரா இருந்தாலும் காசு பணம் பேர் இதுக்காகத் தான் பேசுறாங்க உண்மையான அன்புனு ஒண்ணு இல்லவே இல்ல.அதையும் தாண்டி எனக்கு பிடிச்ச ஒருத்தன் தான் நீ..இப்போ ஜீவினு சொன்னாரு..”

ம்ம் உன் ப்ரெண்டா இருந்த பாவத்துக்கு இது ஒண்ணு தான் டா நல்லது பண்ணிருக்க நானும் அக்டரோட ப்ரெண்ட்னு சொல்லிக்கலாம்..”

உன் கொழுப்பு மட்டும் குறையவே குறையாது டீ எரும”,என்றவன் அவளிடம் வளவளத்துக் கொண்டே தன் வீட்டை அடைந்தான்.