ஒருவழியாய் சாப்பிட்டு முடித்து மணமேடையை அடையவும் முகூர்த்த நேரம் நெருங்கவும் சரியாய் இருந்தது.குறித்த நேரத்தில் அனைவரின் ஆசியோடும் ஆத்விக் ஷான்யாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி தன்னவளாக்கிக் கொண்டான்.

மற்ற சடங்குகள் முடிந்து விருந்தினர்கள் ஒவ்வொருவராய் ஆசீர்வாதம் செய்து நகர சிறிது நேரத்தில் நால்வரும் மேடையேறினர்.

வாழ்த்துக்கள் மாப்பிள்ளை சார்..வாழ்த்துக்கள் ஷான்..”,என்று கோரஸாகக் கூற புன்னகையோடே இருவரும் நன்றி கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டர்.

டேய் ஆத்வி கண்ணா உனக்கு கூட வாழ்க்கையில கல்யாணம் நடந்துருச்சு டா ஒரு வழியா!”

ஏன் டீ இப்படி பண்ற கேக்குறவன் தப்பா நினைச்சுற போறான்.நல்லாயிருப்ப..அடக்கி வாசி ஜி..”

பரவால்ல பயபுள்ளை நல்லாவே பம்முறான்..ஷானுக்குட்டி ஹேப்பியா இரு..எதாவது வம்பு பண்ணிணான்னா சொல்லு நான் பாத்துக்குறேன்..அப்பறம் ரெண்டு பேரும் ஒழுங்கா விருந்துக்கு வீட்டுக்கு வந்து சேருங்க சீக்கிரமே..”

ஆத்வி வெரி வெரி ஹாப்பி ஃபார் யூ டா..சோ இதோ எங்க எல்லாரோட சின்ன கிப்ட்..”,என்ற ரேஷ்வா ஜீவிக்கு கொடுத்ததைப் போன்றே இரண்டு கவரை கையில் கொடுத்து இறுக அணைத்து விடுவித்தான்.

எதுக்கு மச்சான் இதெல்லாம் நீங்க எல்லாம் ரெண்டு நாள் இங்க இருந்ததே எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா..ஏன் ஜி நீயாவது சொல்லலாம் தான..”

சொன்னா கேட்டாதான டா ஆத்வி..இவனெல்லாம் அவ்ளோ பெரிய அப்பாடக்கரே இல்லனு சொல்லிட்டேன்..இருந்தாலும் நம்ம ஷான்காக எதாவது கொடுக்கனும்ல அதனால தான்..”

இதெல்லாம் உனக்கு தேவையா ஆத்வி..ஜி பத்தி தெரிஞ்சும்..”

யோசிச்சுருக்கணும் ரினி..மொத்த மானத்தையும் இங்கேயே கப்பல்ல ஏத்திருவா போல..தாயே இரக்கம் காட்ட கூடாதா?”

ம்ம் அப்போ மூடிட்டு கொடுக்குறதை வாங்கணும் ஆத்வி பையா..லைப்ல ஒன் டைம் தான் கிடைக்கும்.இதுக்கப்பறம் நீயே கேட்டாலும் அஞ்சு பைசா தேறாது என்கிட்ட..சோ அனுபவிச்சுக்கோ தம்பி..”

அவர்களின் பின்னிருந்த விருந்தினர்கள் எல்லாம் கடுப்பாகி கொலைவெறி ஆகும் வரை மேடையை விட்டு நகராமல் நின்றவர்கள் ஒருவழியாய் இடத்தை காலி செய்தனர்.

ஆத்விக் மற்றும் ஷான்யாவின் பெற்றோரிடம் விடைபெற்று நால்வருமாய் அங்கிருந்து கிளம்பினர்.மற்ற சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து மணமக்கள் ஆத்விக்கின் வீட்டிற்கு கிளம்பத் தயாராக ஷான்யாவிற்கு எவ்வளவு முயன்றும் அழுகையை அடக்க முடியாமல் போனது.

ஆதரவாய் தோள்பற்றியவாறு அவளை சமாதானப்படுத்தியவன் அவளின் பெற்றோரிடம்,

ஷான்யாவை நினைச்சு இனி எந்த கவலையும் உங்களுக்கு வேண்டாம் மாமா..அவ கண்டிப்பா ரொம்வே சந்தோஷமா இருப்பா..அது என் பொறுப்பு.அதே நேரம் உங்களுக்கு அவளை எப்போ பார்க்கணும்னு தோணிணாலும் தாராளமா வீட்டுக்கு வாங்க..என் அப்பா அம்மா மாதிரி தான் நீங்களும் எனக்கு..”

இதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டாம் மாப்பிள்ளை..இரண்டு பேரும் சந்தோஷமா இருங்க அது போதும் எங்களுக்கு”,என்றவர் இருவரையும் வழியனுப்பி வைத்தார்.

இரவு சம்பிரதாயத்திற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ஆத்விக்கின் தாய் கையில் புடவையோடு ஷான்யாவைத் தேடி வந்தார்.

இந்தா டா மருமகளே இதை கட்டிட்டு வா..”

பேருக்காய் சிரித்து வைத்தவள் ஏதோ யோசனையோடே அதை வாங்கிக் கொள்ள அவள் கைப்பற்றி நிறுத்தியவராய்,

ஏன் டா என்னவோ போல இருக்க இனி இது உன் வீடு..எந்த பயமும் தயக்கமும் உனக்கு வேண்டாம்.ஆத்விக் எல்லாம் சொல்லிருக்கான்.இனி நீ எதுக்காகவும் பயப்பட வேண்டாம்.நானும் மாமாவும் ஆத்விக்கு ப்ரெண்ட்ஸ் மாதிரி இனி உனக்கும்.சந்தோஷமா இருக்கணும்.எதுவாயிருந்தாலும் என்கிட்ட ஷேர் பண்ணிக்கோ.அதுக்கெல்லாம் அவசியம் இருக்காது ஆத்வியே உன்னை நல்லா பார்த்துப்பான்.இருந்தலும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா.சந்தோஷமா வாழ்க்கையை தொடங்கு..ம்ம்..போ நேரமாச்சு பாரு..”

தேங்க்ஸ் மா..”

“!!”

ஏனோ அத்தைனு கூப்பிட தோணல இப்படியே கூப்டுகுறேன்..கூப்பிடலாம் தான?”

இப்போ தான சொன்னேன் உனக்கு பிடிச்ச மாதிரி இருனு..எனக்கு பொண்ணு இல்லாத குறை தீர்ந்தது..போ ரெடிஆய்ட்டு வா”,என்று அனுப்பி வைத்தவர்அவள் வந்ததும் அவளை தயார் செய்து ஆத்விக்கின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

உள்ளே சென்றவளுக்கு எத்தனை முயன்றும் பதட்டம் மட்டும் குறைந்தபாடில்லை.ஆத்விக் கட்டிலில் அமர்ந்திருக்க அவனருகே சென்றவள் குனிந்து பாதம் பணிய எத்தனிக்க அவசரமாய் கைப் பிடித்து நிறுத்தியவன்,

ஹே இதெல்லாம் என்னவோ போல இருக்கு பேசாம இப்படி உக்காரு..”

இல்லை எல்லாரும் சொல்லி தான் அனுப்பினாங்க..”

அவங்க ஆயிரம் சொல்லு வாங்க..ஏதோ ரொம்ப அந்நியமா இருக்கு..நீ உக்காரு பர்ஸ்ட்..ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க ஷான்!”

ஹாங்!!அது அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

ரிலாக்ஸ்..பர்ஸ்ட் டைம் நம்ம ரூம்க்கு வந்துருக்க அப்போ கிப்ட் எதாவது கொடுக்கணுமே!”,என்றவன் கட்டிலில் வைத்திருந்த பரிசுப் பெட்டியை அவளிடம் கொடுக்க ஆர்வத்தோடு கூடிய கேள்வியாய் அவனை ஏறிட்டாள்.

பிரிச்சு பாருங்க மேடம்..”

மெதுவாய் அதைப் பிரித்தவள் உள்ளிருந்த புடவையையும் கைக் கடிகாரத்தையும் கண்டு விழி விரித்தாள்.

ரொம்ப நல்லா இருக்குங்க..தேங்க் யூ..”

ம்ம் முதல் நாள் டியூட்டி ஜாயின் பண்ணும்போது இதை தான் போட்டு போணும்..”

இன்னும் ரிசல்ட்டே வரல அதுக்குள்ளேயே வா?”

எனக்கு நம்பிக்கை இருக்கு கண்டிப்பா பாஸ் ஆய்டுவனு அதான் முதல்லயே வாங்கி வச்சுட்டேன்.”

லவ் யூ ஆத்வி..நான் என்ன பீல் பண்றேன்னு என்னால எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியுமானு கூட தெரில.பீ வித் மீ ஆல்வேஸ்..அது போதும்..”

நீயே நினைச்சாலும் என்னை விட்டு எங்கேயும் போக முடியாது ஷான் செல்லம்..”,எனும்போதே ஷான்யாவின் போன் ஒலிக்க இந்த நேரத்தில் யாராய் இருக்கும் என்று பதட்டமாய் போனை பார்த்தவள் ஜீவிகாவின் எண் என்றதும்ஆத்விக்கிடம் காட்டினாள்.

ஜி யா!!இந்த நேரத்துல என்னனு தெரிலேயே பேசு ஷான் என்னனு கேளு..”

ஜீவிக்கா!!”

அட என்ன ஷானுக்குட்டி இப்படி முதல் கால்லயே எடுத்துட்ட நான் கூட ஒரு நாலஞ்சு தடவை கால் பண்ணணும்னு நினைச்சேன்.”

என்னக்கா என்னாச்சு சொல்லுங்க..”

இல்ல எனக்கு மருமகனோ மருமகளோ ரெடியானு கேக்க தான் கால் பண்ணேன்.”,என்று கூறி முடிக்க ரினிஷா சிரிக்கும் சத்தம் கேட்டது.

அக்கா!!உங்களை என்ன பண்ணலாம்?ரினிக்கா நீங்களுமா..”

சாரி ஷான்..ஜீயோட ப்ளான் கேட்டவுடனே எக்ஸைட் ஆய்ட்டேன் அதான் ஓகே சொல்லிட்டேன்..”

ஷான்யாவின் முகம் சிவந்த விதத்திலேயே ஆத்விக்கிற்கு விஷயம் புரிந்துவிட உடைமாற்றி வருவதாய் கூறி குளியலறைக்குச் சென்றான்.

அக்கா அவர் முன்னாடி மானம் போகுது ஏன்க்கா நீங்க இப்படி இருக்கீங்க!!”

நம்ம பய அவன்.. இதுக்கெல்லாம் பீல் பண்ணக் கூடாது..சட்டு புட்டுனு பதில் சொல்லு செல்லக் குட்டி..”

ஹய்யோ..ரூம்க்கு வந்தே பத்து நிமிஷம் தான் ஆகுது..”

சிவ பூஜையியில கரடினு சொல்ற..”

கருமம் கருமம் அதெல்லாம் ஒண்ணுமில்ல..நாங்க கல்யாணத்துக்கு முன்னாடியே டிசைட் பண்ணது தான்..எனக்கு போஸ்டிங் கிடைச்ச அப்பறம் தான்…”

அடக் கொடுமையே..போங்கடா நீங்களும் உங்க சாந்தி முகூர்த்தமும்..உங்க ரெண்டு பேரையும் என்னவோனு நினைச்சா..ம்ம்கும் நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க போலேயே!!”

அக்கா!!”

அட ஏன்ம்மா நீ வேற அப்பப்போ வில்லன் எபெக்ட்ல என்ன கூப்டுட்டே இருக்கே..ம்ம் போ போய் இழுத்து மூடி தூங்கு..ப்யூச்சர்ல நம்ம ரினி செல்லத்தை பாரு கல்யாணம் ஆன அடுத்த மாசமே..”

ஆளை விடும்மா நான் ஓடிட்டேன்..பை ஷான்..சாரி பார் தி டிஸ்டபென்ஸ்..ஸ்வீட் ட்ரீம்ஸ்..”,என்றவள் காலை கட் செய்து விட,

ம்ம் நீயும் போய் தூங்கு ஷான்யா செல்லம் என் நண்பன் நிலைமை இத்தனை பாவமா இருக்கும்னு நினைக்கவே இல்ல போ..”,எனும்போதே ஆத்விக் வெளியே வந்தவன் ஷான்யா இன்னும் போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வேகமாய் அதை வாங்கி,

நீயெல்லாம் என் கூட இருக்குற வரை எனக்கு புள்ளையே பிறக்காது ஜி எருமமாடே..ஒழுங்கா போய் தூங்கு குட்நைட்..”,என்றவன் போனை அணைத்து ஷான்யாவிடம் கொடுக்க பற்கள் தெரிய சிரித்து விட்டிருந்தாள்.

என் நிலைமை உனக்கு சிரிப்பா இருக்கு??”

ஹா ஹா இல்ல இல்ல சாரி மை டியர் புருஷா..”,என்றவள் வாகாய் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

அங்கு ஜெயந்தோ ஜீவிகாவை,”இதெல்லாம் ஒரு பொழப்பா”,எனும் ரீதியில் பார்த்து வைக்க அசடு வழிய சிரித்தவளாய்,

நோ நோ டென்ஷன் மாம்ஸ்..தூங்குங்க தூங்குங்க குட் நைட்..”,என்றவள் போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள்.