36
அவனின் கேள்வியில் சற்று நெகிழ்ந்தாலும், “என் உயிரும் உயிரின் இறுதி துளி செங்குருதியும் உமதெனும்பொழுது என் மேனியும் உமதல்லவோ? இத்துணை யுகங்கள் கடந்தும் உம்மை வந்து சேரும் நாளுக்காக தவம் கிடந்த என்னிடம் இக்கேள்வி எழுப்பலாமோ?” என்றாள் அவனின் மார்பில் சாய்ந்தபடி.
அவள் மனதை கவரும் அந்த சிரிப்பினை உதிர்த்தவன் அவளின் செங்கழுத்தினில் தன் முகம் புதைத்து அவளின் வாசம் தேடினான்.
மங்கையவளின் நாடி நரம்புகளில் எல்லாம் அவனின் தொடுதல் தாக்கத்தை ஏற்படுத்த அவளினுள்ளும் அந்த தீ பற்றி எறிய ஆரம்பித்தது. இருவரும் ஒருவராக தங்களின் உயிரையும் உணர்வையும் உடலையும் காதலெனும் மோகத்தீயில் கலந்து இருவரும் ஒருவரென சங்கமித்தனர்.
இரவும் இவர்களின் யுகத்து காதலை கண்டு வெட்கம் கொண்டு காப்பாற்ற துணைக்கு கதிரவனை அழைத்துவிட்டு அது மறைந்து கொண்டது.
கதிரவன் விடிந்தும் இவர்களின் உறக்கம் கலையாததால், “மீரா! அம்மாடி மீரா” என்று குரல் மீராவை விழிக்க செய்தது.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்தவள், தன் கரங்களை நெட்டி முறித்தபடி  தன்னருகில் படுத்திருக்கும் க்ருஷ்வந்த்தை கண்டு லேசான அதிர்ச்சி அடைந்தாள். 
‘என்ன நடந்தது?’ என ஒன்றும் புரியாமல் யோசித்தபடி தன் தலையில் கை வைத்து கொண்டாள்.
இரவு அறைக்குள் நுழைந்தது வரைக்கும் தான் அவளுக்கு நினைவில் இருந்தது. அதன்பின் எதுவும் நினைவே இல்லை. 
போர்வையை விலக்கியவள் அவளின் நிலைகண்டு ‘இது எப்படி நடந்துருக்க முடியும்? என்ன நடந்துன்னே நினைவில் இல்லயே?’ என்று வேகமாக இறங்கி தன் ஆடைகளை சரி செய்தவள்.
‘எப்டி தூங்கறான் பாரு? செய்யறதெல்லாம் செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி? எழட்டும் இருக்கு இன்னைக்கு கச்சேரி அவனுக்கு.’ என்று உள்ளுக்குள் எரிமலைஎன் வெடிக்க.
‘யேஹ்! என்ன ரொம்ப தான் பண்ற அவன் உன்  கணவன் தானே? அப்புறம் என்ன?’ என்றது மனது.
‘நீ உன் வாயை மூடு. என்ன இருந்தாலும் என் அனுமதி இல்லாமல் என்னுடன் எப்படி வாழ ஆரம்பிக்கலாம்?’ என்று கொதித்தவள் வேகமாக சென்று கதவை திறந்தாள்.
அங்கே நின்று கொண்டிருந்த சுந்தரி,அவளின் தோற்றத்தை கண்டு முகம் மலர்ந்து அவளை அணைத்து முத்தமிட்டார்.
“எனக்கு இப்போ தான்மா நிம்மதியா இருக்கு. எத்தனையோ பொண்ணுங்களை பார்த்து ஒரு பொண்ணுகூட வேண்டாம்னு சொல்லிட்டான். இவனுக்கு கல்யாணம் நடக்குமா என்றே எனக்கு கவலையா இருந்தது. ஆனா இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கறத பார்க்கும் போது என் பெத்த வயிறு குளிர்ந்திருச்சு. நீங்க ரெண்டு பேரும் எப்பவும் சந்தோஷமா இருக்கனும்.” என்றவர்.
“சரி. நீ குளிச்சிட்டு கீழ வாம்மா” என்று கிழே சென்றுவிட்டார்.
அவரின் பேச்சில் அவள் மனம் நிம்மதி அடைந்தாலும் க்ருஷ்வந்தின் மேல் கொலைவெறியில் இருந்தாள். பாவம் அவளுக்கு தெரியவில்லை அவன் கண்களை சந்திக்கும் பொழுது அவள் அருண்மொழித்தேவியாய் தான் இருப்பாள் என்று.
குளித்து உடை மாற்றி தலையில் டவலோடு வெளியே வர தமிழ்செருக்கனாய் க்ருஷ்வந்த் எழுந்து உட்கார்ந்து இருந்தான்.
கோபத்தோடு அவன் விழிகளை நோக்கிய மீராவை ஆட்கொண்டது அருண்மொழித்தேவியே.
தன்னை அவன் விழிகளால் விழுங்குவதை உணர்ந்து நாணத்தால் மேனியெங்கும் சிவந்திருக்க தலை தானாய் கவிழ்ந்த்து.
மெத்தையில் இருந்து கிழிறங்கியவன் அவள் அருகில் வர வர இவள் பாதங்கள் பின்னோக்கி செல்ல தொடங்கின.    
இறுதியில் சுவற்றின் உதவியால் அவளின் பாதங்கள் மேலும் பின்னோக்கி செல்ல முடியாமல் அங்கேயே நின்று விட இப்பொழுது செருக்கனின் இதழ்களில் புன்னகை மலர்ந்திருந்தது. “இன்னும் செல்ல வழி இல்லையோ தேவி? நேற்றைய இரவின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லையோ? என்னிடம் இருந்து ஒளிய நினைப்பதேன்?” என்று அவளின் இடையினை பற்றி தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள அவளின் கரங்களும் அவனை சுற்றி வளைத்தன.
“ஒரு நாள் என்றாலும் உன்னுடன் வாழ்ந்தாலே என் வாழ்வு பூர்த்தியடையும் என்றிருந்தேன் அக்கனவை நீ நிறைத்துவைத்து விட்டாய் அன்பே. இனி இந்த நொடி என் உயிர் பிரிந்தாலும் எனக்கு…” என்று முடிக்க விடாமல் அவளின் கரங்கள் அவன் இதழை மூடின.
அவளின் தலை ‘இப்படி பேசக்கூடாது’ என்று தானாக ஆடியது.
“என்ன பேசுகின்றீர். இன்று தான் நம் வாழ்வை தொடங்கி இருக்கின்றோம். அதற்குள் இவ்வாறு பேசி ஏன் என்னை கலக்கமடைய செய்கின்றீர்.” என்றாள்.
அவளின் விழிகளை பார்த்து கொண்டே இருந்தவன் மெல்ல அவளின் இதழினை சிறைப்பிடித்தான்.
எத்தனை யுகத்து காதலோ ஓர் இரவில் முடியாதென்பதை இருவரும் மெய்யாக்கி உயிரில் உணர்வாய் கலந்திருந்தனர்.
தன்னவனின் நெஞ்சத்தில் சரண்டைந்திருந்தவள் அவனின் முகம் நோக்க, “முப்பிறவியின் காதலால் நாம் இப்பிறவியில் இருக்கிறோம். இதே போல் எப்பிறவி எடுத்தாலும் நாம் இருவரே இணையாகவேண்டும் என்று தென்னாடுடைய சிவனை வேண்டுகிறேன்” என்று புன்னகைத்துவிட்டு மீண்டும் நீராட சென்றாள்.
“தேவி! “ திரும்பியவள் அவனை நோக்க, “நாம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவர்களின் வாழ்வை இவர்கள் வாழ ஆரம்பிக்கட்டும். உனக்கு இதில் சம்மதமா?” என்றான் அவளை காதலாய் நோக்கி,
சம்மதமென தலையசைத்து உள்ளே சென்றவள் மீண்டும் தலைகுளித்து வேறு உடையில் வர, அவனும் சென்று தயாராகி வந்திருந்தான்.
“உணவருந்தி விட்டு செல்ல தயாராக இரு அன்பே!” அவளின் மேனியை ஒரு முறை தீண்ட, “அண்ணி! அம்மா உங்களை கூப்பிட்டு வர சொன்னாங்க” என்றாள் க்ருஷ்வந்தின் தங்கை.
“இதோ வரேன் மா” என்று அவனிடம் இருந்து விலகியவள். கதவை நோக்கி செல்ல எத்தனிக்க அவளின் இடையினை பிடித்து தன்னோடு இழுத்தான்.
“என்ன செய்கின்றீர்? என்னை அழைக்கிறார்கள் நான் செல்ல வேண்டும்” என்று திமிறினாள்.
“செல்” என்று மீண்டும் இறுக்க.
“நான்…நான்…” என்று அவன் விழிகளை நோக்கினாள்.
“நாம் இன்னும் சற்று நேரத்தில் இந்த உடலில் இருந்து பிரியப்போவது உறுதி அன்பே! அது வரை என்னோடு இருக்கலாம் அல்லவா?” என்றான் கெஞ்சுதலாய்.
“சரி. நான் சென்று கூறிவிட்டு வந்து விடுகிறேன்” என்று வெளியேறினாள்.
கிழே சென்று சில நிமிடங்களில் வந்தவள். 
“உணவருந்த அழைக்கிறார்கள். வாருங்கள்” என்றாள்.
எதுவும் பேசாமல் அவள் அருகில் வந்தவன்  அவள் விழிகளை சில நொடிகள் உற்று நோக்கியபின் செல்ல தயாராக இரு” என்று வெளியேறினான்.
இருவரும் சாப்பிட்ட பின், “அம்மா! நாங்க கொஞ்சம் வெளிய போயிட்டு வரோம்” என்று மீராவை பார்த்தான்.
“சரி கிரீஷ். ரொம்ப நேரம் வெளிய அலையக்கூடாது. சீக்கிரம் வந்துரனும். சரியா?” என்றார் சுந்தரி.
“சரி ம்மா” என்று தன் கார் சாவியை எடுத்து கொண்டு அவளை பார்த்தபடி வெளியேறினான்.
சுந்தரியிடம் வந்த மீராவை பார்த்தவர், “ஆறு மணிக்கு முன்னாடி வீட்ல இருக்கனும். காத்து கருப்பு எல்லாம் சுத்திகிட்டிருக்கும் புரிஞ்சிதா?” என்று ஒரு சின்ன சாவியை அவளின் மாங்கல்யத்தில் கோர்த்து விட்டார். “இது எப்பவும் கூடயே இருக்கட்டும். சரியா? போயிட்டு வாங்கம்மா” என்ற அனுப்பி வைத்தார்.
இருவரும் காரில் புறப்பட்டு இரண்டு மணி நேரம் ஆகியபின் தாங்கள் வரவேண்டிய இடத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்து இருவரும் காரை விட்டு இறங்கினர். 
அவர்களின் முன் வெற்று காடாய் முட்செடிகளும் புதர்களும் வளர்ந்திருக்க இருவரின் விழிகளும் அந்த சீதலமடைந்த யாருமற்ற நிலையில் பாழடைந்த அந்த அரண்மனையை நோக்கி கொண்டிருந்தனர்.
இருவரின் கரங்களும் கோர்த்தபடி உள்ளே செல்ல அடி எடுத்து வைத்தனர்.
 .