21
அவன் மோகனபுன்னகையில் தன்னிலை மறந்தவள் தன்னவனின் முகஅழகை விழிமூடாமல் கூர்ந்து மெய் சிலிர்த்தாள்.
கட்டுகடங்காது திமிறிய கூந்தலை அள்ளி இடப்புறந்தலையில் கட்டியிருக்க, சீரான அடர்ந்த வில் போன்ற புருவரோமங்களின் கீழ் அன்பையும் ஆக்ரோஷத்தையும் அலை கடலாய் உட்கொண்டிருந்த தீட்சண்யமான இருவிழிகள். அளவெடுத்து செதுக்கிய கூரான நாசிக்கு கீழ் அந்த அழகிய மேலுதட்டை மட்டும் மறைத்திருந்த அடர்மீசை அதோடு சேர்ந்திருந்த கீழ் அதரம் என எல்லாமே கனகச்சிதமாய் பொருந்திய அழகிய முகத்தை காணும் மங்கைகளின் மனதை சொக்கி இழுக்கும் கலை கொண்டவன்.
“என்ன தேவியாரே! உன் அத்தானின் முகம் ரசிக்கும்படியாக இல்லையா? என் முகத்தை ஆராய்ந்து முடித்தாயிற்றா? இல்லை இன்னும் மீதம் உள்ளதா?” என்று அவள் விழியை நோக்க வெட்கம் தாளாது அவனிடமே தஞ்சம் புகுந்தாள்.
“என் உதிரமும் உயிரும் இந்த உடலில் உள்ளவரை குடிகொள்ளும் உமக்கு மட்டும் தான் உரிமை உள்ளதென்றாலும், உள்ளத்தில் நின் முகம் சித்திரமாய் பதிந்திருக்கும் போதிலும், மீண்டும் இத்திருமுக தரிசனம் என்று கிட்டுமோ என்று நான் அறியேன் என்பதால் வந்த ஆர்வம்” என்றாள் அருண்மொழித்தேவி.
“அவ்வளவு ஏக்கம் இருந்தால் இந்த நொடியே உன் தந்தையிடம் கூறிவிட்டு என்னுடன் வந்துவிடு அல்லது நானே என் மாமாவிடம் கூறி உன்னை கவர்ந்து சென்று விடவா?” என்றான் கேலியாய்.
“உமக்கென்ன? நீர் ஆண்பிள்ளை. ஒன்றும் அறியாத வயதிலேயே என் மனம் கவர்ந்து சென்ற கள்வராயிற்றே… அன்று போனதோடு இன்று வரை இந்த பக்கம் தலை நீட்டிநீரா நீர்? அங்கே நாட்டு பணிகளே உமக்கு சரியாய் இருக்க உம் இதயராணியை நினைக்கவும் நேரமிருக்குமோ?” என்றாள் அவளும் விடாபிடியாக.
“இதயராணியாய் என் நெஞ்சத்தில் நீ குடிகொண்ட நாள்முதல் இந்த மனதாலும் வேறொரு பெண்ணை நினையேன் அன்பே. உன் நினைவிலேயே நாட்டிற்கும் காவலனாய் பணி செய்ய முடிந்தது உயிரே..”
எங்கிருந்தோ ஓர் புறா பறந்து வந்து அவன் தோளில் அமர, அதை வலக்கையால் எடுத்து தடவி கொடுத்து அதில் சொருகபட்டிருந்த சுவடியின் தகவலை  படித்து பின் அவளிடம் திரும்பி “சரி! எனக்கு ஓர் முக்கிய அலுவல் வந்துவிட்டது. நான் உடனே செல்லவேண்டும்.. முடிந்தால் இத்திருவிழா முடிவதற்குள் உன் மலர் முகம் காண இன்னொருநாள் ஓடோடி  வருகிறேன்.” என்று கதவிடம் நெருங்கியவனை நொடிபொழுதில் திருப்பி கட்டியணைத்து விழிநீர் சிந்தினாள்.
“அம்மாவின் தமையனார் உங்களுடன் மோதுவதாக கேள்விப்பட்டேன் செய்யும் செயலில் நீர் ஒரு மாவீரர் எனும் பொழுதும், என் மனத்துயர் நீங்க உங்களுக்கு கேடு நேராமல் எச்சரிக்கையாய் செயல்படுங்கள் அன்பே!” என்றாள் கரிசனமாய்.
“ம்ம்… அந்த மதுபாலசெல்வனுக்கும் எனக்கும் தனிஒரு பகையுமில்லை. உன்னை மனதில் நிறுத்தியே என்னை நோக்கி வெற்றம்பு எய்கிறான். நான் அதை பார்த்துகொள்கிறேன். நீ மன கவலைகொள்ளாதே.” என்று அவளின் உச்சியில் தன் இதழினை பதித்தவன் அவளிடம் இருந்து விடை பெற்றான்.
அவன் அவ்விடத்தை விட்டு அகன்றதும் அங்கிருந்து புறப்பட்டு தன் மனம் கவர்ந்தவனுடன் நடந்த உரையாடல்களும், அவன் மூச்சின் வெப்பகாற்றும், இதழின் மென்மையும், அவனின் மெல்லிய ஸ்பரிச தீண்டலும்.அவளின் பெண்மையை தூண்டிவிட்டுருக்க அதிலிருந்து வெளிவர முடியாமல் தகித்து கொண்டிருந்தாள் பெண்ணவள் 
மாளிகையில் துள்ளி குதித்தபடி ஓடிவரும் அருண்மொழிதேவியை காதம்பரியும் அவரின் தம்பியும் கூடத்தில் அமர்ந்தபடி உற்று கவனித்து  புருவம் உயர்த்தி அர்த்தம் புரிந்தது போல் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.
“என்ன தம்பி? உன் மகள் நான் வந்த நொடி முதல் எதையோ இழந்தது போல் இருந்தவள். இன்று தரையில்  கால் பதியா பட்டாபூச்சியாய் சிறகடித்து பறந்துக்கொண்டிருக்கிறாள். என்னவாய் இரூக்கும்?” என்று ரகசியமாய் கேட்க.
“அக்கை! என்னவென்று யானும் அறியேன். ஆனால் தின்னியமாய் சொல்வேன் அவளின் மனம் கவர்ந்த உங்களின் செல்வனை கண்டாலொழிய அவள் முகம் இவ்வாறு மலர வாய்ப்பே இல்லை.” என்று தமக்கையை சிரித்தபடி பார்த்தான்.
“இருந்தாலும் இருக்கும்… எனக்கும் அதே சந்தேகம் உள்ளது. இரு…” என்றவர் ஏதுமரியாதவர் போல் “என்னம்மா அருண்மொழி? திருவிழாவிற்கு தானே சென்று வந்தாய். திடிர் என்று உன் முகம் இந்த ஜென்மத்திற்க்குள் காண ஏங்கியவரை கண்டது போல் இவ்வளவு பிரகாசமாய் ஜொலிகின்றது? என்ன விடயம் என்று இந்த அத்தைக்கும் கொஞ்சம் சொல்லலாம்மல்லவா? ” என்று குறும்பாய் சிரிக்க.
‘என்னவென்று சொல்வேன்? என்றும் இல்லாத திருநாளாய் நீண்ட நாட்களுக்கு பின் என் மனதின் நாயகனான தங்களின் புதல்வன், பருவமங்கையான பின் முதல்முதலாய் என்னை தொட்டனைத்து காதலாய் பேசியதை எப்படி சொல்வது?’ என்று எண்ணி காலால் கோலமிட.
சந்தேகம் உறுதியானதால்  அவளை கண்டு நகைத்தனர் பெரியவர்கள் இருவரும்.
“அம்மா அருண்மொழித்தேவி” என்றார் அவளின் தந்தை.
“என்னப்பா?” என்றாள் ஆவலாய்.
“நீ கூறாமலே தெரிந்துவிட்டது என்ன நடந்தது என்று. ஆகையால் உன் விரல்களால் பூமியில் பள்ளம் தோண்டுவதை நிறுத்திவிடம்மா!” என்றார் சாதுவாய்.
“போங்கள் அப்பா!” என்று சிணுங்கியவாறே நாலே எட்டில் தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
“தம்பி இவ்வளவு காலம் இவர்கள் இருவரும் பிரிந்திருந்து போதும். இனியும் பிரித்து வைப்பது பாவம் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டி விட்டார்கள். ஆகையால் நான் சென்று தமிழ்ச்செருக்கனிடம் பேசியபின் நல்ல நாளாய் பார்த்து சொல்கிறேன். திருமணத்திற்கு ஏற்பாடுகளெல்லாம் செய்ய தயாராயிரு.”என்றார் காதம்பரி.
“சரி அக்கை! உங்களின் விருப்பமே என் விருப்பம். என் மகளை தங்களின் மருமகளாக உங்களின் நாட்டுக்கு அனுப்பவதைவிட  எனக்கு வேறன்ன இன்பம் இருக்க போகிறது.” என்றார்.
இவை அனைத்தையும் உள்ளே இருந்து கேட்டு கொண்டிருந்த இரு செவிகள் அதன் கடமையை செய்ய விரைந்தோடியது.
தன் மஞ்சத்தில் அமர்ந்தபடி அத்தையும் அப்பாவும் பேசிக்கொண்டதை நினைத்து உள்ளகளிப்பில் நீந்திகொண்டிருந்தது அருண்மொழித்தேவியின் உள்ளம்…
ஆனால் அதே நேரம் உள்ள கொதிப்போடு வஞ்சிக்கும் எண்ணத்தோடு உழன்று கொண்டிருந்தது இன்னொரு இதயம்…
பார்ப்போம்…. காதல் வெல்லுமோ? அல்லது வஞ்சம் வெல்லுமோ ?    
க்ருஷ்வந்திர்க்கு இப்பொழுது வந்திருக்கும் கேஸ் மிகவும் முக்கியமான பொதுமக்களின் பிரச்சனையாக இருப்பதால் அதிலும் தன் முழு கவனத்தை திரட்டி குற்றவாளிகளை மிகவும் நெருங்கி விட்டான்.
இப்படி இவர்களின் வாழ்க்கை என்று சேருமோ என்று தெரியாமல் போய் கொண்டிருக்க…
ஸ்ருஷ்டிமீராவிர்க்கு ஒன்பதாம் மாதம் தொடங்கி பத்து நாள் சென்றிருந்தது, ஒரு புதன்கிழமை அதிகாலை ஐந்து மணி இருக்கும், க்ருஸ்வந்த் தன் கேசின் தடையங்களை பற்றி யோசித்தபடி தோட்டத்தில் நடந்து கொண்டிருக்க, ஸ்ருஷ்டிமீராவின் அலறல் சத்தம் அவன் செவிகளை எட்டியது. 
அவள் மிகவும் வலியில் துடிக்கிறாள் என்பது அவளின் அலறலில் உணர நாலே எட்டில் அவள் வீட்டினை அடைந்து கதவை திறக்க அது உள்பக்கமாக பூட்டபட்டிருந்தது. வேறு வலி இல்லாமல் தாழ்பாளை உடைத்துக்கொண்டு உள்ளே ஓடினான் க்ருஷ்வந்த்.
படுக்கையில் மீரா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருக்க நொடியும் தாமதிக்காமல் தன் அன்னையை கூப்பிட போக எத்தனித்தவனை நிறுத்தியது அவளின் குரல். “கிருஷி! என்னால வலி தாங்க முடியல. அ…. அ…ம்…மா… ப்ளீஸ் என்னை இங்க தனியா விட்டுட்டு எங்கயும் போய்டாத” என்றாள்.
தன் தேவதையின் வாயிலிருந்து உதிர்ந்த தனக்கான முதல் முத்துக்கள் என்பதால் க்ருஷ்வந்த்தின் கண்கள் கண்ணீரை சிந்தியது. ‘பார்த்தியா பச்சைமிளகா? உனக்கு முக்கியமான நேரத்துல உரிமை உள்ளவங்ககிட்ட தான் இப்படி பேசமுடியும்.’ என்று சந்தோஷபட்டாலும் தாமதியாமல் தன் மொபைலை எடுத்து அன்னைக்கு போன் செய்து உடனே வரும்படி கூறிவிட்டு அவளின் அருகில் சென்றான்.
“மீரா! இங்க பாருடி உனக்கு ஒண்ணுமில்லை இதோ நாம ஹாஸ்பிடல் போயிறலாம். கொஞ்சம் பொறுத்துக்கடா” என்று பதற்றத்தோடு கூறினான்.
“அ… கிருஷி என்னால வலி தாங்க முடியல உயிரே போற மாதிரி இருக்கு. ப்ளீஸ் ஏதாவது செய்… என்னால முடில… அ…ஆ…அம்மா….” என்று அலற அவன் பிள்ளையை பெறாமலே இவளின் வலியை உணரத்தொடங்கினான்.
என்ன செய்வது என்று தெரியாமல் அவளின் தலையை தன் மடியில் வைத்து மென்மையாய் கோதி விட்டு “மீராகுட்டி ஒன்னுமில்லடா. நான் உன்கூட தான் இருப்பேன். எங்கயும் போகமாட்டேன். டென்ஷன் ஆகாதடா. இங்க பாரு. ஜஸ்ட் ரிலாக்ஸ்.” என்று கூறினாலும் அவளின் வலியால் அவன் விழிகளில் நீர்கசிந்தது.
அதற்குள் சுந்தரி வந்துவிட, “கிருஷி நீ வெளிய இரு…. நான் என்னனு பார்க்கறேன். நீ எதுக்கும் வண்டிய ரெடியா வை.” என்றார்.
“இல்லம்மா நான் எங்கயும் போகமாட்டேன். அவ எப்படி வலில துடிக்கறா பாருங்க. அவளை முதல்ல செக் பண்ணுங்க” என்று பதற்றத்தில் க்ருஷ்வந்த் பிதற்ற.
“கிருஷி சொன்னா புரியாது. சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்காத. முதல்ல வெளிய போ. நான் சொன்னதை செய்” என்று அவனை வெளியே அனுப்பி தாழிட்டு கொண்டார்.
ஒரு ஐந்து நிமிடம் சென்றிருக்கும் மீராவை பரிசோதித்து விட்டு கூக்குரலிட்டார் சுந்தரி.
“க்ருஷ்வந்த்! சீக்கிரம் தூக்கு…. உடனே ஹாஸ்பிடல் போகணும். லேபர் பெயின் ஸ்ட்ராட் ஆகி த்ரீ ஹார்ஸ் ஆகுது. பனிக்குடம் இப்போ தான் உடைஞ்சிருக்கு குயிக்” என்று துரிதபடுத்த.
“மீராம்மா! ஆல் இஸ் நார்மல். ஒன்னும் பயப்படாத வலியை கொஞ்சம் பொறுதுக்கோடா இன்னும் ஒரு மணி நேரத்துல உன் குழந்தை உன் கைல இருக்கும்” என்று அவளுக்கு தெம்பூட்டி கொண்டிருந்தார் சுந்தரி.
அப்படியே வினோத்துக்கும் தகவல் சொல்ல நினைத்தாலும் சொல்ல நேரமோ சொல்லகூடிய சூழலோ அமையவில்லை.
தங்களின் மருத்துவமனைக்கு செல்ல நேரம் ஆகும் என்பதால் அருகில் இருந்த மருத்துவமனைக்கே ஸ்ருஷ்டிமீராவை அழைத்து சென்றனர்.
‘கடவுளே எனக்கு வேற ஒண்ணுமே வேண்டாம். என் மீராவும் பாப்பாவும் நல்ல படியா பிழைச்சிட்டா மட்டும் போதும். 
ஏய் பச்சை மிளகாய் ஒன்னும் ஆகாதுடி உனக்கு.. என்ன உரிமையாய் என்னை க்ருஷின்னு கூப்பிட்ற? மனசு நிறைஞ்சிடுச்சுடி பச்சைமிளகாய். அப்போ எவ்ளோ நாளா என்னை மனசுக்குள்ளஅப்படி கூப்பிட்டு இருந்திருப்ப? நீ சரி ஆகிட்டு வா அப்புறம் இருக்கு உனக்கு.’ என்று மனதிற்குள் காதலியிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான்