சுப்பு “நான் என்ன சொல்லணும்… ஏதாவது சொன்னா… எல்லாத்தையும் நிறுத்திடுவியா” என்றான் வலிக்கும் வார்த்தையாய்.
“அப்படி பேசாத டா… அவ.. நல்ல” என தொடங்க…
“இங்க… இப்போ… இது.. பேச முடியாது… கிளம்பு, நான் பார்த்துக்கிறேன்…” என்றான்.. சொல்லியவன் வெளியே செல்ல போனான், அவனின் கைபிடித்து.. நிறுத்தினார், அவனை.
அவன் திருமணத்திற்காக.. ஒரு செயின் வாங்கியிருந்தனர்.. அதை எடுத்து அவன் கழுத்தில் போட்டார்.. ஏதும் பேசாமல், அன்னை முகத்தை, பார்க்காமல் விலகி நடந்தான் அவன்.
சரவணன் அவர்களுக்கு முன் ஹாலுக்கு சென்றான், ஏதும்மறியாதவனாக.. அவனுக்கு பயம் தன் அண்ணன் ஏதேனும் வர்ஷினியை சொல்லிவிடுவானோ என.. அதற்காக அவர்களுடன் சென்றான்.. அப்படி ஏதும் அண்ணன் சொல்லவில்லை.. அதே நிம்மதி அவனுக்கு.
எல்லோரும் மண்டம் கிளமிபினர்… மண்டபத்தின் முகப்பில் உள்ள ப்ளக்ஸ் மாற்றப்பட்டு… “சிவசுப்ரமணியம் வெட்ஸ் பர்வதவர்த்தினி…” என இவர்களின் பெயர் சொன்னது.
காரிலிருந்து இறங்கினால் வர்ஷினி.. சுமங்களில் புடை சூழ.. நிறைய பூ வைத்து.. தழைய புடவை கட்டி.. கண்கள் வீங்கி.. தடதடப்புடன்.. அமைதியாக, ஆரத்தி சுற்ற நின்றாள். வீடியோ எடுத்தனர்.. அப்போதே… எல்லோரின் பார்வையும் இவளின் மீதுபடிய தொடங்கியது. நெருங்கிய உறவுக்கெல்லாம் ‘அப்பாடா… பெண்ணை கொண்டு வந்துவிட்டோம்…’ என பெருமூச்சு
நேரம் வந்தது… நிச்சையம் தொடங்கியது, வெண்பட்டு வேட்டியில்.. நெற்றியில் திருநீறு… சந்தனம் தரித்து… கம்பீரமாக அமர்ந்திருந்தான் சுப்பு.
ப்ரோகிதர், பெண்ணை அழைக்க… மணப்பெண் வர்ஷினி, வந்தாள்.. தாமரை வண்ண காஞ்சி பட்டு.. அளவான ஒப்பனை… சின்ன தயக்கமும், பயமுமாக வந்தாள்..
சுப்புவின் அருகே அமர வைக்கபட்டாள்.. இப்போது உடலெல்லாம் நடுங்கியது.. அந்த சேரின் கைவளைவில், அவளின் கைகள் பயத்தில் நடுங்குவது நன்றாக தெரிந்தது அனைவருக்கும்… ஒன்றும் செய்ய முடியாது.. அமைதியாக இருந்தனர் எல்லோரும்.
பின் மோதிரம் போட.. இருவரும் எழ… வர்ஷ்னிக்கு, கையெல்லாம் வேர்த்தது.. யாரோ கைக்குட்டை தந்தனர்.. துடைத்துக் கொண்டாள்… அவன் அருகில் வந்து மோதிரம் போட… கையை நீட்ட முடியவில்லை அவளால்.. அருகில் நின்ற அவனின் அத்தை அவளின் கையை எடுத்து அவன் முன் நீட்டினார்.. கைகள் தந்திதான் அடித்தது…
சுப்புக்கு எரிச்சல்… என்ன இப்போ… என்னை தெரியாதா… இப்படி இருக்கிறாளே.. என.. அவளின் கைகளை, தொடாமல் இரு விரலில் மோதிரம் போட்டான்.. அது வேறு… லூசாக இருக்க, உடனே கீழே விழுந்தது… மீண்டும் அவனே எடுத்து அழுத்தமாக அவளின் கைபிடித்து, நடுவிரலில் அழுத்தி போட்டுவிட்டான். வேர்த்த தன் கைகளில், இவனின் அழுத்தம், லேசாக ஷாக் அடித்தது இவளுக்கு.
வர்ஷினி பாவம், அவன் விரலில் அவனின் மோதிரத்தை போடுவதற்குள்… மோதிரம் அவளின் கைதவறி கீழே விழுந்து… அத்தை “கிரி… இங்க வா” என்றார்..
அவன் வந்து எடுத்து… தன் அக்காவின் கையில் வைத்து, தானே போட்டான் சுப்புக்கு. எல்லோரும் லேசாக சிரித்தனர்… உடனே வர்ஷினி “சர்ரு… போலாம்” என்றாள் அங்கு நின்றிருந்தவனிடம்…
ஆனால், திரும்பவும் அமர வைக்க பட்டனர் இருவரும்… எல்லோரும் வந்து நலங்கு வைத்தனர்.. அடுத்த ஒருமணி நேரமும் முள் மேல்தான் வர்ஷ்னி… ஒரு வழியாக நிச்சையம் முடிந்தது.
அப்படிதான் தோன்றியது.. வர்ஷினிக்கு. அவனின் அருகாமை ஷாக்கடித்தது… திக்கு எட்டிலும் பயமேதான் அவளுக்கு.. அதிலும் அவன் அருகில் இன்னும் வெடவெடத்தது…
சற்று நேரம் ஓய்விற்கு பிறகு, ரிஷப்பஷன் தொடங்கியது… ஒவ்வருவராக.. வர தொடங்கினர்.. மீண்டும் வர்ஷினிக்கு, உதர தொடங்கியது. அத்தை சிறிது நேரம் அருகில் நின்றார்…
செண்பா, மேலே வரமாட்டேன் என்றுவிட்டார். கிரி.. எவ்வளவுநேரம் அருகில் நிற்பான்… சரவணன், பாவம் அவனும்தான் நின்றான்.. ஆனால், சுப்பு முறைத்தான்.. “அப்பா, கூட வேலைய பாரு.. வரவங்கள கவனி.. சும்மா இங்கேயே நின்னுகிட்டு..” என மெல்ல அவனையும் மென்று துப்ப… எல்லோரும் கிளம்பினர் அங்கிருந்து.
அந்த மலர் அலங்காரம் செய்யப்பட்ட பிரம்மாண்ட மேடையில், பெரிய அலங்கார ஷோபாவும், இவர்கள் இருவரும் மட்டும்தான்… இப்போது இவனின் ஆளுமையும் சேர்ந்து கொண்டது போல..
அழகான மயில் வண்ண பட்டு.. தோதான அணிமணிகளுடன்.. மருண்ட மான் விழியாளாக வர்ஷினி அவனருகில் நின்றாள்… ஆனால், அவனின் உருவமும் அந்த நிமிர்வு.. வந்திருந்த கூட்டம்.. எல்லாம் பார்த்து, அவளின் மனம் சில்வண்டாய் சுற்றியது… யாராவது கண்ணில் படுவார்களா.. அவர்களின் பின் ஒழிந்து கொள்ளலாமா என…
சுப்பு… தனக்கான வேலையை நிறைவாக செய்தான்.. யாரையும் கலவரபடுத்தவில்லை… ஒரு டார்க் ப்ரௌன் நிற… கோட்ஷூட்டில்… அந்த கோட்டின் இடது புறம் சிவப்புநிற ரோஜா வைத்து.. ஜெல் செய்து, நிமிர்த்தி வாரிய கேசத்துடன்… ‘பெண் மாறியது’ என யாரும் பார்வையை மாற்றாதவாறு திணவெடுத்த சிம்மமாக நின்றான்..
வந்தவர்களை முறையாக அறிமுகம் செய்தான் இவளுக்கு.. “பர்வதம்… இவங்க.. நம்ம.. அன்னூர் பெரியப்பா.. தெரியும்தானே..
இவங்க… நாம பர்ச்சேஸ்.. பண்ண போனோமே… அந்த கடை ஓனர்…
இவங்க… நான் வொர்க் பண்ணும்போது, கூட வேலை செய்த பிரிண்ட்ஸ்…
இவங்க… நம்ம பினான்ஸ்ல, ரொம்ப வருஷமா வேலை செய்யரவர்…” என இயல்பாக உரையாடினான்.. கண்ணில் சின்ன கலக்கமோ… யோசனையோ இல்லை…
எங்கேயே பார்த்திருக்கிறேன்.. நீங்களும் பார்த்திருப்பீர்கள், மண்டப வாசலில் புடவை கட்டி ஒரு பொம்மை நிறுத்தியிருப்பர்,.. அது இரண்டு நொடிக்கு ஒருதரம், தானே லேசாக சிரித்தபடி வணக்கம் சொல்லி.. நிற்கும்… அப்படிதான் நின்றாள் வர்ஷினி என்ன, மணமகன் பக்கத்தில் நின்றாள்.
அவளுக்கு, வந்த எல்லோரையும் விட இவன், புதியவனாக தெரிந்தான்.. அத்தோடு இவனும் நடிக்கிறான்… பொய்யாகிறான்… மேடைக்காக இந்த சிரிப்பு என எண்ணம் வர, நடுங்கினாள்..
யாரிடமும் உண்மை இல்லையா… முகம் வெளுத்தது… உடல் மொழி மாற தொடங்கியது.. ஏற்கனவே.. பயத்தில் இருப்பவளுக்கு.. இது அதிர்ச்சியாக இருந்தது.. இவனின் பேச்சு, செய்கை எல்லாம்.
அந்த மூன்றுமணி நேரம்… சொல்ல முடியா.. வலிதான் தந்தது அவளுக்கு.. அவனுக்கு அப்படியேதும் இல்லை போல.. அதுவும், அவளுக்கு, வலித்தது.. ‘எதுவும் ஏற்பேன்’ என்பதும் வலிதானே..
அவளுக்கு சுற்றி சுற்றி இதே யோசனை.. ஒன்று புரிந்தது.. இங்கு எதுவும் எனக்கானது இல்லை… இந்த புடவை தொடங்கி… சுப்பு வரை.. எதுவும், என்னை மட்டும் சொந்தம் என சொல்லி வரவில்லை… என மண்டையில் ஏறியது..
பாவம்.. எப்படிதான் சமாதானம் செய்வாள்.. அவளும், அவள் மனதை. சுப்பு, பற்றியும் தெரியவில்லை… அது நிஜமா… இப்போதிருக்கும், இவன் நிஜமா.. தெரியவில்லை.. சொல்லியழ அப்பா அம்மாவும் கிடையாது.. தோள் சாய.. ஒரே தோழன், இப்போது அவனும்.. தனக்கு வரபோரவனின் தம்பி.. எனக்கு எப்படி பரிந்து பேசுவான்.. என இன்னும் யோசிக்க யோசிக்க… வெறுமைதான் வந்தது..
யாராவது இப்போது “என்னாச்சு வர்ஷி..” என ஒரே வாரத்தை கேட்டால் போது, அவர்கள்தான் இப்போது அவளின் தந்தை.. தாய்.. தேவதூதன்.. தோழி.. சொல்லபோனால் கடவுள். அப்படி கேட்பார்தான் இல்லை அவளுக்கு.
ஒருவழியாக உண்டனர்… சுப்பு அந்த மேடையிலிருந்து இறங்கியவுடன்.. அவள்பக்கம் திரும்பவில்லை.. நேரே.. உண்டு தனக்கான அறைக்கு சென்றுவிட்டான். பானுமதி தன் மருமகளை பார்த்து பார்த்து கவனித்தார்..
அன்று இரவு சுப்புக்கு நிம்மதியான உறக்கம்… ஏதும் மனதில் கலக்கமில்லை.. வர்ஷினிக்கு, அவனின் கவலையும் சேர்ந்து கொண்டது.. கண்மூடியே.. தடுமாறிக் கொண்டிருந்தாள். அவனை பற்றிய நினைப்புதான் இப்போது பூதாகரமாக தெரிந்தது அவளுக்கு.
அதிகாலை முகூர்த்தம்.. சீக்கிரமே எழவைத்து வர்ஷினியை, தயாராக்கினர்.. நல்ல அரக்கு வண்ணத்தில், தங்க சரிகை கட்டம் போட்ட பட்டுபுடவையில்.. கண்ணில் மைதீட்டில்.. லேசான உதட்டு சாயம்.. நீண்ட பின்னலில் நிறைய மல்லிகை சரம்.. பிறை நெற்றியில்.. ஒரேகல்.. பெரிய, சுட்டி வைத்து… அத்தை, அழைத்து வர வர.. தாளாம் தப்பி நடக்கும் குழந்தையாய்.. வந்தாள் வர்ஷினி, அவன் அருகில்.
கைககால்களில்… நேற்று இருந்த அதே நடுக்கமும், ஒரு இஞ்ச் குறையாத பயத்தோடும் வந்து அமர்ந்தாள்.. தன் மணாளனுக்கு அருகில். பொறுமையாக நகர்ந்தது நிமிடங்கள்..
இப்போது கிரி, வந்து கன்னிகாதானம் செய்து கொடுத்தான். வர்ஷினிக்கு கண்ணில் தாரை.. தாரையாய் நீர் கொட்டியது. கிரிக்கும், அவளின் நிலை பார்த்து கலக்கமாகவே இருக்க… தன் மாமனின் முகம் பார்த்தான், அனிச்சையாய்.
சரவணன் “அண்ணி.. அழாத அண்ணி..” என்றான்.. சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான். நிமிரவில்லை அவள்.. சுப்புவும், அதற்கு பதில் தரவில்லை எனவே இறுக்கம்தான் மணமக்களுக்குள்.
ஆயிற்று மங்களநாண் எடுத்து… சுப்பு, இவள்புறம் திரும்பி பார்க்க… கண்கொண்டு அவனை பார்க்காது… கண், என்பது கண்ணீர் சிந்த என்ற நோக்கில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்..
இத்தனை நேரமிருந்த பொறுமை.. இப்போதும் இருந்தது போல அவனுக்கு. ஒரு ஷணம்.. ஆழ்ந்து மூச்செடுத்தான்.. உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் ‘சரியாக்குவேன்’ என.. தனக்குதானே உறுதி கொண்டான்.
பின் இயல்பான வேகத்தில்… மாலைகளுக்கு நடுவே அவளின் மலர் மேனியை.. தீண்டி, வெம்மையாய் அவனின் சுவாசம் அவள் மீது பட்டு.. சின்ன உரசலாக அவனின் விரல்கள் அவளின் மேனி உரசி.. உரிமை கொண்டு.. உறவை முடிந்தது… யாரோ, அவனின் சித்தப்பா பெண் வந்து… மற்றொரு முடி போட்டார்.. அட்சதைகளும்.. பூக்களும்.. நல்ல வாழ்த்து சொல்லி, இவர்கள் மீது மழையாய் பொழிந்தது.
ப்பா… “ஆனந்தம்… ஆனந்தம் ஆனந்தமே…” என மேளகச்சேரி.. இசைக்க… எல்லோர் முகத்திலும் நிம்மதியின் சாயல்… மணமக்களிடம் பெருமூச்சு வந்தது.. இனி நாங்கதான் வாழ்ந்தாகவேண்டும் என…