Advertisement

மலர் 24:

“இதென்ன பெரிய விஷயமா மலர்…அன்னைக்கு நீ மட்டும் தான் கொஞ்சம் வித்யாசமான ஆசையை சொன்ன…அதனால் நியாபகம் இருந்திருக்கும்….இது ஒரு பெரிய விஷயம்னு யோசிச்சுட்டு இருக்க..! என்று அவளின் யோசனைக்கு முட்டுக் கட்டை போட்டது மனசாட்சி.

“இல்ல…ஏதோ ஒன்னு இருக்கு..! என்று அவள் மீண்டும் வாதம் செய்ய..

“அம்மா தாயே ஒண்ணுமில்லை.ரெண்டுமில்லை…என்னை ஆளைவிடு….! என்று அவளிடம் இருந்து ஜகா வாங்கிக் கொண்டு கிளம்பியது மனம்.

“சரி விஷயம் என்னைக்காவது எனக்கு தெரிந்து தான ஆகணும்.. என்று எண்ணிய மலரும் அப்படியே விட்டு விட்டாள்.

ஆனால் விதி விட்டு விடுமா..? வந்தது சாரதியின் வடிவில்.

“மலர்.. என்ற தாரணியின் குரலில் அவளைத் தேடி சென்றாள்.

“சொல்லுங்க அக்கா..

“இன்னும் கொஞ்ச நேரத்துல டின்னர் ரெடி ஆகிடும்…அதனால் சாப்பிட்டு போய்டுங்க..! என்று கூற…

“ஹேய் தாரணி..! இன்னைக்கு அவங்களுக்கு சடங்கு எல்லாம் இல்லையா..? அத்தை இதை பத்தி ஒன்னும் சொல்லலையா..? என்றாள்.

“இல்லையேக்கா..!இதை எப்படி மறந்தோம்…இருங்க அத்தைகிட்ட கேட்போம்..! என்றபடி தாரணி நகர…

“சடங்கா.. என்று விழிக்கும் அளவிற்கு மலர் பச்சை புள்ளை இல்லை.அவர்கள் எதை பேசுகிறார்கள் என்று அவளுக்கும் தெரிந்திருந்தது.

ஆனால் அவளுடைய எண்ணமெல்லாம்…இதெப்படி முடியும்…? என்பது மட்டும் தான்.

“அக்கா…இதெல்லாம் இப்போ வேண்டாமே..! என்று கலாவிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க…அவளை ஆச்சர்யமாய் பார்த்தாள் கலா.

“கல்யாணம் சடனா நடந்ததால உனக்கு அப்படி இருக்கும் மலர்..போக போக எல்லாம் சரி ஆகிடும்..வெற்றி எல்லாத்தையும் சரி பண்ணிடுவான்.. என்றாள்.

“எனக்கு பயமாயிருக்கு.. என்றாள்.

“நீ என்ன..? முதல் நாள் ஸ்கூல்க்கு போற பிள்ளை மாதிரி பயப்படற…கொஞ்ச நாள் போச்சுன்னா….வெற்றி தான் உன்னைப் பார்த்து பயப்பட போறார்.. என்று சொல்லி சிரிக்க…

“பயந்துட்டாலும்… என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

“நானும் ரொம்ப பயந்த சுபாவம்…என்னை ஓவரா மிரட்ட கூடாது.. என்று தன் காதருகில் குரல் கேட்க..விழுக்கென்று நிமிர்ந்தாள் மலர்.குறுஞ்சிரிப்புடன் நின்றிருந்தான் வெற்றி.

“என்னடா அதிசயம்…?இவருக்கு சிரிக்கக் கூட தெரியுமா…? என்று அவளை மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்.

“சிரிக்க மட்டுமில்லை….எனக்கு எல்லாமே தெரியும்…!” “ என்று அந்த எல்லாமேவில் ஒரு அழுத்து அழுத்தி சொன்னான்.

“அடப்பாவி..!””’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’ “ என்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்.

“என்ன இவர் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கார்… “ என்று அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“சரி சரி…சீக்கிரம் வந்தா…நானும் கொஞ்சம் சீக்கிரமா பாடத்தை ஆரம்பிப்பேன்..உனக்கு வசதி எப்படி..? “ என்று ஒரு கண்ணை சிமிட்டினான்.

அவ்வளவு தான்..மலர் சொக்கி கீழே விழாத குறைதான்.வெற்றியை… அதுவும் இப்படி பேசிக் கொண்டு..இப்படி ஒரு முக பாவத்தில் பார்ப்பாள் என்று யாராவது சொல்லியிருந்தால் கல்லை விட்டு அடித்திருப்பாள்.

ஆனால் அவன் அவ்வாறு நடந்து கொள்வதைப் பார்த்து….ஒருமனம் பிராண்டினாலும்…ஒரு மனம் ரசிக்கவே செய்தது அவள் அறியாமல்.

“பார்த்தியா மலர்…வெற்றி ஒரு மார்க்கமா தான் இருக்கார்..ம்ம்ம்.. நடத்துங்க நடத்துங்க..எப்படியோ ரெண்டு பெரும் நல்லா இருந்தா சரிதான்…” “என்று கலா சொல்ல..

“இல்லைன்னாலும்…நாங்க இருக்க வச்சிடுவோம்…இல்லையாக்கா..” “என்று தாரணி வம்பிழுக்க…

அவர்களின் கள்ளமில்லா அன்பில் சற்று நெகிழ்ந்து தான் போனாள் மலர்.

“முயற்சி பண்றேன் அக்காஸ்…” “என்று கூறியவள்…அதே நெகிழ்ந்த மனதுடனேயே சென்றாள்.

சட்டென்று தன்னை ஏற்றுக் கொண்ட அவர்களின் மனப்பக்குவத்தை அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.துர்காவோ இன்னமும் ஒரு படி மேலே போய்..அவளை பாசமான பார்வைகளால் வருட…மலருக்கு தான் சிலிர்த்து போனது.

இதற்கு அவர்கள் சொன்ன ஒரே காரணம்….வெற்றி வெற்றி.அந்த வீட்டின் செல்ல பிள்ளையாய்,நல்ல பிள்ளையாய்…இருந்ததனால்….அவளும் அவர்களுக்கு இன்றியமையாதவளாய் மாறிப் போனதில் ஆச்சர்யமில்லை.

ரூம் கதவு வரை சென்றவளுக்கு..அதற்கு மேல் செல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

“பயப்படாம வா மலர்..” “ என்ற வெற்றியின் குரலில் ஆச்சர்யம் அடைந்தவளாய் சென்றாள்.

“என்ன..? என் கிளாஸ்க்கு வர தான் அந்த பயம் பயப்படுவ…? இப்ப எதுக்கு பயம்..? “ என்றான் குறுஞ்சிரிப்புடன்.

“கடவுளே..! எனக்கு ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சி தருவிங்க…? நான் இவர் கிளாஸ்க்கு போக பயந்தது கூட இவருக்கு தெரியுமா..?” “ என்று நினைத்தவள்.

“நான் உங்க கிளாஸ்க்கு வர பயந்து கூட உங்களுக்கு தெரியுமா..?” “ என்றாள் ஆச்சர்யமாய்.

இளம் சிவப்பு வண்ண புடவையில்….எந்தவித ஒப்பனையும் இல்லாமல் ஜொலித்தவள்….அவனிடம் தலை சாய்த்து கேட்ட அழகில் சொக்கித் தான் போனான் வெற்றி.

“ம்ம் தெரியும்.. “ என்றான்.

“அதான் எப்படி…? “ என்றபடி ஆர்வமாக அவன் அருகில் அமர்ந்ததை குறித்துக் கொண்டான் வெற்றி.

அவள் மனதில் கள்ளமும் இல்லை..கபடமும் இல்லை..என்று அவனுக்கு தெரியும்.இருந்தாலும் தன்னை ஏற்றுக் கொள்வதில் அவளுக்கு தயக்கம் இருக்க கூடுமோ…என்று மனதின் ஓரத்தில் சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது.

ஆனால் அவளுடைய இந்த செய்கையில் அந்த தயக்கமும் பறந்து போனது.

“ம்ம்..சொல்லுங்க..!” “ என்றாள் ஆர்வமாக.

“ம்ம்..அதெல்லாம் பெரிய விஷயமா…உன் முகமே காட்டிக் குடுத்துடும்…” “ என்று சமாளித்தான்.

“என் முகம் காட்டிக் குடுத்துடுமா..? …பொய்..! “ என்றவள்…

“நீங்கதான் எப்ப பார்த்தாலும் சிடு சிடுன்னு இருப்பிங்க….அப்பவும் அப்படிதான் சொன்னிங்க…நான் சொன்னதை நியாபகம் வைத்து…இதெல்லாம் எப்படி..? “ என்றாள்.

“பரவாயில்லை..இவளுக்கும் மூளை வேலை செய்யுது…இவ கிட்ட கொஞ்சம் உஷாராத்தான் இருக்கணும்…” “என்று எண்ணியவன்..அவளை நெருங்கி அமர்ந்தான் அவள் அறியாமல்.

“இதையெல்லாம் நல்லா யோசிக்கிற..வேற எதையும் யோசிக்க மாட்டியா…? “ என்றான் மார்க்கமாய்.

“வேற யோசிக்க என்ன இருக்கு…? “ என்று சிரித்துக் கொண்டே நிமிர்ந்தவள்…அவனின் கண்களை கண்ட நிமிடம்….அவன் விழியில் தெரிந்த பாவனையில் அதிர்ந்தாள்.

“என்ன இது..? ஒருத்தர் கண்ணுலையே இவ்வளவு காதலைக் காட்ட முடியுமா..? “ என்று மனதிற்குள் எண்ணியவள்..அவனின் பார்வை வட்டத்தில் இருந்து வெளி வர தவித்தாள்.

“மலர் என்ன பண்ற..? கண்ணை எடு..! “ என்று மனம் சொல்ல…அவளால் முடியவில்லை.

அவளின் அவஸ்தையைப் பார்த்து அவனுக்கே பாவமாய் தோன்ற..தன விழிகளை விலக்கினான்.

“அப்பாடா..! “ என்று மனதிற்குள் பெரு மூச்சு விட்டவள்…

“எனக்கு தூக்கம் வருது… “ என்று பட்டென்று கூறி விட்டு அவனின் மறு புறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.ஆனால் அவளின் இதய துடிப்பு அவளுக்கே தெளிவாய் கேட்டது.

அவளின் வேகத்தைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வர…மலர் விரைவில் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்குள் உறுதியாய் வேரூன்றியது.

தாரணிக்கு மனமார நன்றி கூறினான்.இறங்கி போவதால்,விட்டுக் கொடுத்து போவதால் யாருடைய வாழ்க்கையும் கெட்டுப் போவதில்லை என்பதை மனமார உணர்ந்தான்.

தன் காதலை நேரடியாக சொல்லும் முன்பு…சின்ன சின்ன விஷயங்கள் மூலம் அவளுக்கு உணர்த்த வேண்டும் எண்ணினான்.அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றான்.

அதே மன நிறைவுடன் படுத்தவனை…. நித்திரா  தேவி அன்புடன் அணைத்துக் கொண்டாள.

அவன் தூங்குவதற்காகவே  காத்திருந்தவள்…..மெதுவாய் கண்ணை விழித்தாள்.

தூங்கும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு….மனதில் பல மாற்றங்கள்.

“இவர் உண்மையாவே என்னை காதலிக்கிறாரா..?” “ என்று எண்ணியவள்…

“அவர் கண்களில் தெரிந்த காதலில் பொய்யில்லை… ! ஆனா இது எப்படி…? “ என்று தெரியாமல் குழம்பினாள்.

அதை யோசித்தபடியே..அவனைப் பார்த்துக் கொண்டே அவளும் உறங்கிப் போனாள்.

சாரதியின் வீட்டில்….

“தூங்கலையா சாரதி..! “ என்றாள் கவி.

“தூக்கம் வரலை கவி.. “ என்றவனின் முகம் யோசனையைத் தாங்கியிருக்க…

“இன்னமும் என்ன யோசனை..? “ என்றாள் அவனை ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டு.

“நீ முழு மனசோட தான என்னை கல்யாணம் செய்த..? “ என்றான் தவிப்பாய்.

“அவனின் கைகளை தன்னுடைய கைகளுக்குள் அடக்கியவள்…” “இதுல இன்னும் சந்தேகமா சாரதி..நான் சாரதியா தான் உங்களைப் பார்த்தேன்..சாரதியா தான் உங்க கிட்ட சண்டை போட்டேன்..அதே சாரதியை தான் கல்யாணமும் பண்ணிகிட்டேன்…செல்வா என் வாழ்க்கையில் இருந்தார்…வெற்றி  என் மனசில் இருந்தார்…அதை பொய்யின்னு சொல்ல மாட்டேன்..ஆனா எப்போ என்னால் எல்லார் வாழ்க்கையிலும் பிரச்சனை வந்ததோ..அப்பவே அந்த நினைப்பை விட்டுட்டேன்..இது உங்களுக்கு ஏற்கனவே தெரியும்..இப்போ வெற்றி மலருடைய கணவன்..அது மட்டும் தான் எனக்கு நியாபகம்…நான் என் நிலையில் தெளிவாய் இருக்கேன்..நீங்க தான் தேவையில்லாம குழம்பிட்டு இருக்கீங்க..!” “என்றாள் விரிவாய்.

“தேங்க்ஸ் கவி…! என் மனசுக்குள் இருந்த சின்ன உறுத்தலும் இல்லை…ஆனா நான் செய்ய வேண்டியது இன்னமும் ஒன்னு இருக்கு.. “ என்றான்.

“இன்னமும் என்ன..?” “ என்றாள்.

“நாளைக்கு நான் வெற்றியைப் பார்க்க போறேன்..! அவன் கிட்ட மன்னிப்பு கேட்டா தான் எனக்கு மனசு ஆறும்…” என்றான்.

“சரி..! நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போவோம்..! சேர்ந்தே மன்னிப்பு கேட்போம் சரியா..? “ என்றாள்.

“ம்ம் சரி… “ என்றான் நிறைவுடன்.

“அப்பறம் கவி..அம்மா உன் மேல கோபமா இருக்காங்கன்னு உனக்கு வருத்தமா.. ? “ என்றான்.

“எனக்கா….? “ என்று சிரித்தவள்…”நீங்க வேற சாரதி..! எல்லார் வீட்டுலயும் மாமியாரும்,மருமகளும் ஒத்துமையாவே இருந்தா போரடிக்காது…அதனால் எனக்கு அத்தை தான் சரி.அத்தைக்கு நான் தான் சரி..நீங்க கவலையை விடுங்க..! “ என்றபடி சிரிக்க…

“ஐ லவ் யு சோ மச் கவி..” “என்றபடி அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

“மீ டூன்னு இப்ப சொல்ல மாட்டேன்..ஆனா சீக்கிரம் சொல்லுவேன்.. சரியா…? “ என்றபடி அவளும் வாகாய் அவன் நெஞ்சில் புதைந்தாள்.

வாழ்க்கையின் புரிதல் அந்த நிமிடம் முதல் அவர்களுக்கு புரியத் தொடங்கியிருந்தது.

திருமணத்திற்கு பிறகான காதலில்….வெறும் காதல் மட்டுமில்லாமல்… தியாகம்,புரிந்துணர்வு போன்ற அனைத்தும் அவர்களுக்குள் நிறைந்திருந்தது.

வாழ்க்கையின் போக்கிலும் வாழாமல்…தங்கள் போக்கிலும் வாழாமல்… காதாலால்..காதலுடன் வாழ்வதற்கு..அவர்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க…

சாரதியின் உள்ளிருந்த செல்வாவின் இதயமோ..தன்னவளை அடைந்த மகிழ்ச்சியில்..நிறைவுடன் துடித்துக் கொண்டிருந்தது.

மலரை கண்ட பின்பும் அப்படியே துடிக்குமா..?

 

“மலர்..மலர்..! “ என்று அதிகாலையில் தன் காதருகில்  கேட்ட குரலில்…மலர் கண்ணைத் திறக்க…குளித்து முடித்து தயாரகியிருந்தான் வெற்றி.

கண்ணைக் கசக்கிக் கொண்டே…அவனை பார்த்தவள்… “எதுக்கு எழுப்புனிங்க..? “ என்றாள் கொட்டாவி விட்டுக் கொண்டே.

“நீ எதுக்கு உங்க அத்தை கூப்பிட்ட உடனே அன்னைக்கு போன..? “ என்றான்.

என்ன கேட்குறான்…? அதுவும் காலங்கார்த்தால….என்று சலித்தவள்… “ம்ம்ம்…மறுபடியும் அவங்களே கொண்டு வந்து விட்டுடுவாங்கன்னு எனக்கு தெரியும்..அதான் போனேன்..இப்ப இது ரொம்ப முக்கியமா..?” “ என்றபடி மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவள் பதிலைக் கேட்ட வெற்றிக்கோ…சந்தோஷமாய் இருந்தது.

“காலையில் தூக்கக் கலக்கத்தில் எழுப்பிக் கேட்டால்….அவள் மனதில் உள்ளதையே அப்படியே சொல்லுவாள்… “என்று செல்வாவின் மூலமாக அவன் அறிந்த செய்தி.

அதற்காகவே காலையில் அவளுக்கு முன் எழுந்து..அவன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த அந்த கேள்வியைக் கேட்டான். அதற்கான பதிலையும் வாங்கி விட்டான்.

சிரித்த முகத்துடன் வெளியே செல்ல…போர்வைக்குள் முடங்கியவள்…நியாபகம் வந்தவளாய் டகென்று எழுந்தாள்.

“ஸ்ஸ்..! “என்று வாயிக்குள் ஆள்காட்டி விரலை வைத்துக் கடித்தவள்…

“சொதப்பிட்டியே மலர்..! இப்படி வாயை விட்டுட்டியே..!“ என்று தலையில் கைவத்து அமர…

“அதெல்லாம் ஒன்னும் சொதப்பலை…” “என்று சொன்னபடி வந்தவன்…செல்போனை எடுத்துக் கொண்டு சென்றான்.

“ஐயோ மலர்..மறுபடியுமா..? இன்னும் கொஞ்ச நேரம் போனால்…நீ அம்பேல்..” “ என்று எண்ணியபடி பாத்ரூமிற்குள் வேகமாய் நுழைந்தாள்.

அவள் வாயில் விரலை வைத்து கடித்த போதே வந்தவனுக்கு…ஏனோ தேவையில்லாமல் அவள் இதழ்கள் நினைவுக்கு வந்து போக…தனக்குள் தோன்றிய வானிலை மாற்றங்களை அடக்க முடியாமல்..திண்டாடித்தான் போனான் வெற்றி.

“நல்லவனா இருக்குறதை விட..நல்லவன் மாதிரி நடிக்கிறது ரொம்ப கொடுமைடா சாமி…எத்தனை நாளைக்கு தான் இவ கிட்ட நல்லவன் வேஷம் போடுறது…கதைக்கு ஆகாது போலவே..!” “ என்று சிரித்தபடி வர..

“என்ன வெற்றி..? முகத்துல அப்படி ஒரு ஜொலிப்பு.. “ என்று தாரணி வம்பிழுக்க..

“அதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தாண்டா …அப்பறம் பேயறஞ்ச மாதிரித்தான் நீயும் இருப்ப… “ என்றான் கண்ணன்.

“சரியா சொன்னடா…!” என்று வெங்கட்டும் ஆமோதிக்க….

“சரிதான்..இன்னைக்கு நான் உங்களுக்கு ஊறுகாயா…? நடத்துங்க..! “ என்று டைனிங் டேபிளில் அமர்ந்து விட்டான் வெற்றி.

“சித்தப்பா..சித்தி எங்க..?” என்றாள் சுவாதி.

“உங்க சித்தி…கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க கண்ணா.. “ என்றவன்..அவளுக்காக காத்திருக்க..அவளோ அவன் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தாள்.”

“சரிங்க அண்ணி…நான் குடோன் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்..மலர் வந்தா சொல்லிடுங்க…! “ என்றபடி கிளம்பி சென்று விட்டான்.

அவன் சென்று விட்டான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு வந்த மலர்..தாரணியின் அருகே வந்து….

அப்பாடா போயிட்டாரா….”” “குட்மார்னிங் அக்கா..” “என்று சொல்ல…

“எனக்கு குட்மார்னிங்…மலர்…ஆனா உனக்கு.. “ என்று வாய் பொத்தி சிரிக்க..

“ஏங்க்கா…! “ என்றபடி தாரணியின் பார்வை போன திசையை பார்த்தவள்  “பே “ என விழித்தாள்.

கைகளைக் கட்டியபடி…சுவற்றில் சாய்ந்து அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் வெற்றி.

அவனைத் தவிப்புடன்  பார்த்துக் கொண்டிருந்த அவள் பார்வை… அதிர்ச்சியாய் மாற…அதற்கான காரணம் தெரியாமல் தன்னையே மேலேயும்,கீழேயும் பார்த்தான் வெற்றி.

அனைவரின் கண்களும் அப்படியே பிரதிபலிக்க…சட்டென்று தனக்கு பின்னால் திரும்பிப் பார்த்தான் வெற்றி.

அங்கே சாரதி,கவியுடன் நின்றிருந்தான்.

“இப்ப எதுக்காக இவங்க இங்க வந்திருக்காங்க.. ? “ என்று ஒவ்வொருவரின் மனமும் யோசிக்க…மலரோ அச்சத்துடன் நின்றிருந்தாள்.

 

 

 

 

 

 

Advertisement