Advertisement

 

 

 

தூரிகை 19:

தன் எதிரில் அமர்ந்திருந்த நண்பனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் குணா.பிறகு அவனுக்கும் அதிர்ச்சி வரத்தானே செய்யும்….!

“நான் வர இரண்டு நாட்கள் ஆகும் என்று சொன்ன தேவா….மறுநாளே ஊர் வந்து சேர்ந்து விட்டான்…அதுவும் கீர்த்தனா இன்றி..!”

வந்தவனின் முகத்தில் பெயருக்குக் கூட மகிழ்ச்சியில்லை.எதையோ தொலைத்தவன் போல்,தலையை கைகளில் தாங்கியபடி அமர்ந்திருக்க…. அவனிடன் என்ன கேட்பது..?எப்படி கேட்பது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் குணா.

“டேய் தேவா…? இப்ப என்னாச்சுன்னு இப்படி இருக்க…?நேற்று நல்லாத்தானே இருந்த…?இப்ப என்ன பிரச்சனை…?கீர்த்தனா எங்க….?” என்று குணா பொறுமையாய் கேட்க…

தேவாவின் மவுனமே அதற்கு பதிலாய் கிடைத்தது.நொந்து தான் போனான் குணா.அவன் விழி பிதுங்கி அமர….”கொஞ்சம் பொறுமையா இரு….அவனே சொல்லுவான்…!” என்ற ரீதியில் கண்ணசைத்தார் தயாளன்.

ஆனால் அவரின் பொறுமையும் காற்றில் பறக்க….”என்னாச்சு தேவா…? நீ ஏதாவது சொன்னாத்தான் எங்களுக்குத் தெரியும்…!” என்றார்.

அவரின் கேள்வியில் நிமிர்ந்தவனின் கண்களில் அத்தனை வலி தென்பட்டது.அத்தனையும் தனக்குள் அடக்கியவன்…

“அப்பா…அது வந்து…கீர்த்தனா..கீர்த்தனா….யாருன்னா…?” என்று தேவா இழுக்க…..

“எனக்குத் தெரியும்…!” என்று பட்டென்று போட்டு உடைத்தார் தயாளன்.

குணாவும்,தேவாவும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்க்க….

“கீர்த்தனா..உன் மனைவி..!அதானே..!” என்று பெரிய ஜோக் சொன்னது போல் சிரிக்க…..கடுப்பானான் குணா.

“அப்ப்பா..!”என்று பல்லைக் கடித்தபடியே தேவாவைப் பார்க்க…அவன் முகத்தில் எந்த பிரதிபலிப்பும் இல்லை.

“சொல்லு என்ன நடந்தது….?” என்று தேவாவைக் கேட்க…

“அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா…!ஒரு சின்ன மனஸ்தாபம்.ஒரு வாரம் அவங்க ஊர்ல இருந்துட்டு வருவதா சொன்னா…!அதான் நான் மட்டும் வந்தேன்…!” என்றான் பட்டும் படாமல்.

“அவ்ளோதானா…! புருஷன் பொண்டாட்டின்னா சின்ன சின்ன சண்டை வருவது எல்லாம் சகஜம் தான் …அதுக்கு ஏன் இப்படி இடி விழுந்த மாதிரி உட்கார்ந்திருக்க…சியர் அப்…!” என்றபடி தனது மாலை நேர நடைப் பயிற்சிக்காக கிளம்பி சென்றார் தாயாளன்.

“இடி விழுந்த மாதிரி…!” என்ற அவரின் வார்த்தைகள் அவனை கீர்த்தனாவிடம் இழுத்து சென்றது.

விருப்பாச்சி சென்றதிலிருந்து அவள் சந்தோஷமாக இருப்பதாகவே பட்டது தேவாவிற்கு.ஒவ்வொரு செயல்களிலும் புதுமையாய் தெரிந்தாள்.சின்ன சின்ன பார்வை சீண்டல்களுக்கு கூட இடம் கொடுத்தாள்.அன்றைய நாள் இனிதாகவே சென்றது…ரவியின் பெற்றோரைப் பார்க்கும் வரை.

“அத்தை வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடு கீர்த்தனா…!” என்ற தாயின் சொல்லுக்கு இணங்க…. ரவியின் வீடு நோக்கி புறப்பட்டாள் கீர்த்தனா.

“என்ன கீர்த்தனா…? எங்க கிளம்பிட்ட..? “ என்றான் தேவா.

“இல்லை அத்தை வீட்டு வரைக்கும்… “ என்று இழுக்க… “ஓகே டன்…வா நானும் வரேன்..! “ என்றபாத் அவனும் கிளம்ப..

“இல்ல நீங்க இருங்க…நான் போயிட்டு வரேன்..! “ என்று அவள் படபடப்புடன் சொல்ல… “ஹே கமான்..! எனக்கும் போரடிக்குது…நான் ஒன்னும் செய்ய மாட்டேன்… “ என்று கண்ணடிக்க…அவளுக்கு வியர்க்க துவங்கியது.

அவள் மறுத்தும் விடாமல் அவளுடன் சென்றான் தேவா. ரவியின் வீட்டை அடையும் வரை…அவள் ஒன்றும் பேசவில்லை.

“அத்தை…அத்தை…!” என்றபடி வீட்டினுள் செல்ல…..ரவியின் அப்பா..(துரை) ”அடடே…வாடா கீர்த்தனா….வாங்க தம்பி…!” என்று மரியாதையுடன் அழைத்து அமர வைத்தார்.

“எப்படி இருக்கீங்க மாமா…?அத்தை எப்படி இருக்காங்க..!” என்று கீர்த்தனா அந்த வீட்டு பெண்ணாய் மாறி குசலம் விசாரிக்க….

“எல்லாரும் நல்லா இருக்கோம்டா…..நீங்க சவுக்கியமா….?” என்றபடி மனைவிக்கு குரல் கொடுத்தார்.

தேவா அந்த வீட்டை சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருக்க….கணவரின் அழைப்பில் அங்கு வந்த ரவியின் அம்மா (பத்மினி) கீர்த்தனாவைப் பார்த்து அதிர்ந்தார்.

“எங்க வந்த…?” என்ற கேள்வியில் கீர்த்தனா விக்கித்துப் பார்க்க….தேவா அதிர்ச்சியாய் பார்த்தான்.

“என்ன இவங்க….? வந்தவங்களை வான்னு கூப்பிடாம இப்படி எடுத்தெறிந்து பேசுறாங்க..!” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே…

“பத்மினி…”என்று அதட்டினார் துரை

“நீங்க சும்மா இருங்க…! இப்ப யாரு குடிய கெடுக்க இங்க வந்துருக்கா..?” என்று விஷம் தடவிய வார்த்தைகளைக் கொட்ட…

“கோபத்தின் உச்ச கட்டத்தில்…..”எழுந்து விட்டான் தேவா.

”கிளம்பு கீர்த்தனா….!” என்று சொல்ல….அவளோ அசையாமல் நின்றிருந்தாள்.

“எதுக்கு வரணும்,எதுக்கு கிளம்பனும்…!இவ இங்க வரலைன்னு யாரு அழுதா…?” என்று பத்மினி எரிச்சலுடன் சொல்ல….

“கிளம்புன்னு சொன்னேன் கீர்த்தனா…!” என்று ஓங்கு ஆக்ரோஷமாய் ஒலித்தது தேவாவின் குரல்.

ஆனால் கீர்த்தானாவோ….அச்சு அசைவின்றி நிற்க…அவள் கண்களில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டே இருந்தது.

அதைப் பார்த்த தேவாவின் முகம் எரிச்சலை அப்பட்டமாய் காட்ட….”உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா…இவ்ளோ பேச்சு பேசிட்டு இருக்காங்க….இப்ப எதுக்கு அழுதுகிட்டு இருக்க….?” என்று கோபமாய் இரைய….

“இவங்க என் அத்தை….என்னை பேசுறதுக்கு இவங்களுக்கு  முழு உரிமை இருக்கு…அதைக் கேட்க நீங்க யாரு…!” என்று முகத்தில் அடித்தார் போல் சொல்ல….

அவளை உக்கிரமாய் முறைத்தவன்…அங்கிருந்து பட்டென்று வெளியேறப் போக….”தம்பி….!” என்று துரை அவனின் கைகளைப் பிடித்து தடுக்க…

“சாரி சார்….! உங்க மனைவி கீர்த்திக்கு அத்தையா இருக்கலாம்.ஆனா இப்ப அவ என் மனைவி….என் கண் முன்னால் அவளை விமர்சிப்பது எனக்கு பிடிக்காது…” என்று தேவா பட்டென்று சொல்ல..

“மனைவியாம் மனைவி….எத்தனை பேருக்கு….?” என்று பத்மினி வார்த்தையை விட….”அத்தை….!” என்று கத்தியபடி கீர்த்தனா மயங்க….”பத்மினி…! “ என்றபடி அவரை ஓங்கி அறைந்தார் துரை.

“எத்தனை பேருக்கு…?” என்ற கேள்வி தேவாவின் காதுகளில் ஓங்கி ஒலித்தாலும்….மயங்கிய நிலையில் கீர்த்தனாவை பார்த்தவனின் மூளை வேறெதையும் சிந்திக்காமல்…உடனடியாக அவளைத் தாங்கினான்.

“இவளோட அத்தைன்ற ஒரே காரணத்துக்காக உங்களை சும்மா விட்டுட்டு போறேன்….”என்று சிங்கமாய் கர்ஜித்தவன்….அவளைத் தூக்கி கொண்டு சென்றான்”” “.

“தனது வீட்டு ஹாலில்…கண்களில் கண்ணீருடன் அமைதியாய் அமர்ந்திருந்தாள் கீர்த்தனா…” “.

செழியனும்,கலையரசியும்  என்ன நடந்தது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க….”

“இங்க பாருங்க மாமா…அவங்களுக்கும்,உங்களுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது…ஆனா அவங்க கீர்த்தனாவை வரம்பு மீறி பேசுவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது….! நான் கிளம்புறேன்.கீர்த்தனா இங்கயே ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கட்டும்…” “ என்று சொன்னபடி விறுவிறுவென்று வெளியேறிவிட்டான்.

தன்னிடம் ஒரு வார்த்தை கூட  சொல்லாமல்  கிளம்பும் கணவனை தடுக்கும் வழி தெரியாமல் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா.

அவளின் அத்தை மாமா முன்பு…” “என்னைக் கேட்க நீங்க யாரு..?” என்று கேட்ட கீர்த்தனாவின் குரல்….இடியாய் அவன் மனதில் இறங்கிப் போயிருந்தது.

எங்கே அங்கேயே இருந்தால்….தன்னைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியம் ஆகிவிடுமோ என்று எண்ணிய தேவா….அவளை விடுத்து தான் மட்டும் கிளம்பினான்.

நடந்ததை குணாவிடம் விவரித்தான் தேவா.அவனின் பேச்சைக் கேட்ட பிறகு தெளிவு பிறக்க வேண்டிய குணாவிற்கோ குழப்பம் தான் மிஞ்சியது.

“டேய்…! எனக்கு ஒன்னும் புரியலை….!மணிரத்னம் படத்துல வர மாதிரியே இருக்கு….நீ சொல்றது தலையும் புரியலை..வாலும் புரியலை….!” “ என்றான் குணா.

“எனக்கே இன்னும் சில விஷயங்கள் தெளிவாகவில்லை குணா.தெரிஞ்சதுக்கு அப்பறம் சொல்றேன்…! ஆனா ஏன் கீர்த்தி அத்தை அப்படி சொன்னாங்கன்னு எனக்கு சத்தியமா புரியலை…” “ என்று புலம்ப…

“சரி விடு மச்சான்….கீர்த்தனா ஏதோ ஒரு டெண்சன்ல அப்படி பேசிருக்கலாம்…,இதையெல்லாம் பெரிசா எடுத்துக்காத… “ என்று குணா சொல்ல…

“இல்லை குணா…! அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்கலை….நானும் அவ மனசு மாறும்ன்னு நினச்சு இத்தனை நாள் பேசாம இருந்தேன்….ஆனா அவ என்னை புருஷனா ஏற்றுக் கொள்ளா விட்டாலும்…மனுஷா கூட ஏத்துக்க மறுக்குறா….ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை…..”” “ என்றான் தேவா.

“டேய் என்னடா சொல்ற….?ஒரு நாளைக்கு எத்தனை அதிர்ச்சி கொடுப்ப….?கீர்த்தனாவுக்கு விருப்பம் இல்லைன்னா….இத்தனை நாள் நீங்க..?” என்று கேட்க வந்த கேள்வியை பாதியில் நிறுத்தினான் குணா.

“இல்லை…!” “ சாவகாசமாய் ஆடியது தேவாவின் தலை.” “அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஒரு கட்டாயத்தால் தான் என்னுடன் இருக்கா….?” “ என்றான்.

குணாவிற்கு எங்கோ..எதிலோ..தவறு நடந்திருப்பதாகப் பட்டது. ஆனால் அது என்னவென்று புரியவில்லை.ஆனால் அதை சரி செய்ய வேண்டும் என்று எண்ணினான்.அவனின் நினைப்பு பலிக்குமா…?

அங்கே…!

நடந்தவற்றைக் கேட்ட செழியன் குதித்துக் கொண்டிருந்தார்.” “கீர்த்தனா உன்னை யாரு அங்க போக சொன்னது…தங்கச்சியே வேண்டாம்ன்னு தான் தலை முழுகிட்டு இருக்கேன்…  உன்னை யார்..அதுவும் மாப்பிள்ளையைக் கூட்டிட்டு போக சொன்னது…?”  “ என்று கத்த…

“நான் தாங்க சொன்னேன்…!” “ என்று கலையரசி பாவமாய் முழிக்க….மனைவியை ஒரு இயலாமையுடன் பார்த்தார் செழியன்.

“இதோ பார் கலை…! நீ நல்ல விதமா நினைச்சு தான் அனுப்பியிருக்க… ஆனா நடந்ததைப் பார்த்தியா….? பத்மினியும் அடிப்படையில் கெட்டவ கிடையாது.சூழ்நிலை அப்படி பேச வைக்கும்…அதுக்கு தான் கொஞ்ச நாள் அங்க போக வேண்டாம்ன்னு சொன்னேன்..! “ என்று செழியன் சொல்ல…

“அம்மாவை ஒன்னும் சொல்லாதிங்கப்பா….! “ என்று கீர்த்தனா வக்காலத்திற்கு வர….” “வாயை மூடுடி…! “ என்று எரிந்து விழுந்தார் கலை.

“அம்மா..! “ என்று அவள் அதிர…”

“என்ன அம்மா…? என்னடி பண்ணி வச்சிருக்க….சாதாரணமா  தப்பே செய்திருந்தாலும் எந்த ஒரு பெண்ணும் தன் புருஷனை விட்டுக் கொடுக்க மாட்டங்க…! ஆனா நீ மாப்பிள்ளை எடுத்து எரிஞ்சு பேசிருக்க…அதுவும் உங்க அத்தை மாமா முன்னாடி….எனக்கு என்னமோ நீ பண்ற எதுவும் சரியா படலை…நீ அவர் கூட ஒழுங்கா குடும்பம் நடத்துறியான்னே சந்தேகமா இருக்கு….! “ என்று கலை சொல்ல அதிர்ந்தாள் கீர்த்தனா.

“அம்மா சொல்வது உண்மைதான்…..அத்தையிடம் தன்னை விளக்கி விட வேண்டும் என்று நினைத்தேனே தவிர….தேவாவைப் பற்றி நான் நினைக்கவில்லையே….! என்று தாமதமாக யோசித்தாள்.

அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது.அந்த கோபம் தன் தாய் மேல் திரும்ப…

“போதும் நிறுத்துங்கம்மா….! இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..கல்யாணமே வேண்டாம் என்று..! நீங்க தான் கட்டாயப் படுத்தி….இப்ப என் வாழ்க்கையே நாசமா போய்டுச்சு…!” தேவையில்லாம இன்னொருத்தர் வாழ்க்கையும் சேர்த்து கெடுத்துட்டிங்க…! “

“நானா உன் வாழ்க்கையை கெடுத்தேன்….! “ என்று கலையரசி கண் கலங்க…

“ஆமா நீங்க தான்…! என்னோட நிலைமை தெரிஞ்சும்…என் மனசு புரிந்தும்..நீங்கதான் என்னை கட்டாயப்படுத்துனிங்க…ஆனா இப்போ கஷ்ட்டப்படுறது யாரு…நான் தான்…தேவா கூட வாழவும் முடியலை…அவரை கணவனா ஏத்துக்கவும் முடியலை…” “ என்று அழ…

“தான் நினைத்தது போல் தான் தன் மகள் வாழ்ந்து கொண்டிருக்கிறாளா…? என்ற கலையரசியின் எண்ணம் அங்கு ஊர்ஜிதமானது.

“கீர்த்தனா என்ன பேச்சு இது….அம்மாவையே குற்றம் சொல்ற….? “ என்று செழியன் அதட்ட…

“அப்ப்பா….” “ என்று அவரைக் கட்டிக் கொண்டு கதறினாள் கீர்த்தனா. “எல்லாம் தெரிஞ்சும் நீங்களே இப்படி பேசுறிங்களே ப்பா….” “ என்று அழுக….

“அது நடந்து முடிந்த கதை கீர்த்தனா…! அதையே நினைச்சுட்டு இன்னும் எத்தனை நாள் இப்படி உன் வாழ்க்கையை நீ பாலாக்கிக்க போற…..எங்களைப் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருமா…நீ எங்களுக்கு ஒரே பொண்ணு…உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கனும்ன்னு நினைச்சது எங்க தப்பா….! “ என்று செழியன் குரல் கமற சொல்ல….

தன் தந்தையின் முகம் வேதனையுருவது கண்டு பொறுக்காமல் வேகமாய் கண்களை துடைத்துக் கொண்டாள் கீர்த்தனா….

“சாரிப்பா….! இனி அப்படி பேச மாட்டேன்….! “ என்றவள்….வேகமாய் சென்று தனது அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.

துவண்டு அமர்ந்தார் செழியன்….தன் மகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த நிகழ்வு கண் முன் வந்து போனது.மறந்திருந்த நினைவுகள் அவர் கண் கண் முன் அணிவகுத்தன.

ரவி- கீர்த்தனாவின் நிச்சயம் முடிந்திருந்த நிலையில்….கல்யாணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் போது….

ஒரு அதிகாலை நேரம்…செழியனுக்கு வந்த போன்கால் அந்த வீட்டையே இரண்டாக்கியது.

“கீர்த்தனாவுக்கு விபத்து…” “ என்ற அந்த இரண்டு வார்த்தையில் துவண்டு போயினர் செழியனும்,கலையும்.

அடித்துப் பிடித்து இருவரும் உயிரைக் கையில் பிடித்தவாறு அவர்கள் சொன்ன முகவரிக்கு செல்ல….

அங்கே துவண்ட கொடியாய்….உடல் முழுதும் காயங்களுடன் படுத்திருந்தாள் கீர்த்தனா.

அவசர சிகிச்சைப் பிரிவில் அவள் அனுமதிக்கப் பட்டிருக்க….அவளின் நிலையைக் கண்ட கலையரசிக்கு மயக்கம் வர….செழியனுக்கோ உயிரையே வேரோடு யாரோ பிடுங்குவதைப் போல இருந்தது.

மயக்கம் தெளிந்த கலையரசி….மருத்துவமனையே அதிரும்படி கத்த…..” “கத்தாதிங்க…! அவங்க சீரியஸா இருக்காங்க…! இன்னும் கண் விழிக்கவில்லை….அவங்களை அட்மிட் செய்தவங்களைக் காணோம்…! அதான் அவங்க பேக்ல இருந்த  டைரில இருந்த உங்க நம்பர எடுத்து உங்களுக்கு போன் பண்ணினோம்…! நீங்க இந்த பொண்ணுக்கு…. “ என்று அந்த நர்ஸ் இழுக்க……

“நாங்க பெத்தவங்க… “ என்று சோர்ந்து போய் சொன்னார் செழியன்.

“ஹோ….சாரி சார்.உங்க மாப்பிள்ளை தான் அட்மிட் பண்ணினார். மருந்து வாங்கிட்டு வரேன்னு போனவர் வரவேயில்லை…அதான் உங்களுக்கு கால் பண்ணினோம்…! என்று சொல்லிவிட்டு அந்த நர்ஸ் நகர….

செழியனுக்கும் கலையரசிக்கும் ஒன்றும் புரியவில்லை.ஒருவேளை ரவி தான் இங்க வந்து சேர்த்தானோ…! ரவி எப்படி இங்க வந்தான்…என்று எண்ணியவர்கள்….அதற்கு மேல் எதையும் யோசிக்கவில்லை.

கீர்த்தனாவின் நிலையைப் பார்த்தவர்கள் எண்ணம் முழுவதும் அவள் மீது இருக்க…வேறெதுவும் சிந்திக்க முடியவில்லை.

அவர்களைப் பாடாய் படுத்திய கீர்த்தனா இரண்டு நாட்களுக்குப் பிறகு கண் விழித்தாள்.

கலையரசி ஊரில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் வேண்டுதல் வைக்க….ஒரு வழியாக தேறி வந்தாள் கீர்த்தனா.

“ஏதாவது ஜூஸ் குடிக்கிறியாடா…? “ என்று கலை கேட்க….”வேண்டாம்மா.. என்று பலகீனமாய் தலையசைத்தாள் கீர்த்தனா.

அப்பொழுது அங்கு வந்த நர்ஸ்…..” “இந்தாங்கம்மா உங்க பொண்ணோட தாலி…. அப்பறம் கழுத்தில் போட்டிருந்த செயின்,தோடு எல்லாம் இதில் இருக்கு…!  நீங்க வந்த அன்னைக்கே கொடுக்கணும்ன்னு நினைச்சேன்…மறந்துட்டேன்..!“ என்று நீட்ட….

செழியன்-கலையரசி முகத்தில் ஈயாடவில்லை..”  “தாலியா….? இல்லை இது என் பொண்ணோடது இல்லை…! “ என்று கலை கூற…

“இல்லம்மா உங்க பொண்ணோடது தான்…..குடுக்க யாரும் இல்லாததால நாங்கதான் கலட்டி வச்சிருந்தோம்….! “ என்றபடி அவர்கள் கையில் திணித்து விட்டு சென்றார் அந்த நர்ஸ்.

இருவருக்கும் விழிகள் தெறித்து வெளியே வந்து விடுவதைப் போல் விழிக்க…..அதற்கு கொஞ்சமும் குறையாமல் கீர்த்தனாவும் அதிர்ச்சியில் இருந்தாள்.

“கீர்த்தனா என்ன இது….? “ என்று கலை கேட்க….

“எனக்கும் தெரியலைம்மா….! “ என்று அதிர்ச்சியாய் தலையாட்டினாள்.

“உண்மையை சொல்லு கீர்த்தனா…! இந்த தாலி உன் கழுத்தில் இருந்ததா அந்த நர்ஸ் சொல்றாங்க…! இதெப்படி …” என்று அதற்கு மேல் கேட்க முடியாமல் கலையரசிக்கு அழுகை வர…

“அம்மா பிளீஸ்….என்னை நம்புங்க….! இந்த தாலி எப்படி வந்ததுன்னு எனக்கு தெரியாது.சத்தியமா…! “ என்ற அவளின் குரல் பலகீனமாய் ஒலிக்க…

“உங்கள் மாப்பிள்ளை தான் சேர்த்தார்..! “ என்ற நர்சின் வார்த்தைகள் செழியனின் காதுகளில் வந்து வந்து போனது.

“உனக்கு தெரியாம உன் கழுத்தில் எப்படிம்மா தாலி வந்தது….? “ என்று செழியன் கொஞ்சம் கோபமாய் கேட்க….

“உண்மையாவே எனக்கு தெரியவில்லைப்பா….! நான் ரோட்டைக் கிராஸ் பண்ணும் போது…ஒரு கார்…கார்… “ என்றவள் மீண்டும் மயக்கத்திற்கு போக…

பெற்றவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.ரிஷப்சனில் சென்று விசாரிக்க…..அவர்களும் சரியாகத் தெரியவில்லை என்று கூற…இருவரும் நொந்து போய்விட்டனர்.

ஒரு வழியாக உடல் நலம் தேறி கீர்த்தனாவை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.சித்த பிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள் கீர்த்தனா. தன் கழுத்தில் இருந்த தாலியின் புதிர் அவளுக்கு புரியவேயில்லை.

எதற்கும் விடை தெரியாமல் குழம்பி போயிருந்தவளிடம்….. “நடந்ததையே நினைச்சு என்ன ஆகப் போகுது கீர்த்தனா….! இது வெளிய யாருக்கும் தெரியாது. அதனால்…. குறிச்ச முகூர்த்தம் தள்ளிப் போனாலும்…அடுத்த மாதம் ரவியோட உனக்கு கல்யாணம் நிச்சயமாய் நடக்கும்… “ என்று செழியன் ஆறுதல் கூற…

“இல்லப்பா எனக்கு கல்யாணம் வேண்டாம்…! “ என்றாள் கீர்த்தனா.

“என்னடி சொல்ற….? “ என்று கலை கேட்க…

“என்னன்னே தெரிலைம்மா எனக்கு மனசே சரியில்லை.ஏதோ சரியில்லைன்னு தோணுது….அந்த தாலி…. “ என்று அவள் இழுக்க….

“அதைப் பத்தி நினைச்சு என்ன ஆகப் போகுது….நீ யோசிக்கிறதைப் பார்த்தா…அது உன் கழுத்துக்கு தெரியாம வந்த தாலி மாதிரி தெரியலையே….! “ என்று கலை சொல்ல…

“அம்மா….! “ நான் என்ன பண்ணினா என்னை நம்புவிங்க….என்று கதறியவள்..உங்களுக்கு என்ன விருப்பமோ அதை செய்ங்க..! “ என்றபடி முடித்துக் கொண்டாள்.

வாய் வார்த்தையாகவே சொன்னாளே தவிர…அவளின் மனதில் அந்த தாலியைப் பற்றிய நினைவு வண்டாய் குடைந்து கொண்டிருந்தது.அவளின் நிலையைப் பார்த்த செழியன்…

“எனக்கு என்னமோ…இப்ப இந்த கல்யாணம் அவசியமான்னு தோணுது கலை….” “ என்றார் மனைவியிடம் தனிமையில்.

எனக்கும் கீர்த்தனாவோட நிலை புரியுதுங்க.ஆனா யோசிச்சு பாருங்க.அந்த நர்ஸ் சொன்னதை வச்சு தான் நமக்கு தெரியும்.மத்தபடி விசாரிச்சு பார்த்ததுல உபயோகமான தகவல் ஏதும் இல்லை.

நாம இப்ப இந்த கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னா…உங்க தங்கச்சி கேள்வி மேல கேள்வி கேட்பா….அப்ப நாம இது தான் விஷயம்ன்னு சொன்னா யாரு நம்புவாங்க…அப்படியே நம்பினாலும்….நம்ம பொண்ணோட வாழ்க்கை….! “ என்று கலை சொல்ல…..செழியனுக்கும் அதுவே சரியாக பட்டது.

அடுத்து நடக்க வேண்டிய நிகழ்வுகள் வேகமாய் நடந்தேற….திருமணமும் நெருங்கியது.

எப்போதும் தன்னுடன் சிரித்த முகமாய் பேசும் கீர்த்தனா…சமீப காலமாய் பேசுவதற்கு தயங்குவது கண்டு ரவிக்கு ஆச்சர்யமாய் போனது.

“என்னாச்சு இவளுக்கு…? அந்த ஆக்சிடென்ட் நடந்ததுல இருந்து ஆளே மாறிட்டா…? “ என்று யோசித்தவனுக்கு……வேலை தலைக்கு மேல் இருக்க…மேலும் யோசியாமல்,பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

திருமண நாளும் இனிதே விடிய….கீர்த்தனாவை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

“கீர்த்தனாவின் மனதில் ஏதோ ஒரு நெருடல்….வேண்டாம்….இந்த கல்யாணம் உனக்கு வேண்டாம்…என்னை விட்டு போய் விடாதே…! “ என்று ஒரு குரல் அவளிடம் சொல்வது போல் ஒரு மாயை.

என்ன முயற்சித்தும் அவளால் அந்த மாயையை விலக்க முடியவில்லை. நேரம் செல்ல செல்ல…அவளின் இதயத் துடிப்பு அதிகமாகியது.” “நீ எனக்கு வேண்டும்….எனக்கு மட்டும் தான் நீ…. “ என்ற மாயை குரல் மீண்டும் ஒலிக்க….அவளுக்கு வியர்க்க துவங்கியது.

அப்பொழுது அங்கு வந்த கலையரசி…மகளின் கலக்கமான முகத்தைப் பார்த்து பயந்தார்.”என்னாச்சு இவளுக்கு..? “ என்று அங்கிருந்தவர்களை வெளியே அனுப்பியவர்..

“கீர்த்தனா..என்னம்மா ஆச்சு…? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு…!” “ என்று கேட்க…

“அம்மா..! எனக்கு பயமா இருக்கு….என் கழுத்தில் இருந்த தாலி…இல்லை யாரோ எனக்கு நெருக்கமானவங்க … “ என்று உளற…

“கீர்த்தனா…! “ என்று அதட்டினார் கலையரசி.

“இல்லம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்….பிளீஸ்ம்மா…!” “ என்று கெஞ்ச…

“கடைசி நேரத்துல ஏன் இப்படி பண்ற கீர்த்தனா…ரவி மேடையில் வந்து உட்கார்ந்துட்டான்…நீ இன்னும்… உனக்கு தெரியாம உன் கழுத்தில் இருந்த தாலியைப் பற்றி யோசிச்சுட்டு இருக்க….இப்ப இந்த கல்யாணம் நின்னா…நாம எல்லாருக்கும் பதில் சொல்லணும்…அப்பறம் நமக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் ஊருக்கே தெரிஞ்சுடும்…! சொன்னா கேளுமா..! “ என்று கலை கெஞ்ச…..

“சபாஷ்..!” “ என்ற குரலில் இருவரும் திரும்பினர்.

“என்ன அண்ணி நடக்குது இங்க..? “ என்று பத்மினி காட்டமாய் வினவ…

“பத்மினி…அது வந்து…வந்து ஒண்ணுமில்லை.கீர்த்திக்கு கொஞ்சம் படபடப்பா இருக்குன்னு சொன்னா…அதான்…என்னன்னு… “ என்று கலை சொல்லி முடிக்கும் முன்…

“நான் தான் முழுசா கேட்டேனே….! ஆமா அதென்ன தாலி அது இதுன்னு பேசிட்டு இருந்திங்க…? “ என்று சந்தேகமாய் வினவ…தவிப்புடன் அவரைப் பார்த்தார் கலை.

அதற்குள் அவர்களைத் தேடி செழியனும் வர…..”அது ஒண்ணுமில்லை அண்ணி….” “ என்று கலை முடிப்பதற்குள்….

“அத்தை உங்ககிட்ட மறைக்க ஒண்ணுமில்லை.எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது..! “ என்றாள் கீர்த்தனா ஒரு முடிவுக்கு வந்தவளாய்.

“என்னது..! “ என்று அப்பட்டமாய் அதிர்ந்தார் பத்மினி.

“கீர்த்தனா…! “ என்று செழியனும்,கலையும் ஒரே நேரத்தில் அமட்ட….அங்கிருந்த சொந்தக்கார பெண்மணிகள் சிலர் கூட….கூட்டம் ஆகியது.

“ஆமா அத்தை…எனக்கு கல்யாணம் ஆகிட்டது.ஆனா எப்படின்னு எனக்கு தெரிலை… “ என்று கீர்த்தனா உண்மையை சொல்ல…

“நீ என்ன பைத்தியமா..? “ என்பதைப் போல் அனைவரும் பார்க்க…ரவியும் சத்தம் கேட்டு எழுந்து வந்தான்.

“கல்யாணம் ஆகிடுச்சாம்…ஆனா புருஷன் யாருன்னு தெரியலையாம்… இதென்னடி கூத்தா இருக்கு.. “ என்று ஆளாளுக்கு அங்கலாய்க்க….மங்கள வாத்தியங்கள் ஒலிப்பதை நிறுத்தின.

கீர்த்தனாவையே ஒரு நிமிடம் உற்றுப் பார்த்த ரவி…..”எல்லாரும் வெளிய போங்க…!நான் கீர்த்திகிட்ட தனியா பேசணும்…! “ என்றான் அதிகாரமாய்.

பத்மினி அவனை முறைத்து விட்டு வெளியேற…செழியனும்-கலையரசியும் இயலாமையுடன் வெளியேறினர்.

“சொல்லு கீர்த்தி..! என்ன நடந்தது..! “ என்று பொறுமையாய்க் கேட்டான் ரவி.

கீர்த்தனா நடந்ததைக் கூற…. “சரி…! இப்ப என்ன செய்யலாம்ன்னு இருக்க..?” “ என்றான் விரக்தியாய்.

“எனக்கு எதுவுமே புரியலை மாமா..! “ என்றாள் கலங்கிய கண்களுடன்.

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத கீர்த்தி…ஆதாரமே இல்லாத ஒரு விஷயத்துக்காக நீ எதுக்கு இவ்வளவு மெனக்கெடுற…அந்த தாலி எப்படி வந்தது…என்ற விஷயமே உனக்கு தெரியலை.மீண்டும் அதை நீ கழுத்தில் போடலை.நடந்தை ஒரு கனவா நினைச்சு நீ மறந்திடு…அம்மாகிட்ட நான் பேசுறேன்…இந்த கல்யாணம் நடக்கட்டும்… “ என்றான் ரவி நிதனாமாய்.

“இல்லை மாமா….ஏதோ ஒன்று என்னை தடுக்குது…எனக்கு படபடப்பா வருது…யாரோ என் காதுல ஏதோ சொல்ற மாதிரி இருக்கு…. !இந்த மனநிலையோட நான் உங்களை கல்யாணம் பண்ணினா…அது ரெண்டு பேருக்குமே தண்டனையா தான் அமையும்….! “ என்று கூற…

“நீ முடிவு எடுக்குற மாதிரி பேசலை கீர்த்தனா…! முடிவு எடுத்துட்டு பேசுற மாதிரி இருக்கு..! “ என்று குற்றம் சாட்டினான் ரவி.

“சாரி மாமா…! என்னை மன்னிச்சுடுங்க..! “ என்று சொல்ல… “சரி அடுத்து என்ன செய்ய போற…?” “ என்று ரவி கேட்க…

“தெரியலை மாமா…ஆனா நடந்தது என்னன்னு கண்டுபிடிப்பேன்…! “ என்று பேச்சை முடித்துக் கொண்டாள் கீர்த்தனா.

வெளியே வந்த ரவி… “இந்த கல்யாணம் நடக்காதும்மா..! நிறுத்திடுங்க..! “ என்று தன் தாயைப் பார்த்து சொல்லி விட்டு வேக நடையுடன் வெளியேறி விட்டான். 

“அடிப் பாவி…! நீ நல்லாயிருப்பியா…!  என் புள்ள வாழ்க்கையையே நாசமாக்கிட்டியே,..!உன்னைத்தான் கட்டணும்ன்னு எவ்வளவு ஆசையா இருந்தான்..! அவன் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே..!” “ என்று பத்மினி  தூற்ற…

அன்றிலிருந்து அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது.தன் பெண் மேல் தான் தப்பு என்பதை புரிந்து கொண்ட கலையரசி..அதன் பிறகு எவ்வளவோ முறை பத்மினியை சமாதானப் படுத்த எடுத்த முயற்சி எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது.

அதன் பிறகு எவ்வளவோ முயன்றும் கீர்த்தனாவை மாற்ற முடியவில்லை.வேலையில் சேர்ந்து தனது நிலையை மாற்றிக் கொள்ள எண்ணினாள்.ஆனால் முடியவில்லை.நாட்கள் வருடங்களாய் உருண்டோட…பெற்ற ஒரே பெண்ணின் நிலையைக் கண்டு பெற்றவர்கள் கலங்காத நாளில்லை.

இவளை இப்படியே விட்டால் சரிப்படாது என்று எண்ணிய கலையரசி….”தன்னுடைய இறுதி ஆயுதத்தை கையில் எடுத்தார்.” “ நீ இப்படியே இருந்தால்….நங்கள் உயிரை மாய்த்துக் கொள்வோம்…! “ என்று மிரட்ட….அந்த மிரட்டலில் கொஞ்சம் மிரண்டு தான் போனாள் கீர்த்தனா.

அதன் பிறகு தேவாவின் சம்பந்தம் வர…இம்முறை எந்த தடங்களும் வரக் கூடாது என்று….நடந்தவற்றை முன் கூட்டியே மாறனிடம் சொல்லி…. திருமணத்தை நடத்தினர்..செழியனும்,கலையரசியும்.

ஆனால் இந்த வாழ்க்கையையும் தன் மகள் கேள்விக்குறி ஆக்கிக் கொண்டு வந்திருப்பதைக் கண்டு….அவர்களின் உள்ளம் நொந்தது.

நடந்தவைகளை நினைத்துப் பார்த்த செழியனால்…பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.

கனவே வாழ்வாக…வாழ்வே கனவாக…

வளர்த்தேன் உயிரை வேராக..!

நெடுநாள் பயணம் இன்றோடு மாய்ந்ததென்ன…!

நினைவும் கனவும் இன்றோடு சாய்ந்ததென்ன..!

 

Advertisement